பின்பற்றுபவர்கள்

19 செப்டம்பர், 2008

தலித் கிறித்துவர்களுக்கு சலுகை கொடுத்தால் இந்து மதம் அழிந்துவிடுமா ? ரத்னேஷ் அண்ணாவிற்கு பதில்.

பல நூற்றாண்டுகளாகவும் பல்வேறு மதத்தினரின் படையெடுப்பு அத்தனையும் தாக்குப் பிடித்துக் கொண்டு இருக்கும் இந்திய சமய நம்பிக்கை (இந்து மதம் என்ற பொதுப் பெயரில் வழங்கப்படும் அனைத்தும்) தலித் கிறித்துவர்களுக்கு கொடுக்கப் படும் இட ஒதுக்கீட்டினால் அழிந்துவிடும் என்று நினைத்தால் உங்களுக்கு So Called ஹிந்து மதத்தின் தத்துவ, ஞான, ஆன்மிகம் இவற்றில் எதிலுமே முற்றிலும் அல்லது சிறுதளவேனும் நம்பிக்கை இல்லை என்றே நினைக்க முடிகிறது. பெரியாரால் வீழ்ந்தது பார்பனியமும், மூடநம்பிக்கையுமேயன்றி கடவுள் நம்பிக்கையல்ல. ஏனெனில் பெரியாரையும் கடவுளாகத்தான் நினைப்பர் நம் மக்கள்.

தலித் கிறித்துவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால் இந்து மக்கள் தொகையோ, இந்து மதமோ பாதிக்கப்படும் என்பது அறியாமைதான். நாடார்கள், வன்னியர்கள், முதலியார்கள் இவர்கள் இந்துவாக இருந்தாலும் கிறித்துவராக இருந்தாலும் பிற்பட்ட பிரிவினர்தான். கிறித்துவ மதத்திற்கு மாறுவதால் அரசாங்க சலுகைகள் அளவில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, பிறகு ஏன் இவர்கள் அனைவருமே கிறித்துவர்கள் ஆகவில்லை ? உயர்வு தாழ்வைக் காரணம் காட்டித்தான் முன்பு இவர்களை மதம் மாற்றத்திற்கு தூண்டினார்கள், ஆனால் அந்த நிலை அவர்களுக்கு இன்று இல்லை. இவர்கள் நிலையெல்லாம் பொருளாதார அளவில் உயர்ந்துவிட்டதால் எந்த மதத்தில் இருந்தாலும் வழிபாடு தவிர பெரிய மாற்றம் இல்லை, வேறு வேறு மதங்களாக இருந்தாலும் சாதி அடிப்படையில் இவர்களுக்குள் பெண் கொடுத்து / எடுப்பதும் கூட நிற்கவில்லை. பின்பு ஏன் தலித்துக்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தால் அனைவருமே கிறித்துவர்கள் ஆகிவிடுவார்கள் என்கிற தேவையற்ற பயம் ? அங்கும் சரியாக நடத்தப் படவில்லை என்பது வெளிச்சமாகிவிட்டது. மற்றவர்களை விட பாதிக்கப்படும் தலித் பெருமக்களுக்கு அது நன்றாகவே தெரியும். அண்மையில் கூட வன்னியர் - தலித் கிறித்துவர்கள் மோதல், சர்ச் பூட்டப்பட்டது பற்றிய தகவல்களை பதிவில் எழுதினேன்.

'நாம் அங்கும் இப்படியே தான் நடத்தப்படுவோம்' என்று நன்கு தெரிந்தே, இந்து தலித்துகள் சலுகை பாதிப்பு இல்லை என்பதற்காக கிறித்துவர்களாக மாறுவார்களா ? தெரிந்த பேய் ! தெரியாத பேய் !!!பழமொழியை நினைத்துப் பாருங்கள். எது பெட்டர் ?

இந்துமதத்தைக் காக்க இட ஒதுக்கீட்டை கேடயமாக பயன்படுத்துவது தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு செய்யும் துரோகம், 1000 ஆண்டுகளாக தொடர்ந்த அவலம், தலித் கிறித்துவர்களுக்கு தொடர்கிறது. தலித் இந்துக்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு என்பது கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் பழைய வடிவமாகவே தொடர்ந்து இருக்கிறது.

இந்துமதத்தைக் காக்க வேண்டுமென்றால் அதை முதலில் இந்துத்துவ வாதிகளிடமிருந்து விலக்கினாலே காப்பாதாகவே பொருள், தலித் ஆலய நுழைவு போராட்டத்தை ஆதரிக்கும் இந்து அமைப்பினர் எத்தனை பேர் ? ஒருவரும் இல்லை, அதை எதிர்க்கவே இவர்களும் சாதிவெறியர்களின் வாளாகவே இருக்கிறார்கள். தலித்துகளுக்கு எந்த உரிமையும் கொடுக்காமல், மெஜாரிட்டி குறையாமல் வைத்துக் கொள்வதற்காக மட்டுமே கவலைப் படுகிறார்கள், அதுவும் அவர்கள் மீது இருக்கும் கரிசனம் கிடையாது, அவர்கள் சிறுபான்மையினர் என்று தூற்றும் கிறித்துவர்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக பலம் திரட்டிக் காட்டி, நாங்களே பெரும்பான்மையினர் என்று மார்த்தட்டவும், இந்து மதம் பெயரில் நடத்தப்படும் கலவரங்களுக்கு ஆதரவு வேண்டும் என்பதற்குத்தான். தலித் ஆழ்வார் சிலையே பெருமாள் பக்கத்தில் வைத்தால் தீட்டாகிவிடும், ஆச்சாரம் கெட்டுவிடும் என்பவர்கள். இந்து தலித் பாதிக்கப்படுவான் என்பதெல்லாம் நீலிக் கண்ணீர் தான்.

தலித் கிறித்துவர்களுக்கு சலுகை வழங்கினால், அதனால் இந்து எண்ணிக்கை குறையும் என்பதெல்லாம் வெறும் கற்பனையே. கிறித்துவ மதவாதிகளுக்கு வேண்டுமானால் அது பலத்த அடியாக அமைய இருக்கும்.எனென்றால் முன்பெல்லாம் "நாங்கள் சமமாக நடத்துகிறோம் வாருங்கள்" என்று அழைத்துச் சென்றனர், வழிப்பாடு, அருள்தந்தை, இடுகாடு ஆகிய எதிலுமே கிறித்துவர்களிடம் சமத்துவம் எதுவுமே ஏற்படவில்லை(வெள்ளையர் கருப்பர் இனத்திலும் கூட உலக அளவில் இப்படித்தான்), பேதமே தொடர்கிறது என்பது கண்கூடு.

இனி தலித்துகளுக்கு உயர்வு, சமத்துவம் தருவதாகக் கூறமுடியாமல்,
"இயேசு இரட்சிக்கிறார் பாவிகளே வாருங்கள்" என்பதைத் தான் சொல்ல முடியும். அதற்கும் ஏன் கவலைப் பட வேண்டும். "பாவிகளைத் தானே அழைக்கிறார்கள்" என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

பிஜேபியின் தலித் கிறித்துவர்களுக்கு எதிரான இந்த முட்டுக்கட்டை, போராட்டம் எல்லாம் வழக்கமான மத எதிர்ப்புக்காகவும், இந்துமத வெறியாகச் செய்யப்படும் அரசியல் மட்டுமே யன்றி, இந்து தலித் குறித்தான உண்மையான அக்கரையோ, நல்ல நோக்கமோ அல்ல, மாறாக இந்து தலித்துகளுக்கு பாதிப்பு என்கிற கூப்பாட்டை கேடயமாக பயன்படுத்துகிறார்கள்.

எனது கட்டுரைகளில் எந்த மதத்தையும் உயர்ந்தது என்ற வலியுறுத்தல் செய்வது இல்லை. சிலவற்றின் சிறப்புத் தன்மைகளை சுட்டி இருக்கிறேன், சிலவற்றின் பிற்போக்குத்த தனங்களை சுட்டி இருக்கிறேன். என்னைப் பொருத்து அனைத்து மதங்களும் ஒன்று தான், மதங்கள் தோன்றும் போது உலகைக் காக்கத் தோன்றின என்பது நம்பிக்கை, இப்பொழுது பரிணாமம் அடைந்து உலகை அழிக்கப்போகின்றன என்பது உறுதி.

"இந்து மதத்துக்கு மட்டும் ஏன் இந்தத் தண்டனை?" என்ற உங்கள் கேள்வி அபத்தம், உங்கள் கேள்வியை நிராகரிக்கிறேன். அது முற்றிலும் உங்கள் கற்பனை. இந்து மதம் மோசம் பிற மதங்கள் ஓகே, என்பது போல் ஒப்பீட்டு அளவில் எந்த மதமும் உலகில் உயர்ந்த மதம் என்று நான் சொன்னது இல்லை.

பின்குறிப்பு : இந்த இடுகை, எனது பொது நலவழக்குத் தொடுக்க யாராவது முன் வரவேண்டும் ! - பதிவின் கருத்துப் பகிற்விற்காக அண்ணன் ரத்னேஷ் எழுதிய தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு – சில எண்ணப் பகிர்தல்கள் (கோவி.கண்ணனுடன்) பதிவிற்கான எனது மாற்றுக் கருத்துக்கள்.


சுட்டிகள் :
வருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு... !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமையாம்...!
மதமாற்றமா ? மனமற்றமா ?

6 கருத்துகள்:

Bharath சொன்னது…

Neat.. பதில் நச்'னு இருக்கு.. ஆசைகாட்டி மாற்றுவதும் தவறு.. பயம் காட்டி(இட ஒதுக்கீடு கிடையாது என்று) பிடித்து வைப்பதும் தவறு.. அவர்களை இந்துவாய், கிறுத்தவராய் பார்ப்பதை விட்டுவிட்டு மனிதராய் பார்த்து அவர்களுக்கு உதவ வேண்டும்.. என்னை பொறுத்தவரை அம்பேத்கர் கேட்டு காந்தி மறுத்த இரட்டை வாக்குரிமை தான் ஆட்சியினரை அவர்கள் மீது அக்கறை கொள்ள வைக்கும்..

ஜோ/Joe சொன்னது…

கோவி கண்ணன்,
அடிப்படை புரிதலிலேயே தவறு இருக்கிறது .

மதமாற்றத்தை பொறுத்தவரை ,துண்டு பிரசுரம் கொடுப்பது ,'இயேசு அழைக்கிறார்' என அழைப்பது இதெல்லாம் கத்தோலிக்கர் செய்வதில்லை ..மிக சிறு அளவில் இருக்கும் பிற சபையினர் செய்கிறார்கள் ..ஆனால் பதிலுக்கு தாக்கப்படுவது மாதா கோவில் ,அதாவது கத்தோலிக்க கோவில் ..இது பெரிய காமெடி .

கிருஷ்ணா சொன்னது…

//என்னைப் பொருத்து அனைத்து மதங்களும் ஒன்று தான், மதங்கள் தோன்றும் போது உலகைக் காக்கத் தோன்றின என்பது நம்பிக்கை, இப்பொழுது பரிணாமம் அடைந்து உலகை அழிக்கப்போகின்றன என்பது உறுதி.//

SUPER.....

-Krishna

Robin சொன்னது…

மதமாற்றத்தைக் குறித்து தவறான எண்ணங்கள் பலருக்கும் இருப்பதால் மதமாறிய ஒருவரின் கருத்துக்களை இங்கே பதிக்கிறேன்.

INTROSPECTION respects no ideology. Even the best efforts of the RSS and the VHP can’t stop a change of heart. Vijay Pradhan, 35, is hiding in Raikia. For eight years, Vijay Pradhan says, he was an active RSS worker. He worked with Saraswati and conducted several reconversions. He also trained many RSS workers in the art of reconverting Christians to Hinduism. “I taught people what I was taught. That I must serve the country by fighting the Muslim and Christian religions, which are foreign to us. Our culture had to be saved. Then, one day a young pastor told me about Jesus. I was surprised at his courage in accosting me, but I was curious. This man told me that I could have eternal life with Jesus,” says Pradhan.

The one-time RSS worker says he was confused after this encounter. “I began searching for Jesus because I was intrigued by what I was told about him. On January 26, 1994, I challenged the creator. I asked why there are so many religions if there is one creator. I said whoever you are, I need to know you by name. I threatened that I would turn atheist if the Creator didn’t show himself. I couldn’t sleep at night. At 4.30 am, as I was getting ready for yoga, I saw a human-like figure. There was plenty of light. A voice said, ‘I am the one you are looking for,’” says Pradhan.

He says his thought process changed after this. He began spreading the gospel and going to church. “The RSS workers came to me and asked me why I had converted. They asked me how much money I was given. I used to ask people the same things. But I wasn’t paid. The RSS searched for me. I had to hide in the jungles. As long as there is trouble, I will hide,” he says.

Pradhan says only those who are called by Jesus are the true converts. “Only the attraction of God can make them that. Hindus become Christians, they are never made into Christians. The reconversions by the VHP and the RSS are false. They are conducting a political war in the name of God.”

source : www.tehelka.com

துரை சொன்னது…

eyநல்ல அலசல் நான் இந்த மதம் என்று சொல்வதைவிட தமிழன் என்று சொல்வதைய பெருமை அடைகிறேன், இனிவரும் காலங்களில் தமிழில் படிப்பவருகளுக்கு இட ஒதுதிக்கீடு கொடுக்க வேண்டிய அவல நிலை உருவாகலாம்
முதலில் தமிழில் வேலை வாய்ப்பை உருவாக்கி, தமிழை அழியாமல் இருக்க வழியை பார்போம், அடுத்து மதத்தை பார்போம்
அப்பறம் ஒரு வசயம் தமிழனுக்கு மதம் என்பதே கிடையாது
இந்து மதம் - வடநாட்டான்
கிறுத்தவம் - ஆங்கிலேயன்
இஸ்லாம் - முகலியர்
அன்று தமிழன் தீ, ஞாயிறு, கல், மண் போன்றவற்றை வணங்கி வந்தான் இதுவும் வடநாட்டான் கொண்டுவந்த கட்டுகதைகளும் எறத்தாள ஒத்துவர மேலும் அவன் விட்ட அதீத கர்பனை கதைகள்
அவனை ஈர்த்தது, இதன்பால் அவர்களை(ஆரியர்களை) உயர்ந்தவன் என்றும் தன்னை தாழ்ந்தவன் என்றும் நினைத்தான், நினைத்துகொண்டிருக்கிறான், ஆக தமிழர்களின் அறிவு மழுங்கடிக்க பட்டது, சமற்கிருத்த எழுத்தான் om, swatik இதையெல்லாம் வெறித்தனமா கும்பிடுகிறான், அதனால்தான் இன்றுவரை தமிழ்நாட்டு கோயில்களில் தமிழ் ஒலிக்காமல் வேற்று மொழியான சமற்கிருத்தம் ஒலித்து கொண்டுயிருக்கிறது, அடமுடர்களே ஆரியர்கள் இங்கு வருவதற்கு முன்பே தமிழ் இருந்து, அப்படி இருக்க இராமனும், கிருஷ்ன்னும், ஏனைய கடவுளும் சமற்கிருத்தம் பேசி வாழ்திருந்தால் அவர்கள் எப்படி தமிழர்களுக்கு கடவுள் ஆனார்கள் ஒரே ஒரு ஆருதல் ஆரியர்கள்விட்ட கட்டு கதைகளில் நாமும் நம் பங்குக்கு முருகன் என்னும் கட்டு கதையிட்டு அவனை நம் கடவுளாக பாவித்து வருகிறோம் அவ்வளவே
தமிழனே மதத்திற்கு அடிமையாகி உன் மொழியை இழந்துவிடாதே
எங்க எல்லாம் இந்தி எழுத்து/சொல் தமிழ்நாட்டில் நம் அன்றாடம் கானும் பொருள்களில், பலகைகளில், பல துறைகளில், சினிமாக்களில், பாடல் வரிகளில், தொலைகாட்சிகளில், விளம்பரம்களில் காணபடுகிறதோ அப்பவெல்லாம் நம் தாய்தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்,
கொஞ்சம் இந்தி இருந்தால் என்ன என்ற மெத்தன போக்கு அழிவில்தான் போய் முடியும், தமிழ் வார்த்தைகளும் அங்கு ஓலிக்கபடுகின்றன அப்படியானால் பரவாயில்லை, அப்படியில்லையே, விழித்து கொள்தமிழா

புருனோ Bruno சொன்னது…

//கோவி கண்ணன்,
அடிப்படை புரிதலிலேயே தவறு இருக்கிறது .

மதமாற்றத்தை பொறுத்தவரை ,துண்டு பிரசுரம் கொடுப்பது ,'இயேசு அழைக்கிறார்' என அழைப்பது இதெல்லாம் கத்தோலிக்கர் செய்வதில்லை ..மிக சிறு அளவில் இருக்கும் பிற சபையினர் செய்கிறார்கள் ..ஆனால் பதிலுக்கு தாக்கப்படுவது மாதா கோவில் ,அதாவது கத்தோலிக்க கோவில் ..இது பெரிய காமெடி //

காமெடி இல்லை.. ட்ராஜடி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்