பின்பற்றுபவர்கள்

14 செப்டம்பர், 2008

அறிவியல், ஆன்மீகம், இறைவன் மற்றும் இயற்கை !

ஆன்மீகத்தை கேள்வி கேட்கும் பகுத்தறிவுவாதிகள் ஏன் அறிவியலை கேள்வி கேட்பது இல்லை?

- பதிவர் அறிவகம், அருமையான கேள்வி ஒன்றை முன் வைத்திருக்கிறார். அதில் தெளிவாக ஒன்றைக் குறிப்பிட்டு இருக்கிறார்.

"கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்க மில்லியன் கோடி செலவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியும், அணுகுண்டு சோதனைகளும், கடவுள் துகள் ஆராய்ச்சிகளும் தேவையா?"

"கொஞ்சம் யோசியுங்கள் செவ்வாய் கிரகத்தில் நீர்தேட செலவிடும் பணத்தை பூமியிலுள்ள நீரை சுத்தப்படுத்த, பாதுகாக்க செலவிட்டால் குடியா முழ்கிபோகும்?"


சிந்திக்க வேண்டிய ஒன்றுதானே, அறிவியல் வளர்ந்திருக்கிறது என்பதை ஒப்புக் கொள்வோம், இந்த அறிவியல் வளர்ச்சியால் புலன்களின் திறன்களை கருவிகள் மூலம் நீட்டிக்க முடிந்திருக்கிறது, அதாவது தொலைவில் நடப்பவற்றை காண முடிகிறது, தொலைவில் பேசுவதைக் கேட்கமுடிகிறது, வெகுவிரைவில் பயணம் செய்ய முடிகிறது, ஒரு சில உடலியல் கோளாறுகளை சரி செய்து இருக்கிறது, குழந்தைப் பிறப்பை கட்டுப்படுத்துகிறது. ஏற்படும் சுனாமியால், நில அதிர்வால் பெரும் சேதம் விளையுமா என்பதை முன்கூட்டி தெரிவித்துவிடும். ஒப்புக் கொள்ள வேண்டியது தான்.

அறிவியல் வேறு ஆன்மிகம் வேறு என்பதை பலரும் புரிந்து கொள்வதே இல்லை. பெருவெடிப்பு பற்றி பேசினால் "எங்கள் மத நூலில் இத்தனையாவது அதிகாரத்தில் இவை ஏற்கனவே சொல்லப்பட்டது" என்றெல்லாம் உடனே சொல்லிவிடுகிறார்கள், இது போன்ற மூட நம்பிக்கை எல்லா மதப் பற்றாளர்களிடமும் உண்டு. படிக்கும் போது சிரிப்புதான் வரும், மனிதர்கள் தனது அறிவை பயன்படுத்தி கடினப்பட்டே முழுதாகக் கண்டுபிடிக்கட்டம், அப்படியே கண்டுபிடித்தால் இவைபற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறேன், கர்வம் அடையாதீர்கள் என்று தட்டி வைப்பதற்காக 'குறிப்பாகவே, மறைமுகமாகவும்' இறைவன் எல்லாவற்றையும் சொல்லி வைத்துவிட்டாரா ?
இறைவனுக்கு இப்படி பட்ட 'தாழ்ந்த' எண்ணம் இருக்குமா ? நம்பிக்கை யாளர்களுக்கே வெளிச்சம்.

அறிவியல் என்பது கணித அறிவின் மூலம் இயற்கையின் செயல்பாடுகளையும், அதில் இருக்கும் சமண்பாடுகளைக் கண்டுபிடித்து தொழில் நுட்ப உதவியுடன் அதனை மாற்றி அமைக்க முயலுவது தான், அந்த முயற்சியில் மனித அறிவு தொடர்ந்து வெற்றிபெற்றே வருகிறது.

ஆன்மிகவாதிகள் இயற்கையும் இறைவனும் ஒன்று என்று நம்புவதால் குழப்பம் அடைந்து, எல்லோரையும் குழப்பமடையச் செய்கிறார்கள், இதை அறிவியலார் புறந்தள்ளி முன்னோக்கிச் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.

இயற்கையும் இறைவனும் ஒன்றாக இருக்கவே முடியாது, இறை என்பது மனித குலத்துக்கும், உயிரினத்துக்கும் என்றும் நல்லதே செய்யும் என்பது தானே நம்பிக்கை, இறைவனும் இயற்கையும் ஒன்றாக இருந்தால் இயற்கைப் பேரழிவுகள் நடப்பதும், அதன் மூலம் அப்பாவிகள் முதல், அன்று பிறந்த குழந்தை கூட
இறப்பது எப்படி ? விதி, கர்மா, இறைச்சித்தம் என்ன என்ன கருமாந்திரங்கள் (கர்மா) வைத்துக் கொண்டாலும் 1 வயது வரை வாழும் குழந்தைக்கு கர்மவிதிகளின் படி எந்த துன்பத்தை அனுபவம் செய்கிறது? ஒன்றும் இல்லை, அதன் முன் கத்தியை ஓங்கினாலும் சிரித்துக் கொண்டு தான் இருக்கும், குழந்தையின் மரணத்தைக் கூட பொருட்டாக நினைக்காதது தானே இயற்கைச் சீற்றம், இதற்கும் இறைவனுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் ? சுனாமி, கும்பகோணம் குழந்தைச் சாவுகளுக்கெல்லாம் இறைவன் தான் காரணமா ? என்று நாத்திகர்கள் கேட்கும் கேள்விக்கு மழுப்பல் இல்லாத பதிலை எந்த ஆன்மிக, மதவாதிகளாலும் தரமுடிவதில்லை.

இயற்கை என்பது ஒரு விசை, எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும், திடிரென்று சிறுவிசைக் கூட பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திவிடும், உதாரணத்துக்கு நிலத்தின் அடியில் இருக்கும் நிலத்தட்டுகள் (ப்ளேட்டுகள்) ஒன்றோடு ஒன்று மோதுவதால் தான் நில அதிர்வே வருகிறது என்று நமக்கு தெரியும். எப்பொழுது மோதுகிறது? பூமி சுழலும் போது அதனுடன் சேர்ந்து அதே வேகத்தில் சுழன்று கொண்டு இருக்கும், ஒரு ப்ளேட்டில் எடை குறையும் போது அல்லது மற்றொரு ப்ளேட்டில் எடை மிகும் போது கூடவே சுழலும் தன்மையில் சிறிது தடை ஏற்பட்டுவிடும், உடனடியாக இரண்டு ப்ளேட்டுகளும் ஒன்றோடு ஒன்று மோதி பெரிய நில அதிர்வையே ஏற்படுத்திவிடும், சமச்சீராக சுற்றிக் கொண்டு இருக்கும் ப்ளேட் ஒன்றின் மீது ஏற்பட்டுக் கொண்டு இருக்கும் சமச்சீரின்மை (இன்பேலன்சின்) அதன் மீது இருக்கும் எதோ ஒரு திடப்பொருளின் இடப் பெயற்சியே மோதிக் கொள்வதற்கு முந்தைய நிகழ்வாக இருக்கும், அது ஒரு கிராம் எடை கொண்ட பொருளினாலோ, அல்லது ஒரு மனிதன் ஒரு ப்ளேட்டின் (மேற்பரப்பின்) விளிப்பிலிருந்து அடுத்த பிளேட் விளிப்புக்கு கால்வைக்கும் நொடியாகக் கூட இருக்கும்.

இயற்கையின் எந்த ஒரு நிகழ்வுக்கும் சமண்பாடு உண்டு, பூமி சுற்றிவரும் காலக்கணக்கு 365 1/2 நாள், தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம். இது ஒரு இயற்கை நிகழ்வு, பிரபஞ்சத்தில் இருக்கும் அத்தனை இயக்கமும் இயற்கை நிகழ்வுகள் தான். நம்மால் கண்டுபிடிக்க முடியாத இயற்கைச் சமண்பாடுகள் எண்ணற்றவை உண்டு.

இறைவனை இதில் எப்படி தொடர்பு படுத்துவது ? எல்லாவற்றையும் அவனே படைத்தான் என்றால் பயன்பாடு இல்லாமல் கிடக்கும் ஆகாய வெளிகள் தான் மிக்கவையே, 10 கோள்களுடன் சூரியனைப் படைத்துவிட்டு ஒரே ஒரு கோள்களில் மட்டும் தான் நாம் குடித்தனம் நடத்த முடியும் என்று செய்தது ஏன் ? பூமிக்கு தோரணமாக கேலக்ஸிகளையும் நட்சத்திரங்களையும் படைத்தானா ? அவற்றினால் நமக்கோ, இறைவனுக்கோ பயன் என்ன ?

இறைவன், ஆன்மிகம் இவை எல்லாம் பிறப்பு இறப்புடன் இருக்கும் 'உயிர்' தொடர்ப்பு உள்ளவை, என்னதான் அறிவியல் கண்டு பிடிப்புகள் முன்னேறிச் சென்றாலும் பிறிந்த உயிரை மீட்க முடியவே முடியாது, பிறப்புக்கு முன்னால், இறப்புக்கு பின்னால் என்ற சிந்தனைகளில் மட்டுமே இறைவனும் ஆன்மிகம் தொடர்புடையது, வாழ்கையிலும் அவற்றின் பயன்பாடுகளாக வழிபாட்டு முறைகள், மதங்களின் நோக்கம் இருக்கிறது, உண்மையான நோக்கங்களை விட்டு விலகிச் சென்று அறிவியலுடன் தொடர்பு படுத்துவது ஆன்மிகத்திற்கு நட்டமே, அறிவியல் வளராத காலங்களில் வாழ்கையின் பிடிப்பை ஆன்மிகம் காப்பாற்றிக் கொண்டு வந்தது.

இன்றைய காலங்களிலும் கூட மரணம் ? பற்றிய கேள்விகளை ஆன்மிகம் முழுவதுமாக புரிந்து கொண்டதா ? இல்லை, அவரவர் மதங்களில் பலகருத்துக்கள். உடல் நலிவுற்றால், விபத்தால் இறப்பு என்பதைத் தவிர்த்து 'உயிரின்' தன்மைப் பற்றி அறிதலை இன்றைய ஆன்மிகம் தெளிவான வரையறை செய்யவில்லை.

கிடைக்காத விடைக்கு எல்லாம் இறைவன் தான் காரணம் என்று ஆன்மிகவாதிகள் சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். 'உடலில் உயிர் இயக்கம்' பற்றிய புரிதலை செல்களினால் ஏற்படும் கெமிக்கல் ரியாக்சன் என்று உறுதியற்ற தகவலாகத்தான் அறிவியாளர்கள் சொல்கிறார்கள்.

என்ன சொல்ல வந்தேன் ?

அறிவியலின் நோக்கம் இயற்கைப் பற்றி அறிதல், இயக்கத்தின் தன்மைகள் மாற மாற இயற்கையின் போக்கில் மாற்றம் இருக்கும், இது இயற்கையில் இருக்கும் விதி, இதை சிறிய அளவில் கட்டுப்படுத்தினாலும் பெரிய அளவில் மாற்றவே முடியாது, சிறிது சிறிதாக சேர்ந்து கொண்ட ஓசோன் ஓட்டைகளாக மாறி சூரிய ஒளிக்கு பெரிய வழியே
அமைத்துக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இதையும், இயற்கைச் சீற்றம் ஆகியவற்றை இறை சக்தி சரி செய்ய வேண்டு மென்றால் இயற்கையில் நடக்கும் இயங்கு சக்தியை கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதற்கு இருக்க வேண்டும். அப்படி இருப்பது போல் தெரியவிலை. 'எல்லாம் அவன் செயல் ?' இயற்கை விதி, ஒருவேளை இயற்கையைத்தான் இறைவன் என்கிறார்களா ? அப்படியென்றால் துன்பம் நேரும் போது அவர்களால் இறைவனின் செயல் என்று அமைதி அடைய முடியவில்லையே.

'எல்லாம் அவன் செயல்' என்று சொல்வதைவிட 'எல்லாவற்றையும் அறிந்தவன்' அதாவது 'சாட்சி' என்று சொல்வதே இறைவன் பற்றிய சரியான புரிதலைத் தரும். இரட்டை கோபுர தகர்பின் போது 110 மாடியில் இருந்து ஒருவன் விழுவதை கேமராக்கள் துல்லியாமாக படம் பிடித்து நமக்கு காட்டும், திரையில் நாம் பார்ப்போம் பரிதாபப் படுவதைத் தவிர வேறொன்றும் நம்மால் செய்ய முடியாது, இறைவனின் நிலையும் இதுதான் என்றே நினைக்கிறேன். நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கும். அப்போது நாம் செய்யும் பாவத்துக்கெல்லாம் தண்டனையே கிடையாதா ? ஆன்மிகத்தில் சொல்லப்படும் மறுபிறவி / சொர்கம் இவற்றைப் பற்றிய தியரிதான் இப்போதைக்கு விடை. அதிலும் இறைவனின் தலையீடு இருக்கவே இருக்காது என்றே நினைக்கிறேன். அப்படி தலையிட்டால் அது நீதியின்மை.

பாவ புண்ணியம் / மறுபிறப்பு ? இதெல்லாம் 'சுத்தப் பொய்' என்று சொல்லும் நாத்திகர்கள் கூட 'எவரையும் கொல்லாம்' என்று முடிவெடுப்பது இல்லை. காரணம் மனசாட்சி தடுத்துவிடும். சாட்சி இல்லாமல் கொலை செய்துவிட்டு
நாத்திகன் கூட நிம்மதியாக இருக்க முடியாதென்றே நான் நினைக்கிறேன்.

25 கருத்துகள்:

G.Ragavan சொன்னது…

:) கோவி...ஆன்மீகத்துலயும் அறிவியல்லயும் இருக்குற யாராலும் எதுக்கும் முழுமையா விடை சொல்ல முடியாது. அதுதான் உண்மை. அறிவியல்லயும் எல்லாத்துக்கும் விடையில்லை. இன்னும் இல்லைன்னு வேணா சொல்லலாம். கொஞ்சம் கொஞ்சமா கண்டுபிடிக்கிறாங்க. ஆன்மீகத்துலயும் இப்பிடித்தான்னு நெனைக்கிறேன்.

ஆராய்ச்சிகள்னு கேக்க சந்தோசமாத்தான் இருக்கு. ஆனாலும் அந்தக் கேள்விக்கான விடையை நீங்க சொல்லலைன்னுதான் தோணுது.

செல்வன் சொன்னது…

//பெருவெடிப்பு பற்றி பேசினால் "எங்கள் மத நூலில் இத்தனையாவது அதிகாரத்தில் இவை ஏற்கனவே சொல்லப்பட்டது" என்றெல்லாம் உடனே சொல்லிவிடுகிறார்கள்,இது போன்ற மூட நம்பிக்கை எல்லா மதப் பற்றாளர்களிடமும் உண்டு.//
மிக சரியாக சொன்னீர்கள் மதப் பற்றாளர்களின் கொடுமை வர வர தாங்க முடியவில்லை.

Kanchana Radhakrishnan சொன்னது…

நீங்கள் சொல்லும் இயற்கையைத்தான் நான் இறைசக்தி என்கிறேன்..பிறப்பு இருக்கும்போது இறப்பும் நிச்சயம்..சில சமயங்களில் மனிதனால் இயற்கைக்கு எதிராக நடைபெறும் காரியங்களால்
இயற்கைனிலையில் மாற்றம் ஏற்பட்டு, அதுவே சுனாமி,புயல் போன்று இயற்கை சேதத்தை ஏற்படுத்துகிறது.
ஓசொன் பற்றி இன்று பேசுகிறோமே அது ஏன்?
குண்டு பல்புகள் எறிய விடாதீரகள் என்கிறார்களே அது ஏன்?
மரங்கள் அழிக்கப்படுவதால்..பருவகாலங்கள் மாற்றம் ஏற்படுகிறதே..ஏன்?
இயற்கைதான் இறைசக்தி என நான் நம்புகிறேன்

RATHNESH சொன்னது…

இப்படி எழுதறதுக்குப் பெயர் தான் பின்நவீனத்துவமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்தக் கேள்விக்கான விடையை நீங்க சொல்லலைன்னுதான் தோணுது.//

எந்த கேள்வி ? நான் இங்கு சொல்லவருவது இறைவனுக்கும் இயற்கை இயக்கத்திற்கும் தொடர்பு இல்லை என்பதைத்தான்.

அறிவகம் கேட்ட கேள்விக்கு அவர்களுடைய பதிவிலேயே பதில் சொல்லி இருக்கிறேன். அறிவியல் வளர்ச்சிதான் அந்த வளர்ச்சிக்கு உரமாக மனித தன்மையை இழந்துவருகிறோம். செவ்வாயில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடிப்பதைவிட ஆப்ரிக்க நாடுகளில் உணவுகள் வழங்கப்பட்டால் நல்லது

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//மிக சரியாக சொன்னீர்கள் மதப் பற்றாளர்களின் கொடுமை வர வர தாங்க முடியவில்லை.//

அறிவியலின் விதிகள், முடிவுகள் அவ்வப்போது மாறும், பை (Pi) யின் மதிப்பு இன்று இருப்பதைவிட இன்னும் துல்லியமாக நாளைக்கு கண்டுபிடிக்கப்படலாம்.

Pi யின் மதிப்பு பற்றி மதநூல்களில் ஏற்கனவே குறிப்பு இருக்கிறது என்று சொல்பவர்களுக்குத்தானே தலைகுனிவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
நீங்கள் சொல்லும் இயற்கையைத்தான் நான் இறைசக்தி என்கிறேன்..பிறப்பு இருக்கும்போது இறப்பும் நிச்சயம்..சில சமயங்களில் மனிதனால் இயற்கைக்கு எதிராக நடைபெறும் காரியங்களால்
இயற்கைனிலையில் மாற்றம் ஏற்பட்டு, அதுவே சுனாமி,புயல் போன்று இயற்கை சேதத்தை ஏற்படுத்துகிறது.
ஓசொன் பற்றி இன்று பேசுகிறோமே அது ஏன்?
குண்டு பல்புகள் எறிய விடாதீரகள் என்கிறார்களே அது ஏன்?
மரங்கள் அழிக்கப்படுவதால்..பருவகாலங்கள் மாற்றம் ஏற்படுகிறதே..ஏன்?
இயற்கைதான் இறைசக்தி என நான் நம்புகிறேன்

5:21 AM, September 14, 2008
//

நீங்கள் சொல்வதும் / நம்புவதும் சட வாதம் போல் இருக்கிறது, ஜைன மத நம்பிக்கை. அவர்கள் இயற்கையைத்தான் இறைவன் என்பார்கள். இயற்கையை புரிந்து கொள்ள முயன்று அதன் தன்மையைப் போற்றினார்கள். வேண்டுதலுக்கு பலன் இல்லை என்று சொல்வது அவர்களின் துணிபு.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
இப்படி எழுதறதுக்குப் பெயர் தான் பின்நவீனத்துவமா?

5:57 AM, September 14, 2008
//

ரத்னேஷ்,

என்ன புரியலை ? இறைவன் வேறு இயற்கை வேறு என்பதைத்தான் எழுதி இருக்கிறேன். தானியங்கி வாள் போன்றது இயற்கை அது சுழலும் போது நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நன்மை / தீமை என்பதை பிரித்து பார்பது நம் மனம். அந்த வாள் ஒருவர் மீது குறுக்கிட்டு இரண்டாக பிளந்து சென்றால் தீமை என்று சொல்லிவிடுவோம், அதே வாள் நம்மால் வெட்ட முடியாத பெரிய பழத்தை குறுக்கிட்டு வெட்டி (நமக்கு உதவினால்) அதை நன்மை என்கிறோம்.

பிரபஞ்ச ஒடுக்கம் விரிவு பற்றி ஏற்கனவே எழுதியதால் இங்கு அதனை எழுதவில்லை.

முரளிகண்ணன் சொன்னது…

நல்ல பதிவு. யோசிக்க வேண்டிய விஷயம்

அறிவகம் சொன்னது…

// பெருவெடிப்பு பற்றி பேசினால் "எங்கள் மத நூலில் இத்தனையாவது அதிகாரத்தில் இவை ஏற்கனவே சொல்லப்பட்டது" என்றெல்லாம் உடனே சொல்லிவிடுகிறார்கள், இது போன்ற மூட நம்பிக்கை எல்லா மதப் பற்றாளர்களிடமும் உண்டு. படிக்கும் போது சிரிப்புதான் வரும்,//

அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

கடவுள் துகள் ஆராய்ச்சி என்றதும் மதவாதிகள் உடனே அது என்ன ஏது என்று கூட ஆய்வது இல்லை. ஆமாம் ஆமாம் இதை தான் எங்கள் வேதம் இப்படி சொல்கிறது என மார்தட்டிக்கொள்கிறார்கள்.

தற்போது பெரும்பாலன மதம்சார்ந்த வலைப்பதிவர்களின் இடுகைகளில் இதை தான் காணமுடிகிறது.

// இயற்கையும் இறைவனும் ஒன்றாக இருக்கவே முடியாது,//

இதுவும் நூறு சதவீதம் சரி தான்.

கடவுள் என்றால் தனிப்பட்ட ஒருநபர் என்ற வாதம் போய் இப்போது மதவாதிகள் இயற்கையை சாட்சிக்கு இழுத்துக்கொள்கிறார்கள். அறிவியல் கை ஓங்கியதும் அதனோடும் கைகோர்த்துக்கொண்டார்கள்.

அறிவியல் சொல்லும் பிரபஞ்ச படைப்பு கொள்கை, வேதங்களில் உள்ள பிரபஞ்சப்படைப்பு கொள்கைக்கு முற்றிலும் எதிரனது என்பது ஒரு குழந்தைக்கு கூட தெரியும்.

ஆனால் மதவியல் விஞ்ஞானிகள் மட்டும் எப்படி தான் முழுபூசணிக்காயை சோற்றி மறைக்கிறார்கள் என்பது தான் விளங்கவில்லை.

// ஆன்மிகத்தில் சொல்லப்படும் மறுபிறவி / சொர்கம் இவற்றைப் பற்றிய தியரிதான் இப்போதைக்கு விடை.//

அதை மேய்பிக்க ஆன்மீகஞானிகள் முன்வராதது தான் வேதனை. இதை நிரூபணங்களுடன் நிரூபித்துவிட்டால் மதவாதிகள் மற்றும் போலி விஞ்ஞானிகளின் கொட்டம் அடங்கிவிடும் என நினைக்கிறேன்.

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//தை மேய்பிக்க ஆன்மீகஞானிகள் முன்வராதது தான் வேதனை. இதை நிரூபணங்களுடன் நிரூபித்துவிட்டால் மதவாதிகள் மற்றும் போலி விஞ்ஞானிகளின் கொட்டம் அடங்கிவிடும் என நினைக்கிறேன்.

நன்றி.//

அறிவகம்,

மிகச் சரியாக சொல்ல வந்ததை புரிந்து கொண்டு இருக்கிறீர்கள். நிரூபிக்கப் படவேண்டியது இறப்புக்கு முன்னும் பின்னும் பற்றிய நிலையைத்தான். இதைப் பற்றி அறிந்து கொண்டு நிரூபனம் செய்ய ஆன்மிகவாதிகளோ, அப்படி எதுவும் இல்லை என்று நிராகரிக்க அறிவியல் வாதிகளோ செயல்படுவது இல்லை. அறிவியலை துணைக்கழைத்துக்கும் ஆன்மிகவாதிகளின் அடாவடி உச்சத்தில் தான் இருக்கிறது.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//"கோடிக்கணக்கான மக்கள் பசியாலும் பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்க மில்லியன் கோடி செலவில் செவ்வாய் கிரக ஆராய்ச்சியும், அணுகுண்டு சோதனைகளும், கடவுள் துகள் ஆராய்ச்சிகளும் தேவையா?"// இதில் எனக்கு உடன்பாடு இல்லை பல ஆயிரம் குரங்குகளின் இறப்புக்கு பிறகுதான் தடுப்பு மருந்து உருவாக்கப்படுகின்றது.ஆராய்ச்சியில் தீங்கு ஏற்ப்படல்லாம் . ஆனால் அதனால் அடையும் நன்மைகள்தான் அதிகம். ஆராய்ச்சியை குறைச்சொல்ல ஆரம்பித்தால் நாம் கற்காலதில்தான் இருப்போம். அதேபொல் தவறுதலான ஆராய்ச்சி கற்காலதிற்கு கொண்டுசெல்வதும், உலகம் அழிவைக்காணும் என்பதும் உண்மைதான்.. பல ஆராய்ச்சியின் பயனாகத்தான் இன்று குழைந்தகளின் இறப்பு விகிதமும் கர்பிணிகளின் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது.

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
நல்ல பதிவு. யோசிக்க வேண்டிய விஷயம்

11:04 AM, September 14, 2008
//

பாராட்டுக்கு நன்றி முரளிகண்ணன் !

வடுவூர் குமார் சொன்னது…

செவ்வாயில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடிப்பதைவிட ஆப்ரிக்க நாடுகளில் உணவுகள் வழங்கப்பட்டால் நல்லது
திரு ஞானசேகரன் கருத்து தான் எனக்கும்.ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவவேண்டும் எனப்தில் மாற்று கருத்து இல்லை அதே சமயத்தில் இதை எடுத்து அங்கு கொடு என்பது சரியான வாதமாக தெரியவில்லை.
என்ன சொல்ல வந்தேன் ?
உங்கள் பல பதிவுகளில் எனக்கு மட்டும் தான் இப்படி தோனுகிறதோ என்று நினைத்திருந்தேன்,உங்களுக்குமா? :-)
நல்ல சீரோட்டமான பதிவு.

VSK சொன்னது…

//இயற்கையும் இறைவனும் ஒன்றாக இருக்கவே முடியாது, இறை என்பது மனித குலத்துக்கும், உயிரினத்துக்கும் என்றும் நல்லதே செய்யும் என்பது தானே நம்பிக்கை//

இந்த இடத்திலேயே தவறிவிட்டீர்கள் கோவியாரே!

இறை அவரவர் விதிப்படி உயிர்களை வாழ அனுமதிக்கிறது என்பதுதான் எல்லா மதங்களும் சொல்லும் கருத்து.
இதைத் திரித்து, உங்கள் "நம்பிக்கையை" இதில் நுழைத்துக் குழப்பி இருக்கிறிர்கள்!

//என்ன சொல்ல வந்தேன் ?//

அப்பாடா! உங்கள் குழப்பம் உங்களுக்கே புரிந்ததே!

//RATHNESH said...
இப்படி எழுதறதுக்குப் பெயர் தான் பின்நவீனத்துவமா?//

இது ஒரு 'நச்' உண்மை!
அவருக்குக் கொடுத்த உப்புச் சப்பற்ற பதிலுக்குப் பிறகும்!!

தன் வினை குறைக்க வழியினைக் காணப் புகாத மனிதர்கள் எல்லாம் இப்படித்தான் இறையைப் பழித்துச் செல்வர்!

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//வடுவூர் குமார் இதை எடுத்து அங்கு கொடு என்பது சரியான வாதமாக தெரியவில்லை.//
சரியாக சொன்னீர்கள் சார்(ஐயா)!

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
இந்த இடத்திலேயே தவறிவிட்டீர்கள் கோவியாரே!

இறை அவரவர் விதிப்படி உயிர்களை வாழ அனுமதிக்கிறது என்பதுதான் எல்லா மதங்களும் சொல்லும் கருத்து.
இதைத் திரித்து, உங்கள் "நம்பிக்கையை" இதில் நுழைத்துக் குழப்பி இருக்கிறிர்கள்!
//

வீஎஸ்கே ஐயா,

புரியாத ஒன்றை புரிந்தது போல் திரிப்பவர்களுக்கு நான் சொல்வது வியப்பளிக்கலாம். :) என்ன செய்வது வழக்கமான 'விதிப்படி' பற்றிய உங்கள் கருத்துக்களை ஆழமாக பதிய வைக்க முயற்சி செய்கிறீர்கள், பாராட்டுக்கள்.

தமது செயலுக்கு இறைவன் மூலம் ஞாயம் கற்பிப்பவர்களால் வேறென்ன செய்ய முடியும். இதுவும் இயற்கையில் இருக்கும் ஒரு 'விதிதான்' ஒன்றும் செய்ய முடியாது, பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதே சமயத்தில் இதை எடுத்து அங்கு கொடு என்பது சரியான வாதமாக தெரியவில்லை.
என்ன சொல்ல வந்தேன் ?//

குமார்,

செல்வந்தர்கள் வரியவர்களுக்கு உதவவேண்டும் என்று சொல்லப்படும் தர்ம சிந்தனையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், ஒருவரது உடமையை மற்றவர்களுக்கு கொடுப்பதும் தவறா ?

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன் சார்,

வரவர நீங்கள் உங்கள் பதிவுகளுக்கு என் அளவில் விளக்க உரை தேவைப்படும் அளவுக்கு அர்த்த அடர்த்தியான வார்த்தைகளைக் கொண்டு ஆழமான விஷயங்களையும் தொட்டு வருகிறீர்கள் என்கிற அர்த்தத்தில் மட்டுமே அப்படி எழுதினேன். வேறுமாதிரி எடுத்துக் கொள்ள வேண்டாம் .

அறிவகம் சொன்னது…

// ஆப்பிரிக்க நாடுகளுக்கு உதவவேண்டும் எனப்தில் மாற்று கருத்து இல்லை அதே சமயத்தில் இதை எடுத்து அங்கு கொடு என்பது சரியான வாதமாக தெரியவில்லை.//

திரு. வடுவூர் குமார் தங்கள் சொல்வது சரிதான். ஆனால் கொஞ்சம் கேள்வியை திருப்பி போட்டுபாருங்கள். இங்கிருப்பதை எடுத்து அங்கு கொடுக்கிறார்களே அதுமட்டும் சரியா? (ஆதாரங்களுடன் அதை ஒரு பதிப்பாகவே குழலியில் எழுதுகிறேன்)

இங்கு கடவுள் துகள், நிலவுகுடியேற்றம், அணுஆயுத தயாரிப்பு போன்ற விபரீத ஆராய்ச்சிகளை ஆதரிக்கும் அன்பர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பிரபஞ்சம் என்பது பொருள் மட்டும் சார்ந்தது அல்ல. போருளை வைத்துமட்டுமே அதன்தோற்றத்தை கண்டுபிடித்து விடலாம் என்பது முடியாத விடயம்.( அறிவகத்தில் எழுதி வருகிறேன்.)

சரி இது புரியாது. புரியக்கூடியதை சொல்கிறேன்.

வரலாறை திருப்பி பாருங்கள். உயிரினமாகட்டும். உயிரற்ற நிலையாகட்டும் கால சூழலுக்கு ஏற்றப தங்களை கொஞ்சம் கொஞ்சமாக தகவமைத்து காப்பாற்றிக்கொள்கின்றன. ஆனால் திடீர் விபத்துக்கள் பேராபத்துக்களை அவைகளால் எதிர்கொள்ள முடிவது இல்லை. அழிவது அல்லாமல் வேறு வழியில்லை.

உதாரணமாக கால்நடைகளை( ஆடு, மாடு), விளைநிலங்களை அழிக்கதான் இரண்டாம் உலகப்போரின் போது பார்த்தீனியம் என்ற விஷசெடியின் விதைகள் தூவப்பட்டது. அந்த திடீர் ஆபத்தை எதிர்கொள் முடியாமல் விளை நிலங்களும் ஆடுமாடுகளும் அழிந்தன. அனால் காலசூழலை கொஞ்சம் கொஞ்சமாக தகவமைத்து கொண்ட கால்நடைகள் தற்போது பார்தீனிய செடியை மட்டுமெ உண்டு உயிர்வாழும் நிலைக்கு வந்துவிட்டது. அதேபோல தான விளை நிலங்களும்.

உயிர்களுக்கு காலசூழலை மெல்ல தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கிறது என்பதை விஞ்ஞானத்தால் மறுக்க முடியுமா? அதேபோல திடீர் பேராபத்துகளை விஞ்ஞானத்தால் நேரடியாக எதிர்கொள்ள முடியுமா? பேராபத்துக்கள் வராது என்பதையும் விஞ்ஞானிகளால் உறுதியாக சொல்ல முடியமா? ஒரு உதாரணமாவது சொல்லுங்கள்

இன்று எயிட்ஸ் நோய் தான் மனிதகுலத்துக்கு மிகப்பெரிய சவால். அந்த நோய்கிருமியை கூட தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் நாளடைவில் மனிதனுக்கு சாத்தியப்படலாம்.

ஆனால் அணுகுண்டுவீச்சையும், பூமிவெடிப்பையும் நம்மால் எதிர்கொள்ள முடியுமா? கருகி சாம்பலான பின்பு சாம்பலில் இருந்து உயரித்துவரும் பீனிக்ஸ் பறவை கதையை நம்ப சொல்கிறார்களா அறிவியலாளர்கள்?.

கொஞ்சம் கொள்கை பிடிவாதத்தை விட்டு எதார்த்தமாக யோசியுங்கள்...

பின்குறிப்பு: இது போன்ற பிரமாண்ட ஆராய்ச்சிகள் இதுவரை சாதித்தது என்ன என்பதை சொல்லுங்கள் முதலில்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன் சார்,

வரவர நீங்கள் உங்கள் பதிவுகளுக்கு என் அளவில் விளக்க உரை தேவைப்படும் அளவுக்கு அர்த்த அடர்த்தியான வார்த்தைகளைக் கொண்டு ஆழமான விஷயங்களையும் தொட்டு வருகிறீர்கள் என்கிற அர்த்தத்தில் மட்டுமே அப்படி எழுதினேன். வேறுமாதிரி எடுத்துக் கொள்ள வேண்டாம் .

1:59 PM, September 14, 2008
//

அண்ணா,
புரிதல் இருந்தால் தன்னிலை விளக்கம் தேவையற்றது என்று முன்பே நீங்கள் எனக்கு சொல்லி இருக்கிறீர்கள் ! அதை நான் கடைபிடிக்கிறேன்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன் சார்,
//

"சார் ???" ஏன் இந்த கொலை வெறி, எதாவது கோபம் என்றால் திட்டிவிடுங்கள், கொலை முயற்சி வேண்டாம் !

:))

வடுவூர் குமார் சொன்னது…

ஆதாரங்களுடன் அதை ஒரு பதிப்பாகவே குழலியில் எழுதுகிறேன்
அறிவகம் எழுதுங்கள், அதையும் படித்து அதற்குப்பிறகு எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்.

கையேடு சொன்னது…

பெரும்பகுதி திரு. அறிவகம் அவர்களுக்கான பதிலாகயிருந்தாலும், பதிவில் கேட்டிருக்கும் சிலகேள்விகளுக்கும் பதிலளித்திருப்பதால்,இங்கேயே பதியவைக்கிறேன்.

//உயிர்களுக்கு காலசூழலை மெல்ல தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் இருக்கிறது என்பதை விஞ்ஞானத்தால் மறுக்க முடியுமா?//

உயிர்களுக்கு இருக்கிறது, மனிதனுக்கு இன்னும் இருக்கிறதா..??

//அதேபோல திடீர் பேராபத்துகளை விஞ்ஞானத்தால் நேரடியாக எதிர்கொள்ள முடியுமா? //

அனுபவித்த பேராபத்துக்களைப் பற்றி முன்கூட்டுயே அறிந்து கொண்டு மனித குலத்தைத் தற்காத்துக் கொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் நிச்சயமாக திறனுடையதே.

//பேராபத்துக்கள் வராது என்பதையும் விஞ்ஞானிகளால் உறுதியாக சொல்ல முடியமா? ஒரு உதாரணமாவது சொல்லுங்கள்//

உங்கள் பார்வையில் பேராபத்து என்பதின் அளவென்ன?

//இன்று எயிட்ஸ் நோய் தான் மனிதகுலத்துக்கு மிகப்பெரிய சவால். அந்த நோய்கிருமியை கூட தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் நாளடைவில் மனிதனுக்கு சாத்தியப்படலாம்.//

இது உங்கள் அனுமானமே, இவ்வனுமானத்துடன் விஞ்ஞானம் நிச்சயம் கைகட்டி உட்கார்ந்துவிடவில்லை.தொடர்ந்து அந்தப் பாதையில் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஒருவேளை உங்கள் கூற்றுப் படி நிகழ வாய்ப்பிருந்தாலும், உயிர்களுக்கான தகவமைப்புகள் பெரும்பாலும் பல தலைமுறைகள் ஆகும்.

//ஆனால் அணுகுண்டுவீச்சையும், பூமிவெடிப்பையும் நம்மால் எதிர்கொள்ள முடியுமா? கருகி சாம்பலான பின்பு சாம்பலில் இருந்து உயரித்துவரும் பீனிக்ஸ் பறவை கதையை நம்ப சொல்கிறார்களா அறிவியலாளர்கள்?.//

பூவி வெடித்துவிடும் என்றால் அதற்குமேல் எதிர்கொள்ள ஒன்றுமேயில்லை. எதை? எங்கிருந்து எதிர்கொள்வது? :)

//கொஞ்சம் கொள்கை பிடிவாதத்தை விட்டு எதார்த்தமாக யோசியுங்கள்...//

இது அனைவருக்கும் பொருந்தும் ஒன்று.

//பின்குறிப்பு: இது போன்ற பிரமாண்ட ஆராய்ச்சிகள் இதுவரை சாதித்தது என்ன என்பதை சொல்லுங்கள் முதலில்.//

இன்று மனிதனுக்கு நன்மையென்று சொல்லப்படும் ஆய்வுகள் கூட பல பிரம்மாண்டங்களினால் விளைந்ததுதான்.

இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் சப்பானின் பொருளாதார நிலை மிகவும் மோசமாகயிருந்த நேரம். அப்போது சப்பானிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சியும் அளிப்பதற்காக அரசாங்கம் பெரும்பகுதிப் பணத்தை ஒதுக்கியது. அப்போது, நாட்டில் உள்ள பல பிரச்சனைகளுக்கு இப்பணத்தைச் செலவு செய்யலாமே என்று பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், 20 ஆண்டுகள் கழித்து சப்பானின் பெரும்பாலான, தலைசிறந்த விஞ்ஞானிகளாகவும்,தொழில்நுட்பத் தொழிற்சாலைகளிலும்,முக்கியத் தலைமைப் பொறுப்புகளை அப்பயிற்சி பெற்றவர்களே அடைந்தனர். மற்றும், சர்வதேசத்தரத்தில் சப்பானை உயற்றினார்களா என்பதற்கான விடை அனைவரும் அறிந்ததே.

அப்போது சப்பானில் அது பிரம்மாண்டம். பலரும் அடிப்படை வசதிகளுக்காகப் போராடும் போது அறிவியல் விஞ்ஞானம் என்று இச்செலவு தேவையா என்ற கேள்வி அப்போதும் பலரும் கேட்ட கேள்வி?? விடை...தற்போதைய சப்பான்.

உலகெங்கிலும் இராணுவத்திற்காகச் செலவிடப்படும் பணம் பலமடங்கு அதிகம்.

ஆன்மீகம், இறையாண்மை, மெய்யியல், மனிதனை உய்வித்தல் போன்ற உலகப் பொதுவானக் கதையாடலைப் பெரிதும் கையாளும் ஆன்மீகம் எதிர்க்க வேண்டியது தேசியம், மற்றும் தேசிய எல்லைகளை. அப்போது ஆப்ரிக்காவில் இருப்பவனும் அமெரிக்காவில் இருப்பவனும் இந்தியாவில் இருப்பவனும் அனைவரும் மனிதயினம் என்ற பொதுவான எண்ணத்திற்கான முயற்சியே ஆன்மீகம் செய்யவேண்டியது.

உலகில் தற்போது பிரம்மாண்ட முதலீடு என்றால் எல்லா நாடுகளும் செய்யும் இராணுவ முதலீடே.
நிற்க.

இதனால், அறிவியல் கேள்விக்கு அப்பாற்பட்டது என்று நிறுவ முயலவில்லை. உலகில் இருக்கும் பல நிறுவனங்களில், தன்னையே கேள்விகேட்டுக்கொண்டும், யாரையும் எந்தக் கோணத்திலும்,கேள்வி கேட்க அனுமத்தும், பதிலளிக்கவும் செய்து, தமக்கென்று ஒரு அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனம் என்றால் அது விஞ்ஞானம்/அறிவியல் மட்டுமே.
இந்நிறுவனத்திலும் பல குறைபாடுகள் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.


மேற்குலக விஞ்ஞானத்திற்கு தனது வளர்ச்சியின் திசையின் எல்லை எது எங்கு நிறுத்துவது என்ற குழப்பம் என்றால்,
இந்தியாவிற்கு தற்போது எந்ததிசையில் செல்வது என்பதிலேயே குழப்பம் இருக்கிறது.

அறிவகம் சொன்னது…

திரு. கையேடு அவர்களே உங்களின் பின்னூட்டத்தில் அமைந்த அத்தனை கேள்விகளுக்கும் தனித்தனியாக கண்மூடித்தனமாக அறிவியலை நம்பலாமா? - எதார்த்தவாதிகளே உஷார்! பதிவில் விரிவாக விடையளித்துள்ளேன்.

http://kulali.blogspot.com/2008/09/blog-post_3345.html

நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்