பின்பற்றுபவர்கள்

12 செப்டம்பர், 2008

பிரேமானந்தா VS கோவியானந்தா !

கோவி: ஸ்வாமி புலனடக்கம் என்றால் என்ன ஸ்வாமி ?

பிரேம்ஸ் : குழந்தாய், நான் தற்போது இருக்கும் நிலையில் சகலமும் அடங்கித்தான் இருக்கிறது, நக்கலான கேள்வி போல் இருக்கிறது உன் கேள்வி, புலன்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதே புலனடக்கம் தான், அப்படி அடக்க முடியாதவர்களை சிறைக்கம்பிக்குள் பயிற்சி கொடுப்பார்கள், நான் மாட்டிவிட்டேன், மற்றவர்கள் மாட்டாமல் இருக்கிறார்கள்

கோவி : நல்லது ஸ்வாமி, முக்தி அடைதல் பற்றி திருவாய் மலர்வீர்களா ?

பிரேம்ஸ் : சிறையில் கொசுக்கள் கடிக்காத நாள்தான் நிம்மதியான உறக்கம் தரும், முக்தி அடையும் நாளாக தெரிகிறது, மறுபடியும் கிண்டல் அடித்து இருக்கிறாய் குழந்தாய். குற்றத்திற்கான தண்டனை முடிவடையும் நாள் தான் முக்தி அடைவது, குற்றம் - தண்டனை சரியாப் போச்சு அதுவே முக்தி.

கோவி. ஸ்வாமிஜி, குழந்தாய் குழந்தாய் என்கிறீர்களே அதன் பொருள் யாது ?

பிரேம்ஸ் : பிள்ளைவரம் வேண்டி வரும் பெண்களை குழந்தைக்கு தாய் ஆக்குவது தான் குழந்தாய் அது. இரு பொருள்கள் உண்டு, ஒன்று 'குழந்தையே' என்று அன்பாக கூப்பிடுவது, குழந்தைக்கு தாய் ஆக்குவது, இரண்டாவதை மட்டும் செய்ததால் தான் தனித்து இங்கு தியானத்தில் அமர்ந்து இருக்கிறேன்

கோவி : ஸ்வாமி பேரின்பம் பேரின்பம் என்கிறார்களே ?

பிரேம்ஸ் : அலையும் நாக்குக்கு என்றாவது அறுசுவை உணவு கிடைக்கும் போது தான் பேரின்பம் பற்றியே தெரிந்து கொண்டேன். தேடுவது கிடைக்கும் போது அடையும் மட்டற்ற மிகழ்ச்சி தான் பேரின்பம்.

கோவி : ஸ்வாமி மோட்சம் என்றால் என்ன ?

பிரேம்ஸ் : கூண்டை விட்டு வெளியே வருதல், இரட்டை ஆயுள் தண்டனையிலிருந்து வெளியே விட்டால் எனக்கு வெளி உலகம் மோட்சம் தான். நம்மை வாட்டும் துன்பம் எதுவோ அதிலிருந்து விடுபடுவது தான் மோட்சம்.

கோவி : ஸ்வாமிஜி நாம் வேண்டினாலும் நம் பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்காதா ?

பிரேம்ஸ் : ஏன் கிடைக்காது வாய்தமேல் வாய்தா போட்டு தண்டனை குறைக்கச் சொல்லி முறையிட்டால் மன்னிப்பு கிடைத்தாலும் கிடைக்கும், அதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஒழுங்கீனங்களை குறைத்துக் கொண்டால், முற்றிலுமாக மன்னிப்பு கிடைக்காது என்றாலும் தண்டனைக் காலம் குறையலாம் சரியா ?

கோவி : ஸ்வாமிஜி உண்மையிலேயே நீங்கள் ஞானம் பெற்றுவிட்டீர்கள்

பிரேம்ஸ் : நல்லது குழந்தாய், நான் வெளியே வரும் போது மீண்டும் பக்தைகள் கிடைப்பார்கள் என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறது உன் வார்த்தைகள்.

கோவி: நல்லா காயடித்தும் ...

பிரேம்ஸ் : என்ன குழந்தாய் உளறுகிறாய் ?

கோவி : காயம் என்றால் உடல் அதனை தோல் உறியும் வரை நன்றாக அடித்தும், பக்தைகளின் நலனையே நினைக்கிறீர்களே அதைத் தான் சொல்ல வந்தேன். ஸ்வாமிக்கு புரியாததா ? அதனால் விட்டுவிட்டேன். நல்லது விடைபெறுகிறேன் ஸ்வாமி

பிரேம்ஸ் : அடுத்த முறை வரும் போது வெறும் கையோடு வந்துவிடாதே குழந்தாய், நாவுக்கு ருசியாக ஆந்திரா ஊறுகாய் சாப்பிட ஆசை, முடிந்தால் எடுத்துவா குழந்தாய்.

கோவி: அப்படியே ஆகட்டும் ஸ்வாமி, இப்'போதைக்கு' ஆந்திரா ஊறுகாய் தான் தங்களுக்கு பேரின்பம் ஊட்டும், அடியேன் அடுத்த முறை ஊறுகாயோடு வருகிறேன்.

********

குரங்கு has left a new comment on your post "***********"

கோவியானந்தா...

உங்க பதிவ படிக்க படிக்க, நான் சாமியாரா போய்ருவேன் போலிருக்கு :(
- இந்த பின்னூட்டத்திற்கு பதிவுக்கும் தொடர்பு இல்லை :)))))

******

என்னது ? இந்து சாமியார்களை மட்டும் தான் கிண்டல் அடிப்பீரான்னு கேட்கிறிங்களா ?

அடுத்த மத ஆட்களை கிண்டல் அடிக்கத்தான் நீங்கள் இருக்கிறீர்களே !

18 கருத்துகள்:

SP.VR. SUBBIAH சொன்னது…

இன்றைக்கு வேறு எவரும் மாட்டவில்லையா (கிடைக்கவில்லையா) சுவாமி?

Thamiz Priyan சொன்னது…

குழந்தாய் மேட்டர் செமயா இருக்கு... :))))

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
இன்றைக்கு வேறு எவரும் மாட்டவில்லையா (கிடைக்கவில்லையா) சுவாமி?
//

ஸ்வாமி......சாரி
வாத்தியார் ஐயா,

ஏன் கிடைக்கவில்லை, கடைசி இருவரிகள் தங்கள் பார்வைக்கு சிக்கவில்லையோ.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் பிரியன் said...
குழந்தாய் மேட்டர் செமயா இருக்கு... :))))
//

தமிழ்பிரியன்,

முழுப்பதிவிற்கும் அது ஒன்றுதான் தூண்டுதலே, எழுதும் முன் தோன்றியது குழந்தாய் மேட்டர் தான்.

கார்க்கிபவா சொன்னது…

கோவி : ஸ்வாமி, சொர்க்கம் செல்ல என்ன் செய்ய வேண்டும்?

பிரேமா : ஜே.கே.ஆர் படம் பார்க்க வேண்டும்.

கார்க்கிபவா சொன்னது…

தூள்!!!

முரளிகண்ணன் சொன்னது…

கோவிஜி, ஓணமும் அதுவுமா இப்படிப்பட்ட மேட்டரா?

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
கோவி : ஸ்வாமி, சொர்க்கம் செல்ல என்ன் செய்ய வேண்டும்?

பிரேமா : ஜே.கே.ஆர் படம் பார்க்க வேண்டும்.

4:45 PM, September 12, 2008
//

கார்க்கி,

ஸ்வாமிக்கு மரண தண்டனை இல்லை, இரட்டை ஆயுள் தண்டனை மட்டும் தான். இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டுமே

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
தூள்!!!

4:45 PM, September 12, 2008
//

சாமியார்களுக்கெல்லாம் 'களி' காலம் தான் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
கோவிஜி, ஓணமும் அதுவுமா இப்படிப்பட்ட மேட்டரா?

5:12 PM, September 12, 2008
//
முரளிகண்ணன்,
ஓணத்துக்கு பிரேம்ஸ்குக்கும் என்ன தொடர்பு ? அவர் சகலருக்கும் அருளுபவர்.

வெண்பூ சொன்னது…

//கோவி: நல்லா காயடித்தும் //

அட அவருக்கு ஜட்ஜ் பானுமதியம்மா கொடுத்த தண்டனையில இதுவும் இருக்கா என்னா? சொல்ல்வே இல்ல...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

கோவியார் சீக்கிரம் காவியானந்தாவப் போறாருன்னு ஜெகதீசனும், விஜய் ஆனந்தும் சொன்னதும் சரியாத்தான் இருக்கும் போல இருக்கு.

ரொம்ப நல்லா நக்கலடிச்சு வைச்சுருக்கீங்க.

அண்ணே, காபி குடிக்க ஆகும் நேரத்தை விட குறைவான நேரத்தில் ஒரு பதிவு எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்கண்ணே.

Kanchana Radhakrishnan சொன்னது…

பிரேம்ஸ்- குழந்தாய்...மாதாவிடம் உன்னைப்பற்றி சொல்லி இருக்கிறேன்..ஆசிரமத்தில் உனக்கென இடம் ஒதுக்கப்பட்டுள்ளது..இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்

வால்பையன் சொன்னது…

ஏமாற்றுபவர்களை விட ஏமாறுபவர்கள் பெரிய குற்றவாளிகள், அவர்கள் ஏன் அந்த தவறை திரும்ப திரும்ப செய்கிறார்கள் என்று தான் தெரியவில்லை

RATHNESH சொன்னது…

பேட்டி எடுக்க கோவியானந்தா போகாமல் கோபிகானந்தா போயிருந்தால் அவருடைய பதில்களும் வேறு மாதிரி இருந்திருக்குமோ?

பெயரில்லா சொன்னது…

//அண்ணே, காபி குடிக்க ஆகும் நேரத்தை விட குறைவான நேரத்தில் ஒரு பதிவு எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு போடுங்கண்ணே.//

ரிபிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

விஜய் ஆனந்த் சொன்னது…

என்னாது??? காப்பி குடிக்கிற நேரத்துல பதிவா??? இந்த கிண்டல்தான வாணாங்குறது...கோவியண்ணே.. ஒரு பதிவு போட அவ்ளோ நேரமா ஆவும்???

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே நல்லா இருக்கு, பிரேம்சிடம் தாங்கள் எடுத்தப் பேட்டி.
அடுத்தபடியாக
உ.பி சாமியார் வேதாந்தியிடம் பேட்டி எடுக்கும் உத்தேசம் உள்ளதா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்