பின்பற்றுபவர்கள்

17 செப்டம்பர், 2008

காரைக்கால் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் !

'பேரைக் கேட்டாலே அதிருதுல்ல' என்கிற மாதிரி எங்க ஊர் குடிமகன்களை சொக்க வைக்கும் பெயர் தான் காரைக்கால் (பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த யூனியன் பகுதி). பாண்டிச்சேரியில் இருந்து கிழக்காக சுமார் 120 கி.மி தொலைவில் இருக்கும் கடற்கரை நகர். நாகைக்கும் காரைக்காலுக்கும் சுமார் 10 கிமி க்கும் குறைவு. நாகை - நாகூர் வெறும் நான்கு கிலோ மீட்டர் இடைவெளிதான். நாகைக்கு அடுத்து நாகூர் தாண்டியதுமே வெண்ணாறு என்ற கடலில் கலக்கும் ஆறு ஒன்று உண்டு, 100 ஆண்டுகளாக இருந்த ஆற்று பாலம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடிரென்று உடைந்துவிழவே எனது உறவினரின் மகன் உட்பட பலர் 'ஜல' சமாதி ஆனார்கள். அதன் பிறகு மிதவைப் பாலம் போடப்பட்டு அமைச்சர்களுக்கு கொள்ளை லாபம், முடிந்த அளவுக்கு புதிய பாலத்தை கட்ட 2 ஆண்டுகள் இழுத்துக் கொண்டார்கள். அந்த பாலத்தைத் தாண்டியதுமே 'வாஞ்சூர்' என்கிற கிராமத்தின் நுழை வாயிலிலேயே காரைக்காலில் நுழைய அனுமதி வழங்கும் சுங்கச் சாவடி சோதனை இருக்கும், அதைத் தாண்டி தடுக்கி விழுந்தாலே எதாவது ஒயின் ஷாப்பில் தான் விழவேண்டும். அங்கு ஆரம்பித்து 100க் கணக்கான சரக்கு கடைகள் எல்லையின் அருகிலேயே இருக்கும்.

நன்றாக குடித்துவிட்டு நிதானம் இருந்தால் தள்ளாடி நடந்தே கூட நாகூர் பகுதிக்கு வந்துவிட முடியும். மேட்டூரில் தண்ணீரே இல்லை என்றாலும் நாகூர் விவாசயப் பெருமக்களின் 'தண்ணீர்' தேவையை வாஞ்சூர் தான் போக்குகிறது, வாஞ்சூரைத் தாண்டினால் அடுத்து 2 கிமி தொலைவில் திருமலைராயர் பட்டினம் என்னும் சிறுநகரம், சிவன் கோவில்கள் அங்கு உண்டு, பெரிய வளர்ச்சி பெறவில்லை என்றாலும் அன்றாடத் தேவைகளுக்கான கடைகள் அங்கு உண்டு, அதைத் தாண்டி 3 கிமி தொலைவில் தான் காரைக்கால் இருக்கிறது. காரைக்காலில் காரைக்கால் அம்மையாருக்காக ஆண்டு தோறும் மாம்பழத் திருவிழா நடக்கும், நான் பார்த்தது இல்லை. திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலும் காரைக்காலைச் சேர்ந்த யூனியன் பகுதிதான். சனீஸ்வரன் கோவிலின் தற்போதைய நிலை அந்த கோவிலின் குளத்தில் மிதக்கும் டன் கணக்கான அழுக்குத் துணிகள் தானாம் (தகவல் உபயம் : ஸ்வாமி ஓம்கார்), பழையதை விடுவது என்ற கணக்கில் பக்தர்கள் தங்கள் அணிந்திருந்த உள்ளாடைகள் வரை அனைத்தையும் சனீஸ்வரனுக்கு காணிக்கையாக்கி (சனிஸ்வரனுக்கே சனியன் பிடித்த கதை) சனிபகவானின் பார்வையில் இருந்து தப்புகிறார்களாம், 'இவ்வளவு அழுக்கா ?' பிடித்தால் நான் செத்தேன் என்று சனிஸ்வர பகவானை நினைக்க வைக்கும் திட்டம் போல.

தமிழகத்திற்கும் பாண்டிக்கும் இருக்கும் பொருள் சேவை வரி விகிதம், பாண்டியைச் சேர்ந்த காரைக்காலுக்கும் பொருந்தும் என்பதால் வாகனங்கள் மற்றும் பல பொருள்களை குறைந்த விலைக்கு வாங்குவதற்காக எங்கள் நாகைப்பகுதி மக்கள் காரைக்காலுக்குச் செல்வார்கள். காரைக்காலில் தெருக்களின் அமைப்பு, கழிவுநீர் வெளியேற்றமும் மிகச் சரியாக அமைக்கப்பட்டு இருக்கும், காரைக்கால் வழியாக சென்னை சென்றிருக்கிறேன், அங்கு திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன், சில உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள், காரைக்கால் ஒரு துறைமுகப் பகுதி என்பதைத் தவிர காரைக்கால் பற்றி முழுவிவரமும் தெரியாது.

காரைக்கால் பற்றி நன்கு அறிந்தவர் யார் ? ரத்னேஷ் அண்ணன் தான்.

இணைய தளம் : காரைக்கால்.நெட் (இனிமையான வீடியோ பாடல்கள் இருக்கிறது)

அப்பறம் ஏன் இந்த பதிவு ?

'கொத்தவால் சாவடி' பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று போடுவது தான் இப்போதைக்கு நல்ல நடப்பில் (ட்ரெண்ட்) இருப்பதால் என் பங்குக்கு இது. பதிவர் ஜெகதீசன் அவர்கள் 'ஆமத்தூர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்' என்ற பதிவைப் போட்டு தன்னுடைய பதிவர் கடமையை நிறைவேற்ற வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

22 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

அண்ணே.....
என்ன இதெல்லாம்???

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

நான் என்னாண்ணே எழுதுறது?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
நான் என்னாண்ணே எழுதுறது?
//

பூண்டி பற்றி எழுதுங்கள், காலேஜ் பெயர் பெற்றதாமே !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அண்ணே.....
என்ன இதெல்லாம்???
//

நீ தானே பதிவு போட மேட்டரே இல்லை, எதாவது டிப்ஸ் கொடுங்கன்னு அழுதது. இப்ப இப்படி கேட்டால் ?

விஜய் ஆனந்த் சொன்னது…

// கோவி.கண்ணன் said...
//ஜெகதீசன் said...
அண்ணே.....
என்ன இதெல்லாம்???
//

நீ தானே பதிவு போட மேட்டரே இல்லை, எதாவது டிப்ஸ் கொடுங்கன்னு அழுதது. இப்ப இப்படி கேட்டால் ? //

aahaaa....

tips kodukkarathukkum oru pathivaa???

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

என் உணர்வுகளைச் சுண்டி இழுத்து விட்டீர்கள். நன்றி.

//100 ஆண்டுகளாக இருந்த ஆற்று பாலம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடிரென்று உடைந்துவிழவே எனது உறவினரின் மகன் உட்பட பலர் 'ஜல' சமாதி ஆனார்கள்.//

சங்கடமான கனமான விஷயம். வருத்தங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.

// 'வாஞ்சூர்' என்கிற கிராமத்தின் நுழை வாயிலிலேயே காரைக்காலில் நுழைய அனுமதி வழங்கும் சுங்கச் சாவடி சோதனை இருக்கும், அதைத் தாண்டி தடுக்கி விழுந்தாலே எதாவது ஒயின் ஷாப்பில் தான் விழவேண்டும்.//

இந்த இடத்தின் முக்கியத்துவத்தை யாரும் மறக்கலாம். நீங்கள் மறக்கலாமா? உங்க நாகப்பட்டிணத்தின் அவுரித் திடல் மேடையில் தான் அம்மா, மணி சங்கர் ஐயருக்கு எதிராக தன் ரத்தத்தின் ரத்தங்கள் ஆவேசம் கொள்ளும் வண்ணம் தூண்டி விட்டுப் பேசி அவர் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டு இந்த எல்லையில் தான் காங்கிரஸ் அரசின் போலீஸ் அவர் உயிரைக் காப்பாற்றி அழைத்துப் போனது. அங்கே இருந்து கிளம்பி நேராக கோபாலபுரம் போனவர் தான். காங்கிரஸ்-திமுக உறவுக்கு முதல் பாலம் போடப் பட்டது அந்த சம்பவத்துக்குப் பிறகு தான்.

☼ வெயிலான் சொன்னது…

// 'ஆமத்தூர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்' //

'ஆ'மத்தூரா......

கோவியாருக்கு - என்ன இருக்கு சொல்ல? :)

ஜெகதீசனுக்கு - ச்சே! எவ்வளவு இருக்கு சொல்ல... :)

வடுவூர் குமார் சொன்னது…

அந்த பாலம் போச்சா? இப்ப தான் தெரியுது.
காரைகாலில் பொருட்கள் விலை மலிவு- அந்த காலகட்டத்தில் எங்கள் வீட்டுக்கு கலர் தொலைக்காட்சி வாங்கிவர அங்கு சென்ற ஞாபகம் வந்தது.
என்னுடன் படித்த ஒருவன் அங்கிருக்கும் பெருமாள் கோவிலுக்கு பக்கத்தில் இருப்பவன் 28 வருடம் கழித்து போனவாரம் சாட்டில் மாட்டினான் அது அந்த காரைக்கால்.நெட் கங்கர்யம்.
தண்ணி நிறைய கிடைக்கும் என்பது பாலியில் படிக்கும் நண்பர்கள் மூலம் தெரியும் ஆனா எங்கப்பா எல்லா இடத்திலும் ஸ்பை வைத்திருப்பாரோ என்ற எண்ணத்தில் அப்பக்கம் போகும் தைரியம் வரவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said... aahaaa....

tips kodukkarathukkum oru pathivaa???//

வாய்யா மின்னல் !

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

என் உணர்வுகளைச் சுண்டி இழுத்து விட்டீர்கள். நன்றி.///

காரைக்கால் பற்றி எழுத தகுதியானவர் நீங்கள் தான், எனக்கு அவ்வளவாக தெரியாது.


//இந்த இடத்தின் முக்கியத்துவத்தை யாரும் மறக்கலாம். நீங்கள் மறக்கலாமா? உங்க நாகப்பட்டிணத்தின் அவுரித் திடல் மேடையில் தான் அம்மா, மணி சங்கர் ஐயருக்கு எதிராக தன் ரத்தத்தின் ரத்தங்கள் ஆவேசம் கொள்ளும் வண்ணம் தூண்டி விட்டுப் பேசி அவர் ஓட ஓட விரட்டி அடிக்கப்பட்டு இந்த எல்லையில் தான் காங்கிரஸ் அரசின் போலீஸ் அவர் உயிரைக் காப்பாற்றி அழைத்துப் போனது. அங்கே இருந்து கிளம்பி நேராக கோபாலபுரம் போனவர் தான். காங்கிரஸ்-திமுக உறவுக்கு முதல் பாலம் போடப் பட்டது அந்த சம்பவத்துக்குப் பிறகு தான்.//

அவுரித்திடல் (அந்த இடம் கடந்த 22 ஆண்டுகளாக புதிய பஸ்நிலையம் என்கிறார்கள்). ஆனால் அந்த இடத்தில் அந்த மேடை அமைக்கப் படவில்லை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் விளையாட்டு மைதானத்தில் தான் மேடை அமைக்கப்பட்டு நீங்கள் சொல்லும் அந்த வரலாற்று?:) நிகழ்வான (மணிசங்கரய்யர்) விஷேசம் நடந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//எங்கப்பா எல்லா இடத்திலும் ஸ்பை வைத்திருப்பாரோ என்ற எண்ணத்தில் அப்பக்கம் போகும் தைரியம் வரவில்லை.//

குமார் அண்ணா,

பனைமரத்துக்கு அடியில் நின்று பால் தான் குடிக்கக் கூடாது, பனைமரத்துக்கு அடியில் நிற்பதால் தப்பு இல்லையே ! :)

ரொம்பவும் அடங்கிய பிள்ளையாகத்தான் வளர்ந்திருக்கிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெயிலான் said...

'ஆ'மத்தூரா......

கோவியாருக்கு - என்ன இருக்கு சொல்ல? :)

ஜெகதீசனுக்கு - ச்சே! எவ்வளவு இருக்கு சொல்ல... :)

8:12 PM, September 18, 2008
//

ரமேஷ்,
இப்பவே கவுண்டவுன் போட்டுக் கொண்டு தான் இருக்கிறார், ஆமத்தூர் போக இன்னும் 38 நாள் இருக்காம், திபாவளிக்கு கொண்டாடப் போறாராம் !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

// 100 ஆண்டுகளாக இருந்த ஆற்று பாலம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடிரென்று உடைந்துவிழவே எனது உறவினரின் மகன் உட்பட பலர் 'ஜல' சமாதி ஆனார்கள். அதன் பிறகு மிதவைப் பாலம் போடப்பட்டு அமைச்சர்களுக்கு கொள்ளை லாபம், முடிந்த அளவுக்கு புதிய பாலத்தை கட்ட 2 ஆண்டுகள் இழுத்துக் கொண்டார்கள். //

கோவியாரே வேதனை தரும் விடையம். எல்லா பாலங்களும் வெள்ளைக்காரன் கட்டியது. நம்மாளுக்கு அதை பராமரிக்கவும் தெரிவதில்லை. எப்போது உடையும் என்றும் தெரிவதில்லை. எங்கள் பகுதியில் தென் சிதம்பரம் என்று அழைக்கப்படும் பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில் உள்ளது. அங்கு ஒரு பாலம் இதேபோல்(பழமை வாய்ந்தது) இருக்கிறது. இப்பொழுதெல்லாம் அரசியல் காண்டிராக்டர்கள் கட்டும் பாலம், ரஜினி மாதிரி! எப்ப உடையும், எப்ப விழும் என்று அதுக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது!

RATHNESH சொன்னது…

//அவுரித்திடல் (அந்த இடம் கடந்த 22 ஆண்டுகளாக புதிய பஸ்நிலையம் என்கிறார்கள்). ஆனால் அந்த இடத்தில் அந்த மேடை அமைக்கப் படவில்லை வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் விளையாட்டு மைதானத்தில் தான் மேடை அமைக்கப்பட்டு//

உங்க பேட்டை விஷயங்களில் ரொம்ப ஷார்ப்பாத் தான் இருக்கிங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//இப்பொழுதெல்லாம் அரசியல் காண்டிராக்டர்கள் கட்டும் பாலம், ரஜினி மாதிரி! எப்ப உடையும், எப்ப விழும் என்று அதுக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது!//

ஜோதி,
ஷேர் ஆட்டோ வரும் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...

உங்க பேட்டை விஷயங்களில் ரொம்ப ஷார்ப்பாத் தான் இருக்கிங்க.

11:09 PM, September 18, 2008//

ரத்னேஷ் அண்ணா,
எங்க ஊருக்கு வந்த சுனாமி மாதிரி, எங்க ஊர் செய்தி எப்போதாவது வரும், அதனால் நினைவு இருக்கும்.

RATHNESH சொன்னது…

//எல்லா பாலங்களும் வெள்ளைக்காரன் கட்டியது. நம்மாளுக்கு அதை பராமரிக்கவும் தெரிவதில்லை. எப்போது உடையும் என்றும் தெரிவதில்லை//

ஜோதிபாரதி சார்,

சுனாமி அன்று காலையில் ஒரு பெரிய இயந்திரப்படகு அலையால் தூக்கி அடிக்கப்பட்டதில், கடற்கரையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த அரசலாற்றுப் பாலம், வரதராஜபெருமாள் சிலை வந்து விழுந்தது போல் உடைந்து விட்டது.

காரைக்கால் நகரையும் நிரவி என்கிற பக்கத்து ஊரையும் இணைக்கும் ஒரே பாலம் அது.(சிறியது தான் என்றாலும், அதன் அருமை, 16 கிலோமீட்டர் கூடுதல் சுற்று சுற்றிய போது தெரிந்தது. மூன்றே நாளில் ஆர்மி ஆட்கள் பெங்களூரில் இருந்து வந்து இரும்புப் பாலம் அமைத்துக் கொடுத்தார்கள். வாகனங்கள் அதன் மீது போக முடிந்தது. நிரந்தரப் பாலம் அமைப்பதில் இங்கும் அரசியல் சேட்டைகள் இருந்தன; ஆனால் சராசரி வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாதவாறு இருந்தன.

கூடுதல் செய்தி: இரண்டரை ஆண்டுகள் இழுத்தடித்துக் கட்டப்பட்ட நாகூர் பாலத்தில் unofficial ஆக முதலில் பயணித்தது நான் தான். எங்கள் கம்பெனி கார் டிரைவர், எவன் சொல்லக்கிடக்கு சார் என்று துணிந்து புகுந்து விட்டார். அவர் உபயம்.

Subbiah Veerappan சொன்னது…

////'இவ்வளவு அழுக்கா ?' பிடித்தால் நான் செத்தேன் என்று சனிஸ்வர பகவானை நினைக்க வைக்கும் திட்டம் போல./////

:-)))))))))))))))))))))))))))))))

பெயரில்லா சொன்னது…

A small correction.
It is not Vennar. The one near nagore is Vettar.
nagai to karaikal is 12 KM and Nagai to Nagore is 7 K.M.

Thanks
Aboo shakir

சும்மா அதிருதுல சொன்னது…

A small correction.
It is not Vennar. The one near nagore is Vettar.
nagai to karaikal is 12 KM and Nagai to Nagore is 7 K.M.
//
வாஞ்சூர்
போதையில் ஸிலிப்பாயி :)


பேரைக் கேட்டாலே அதிருதுல்ல'

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//RATHNESH said...
//எல்லா பாலங்களும் வெள்ளைக்காரன் கட்டியது. நம்மாளுக்கு அதை பராமரிக்கவும் தெரிவதில்லை. எப்போது உடையும் என்றும் தெரிவதில்லை//

ஜோதிபாரதி சார்,

சுனாமி அன்று காலையில் ஒரு பெரிய இயந்திரப்படகு அலையால் தூக்கி அடிக்கப்பட்டதில், கடற்கரையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருந்த அரசலாற்றுப் பாலம், வரதராஜபெருமாள் சிலை வந்து விழுந்தது போல் உடைந்து விட்டது.

காரைக்கால் நகரையும் நிரவி என்கிற பக்கத்து ஊரையும் இணைக்கும் ஒரே பாலம் அது.(சிறியது தான் என்றாலும், அதன் அருமை, 16 கிலோமீட்டர் கூடுதல் சுற்று சுற்றிய போது தெரிந்தது. மூன்றே நாளில் ஆர்மி ஆட்கள் பெங்களூரில் இருந்து வந்து இரும்புப் பாலம் அமைத்துக் கொடுத்தார்கள். வாகனங்கள் அதன் மீது போக முடிந்தது. நிரந்தரப் பாலம் அமைப்பதில் இங்கும் அரசியல் சேட்டைகள் இருந்தன; ஆனால் சராசரி வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படாதவாறு இருந்தன.

கூடுதல் செய்தி: இரண்டரை ஆண்டுகள் இழுத்தடித்துக் கட்டப்பட்ட நாகூர் பாலத்தில் unofficial ஆக முதலில் பயணித்தது நான் தான். எங்கள் கம்பெனி கார் டிரைவர், எவன் சொல்லக்கிடக்கு சார் என்று துணிந்து புகுந்து விட்டார். அவர் உபயம்.//

வெறும் மண்ணால் கட்டப்பட்ட பாலத்தை மாபெரும் சரித்திரம் என்று சொல்வார்கள் நம் அரசியல்வாதிகள்.

பேரு வச்சியே அதுக்கு சோறு வச்சியா என்று விவேக் கேட்டது போல பேரு மட்டும் நல்லா வைக்கிறார்கள்!

Unknown சொன்னது…

வணக்கம் கோவி சார்!

என்ன திடீரென்று காரைக்கால் பத்தி எழுதியிருக்கீங்க!

காரணம் எதுவாயிருந்தாலும், நல்லா இருக்கு.//பாண்டிச்சேரியில் இருந்து கிழக்காக சுமார் 120 கி.மி தொலைவில் இருக்கும் கடற்கரை நகர். நாகைக்கும் காரைக்காலுக்கும் சுமார் 10 கிமி க்கும் குறைவு. நாகை - நாகூர் வெறும் நான்கு கிலோ மீட்டர் இடைவெளிதான்.//

ஒரு சின்ன திருத்தம்

காரைக்கால் -

புதுச்சேரி (பாண்டிச்சேரி) - 135கிமீ நாகூர் - ஏறக்குறைய 10கிமீ
நாகப்பட்டினம் - ஏறக்குறைய 20கிமீ

நீங்கள் சொல்லும் தூரம் காரைக்கால் பிராந்தியதிலிருந்து (மாவட்டம்?) இருக்கலாம் அதாவது வாஞ்சூரிலிருந்து.


//100 ஆண்டுகளாக இருந்த ஆற்று பாலம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திடிரென்று உடைந்துவிழவே எனது உறவினரின் மகன் உட்பட பலர் 'ஜல' சமாதி ஆனார்கள்.//

:-( ஆழ்ந்த வருத்தங்கள்.


//திருமலைராயர் பட்டினம் என்னும் சிறுநகரம், சிவன் கோவில்கள் அங்கு உண்டு,//

திருமலைராயன் பட்டினத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஆயிரங்காளியம்மன் கோயில் திருவிழா மிக பிரபலம். காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் தங்கவேலுவின் பூர்வீகம் இந்த ஊர்தான்.

//காரைக்காலில் காரைக்கால் அம்மையாருக்காக ஆண்டு தோறும் மாம்பழத் திருவிழா நடக்கும்//

காரைக்காலம்மையார்
63 நாயன்மார்களில் ஒருவர் என்பது கொசுறு செய்தி.

ஆக மொத்தத்தில் மிக அருமையான பதிவு, நன்றி!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்