பின்பற்றுபவர்கள்

14 செப்டம்பர், 2008

தீவிரவாதிகளுக்கு எதிரான பேரணிகள் எப்போது ?

தினமலரின் கார்ட்டூன் கொழுப்பை கண்டிக்கக் கூடிய இஸ்லாமிய பெருமக்கள், தங்கள் மதத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இறையாண்மைக்கு பங்கம் விளைவிக்கும், இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாதிகளை கண்டித்து கண்டன பேரணி நடத்துவது எப்போது ?

இஸ்லாமியர்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் நச்சுக் கும்பல்களின் ஏச்சுக்களை புறம் தள்ளவேண்டுமென்றால் தீவிரவாதத்திற்கு எதிராக தங்களின் குரலை பலமாக பதியவைக்க வேண்டியது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமை.

தினமலருக்கு எதிராக இஸ்லாமிய சமுதாயமே திரண்டதை பொதுமக்கள் பார்த்துக் கொண்டு இருந்தனர், அவர்கள் மனதில் இந்த கேள்வி இயற்கையாகவே எழும். வெறும் அறிக்கைகள், கண்டனங்கள் எல்லாமே கண்துடைப்புதான், உண்மையான அக்கரை வெளிப்படையாக ஒன்று திரண்டு கண்டிப்பதால் தான் பிறரால் புரிந்து கொள்ளப்படும்.

இந்துத்துவாக்களின் செயல்களை திராவிட இயக்கத்தினர் எப்போதும் வெளிப்படையாகவே கண்டிப்பதுடன் இல்லாமல் பொதுக்கூட்டம்ம் கண்டன பேரணி எல்லாமும் நடத்தி இஸ்லாமிய பெருமக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார்கள். மதவெறி இல்லாத, சமூக அக்கரை உள்ள ஒவ்வொரு இந்து சகோதரனும் அதனைச் செய்கிறான், ஆதரவு கொடுக்கிறான்.

உங்களால் ஏன் முடியவில்லை, லட்சக்கணக்கில் தினமலருக்காக திரட்டிய கூட்டத்தை தீவிரவாதிகளுக்கு எதிராகவும் திரட்டுவதற்கு எது தடையாக உள்ளது ?

அப்படி பட்ட பேரணி நடந்தால் மதச் சார்பற்று அனைவருமே கலந்து கொள்வர், இஸ்லாமியர்கள் தங்கள் செயலை சிறிதளவு கூட ஆதரிக்கவில்லை, மாறாக பலமாகவே வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ளப்பட்டு தீவிரவாதிகளும் செயல்களை படிப்படியாக நிறுத்திக் கொள்வார்கள்.

'தினமலர் அமிரகத்தில் தடைசெய்யப்பட்டது' என்ற செய்திகளைத் தாங்கி வந்த பதிவுகளைப் போல், 'தீவிரவாதிகளைக் கண்டிக்க திரண்ட இஸ்லாமிய பெருமக்கள்' என்ற செய்திகளைத் தாங்கிவரும் பதிவுகளையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

55 கருத்துகள்:

Unknown சொன்னது…

// 'தீவிரவாதிகளைக் கண்டிக்க திரண்ட இஸ்லாமிய பெருமக்கள்' என்ற செய்திகளைத் தாங்கிவரும் பதிவுகளையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.//
நானும் தான். ஆனால் நீங்களும் நானும் ஏமாறப் போவது உறுதி. எப்பிடின்னு கேக்கிறீங்களா? எல்லாம் முன் அனுபவம் தான். ஏமாந்து போவதில் :(

நல்லதந்தி சொன்னது…

//'தினமலர் அமிரகத்தில் தடைசெய்யப்பட்டது' என்ற செய்திகளைத் தாங்கி வந்த பதிவுகளைப் போல், 'தீவிரவாதிகளைக் கண்டிக்க திரண்ட இஸ்லாமிய பெருமக்கள்' என்ற செய்திகளைத் தாங்கிவரும் பதிவுகளையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்//
எதிர்பார்க்கும் நீங்களும் நாங்களும் பாவம்தான்!.நடக்கப் போறதைப் பேசுங்க சார்!.அப்துல் கலாம் ஐயா தீவிரவாதிகளை வேரறுக்க கடுமையான சட்டம் கொண்டு வரணும்னு சொல்றார்.அதை ஒத்துக் கொள்ளக் கூடிய மனப்பான்மை எந்த முஸ்லீம் அன்பர்களுக்கு இருக்கா?

G.Ragavan சொன்னது…

உங்களுடைய கருத்துதான் என்னுடையதும். ஒவ்வொரு மதமும் தீவிரவாதத்தை எதிர்க்கிறதுதான். அதை எல்லாரும் ஏதாவது ஒரு நூலைக் கொண்டு ஆதாரம் சொல்ல முடியும். ஆனால் எந்த மதத்தின் பெயரால் நடந்தாலும் தீவிரவாதம் கண்டிக்கத்தக்கதே. கண்டிக்கப்ப்படவே வேண்டும். இந்த விஷயத்தில் உங்கள் கருத்தோடு அப்படியே ஒத்துப் போகிறேன்.

Unknown சொன்னது…

நல்ல தந்தியோட கருத்தும் நம்ம கருத்தும் ஒண்ணா இருக்கேனு எதும் முடிச்சு போட்றாதீங்க. அவரு வேற கூட்டம், நம்ம வேற.. :)

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
vijay சொன்னது…

கோவி சார், இதுதான் முதன் முறையாக இங்கே நான் வருவது.
நல்ல பதிவு. பார்க்கலாம் எப்போதான் பதில் வருதுனு! :)

சென்ஷி சொன்னது…

தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் கோவி.க.. விரைவில் நாமும் எதிர்பார்ப்போம் தீவிரவாதத்திற்கு எதிரான இஸ்லாமிய சமுதாயத்தினரின் குரலையும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நானும் தான். ஆனால் நீங்களும் நானும் ஏமாறப் போவது உறுதி. எப்பிடின்னு கேக்கிறீங்களா? எல்லாம் முன் அனுபவம் தான். ஏமாந்து போவதில் :(//

//எதிர்பார்க்கும் நீங்களும் நாங்களும் பாவம்தான்!.நடக்கப் போறதைப் பேசுங்க சார்!.அப்துல் கலாம் ஐயா தீவிரவாதிகளை வேரறுக்க கடுமையான சட்டம் கொண்டு வரணும்னு சொல்றார்.அதை ஒத்துக் கொள்ளக் கூடிய மனப்பான்மை எந்த முஸ்லீம் அன்பர்களுக்கு இருக்கா?
//

அது எப்படிங்க குண்டு வெடிச்சதும் இஸ்லாமிய தீவிரவாதிதான் செய்தி இருப்பான் என்று சொல்வது போலவே, இஸ்லாமியர்கள் தங்கள் தரப்பைக் கூறும் முன் நீங்களாகவே யூகம் கிளப்புகிறீர்கள், அவர்கள் முன்வந்தாலும் உங்களுக்கு அதில் விருப்பம் இருப்பது போல் தெரியவில்லையே.

கோவி.கண்ணன் சொன்னது…

//Vijay said...
கோவி சார், இதுதான் முதன் முறையாக இங்கே நான் வருவது.
நல்ல பதிவு. பார்க்கலாம் எப்போதான் பதில் வருதுனு! :)
//

விஜய்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
உங்களுடைய கருத்துதான் என்னுடையதும். ஒவ்வொரு மதமும் தீவிரவாதத்தை எதிர்க்கிறதுதான். அதை எல்லாரும் ஏதாவது ஒரு நூலைக் கொண்டு ஆதாரம் சொல்ல முடியும். ஆனால் எந்த மதத்தின் பெயரால் நடந்தாலும் தீவிரவாதம் கண்டிக்கத்தக்கதே. கண்டிக்கப்ப்படவே வேண்டும். இந்த விஷயத்தில் உங்கள் கருத்தோடு அப்படியே ஒத்துப் போகிறேன்.
//

ஜிரா,
நாமெல்லாம் ஒன்று போல் தான் சிந்திப்போம். நமக்கு இருப்பது மத நம்பிக்கை அல்ல.

Kanchana Radhakrishnan சொன்னது…

கருத்துடன் கூடிய அருமையான பதிவு

கல்வெட்டு சொன்னது…

Pathav can not be issued against group like this... sorry Govi... barking at wrong Tree.

If any one compare Hindu with this Islam...wake-up folks... I do not have soft coroner for any so called religion

FYI:

http://kalvetu.blogspot.com/2007/12/blog-post.html

மதம் சார்ந்த தவறுகள் அல்லது மதத்தை முன்னிலைப்படுத்தி நடக்கும் கொலைகள், அட்டூழியங்களுக்கு எல்லாம் யார் பொறுப்பு?

இவைகள் நடக்கும்போதெல்லாம் , மதவாதிகள் "இது தனிமனிதனின் அல்லது குழுவின் செயல்" என்று விலகிப் போய்விடுவார்கள்.
தனிமனிதனுக்கு சமுதாயத்தில் இணைந்து வாழும் அடிப்படை ஒழுங்கை/தகுதியைக்கூட கற்றுத்தராத மதம் என்ன மதம்? அதனால் என்ன பயன்?

சாமி கும்பிடுபவன் செய்யும் தவறுகளுக்கு சாமி பொறுப்பில்லை என்றால், உங்கள் சாமி எதற்குத்தான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறார்?

**

எந்த மதமும் நல்ல குடிமகனை உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டது இல்லை. நல்ல மதவாதியை மட்டுமே உருவாக்குகின்றன.
ஒரு நாட்டிற்குத் தேவை நல்ல குடிமகன்களே தவிர , மதவாதிகள் அல்ல. மதங்களின் பின்னால் அணிவகுப்பவர் யாரும் நல்ல மனிதராக இருக்கவே முடியாது.
ஒரு மதத்தை சார்ந்தவன் அடுத்த மதத்தை "சகித்துக்"கொள்ளமுடியுமே தவிர போற்ற முடியாது.

மதங்களுக்கு இடையே "சகிப்புத்தன்மை" என்பதே, பிடிக்காத ஒன்றை அல்லது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றை "சகித்துக்கொள்" என்றுதான் அர்த்தம் வரும். சகித்துக்கொள் என்பது , சுயமிழத்தல் என்பதாகும். சாவும்,உயிரின் இருப்பும் ஒரே சமயத்தில் ஒரு உடலின் அடையாளமாக இருக்க முடியாது.

சுட்டுவிரல் சொன்னது…

நிச்சயமாக, தீவிரவாதிகளுக்கெதிராக முஸ்லிம்கள் குரல் எழுப்பியாக வேண்டும் தான். தீவிரவாதம் யார் செய்தாலும் அந்தந்த மதத்துக்கு உண்மையாளர்களாக இல்லை என்றே சொல்லலாம்

அதற்குமுன்பாக நான் ஒரு கேள்வி வைத்திருக்கிறேன்.
பாபர்மசூதி இடிப்பு தொடங்கி, பம்பாய் படுகொலைகள், குஜராத் இன அழிப்பு, ஒரிஸா அட்டூழியங்கள் ஆகிய குற்றங்களுக்காக யாரும் இந்தியத் திருநாட்டின் சட்டத்தால் சிறு அளவும் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லையே.. வேண்டுமென்றே அவற்றை நியாயப்படுத்தும் போக்கல்லவா இருக்கிறது!

இதையும் பாருங்கள், உங்களுடைய கேள்வியையே நான் ஆலோசனையாகக் கேட்டிருக்கிறேன்:
http://suttuviral1.blogspot.com/2008/09/blog-post_14.html

கோவி.கண்ணன் சொன்னது…

//அதற்குமுன்பாக நான் ஒரு கேள்வி வைத்திருக்கிறேன்.
பாபர்மசூதி இடிப்பு தொடங்கி, பம்பாய் படுகொலைகள், குஜராத் இன அழிப்பு, ஒரிஸா அட்டூழியங்கள் ஆகிய குற்றங்களுக்காக யாரும் இந்தியத் திருநாட்டின் சட்டத்தால் சிறு அளவும் தண்டிக்கப்பட்டதாகத் தெரியவில்லையே.. வேண்டுமென்றே அவற்றை நியாயப்படுத்தும் போக்கல்லவா இருக்கிறது!

இதையும் பாருங்கள், உங்களுடைய கேள்வியையே நான் ஆலோசனையாகக் கேட்டிருக்கிறேன்:
http://suttuviral1.blogspot.com/2008/09/blog-post_14.html//

சுட்டுவிரல் ஐயா,

மோடி வகையாறாக்களின் செயல்களை இந்துசகோதர்கள் அனைவருமே ஞாயப்படுத்தவில்லை, அவற்றில் பற்று உள்ளவர்கள் தான் செய்துவந்தனர், குஜராத் படுகொலைக்களுக்கு எதிராக எண்ணற்ற எதிர்ப்புகளைப் பதிய வைத்திருக்கிறோம், அண்மையில் கோவை பொதுக்கூட்டத்தில் சீமான் தாக்குதலுக்கு ஆளானதும் கூட அவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் இந்துத்துவாக்களுக்கு எதிராகவும் பேசியதால் தானே.

தமிழ்நாட்டில் மோடியின் கூட்டம் நடைபெற்ற போது பல்வேறு தரப்பினரும் திரண்டு எதிர்த்தார்கள்.

பாதிரியாரை எரித்தவனுக்கு சட்டம் தண்டனை கொடுத்ததே, தீவிரவாதிகள் பயம் இல்லாமல் குண்டு வைப்பதைப் போலவே இவர்கள் சட்டப் பாதுகாப்புடன் படுகொலையை சாட்சி இன்றி நடத்துகிறார்கள். அதை பொதுமக்கள் வரவேற்றது போல் தெரியவில்லை. அந்த மாநிலத்தில் தூண்டப்பட்ட வெறி வெற்றிகரமாக வேலை செய்கிறது. எப்போதும் அதே நிலை இருக்கவே இருக்காது.

SurveySan சொன்னது…

கோவி, கலக்கப்புட்டீங்க.
நல்ல கேள்விகள்.

ப்ரெயின் வாஷ்ட் தீவிரவாதி, தான் செய்வது இறைவனை அடையும் வழின்னு நெனச்சுதான் செய்யறான்.

தங்கள் மதத்தின் நலத்துக்காக இயங்கும் தீவிரவாதிகளுக்கு எதிர் குரல் கொடுத்தா குத்தம்னு பல பேரு நினைக்கலாம். அதனால் அமைதியா இருக்காங்களோ?

ப்ரெயின் வாஷ் செய்யத் தெரிந்த நம் தலைகள் மேடை போட்டு, இதெல்லாம் வெளங்க வச்சா ஏதாச்சும் நல்லது நடக்கலாம்.

கல்வெட்டு சொல்வதும் யோசிக்க வைக்கிறது.
ஆனா, மதமே இல்லாத சமுதாயம், கலாச்சாரம் அற்ற ரோபோ ஆயிடமாட்டோம்?

தருமி சொன்னது…

//எந்த மதமும் நல்ல குடிமகனை உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்டது இல்லை. நல்ல மதவாதியை மட்டுமே உருவாக்குகின்றன. //

கல்வெட்டு,
மதங்களைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் எப்போதும் நறுக்குத் தெறித்தாற்போலிருப்பது புதிதல்ல. உங்களின் இந்த ஒரு கருத்து போதும் மதநம்பிக்கைகள் எந்த அளவுக்குக் கேடுகள் விளைவிக்கின்றன என்று புரிந்து கொள்வதற்கு.
நன்று.

அது மதமோ இல்லை எவ்விதமான அமைப்போ, அதன் கொள்கைகள் போதனைகள் என்ன என்பது முக்கியமல்ல; அதன் உறுப்பினர்களை அது எந்த வழியில் செலுத்துகிறது என்பது மிக முக்கியமாக இருக்கிறது. அதை வைத்தே அந்த மதத்தையோ அமைப்பையோ நாம் மதிப்பிட வேண்டியதுள்ளது.

கோவி,

//இஸ்லாமியர்கள் தங்கள் தரப்பைக் கூறும் முன் நீங்களாகவே யூகம் கிளப்புகிறீர்கள், ..//
உங்கள் நம்பிக்கைகள் நிறைவேற என் வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

தருமி ஐயா மற்றும் கல்வெட்டு,

இங்கே மத நம்பிக்கையை கேள்வியாக எடுத்துக் கொண்டு நான் எதையும் எழுதவில்லை, நம்பிக்கையை ஒட்டியே அதற்கு களங்கம் கற்பிப்பவர்களை அடையாளம் காணப்படுவது மத நம்பிக்கையாளர்களின் பொறுப்பு என்று சொல்லி இருகிறேன்.

நம்பிக்கைக் குறித்த கேள்விகள் பதிவின் நோக்கத்தைக் கெடுத்துவிடும்.

Indian சொன்னது…

//உங்களால் ஏன் முடியவில்லை, லட்சக்கணக்கில் தினமலருக்காக திரட்டிய கூட்டத்தை தீவிரவாதிகளுக்கு எதிராகவும் திரட்டுவதற்கு எது தடையாக உள்ளது ?
//

Forget about them.
At least let the so-called secularists like Shabana Azmi, Mallika Sarabhai, Arunthati Rai, Teesta Seetalvads open their mouth against these type of "organized crimes". Why they have sealed their mouth with "u-seal"?

Why, why, why?

Would they open their mouth only against sangh parivar violence?

கல்வெட்டு சொன்னது…

//நம்பிக்கைக் குறித்த கேள்விகள் பதிவின் நோக்கத்தைக் கெடுத்துவிடும்.//

:-))

I do not think any one is going to change their faith by reading my few lines. Faith will be there for ever do not worry ;-))

If you think, without questioning the faith trying to find answers for its followers characters will help ..then good luck ! :-))

Sorry for pulling to different direction!

If you feel this will stop you achieving your goal please feel fee to take it away. No issues Kovi
:-))

கல்வெட்டு சொன்னது…

sorry for typo...

If you feel this will stop you achieving your goal please feel * free to take it away. No issues Kovi

முகவை மைந்தன் சொன்னது…

நல்ல நோக்கத்துடன் எழுதி இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்.

விமர்சனம் வெளிப்படையாக மறுக்கப் படுகிற சமூகத்தில் அஞ்ஞானத்திற்கு குறைவிருக்காது. இது அஞ் ஞானத்தின் விளைவு.

RATHNESH சொன்னது…

சரியாக எழுதி உள்ளீர்கள் கோவி.கண்ணன். தினமலர் விவகாரத்தின் ஒப்பீடு இல்லாமலேயே கூட இந்தக் கேள்வியும் எதிர்பார்ப்பும் நியாயமானவையே.

தனிமனிதர்களாக இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு சம்மதமில்லாதது என்று நற்சிந்தனைவாதிகளான இஸ்லாமியர்கள் பலரும் சொன்னாலும் தம் அளவில் அமைப்பு ரீதியான கூட்டமோ ஊர்வலமோ பேரணியோ நடத்தி அந்த உணர்வுகளைப் பிரகடனப்படுத்தலாம்.

ஏனென்றால் ஒவ்வொரு தீவிரவாத நடவடிக்கையின் போதும் அந்த மனித மிருகங்கள் உபயோகப்படுத்தும் ஒரு சொற்றொடர்:"அல்லாவின் பெயரால்"

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ஷி said...
தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன் கோவி.க.. விரைவில் நாமும் எதிர்பார்ப்போம் தீவிரவாதத்திற்கு எதிரான இஸ்லாமிய சமுதாயத்தினரின் குரலையும்.
//

சென்ஷி,
எதிர்பார்பில் இணைந்திருப்பதற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
கருத்துடன் கூடிய அருமையான பதிவு

11:50 PM, September 14, 2008
//

கருத்துக்கு நன்றி ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
கோவி, கலக்கப்புட்டீங்க.
நல்ல கேள்விகள்.

ப்ரெயின் வாஷ்ட் தீவிரவாதி, தான் செய்வது இறைவனை அடையும் வழின்னு நெனச்சுதான் செய்யறான்.

தங்கள் மதத்தின் நலத்துக்காக இயங்கும் தீவிரவாதிகளுக்கு எதிர் குரல் கொடுத்தா குத்தம்னு பல பேரு நினைக்கலாம். அதனால் அமைதியா இருக்காங்களோ?

ப்ரெயின் வாஷ் செய்யத் தெரிந்த நம் தலைகள் மேடை போட்டு, இதெல்லாம் வெளங்க வச்சா ஏதாச்சும் நல்லது நடக்கலாம்.

கல்வெட்டு சொல்வதும் யோசிக்க வைக்கிறது.
ஆனா, மதமே இல்லாத சமுதாயம், கலாச்சாரம் அற்ற ரோபோ ஆயிடமாட்டோம்?

1:46 AM, September 15, 2008
//

SurveySan,

கருத்துக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// Indian said...
//உங்களால் ஏன் முடியவில்லை, லட்சக்கணக்கில் தினமலருக்காக திரட்டிய கூட்டத்தை தீவிரவாதிகளுக்கு எதிராகவும் திரட்டுவதற்கு எது தடையாக உள்ளது ?
//

Forget about them.
At least let the so-called secularists like Shabana Azmi, Mallika Sarabhai, Arunthati Rai, Teesta Seetalvads open their mouth against these type of "organized crimes". Why they have sealed their mouth with "u-seal"?

Why, why, why?

Would they open their mouth only against sangh parivar violence?

2:21 AM, September 15, 2008
//

தமிழ்நாட்டு அளவில் சங்கர்பரிவார்களுக்கு எதிராக பலமான எதிர்குறல் இருந்தே வருகிறது, அவர்களின் பிஜேபி கட்சி அமைப்புக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது உறுதி செய்யவில்லையா ?

முதலில் நாம் செய்ய வேண்டியதை செய்துவிட்டு பிறரை நோக்கி கை நீட்டுவதே சரியான வழிமுறை, இல்லை என்றால் எந்த ஒரு முடிவையும் எட்டாத வெறும் சாக்கு போக்காதத்தான் இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
சரியாக எழுதி உள்ளீர்கள் கோவி.கண்ணன். தினமலர் விவகாரத்தின் ஒப்பீடு இல்லாமலேயே கூட இந்தக் கேள்வியும் எதிர்பார்ப்பும் நியாயமானவையே.
//

RATHNESH,
ஒரு செய்தி இதழை தடைசெய்து உணர்வைக் காப்பாற்றிக் கொள்ளும் இவர்களால், தீவிரவாதிகளுக்கு எதிராக பலமாக தங்கள் குரலை பொதுமக்கள் அறியும் வண்ணம் ஏன் செய்யவில்லை என்பதே பலரின் கேள்வி. தினமலர் கார்டூன் போட்டது தவறு, ஆனால் அதை வைத்து நாம் இஸ்லாமியர்கள் இப்படித்தான் என்று கற்பனை செய்யப் போவதில்லை. ஆனால் தீவிரவாதிகள் 'இன்ஷா அல்லா' சொல்லிக் கொண்டு இவர்கள் இறைவனுக்கே களங்கம் கற்பிக்கிறான். அதையேன் இவர்கள் படு சீரியஸாக எடுத்துக் கொள்ளாது, காகித அறிக்கையையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள்.

//தனிமனிதர்களாக இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு சம்மதமில்லாதது என்று நற்சிந்தனைவாதிகளான இஸ்லாமியர்கள் பலரும் சொன்னாலும் தம் அளவில் அமைப்பு ரீதியான கூட்டமோ ஊர்வலமோ பேரணியோ நடத்தி அந்த உணர்வுகளைப் பிரகடனப்படுத்தலாம். //

அதைத்தான் நாம் கேட்க முடியும், ஜமாத் கூட்டம் கூட்டி விவாதிக்களாம் அதில் யார் யார் எதிர்கருத்துக்களைச் சொல்கிறார்கள், எதனால் தீவிரவாதிகளின் செயலை ஞாயப்படுத்துக்கிறார்கள், என்பது இவர்களுக்கு தெரியவரும், நாமும் காரணங்களை அறிந்து கொள்ளலாம்.
வெளிப்படையாக இல்லாவிட்டால் ஒன்றுமே செய்ய இயலாது.

//ஏனென்றால் ஒவ்வொரு தீவிரவாத நடவடிக்கையின் போதும் அந்த மனித மிருகங்கள் உபயோகப்படுத்தும் ஒரு சொற்றொடர்:"அல்லாவின் பெயரால்"

2:58 AM, September 15, 2008
//

குழிப்பறிப்பவர்களை அடையாளம் கண்டு அகற்ற வேண்டும் அதுதான் மதத்தில் இருக்கும் உண்மையான அழுக்குகளை அகற்றுவது ஆகும். மாற்று மதத்தினர் என்றுமே ஒரு மதத்தின் மீது நல்லெண்ணம் கொண்டு இருக்கமாட்டார்கள், மற்றவர்கள் இவர்கள் மீது சுமத்துவது பழி, கூட இருந்தே அழிப்பது புற்றுநோய்தானே.

Thamiz Priyan சொன்னது…

ஒரு பேரணியோ, கண்டனமோ நடத்துவதாக இருந்தால் அதை யாருக்கு எதிராக, அல்லது யாருடைய கவனத்தை ஈர்க்க நடத்த வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். இந்தியாவில் குண்டு தாக்குதலை நடத்துபவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள். இஸ்லாம் எந்த உயிரையும் அநியாயமாக கொல்வதை தடை செய்துள்ளது. இந்நிலையில் ஒன்றும் அறியாத அப்பாவிகளைக் கொல்பவர்கள் இஸ்லாமிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்லர். அல்லாஹ்வின் பெயரை சொல்லி தாக்குதல் நடத்துவதால் மட்டும் அவர்கள் முஸ்லிம்களாக மாறி விட முடியாது.

இப்படிப்பட்ட மூளைச் சலவை செய்யப்பட்டவர்களை தமிழகத்தில் இருந்து குரல் எழுப்புவதால் மாற்றி விட இயலாது.

அதே நேரம் மற்ற நேரங்களில் இஸ்ல்லாத்திற்கோ, இஸ்லாமியர்களுக்கோ பாதிப்பு ஏற்படும் போது உடனடியாக அதற்கான கண்டனங்களை பதிவு செய்வது கட்டாயமாகின்றதுஇ. ஏனெனில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் மூளைச் சலவை செய்யும் நிலைக்கு ஆளாகி விடக் கூடாது.

கோவையில் 18 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட போது, அதற்கு அரசு எந்த நடவடிக்கையிம் எடுக்காமல் குற்றவாளிகளை சுதந்திரமாக (இன்று வரை) வெளியே விட்டு விட்டது. அதனாலேயே தங்களது கோபத்திற்கு விடிகால் கிடைக்காத நிலையில் அதை சில சமூக விரோதிகள் தங்களது தீவிரவாத எண்ணத்திற்கு வடிகாலாக மாற்றி விட்டனர். அது போன்ற ஒரு நிலை மீண்டும் வரக் கூடாது என்ற காரணத்தினாலேயே முஸ்லிம்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அதை ஜனநாயக ரீதியில் கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் என நடத்தி, மக்களுக்கு புரிய வைக்க வேண்டி இருக்கின்றது.

தமிழகத்தில் உள்ளது போல், இந்தியா முழுவதும் இது போன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அமைப்புகள் இல்லை. விரைவில் அது போன்ற அமைப்புகள் உருவாகும் போது நீங்கள் கேட்ட பேரணிகள் நடக்கும்.

Thamiz Priyan சொன்னது…

அரசுகளும் பாதிக்கப்பட்டவ்ர்களுக்காக ஜன்நாயக வழியில் போராடுபவர்களுக்கு நியாயம் கிடைக்க முயற்சி செய்ய வேண்டும்.

கோவை குண்டு வெடிப்புக்கு முஸ்லிம்கள் பலருக்கு தண்டனை தரப்பட்ட நிலையில், அதற்கு முன் நிகழ்ந்த 18 முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமானவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

பாபரி மஸ்ஜிதை இடித்தவர்கள் யார் என்று அனைவருக்கும் தெளிவாக தெரியும் நிலையில் அவர்கள் தண்டிக்கப்படவில்லை.

குஜராத்தில் பல நூறு முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமானவர்கள் யார் என்ற வீடியோ உள்ளிட்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் இருக்கும் நிலையிலும் யாரும் தண்டிக்கப்படவில்லை.

இவை போன்றவைகளை வைத்து இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க நினைக்கும் இஸ்லாமிய துரோக பாக் போன்ற நாடுகளின் உளவுப்பிரிவினர் மூளைச்சலவை செய்கின்றனர். இதற்கு இந்திய அரசும் ஒரு காரணம் என்பது மறுப்பதற்கில்லை.

ஜனநாயக ரீதியில் போராடுபவர்களை, மட்டமாக நினைக்காமல் அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் நிலையில் தான் மீண்டும் இது போன்ற குண்டு வெடிப்புகள் நிகழாமல் தடுக்க இயலும்.

ரிஷி (கடைசி பக்கம்) சொன்னது…

Dear Kovi,

It is really a thinking among millions of Indians mind.

I already plan to put this issue in my blog but u did it. Good.

Why our muslim brothers haven't think about till date?

I hope some of our blogers will come up and get an answer/explanation for this issue.

Yosikka vendiya vishayam........

Unknown சொன்னது…

இவ்வளவு அப்பாவியாகவாக இருப்பது?.தலிபான் ஆதரவு தமிழ் வலைப்பதிவர்களையோ அல்லது சத்தியமார்க்கம் போன்ற தளங்களையோ நீங்கள் படியுங்கள்.
இந்திய அரசு தரும் உதவிகளை முஸ்லீம்கள் ஏற்கக் கூடாது என்றெல்லாம் வாதிட்டார்கள்.
என்ன காரணம் என்பதை படித்துப்
பாருங்கள். 9/11 இரட்டை கோபுர தாக்குதல் மோசாத் நடத்தியது என்று இன்றும் எழுதும் இஸ்லாமிய அமைப்புகள் இருக்கின்றன. இந்தியாவிற்கு எதிராக
மறைமுக தாக்குதல்களை நடத்தும்
பாகிஸ்தானை கண்டித்து தமிழில்
எழுதும் முஸ்லீம் வலைப்பதிவர்கள்
எத்தனை பேர் எழுதியிருக்கிறார்கள்.

இஸ்லாத்திலிருந்து மதம் மாறினால்
மரண தண்டனை விதிப்பது சரியானதுதான் என்று கூட ஒரு
பதிவர் தன் பதிவில் வாதிட்டார்.

தீவிரவாதத்தினை பெயரளவிற்கு
எதிர்த்து விட்டு ஜிகாத் என்பதாக
செய்யப்படும் வன்முறையை ஆதரிப்பவர்கள்தான்,நியாயப்படுத்துபவர்கள்தான் அதிகம்.

புதுகை.அப்துல்லா சொன்னது…

அண்ணே சமீபத்தில் ஆகஸ்டு 15 அன்று மதுரையில் இஸ்லாமியர்கள் மிகப் பெரிய அளவில் சுதந்திரதினப் பேரணி நடத்தி தீவிரவாதத்திற்கு எதிரான தங்கள் எதிர்ப்பை அழுத்தமாகப் பதிந்தனர். நான் அறிந்தவரை எப்படி 99 சதவீத ஹிந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான சங்பரிவாரங்களின் தீவிரவாதத்தை விரும்புவது இல்லையோ அதேபோல் தான் 99 சதவிகித இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் நடத்தப் படும் தீவிரவாதத்தை விரும்பாமல் வெறுக்கும் நிலையிலேயே இருக்கின்றார்கள். ஓரு முட்டாள் ஹிந்து கும்பல் இஸ்லாமியர்களுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடும் போது மீடியா அந்தக் கும்பலின் செயலாகவே வெளியிடுகிறது. அதனால் தான் என்னால் 99 சதவிகித ஹிந்துக்கள் அதை விரும்புவது இல்லை என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.ஆனால் ஓரு முட்டாள் இஸ்லாமிய கும்பல் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டால் மீடியா அந்தக் கும்பலின் செயலாக வெளியிடாமல் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று மதத்தோடு இணைத்து வெளியிடுகின்றது. அதனால் உங்களைப் போன்றவர்களும் கூட அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாத ஆதரவாளர்கள் என்று நினைக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றீர்கள்.

சரி முன்னனுபவம் உள்ள பின்னூட்டம் பெரியசாமி...நான் ஓன்று கேட்கிறேன் உங்களிடம். குஜராத், மீரட் போன்ற இடங்களில் நடந்த பயங்கரவாதத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட போது எங்கேனும் ஓரு இடத்தில் இந்துகள் திரண்டு பேரணி நடத்தி எங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று எதிப்பை பதிவு செய்தார்களா? இல்லையே! அப்படி செய்யாததால் அத்தனை இந்துக்களும் தீவிரவாத ஆதரவாளர்களா? அதே போல்தான் இங்கும்...அந்த சமூகத்தில் இருந்து வந்தவன் என்பதால் உங்களைவிட இஸ்லாமிய சமுதாயத்தின் மனநிலையை நன்கு அறிந்தவனாகச் சொல்கிறேன் 99 சதவிகித இஸ்லாமியர்கள் தீவிரவாதத்தை விரும்புவதும் இல்லை ஆதரிப்பதும் இல்லை.

@கோவி அண்ணே

//தமிழ்நாட்டில் மோடியின் கூட்டம் நடைபெற்ற போது பல்வேறு தரப்பினரும் திரண்டு எதிர்த்தார்கள்.//

பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை பிரச்சாரங்களில் தீவிரவாதம் எப்படி இஸ்லாமிற்கு விரோதமானது என தொடர்ந்து பிரசங்கம் செய்யப்பட்டுத்தான் வருகிறது.முஸ்லிம் லீக்,த.மு.மு.க,தவ்ஹீத் ஜமாத் போன்ற இயக்கங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக பல்வேறு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி விட்டன. காதர் மொகைய்தீன் எம்.பி. யின் தீவிரவாதத்திற்கு எதிரான பேட்டி பல்வேறு பத்திரிக்கைகளில் வந்தது. இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த கவிஞர்களான அப்துல்ரகுமான், மேத்தா போன்றோர் கவிதைகள் மூலமாக தங்கள் தீவிரவாத எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர். புதுகை.அப்துல்லா, தமிழ்ப்பிரியன், சுவனப்பிரியன் போன்ற இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த பிளாக்கர்கள் அழுத்தமாக எங்கள் தீவிரவாத எதிர்ப்பை பல்வேறு பதிவுகளில் பதிந்துள்ளோம். எங்களிலும் பல்வேறு தரப்பினரும் திரண்டு எதிர்க்கத்தான் செய்கிறோம்.

Unknown சொன்னது…

//அது எப்படிங்க குண்டு வெடிச்சதும் இஸ்லாமிய தீவிரவாதிதான் செய்தி இருப்பான் என்று சொல்வது போலவே, இஸ்லாமியர்கள் தங்கள் தரப்பைக் கூறும் முன் நீங்களாகவே யூகம் கிளப்புகிறீர்கள், அவர்கள் முன்வந்தாலும் உங்களுக்கு அதில் விருப்பம் இருப்பது போல் தெரியவில்லையே.//

குண்டு வெடிப்பது இது முதல் முறையும் அல்ல.. உங்களைப் போல எதிர் பார்ப்போர் எதிர் பார்த்ததும் முதல் முறையல்ல!! அதிலெல்லாம் ஏமாந்து போனவர்களில் ஒருவன் என்பதாலேயே இப்படி..

@ தமிழ்ப்பிரியன் அவர்கள்

// தமிழகத்தில் இருந்து குரல் எழுப்புவதால் மாற்றி விட இயலாது//


கேலிச்சித்திரம் வரைபவர்களை மட்டும் மாற்றி விட முடியுமா?

// ஒன்றும் அறியாத அப்பாவிகளைக் கொல்பவர்கள் இஸ்லாமிய பெயர்களைக் கொண்டிருந்தாலும் அவர்கள் இஸ்லாமியர்கள் அல்லர். அல்லாஹ்வின் பெயரை சொல்லி தாக்குதல் நடத்துவதால் மட்டும் அவர்கள் முஸ்லிம்களாக மாறி விட முடியாது.//

//கோவை குண்டு வெடிப்புக்கு முஸ்லிம்கள் பலருக்கு தண்டனை தரப்பட்ட நிலையில்//

என்ன முரண்பாடு பாருங்கள்.. இப்போது மட்டும் குண்டு வைத்தவன் முஸ்லீமாகி விடுகிறான். மூலைச் சலவை செய்பனும் செய்யப் பட்டவனும் மிருகங்களாக மாறிவிட்டபின் முஸ்லீம்கள் அந்த மிருகங்களை எதிர்த்து போராட்டம் நடத்தத் தடையாக இருப்பது எது?

// தமிழகத்தில் உள்ளது போல், இந்தியா முழுவதும் இது போன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அமைப்புகள் இல்லை. விரைவில் அது போன்ற அமைப்புகள் உருவாகும் போது நீங்கள் கேட்ட பேரணிகள் நடக்கும். //

தமிழகத்தில் மட்டுமாவது நடத்தலாமே?

// இஸ்லாம் எந்த உயிரையும் அநியாயமாக கொல்வதை தடை செய்துள்ளது//

இது ஒன்று போதாதா? இஸ்லாமியர் ஒன்று திரண்டு போராட்டம் நடத்த?

ஏதெதோ சப்பைக் காரணங்களுக்காக போராட்டம் நடத்துபவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான ஒரு செயலுக்காக ஏன் போராட்டம் நடத்தக் கூடாது?

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டமிடுபவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் பதிவின் திசை திரும்புகிறது.

நான் கேட்டது 'தினமலருக்கு திரண்ட இஸ்லாமியர்கள் மாபெரும் கண்டன பேரணியைப் போல், பொதுமக்கள் மனதில் பதியும் அளவுக்கு தீவிரவாதிகளுக்கு எதிராக திரளவில்லை என்பது பற்றிதான் ?'

நண்பர் அப்துல்லா சில விடயங்களைக் கொடுத்து இருக்கிறார். இவை ஏன் வெளியே தெரியவில்லை ? தினமலர் மீது இருந்த ஆவேசமும், கோபமும் தீவிரவாதிகள் மீதும் திரும்பி இருந்தால் கண்டிப்பாக கவனம் பெற்று இருக்கும்.

இங்கும் வேறு சில பதிவுகளிலும் 'குரான் வசனத்தைக்காட்டி' இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என்று சுட்டுகிறார்கள். நல்லதுதான். ஆனால் இவை பொதுமக்களுக்கு சுட்டிக்காட்டுவதால் என்ன பயன் ?

இங்கே பின்னூட்டம் பெரியசாமி சுட்டிக்காட்டியதில் ஒன்று பளிச் சென்று விளங்குகிறது இதற்கு பதில் என்ன ?

//கோவை குண்டு வெடிப்புக்கு முஸ்லிம்கள் பலருக்கு தண்டனை தரப்பட்ட நிலையில்//

என்ன முரண்பாடு பாருங்கள்.. இப்போது மட்டும் குண்டு வைத்தவன் முஸ்லீமாகி விடுகிறான். மூலைச் சலவை செய்பனும் செய்யப் பட்டவனும் மிருகங்களாக மாறிவிட்டபின் முஸ்லீம்கள் அந்த மிருகங்களை எதிர்த்து போராட்டம் நடத்தத் தடையாக இருப்பது எது?

- ஞாயமான கேள்வி ! இதற்கு பதில் சொன்னால் தான், உங்கள் குரான் மேற்கோளை சரி என்றே சொல்லமுடியும்.

குண்டு வைத்தன் குரான் வேதப்படி முஸ்லிமே இல்லை என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு குண்டு வைத்த இஸ்லாமியர்களுக்கும் தண்டனையா ? என்று கேட்பது முரண்பாடுதானே ? இப்போது மட்டும் ஏன் குண்டு வைத்து தண்டனை அடைபவர்களை இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவராகப் பார்க்கிறீர்கள். மனித நீதிமன்றம் கொடுக்கும் தண்டனை குரானில் சொல்லப்படும் பாவ மன்னிப்பு சமம் ஆகி அவர்கள் இஸ்லாமியர்களாகவே ஆகிவிட்டார்களா ?

Unknown சொன்னது…

திரு. புதுகை அப்துல்லா அவர்களே..

// குஜராத், மீரட் போன்ற இடங்களில் நடந்த பயங்கரவாதத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட போது எங்கேனும் ஓரு இடத்தில் இந்துகள் திரண்டு பேரணி நடத்தி எங்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று எதிப்பை பதிவு செய்தார்களா? இல்லையே!//

நீங்கள் ஆர்.எஸ்.எஸ். வி.எச்.பி போன்ற அமைப்புகள் தான் இந்துக்கள் என்று கருதினால், நானும இந்து இல்லை.நீங்கள் குறிப்பிடும் இந்துக்கள் முஸ்லிம்களை விட சிறுபான்மையினர். மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், மேற்கணட சம்பவங்களுக்காக இது போன்ற மதவெறி அமைப்புகள் சாராத இந்துக்கள் யாரும் குரல் கொடுக்க வில்லையா?
இது போன்ற சம்பவங்களில் மதவெறி அமைப்புகள் சாராத இந்துக்கள், திராவிட இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள், மதச் சார்பற்ற அமைப்புகளில் இருக்கும் இந்துக்கள் உங்களுடன் இணைந்து போரடுவதால் தான் உங்களால் கூட இந்து மதத்தினர் அனைவரும் மதவெறியர், தீவிரவாதத்திற்குத் துணை செல்பவர் என்று கூற முடிவதில்லை. அதே போல தீவிரவாதத்திற்கும், மத வெறிக்கும் துணை போகாத முஸ்லிம்கள் 99% இருந்தால் தங்களை வெளிப் படுத்தலாமே? அவ்வாறு இருந்தால் முஸ்லீம்கள் என்றாலே மத வெறியர் என்றோ, முஸ்லீம்களுக்கு ஆதரவாக இருக்கும் திராவிட இயக்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள், மதச் சார்பற்ற அமைப்புகளில் இருக்கும் இந்துக்கள் மற்றும் திரு. கோவி கண்ணன் போன்றோரை மத வெறிக்குத் துணை செல்பவர் என்றோ யாரும் விமர்சிக்க மாட்டார்கள்.

நீங்கள்,தமிழ்ப்பிரியன் மற்றும் சுவனப்பிரியன் போன்ற இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த பிளாக்கர்கள் திரு. கோவி. கண்ணன் அவர்கள் கருத்தோடு இசைவது மகிழ்வூட்டுகிறது. இது மிகவும் வரவேற்கத் தக்கது. திரு. கோவி. கண்ணன் அவர்கள் கருத்தை உறுதிப் படுத்துகிறது. ஆனால் நீங்கள் மூவரும் 99% வலைப் பதிவர்கள் அல்ல. இன்னும் நிறைய பேர் உங்கள் எண்ண ஓட்டத்திற்கு வர வேண்டியுள்ளது..

புதுகை.அப்துல்லா சொன்னது…

கோ.வி அண்ணே

//குண்டு வைத்தன் குரான் வேதப்படி முஸ்லிமே இல்லை என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு குண்டு வைத்த இஸ்லாமியர்களுக்கும் தண்டனையா ? என்று கேட்பது முரண்பாடுதானே ? இப்போது மட்டும் ஏன் குண்டு வைத்து தண்டனை அடைபவர்களை இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவராகப் பார்க்கிறீர்கள். //

தயவு செய்து கீழ்கண்ட சுட்டியை பாருங்கள்

http://www.tmmk.info/news/999702.htm

இது தமுமுக வின் அதிகாரப்பூர்வ இனையதளம். இதில் அதன் தலைவர் குண்டு வைத்தவர்களுக்கு தூக்கு தண்டனை அளியுங்கள் என்று உரத்த குரலில் கூறி உள்ளார்.

//நண்பர் அப்துல்லா சில விடயங்களைக் கொடுத்து இருக்கிறார். இவை ஏன் வெளியே தெரியவில்லை ? தினமலர் மீது இருந்த ஆவேசமும், கோபமும் தீவிரவாதிகள் மீதும் திரும்பி இருந்தால் கண்டிப்பாக கவனம் பெற்று இருக்கும்.
//

தினமலர் விஷயத்தில் அவர்களது போட்டி மீடியாக்கள் வணிக எதிர்ப்பு நோக்கோடு வணிக ஆதாயம் கருதி இஸ்லாமியர்களின் கருத்தை வெளியிட்டதால் அந்த ஆர்பாட்டம் எல்லாம் வெளியில் தெரிந்தது. ஆனால் ஆதாயம் இல்லாத
காரணத்தால் தூக்கில் போடுங்கள் என்று சொன்ன முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவரின் பேட்டி ஓரு ஏட்டிலும் வரவில்லை. ஆதாயம் இல்லாததால் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர் பங்கு கொண்ட மதுரை சுதந்திரதின தீவிரவாத எதிர்ப்பு பேரணி மீடியாக்களில் வெளிவரவில்லை.அண்ணே என் போன்ற நடுநிலையான அகிம்சாவாதிகளான இஸ்லாமியர்களின் குரல் மீடியாக்களில் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது.

புதுகை.அப்துல்லா சொன்னது…

பெரியசாமி அண்ணே

//இது போன்ற மதவெறி அமைப்புகள் சாராத இந்துக்கள் யாரும் குரல் கொடுக்க வில்லையா?
//

இந்தப் பதிவு பேரணி பற்றியது குரல் பற்றியது அல்ல. அணிதிரண்டு பேரணி நடத்தினார்களா என்றுதான் கேட்டேன்.குரல் குடுத்தார்களா/ எனக் கேட்டவில்லை. குரல் குடுக்கவில்லை எனச் சொன்னால் நான் நன்றி மறந்தவனாக ஆகிவிடுவேன். நீங்கள் குரல் குடுத்ததுபோலவே நாங்களும் குரல் குடுக்கிறோம். மீடியா சப்போட் இல்லாததால் எங்கள் குரல் ஈனஸ்வரத்தில் ஓலிக்கிறது


//ஆனால் நீங்கள் மூவரும் 99% வலைப் பதிவர்கள் அல்ல. இன்னும் நிறைய பேர் உங்கள் எண்ண ஓட்டத்திற்கு வர வேண்டியுள்ளது..
//


பதிவில் தேவையற்ற நீளம் கருதி எங்கள் மூவர் பெயரை மட்டும் குடுத்தேன் நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். இன்னும் சுல்தான் துவங்கி பல இஸ்லாமிய பிளாக்கர்களையும் தீவிரவாதத்திற்கு எதிரான அவர்கள் கருத்துக்களையும் சுட்டியோடு தருகின்றேன். அப்புறம் முடிவு செய்யுங்கள். தீவிரவாதத்தை ஆதரிப்பவ்வர்கள் 99 சதவீதமா இல்லை என்போன்று எதிர்ப்பவர்கள் 99 சதவீதமா என்று. அதன்பின் உங்கள் எண்ண ஓட்டம் மாறும் என்று நம்புகிறேன்.

நல்லடியார் சொன்னது…

குண்டு வைத்து அப்பாவிகளைக் கொல்வது முஸ்லிம்களுக்குரிய ஆறாவது கட்டாயக் கடமைபோல்தான் எழுதியுள்ளீர்கள்.

தனிமனிதனைக் கொல்பவன் ஒரு சமூகத்தையே கொன்றததற்குச் சமமாவாவன்; போர்களத்தில்கூட அப்பாவிகளைக் கொல்ல அனுமதியில்லை என்றுத் தெளிவாகச் சொன்ன பின்னரும், குண்டு வைத்து நூற்றுக் கணக்கில் அப்பாவிகளைப் படுகொலை செய்பவர்களைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டுமா?

குண்டு வெடிப்புகளைப் போலவே கள்ளச்சாராய சாவுகளுக்கும் காரணமான கொடூரர்களையும் பெரும்பான்மையினர் கண்டிக்கவில்லையென்பதால் அதையும் ஆதரிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

அதெப்படி சார் கோவிலில் குண்டு வெடித்தாலும், மசூதியில் வெடித்தாலும் இரண்டையுமே முஸ்லிம்களே செய்திருப்பார்கள் என்று பெரும்பாலோர் நம்புகிறீர்கள்? "அல்லாஹ்வின் பெயரால்" செய்திருந்தால் அல்லாஹ்வைத் தொழ வந்தவர்களையும் குண்டு வைத்துக் கொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தென்று தவறியும் யாரும் கேட்டிருக்கிறோமா?

இன்னார்தான் குண்டு வைத்தது, இன்ன அமைப்பு அதற்குப் பொறுப்பேற்றது என்றெல்லாம் சொல்வதை நம்புபவர்களிருக்கும்வரை, ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும்கூட அணுகுண்டு வீசியதற்கு அல்காயிதா பொறுப்பேற்றது என்று சொல்லப்பட்டாலும் அதையும் நம்பித் தொலைப்போம். ஏனென்றால் தற்காலத் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நேர்மையாளர்கள் ஆயிற்றே!

தாலிபான் குறித்து யாரோ முனுமுனுத்திருந்தார். 9/11 ஐக் காரணம் சொல்லி அன்றையப் பிரதமர் வாஜ்பாயையும் துணைப் பிரதமர் அத்வானியையும் குவாண்டநாமோ சிறையிலடைத்து அல்லது நம்நாட்டை அமெரிக்கா ஆக்கிரமித்திருந்தால்,வாஜ்பாய்தான் முல்லா உமர், நாமனைவரும் தாலிபான்கள்!

குண்டு வெடிப்புகளின்போது பதைபதைத்து மூக்கு சிந்தும் நம்மில் எத்தனை பேர் கள்ளச்சாராய சாவுகளுக்காக சிந்தி இருக்கிறோம்? அவசியமில்லை. ஏனென்றால் குண்டுவெடிப்புகளில் "அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி" ஏதேனும் ஒரு முஸ்லிம் இயக்கம் ஈமெயில் அனுப்பி பொறுப்பேற்கும், ஆனால் கள்ளச்சாராயப் பலிகளுக்கு அப்படி யாருக்கும் அவசியமில்லை!

தினமலரின் விஷமம் நிரூபிக்கப்பட்டது என்பதால் முஸ்லிம்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள்; எல்லா குண்டு வெடிப்புகளும் நியாயமான அணுகுமுறையுடன் விசாரித்து குற்றங்கள் நிரூபனமானால், கல்லெறிந்து கொல்ல உங்களில் எத்தனைபேர் முன்வருவீர்கள் என்று மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

இனி, முஸ்லிம் பதிவர்கள் செய்ய வேண்டியது, குண்டுகள் வெடிக்கக்கூடும் என்று நரேந்திரமோடி சொன்னாலும் முந்திக் கொண்டு "கண்டிக்கிறோம்" என்று ஒரு பதிவு போடுவது! இதோ எனது கண்டனப்பதிவு.

நவநீதன் சொன்னது…

நான் இந்த பதிலை எழுதுவதற்கு முன்னாள் ரெம்பவே ... யோசித்தேன்.
ஏனென்றால் உணர்ச்சி புர்வமான விஷயம் (sensitive issue).

// 'தீவிரவாதிகளைக் கண்டிக்க திரண்ட இஸ்லாமிய பெருமக்கள்' என்ற செய்திகளைத் தாங்கிவரும் பதிவுகளையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.//

@கோவி சார்,
எழில் என்று ஒரு இணையவுலக எழுத்தாளர் இருக்கிறார். பாரிசில் பாதிரியார் ஒரு பெண்ணை கற்பழித்து விட்டார். அதனால் கிறிஸ்தவர்களை நம்பாதே என்பது போல் எழுதிக் கொண்டு இருக்கிறார்.

இங்கே நம்ம ஊர்ல ஒரு சாமியாரும் தப்பு பண்ணுறதில்லையா...? எத்தனையோ சாமியார்கள் மேல் கற்பழிப்பு புகார் இல்லையா??? அதை பத்தி பத்திரிக்கைகள்ல வரலையா?? எங்கேயோ எதோ ஊரில் நடக்குற விஷயத்தை பெரிசுபடுத்தி காட்டும் வேலை தான் அது. அதை பத்தியும் நீங்க எழுதியிருந்தா நான் சந்தோசப்பட்டிருப்பேன்.


நீங்கள் கேட்ட அதே கேள்வியை நானும் கேட்கிறேன்....
தினமலருக்கு எதிராக எந்த ஒரு இந்து எழுத்தாளரும் (நான் மற்றும் நீங்கள் உட்பட) பதிவெழுத வில்லையே ????

ஏதாவது ஒரு நல்ல மனமுள்ள இந்து எழுத்தாளர் எழுதியிருக்கலாம். அதற்காக நீங்களும் நானும் அதை உரிமை கொண்டாட முடியாது அல்லவா??

//இஸ்லாத்திலிருந்து மதம் மாறினால்
மரண தண்டனை விதிப்பது சரியானதுதான் என்று கூட ஒரு
பதிவர் தன் பதிவில் வாதிட்டார்.

என்னை பொறுத்தவரை, உங்கள் குழந்தைக்கு இப்படி சாமி கும்பிட வேண்டும் / தொழ வேண்டும் / பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுக்கிறீர்களே ... இது கூட மத மாற்றம் தான். அது வரை மனிதனாக இருந்த ஒரு குழந்தையை உங்கள் மதத்திற்கு மாற்றுகிறீர்கள். இது கூட ஒரு வகை மத (மன) மாற்றம் தான்.

அந்த பதிவரும் ஒரு மத மாற்றி தான் ...! அவர் மத மாற்றத்தை பற்றி எழுதுவது வேடிக்கையாக இருக்கிறது...


இதன் மூலமாக யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னித்து விடுங்கள்... (நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டிருக்கிறேன். வருத்தம் தெரிவிக்கவில்லை)

வாசகன் சொன்னது…

சரியா ஒரு மாசத்துக்கு முந்தி மதுரைல
இஸ்லாமியர்கள் பேரணி நடத்த முற்பட்டு அத நடத்த விடக்கூடாது; ஆச்சா போச்சான்னு இந்து மதவெறி அமைப்புகள் நாண்டுக்கிட்டிருந்தாய்ங்களே...

அதிருக்கட்டும், முஸ்லிம்ங்க மட்டும் இதுக்கெல்லாம் பேரணி நடத்தணும் ஏன் எதிர்பார்க்கணும்?

வாசகன் சொன்னது…

/தினமலருக்கு எதிராக எந்த ஒரு இந்து எழுத்தாளரும் (நான் மற்றும் நீங்கள் உட்பட) பதிவெழுத வில்லையே ????


சரியான கேள்வி, இந்தப் பதிவுக்கு விடையாகவே!

கோவி.கண்ணன் சொன்னது…

//வாசகன் said...
/தினமலருக்கு எதிராக எந்த ஒரு இந்து எழுத்தாளரும் (நான் மற்றும் நீங்கள் உட்பட) பதிவெழுத வில்லையே ????


சரியான கேள்வி, இந்தப் பதிவுக்கு விடையாகவே!//

யாராவது ஊதிவிட்டால் தான் நீங்களெல்லாம் எழுதுவிங்க, பேசுவிங்க, தினமலர் கார்டூன் கொழுப்பு நேற்று நடந்தது மட்டுமல்ல, சென்ற ஆண்டு ரம்ஜான் மாதத்திலும் இணையத்தில் அவ்வாறு செய்ததது தான் அது, உங்கள் கண்களில் படவில்லை, கவனம் பெறவில்லை அவ்வளவுதான்,

நாங்கள் குறிப்பாக நான் சுட்டிக்காடியதும் நண்பர் லக்கிலுக் பதிவைப் போட்டார், பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் அந்த குறிப்பிட்ட இணையப் பக்கத்தை தினமலர் அகற்றியது.

உங்களிடம் கேள்வி கேட்கிறவர்களெல்லாம் இந்துதுவாக்கள் என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் காட்டும் குரான் மேற்கோள் யாருக்கு ?

நிழலின் குரல் சொன்னது…

//"அல்லாஹ்வின் பெயரால்" செய்திருந்தால் அல்லாஹ்வைத் தொழ வந்தவர்களையும் குண்டு வைத்துக் கொல்ல வேண்டிய அவசியம் ஏன் வந்தென்று தவறியும் யாரும் கேட்டிருக்கிறோமா? //

அட்டா , அருமையான கேள்வி .

அப்ப பாகிஸ்தான் மசூதியில ஏன் குண்டு வெடிக்குது ?

காஸ்மீர் மசூதில ஏன் குண்டு வெடிக்குது ?

ஷியா,சன்னி சண்டை யாருக்கும் தெரியாதா ?

இராக் இரான் எதுக்கு சண்டை போட்டது ?

இங்க இருக்கறவங்கெல்லாம் உங்க மதத்தால் மனம் சாக்கடை ஆன முஸ்லீம்ன்னா நினைக்கறீங்க நல்லடையார்?

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லடியார் said...
குண்டு வைத்து அப்பாவிகளைக் கொல்வது முஸ்லிம்களுக்குரிய ஆறாவது கட்டாயக் கடமைபோல்தான் எழுதியுள்ளீர்கள்
//

நல்லடியார்,

கேட்ட கேள்வியை விட்டுவிட்டு 'ஞாயங்கள்' குறித்து பேசுவது வியப்பளிக்கிறது. ஒருவேளை அப்படித்தான் பேச முடியுமோ ?

ஆக பிரச்சனைகள் தீரும் வழிகளைப் பற்றி எவருமே யோசிப்பதும் இல்லை, தீர்ப்பதற்கும் ஆர்வம் இல்லை. காகித புலிகளாக கண்டன அறிக்கை, 'அப்பாவிகளை பிடித்துச் சென்று விசாரிக்கக் கூடாது', அப்பாவிகள் செத்துவிட்டார்கள், இனி நினைத்தாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது, குறைந்த பட்சம் விசாரணை வளையத்துக்குள் சிக்க இருக்கும் அப்பாவிகளுக்காக குறல் கொடுப்போம் என்ற வகையில் தானே அறிக்கைகள் இருக்கின்றன.

எரிபொருள் கொடுத்து, போர்விமானம் நிறுத்தி வைக்க இடமும் கொடுத்து ஈராக்கின் அழிவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அரபு நாடுகளை மறந்து அமெரிக்காவை மட்டும் தானே வழக்கமாக நாமெல்லாம் கண்டிப்போம். ஒரு முஸ்லிம் முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக கண்டனம் தெரிவிப்பது கூட இஸ்லாத்தில் இல்லாத 6 வது கடமை என்பதால் தானே அமெரிக்காவிற்கு எதிராக மட்டும் முழங்குகிறார்கள்

********

இந்த பதிவு தவறான புரிதலுடன் எழுதப்பட்ட பதிவாக்கியதற்கு நன்றி !

என்னைப் போன்ற பலர் இது போன்ற தவறான கேள்விகளையே வைத்திருப்பர்கள், அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே என்று பதிவை அழிக்காமல் விடுகிறேன்.

வாசகன் சொன்னது…

//உங்களிடம் கேள்வி கேட்கிறவர்களெல்லாம் இந்துதுவாக்கள் என்று நினைத்தீர்கள் என்றால்.........//

இல்லை, நிச்சயம் அப்படி நினைக்கவில்லை, நல்ல உள்ளங்களை நன்கறிந்தே இருக்கிறார்கள் முஸ்லிம்கள்.
ஆறுதலாக அமைவதே இந்த நல்ல மனங்கள் தானே.

ஆனால், பின்னூட்டுகிறேன் பேர்வழி என்று சந்தடிசாக்கில் நுழைந்தவர்களுக்குத்தான் அந்தக் கேள்வி. நிச்சயம் உங்களுக்கில்லை.

Naina சொன்னது…

நடுநிலையான சிந்தனையுடைய பதிவர்களில் ஒருவராக தங்களை நான் இறிந்து வந்துள்ளேன். தொடர்ச்சியாக ஊடகங்களால் செய்யபட்டு வந்த "இஸலாமிய தீவிரவாதம்" என்ற பொய் மாயை பொது அறிவுடைய ஒருவரையே (தங்களை தான்)நம்பும் படி செய்து விட்டதே என்பதை பார்க்கும் இஸ்லாத்தின் எதிரிகள் தங்கள் சதி செயலில் வெற்றி பெற்று விட்டார்களோ என்று எண்ண தோன்றுகிறது. சமீப காலமாக நடந்து வரும் கேடுகெட்ட குண்டு கலாச்சரத்தில் இதுவரை முஸ்லிம் அமைப்பை சார்ந்தவர்கள் தான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக நிரூபிக்கபட்டிருப்பதாக சொன்னால் தங்களது கூற்றில் நியாயமிருப்பதாக சொல்வேன். தொடர் வண்டியில் வைத்தாலும், மார்கெட்டில் வைத்தாலும், ஏன் மசூதியில் (மல்கோன், ஹைதராபாத்) வைத்தாலும் முஸ்லீம் தீவிரவாதியாக சித்தரிக்கும் காவல்துறையும், உளவுத்துறையும், மிக முக்கியமாக ஊடகங்களும் முன்னிலை வகிப்பதை காணுகிறோம். இன்று வரை ஒன்றாவது நிரூபணமாதா?
சரி தங்களது மாயையை அவர்கள் உண்மையாக நம்புகிறவர்களானுலும் கூட தங்களது கூற்றில் அவர்கள் பொய்யர்களே. காரணம், அவர்களை இஸ்லாமிய வெறியன் என்கிறாயே, அப்படியானால் ஒரு இஸ்லாமிய வெறியன் எப்படி மசூதியில் குண்டு வெடிக்க செய்வான்?

இக் கயவர் கும்பலுக்கு இடம் ஒரு பொருட்டல்ல, யார் என்பது பொருட்டல்ல. இவர்கள் மனித இனத்தின் விரோதிகளே தவிர, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் விரோதிகள் அல்ல.

குஜராத் கலவரத்தின் போதோ, அல்லது தற்போதைய ஒரிசா கலவரத்தின் போதோ எனது இந்து சகோதர சகோதரிகள் பேரணிகள் நடத்தியது கிடையாது. அதற்காக அவர்கள் சங்பரிவாரத்தின் செயலை ஆமோதிக்கிறார்கள் என்று நான தலையங்கம் தீட்டினால் நான் எனது கூற்றில் தவறிழைத்தவனாவேன். தங்களுடைய கருத்து அது போன்றதாகவே உணருகிறேன். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் பதிவர்களில் ஒருவராக பார்க்கபடும் தங்களிடம் இருந்து வந்த இந்த தலையங்கம் முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களாக நேரடியாக குற்றம்சாட்டுவதாக உள்ளது மனதை வேதனைபடுத்துகிறது.

எனது கூற்றில் உண்மையிருக்குமானால், தங்களது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்- அப்பொருள் மெய் பொருள் காண்பதறிவு (நன்றி -திருக்குறள்)

அன்புடனும் சகோதர நேசத்துடனும்
நெய்னா முஹம்மது

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அருமையான பதிவு கோவியாரே!
உங்கள் கருத்து பெரும்பாலானவர்களின் கருத்து. இது எல்லா மதத்தினர்களுக்கும் பொருந்தும் பட்சத்தில், மனித நேயம் தழைக்கும். உலகில் அமைதி குடிக்கொண்டிருக்கும். அணுகுண்டு தேவை அற்றே போகும். அணு மின்சாரம் கிடக்கும். மின் வெட்டு இராது.

நவநீதன் சொன்னது…

//யாராவது ஊதிவிட்டால் தான் நீங்களெல்லாம் எழுதுவிங்க, பேசுவிங்க,

தலைவா ... ஊதி விடுவது என் வேலை இல்ல தலைவா..
ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னிச்சிரு தல...
நீங்கள் இந்துத்வா ஆதரவாளர் அல்ல என்று எனக்கு நன்றாக புரிகிறது. ஆனால் சில சமயம், உங்க argument சில நண்பர்களை இழக்க வைத்து விடலாம்...

பாத்து தல...

கோவி.கண்ணன் சொன்னது…

//நவநீதன் said...


தலைவா ... ஊதி விடுவது என் வேலை இல்ல தலைவா..
ஏதாவது தவறாக பேசியிருந்தால் மன்னிச்சிரு தல...
//

அவை உங்களைக் குறித்து எழுதவில்லை. தவறான புரிதல்,

அப்படி நினைத்துக் கொண்டிருந்தால் மன்னிக்கவும்.

அபூ முஹை சொன்னது…

நண்பர் கோவி.கண்ணன்,

பயங்கரவாதம் வேரோடும், வேரடி மண்ணோடும் அழிய வேண்டும் என்பது தான் நமது ஆவல்.

குத்துயிரும், கொலை உயிருமாக அப்பாவி மக்கள் துடிப்பதையும், வெடித்து சிதறுவதையும் படத்தில் காணும் போது, அணு இல்லாத காலத்தில் வாழாமல் போனோமே என்ற ஏக்கம் ஏற்படுகிறது.

பயங்கரவாதம் எப்படி ஏற்படுகிறது?

ஏன் செய்கிறார்கள்?

அதைச் செய்வது யார்?

இதுவரை எந்தத் துப்பும் இல்லை.

நேர்மையுடன் துப்புத் துலக்கி உண்மைக் குற்றவாளிகளை அடையாளம் காட்டி அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். எவ்வளவோ வன்முறைச் செயல்கள் நடந்தும் குற்றவாளிகள் சிக்கவில்லை என்றால் குற்றவாளிகளையே அதிகாரத்தில் வைத்திருக்கிறோமோ என்ற சந்தேகமும் எழுகின்றது.

பயங்கவாதத்துக்கு எதிரான தீர்வு இடியாப்பச் சிக்கல்போல் உள்ளது. பயங்கரவாதம் ஒழிய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! ஆனால் எப்படி?

''தீவிரவாதிகளுக்கு எதிரான பேரணிகள்'' என்ற இந்தப் பதிவிலும் மதத் தீவிரவாதம் தலை தூக்கி விட்டதே கவனித்தீர்களா!

நல்லடியார் சொன்னது…

//கேட்ட கேள்வியை விட்டுவிட்டு 'ஞாயங்கள்' குறித்து பேசுவது வியப்பளிக்கிறது. ஒருவேளை அப்படித்தான் பேச முடியுமோ ?//

கோவி.கண்ணன்,

கார்ட்டூன் விசயத்தில் தினமலருக்குக் காட்டிய எதிர்ப்பைப்போன்று,டெல்லி குண்டு வெடிப்பிற்கு எதிராகவும் முஸ்லிம்கள் ஏன் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பைக் காட்டவில்லை என்பதே உங்கள் கேள்வி.

கார்ட்டூன் விசயத்தில் தினமலர்தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரங்கள் தேவையில்லை. மேலும், தினமலரே ஒப்புக் கொண்டுவிட்டது. ஆனால் டெல்லி மற்றும் முந்தைய குண்டு வெடிப்புகளில் முஸ்லிம்கள்தான் குற்றவாளிகள் என்று எதன் அடிப்படையில் முடிவுக்கு வந்தீர்கள்?

போலீஸாரால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுபவர்களெல்லாம் குற்றவாளிகளாக இருக்க முடியுமா?

இருப்பினும், ஏன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்களில் 99% முஸ்லிம்களாக மட்டுமே இருக்கிறார்கள்?

மற்றவர்களெல்லாம் குண்டு வைக்க மாட்டார்கள் என்று எதனடிப்படையில் நம்புகிறீர்கள்?

முஸ்லிம்கள்மீது பழிபோட்டு அரசியல் ஆதாயம் அடைந்துவருபவர்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

கோவில்களில் குண்டு வெடித்தால் அதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்றால் மாலேகான், ஹைதரபாத் போன்ற இடங்களில் மசூதிகளிலும் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவே?

சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்யலாமெனில், அஹமதாபாத் குண்டு வெடிப்புகளை நடத்தியவன் மோடியே என்று சங்கராச்சாரியாரும் திக் விஜய் சிங்கும் ஆதாரம் இருப்பதாகச் சொல்லி சந்தேகப்பட்டார்களே, ஏன் சந்தேகத்தின் பேரில் மோடியைக் கைது செய்து விசாரிக்கவில்லை?

இத்தகையக் குரூரங்களை இஸ்லாத்தின் பெயரால் அல்லாஹ்வை நம்பும் எவரும் செய்திருக்க மாட்டார்கள் என்பதும், இதுவரை சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 99% அப்பாவிகள் என்பதும் முஸ்லிம்களுக்குத் தெரிந்திருப்பதால் நீங்கள் குறிப்பிடும் SO CALLED தீவிரவாதிகளுக்கு எதிராக எவரும் பேரணி நடத்தவில்லை. அப்படியே கைது செய்யப்பட்டவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டுக் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் அவர்களைத் சட்டப்படி தண்டிப்பதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை எனும்போது உங்கள் கேள்வியில் நியாமில்லை நண்பரே!

கோவி.கண்ணன் சொன்னது…

நல்லடியார்,

நான் டெல்லி நிகழ்வை ஒட்டித்தான் எழுதினேன் அன்றி, டெல்லியிலோ பிற இடங்களிலோ முஸ்லிம்கள் தான் வைத்தார்கள் என்று எங்கும் குறிப்பிடவில்லை. நீங்கள் தான் பட்டியல் இடுகிறீர்கள்.

இங்கே திராவிடத் தோழர்கள், மற்றும் நான் உட்பட பலரும் எழுதும் போது 'இந்துத்துவா', 'இந்துமதவெறி' என்று எழுதினாலும் மறந்தும் கூட 'இஸ்லாம் தீவிரவாதி' என்று எழுதுவதில்லை. 'இஸ்லாம் மதத்தையும் தீவிரவாதத்தையும் தொடர்பு படுத்தாதே' என்று நீங்கள் சொல்வதால் தான் அவ்வாறு செய்கிறோம் என்றெல்லாம் நினைக்காதீர்கள்.

உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி, இந்த விளக்கமே பெருவாரியான இஸ்லாமியர்களின் கருத்து என்றே எடுத்துக் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். மற்றவர்களைவிட வலையில் அதிகம் எழுதியவர் என்பதால் மற்றவர்களின் குரலாகவே இதை எடுத்துக் கொள்கிறேன். மிக்க நன்றி !

Vishwa சொன்னது…

உங்களிடம் இந்த கருத்தை ஏதிர்பார்கவில்லை.
படித்தும் மகிழ்ந்தேன்.இதே கருத்தை அனைத்து பிரிவினரும் ஏற்றுக்கொண்டு அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல்,ஒட்டு பொறுக்குவதயே வேலையாக கொள்ளாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

மீண்டும் உங்களிடம் இதைபோன்று பாரபட்சமற்ற கருத்துக்களை ஏதிர்பார்கிறேன்.

அன்புடன்...
விஷ்வா

கோவி.கண்ணன் சொன்னது…

//Vishwa said...
உங்களிடம் இந்த கருத்தை ஏதிர்பார்கவில்லை.
படித்தும் மகிழ்ந்தேன்.இதே கருத்தை அனைத்து பிரிவினரும் ஏற்றுக்கொண்டு அனைவரையும் பாரபட்சம் பார்க்காமல்,ஒட்டு பொறுக்குவதயே வேலையாக கொள்ளாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

மீண்டும் உங்களிடம் இதைபோன்று பாரபட்சமற்ற கருத்துக்களை ஏதிர்பார்கிறேன்.

அன்புடன்...
விஷ்வா
//

உங்களுக்கும் இந்த மறுமொழி பொருந்தும்.

நான் நடுநிலைவாதியாக வேஷம் போடுவதாக இம்மி அளவுக்குக் கூட சந்தேகம் வரலையா ?
:)))))))

Rajasankar சொன்னது…

கோவி கண்ணன்,

எனக்கு ஒரு சந்தேகம். தினமலருக்கு எதிராக உயர்நீதிமனறத்தில் வழக்கு போடும் ஆர்வத்தை ஏன் இவர்கள் கோவை குண்டுவெடிப்பில் கைதானவர்கள் நிரபராதி என நிருபிப்பதில் காட்டுவதில்லை. ஒரு பக்கம் நீதிமன்றத்தை தேடுவது, இன்னொரு பக்கம் நீதிமன்றம் கொடுத்த தண்டனையை விமர்சிப்பது. இதுதான் ஏன்னு புரியல

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்