பின்பற்றுபவர்கள்

15 ஜூலை, 2006

ஒன்னும் ஒன்னும் = ஏழு

//தமிழ்மணம் கடந்த சிறு நாட்களாக சற்றே சூடாக உள்ளது. கொஞ்சம் கவனம் திருப்ப இந்த பதிவு. மிக, மிக, அவசரமாக எழுத பட்டது. பிடித்த தமிழ் வரிகளை இங்கே தந்துள்ளேன்.// என்று எமெர்ஜென்சி பதிவை தட்டிவிட்டு நமது 1+1 =2 திருவாளர் பாலசந்தர் கணேசன். என்னையும் அன்போடு அழைத்திருக்கிறார். அவர் எதற்காக என்னை தேர்ந்தெடுத்தார் என்று குழப்பமாக இருக்கிறது ! பிடித்த தமிழ்வரிகளைப் போடவேண்டும் என்று கேட்டிருக்கிறார்சரி ...... படியுங்கள்

1. ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே நமது குலமென்போம் ( ஒரு சென்டிமென்ட் வேண்டாமா ?) :(
2. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே... கண்ணனே ... படைக்கிறான்...கண்ணனே காக்கிறான் ... கண்ணனே கொலைசெய்கிறான் ...
3. வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை (பெண்ணைப் பெற்றவர்களுக்கு அதுவும் கிடையாது )
4.உன்னைச் சொல்லி குற்றமில்லை ... என்னைச் சொல்லிக் குற்றமில்லை ...
5. ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போல வாழ்ந்திடுவோமோ வாழ்நாளிலே
6. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனவ சிரிப்பு ...
7. ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி...


(தேவனே என்னைப் பாருங்கள்... என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள் ...ஆயிரம் இருந்தும்....தும் ... தும் .... அவசரத்துக்கு எதுவும் வராததால் இப்போதைக்கு ஏழு போதும் என்று நினைக்கிறேன். )

கத்தி குத்தைவிட காயம் விளைவைப்பது உள்குத்து ஆகவேமனம் வேண்டும்
புன்பட்ட மனதுகள் நல்பன் எடுத்துப்பாடி,
தன்பட்ட துன்பமதை இனிஎவர்பட வேண்டவென
பண்பட்ட உள்ளமதை பெற்றுவிட்டால், எவர்
கண்பட்ட தீமையும் கனபொழுதில் மறைந்துவிடும்

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்றும் மகிழ்ச்சி பெருகவே வேண்டும்.
அன்புடன் நட்புடன்
கோவி.கண்ணன்

32 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே... கண்ணனே ... படைக்கிறான்...கண்ணனே காக்கிறான் ... கண்ணனே கொலைசெய்கிறான் //

எந்தக் கண்ணன்????? :-)

நோ உள்குத்து. ஒன்லி வெளிக்குத்து. :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//எந்தக் கண்ணன்????? :-)

நோ உள்குத்து. ஒன்லி வெளிக்குத்து. :-) //

அத்வைதம் அறிந்த தாங்களுக்கு அடியேனின் விளக்கமா !!! ? சரி
சொல்கிறேன் ...

மன்னனும் நானே !
மக்களும் நானே !
மரஞ்செடி கொடிகளும் நானே

என்று யார் சொல்லுவது ? :)))

பெயரில்லா சொன்னது…

திரு.வேணுகோபால் தானே? நான் கோவி.கண்ணனோன்னு நினைச்சேன். :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
திரு.வேணுகோபால் தானே? நான் கோவி.கண்ணனோன்னு நினைச்சேன். :-)
//
நீங்கள் அத்வைத கருத்துக்களை நம்பினால்

வேணுகோபால் ... குமரன் ... கோவி.கண்ணன் ... நாகை சிவா அனைவரும் ஒருவரே ! :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
திரு.வேணுகோபால் தானே? நான் கோவி.கண்ணனோன்னு நினைச்சேன். :-)
//
நீங்கள் அத்வைத கருத்துக்களை நம்பினால்

வேணுகோபால் ... குமரன் ... கோவி.கண்ணன் ... நாகை சிவா அனைவரும் ஒருவரே ! :)))

பெயரில்லா சொன்னது…

நான் அத்வைதி இல்லீங்க. விஷிச்டாத்வைதி.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
நான் அத்வைதி இல்லீங்க. விஷிச்டாத்வைதி.
//
நீங்கள் ராமனுஜரா ?
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறுவேறு ?

பெயரில்லா சொன்னது…

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே... கோவி. கண்ணனுக்கே...

பெயரில்லா சொன்னது…

நல்ல தேர்வுகள்

பெயரில்லா சொன்னது…

பிடித்த தமிழ் வரிகளை போட சொன்னால், பிடித்த தமிழ் பாடல் வரிகளை போட்ட மாதிரி இருக்கு. நல்ல பாடலகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// நாகை சிவா said...
போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே... கோவி. கண்ணனுக்கே...
//
வாங்க வாங்க ... எத்தனை பேர் கிளம்பியிர்க்கிங்க ... பிடித்தபாடல் என்று போட்டால் ...

வேண்டுமென்றால் எனது ஆறுபதிவை பாருங்கள் ... இதே பாடல்தான் தெரிவுசெய்தேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// Boston Bala said...
நல்ல தேர்வுகள்
//
சிக்சிவேசன் பாடல்கள் தான் :))

பெயரில்லா சொன்னது…

//நீங்கள் ராமனுஜரா ?
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வேறுவேறு ?
//

நான் இராமானுஜர் இல்லை.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு என்று சொல்வது த்வைதம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// நாகை சிவா said...
பிடித்த தமிழ் வரிகளை போட சொன்னால், பிடித்த தமிழ் பாடல் வரிகளை போட்ட மாதிரி இருக்கு. நல்ல பாடலகள்
//
ஏது ஏது முதுகில் எனக்கு வரி போடாமல் விடமாட்டீர்கள் போலும் :))

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...

நான் இராமானுஜர் இல்லை.

பரமாத்மாவும் ஜீவாத்மாவும் வெவ்வேறு என்று சொல்வது த்வைதம்.
//
சரி சமயங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறேன்.

விஷிச்டாத்வைதம் யாருடையது ?

பெயரில்லா சொன்னது…

கலக்கிவிட்டீர்கள் கோவி.கண்ணன் அவர்களே,
மிக்க நன்றி.

கொஞ்சம் கொஞ்சமாக சூடு தணிகின்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

// பாலசந்தர் கணேசன். said...
கலக்கிவிட்டீர்கள் கோவி.கண்ணன் அவர்களே,
மிக்க நன்றி.
//
நான் என்ன செய்தேன்... செய்பவரும் நீரே ... செய்விப்பவரும் ... நீரே .. ஆற்றங்கரையில் வீற்றிருப்பவரும் நீரே .. அரசமர நிழலில் குடியிருப்பவரும் நீரே ... இப்பொழுது அடி(யர்க்கு)பட்டவர்கக்கு அருளுவரும் நீரே கனேசா ! ::)))

பெயரில்லா சொன்னது…

யார் யார் "சிவ"ம்
நீ நாம் "சிவ"ம்
வாழ்வே தவம்
அன்பே "சிவ"ம்
ஆத்திகம் பேசும் அடியார்க்கு எல்லாம் "சிவ"மே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கா அன்பே "சிவ"மாகும்
அன்பே "சிவ"ம்
என்றும் அன்பே "சிவ"ம்

ஒன்னும் இல்ல இந்த பாட்டு தான் இப்ப இங்க நான் கேட்டு கொண்டு இருக்கின்றேன். உங்க பதிவுக்கு டைமிங்கா மேட்ச் ஆச்சு, அதான்

கோவி.கண்ணன் சொன்னது…

இப்பொழுது எல்லாம் 'உள்குத்து அல்ல' என்று சொல்லிவிட்டு கூடவே சிரிபானையும் போட வேண்டியதாகியுள்ளது :))

கோவி.கண்ணன் சொன்னது…

///நாகை சிவா said...
யார் யார் "சிவ"ம்
நீ நாம் "சிவ"ம்
ஒன்னும் இல்ல இந்த பாட்டு தான் இப்ப இங்க நான் கேட்டு கொண்டு இருக்கின்றேன். உங்க பதிவுக்கு டைமிங்கா மேட்ச் ஆச்சு,//

அவனின்று அனுவும் அசையாது
சிவனின்றி அனுவும் அழியாது

(சிவன் அழிக்கும் கடவுள்)

சிவா நான் உங்களை சொல்லவில்லை :))

பெயரில்லா சொன்னது…

//சிவா நான் உங்களை சொல்லவில்லை :)) //
அதான் எனக்கு தெரியுமே, எதுக்கு தனியா விளக்கம் எல்லாம்

"ஹரியும்(கண்ணன்), சிவமும் ஒன்னு
அத அறியாவதர் வாயில் மண்ணு"
சாமி படத்துல விவேக் சொல்லி இருக்காரு.

பெயரில்லா சொன்னது…

மணி இப்ப 2.30 அங்க, இது ஒன்னும் ஆவற மாதிரி தெரியல, நான் எஸ்கேப் ஆகுறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
மணி இப்ப 2.30 அங்க, இது ஒன்னும் ஆவற மாதிரி தெரியல, நான் எஸ்கேப் ஆகுறேன்.
//
வழிமொழிகிறேன் ... இன்றை உங்கள் தூக்கத்தில் இன்பக் கனவுகள் வரக்கடவது :))

பெயரில்லா சொன்னது…

///"ஹரியும்(கண்ணன்), சிவமும் ஒன்னு
அத அறியாவதர் வாயில் மண்ணு"
சாமி படத்துல விவேக் சொல்லி இருக்காரு.

///

அடடடடடா. இது ரொம்பப் பழைய பழமொழியாச்சே. இது விவேக் சொன்னதுன்டீங்களே. என்ன செய்வேன்? யார்க்கிட்ட போயி சொல்லி அழுவேன்? ஹும்ஹும்ஹும் (அழறேம்பா).

பெயரில்லா சொன்னது…

அத்வைதம் = சங்கரர்
விசிஷ்டாத்வைதம் = இராமானுஜர்
த்வைதம் = மத்வர்

நான் விசிஷ்டாத்வைதி. ஆனால் நான் இராமானுஜர் இல்லைன்னு சொன்னேன் கண்ணன் ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

// என்ன செய்வேன்? யார்க்கிட்ட போயி சொல்லி அழுவேன்? //
திரு குமரன்,
அவரே தெரியாமல் சொல்லிவிட்டார் என்று சொல்லிவிட்டு ... நீங்களும் யாரிடமாவது (ஹரியும் சிவாவும் ஒன்னு) சொல்ல வேண்டுமா ? :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் விசிஷ்டாத்வைதி. ஆனால் நான் இராமானுஜர் இல்லைன்னு சொன்னேன் கண்ணன் ஐயா. //
திரு குமரன்
நீங்கள் ராமனுஜரா ? - தற்குறிப்பு ஏற்ற அணி.
நீங்கள் ராமனுஜரா ? என்றால் நீங்கள் விஷிச்டாத்வைதியா என்று கேட்டதாக அர்த்தம் :)))

பெயரில்லா சொன்னது…

கடைசியில் போட்ட சிரிப்பான்களுக்கு நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
கடைசியில் போட்ட சிரிப்பான்களுக்கு நன்றி.
//
இதில் ஏதாவது 'உகு' உண்டா ?

தடை செய்யப்பட்ட வார்தையை பயன்படுத்தக்கூடாது என்று உறுதி கொண்டுள்ளேன் :)))

பெயரில்லா சொன்னது…

உகு இல்லை.

பெயரில்லா சொன்னது…

சந்தடி சாக்குலே எண்ணுவது மறந்தாச்சா?
வரிசையிலே எங்கேப்பா 4 ??????

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
சந்தடி சாக்குலே எண்ணுவது மறந்தாச்சா?
வரிசையிலே எங்கேப்பா 4 ??????
//
துளசியக்கா,
நாலுபேருக்கு நல்லது செய்யனும் தோன்றியதில் 4 ஐ மறந்துவிடேன். நன்றி !!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்