பின்பற்றுபவர்கள்

25 செப்டம்பர், 2008

வடிவேலு கட்சியின் முதல் வேட்பாளர் !

இந்த புகைப்படத்தை பார்த்துட்டு கோல்கேட் விளம்பரத்திற்கு கூப்பிட்டார்களாம், வேண்டாம், வரலை என்றாராம், அப்பறம் எதுக்கு இந்த புகைப்படம் ? கேட்டேன்

"என்ன அப்படி கேட்டிட்டியே......"

"என்ன அண்ணாச்சி, அப்படி என்னத்த கேட்டேன்"

"அட அதத்தான் நானும் சொல்லுதேன்..."

"சரி சொல்லுங்க அண்ணாச்சி"

"வர்ற தேர்த்தலில் நிக்கேன் இல்லே....."

நம்ம வடகரை வேலன் அண்ணாச்சி வடிவேலு ஆரம்பிக்கப் போகும் கட்சியின் சார்பில் தேர்த்தலில் கோவை மாவட்டத்தில் இரு தொகுதிகளில் நிற்கப் போகிறாராம். அதுக்கு எடுத்த புகைப்படம் தான் இது.

அண்ணாச்சி வாழ்க ! அண்ணாச்சி வாழ்க !

உங்கள் ஓட்டு அண்ணாச்சிக்கே !

அண்ணாச்சி வாழ்க !

பெரிய அண்ணாச்சி வடிவேலு அண்ணாச்சி வாழ்க !

பிகு: புகைப்படம் பரிசல்காரன் பதிவில் சுட்டது.

42 கருத்துகள்:

மங்களூர் சிவா சொன்னது…

அண்ணாச்சி வாழ்க ! அண்ணாச்சி வாழ்க !
வடகரை வேலன் அண்ணாச்சி வாழ்க !

வெண்பூ சொன்னது…

தேர்தல் நடக்கும் சமயத்தில் தமிழ்பதிவர்கள் அனைவரும் ஒரு மாத விடுப்பு எடுத்து அண்ணாச்சிக்கு தேர்தல் பணிகளில் (பூத் கேப்சரிங், கள்ள ஓட்டு, எதிர்கட்சி வேட்பாளரை குமுறுவது) உதவுவார்கள் என்றும் அந்த ஒரு மாதமும் மொக்கை பதிவுகள் குறைவாக இருக்குமென்பதால் வாசகர்கள் உருப்படியாக ஆபிஸில் ஆணி புடுங்குமாறு, கட்சியின் சென்னை மாநகர் மாவட்டம் எட்டாவது வட்டம் சார்பில் தெரிவித்துக்கொண்டு அண்ணனுக்கு இந்த பின்னூட்ட மாலையை பொன் மாலையாக அணிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...

//

நானும் 2 மாத விடுப்பில் வந்து கலந்து கொள்கிறேன். அண்ணாச்சிக்கு எதிராக நிற்பவர்களுக்கு டெபாசிட் இல்லாமல் செய்ய வேண்டும்.

அண்ணாச்சியின் புகைப்படத்தைப் போட்டு பரிசல் குழு இப்பொழுதிலிருந்தே பிரசாரம் தொடங்கிவிட்டது போல் தெரிகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
அண்ணாச்சி வாழ்க ! அண்ணாச்சி வாழ்க !
வடகரை வேலன் அண்ணாச்சி வாழ்க !
//

மாப்பிள்ளை, சவுக்கியமாக இருக்கிங்களா ?

ஜெகதீசன் சொன்னது…

:)))))))))

முரளிகண்ணன் சொன்னது…

:-)))))))))))))))

பெயரில்லா சொன்னது…

அடப்பாவிகளா,

நம்மள வச்சு இப்படி ஒரு படம் ஓட்டீட்டிருக்கீங்களா?

நாம் பாட்டுக்கு சிவனேன்னுதான இருக்கேன். ஏன் இப்படித் தேர இழுத்துத் தெருவில விடனும்.

ஒரு குருப்பாத்தாந் கெளம்பீட்டங்க போல.

மீ தி எஸ்கேப்.

அவ்வ்வ்வ்வ்வ்

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...

அண்ணாச்சி வடிவேலு கட்சியில் சேர்ந்தவுடனேயே வடிவேலு மாதிரியே பேசுறிங்களே!

:))))

புதுகை.அப்துல்லா சொன்னது…

அண்ணாச்சி வாழ்க ! அண்ணாச்சி வாழ்க !
வடகரை வேலன் அண்ணாச்சி வாழ்க !

அண்ணாச்சியின் புகழ் ஓங்குக!

இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

உங்கள் ஓட்டு அண்ணாச்சிக்கே.

//கட்சியின் சென்னை மாநகர் மாவட்டம் எட்டாவது வட்டம் சார்பில் தெரிவித்துக்கொண்டு அண்ணனுக்கு இந்த பின்னூட்ட மாலையை பொன் மாலையாக அணிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
//

அத அப்பிடியே பன்னென்டாம் வட்டத்தின் சார்பில் ரிப்பீட்டு போட்டுகிறேன்.

பரிசல்காரன் சொன்னது…

ஒரு தேசியக் கட்சியின் வேட்பாளரைப் புகைப்படம் எடுத்த பெருமையை எனக்களித்த அண்ணாச்சிக்கும், அவரது தலைவரான வருங்கால ஜனாதிபதி, வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, வருங்கால உலக ஐக்கிய நாடுகள் சபைத் த்லைவர் வடிவேலுவுக்கும் திருப்பூர் மாவட்டம் (அதுக்குள்ளாற ஆயிடும்ல!) சார்பாக நன்றியைத் தெரிவிக்கிறேன்!

நையாண்டி நைனா சொன்னது…

வடகரை வேலன் - வடிவேலன்
ஆஹா... என்ன ஒரு பெயர் பொருத்தம்...
எங்கள் (நெல்லை) தொகுதி எம்.எல்.ஏ . அண்ணன் வடகரை வேலன் வாழ்க....

நையாண்டி நைனா சொன்னது…

/* கோவை மாவட்டத்தில் இரு தொகுதிகளில் நிற்கப் போகிறாராம்.*/

எங்கள் தங்கம் எங்கள் தொகுதிக்கு வேண்டும்.....

இப்படிக்கு
செயல் வீரர்கள்
சாம்பவர் வடகரை கைய்ப்புள்ள முன்னேற்ற கழகம்.

நையாண்டி நைனா சொன்னது…

ஹே... பணமரத்துலெ வவ் வாலா ..... எங்க வடகரையாருக்கே சவாலா...

அத்திரி சொன்னது…

வாழ்க அண்ணாச்சி ,அண்ணாச்சி தேர்தல்ல நின்றால் கள்ள ஓட்டு போட்டாவது ஜெயிக்க வைப்பேன்.பக்கத்து ஊர் ஆச்சே

நையாண்டி நைனா சொன்னது…

எனக்கென்னமோ கோவியார் செய்றத பார்த்தா இது ஆளுங்கட்சியின் தூண்டுதல் என்றே நினைக்கிறேன்.....

எங்கள் அண்ணனுக்கு ஜெயிக்கிற தொகுதியை தராமல் வேறு தொகுதி ஒதுக்கிய அரசியல் சாணக்கியர் திரு. கோவியாரை வன்மையாக கண்டிக்கிறோம்

இப்படிக்கு
எங்கடா பிரச்னை பண்ணலாம் என்று அலைவோர் சங்கம்.

கோவி.கண்ணன் சொன்னது…

அண்ணாச்சிக்கு ஆதரவு குவிகிறது, விஜயகாந்தை எதிர்க்க வடிவேலு எதற்கு என்று யோசிக்க வேண்டி இருக்கு, அண்ணாச்சி வி.காந்துக்கு எதிராக கலம் இறங்கவேண்டும், விரைவில் கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
வடகரை வேலன் - வடிவேலன்
ஆஹா... என்ன ஒரு பெயர் பொருத்தம்...
எங்கள் (நெல்லை) தொகுதி எம்.எல்.ஏ . அண்ணன் வடகரை வேலன் வாழ்க....

5:12 PM, September 25, 2008
//

:)) சூப்பர் பொருத்தம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
ஒரு தேசியக் கட்சியின் வேட்பாளரைப் புகைப்படம் எடுத்த பெருமையை எனக்களித்த அண்ணாச்சிக்கும், அவரது தலைவரான வருங்கால ஜனாதிபதி, வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, வருங்கால உலக ஐக்கிய நாடுகள் சபைத் த்லைவர் வடிவேலுவுக்கும் திருப்பூர் மாவட்டம் (அதுக்குள்ளாற ஆயிடும்ல!) சார்பாக நன்றியைத் தெரிவிக்கிறேன்!

4:20 PM, September 25, 2008
//

எப்படியும் லட்சம் கொடி தேவைப்படும், உங்க கம்பெணியில் தான் ஆர்டர் கொடுக்க இருக்கிறாராம். போஸ்டர் ? அவரே அடித்துக் கொள்வார், பேப்பருக்கு ஆகிற பணத்தை மட்டும் நாம வசூல் செய்து அண்ணாச்சியிடம் கொடுக்கனும்.

பரிசல், உங்க தொகுதியிலிருந்து லாரிகளில் ஆட்களை ஏற்றிவர வேண்டியது உங்கள் பொறுப்பு.

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திரி said...
வாழ்க அண்ணாச்சி ,அண்ணாச்சி தேர்தல்ல நின்றால் கள்ள ஓட்டு போட்டாவது ஜெயிக்க வைப்பேன்.பக்கத்து ஊர் ஆச்சே

5:25 PM, September 25, 2008
//

அண்ணாச்சியின் செல்வாக்கை பழிக்கும் செயல், ஓட்டெல்லாமே அண்ணாச்சிக்கு தானே, பின்னே எங்கே கள்ள ஓட்டு ?

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.அப்துல்லா said...
அண்ணாச்சி வாழ்க ! அண்ணாச்சி வாழ்க !
வடகரை வேலன் அண்ணாச்சி வாழ்க !

அண்ணாச்சியின் புகழ் ஓங்குக!

இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?//

முதல் மாநாட்டை மெரினாவில் நடத்துவதா ? தமுக்கம் மைதானத்தில் நடத்துவதா ? என்று சற்று குழப்பமாக இருக்கிறதாம். அண்ணாச்சிக்கு எந்த திடல் சரியாக இருக்கும் ? ஆலோசனையும் சொல்லுங்க

உங்கள் ஓட்டு அண்ணாச்சிக்கே.
//அத அப்பிடியே பன்னென்டாம் வட்டத்தின் சார்பில் ரிப்பீட்டு போட்டுகிறேன்.

3:48 PM, September 25, 2008
//

ரிப்பீட்டினா மட்டும் போதாது, அண்ணாச்சி கட்சிக்கு உண்டியல் வசூல் செய்து அண்ணாச்சியின் கரத்தையும் வலுப்படுத்தனும்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை ஈன்றெடுத்தத் தங்கம்,

தென் தமிழகத்து சிங்கம்,

நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட வடிவான வடிவேலார்! (சரிந்து கிடக்கும் தமிழகத்தை தூக்கி நிறுத்த இவரால் மட்டுமே முடியும்)

கொ.ப.செ யா யாரைப் போடுவாரு?

புதுகை.அப்துல்லா சொன்னது…

முதல் மாநாட்டை மெரினாவில் நடத்துவதா ? தமுக்கம் மைதானத்தில் நடத்துவதா ? என்று சற்று குழப்பமாக இருக்கிறதாம். அண்ணாச்சிக்கு எந்த திடல் சரியாக இருக்கும் ? ஆலோசனையும் சொல்லுங்க
//

அரசியலுக்கு மருத தாண்ணே ராசி. ஆட்சியப் புடுச்சவுடனே பதவி ஏற்பு விழாவை மெரினால வச்சுக்குவோம் :)

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வடிவேலு -அப்பா..வேலா .அது யாருப்பா கோவி..உனக்கு ஆதரவா அவ்வளவு பேசறாரு
வேலன்- நம்ம ஆளு தாங்க..சிங்கையிலே இருக்காரு
வடிவெலு-அப்படியா..பிடிச்சுப்போடு..நம்ம நாகை தொகுதி வேட்பாளரா..
(கோவி..தன் திட்டம் நிறைவேறியது கண்டு..மனம் மகிழ்கிறார்)

Thamiz Priyan சொன்னது…

கோவை போயாவது வடகரை வேலன் அண்ணாச்சிக்கு கள்ள ஓட்டு ஜெயிக்க வைப்போம்ல....

வடிவேலன் முன்னேற்றக் கழகம்

நையாண்டி நைனா சொன்னது…

/*வடிவெலு-அப்படியா..பிடிச்சுப்போடு..நம்ம நாகை தொகுதி வேட்பாளரா..
(கோவி..தன் திட்டம் நிறைவேறியது கண்டு..மனம் மகிழ்கிறார்)*/

நான் கூட... அவர் அகில உலக கட்சியின் சிங்கை வட்டத்திற்கு போட்டி போடுறார் என்றுள்ளோ நெனச்சேன்......

நசரேயன் சொன்னது…

வடிவேலு கட்சி வேட்பாளருக்கு விண்ணப்பம் பண்ண எதாவது குறைந்த பட்ச தகுதிகள் இல்லனா நானும் வேட்பாளருக்கு தயார் :):)
எனக்கு ஒரு விண்ணப்ப பாரம் வேணும் :)

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அட நம்ம வேலன் அண்ணாச்சிக்காக ஒரு பூத் என்ன, அவரு தொகுதிக்கு பக்கத்து தொகுதியில கூட இருக்க பூத் எல்லாத்தையும் கேப்சர் பண்ணிடுவோம். கை பரபரங்குது. ரொம்ப நாளு ஆச்சு பூத் கேப்சர் பண்ணி. கலக்கிடுவோம்ணே. நீங்க கவலையேப் படாதீங்க. 2011ல நிதியமைச்சர் நம்ம வடகரை வேலன் அண்ணாச்சி தான்.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

புடிக்கிறோம், தமிழ்நாட்டுல இருக்க எல்லா தொகுதியிலயும் இருக்க எல்லா பூத்தையும் புடிக்கிறோம். அடுத்த முதல்வர் வடிவேலு. ( எனக்கு திருவையாறு தொகுதிய குடுக்க சொல்லுங்கண்ணே)

கோவி.கண்ணன் சொன்னது…

அண்ணாச்சிக்கு ஆதரவு பெருகி இருப்பதைப் பார்த்தால் எதிர்பவர்கள் எவருக்கும் டெபாசிட் கிடைக்காது போல இருக்கே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
புடிக்கிறோம், தமிழ்நாட்டுல இருக்க எல்லா தொகுதியிலயும் இருக்க எல்லா பூத்தையும் புடிக்கிறோம். அடுத்த முதல்வர் வடிவேலு. ( எனக்கு திருவையாறு தொகுதிய குடுக்க சொல்லுங்கண்ணே)
//

கொடுக்கச் சொல்லலாம், அண்ணன் வடிவேலுவுக்கு அந்த தொகுதி கொஞ்சம் வீக்காக இருக்கு, நீங்க ஒரு 10 செலவு பண்ணுவிங்களா ?

10 ரூபாய் இல்லை, 10 கோடி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அட நம்ம வேலன் அண்ணாச்சிக்காக ஒரு பூத் என்ன, அவரு தொகுதிக்கு பக்கத்து தொகுதியில கூட இருக்க பூத் எல்லாத்தையும் கேப்சர் பண்ணிடுவோம். கை பரபரங்குது. ரொம்ப நாளு ஆச்சு பூத் கேப்சர் பண்ணி. கலக்கிடுவோம்ணே. நீங்க கவலையேப் படாதீங்க. 2011ல நிதியமைச்சர் நம்ம வடகரை வேலன் அண்ணாச்சி தான்.

9:31 PM, September 25, 2008

//

அண்ணாச்சி நிதி அமைச்சர், உங்களுக்கு மின்சார வாரியம் !

:))

ஓகேயா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நசரேயன் said...
வடிவேலு கட்சி வேட்பாளருக்கு விண்ணப்பம் பண்ண எதாவது குறைந்த பட்ச தகுதிகள் இல்லனா நானும் வேட்பாளருக்கு தயார் :):)
எனக்கு ஒரு விண்ணப்ப பாரம் வேணும் :)

8:40 PM, September 25, 2008
//

இதுவரை 10,000 பேர் 234 தொகுதிக்கு சீட்டு கேட்டு இருக்காங்க, அண்ணன் தகுதி பார்த்து தான் தேர்ந்தெடுப்பார்

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் பிரியன் said...
கோவை போயாவது வடகரை வேலன் அண்ணாச்சிக்கு கள்ள ஓட்டு ஜெயிக்க வைப்போம்ல....

வடிவேலன் முன்னேற்றக் கழகம்

7:19 PM, September 25, 2008
//

அண்ணாச்சி மேல அம்புட்டு பாசமா ? அண்ணாச்சி இதைபடிச்சாருன்னா, அம்புட்டுதான் விம்மி விம்மி அழுவார்

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
வடிவேலு -அப்பா..வேலா .அது யாருப்பா கோவி..உனக்கு ஆதரவா அவ்வளவு பேசறாரு
வேலன்- நம்ம ஆளு தாங்க..சிங்கையிலே இருக்காரு
வடிவெலு-அப்படியா..பிடிச்சுப்போடு..நம்ம நாகை தொகுதி வேட்பாளரா..
(கோவி..தன் திட்டம் நிறைவேறியது கண்டு..மனம் மகிழ்கிறார்)

6:21 PM, September 25, 2008
//

ஐயா,
சரியாகச் சொன்னிங்க, அம்பத்தூர் தொகுதிக்கு வெயிட்டான ஆள் தேடிக் கொண்டு இருக்கார். பெரிய மனது பண்ணி பொறுப்பை ஏற்றுக்கனும்

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
ஹே... பணமரத்துலெ வவ் வாலா ..... எங்க வடகரையாருக்கே சவாலா...

5:19 PM, September 25, 2008
//

தேர்தல் வாசகம் எழுதும் பொறுப்பு உங்களுக்குத்தான். பேனரை இலவசமாக பரிசல் ப்ரிண்ட் பண்ணித்தருவார்

கோவி.கண்ணன் சொன்னது…

//அரசியலுக்கு மருத தாண்ணே ராசி. ஆட்சியப் புடுச்சவுடனே பதவி ஏற்பு விழாவை மெரினால வச்சுக்குவோம் :)

6:15 PM, September 25, 2008
//

அப்படிங்கிறிங்களா, கேப்டன் தொடங்கின அதே இடத்தில் தொடங்கி கேப்டனுக்கு சூடு கொடுக்கனும் சாரி சூளுரைக்கனும்

குடுகுடுப்பை சொன்னது…

நல்ல காலம் பொறக்குது,நல்ல காலம் பொறக்குது,ஜக்கம்மா சொல்றா

குடுகுடுப்பை சொன்னது…

அண்ணன் வடைகறி வேலன் அவர்களே
உங்கள் ஆதரவு எனக்கு தேவை, நீங்கள் வெளியில் இருந்தும் ஆதரவு கொடுக்கலாம். தகுந்த சன்மானம் பின்னூட்டமாக வழங்கப்படும்.இதனை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் வடைகறி...

Sanjai Gandhi சொன்னது…

சும்மா.. சுத்தி சுத்தி கள்ள வோட்டுப் போட தொண்டர் படை ரெடி.. 2 தொகுதிகள்லையும் ஜெயிப்போம்ல.. அண்ணாச்சி வாழ்க! :))

அத்திரி சொன்னது…

அண்ணாச்சியின் சின்னமாக "அல்வா" வை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அண்ணாச்சி நிற்கும் தொகுதியில் தேர்தலுக்கு முன் அல்வாவை இலவசமாக கொடுத்து தேர்தலில் ஜெயித்த பிறகு ஒரு கிலோ அல்வா ஒரு ரூபாய்க்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அல்வாவுக்கு நான் கேரன்டி.

இப்படிக்கு
அகில உலக அண்ணாச்சி முன்னேற்றக் கழகம்
வடகரை ஒன்றியம்.

Robin சொன்னது…

பதிவும் பின்னூட்டங்களும் சேர்ந்து அருமையான நகைச்சுவை விருந்தை அளித்துவிட்டன

ZillionsB சொன்னது…

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்