பின்பற்றுபவர்கள்

16 செப்டம்பர், 2008

விபத்தும், உள்ளுணர்வும் !

எப்போதாவது நானும் நண்பர் பாஸ்கர் என்பவரும் சாமான்கள் வாங்க குட்டி இந்தியாவுக்கு அவரது யமாகா பைக்கில் செல்வது வழக்கம், மற்ற நாட்களில் நான் தனியாகத்தான் செல்வேன். கடந்த ஞாயிறு மதியம் அவரை சந்தித்தபோது மாலை குட்டி இந்தியா போகிறேன் என்றார், நானும் வருகிறேன், 6 மணிக்கு வீட்டுக்கு அருகில் வந்து கைப்பேசியில் அழையுங்கள் என்றேன்.

அதன்படியே வந்தார், வண்டியை எடுத்தார், தலைகவசம் அணிந்து கொண்டோம், இங்கு அது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

"எக்ஸ்பிரஸ்வேயில் போகலாமா ?" - பாஸ்கர்

எனது உள்ளுணர்வு தடுக்கவே....

"மழை பெய்யுதுங்க, சாலை வழுக்கும், எக்ஸ்பிரஸில் 80 கிமி வேகத்துக்கும் குறைவாக போக முடியாது, கட்டுபாடு இருக்காது...அதனால பஸ் போகும் வழக்கமான சாலையிலேயே செல்வோம்..." என்றேன்

"ஏங்க பயப்படுறிங்க...நான் நிதானமாகத்தான் ஓட்டுவேன்...அவசரப்பட மாட்டேன்"

"தெரியுங்க...இரண்டு பேருமே திருமணம் ஆனவங்க..."

"இதுவரையில் ஆக்ஸிடெண்ட் ஆகுற அளவுக்கு நான் ஓட்டியதே இல்லை"

"ம் சரிதான்...விபத்துக்கு காரணம் எப்போதுமே நாமாக இருப்பதில்லை...ஒப்புக் கொள்கிறீர்களா ?"

"வாஸ்தவம் தான்.."

இப்படியே பேசிக் கொண்டே சென்று கொண்டிருந்தோம்

"இந்த வழி கொஞ்சம் சுத்துங்க...நான் தனியாக வந்தால் எக்ஸ்பிரசில் போவேன்"

"மத்த நாளில் எனக்கும் பயமில்லை, மழைவேறு லேசாக தூறிக் கொண்டு இருக்கிறது...அதனால் தான் வழியை மாற்றச் சொன்னேன்"

"இருந்தாலும் ரொம்ப பயப்படுறிங்க..."

"பயம் விபத்து குறித்து அல்ல...எவ்வளவு அடி படும் என்பது குறித்துதான்..நாம் என்னதான் யோசித்து யோசித்து சென்றாலும்...நடக்கனும் இருந்தால் அது நடந்துடும்..."

"இப்படியெல்லாம் சொல்றிங்க..."

"உண்மை தாங்க... அந்த நேரத்தில் அது நடக்கனும் என்று இருந்தால் நடந்துடும்... அதில் ஒரு வினாடி கூட தாமதமே இருக்காது"

அப்போது சிவப்பு விளக்கு வரவே ஒரு சிக்னலில் நின்றோம்,

அடுத்து ஒரு 500 மீட்டர் தொலைவில் சென்று கொண்டு இருக்கும் போது வலது பக்கம் பார்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சிறிய லாரியை திடிரென்று எடுத்தார்கள். கொஞ்சமாக அடுத்த ட்ராக் பக்கம் திருப்பினார், அவ்வளவு தான்

'கிரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்' சத்ததுடன் வண்டி இடது பக்கமாக வழுக்கி சாலையில் சாய அவர் சாய...பின்னால் எதையும் பிடிக்காமல் உட்கார்ந்திருந்த நான் அவர் மீது சாய்ந்து அப்படியே உருள, ஒரு 8 அடி தொலைவுக்கு வண்டி இழுத்துச் சென்றது...கிழே தேய்ந்து கொண்டு செல்லும் போதே 'அடி பலமாக இல்லை... உடனே எழுந்துவிட முடியும்' என்று நினைத்தபடியே உடனே எழுந்துவிட்டேன். அருகில் சென்று கொண்டு இருந்த இந்திய வாலிபர் உடனடியாக உதவிக்கு வந்தார், எனக்கு இடது கால் பெருவிறலுக்கு அருகில் இரு இடங்களில் 1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி அளவுக்கு இரு சிராய்ப்புகள், இடது உள்ளங்கையில் தட்டச்சு செய்யும் போது அழுத்தம் கொடுக்கும் இடத்தில் 1/2 செமீ சிராய்ப்பு, வலது உள்ளங்கையில் லேசான கீரல். 135 வெள்ளி மதிப்புள்ள கைகடிக்காரத்தில் கீரல்கள், அதை அணிந்திருக்காவிட்டால் மணிக்கட்டு தேய்ந்திருக்கும். கொஞ்சமும் பதட்டம் வரவே இல்லை.

நண்பருக்கு விரல் மற்றும் கால் மூட்டு பகுதியில் பல இடங்களில் தோல் பிய்ந்து சிறிது இரத்தம் கொட்டியது. அவருக்கு பேண்ட், சட்டை கிழிந்தே விட்டது. 1 நிமிடத்தில் அவரும் எழுந்துவிட்டார். அவருக்கு பதட்டம் குறையட்டம் என்பதற்காக அங்கேயே ஒரு ஐந்து நிமிடம் நின்று கொண்டுவிட்டு, வண்டியைக் கிளப்பினோம், கிளம்பியது, அதன் பிறகு சாமான்களை வாங்கிக் கொண்டு தான் வீடு திரும்பினோம்.

பதட்டம் குறைந்ததும் சொன்னார்,

"நான் எப்போதும் நிதானமாகத்தான் போவேன், எதுவும் நடக்காது என்றே நினைத்தேன்...நீங்க சொல்வது போல் நடக்கும்னு இருந்தால் நடந்துடும் போல இருக்கு"

"விபத்துக்கு காரணம் நாமாகவே இருப்பது இல்லைங்க அப்படித்தான் நீங்க புரிஞ்சுக்கனும்...ஜோசியம் சொல்வதாக நினைச்சுக்காதிங்க...நம்மல மீறி நடந்துவிட்டால் நடக்க வேண்டி இருந்திருக்கு போல என்று நினைத்துக் கொண்டால் பதட்டமில்லாமல் இருக்கலாம்"

"சரிதான்..."

"இந்த சாலையில் விழுந்ததால் எழுந்தோம், இதுவே எக்ஸ்பிரஸ் சாலை என்றால் ?...பின்னால் வந்தவன் மேலே ஏற்றிட்டு போய் இருப்பான்..."

"நெனச்சாலே பயமாக இருக்கு" என்றார்

"கடைசியில் சிவப்பு விளக்கு விழாமல் இருந்திருந்தாலும் இது நடந்து இருக்காது, முன்னமே அந்த பகுதியை கடந்து இருப்போம்...நேரம் எப்போதும் சரியாகவே செயல்படும்.."

"ரொம்ப சரியாக சொல்றிங்க..."

வீட்டுக்கு வந்த பிறகு தான் இரு வீட்டு அம்மணிகளுக்கும் நாங்கள் விபத்தில் சிக்கியதைச் சொன்னோம்.

ஆறுதலா கிடைக்கும் ? ஹெவி டோஸ் தான்.

என்வீட்டுக்கு அருகில் என்னை இறக்கிவிட்டார், அவருடைய வீட்டுக்குச் சென்று, அதன் பிறகு நண்பர் ஒருவர் துணையுடன் கால் முட்டியில் தையல் போட்டுக் கொண்டு அவருடைய வீட்டுக்கு திரும்பினார். அவருக்கு நான்கு நாள் மருத்துவ விடுப்பு. எனக்கு ? திங்கள் மட்டும் தான்.

மெசேஜ் : பைக்கில் சென்றால் மறக்காமல் தலைகவசம் அணியுங்கள். இரண்டு பேருக்கும் தலையில் அடிபடாமல் தலைகவசம் தான் காப்பாற்றியது. நண்பர் அணிந்திருந்த தலைகவசத்தில் சிராய்புகள் இருந்தன.

68 கருத்துகள்:

கார்க்கிபவா சொன்னது…

அப்படியா? கொஞ்ச நாள் முன்னாடி நீங்க எழுதிய சாமியார் பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே?

உங்கள் நண்பருக்கு குணமானவுடன் சொல்லுங்க... (அதுக்கும் ஒரு பதிவு போடுவிங்கனு பரிசல் சொல்றாருங்க)

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
அப்படியா? கொஞ்ச நாள் முன்னாடி நீங்க எழுதிய சாமியார் பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லையே?
//
சாமியார் தடுத்தார், சாமி மனசுக்குள்ள கால் வலிக்க நின்று கொண்டு சொன்னது என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். உள்ளுணர்வுகள் எல்லோருக்கும் உண்டு. அதை அலட்சியப்படுத்தினால் பதட்டத்தைத்தான் எதிர்நோக்கனும்.

நையாண்டி நைனா சொன்னது…

/* .நேரம் எப்போதும் சரியாகவே செயல்படும்.." */

காலம் எப்போதும் சரியாகவே சொல்லும்.

ஆணி மற்றும் அலுவலக விதிமுறைகள் காரணமாக தலை காட்ட முடியவில்லை.
நீங்களும் உங்கள் நண்பரும் மிக குறைந்த காலத்திலேயே நல்ல சுகம் அடைவீர்கள்.

மீண்டும் எழுத வந்துள்ள அண்ணன் ரத்னேஷ் அவர்களை வணங்கி வரவேற்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
/* .நேரம் எப்போதும் சரியாகவே செயல்படும்.." */

காலம் எப்போதும் சரியாகவே சொல்லும்.

ஆணி மற்றும் அலுவலக விதிமுறைகள் காரணமாக தலை காட்ட முடியவில்லை.
நீங்களும் உங்கள் நண்பரும் மிக குறைந்த காலத்திலேயே நல்ல சுகம் அடைவீர்கள்.//

மிக்க நன்றி நைனா !

//மீண்டும் எழுத வந்துள்ள அண்ணன் ரத்னேஷ் அவர்களை வணங்கி வரவேற்கிறேன்.
//
ரத்னேஷ் அண்ணா குறித்து நம் இருவரின் வேண்டுதல் வீன்போகாது. (அடிக்க வர்றார்.. ஒதுங்கிக் கொள்ளுங்கள்) :))

நையாண்டி நைனா சொன்னது…

ரத்னேஷ் அண்ணா பதிவிலும் இப்பொழுதுதான் பிண்ணூட்டம் போட்டு வந்தேன்.

வெண்பூ சொன்னது…

இதற்கு ஆறுதல் சொல்வதா, அதிர்ஷ்டம் என்பதா என்று தெரியவில்லை. வருத்தமாக இருக்கிறது :(

பெயரில்லா சொன்னது…

உள்ளுணர்வு சொல்வது சில சமயம் லாஜிக்காக இருக்காது. இருந்தாலும் நான் உள்ளுணர்வின் அடிப்படையில் சிலவற்றைத் தவிர்த்து விடுவேன். பெரும்பாலும் நான் எடுத்த முடிவுகள் சரியாகவே இருக்கும்.

இது எல்லோருக்கும் பொதுவானதுதான். இதற்கு கடவுளைக் காரணம் காட்டினால் ஆத்திகன். பகுத்தறிவைக் காரணம் காட்டினால் நாத்திகன். விளைவு ஒன்றே.

நீங்களும் நண்பரும் சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

///வெண்பூ said...
இதற்கு ஆறுதல் சொல்வதா, அதிர்ஷ்டம் என்பதா என்று தெரியவில்லை. வருத்தமாக இருக்கிறது :(
//

தகவலுக்காக எழுதினேன் வேறொன்றும் இல்லை !

அன்புக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
உள்ளுணர்வு சொல்வது சில சமயம் லாஜிக்காக இருக்காது. இருந்தாலும் நான் உள்ளுணர்வின் அடிப்படையில் சிலவற்றைத் தவிர்த்து விடுவேன். பெரும்பாலும் நான் எடுத்த முடிவுகள் சரியாகவே இருக்கும்.//

வடகரை அண்ணாச்சி,

:) என்னளவில் உள்ளுணர்வுகள் சொல்வது எப்போதும் நடந்துவிடும், தவிர்க்க முடியாது.

//நீங்களும் நண்பரும் சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்.//

அன்புக்கு மிக்க நன்றி !

அபி அப்பா சொன்னது…

ஜாக்கிரதையா கொண்டு போன பானைக்கு என்ன ஆச்சு! குசும்பா எல்லாம் உன்னால வந்த வினை. தோ பார் கண்ணு பட்டு போச்சு கோவியாருக்கு!

அன்புடன்
அபிஅப்பா

சின்னப் பையன் சொன்னது…

நீங்களும் நண்பரும் சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்...

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

அதெப்படிங்க காயத்தின் அளவெல்லாம் சொல்றிங்க?

சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்..

குசும்பன் சொன்னது…

அடிப்பட்டு இருந்தாலும் உங்கள் கடமையைக்கு அளவே இல்லை:)))

சீக்கிரம் உங்கள் நண்பர் குணம் அடைய பிராத்தனைகள்.

(அதான் நீங்க நல்லா இருக்கீங்கல்ல அப்புறம் உங்களுக்கு தனியா சொல்லனுமாக்கும்)`

கிரி சொன்னது…

கோவி கண்ணன் கில்லியாச்சே :-)

குசும்பன் சொன்னது…

//1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி//

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு!!!:))

குசும்பன் சொன்னது…

கிரி said...
கோவி கண்ணன் பல்லியாச்சே :-)//

என்ன கிரி இப்படி சொல்லிட்டீங்க கோவியை:(((((

குசும்பன் சொன்னது…

//135 வெள்ளி மதிப்புள்ள கைகடிக்காரத்தில் கீரல்கள், அதை அணிந்திருக்காவிட்டால் மணிக்கட்டு தேய்ந்திருக்கும். கொஞ்சமும் பதட்டம் வரவே இல்லை.//

என்னங்க ஏதோ பஸ் வராதது மாதிரி சொல்றீங்க:)))

135 வெள்ளி!!! தங்கம் எல்லாம் இல்லையா?

குசும்பன் சொன்னது…

//வண்டியைக் கிளப்பினோம், கிளம்பியது, அதன் பிறகு சாமான்களை வாங்கிக் கொண்டு தான் வீடு திரும்பினோம். //

நீங்கதான் கடமை வீரர் ஆச்சே:))))

குசும்பன் சொன்னது…

அபி அப்பா said...
ஜாக்கிரதையா கொண்டு போன பானைக்கு என்ன ஆச்சு! குசும்பா எல்லாம் உன்னால வந்த வினை. தோ பார் கண்ணு பட்டு போச்சு கோவியாருக்கு!
//

தட்டினா உடைய அது என்ன சாதா பானையா? கடம் அது என்னத்த தட்டினாலும் உடையாது:)))

SP.VR. SUBBIAH சொன்னது…

நல்லது. சிறு சிராய்ப்போடு தப்பித்தீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். பெரு நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

குசும்பன் சொன்னது…

உள்ளுனர்வு: அடிப்பட்டு இருக்கேன் என்று போட்டு இருக்கும் பதிவில் கும்மக்கூடாது!!!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அண்ணே, சிராய்ப்பு மற்றும் காயங்கள எல்லாம் யாருண்ணே அளவு எடுத்து குடுத்தது?

உள்ளுணர்வப்பத்திய உங்களோடப் கருத்துக்கள் ரொம்ப சரி. என் உள்ளுணர்வ மீறி செஞ்ச ஒரு விசயத்தால ஒரு பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய அனுபவம் ஒன்று எனக்குள்ளது.

dondu(#11168674346665545885) சொன்னது…

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதில் மகிழ்ச்சி. சீக்கிரம் குணமடைந்து வாருங்கள்.

உள்ளுணர்வை பற்றி கூறியது “அழகிய தமிழ்மகன்” படம் பார்த்த எஃபெக்டை தந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kanchana Radhakrishnan சொன்னது…

உள்ளுணர்வு உண்மை கோவி.சொன்னால் நம்பமாட்டீர்கள்.எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர்..சிலநாட்களாக..நாங்கள் இருவரும்.. சந்திக்கவில்லை.ஒரு நாள் காலை..அவ்ரைப்பற்றியே நினைவாய் இருந்தது..அவரிடம் எப்படியும் இன்று பேசிட வேண்டும் என்று எண்ணியபோது...ஒரு தொலைபேசி அழைப்பு...அந்த நண்பர் ஒரு விபத்தில் மாட்டிக்கொண்டுவிட்டதாக...தகவல் சொன்னது...இதை என்னவென்பது?
நீங்களும்..நண்பரும் முற்றிலும் குணமாக வாழ்த்துக்கள்

na.jothi சொன்னது…

நீங்களும் நண்பரும் பரிபூரண குணமடைய வாழ்த்துக்கள்.

na.jothi சொன்னது…

விவேகானந்தரின் ராஜயோகம் படிசிருகிங்களா
(உள்ளுனர்வுக்காக /மனதை பற்றியது )

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...
ஜாக்கிரதையா கொண்டு போன பானைக்கு என்ன ஆச்சு! குசும்பா எல்லாம் உன்னால வந்த வினை. தோ பார் கண்ணு பட்டு போச்சு கோவியாருக்கு!

அன்புடன்
அபிஅப்பா

5:57 PM, September 16, 2008
//

அபி அப்பா,

அது வெறும் தண்ணிப்பானை தான், இப்ப அதுவும் இல்லை. திருஷ்டி கழிஞ்சுட்டு !
;)

கோவி.கண்ணன் சொன்னது…

//ச்சின்னப் பையன் said...
நீங்களும் நண்பரும் சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்...

5:58 PM, September 16, 2008
//
ச்சின்னப் பையன்,
நான் கிட்டதட்ட சரியாகிட்டேன், காலையில் அலுவலகம் போகும் போது இருந்த கால்வலி, திரும்பும் போது இல்லை.

அன்புக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
அதெப்படிங்க காயத்தின் அளவெல்லாம் சொல்றிங்க?

சீக்கிரம் குணமடைய வாழ்த்துக்கள்..

6:00 PM, September 16, 2008
//

விக்கி,

காலு கையில தானே அடி, கண்ணுல இல்லை !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
அடிப்பட்டு இருந்தாலும் உங்கள் கடமையைக்கு அளவே இல்லை:)))//

ஹலோ, விபத்து நடந்த பிறகு இது 4 ஆவது பதிவு, குறைச்சி மதிப்பிடாதிங்க.

//சீக்கிரம் உங்கள் நண்பர் குணம் அடைய பிராத்தனைகள்.

(அதான் நீங்க நல்லா இருக்கீங்கல்ல அப்புறம் உங்களுக்கு தனியா சொல்லனுமாக்கும்)`
//

அன்புக்கு நன்றி டா !
6:11 PM, September 16, 2008
//

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
கோவி கண்ணன் கில்லியாச்சே :-)

6:11 PM, September 16, 2008
//

கூட வந்தது த்ரிசா இல்லை !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
கிரி said...
கோவி கண்ணன் பல்லியாச்சே :-)//

என்ன கிரி இப்படி சொல்லிட்டீங்க கோவியை:(((((

6:13 PM, September 16, 2008
//

எலேய்...கட் அண்ட் பேஸ்ட் பண்ணறப்ப எப்படி லே எழுத்து மாறும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...

நீங்கதான் கடமை வீரர் ஆச்சே:))))

6:15 PM, September 16, 2008
//

அச்சா அச்சா பகூத் அச்சா !

அதே தான் குசும்பா !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அண்ணே, சிராய்ப்பு மற்றும் காயங்கள எல்லாம் யாருண்ணே அளவு எடுத்து குடுத்தது?

உள்ளுணர்வப்பத்திய உங்களோடப் கருத்துக்கள் ரொம்ப சரி. என் உள்ளுணர்வ மீறி செஞ்ச ஒரு விசயத்தால ஒரு பெரும் பாதிப்புக்கு உள்ளாகிய அனுபவம் ஒன்று எனக்குள்ளது.

6:27 PM, September 16, 2008
//

ஜோசப்,

கண்கெட்ட பிறகு கம்ப்யூட்டர் கேம்ஸ் !
:)
அடுத்தமுறை விழித்துக் கொள்ளுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
get well soon

6:27 PM, September 16, 2008
//

நன்றி தருமி ஐயா. உடல் கிட்டதட்ட சரியாகிவிட்டது

கோவி.கண்ணன் சொன்னது…

//dondu(#11168674346665545885) said...
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதில் மகிழ்ச்சி. சீக்கிரம் குணமடைந்து வாருங்கள்.//

டோண்டு சார், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

//உள்ளுணர்வை பற்றி கூறியது “அழகிய தமிழ்மகன்” படம் பார்த்த எஃபெக்டை தந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

'அழகிய தமிழ்மகனா ?' இது கொல வெறியேத் தான்.
:))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
நல்லது. சிறு சிராய்ப்போடு தப்பித்தீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். பெரு நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

6:18 PM, September 16, 2008
//

சுப்பையா ஐயா,

தங்கள் மூலம் கிடைக்கும் அன்பும் நெகிழ்ச்சியாகவே உள்ளது.

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
உள்ளுணர்வு உண்மை கோவி.சொன்னால் நம்பமாட்டீர்கள்.எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர்..சிலநாட்களாக..நாங்கள் இருவரும்.. சந்திக்கவில்லை.ஒரு நாள் காலை..அவ்ரைப்பற்றியே நினைவாய் இருந்தது..அவரிடம் எப்படியும் இன்று பேசிட வேண்டும் என்று எண்ணியபோது...ஒரு தொலைபேசி அழைப்பு...அந்த நண்பர் ஒரு விபத்தில் மாட்டிக்கொண்டுவிட்டதாக...தகவல் சொன்னது...இதை என்னவென்பது?
நீங்களும்..நண்பரும் முற்றிலும் குணமாக வாழ்த்துக்கள்

7:02 PM, September 16,
//

இராதாகிருஷ்ணன் ஐயா,
உள்ளுணர்வு உணர்வு பகிர்வுக்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா. எனக்கும் இதுபோல் நிறைய நடந்துள்ளது. என் அப்பாவின் மரணம் கூட ஓரளவு முன்கூட்டியே தெரிந்தது. அதுபற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.

புருனோ Bruno சொன்னது…

//, எனக்கு இடது கால் பெருவிறலுக்கு அருகில் இரு இடங்களில் 1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி அளவுக்கு இரு சிராய்ப்புகள், இடது உள்ளங்கையில் தட்டச்சு செய்யும் போது அழுத்தம் கொடுக்கும் இடத்தில் 1/2 செமீ சிராய்ப்பு, வலது உள்ளங்கையில் லேசான கீரல்//

விபத்து பதிவேடுகளில் (Accident Register) குறிப்பிடுவதை போல் தெளிவாக எழுதியுள்ளீர்கள்
--
சீக்கிரமாக குணமடைய வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//smile said...
நீங்களும் நண்பரும் பரிபூரண குணமடைய வாழ்த்துக்கள்.

7:09 PM, September 16, 2008//

வாழ்த்துக்கு மிக்க நன்றி !

// smile said...
விவேகானந்தரின் ராஜயோகம் படிசிருகிங்களா
(உள்ளுனர்வுக்காக /மனதை பற்றியது )//

விவேகநந்தரின்
ஞானயோகம், பக்தியோகம், தியானயோகம், இராஜயோகம்
ஆகியவற்றை பலமுறை படித்து இருக்கிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

குறுகிய காலத்தில் கோவியார் குணமடைய வேண்டும்!

RATHNESH சொன்னது…

அடடா,

இப்போ தான் நானும் விபத்துங்கற தலைப்பில் ஒரு பதிவு போட்டுவிட்டு தமிழ்மணத்தைத் திறந்தேன். நீங்களும் போட்டிருக்கீங்க.

என்னுடைய உள்ளுணர்வு சொல்லவே இல்லை; சொல்லி இருந்தால் அதனைத் தவிர்த்திருப்பேன்.

நலம் என்று அறிவதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

பொதுவாக ஓர் இடத்தில் விபத்து நிகழ்ந்தால் அங்கிருந்து இடப்பெயர்ச்சி இருக்கும்னு சொல்வாங்க. (இடம் பெயர்த்துக் கூட்டிப் போய்த் தான் சிகிச்சை செய்வாங்கன்னு கட் செய்ய முயல வேண்டாம்)

நீங்க சிங்கையில் இருந்து . . .

உங்க எதிர்காலம் என்னை "ரத்னேஷானந்தா" ஆக்குகிறதா என்று பார்ப்போம்.

பரிசல்காரன் சொன்னது…

ஒன்றுமில்லாமல் தப்பித்தது குறித்து மகிழ்ச்சி!

தலைக்கவசம் குறித்து நீங்கள் சொன்னது 100% சரி!

அப்புறம்..

விபத்தை விவரித்த விதம் சுவாரஸ்யம்!

☼ வெயிலான் சொன்னது…

விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் கோவியரே! உங்கள் நண்பர் பாசுகர் உடல்நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

தலைக்கவசம் போட்டுட்டு எப்படி பேசிட்டு போனீங்க? :(

ஜெகதீசன் சொன்னது…

//
பொதுவாக ஓர் இடத்தில் விபத்து நிகழ்ந்தால் அங்கிருந்து இடப்பெயர்ச்சி இருக்கும்னு சொல்வாங்க. (இடம் பெயர்த்துக் கூட்டிப் போய்த் தான் சிகிச்சை செய்வாங்கன்னு கட் செய்ய முயல வேண்டாம்)

நீங்க சிங்கையில் இருந்து . . .

உங்க எதிர்காலம் என்னை "ரத்னேஷானந்தா" ஆக்குகிறதா என்று பார்ப்போம்.
//

ரத்னேஷ் அண்ணா.... எப்படி இதெல்லாம்...
நீங்கள் ரத்னேஷானந்தா தான்....
ஆனால் அவர் இடம் பெயர இன்னும் குறைந்தது 2 மாதமாவது ஆகுமே?

கோவி.கண்ணன் சொன்னது…

//விபத்து பதிவேடுகளில் (Accident Register) குறிப்பிடுவதை போல் தெளிவாக எழுதியுள்ளீர்கள்
--
சீக்கிரமாக குணமடைய வாழ்த்துக்கள்//

டாக்டர் புரூனோ சார்,

தொழில் அடிப்படையில் புள்ளையை சரியாக புரிஞ்சி கோலம் போட்டுவிட்டீர்கள். :)

வாழ்த்துக்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
குறுகிய காலத்தில் கோவியார் குணமடைய வேண்டும்!

8:46 PM, September 16, 2008
//

ஜோதிபாரதி,
எல்லோருடைய நல்ல எண்ணங்களினால் விரைவிலேயே சரியாகிக் கொண்டு இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
அடடா,

இப்போ தான் நானும் விபத்துங்கற தலைப்பில் ஒரு பதிவு போட்டுவிட்டு தமிழ்மணத்தைத் திறந்தேன். நீங்களும் போட்டிருக்கீங்க.//

ரத்னேஷ் அண்ணா,

ஒத்த நிகழ்வு (கோஇன்சிடென்ட்) :)

//என்னுடைய உள்ளுணர்வு சொல்லவே இல்லை; சொல்லி இருந்தால் அதனைத் தவிர்த்திருப்பேன்.//

பதிவிட்டதா ? உங்களுக்கு ஏற்பட்ட விபத்தா ? :)

//நலம் என்று அறிவதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி ! மகிழ்ச்சி !

//பொதுவாக ஓர் இடத்தில் விபத்து நிகழ்ந்தால் அங்கிருந்து இடப்பெயர்ச்சி இருக்கும்னு சொல்வாங்க. (இடம் பெயர்த்துக் கூட்டிப் போய்த் தான் சிகிச்சை செய்வாங்கன்னு கட் செய்ய முயல வேண்டாம்)//

முட்டி இடம் பெயரவில்லை என்பதால் தப்பித்தேன் என்றே சொல்லமுடியும்.

//நீங்க சிங்கையில் இருந்து . . .

உங்க எதிர்காலம் என்னை "ரத்னேஷானந்தா" ஆக்குகிறதா என்று பார்ப்போம்.//

இதிலென்ன சந்தேகம் நீங்கள் தான் (என்னைப்பற்றி) அனைத்தும் அறிந்தவர் ஆயிற்றே !
:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
ஒன்றுமில்லாமல் தப்பித்தது குறித்து மகிழ்ச்சி!

தலைக்கவசம் குறித்து நீங்கள் சொன்னது 100% சரி!//

பரிசல்,
தலைகவசம் பற்றி வலியுறுத்துவது தான் பதிவின் நோக்கம், விபத்து அதுக்கு ஊறுகாய்தான்.

//அப்புறம்..

விபத்தை விவரித்த விதம் சுவாரஸ்யம்!

9:12 PM, September 16, 2008//

காயம் ஆறுவதற்குள் எழுதினால் தானே சுவையார்வம் இருக்கும். :)
//

கோவி.கண்ணன் சொன்னது…

//வெயிலான் said...
விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் கோவியரே! உங்கள் நண்பர் பாசுகர் உடல்நலனையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

தலைக்கவசம் போட்டுட்டு எப்படி பேசிட்டு போனீங்க? :(

9:14 PM, September 16, 2008
//

ரமேஷ்,
வாழ்த்துக்கு நன்றி !

60 கிமி வேகம் வரை செல்லும் போது குறைவான எதிர்காற்று இருந்தால் தலைக்கவசம் போட்டு இருந்தாலும் பேசுவது கேட்கும். ஒருமுறை பரிசலுடன் சென்று சோதித்து பாருங்கள்.
:))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...

ரத்னேஷ் அண்ணா.... எப்படி இதெல்லாம்...
நீங்கள் ரத்னேஷானந்தா தான்....
ஆனால் அவர் இடம் பெயர இன்னும் குறைந்தது 2 மாதமாவது ஆகுமே?

9:38 PM, September 16, 2008//

ஜெகதீசன்,
அலுவலகத்தில் வேலைப்பார்க்காமல் நாளிருபதிவும் பொழுது 100 பின்னூட்டமாக இருந்தால், இடப்பெயர்சிக்கு 2 மாதமெல்லாம் ஆகாது !
:)

முகவை மைந்தன் சொன்னது…

//கிரி said...
கோவி கண்ணன் பல்லியாச்சே :-)//

என்ன கிரி இப்படி சொல்லிட்டீங்க கோவியை:(((((//

அற்புதம். சட்டுனு கலக்கிட்டீங்க! இதையெல்லாம் ஆவ்வி, சூவில போட மாட்டாங்களே.......

//கூட வந்தது த்ரிசா இல்லை !
:)//

:-))))

உள்ளுணர்வப் பத்திச் சொன்னா சோனியா காந்தியும், போன தபா நாம பேசின ESP யும் நினைவுக்கு வருது :-)

////dondu(#11168674346665545885) said...
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதில் மகிழ்ச்சி. சீக்கிரம் குணமடைந்து வாருங்கள்.//

டோண்டு சார், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி !
//

கண்ணியம் மீட்கப் பட்டுள்ளது. மெய்யாலுமே ரெண்டு பேரும் மூத்தப் பதிவர் தாம்பா!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//எப்போதாவது நானும் நண்பர் பாஸ்கர் என்பவரும் சாமான்கள் வாங்க குட்டி இந்தியாவுக்கு அவரது யமாகா பைக்கில் செல்வது வழக்கம்//

எங்க ஊர் பக்கம் யமகா வண்டி பாவிப்பவர்களைப் பார்ப்பது அரிது. யாராவது பைக் வாங்கப் போனால் யமகா வேண்டாம் என்று வீட்டில் உள்ள பெண்கள் சொல்லிவிடுவது வழக்கம். யமகா கம்பெனிக்கு இவர்களால் வியாபாரம் பாதிக்கப் பட்டுவிட்டது.(காரணம் புரியுதா?)

அறிவகம் சொன்னது…

உள்ளுணர்வு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கக்கூடிய உண்மை.

உள்ளுணர்வு தத்துவத்தில் தான் கடவுள், மறுபிறவி, கூடுவிட்டு கூடுபாயும் வித்தை, இன்னும் அத்தனை பிரபஞ்ச ரகசியங்களும் அடங்கிக்கிடக்கிறது.

இருவரும் விரைவில் குணமடைய இறைவனை வணங்கிக்கொள்கிறேன். நன்றி.

Unknown சொன்னது…

சிறிய காயங்கள் தான் என்று அலட்சியப் படுத்த வேண்டாம்.
// இடது கால் பெருவிறலுக்கு அருகில் இரு இடங்களில் 1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி அளவுக்கு இரு சிராய்ப்புகள் //
ஆபத்தான இடங்கள். காயங்கள் ஆற நாட்கள் பிடிக்கலாம். நாள் தவறாமல் தடுப்பூசிகள் எடுத்து வரவும். விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

துளசி கோபால் சொன்னது…

அடக்கடவுளே.......

கவனமா இருங்கப்பா. நமக்கெல்லாம் பெரிய சொத்து என்பதே உடம்புதான்.

உடல்நலம் விரைவில் கிட்டணுமுன்னு 'நம்ம சீனு'கிட்டேதான் அப்ளிகேஷன் போட்டுருக்கேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...

எங்க ஊர் பக்கம் யமகா வண்டி பாவிப்பவர்களைப் பார்ப்பது அரிது. யாராவது பைக் வாங்கப் போனால் யமகா வேண்டாம் என்று வீட்டில் உள்ள பெண்கள் சொல்லிவிடுவது வழக்கம். யமகா கம்பெனிக்கு இவர்களால் வியாபாரம் பாதிக்கப் பட்டுவிட்டது.(காரணம் புரியுதா?)
//

அப்படி ஒரு காரணமும் இருக்கிறதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவகம் said...
உள்ளுணர்வு என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கக்கூடிய உண்மை.

உள்ளுணர்வு தத்துவத்தில் தான் கடவுள், மறுபிறவி, கூடுவிட்டு கூடுபாயும் வித்தை, இன்னும் அத்தனை பிரபஞ்ச ரகசியங்களும் அடங்கிக்கிடக்கிறது.

இருவரும் விரைவில் குணமடைய இறைவனை வணங்கிக்கொள்கிறேன். நன்றி.

11:55 PM, September 16, 2008
//

அறிவகம், தங்கள் அன்புக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
சிறிய காயங்கள் தான் என்று அலட்சியப் படுத்த வேண்டாம்.
// இடது கால் பெருவிறலுக்கு அருகில் இரு இடங்களில் 1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி அளவுக்கு இரு சிராய்ப்புகள் //
ஆபத்தான இடங்கள். காயங்கள் ஆற நாட்கள் பிடிக்கலாம். நாள் தவறாமல் தடுப்பூசிகள் எடுத்து வரவும். விரைவில் குணமடைய வாழ்த்துகள்.

12:56 AM, September 17, 2008
//

இந்த ஊரில் ஊசி எல்லாம் போடமாட்டாங்க, அது பெரிய ஆஸ்பத்திரிகளில் தான், க்ளினிக்கில் வெறும் ஆண்டிபயாடிக் மாத்திரைகள், களிம்புகள் தான்.

தங்கள் கனிவான அன்புக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

முகவை மைந்தன் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அடக்கடவுளே.......

கவனமா இருங்கப்பா. நமக்கெல்லாம் பெரிய சொத்து என்பதே உடம்புதான்.

உடல்நலம் விரைவில் கிட்டணுமுன்னு 'நம்ம சீனு'கிட்டேதான் அப்ளிகேஷன் போட்டுருக்கேன்.

12:37 PM, September 17, 2008
//

துளசியம்மா, என்குறித்தான தங்கள் வேண்டுதலுக்கும் மிக்க நன்றி

மங்களூர் சிவா சொன்னது…

கெட் வெல் சூன்.

மங்களூர் சிவா சொன்னது…

//
//1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி//

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு!!!:))
//

:)))))))

Thamira சொன்னது…

இதைப்போன்ற‌ உள்ளுண‌ர்வை நானும் ப‌ல‌ச‌ம‌ய‌ங்க‌ளில் உண‌ர்ந்திருக்கிறேன். கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ர் நானும் டூ வீல‌ர் ஆக்ஸிடென்டைப்ப‌ற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

மங்களூற் :1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி//
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு!!!:))// ரிப்பீட்டேய்..

சுரேகா.. சொன்னது…

ஒரு குட்டி
FINAL DESTINATION
மாதிரி சொல்லியிருக்கீங்க!

அடேயப்பா!
ஆனா அந்த design உண்மைதானோ?

சுரேகா.. சொன்னது…

உடல் நிலையைப்பார்த்துக்கொள்ளுங்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//சுரேகா.. said...
ஒரு குட்டி
FINAL DESTINATION
மாதிரி சொல்லியிருக்கீங்க!

அடேயப்பா!
ஆனா அந்த design உண்மைதானோ?

10:48 PM, September 25, 2008//

சுரேகா,
நடந்ததைத் தான் எழுதினேன். வேறு கற்பனை எதையும் சேர்க்கவில்லை.

சுரேகா.. said...
உடல் நிலையைப்பார்த்துக்கொள்ளுங்கள்!
//

விசாரிப்புக்கு மிக்க நன்றி, இப்பொழுது வலிகள் இல்லை, காயங்கள் முற்றிலும் சரியாக இன்னும் 2 வாரம் கூட ஆகலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//தாமிரா said...
இதைப்போன்ற‌ உள்ளுண‌ர்வை நானும் ப‌ல‌ச‌ம‌ய‌ங்க‌ளில் உண‌ர்ந்திருக்கிறேன். கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ர் நானும் டூ வீல‌ர் ஆக்ஸிடென்டைப்ப‌ற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்.
//
தாமிரா,
அப்படியா, படிச்சுப் பார்க்கிறேன்.

//மங்களூற் :1 க்கு 1/2 செமீ நீளவாக்கில் இரு இடங்களில் 1 மிமி ஆழத்துக்கு தோல் சிராய்ப்பு, அதே போல் வலது முட்டியில் 2 இடங்களில் வட்டமாகவும், நீள்வட்டமாகவும் 2 செமி//
நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு!!!:))// ரிப்பீட்டேய்..
//

:)))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்