தற்போது தமிழ்மணத்தில் புதிய பதிவர்கள் நிறைய வருகிறார்கள். பல்வேறு தமிழர்கள் தமிழால் ஒன்று கூடுவது ஆரோக்கியமானது தானே. ஒவ்வொருவருக்கும் தத்தம் படித்த, கேட்ட, பிடித்ததைப் பற்றிய
நிலைப்பாடுகளே பதிவில் வெளிப்படும். புதிய பதிவர்களை எளிதில் அடையாளம் காண 'புதியது' என்ற சிவப்பு குறிசொல்லை தமிழ்மணம் அவர்களது இடுகையுடன் இணைத்திருக்கிறது.
அப்படி வருகிறவர்களெல்லாம் புதியவர்களா ? அது ஒருபுறம் இருக்க, புதிய பதிவர்களுக்கு பின்னூட்டமிட்டு ஆதரவளிக்க வேண்டியது பதிவர்கள் கடமைகளில் ஒன்று :) யாருமே பின்னூட்டவில்லை என்றால் நம்ம கருத்து இந்த சபையில் எடுபடாது போல, இங்கே குழுவாக செயல்படுகிறார்கள் என்று நினைத்து 3 இடுகையோடு காணாமல் போய்விடுவார்கள்.
முன்பெல்லாம் புதிய பதிவர்களுக்கு உடனடியாக பின்னூட்டுவேன், தற்போது அவ்வாறு செய்வதில் சற்று தயக்கமாகவே இருக்கிறது. காரணம் வெளிப்படையானது தான்.
வந்திருப்பவர்கள் புதியவர்களா ? அல்லது ஏற்கனவே இணைப்பில் இருப்பவரின் மற்றொரு வலைப்பதிவா ? அல்லது ஏதோ ஒரு பெயரில் வந்து கும்மி அடிக்கும் பிரபல பதிவர்களா என்ற ஐயம் (சந்தேகம்) இருப்பதால் சட்டென்று, அவர்களுக்கு வணக்கம் போட முடிவதில்லை.
புதிய பதிவர்களின் பதிவு எப்படி இருக்கும் ?
* கண்டிப்பாக ஜிகினா வேலை எதுவும் இல்லாத பொதுவான ப்ளாக்கர் டெம்ப்ளேட் வைத்திருப்பார்கள். ரொம்ப அலப்பறையாக இருந்தால் அது பழம் திண்ணு துப்பியவரின் பதிவாகத்தான் இருக்கும்
* புதிய பதிவர்களுக்கு வழக்கமாக பதிவர்கள் பயன்படுத்தும், பின்னூட்டம், மறுமொழி, புதசெவி, சொசெசூ மற்றும் ஏனைய குழூக்குறிச் சொற்கள் தெரிந்திருக்காது
* இதுதான் என் முதல் பதிவு என்றெல்லாம் ஆரம்பிக்க மாட்டார்கள்
* முதல்பதிவில் மூச்சு முட்ட எழுதி இருக்கமாட்டார்கள்
* பெயருக்காக மூன்று இடுகைகள் மட்டுமே இணைத்திருக்க மாட்டார்கள்
* ஏற்கனவே நீண்டகாலமாக பதிவை படித்துவந்திருந்து புதிதாக பதிவு எழுத வந்திருந்தால் மேற்சொன்னவைகளெல்லாம் இல்லாமால் இருக்கும்.
* மெக்கலேய கல்வி முறை, கிறித்துவ மெசினரி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றெல்லாம் புதிய பதிவர்களின் பதிவில் காண்பது அரிது
* பெரியார் தொண்டராக அறிமுகப்படுத்திக் கொள்பவராக இருந்தால் வெறும் பார்பனியம் பற்றி மட்டுமே எழுதமாட்டார்கள். இஸ்லாமியர் பெயர்களில் கிறித்துவர்களை திட்டி எழுதமாட்டார்கள் அதை வைத்தே பதிவுக்காரர் குல்லாவா, கொண்டையா என்று கண்டுபிடித்துவிடலாம்.
* புதிய பதிவர் எவருமே ஆறுமாதத்திற்கு முன்பு நடந்த விவாதங்களைப் மீண்டும் கிளறி எழுதமாட்டார். புதிய பதிவர்களுக்கு அவை நடந்ததே தெரிந்திருக்காது.
* வேர்டு வெரிபிகேசன் வைத்திருப்பார்கள்
* புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால் ரொம்ப மதிப்பு கொடுத்து மறுமொழி இடுவார்கள்
* புதிய பதிவர்கள் ஒரு சிலரின் பின்னூட்டங்கள் சூடான இடுகையில் இடம் பிடிக்கும் லக்கி லுக் போன்றவர்களின் இடுகையில் காணப்படும். தங்கள் பெயரை ஒருசிலராவது படித்து தங்கள் பக்கத்துக்கு வரவேண்டும் என்று விரும்புவார்கள். இதுல எதுவுமே தவறல்ல. புதிதாக எழுதிய போது எனக்கு யாராவது திட்டியாவது பின்னூட்டமிடமாட்டார்களா என்று நினைத்திருக்கிறேன்.
* கமெண்ட் மாடுரேசன் வைத்திருக்க மாட்டார்கள் (அம்பி பின்னூட்டத்தில் தெரிவித்தது)
* அனானி / அதர் ஆப்சன் திறந்து வைத்திருப்பார்கள் (அம்பி பின்னூட்டத்தில் தெரிவித்தது)
இதையெல்லாம் படிச்சுட்டு இதை தவிர்த்துவிட்டு புதிதாக முயற்சிக்கும் பழைய பதிவர்களை எப்படி கண்டுபிடிப்பது ?
வெர்ரி சிம்பிள்...
தலைப்புச் சூடாக வைப்பார்கள், இரண்டு நாளைக்கு ஒருமுறையேனும் சூடான இடுகையில் இடம்பிடிப்பார்கள்.
மேலும் குசும்பன் ஆராய்ச்சியில் கண்டுகொண்டவை இங்கே !
பின்பற்றுபவர்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மதமும் மார்க்கமும் !
எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"
இறைவன் - மதம்
இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !
-கோவியார்
66 கருத்துகள்:
:-)))....
ஆராய்ச்சி முடிவுகள் அருமை!!!
மறந்துட்டேன்....
மீ த பஷ்ட்ட்டூ!!!
அய்யா,
நானும் ஒரு புதிய பதிவருங்கோ !!!.
ஆனா கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் அலப்பரையெல்லாம் பாத்துட்டு வலையுலகிற்கு வந்த
ஏகலைவன் அப்ப்ரசன்டிங்கோவ் !!!
என்னையும் ஆட்டையில சேத்துக்குங்கோ ! ! !
//புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால் ரொம்ப மதிப்பு கொடுத்து மறுமொழி இடுவார்கள்
//
:)))
விடுபட்டவை:
1) அனானி/பிற ஆப்ஷன் வைத்திருப்பார்கள்.
2) கமண்ட் மாட்ரேஷன் செய்திருக்க மாட்டார்கள்
3) பக்கத்து வீட்டு நாய் கக்கா போனதை கூட பதிவிடுவார்கள்.
(வரலாறு மிக முக்யம் கோவி அண்ணா) :)))
//ambi said...
//புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால் ரொம்ப மதிப்பு கொடுத்து மறுமொழி இடுவார்கள்
//
:)))
விடுபட்டவை:
1) அனானி/பிற ஆப்ஷன் வைத்திருப்பார்கள்.
2) கமண்ட் மாட்ரேஷன் செய்திருக்க மாட்டார்கள்
3) பக்கத்து வீட்டு நாய் கக்கா போனதை கூட பதிவிடுவார்கள்.
(வரலாறு மிக முக்யம் கோவி அண்ணா) :)))
3:16 PM, August 20, 2008
//
அம்பி,
இது புதியவர்களை ராகிங் செய்யும் பதிவு இல்லை, பழையவர்களின் ராகிங்க்கு தப்புவது எப்படி என்பதற்கான பதிவு !
:)
நானும் புதிய பதிவர்தானுங்கோ!!
//நல்லதந்தி said...
நானும் புதிய பதிவர்தானுங்கோ!!
3:23 PM, August 20, 2008
//
சொன்னாங்க சொன்னாங்க !
:)
கலக்கல்
:)))))))))
//இளைய பல்லவன் said...
அய்யா,
நானும் ஒரு புதிய பதிவருங்கோ !!!.
ஆனா கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் அலப்பரையெல்லாம் பாத்துட்டு வலையுலகிற்கு வந்த
ஏகலைவன் அப்ப்ரசன்டிங்கோவ் !!!
என்னையும் ஆட்டையில சேத்துக்குங்கோ ! ! !
3:06 PM, August 20, 2008
//
இரண்டு ஆண்டுகளாக படிச்சிட்டு இப்பதான் கை பரபரன்னுச்சா ? நம்பவே முடியலையே, நீங்கள் ஸ்பெசல் !
//விஜய் ஆனந்த் said...
:-)))....
ஆராய்ச்சி முடிவுகள் அருமை!!!
3:00 PM, August 20, 2008
//
முடிஞ்ச அளவுக்கு மொக்கை போடுவோம் !
நல்லதந்தி சார்வாளின் பின்னூட்டம் அருமை!!! :-)
//லக்கிலுக் said...
நல்லதந்தி சார்வாளின் பின்னூட்டம் அருமை!!! :-)
3:33 PM, August 20, 2008
//
அவரு குருவாயூர் பற்றி எழுதுகிறார். விரைவில் அரேபியா பற்றியும் எழுதுவார். எதுகை மோனைக்காகச் சொன்னேன் !
:)
//மங்களூர் சிவா said...
கலக்கல்
:)))))))))
3:25 PM, August 20, 2008
//
நீ என்ன டக்கு டக்குன்னு காணாமல் போய்டுற ? ப்ரியா வீடா ப்ரியா விடா ? :)
வலையுலக அனலிஸ்ட் வாழ்க
இதையெல்லாம் உட்கார்ந்து ஜோசிப்பீங்களோ...
எல்லோரையும் நன்று கூர்ந்து கவனித்திருக்கின்றீர்கள்..
//நானும் ஒரு புதிய பதிவருங்கோ !!!.
ஆனா கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் அலப்பரையெல்லாம் பாத்துட்டு வலையுலகிற்கு வந்த
ஏகலைவன் அப்ப்ரசன்டிங்கோவ் !!!//
என்னோட நிலைமையும் இதேதானுங்கோவ்.ஆனா நான் ஆறு மாசமாதான் மேஞ்சிக்கிட்டு இருக்கிறேன்.சொன்னா நம்புங்க! :)
====
முரளிகண்ணன் said...
வலையுலக அனலிஸ்ட் வாழ்க
3:43 PM, August 20, 2008
====
வாழ்க வாழ்க...
ஆமா, கோவி என்ன சொல்ல வாரீங்க? நான் ரெம்ப நாளா தமிழ்மனம் படிக்கிறேன், அதனுடைய பாதிப்புதான் பல விசயங்கள் தெரியும். நானும் புதிய பதிவர்தான் என்னையும் நம்புங்க... :(( :'( use the java script and identify IP number, then u come to know, who are them... :D
ஆஹா, ஆராய்ச்சியே பண்ணியிருப்பீங்க போலிருக்கே :)
// கோவி.கண்ணன் said...
//லக்கிலுக் said...
நல்லதந்தி சார்வாளின் பின்னூட்டம் அருமை!!! :-)
3:33 PM, August 20, 2008
//
அவரு குருவாயூர் பற்றி எழுதுகிறார். விரைவில் அரேபியா பற்றியும் எழுதுவார். எதுகை மோனைக்காகச் சொன்னேன் !
:)
//
லக்கிலுக்,கோவி.அண்ணனுங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி!. :)
//சொசெசூ//
அப்படின்னா என்னங்க கோவி கண்ணன்
நானும் ஓரளவுக்கு புதுசு தான் 5 மாதம் தான் ஆகிறது....சமீபத்தில் கேட்ட மாதிரி நினைவில்லை
//rajeepan said...
இதையெல்லாம் உட்கார்ந்து ஜோசிப்பீங்களோ...
எல்லோரையும் நன்று கூர்ந்து கவனித்திருக்கின்றீர்கள்..
3:45 PM, August 20, 2008
//
இங்கே எழுதி இருப்பது சரி என்று நினைப்பவர்கள் அனைவருமே இவை தெரியும். இங்கே தொகுப்பாக இருப்பாதால் புதிதானது போன்று தோன்றும் !
கலக்கல்...:))
///கிரி said...
//சொசெசூ//
அப்படின்னா என்னங்க கோவி கண்ணன்
நானும் ஓரளவுக்கு புதுசு தான் 5 மாதம் தான் ஆகிறது....சமீபத்தில் கேட்ட மாதிரி நினைவில்லை
4:07 PM, August 20, 2008
//
சொந்த செலவில் சூனியம் !
// நல்லதந்தி said...
// கோவி.கண்ணன் said...
//லக்கிலுக் said...
நல்லதந்தி சார்வாளின் பின்னூட்டம் அருமை!!! :-)
3:33 PM, August 20, 2008
//
அவரு குருவாயூர் பற்றி எழுதுகிறார். விரைவில் அரேபியா பற்றியும் எழுதுவார். எதுகை மோனைக்காகச் சொன்னேன் !
:)
//
லக்கிலுக்,கோவி.அண்ணனுங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி!. :)
3:59 PM, August 20, 2008
//
சுமமா ராகிங்க் ! ஏன் ரென்சன் ஆகிறிங்க !
//குரங்கு said...
====
முரளிகண்ணன் said...
வலையுலக அனலிஸ்ட் வாழ்க
3:43 PM, August 20, 2008
====
வாழ்க வாழ்க...
ஆமா, கோவி என்ன சொல்ல வாரீங்க? நான் ரெம்ப நாளா தமிழ்மனம் படிக்கிறேன், அதனுடைய பாதிப்புதான் பல விசயங்கள் தெரியும். நானும் புதிய பதிவர்தான் என்னையும் நம்புங்க... :(( :'(
use the java script and identify IP number, then u come to know, who are them... :D
3:59 PM, August 20, 2008
//
ஆளைத்தெரிந்தாலே போதும் வாலைப்பிடிச்சு என்ன செய்யப் போறோம் !
:)
அதனால் ஐபி ஆராய்ச்சியெல்லாம் செய்வது இல்லை !
பின்னூட்டம், மறுமொழி, புதசெவி,இதெல்லாம் தெரியும். சொசெசூ இது என்ன? (அப்படியே சூடான தலைப்பு என்றால் என்ன என்பதையும் சொல்லிவிடவும்)
அட அதுக்குள்ள கிரி ஊடால பூந்து இதே கேள்விய கேட்டு, பதிலும் வாங்கிட்டாரே..சே.!
யார் யாரைச் சொல்ல வர்றீங்கன்னு சொல்லீட்டிங்கன்னா நல்லா இருக்கும் :)
ஹை கும்மிக்குத் திறந்து விட்டிருக்கீங்களா வீட்டை??
சில பேர் நாலஞ்சு மாசம் பதிவைப் படிச்சிட்டு அதுக்கப்புறம் பதிவு எழுத வாராங்களே?
நானும் அப்படித்தான் வந்தேண் :)
நான் பதிவெழுத வந்த போது இருந்த பிரபல பதிவர்கள் நிறையபேர் இப்போ எழுதுவதில்லை. அவுங்களாம் புதுப்பேர்ல எழுதுறாங்கன்னு சொல்ல வரீங்களா? :P
டாக்டர்.கோவி கண்ணன்!
ஆர்வத்தில் ஒரு நாளைக்கு மூன்று பதிவு கூட போடுவார்கள் என்றும் சொல்லாம்:))
(ஆனா நீங்க 4 பதிவு போடுவதால் அதில் வரமாட்டீங்க:)))
குழுவாகப் பதிவர்கள் செயல்படுவது புதியவர்களை யோசிக்க வைக்கும் என்றாலும், கொஞ்சநாளில் அவுங்களும் ஒரு குழுவில் அல்லது புதுக்குழுவில் சேர்ந்துவிடுகிறார்கள் ;)
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா வேலை இருக்கு சாமி வரேன் பை :)
இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டத்திற்கு முதலில் மன்னிக்கவும்.
உங்களது "சிந்தனை" குறித்தானதொரு இடுகை தமிழ்மணத்தில் தெரிகிறது, ஆனால் சுட்டினால் உங்கள் பதிவிற்குச் செல்லவில்லை. ஆனால், கூகுள் வாசிப்பானில் (ரீடருக்கு இது இணையான வார்த்தையா..??) முழுதும் வாசிக்க முடிகிறது,மீண்டும் உங்கள் பதிவுப் பக்கத்தில் அப்படியொரு இடுகையே காணவில்லை.
என்னுடைய browser ல் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறா, அல்லது வேறு ஏதேனும் காரணமா?
//கையேடு said...
இடுகைக்குத் தொடர்பில்லாத பின்னூட்டத்திற்கு முதலில் மன்னிக்கவும்.
உங்களது "சிந்தனை" குறித்தானதொரு இடுகை தமிழ்மணத்தில் தெரிகிறது, ஆனால் சுட்டினால் உங்கள் பதிவிற்குச் செல்லவில்லை. ஆனால், கூகுள் வாசிப்பானில் (ரீடருக்கு இது இணையான வார்த்தையா..??) முழுதும் வாசிக்க முடிகிறது,மீண்டும் உங்கள் பதிவுப் பக்கத்தில் அப்படியொரு இடுகையே காணவில்லை.
என்னுடைய browser ல் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறா, அல்லது வேறு ஏதேனும் காரணமா?
5:00 PM, August 20, 2008
//
கையேடு,
'சிந்தனை'ப் பதிவு கொஞ்சம் நீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீநீளமாக போய்விட்டது அதனால் சரி செய்வதற்காக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறேன்.
கூகுள் ரீடருக்கு தமிழில் கூகுள் செய்திஓடை என்பார்கள். உங்கள் உளாவியில் (பிரவுசர்) குறை எதுவும் இல்லை.
//பொன்வண்டு said...
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா வேலை இருக்கு சாமி வரேன் பை :)
//
மாடுரேசன் எடுத்துவிட்டால் என்ன ஒரு மகிழ்ச்சி.....!
மிக்க நன்றி பொன்வண்டு அவர்களே !
//பொன்வண்டு said...
நான் பதிவெழுத வந்த போது இருந்த பிரபல பதிவர்கள் நிறையபேர் இப்போ எழுதுவதில்லை. அவுங்களாம் புதுப்பேர்ல எழுதுறாங்கன்னு சொல்ல வரீங்களா? :P
4:28 PM, August 20, 2008
//
பொன்வண்டு !
இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம், எனக்கு உறுதியாகத் தெரிந்தது ரத்னேஷ் எழுதுவதில்லை.
//பொன்வண்டு said...
சில பேர் நாலஞ்சு மாசம் பதிவைப் படிச்சிட்டு அதுக்கப்புறம் பதிவு எழுத வாராங்களே?
நானும் அப்படித்தான் வந்தேண் :)
4:27 PM, August 20, 2008
//
ம் அதையும் சொல்லி இருக்கிறேன்
"* ஏற்கனவே நீண்டகாலமாக பதிவை படித்துவந்திருந்து புதிதாக பதிவு எழுத வந்திருந்தால் மேற்சொன்னவைகளெல்லாம் இல்லாமால் இருக்கும்."
//தாமிரா said...
அட அதுக்குள்ள கிரி ஊடால பூந்து இதே கேள்விய கேட்டு, பதிலும் வாங்கிட்டாரே..சே.!
4:23 PM, August 20, 2008
//
அவர் யாரோட ரசிகரு, சுறுசுறுப்பு இருக்காதா பின்னே !
//முரளிகண்ணன் said...
வலையுலக அனலிஸ்ட் வாழ்க
3:43 PM, August 20, 2008
//
வேணாம் அழுதுடுவேன் !
//குசும்பன் said...
டாக்டர்.கோவி கண்ணன்!
4:30 PM, August 20, 2008
//
அப்போ இந்த இடுகை 'ஆப்பு'ரேசனா ?
//பொன்வண்டு said...
யார் யாரைச் சொல்ல வர்றீங்கன்னு சொல்லீட்டிங்கன்னா நல்லா இருக்கும் :)
4:25 PM, August 20, 2008
//
படிச்சா அனுபவிக்கனும், ஆராயக் கூடாது !
:)
// நிஜமா நல்லவன் said...
கலக்கல்...:))
4:18 PM, August 20, 2008
//
வாங்கோ, வாங்கோ !
//
புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால் ரொம்ப மதிப்பு கொடுத்து மறுமொழி இடுவார்கள்
//
நீங்களும் புதிய பதிவரா??
//புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால் ரொம்ப மதிப்பு கொடுத்து மறுமொழி இடுவார்கள்//
:-))))))))))))))))
//3) பக்கத்து வீட்டு நாய் கக்கா போனதை கூட பதிவிடுவார்கள். //
அப்படியா? நான் புதிய பதிவர்:-)))))
I want to invite "senior and junior blogers" to "Kalaiyagam".
http://kalaiy.blogspot.com
ஓ...கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கோனும் போல
கோவி.கண்ணன் said...
//இளைய பல்லவன் said...
//
இரண்டு ஆண்டுகளாக படிச்சிட்டு இப்பதான் கை பரபரன்னுச்சா ? நம்பவே முடியலையே, நீங்கள் ஸ்பெசல் !
==
ஆமாங்க.
என்ன செய்யறது. இப்பதான் தெகிரியம் வந்திருக்கு.
நான் பட்ட கஷ்டம் மத்த புதுப்பதிவர்கள் படக்கூடாதுன்னுட்டு, பு ப ச ஆரம்பிக்கலாமின்னு இருக்கேன்.
எல்லாம் நீங்க போட்ட கோடுதான். ரோடு போட முயற்சி பண்றேன்.
அப்படியே என் வலைப்பூவுக்கும் வாங்க
ஒரு நாளுக்கு நாலு பதிவு போட்டுவிட்டு காணாமல் போய்விட்ட பிரபல சிங்கப்பூர் வலைப்பதிவரை சிங்கப்பூர் குட்டி இந்தியப் பகுதியான தேக்காவில் கண்டுபிடித்தேன்.
அவர் யார்?
>
>
>
>
>
திரு கோவி.கண்ணன் அவர்கள்தான்.
சரியான யோசனை. எப்படி யோசிப்பீர்கள்?
புதிய வலைப்பதிவர்கள் மதித்து பின்னூட்டத்திற்கு பதில் எழுதுகிறார்கள். நான் புதிய பதிவர். எனக்கு எடுத்துக்கொண்டால் சரி. உங்களுக்குமா? நீங்கள் மூத்த பதிவராச்சே.
அன்புடன்,
ஜோதிபாரதி.
புதிய பதிவர எதுக்கு அடையாளம் கண்டுபுடிக்கணும் ? அவங்கள ஊக்குவிக்கவா ?
நான் புதிய பதிவரா ? பழைய பதிவரா ? கண்டுபுடிச்சி சொல்லுங்க பாக்கலாம்.
புதிய பதிவர எதுக்கு அடையாளம் கண்டுபுடிக்கணும் ? அவங்கள ஊக்குவிக்கவா ?
நான் புதிய பதிவரா ? பழைய பதிவரா ? கண்டுபுடிச்சி சொல்லுங்க பாக்கலாம்.
நான் புதுசா இல்ல பழசா???
/// அவனும் அவளும் said...
புதிய பதிவர எதுக்கு அடையாளம் கண்டுபுடிக்கணும் ? அவங்கள ஊக்குவிக்கவா ?///
நீங்க எது ஊக்கு விக்கணும் ??
ஊக்கு வாங்கிட்டீங்களா ??
இல்ல ஊக்கு பிஸினஸா??
டாக்டர் கோவி
என்னங்க ஒரே ஆப்பரேசன் ரிசர்ச்சா இருக்கு.
பல புதிய பதிவர்கள் கருப்பு பேக்ரவுண்டில் சிகப்பு எழுத்துகளோட(கண்ணை வலிக்கவைக்கிறமாதிரி) வரும்போதே டெம்ப்ளேட் ல விளையாண்டுகிட்டே வராங்களே அவங்களை என்ன சொல்லறது..?
நான் கூட புதுசா பதிவு போட்டிருக்கிறேன். வந்து பாருங்கள்.
//புதிய பதிவர்களுக்கு வழக்கமாக பதிவர்கள் பயன்படுத்தும், பின்னூட்டம், மறுமொழி, புதசெவி, சொசெசூ மற்றும் ஏனைய குழூக்குறிச் சொற்கள் தெரிந்திருக்காது///
//இளைய பல்லவன் said...
அய்யா, நானும் ஒரு புதிய பதிவருங்கோ !!!.
ஆனா கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் அலப்பரையெல்லாம் பாத்துட்டு வலையுலகிற்கு வந்த ஏகலைவன் அப்ப்ரசன்டிங்கோவ் !!!
என்னையும் ஆட்டையில சேத்துக்குங்கோ ! ! !
கோவி.கண்ணன் said...
3:06 PM, August 20, 2008
//
இரண்டு ஆண்டுகளாக படிச்சிட்டு இப்பதான் கை பரபரன்னுச்சா ? நம்பவே முடியலையே, நீங்கள் ஸ்பெசல் !////
நானும் அப்படிதான்... நான் நான்கு வருடங்களுக்கு மேலாக....( உ ம் -- இன்னும் துல்லியமாக ஞாபகம் இருக்கிறது ..ஒரு மூத்த பதிவரின் அப்துல்கலாம் கடித்ததை மற்றொருவர் "உல்டா" பண்ண தமிழ்மணமே அல்லோகலபட்டது .....தமிழ்மணத்தின் "பழைய" பழைய வடிவம் ..இன்னும் இப்படி பல.... )
//ஏனைய குழூக்குறிச் சொற்கள் தெரிந்திருக்காது///
இது எல்லாம் அத்துபடி.. :-)
//இங்கே குழுவாக செயல்படுகிறார்கள் என்று நினைத்து//
இது.... இதேதான்...
பொதுவாக "sensitive mind" உள்ளவர்களுக்கு வலையுலகம் மன நிம்மதியயும் மகிழ்ச்சியும் தருவது குறைவு என்பது என்னுடைய கருத்து.....
(ஜாதி, மத, இன பழிப்புகள் , தனி நபர் தாக்குதல், எருது - புண் - காக்கை போல ஒருசிலரை ஒரு சிலர் காரணம் இல்லாமல் தொடர்ந்து எள்ளி நகையாடும் போக்கு.. இன்னும் பிற . )
மதுரை பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு நடந்தபோது மிக வருந்தி ஒருசில பதிவுகளில் பின்னூட்டம் இட்டதும்...அண்ணன் இளவஞ்சி அவர்களுக்கு ஓரிரு முறை மின்னஞ்சல் அனுப்பியதொடு சரி ..... :-)
ஐயா லதானந்த் அவர்களின் பரிசல்கரான் கடித்ததை படித்த போது அவர் சொன்னது மிக சரி என பட்டது..காரணம் ...நான் சிலநாட்கள் "ஆணிகூட பிடுங்காமல்" இங்கே இருந்ததுண்டு ....எழுத ஆரம்பித்தால்... :-) :-)
ஆரம்பித்த வலைபூ அப்படியே இருக்கிறது ...பார்க்கலாம்...எதற்கும் ஒரு நேரம் வர வேண்டுமோ?
இதை பலமுறை சொல்ல வேண்டும் என நினைத்திருந்தேன்...சொல்லிவிட்டேன்..
பதிவிற்கு சிறிது தொடர்பு இல்லாத பின்னூட்டதிற்கு மன்னிக்கவும் ...நன்றி :-)
//புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால் ரொம்ப மதிப்பு கொடுத்து மறுமொழி இடுவார்கள்//
நான் புதுசுதான்!
////புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போட்டால் ரொம்ப மதிப்பு கொடுத்து மறுமொழி இடுவார்கள்////
நீங்களும் புதுசுதான்!
தலைப்பு “புதிய பெயரில் எழுதும் பழைய பதிவர்களை அடையாளம் காண்பது எப்படி” என்று இருந்தால் பொருத்தமாக இருக்கும்
புது பதிவரை ஊக்குவிக்க எல்லாம் தேவை இல்லை, நாங்களே ஊக்கமா தான் இருக்கோம், ராகிங் பண்ணாமல் இருந்தால் நல்லா இருக்கும்.
நானும் புதிய பதிவர் தான் :-)
மறுபடியும் எழுத ஆரம்பிச்சி ரெண்டு மாசம் தான் ஆகுது :)
/* வேர்டு வெரிபிகேசன் வைத்திருப்பார்கள்/
அப்படின்னா தள நாமக்கல் சிபி புதிய பதிவரா?( அவர் நயன் தாராவுக்காக திறந்திருக்கும் வலைப்பூவில் வேர்டு வெரிபிகேசன் வைத்திருக்கிறார்)
ஃஆனா நான் ஆறு மாசமாதான் மேஞ்சிக்கிட்டு இருக்கிறேன்.சொன்னா நம்புங்க! :)ஃஃ
மீ டு...
:)))))
கருத்துரையிடுக