பின்பற்றுபவர்கள்

5 செப்டம்பர், 2008

போனால் மயிராப் போச்சு ... ?

மயிறுதானேன்னு தாழ்வாக நினைக்கிறோம், கர்ணன் கவசகுண்டலத்தோடு பிறந்தான் என்ற கதைப் போல பிறக்கும் போது தலைத் தப்புவதற்கான சிறிய பாதுகாப்பு கவசமாகவே மயிருடன் தான் பிறக்கிறோம், பின்னாளில் பருவ வயதிற்கு ஏற்றார் போல, பருவத்தின் புற அடையாளமாகவே உடலில் பல பாகங்களிலும் மயிர்கள் தோன்றி வளர்கின்றன.

மயிர்வளரும் இடங்கள் ஆண் / பெண் இருபாலருக்கும் பொதுவில் என்றாலும், ஆண்களுக்கான முக அடையாளத்தை வழங்குவது மயிர்கள் தான். முகங்களில், மார்பு பகுதிகளில் வளரும் மயிர்கள் ஆண்களுக்கு மிகுந்த அளவில் சுரக்கும் ஆண்டோரோஜன் எனப்படும் ஆண் தன்மைக்கான சுரப்பிகளின் செயல்பாடுகளைப் பொருத்தே இருக்கிறது. இது கூடுதல் குறைவாக இருக்கும் இருபாலருக்கும் அதன் விளைவுகளாக அந்த பகுதிகளில் இருக்கும் மயிர்களின் எண்ணிக்கை / அடர்த்தி இருக்கும்... தெரிஞ்சது தானே.

மனிதன், விலங்குகள், பறவை இனங்களுக்கு மிகுந்த அளவிலும், பூச்சி இனங்களுக்கு அரிதாகவும் மயிர்கள் உடல்களில் இருக்கின்றன. உடலில் உள்ள மயிர்கள் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் கருவியாகவும்செயல்படுகின்றன. பெரும் வியப்பு, கடும் குளிர் போன்ற நேரங்களில் மயிர்கள் நேராக நின்று கொள்ளும் அதனைத் தானே மயிர்கூச்செரிதல் என்று சொல்லுவோம்

உடல் உறுப்புக்கள் தவிர்த்து மயிர்களால் மனிதனுக்கான நேரடி பயன் எதுவும் இல்லை என்ற கருதியதால், மனித இனம் தேவைப்படும் போது மழித்துக் கொள்ளவும், தனது தோற்றத்தை மாற்றிக் கொள்ளவதற்கான பயனாக மாற்றிக் கொண்டுள்ளனர். பண்டைய எகிப்து நாட்டில் தலைகளை எப்போதும் மொட்டையடித்துக் கொண்டே இருப்பார்களாம், சென்ற நூற்றாண்டு வரை இந்திய ஆண்கள் பெண்களைப் போலவே நீளமாக மயிர்களை வளர்த்து கொண்டை முடிந்து வந்திருக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும் அல்லவா. அதற்கு காரணம் இன்றைய மழிக்கும் முறைகளைப் போல் அல்லாமல் முடிகளை அடிக்கடி மாற்றி அமைத்துக் கொள்வதற்கான சாதனங்கள் குறைவாக இருந்திருக்க வேண்டும். முடித்திருந்தம் என்பவை இந்த நூற்றாண்டில் அழகுக் கலைகளில் ஒன்றாகவே பெரும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. மதப் பழக்க வழங்கங்களில் ஒன்றாக யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மறைவிட மயிர்களை அவ்வப்போது மழித்துக் கொள்வர். நகமும், மயிரும் வெட்டுவதற்காகவும், வெட்டினாலும் வளரக்கூடியது தானே. நவநாகரீக உலகில் பருவமடைந்தவர்கள் அனைவருக்குமே சுகாதாரத்திற்காக அவற்றை அவ்வப்போது அகற்றிக் கொள்ள வழியுறுத்தப்படுகின்றன.

ஒருவரின் தோற்றம் குறிப்பாக ஆண்களின் தோற்றத்தில் தலைமயிர்களின் பங்கு இன்றைய அழகுணர்வில் ஒன்றிப் போய் இருப்பதால் தானே, சூரியனுக்கு தலைகாட்டும் ஆண்கள் புலம்புகிறார்கள் ? எனது நண்பர்கள் சிலருக்கு 25க்குள் திருமணம் விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டு நடந்திருக்கிறது, காரணம் அவர்கள் தலைகளில் முடிகளின் எண்ணிக்கை விரைவாக குறைய ஆரம்பித்தே. மனித இயற்கை அமைபின் படி 50 வயதுக்கு மேல் பாரம்பரிய தன்மையினால் வழுக்கை இருந்தால் வழுக்கை விழுவே செய்யும் அது இயற்கைதான், அதற்காக புலம்புவது, மன உளைச்சல் அடைவது தேவையற்றது. வழுக்கையும், நரை போன்று பொதுவான முதுமைக்குள் நாம் செல்வதற்கான அறிகுறிதான். இளம் நரை, இளம் வழுக்கை எல்லாம் உடலியலில் உள்ள சிறு குறைப்பாட்டினால் ஏற்படுபவை. அதற்கான மாற்று சிகிச்சை முறைகள் இருப்பதாக விளம்பரப்படுத்தப்பாட்டாலும் 100 விழுக்காட்டு நிவாரணம் என்பது இதுவரை நிரூபிக்கப்படாத ஒன்று.


சாக்லேட்களில் மனித மயிர்களைச் சேர்க்கிறார்கள் என்று படித்தேன், அதன் பிறகு சாக்லேட் சாப்பிடும் போதெல்லாம் சுவையுடன் சேர்த்து நாக்கில் எதோ தட்டுப்படுவது போலவே உணர்க்கிறேன் :)

மயிர் பாதுக்காப்பு, மயிர் அழுகு இவற்றிற்காக வளர்ந்துள்ள தொழில் நுட்பங்கள், அதற்கான நிறுவனங்கள் உலக அளவில் நல்ல லாபம் ஈட்டும் பெரிய தொழில்களாகவே வளர்ந்து நிற்கின்றன. உணவு, உடை அடுத்து மயிர் பராமரிப்புக்குத்தான் தனிமனிதனின் செலவிடப்படுகின்றன. தன்னிடம் உள்ள ஒன்றை விருப்பம் போல் மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்றால் அது மயிர்தானே.

தமிழ், இந்திய சூழலில் பெண்களின் கூந்தலைப் புகழாத கவிஞனே இல்லை என்னும் அளவுக்கு பெண்களின் அழகில் மயிர்கள் முதன்மை பங்காற்றி வருவதாகவே கருதுகிறார்கள். இன்றும் கூட தலை அழகை சீர்குலைத்தால் பெண்களின் பால் உணர்வுகள் கட்டுபடும் என்றோ, அல்லது பிறரின் காமப் பார்வையிலிருந்து தப்புவாள் என்பதற்காக பார்பனர் மட்டுமல்லாது பல்வேறு பிரிவினரிடையே இருக்கும் மூடப்பழக்கத்தில் ஒன்றாக கணவனை இழந்த பெண்டீர்களுக்கு தலை மொட்டையடிக்கப்படும் கொடுமை அங்கங்கே இழைக்கப்படுகிறது. அந்த பெண்களுக்கு தலை மயிரை மழிப்பதனால், கணவனை இழந்த பிறகு எல்லாவற்றிற்கும் தீர்வாக அமையும் என்று நினைப்பது மூட நம்பிக்கை தானே.

சிங்கம் சிங்கிளாக வந்தாலும் அதற்கு பிடறியில் இருக்கும் கூட்டமான மயிரோடு வந்தால் தான் பெருமிதமான தோற்றமே கிடைக்கும்.

அவரவர் தாய்மொழியில் இருக்கும் சொல்லைப் பயன்படுத்துவதில் என்ன குறையோ, உதிர்ந்த மயிருக்கும் இருக்கும் அதே மதிப்பைத் தான் 'மயிர்' என்ற சொல்லுக்கும் கொடுத்து, அதனை மொழியில், பேச்சில் பயன்படுத்துவதையே இழிவாகவும் தாழ்வாகவும் நினைக்கின்றோம், மயிர் என்று எழுத தயங்கி அங்கெல்லாம் ரோமம் (வடமொழி) அல்லது முடி (கொண்டை முடிதல் என்ற சொல்லின் சுருக்கம்) என்று எழுதுவும் சொல்வதும் நாகரீகம் என்று நினைக்கின்றனர், ஆங்கிலத்தில் கூட நாளடைவில் அறுவெறுப்பாக கருதப்படும் சொற்பரிணாமத்தில் ஒன்றாக லெட்ரீன் > பாத்ரூம் > டாய்லெட் > தற்பொழுது ரெஸ்ட் ரூம் என்று கழிவறைக்குச் சொல் வரையப்படுகிறது. மயிர் என்ற சொல் அருவருப்பானதாக எனக்கு படவில்லை. மயில்களின் வண்ண மயிர்களின் தொகுப்பைத் தானே தோகை என்கிறோம்.

கோவிலுக்கு மயிரைக் காணிக்கையாக்குவதன் மறைமுகக் காரணம் என்னவாக இருக்கும் ? வேண்டுதல் நிறைவேற்றியதற்காக நான் அழகானவன்(ள்) என்பதை உன் பொருட்டு தற்காலிகமாக இழக்கிறேன்... சுறுக்கமாக வேண்டுதல் பொருட்டு தனக்கு முடியினால் கிடைக்கும் அழகை கடவுளுக்காக துறப்பது. இதைத் தவிர வேறு விளக்கம் இருந்தால் சொல்லுங்க.

போனல் மயிராப் போச்சு ... ! என்று மயிர்களை இழிவின் அடையாளம் போல் அதனை பழிப்பு பழமொழியில் பயன்படுத்துகிறோம். மயிர் போனவர்கள் அதனை ஈடுகட்ட, சீர்செய்ய செலவிடப் படும் பணம் உலக பொருளாதாரத்தில் முதன்மை பங்காற்றுகிறது என்பதையும் உணருவோம்.

உடல் வெளுப்பாக இருந்தாலும் மயிர் கருப்பாக இருப்பதைத் தானே அனைவரும் விரும்புகிறார்கள், முடி வெளுக்க ஆரம்பிக்கும் போது மன அளவில் தாக்கம் ஏற்படாதவர்கள் மிகக் குறைவே.

நல்லது... மயிரை பற்றி எழுதினால் அதன் தொடர்புடைய தகவல்கள் மயிரைப் போலவே வளர்ந்து கொண்டே செல்லும். படிப்பவர்கள் அங்கங்கே வெட்டிவிடுவார்கள். ஒரு அளவோடு நிறுத்திக் கொள்கிறேன் :)

24 கருத்துகள்:

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

ஓய்வுக்கு பிறகு மீண்டும் பதிவெழுதியிருக்கும் அண்ணணை வாழ்த்தி வரவேற்கிறோம்.

எல்லாம் சரி, ஓய்வுன்னு சொல்லிட்டு போயி, வீட்ட கூட்டி சுத்தம் செஞ்சீங்களா? சிங்கப்பூர்ல எந்த வீட்ட கூட்டிப்பெருக்குனாலும் மயிர்தான் 80% குப்பையா இருக்கும். அதோட தாக்கம்தான் இந்த பதிவா?

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
ஜெகதீசன் சொன்னது…

நல்ல ஆராய்ச்சி...
ரெம்பத் தேவை!

Unknown சொன்னது…

1.If there is no hair all the shaving shop owners will sufer.
2.Coconut cultivatig formars will sufer
3.In wine shop hair is a Alternate Sidish for those who drink Alchohol(They will get smell of hair and Drink) Traditional

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
ஓய்வுக்கு பிறகு மீண்டும் பதிவெழுதியிருக்கும் அண்ணணை வாழ்த்தி வரவேற்கிறோம். //

வாழ்த்துக்கு நன்றி !

//எல்லாம் சரி, ஓய்வுன்னு சொல்லிட்டு போயி, வீட்ட கூட்டி சுத்தம் செஞ்சீங்களா? சிங்கப்பூர்ல எந்த வீட்ட கூட்டிப்பெருக்குனாலும் மயிர்தான் 80% குப்பையா இருக்கும். அதோட தாக்கம்தான் இந்த பதிவா?

10:28 AM, September 05, 2008
//

நீங்க எழுதியதுதான் நினைவே வருகிறது. ஏன் இப்படி ?

நான் ஒரு முறை பாயாலேபர் பகுதியில் பேச்சிலராக தங்கி இருந்த நண்பர்கள் வீட்டுக்குச் சென்றேன், சலூன் கடை போலவே தரையெங்கும் முடிகள், தினமும் இப்படி ஆகிவிடுகிறது என்று படுகூலாக சொல்கிறார்கள், எப்படி என்பது புரியாத புதிர் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
நல்ல ஆராய்ச்சி...
ரெம்பத் தேவை!

10:38 AM, September 05, 2008
///

தேவையா ? இங்கே செல்லவும், சிங்கையில் இதுதான் பேமஸ் சலூ(ச)ன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//Ram said...
1.If there is no hair all the shaving shop owners will sufer.
2.Coconut cultivatig formars will sufer//

ராம்ஸ்,

சரி உன்னால் அந்த பலன்கள் அவர்களுக்கு கிடைக்கிறதா ?
:)

//
3.In wine shop hair is a Alternate Sidish for those who drink Alchohol(They will get smell of hair and Drink) Traditional

10:41 AM, September 05, 2008
//

தொட்டுக்கொள்ளாதா...சாரி கேள்விப்படாத புதுச் செய்தி...

விஜய் ஆனந்த் சொன்னது…

// ஜோசப் பால்ராஜ் said...
வீட்ட கூட்டி சுத்தம் செஞ்சீங்களா? சிங்கப்பூர்ல எந்த வீட்ட கூட்டிப்பெருக்குனாலும் மயிர்தான் 80% குப்பையா இருக்கும். அதோட தாக்கம்தான் இந்த பதிவா? //

எனக்கும் இதே டவுட்ட்டு மைல்டா வந்தது...ஆனா அண்ணன் வாரக்கடைசிலதான் வீட்ட சுத்தம் பண்ணுவாராம்...நேத்து இல்லியாம்...

துளசி கோபால் சொன்னது…

பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளுக்கும் தலையில் மயிர் இருப்பதில்லை. வெள்ளைக்காரக் குழந்தைகளைப் பார்க்கணும். அதனாலேயே இங்குள்ள மருத்துவமனையில் நம்ம ஆட்கள் குழந்தைகளை ஆச்சரியமாப் பார்க்கிறாங்க.

அது இருக்கட்டும். இந்தப் பதிவை எழுத உங்களைவிடப் பொருத்தமானவர் யார்?

வெறும் ஷேவிங் செஞ்சுக்க ஆயிரம் கொடுத்த வள்ளல் பெருந்தகை நீவிர் அன்றோ:-))))

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளுக்கும் தலையில் மயிர் இருப்பதில்லை. வெள்ளைக்காரக் குழந்தைகளைப் பார்க்கணும். அதனாலேயே இங்குள்ள மருத்துவமனையில் நம்ம ஆட்கள் குழந்தைகளை ஆச்சரியமாப் பார்க்கிறாங்க.//


துளசி அம்மா,

சீனக் குழந்தைகளும் வழுக்கையாகவே பிறக்கும், பரிணாம வளர்ச்சியினால் அவர்களின் குழந்தைகளுக்கு மயிர் வளர்ச்சி வேகம் குறைந்து விட்டது போல :)

//அது இருக்கட்டும். இந்தப் பதிவை எழுத உங்களைவிடப் பொருத்தமானவர் யார்?

வெறும் ஷேவிங் செஞ்சுக்க ஆயிரம் கொடுத்த வள்ளல் பெருந்தகை நீவிர் அன்றோ:-))))

11:00 AM, September 05, 2008
//

துளசி அம்மா நீங்களுமா சேர்ந்து வாருகீறீர்களே, அடுக்குமா இது ? கொடுமை கொடுமைன்னு அம்மன் கோவிலுக்கு போனால் அம்மானே சூலத்தால அடிச்ச கதையாக இருக்கு (யார் எழுதினதுன்னு கேட்கப்படாது)

விஜய் ஆனந்த் சொன்னது…

இனிமேல் மயிருக்கு தக்க மரியாதை தருவேன்,
" போனல் மயிராப் போச்சு ... ! " என்று எந்த இழிவான விஷயத்துக்கும் சொல்ல மாட்டேன்...

என சத்தியப்பிரமாணம் செய்கிறேன்...

TBCD சொன்னது…

மயிர்கூச்செறியும் பதிவு...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//துளசி கோபால் said...

அது இருக்கட்டும். இந்தப் பதிவை எழுத உங்களைவிடப் பொருத்தமானவர் யார்?

வெறும் ஷேவிங் செஞ்சுக்க ஆயிரம் கொடுத்த வள்ளல் பெருந்தகை நீவிர் அன்றோ:-))))//
இதனை இதனால் இவன்செய்யும் என்றாய்ந்து அதனை
அவன் கண் விடல்.

துளசி கோபால் சொன்னது…

ஆஹா......

அன்றே 'அய்யன்' சொல்லிவச்சுட்டாரே!!!!

வெண்பூ சொன்னது…

பதிவு மயிரு மாதிரி இருக்குது
.
.
ஹி...ஹி... என்னோட மயிரு மாதிரி அழகா இருக்குதுன்னு சொன்னேன். :)

(கோவி தவறாக நினைத்துவிட வேண்டாம். நகைச்சுவைக்காக மட்டுமே இப்படி எழுதியிருக்கிறேன்)

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
பதிவு மயிரு மாதிரி இருக்குது
.
.
ஹி...ஹி... என்னோட மயிரு மாதிரி அழகா இருக்குதுன்னு சொன்னேன். :)

(கோவி தவறாக நினைத்துவிட வேண்டாம். நகைச்சுவைக்காக மட்டுமே இப்படி எழுதியிருக்கிறேன்)

12:17 PM, September 05, 2008
//

கலக்கல் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
இதனை இதனால் இவன்செய்யும் என்றாய்ந்து அதனை
அவன் கண் விடல்.

11:46 AM, September 05, 2008
துளசி கோபால் said...
ஆஹா......

அன்றே 'அய்யன்' சொல்லிவச்சுட்டாரே!!!!

//

கூட்டமாக கும்முறதுன்னு முடிவு பண்ணிய பிறகு தப்ப முடியுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
இனிமேல் மயிருக்கு தக்க மரியாதை தருவேன், //


விஜய்,
அதுக்காக உதிர்த்த மயிர்களை பத்திரமாக எடுத்து வைக்காதே !
:))

//" போனல் மயிராப் போச்சு ... ! " என்று எந்த இழிவான விஷயத்துக்கும் சொல்ல மாட்டேன்...

என சத்தியப்பிரமாணம் செய்கிறேன்...
//

அச்சா அச்சா ! பகூத் அச்சா !

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
மயிர்கூச்செறியும் பதிவு...

11:17 AM, September 05, 2008
//

:) சரிதாங்க ஐயர் !

பெயரில்லா சொன்னது…

கோவி,

முடிக்காணிக்கை நல்லதுக்கும் கெட்டதுக்கும் செய்வோம்.

வேண்டுதல் செய்யும் போது முடிவளர்ப்பதால் அழகு குறைந்து காம எண்ணம் குறைவது விரதம் கடைபிடிக்க உதவும்.

அதே போல் வீட்டில் துக்க நிகழ்ச்சி நடக்கும் போது செய்வதும் இதற்காகத்தான். மனைவிக்கோ கணவனுக்கோ கொஞ்ச காலத்துக்கேனும் அந்த எண்ணம் வரமால் இருக்கத்தான்.

எங்க ஊர்ப்பக்கம், மனவி கர்ப்பமாயிருக்கும்போது கணவன் முடி வளர்த்து குல தெய்வத்திரற்குக் காணிக்கை செலுத்துவான்.

வால்பையன் சொன்னது…

தற்காலிக அழகை இழக்க மொட்டையடிக்கிறார்கள் .
மொட்டையடித்தாலும் அழகாக இருக்கும் என்னை போல் ஆட்கள் எதை காணிக்கையாக கொடுப்பது

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
தற்காலிக அழகை இழக்க மொட்டையடிக்கிறார்கள் .
மொட்டையடித்தாலும் அழகாக இருக்கும் என்னை போல் ஆட்கள் எதை காணிக்கையாக கொடுப்பது

2:04 PM, September 05, 2008
//

வால்பையன்,
உங்களுக்கு பிடித்தமான ஒருவர் யாரையாவது கூட்டிக் கொண்டு அழைத்துச் சென்று அவர்களுக்கு அடிக்கலாம் !

வால்பையன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
இக்பால் சொன்னது…

"மயிர் போனால் உயிர் வாழா கவரிமான்"
இப்பதான் தெரியுது மயிரிலியும் இவ்வளவு விஷயம் இருக்குன்னு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்