பின்பற்றுபவர்கள்

13 ஜூலை, 2006

முறிந்துப்போன காதல் ...! க(வி)தை


தாயைத் தவிர வேறொரு
பெண்முகம் பார்த்தது இல்லை.
வளர்ந்தும் நான்,
வீட்டையே சுற்றி வந்தாலும்,
வெளியே அழைத்துச் சென்று வந்தாலும்,
நான் உண்டு,
என் வேலை உண்டு என
தினம் திகட்டி போன
வாழ்கை வாழ்ந்து வந்தேன் !

வேளா வேளைக்கு
உணவும், பாலும் கொடுத்து
ஊட்டி ஊட்டி வளர்த்தாலும்,
ஏதோ ஒன்றுக்காக,
ஏங்கி ஏங்கி பகலில் கூட
தூக்கம் வருவதில்லை,
என் உணர்வை யாரும்
புரிந்து கொள்வதாக தெரியவில்லை !

அது என்ன உணர்வு என்று அறிந்து,
அது முடிந்துவிட்டதாகவே
நினைத்து போது,
ஒரு மருத்துவமனையில்
தற்செயலாக அவளை சந்தித்தேன்,
கிட்டத்தட்ட என்னைப்போல்
ஏங்குபவளாக காணப்பட்டாள் !

ஒருமுறை பார்த்ததும் இருவருக்கும் காதல்.
ஆசையாய் ஒருவருக்கு ஒருவர் நோக்க,
அருகில் சென்றேன்,
அவள் பெயர், விலாசம்
அறிவதற்குள்,
"சார் ! உங்க நாய், என்
நாய்கிட்ட வருது" என்று
அவள் எசமானர் சொல்ல
இழுத்து வந்துவிட்டார்
என் எசமானர் !

17 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சூப்பர்...
//என் உணர்வை யாரும்
புரிந்து கொள்வதாக தெரியவில்லை //
சும்மா நச்சுனு இருக்கு

பெயரில்லா சொன்னது…

வேலை வேலைக்கு : வேளா வேளைக்கு
நினைத்து போது : நினைத்த போது
கிட்ட திட்ட : கிட்டத்தட்ட

கோவி.கண்ணன் சொன்னது…

எழுத்துப் பிழை அவர்களே ! சரி செய்துவிட்டேன் . நன்றி மீண்டும் வருக :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
சூப்பர்...
//என் உணர்வை யாரும்
புரிந்து கொள்வதாக தெரியவில்லை //
சும்மா நச்சுனு இருக்கு
//
சிவா.. நீங்கள் சிட்டுக் குருவியைப் பற்றி எழுதும் போது ... ஏதோ எனக்கு தெரிந்தது இது... :)

பெயரில்லா சொன்னது…

கோவி. கண்ணண் கலக்கறீங்க...

எழுத்துப் பிழை உங்க சேவை என்னுடைய வலைப் பதிவுக்கும் தேவை... கொஞ்சம் அப்பப்போ வந்து சொன்னீங்கன்னா என்னைப் போன்ற அரைகுறைக்கும் உபயோகமா இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

நல்ல நாய்க் காதல் :)

பெயரில்லா சொன்னது…

//அவள் பெயர், விலாசம்
அறிவதற்குள்,
"சார் ! உங்க நாய், என்
நாய்கிட்ட வருது" என்று
அவள் எசமானர் சொல்ல
இழுத்து வந்துவிட்டார்
என் எசமானர் !//

கண்ணன், சூப்பர்,ஆனா கடைசியில இப்படி முடிச்சிடீங்களே?!!

உங்க பக்கத்துல, green with blue bottom line msg படிக்க முடியாம இருக்கு..plz try for other colour combination.

பெயரில்லா சொன்னது…

நல்லா இருக்கு.தொடருங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//At 9:30 PM, பாலசந்தர் கணேசன். said…
நல்லா இருக்கு.தொடருங்கள்
//
1+2 உங்களுக்கு ரொம்பவும் குசும்பு ... நாய் காதாலை தொடரனும்னு சொல்றத்துக்கு :)) லொள் லொள்

கோவி.கண்ணன் சொன்னது…

// நாகை சிவா said...
சூப்பர்...
//என் உணர்வை யாரும்
புரிந்து கொள்வதாக தெரியவில்லை //
சும்மா நச்சுனு இருக்கு
//
சிவா...நல்ல 'லொள்ளுன்னு' சொல்லியிருக்கலாம் :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//எழுத்துப் பிழை said...
வேலை வேலைக்கு : வேளா வேளைக்கு
நினைத்து போது : நினைத்த போது
கிட்ட திட்ட : கிட்டத்தட்ட
//
உங்கள் சேவையை பாராட்டி ஒரு தனிபதே போட்டாகிவிட்டது :))

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் எண்ணம் said...
கோவி. கண்ணண் கலக்கறீங்க...
//
குமரன் நாய் கலக்கவில்லை என்ற ஆதங்கம் தான் காரணம் :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//மகேந்திரன்.பெ said...
நல்ல நாய்க் காதல் :)
//
நாலுகால் காதலாக இருந்தாலும் கழட்டிவிடாத காதல் :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//கவிதா said...
கண்ணன், சூப்பர்,ஆனா கடைசியில இப்படி முடிச்சிடீங்களே?!!//
கவிதா அவர்களே ... காதல் என்றாலே சோகம் தானே !

பெயரில்லா சொன்னது…

// இழுத்து வந்துவிட்டார்
என் எசமானர் //

சூப்பர்... கலக்கிடீங்க...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

என் நெருங்கிய நண்பண் வீட்ல நீங்க சொல்லிருக்க மாதிரி ஒரு ஜீவன் இருந்துச்சு, அத நாய்னு யாரும் சொன்னதே இல்ல. அவ்ளோ பாசமா வளர்த்தாங்க. காலைல இட்லி, தோசை இடையில கொஞ்சம் பிஸ்கட், மதியானம் தயிர்சாதம், ராத்திரி இட்லி இல்லன்னா தயிர் சோறு இப்டியே சாப்பாடு போட்டு அத சுத்த சைவமா வளர்த்துட்டாங்க. கறி, முட்டை வாடையெல்லாம் அடிச்சா தூரத்துல ஓடிடும் அப்டி ஒரு சைவ ஜீவன். வீட்டுக்குள்ளயே தான் இருக்கும். தினம் மாலையில தெருவில ஒரு உலா அவ்ளவுதான். வீடு மாறி தஞ்சாவூர்ல இருந்து திருச்சி போறப்ப இதுக்காக தனியா ஒரு ஆம்னி வேன் ஏற்பாடு செஞ்சு கூட்டிக்கிட்டு போனாங்க. நான் அடிக்கடி அவங்க வீட்டுக்கு போறதால என்கிட்டயும் நல்லாப் பழகிடுச்சு.
ஆனா சமீபத்துல செத்து போச்சு. அந்த ஜீவனுக்கு பெயர் டாமி. அதோட நினைவுதான் வந்துச்சு இதப்படிச்சுட்டு. அது கூட வீட்லயே இருந்து எந்த உணர்சிகளுக்கும் வழியே இல்லாம போயிடுச்சு.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
என் நெருங்கிய நண்பண் வீட்ல நீங்க சொல்லிருக்க மாதிரி ஒரு ஜீவன் இருந்துச்சு, அத நாய்னு யாரும் சொன்னதே இல்ல. அவ்ளோ பாசமா வளர்த்தாங்க. காலைல இட்லி, தோசை இடையில கொஞ்சம் பிஸ்கட், மதியானம் தயிர்சாதம், ராத்திரி இட்லி இல்லன்னா தயிர் சோறு இப்டியே சாப்பாடு போட்டு அத சுத்த சைவமா வளர்த்துட்டாங்க. கறி, முட்டை வாடையெல்லாம் அடிச்சா தூரத்துல ஓடிடும் அப்டி ஒரு சைவ ஜீவன். வீட்டுக்குள்ளயே தான் இருக்கும். தினம் மாலையில தெருவில ஒரு உலா அவ்ளவுதான். வீடு மாறி தஞ்சாவூர்ல இருந்து திருச்சி போறப்ப இதுக்காக தனியா ஒரு ஆம்னி வேன் ஏற்பாடு செஞ்சு கூட்டிக்கிட்டு போனாங்க. நான் அடிக்கடி அவங்க வீட்டுக்கு போறதால என்கிட்டயும் நல்லாப் பழகிடுச்சு.
ஆனா சமீபத்துல செத்து போச்சு. அந்த ஜீவனுக்கு பெயர் டாமி. அதோட நினைவுதான் வந்துச்சு இதப்படிச்சுட்டு. அது கூட வீட்லயே இருந்து எந்த உணர்சிகளுக்கும் வழியே இல்லாம போயிடுச்சு.
//

பால்ராஜ்,
நாய் பற்றிய செய்தி பகிர்வுக்கு நன்றி !

பழைய பதிவு ஒன்றை தூசித்தட்டி விட்டு இருக்கிங்க !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்