பின்பற்றுபவர்கள்

17 செப்டம்பர், 2008

ரத்னேஷ் அண்ணா...! பெரியாரை விமர்சிக்கும் முன் ...

வழக்கமாக பார்பனிய ஏகாதிபத்யமே மாற்றுப்பார்வை என்கிற கருத்து நுழைத்தலில் கோணல் பார்வையில் எல்லாவற்றையும் எழுதி இருக்கும். நீங்கள் எழுதியுள்ள இந்த பதிவில் பெரியாரை விமார்சிக்கிறீர்களா ? வீரமணியை விமர்சிக்கிறீர்களா ? என்பதைச் சரியாகச் சொல்லுங்கள்.

பெரியாரை என்றால் அதில் பெரியாரை வடிவேலுடன், வடிவேலின் சினிமா காட்சியுடன் ஒப்பிட்டு இருப்பதே தவறு, இன்னிக்கு வடிவேலுவும் மேலே வந்திருக்கிறார் என்றால் ஆளின் தோற்றத்திற்கு, அவன் எந்த சாதியில் பிறந்திருக்கிறான் என்பதற்கு இல்லாமல் அவனுடைய திறமைக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்கிற பெரியாரின் சிந்தாந்தம் பரவலாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டதால் தான்.

நீங்கள் சொல்லும் குற்றச் சாற்றை இன்னும் மாற்றிப் போட்டுக் கூடக் கேட்கலாம்

"பெண்ணியம் பேசும் பெரியார், தனது கொள்கைகளை தன் வீட்டுப் பெண்களிடம் வலியுறுத்தி பெண்களிடம் வீரத்தைக் காட்டி இருக்கலாமா ?" இப்படி கேட்டு இருந்தீர்களென்றால் சிரித்துவிட்டு போய்விடுவார்கள்.

ஆக, கோவில்களின் புனிதம் களங்கப்பட ஆரம்பித்தது இவர்களின் ஏற்பாடு தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறாரா? அதற்கு முன்பேயே அப்படி இருந்தால் இவர் தனியே ஆட்களை ஏற்பாடு செய்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காதே. கோவிலுக்குப் போய்த் திரும்பிய போதெல்லாம் அவர்கள் நொந்திருப்பார்களே. இவர் ஏற்பாடு செய்யும் முன் அந்தக் கோவிலில் அப்படிப்பட்ட அசிங்கங்கள் நிகழவில்லை என்று தானே அர்த்தம்? தங்கள் கொள்கையை வலியுறுத்துவதற்காக இவர்கள் எந்த நாடகமும் நடத்துவார்கள் என்பது தானே இதன் மூலம் சொல்லப்படும் செய்தி.

- இது மிதமிஞ்சிய கற்பனையே, இதற்கு நான் பதிலும் அளித்துவிட்டேன்

கோவி.கண்ணன் said...

//இவர் ஏற்பாடு செய்யும் முன் அந்தக் கோவிலில் அப்படிப்பட்ட அசிங்கங்கள் நிகழவில்லை என்று தானே அர்த்தம்? //

இது கொஞ்சம் கற்பனையானது தான், பெரியார் குடும்பம் செல்வாக்கு மிக்கது, அவர்கள் வீட்டுப் பெண்களை கோவிலில் இருப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும், மற்ற பெண்களிடம் வைத்துக்கொள்ளும் வம்புகளை இவர்களிடம் செய்ய முயன்றிருக்க மாட்டார்கள்.

முதலில் நம்வீட்டில் உள்ளவர்களை சரி செய்துவிட்டு பிறகு மற்றவர்களுக்குச் சொல்லுவோம் என்று அவர் நினைத்து ஏன் செய்திருக்கக் கூடாது ?

September 17, 2008 11:47 AM

இதற்கு நீங்கள் அளித்திருக்கும் பதில்,

RATHNESH said...

கோவி.கண்ணன்,

//முதலில் நம்வீட்டில் உள்ளவர்களை சரி செய்துவிட்டு பிறகு மற்றவர்களுக்குச் சொல்லுவோம் என்று அவர் நினைத்து ஏன் செய்திருக்கக் கூடாது ?//

எண்ணம் சரியே. நான் கேட்பது, அதனை நிறைவேற்ற பொய் நாடகம்? அதுவும் புனிதமாகக் கருதப்படும் ஓர் இடத்தைக் களங்கம் செய்து?

நான் வீரமணி பொய்சொல்கிறார் என்றே சொல்லவில்லை. ஆனால் நீங்கள் கோவில் 'புனிதமாக கருதப்படும்' என்ற கருத்தைச் சொல்லி பெரியார் மீது குற்றம் சுமத்துகிறீர்கள்.

கோவில்கள் எப்போது புனிதமாக இருந்தது ?

கோவில்களில் தேவதாசிகளின் ஆட்டமும், அவற்றைச் சார்ந்தவர்களின் அந்தபுரமாக இருந்த காலங்களில் கோவில்கள் புனிதமாக இருந்ததா ?

பள்ளன், பறையன் இன்னும் சண்டாளர்கள் நுழைந்துவிட்டால் புனிதம் கெட்டுவிடும் என்று தடுத்துவைக்கப்பட்டு இருந்ததால் புனிதமாக இருந்ததா ?

தற்பொழுது தான் சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டவுடன் அவர் சிந்திய இரத்தத்தால் புனிதம் அடைந்திருக்கிறதா ?

வழக்கமாக புனிதம் பேசிதான் பெண்கள் முதல் மனிதர்கள் வரை தாழ்த்துவது நடந்து ஏறியது, வீட்டில் உள்ளவர்களை வெளி ஆட்களை வைத்தே ... இங்கும் புனிதம் கெடுகிறேதே...? என்பதால் பெரியார் அடவடி செய்தார், அதுவும் புனிதமாக கருதப்படும் கோவிலை வைத்து செய்தார் என்பது தங்களின் கண்டுபிடிப்பா ?

இன்னும் ஒன்றே ஒன்று,

கோவில் உண்மையிலேயே புனிதமானதா ? அல்லது கோவில் புனிதமாக கருதப்படுகிறதா ?

கள்ளுக்கடை, சாராயக் கடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இன்றைய தலைவர்களில் ஒருவர் கூட தங்கள் வீட்டு தென்னை மரங்களைப் பற்றி நினைத்துக் கூட பார்க்கமாட்டார்கள். ஆனால் அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்க தங்கள் வீட்டு பெண்களை அனுப்பியதுமின்றி, தனது தோப்பில் இருந்த அத்தனை தென்னை மரங்களையும் வெட்டி சாய்தார்.

உங்கள் பதிவின் ஆதங்கத்தில் பெரியார் குறித்த ஆதங்கமும் இல்லை, வீரமணி குறித்த குற்றச் சாட்டும் இல்லை. உங்களின் தவறான புரிதலின் எழுத்துவடிவம் மட்டுமே இருக்கிறது.

எந்த சூழலில் பெரியார் தமிழை 'காட்டுமிராண்டி பாஷை' என்று சொன்னார் என்ற சூழலைச் சொல்லாமல் Context ஆக பெரியார் தமிழைத் தூற்றினார் என்று சொல்லும் கூட்டத்திற்கு உங்கள் கருத்து நிச்சயம் பலனும், பயனுமாக இருக்கும்.

பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை, அதே சமயத்தில் நாம் எடுத்துவைக்கும் கருத்தில் எதாவது பொருள் இருக்க வேண்டும். வீரமணி அட்டாக் என்ற பெயரில் பெரியாரை கேவலப்படுத்துவது யார் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

48 கருத்துகள்:

லக்கிலுக் சொன்னது…

தோழர் கோவி!

பார்ப்பனர்களை விட பார்ப்பன அடிவருடிகளிடம் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நல்ல விளக்கம் தந்திருக்கிறீர்கள். ஆனால் கோயிலை போய் புனிதம் என்று சொல்பவர்களிடம் எடுபடும் என்று நினைக்கிறீர்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
தோழர் கோவி!

பார்ப்பனர்களை விட பார்ப்பன அடிவருடிகளிடம் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நல்ல விளக்கம் தந்திருக்கிறீர்கள். ஆனால் கோயிலை போய் புனிதம் என்று சொல்பவர்களிடம் எடுபடும் என்று நினைக்கிறீர்களா?
//

லக்கி லுக்,

அண்ணன் ரத்னேஷ் அப்படி பட்டவர் இல்லை, தவறாக உள்வாங்கி அதை எழுதி இருக்கிறார், நானும் அவருக்கு எதிர்ப்பு என்று எழுதாமல் மாற்றுக் கருத்தைத் தான் இங்கே சொல்லி இருக்கிறேன்.

லக்கிலுக் சொன்னது…

//அண்ணன் ரத்னேஷ் அப்படி பட்டவர் இல்லை, //

ரத்னேஷ் அப்படிப்பட்டவரா என்பது எனக்கு தெரியாது. நான் சொன்னது ஒரு பொதுக்கருத்து. அது இவருக்கு, அவருக்கு என்று குறிப்பிட்டு சொன்னதில்லை.

Indian சொன்னது…

//கோவில்களில் தேவதாசிகளின் ஆட்டமும், அவற்றைச் சார்ந்தவர்களின் அந்தபுரமாக இருந்த காலங்களில் கோவில்கள் புனிதமாக இருந்ததா ?

பள்ளன், பறையன் இன்னும் சண்டாளர்கள் நுழைந்துவிட்டால் புனிதம் கெட்டுவிடும் என்று தடுத்துவைக்கப்பட்டு இருந்ததால் புனிதமாக இருந்ததா ?

//

இதை நேரடியாகவே தம் வீட்டுப் பெண்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கலாமே?

கோவி.கண்ணன் சொன்னது…

//இதை நேரடியாகவே தம் வீட்டுப் பெண்களுக்குப் புரியும்படி எடுத்துச் சொல்லியிருக்கலாமே?//

அவரு நேரிடையாக சொன்னால் என்ன ஆள் வைத்து சொன்னால் என்ன ?

புரியும் படி சொல்வதற்குத்தான் அந்த 'ஆக்சன்'

நையாண்டி நைனா சொன்னது…

நாம் நம் உடலுக்கு தாடுப் பூசி போடும்போது என்ன செய்கிறோம்? நாம் உடம்பே நல்லா தான் இருக்கும். இருப்பினும் நாம் எந்த நோய்க்கு இலக்கு ஆகாமல் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த நோயை உண்டு பண்ணும் கிருமியில், வீரியம் குறைக்கப்பட்ட அல்லது நீக்கப்ட்ட அந்த நோய் கிருமியை தானே உள்ளே அனுப்புகிறோம் ஊசி மூலமாக. யாராவது நல்ல இருக்கிற உடம்பிலே கிருமியை என் செலுத்துகிறாய் என்று கேட்க்கிறோமா??

மேலும் பெரியார் ஆள் அனுப்பி பிறரை தொந்தரவோ, இடைஞ்சலொ செய்யவில்லை. திரு கோவி அண்ணா சொன்னது போல் பிரபலமான, செல்வந்தர் வீட்டு மனிதர்கள் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பும் சேவைகளும் அங்கே அவர்களுக்கு கிட்டும்,
பெரியார் எண்ணம் அனைத்து மக்களின் நலத்திற்காக. அன்றும் இன்றும் என்றும் புனிததத்தை கெடுக்கும் செயல்களில் பெரியாரோ, பெரியாரின் தொண்டர்களோ செய்வதில்லை.
( இதை நான் அண்ணன் ரத்னேஷ் அவர்களின் மேற்படி பதிவிலும் பின்னூடடமாக இட்டு இருக்கிறேன்)

வெண்பூ சொன்னது…

நோ சீரியஸ் பின்னூட்டம்... ஜஸ்ட்...
.
.
.
பிரசன்ட் சார்...

Bharath சொன்னது…

என்ன ஒரு மட்டமான சப்பைக்கட்டு.. ரத்னேஷ் கேட்டது என்ன.. பெரியாரின் நோக்கம் சரியானதாக இருக்கலாம்.. ஆனால் வழி தவறுதானே(நிறய விஷயங்களில் இது பொருந்தும்..) அவரை பற்றி சொல்லி பெருமைப்பட கோடானுகோடி நிகழ்ச்சிகள் உள்ளபோது இதை பெருமையாக அவரது பிறந்தநாளில் சொல்லும் வீரமணியை என்ன சொல்லுவது.. உங்கள் வீட்டு பெண்களிடம் இவ்வாறு செய்ய மனம் ஒப்புமா? அல்லது பெண்கள் எல்லாம் பட்டால்த்தான் புரிந்துகொள்வார்கள் என்ற எண்ணமா.. அதயே அவர்கள் பள்ளிக்கோ கடைத்தெருவுக்கோ செல்லும்பொழுது வேறு ஒருவர் செய்தால், அவர்களை பள்ளிக்கே போகவேண்டாம் என்று சொல்லிவிடுவாரா??

கோவி.கண்ணன் சொன்னது…

//Bharath said...
என்ன ஒரு மட்டமான சப்பைக்கட்டு.. ரத்னேஷ் கேட்டது என்ன.. பெரியாரின் நோக்கம் சரியானதாக இருக்கலாம்.. ஆனால் வழி தவறுதானே(நிறய விஷயங்களில் இது பொருந்தும்..) அவரை பற்றி சொல்லி பெருமைப்பட கோடானுகோடி நிகழ்ச்சிகள் உள்ளபோது இதை பெருமையாக அவரது பிறந்தநாளில் சொல்லும் வீரமணியை என்ன சொல்லுவது.. உங்கள் வீட்டு பெண்களிடம் இவ்வாறு செய்ய மனம் ஒப்புமா? அல்லது பெண்கள் எல்லாம் பட்டால்த்தான் புரிந்துகொள்வார்கள் என்ற எண்ணமா.. அதயே அவர்கள் பள்ளிக்கோ கடைத்தெருவுக்கோ செல்லும்பொழுது வேறு ஒருவர் செய்தால், அவர்களை பள்ளிக்கே போகவேண்டாம் என்று சொல்லிவிடுவாரா??
//

உணர்வு பூர்வமான மனநோய்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் தான் சரியாம் ! அந்த நிகழ்ச்சியை பெரியார் படத்திலும் காட்சியாக வைத்தார்கள், வீரமணி எல்லாவற்றையும் மறைச்சு தான் பெரியாருக்கு பெருமை சேர்கனும் என்பது இல்லை. காந்திஜி கூட ஆசிரமத்தில் நிர்வாணமாகவே அலைந்து பாலுணர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவந்தாராம், கேட்கிற அல்ல காந்திஜியை குறை சொல்லவேண்டும் என்கிற நோக்கத்தில் இருப்பவர்களுக்கு அது தவறான செயலாகக் கூட தெரியும்.

Bharath சொன்னது…

//காந்திஜி கூட ஆசிரமத்தில் நிர்வாணமாகவே அலைந்து பாலுணர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவந்தாராம், கேட்கிற அல்ல காந்திஜியை குறை சொல்லவேண்டும் என்கிற நோக்கத்தில் இருப்பவர்களுக்கு அது தவறான செயலாகக் கூட தெரியும்.
//

ofcourse அது தப்புத்தான்.. காந்தி தனது பாலுனர்ச்சியை மட்டும் யோசித்தார்.. ஆனால் கூடவே இருக்கும் பெண்களின் உணர்ச்சியை பற்றி யோசிக்க தவறினார்.. எப்பொழுது அது சுட்டிக்காட்டப்பட்டதோ உடனே தன் தவறினை திருத்திக்கொண்டு அந்த பழக்கதைக் கைவிட்டார்.

என்னை பொறுத்தவரை பெரியாரிடம் போற்றி கொள்ளத்தக்க விஷயங்கள் நிறய உள்ளன அவற்றையெல்லாம் விட்டுவிட்டு இந்த மாதிரி சிறு சிறு சேட்டைகளை பெரிது படுத்தவேண்டாம் என்பதே..

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

//நீங்கள் எழுதியுள்ள இந்த பதிவில் பெரியாரை விமார்சிக்கிறீர்களா ? வீரமணியை விமர்சிக்கிறீர்களா ? என்பதைச் சரியாகச் சொல்லுங்கள்.//

இருவரையும்.

//இன்னிக்கு வடிவேலுவும் மேலே வந்திருக்கிறார் என்றால் ஆளின் தோற்றத்திற்கு, அவன் எந்த சாதியில் பிறந்திருக்கிறான் என்பதற்கு இல்லாமல் அவனுடைய திறமைக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்கிற பெரியாரின் சிந்தாந்தம் பரவலாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டதால் தான்.//

பகுதி உண்மை. பெரியாரை வடிவேலுவுடன் ஒப்பிடவில்லை. வடிவேலுவின் அந்தப்படக் கேரக்டருடன் தான் ஒப்பிட்டேன். நிஜ வடிவேலு தன் பெண்டுபிள்ளைகளை ஆள் வைத்து டீஸ் செய்ய மாட்டார் என்று நம்புகிறேன்.

//இது மிதமிஞ்சிய கற்பனையே//

பெரியாரே தன் நூலில் எழுதி இருக்கிறார் என்று வீரமணி சொன்னார். அதுவும் கற்பனை என்றால் நான் நூலின் படி எடுத்துச் சொன்னால் நம்புவீர்களா?

//கோவில் உண்மையிலேயே புனிதமானதா ? அல்லது கோவில் புனிதமாக கருதப்படுகிறதா ?//

கருதப்படும் இடம். அது புனிதமானது இல்லை என்று நிரூபிக்க விரும்புபவர் பொய் நாடகங்கள் ஏற்பாடு செய்யக் கூடாது; அது மோசடி.

அவர் கோவிலை அசிங்கம் பண்ணினார் என்கிற கோணத்தில் சொன்னதை விடவும், தான் சொன்னதை மெய்ப்பிக்க மோசடி வழிகளையும் கையாண்டார் என்கிற ஒப்புதல் வாக்குமூலம் அவருடைய பெருமைக்கு இழுக்காக இருக்கிறது என்றேன். அதனைப் பெருமையாகச் சொல்லும் அவருடைய இயக்க வாரிசின் பகுத்தறிவு சிலிர்க்க வைக்கிறது என்றேன்.

பெரியாருடைய மற்ற சாதனைகளைப் பட்டியல் இட்டால் எவ்வளவோ இருக்கும். அவற்றை நானும் மதிக்கிறேன்.

பெரியாரை விமர்சித்தாலே பார்ப்பன அடிவருடித் தனம் என்று நினைக்கும் அளவுக்குத் தான் அவருடைய உழைப்பு பயன்பட்டிருக்கிறது என்கிற ஆதங்கமும் பெருமூச்சாய் எழுகிறது.

லக்கிலுக் சொன்னது…

//பெரியாருடைய மற்ற சாதனைகளைப் பட்டியல் இட்டால் எவ்வளவோ இருக்கும். அவற்றை நானும் மதிக்கிறேன்.//

இதெல்லாம் தெரிந்தே, அவரது பிறந்தநாளன்று அவரை கேவலமாக சித்தரித்து பதிவெழுதுவதே அடிவருடித்தனம் எனப்படும்.

எனவே நான் முதலில் போட்ட பின்னூட்டத்துக்கு அண்ணன் ரத்னேஷ் மீண்டும் ஒருமுறை அழுத்தமான ஆதாரப் பின்னூட்டத்தை தந்திருப்பதற்கு நன்றி! :-)

Indian சொன்னது…

//காந்திஜி கூட ஆசிரமத்தில் நிர்வாணமாகவே அலைந்து பாலுணர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவந்தாராம், //

இது சரியான தகவலா?
அவர் தனது பேத்திகளுடன் ஆடையின்றி உறங்கியதாக இதுவரை படித்துள்ளேன்.
மோகன்தாஸ் செய்ததும் தவறுதான்.

Bharath சொன்னது…

//இதெல்லாம் தெரிந்தே, அவரது பிறந்தநாளன்று அவரை கேவலமாக சித்தரித்து பதிவெழுதுவதே அடிவருடித்தனம் எனப்படும். //

ல‌க்கி அண்ணே,

அப்ப‌ வீர‌மணி ப‌ட்ட‌ர் செய்த‌து என்ன‌????

கோவி.கண்ணன் சொன்னது…

ரத்னேஷ் அண்ணா,

வரிக்கு வரி உங்கள் பின்னூட்டத்திற்கு மறுப்பு எழுத முடியும். அதனால் பயனிருப்பதாகத் தெரியவில்லை. நான் பெரியாரின் தாங்கி இல்லாவிட்டாலும் பெரியார் அவர் குடும்பத்தினரை முதலில் திருந்த என்ன செய்தால் சரி என்று நினைத்தாரோ அதைத்தான் செய்திருக்கிறார். எனக்கு அபத்தமாகத் தெரியவில்லை.

பெரியார் பற்றி போற்ற எவ்வளவோ இருக்கும் போது இதை உங்களுடன் இதற்கு மேல் விவாதிக்க நானும் விரும்பவில்லை.

உங்கள் கருத்தாக்கம் வெல்லட்டம்.

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பெரியாரே தன் நூலில் எழுதி இருக்கிறார் என்று வீரமணி சொன்னார். அதுவும் கற்பனை என்றால் நான் நூலின் படி எடுத்துச் சொன்னால் நம்புவீர்களா?//

பெரியார் படத்திலேயே அந்த காட்சி வந்திருக்கிறது, மேலே என்னுடைய மற்ற மறுமொழிகளைப் படித்திருந்தால் இப்படி சொல்லி இருக்கமாட்டீர்கள், நான் கற்பனை என்று சொன்னது நிகழ்வைக் குறித்தது அல்ல, அதன் மீது உங்கள் சொந்தக்கருத்தைக் கூறியதை மட்டும் தான், அதுவும் 'புனித' பூச்சு குறித்துதான் சொன்னேன்.

Kanchana Radhakrishnan சொன்னது…

காந்தியோ..பெரியாரோ..என்றில்லை..எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்..அவர்களுக்கும் பலஹீனங்கள் உண்டு. 'புத்தி கெட்ட பின்பு ஞானி'
காந்தி..தனது தந்தை மரணப்படுக்கையில் ..மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை சத்யசோதனையில் குறிப்பிட்டுள்ளார்.இளவயதில் பாலுணர்ச்சியை கட்டுப்படுத்தாமல்..வயதான காலத்தில் போதிப்பது என்பதே வேடிக்கை. அதே போல் பெரியாரும் சில சமயங்களில் ஆணாதிக்க போக்கை கடைப்பிடித்துள்ளார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
காந்தியோ..பெரியாரோ..என்றில்லை..எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்..அவர்களுக்கும் பலஹீனங்கள் உண்டு. 'புத்தி கெட்ட பின்பு ஞானி'
காந்தி..தனது தந்தை மரணப்படுக்கையில் ..மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை சத்யசோதனையில் குறிப்பிட்டுள்ளார்.இளவயதில் பாலுணர்ச்சியை கட்டுப்படுத்தாமல்..வயதான காலத்தில் போதிப்பது என்பதே வேடிக்கை. அதே போல் பெரியாரும் சில சமயங்களில் ஆணாதிக்க போக்கை கடைப்பிடித்துள்ளார்
//

ஐயா, கருத்துக்கு நன்றி, நானும் பெரியார் அப்பழுக்கற்ற தூயமனிதர் என்றெல்லாம் முழுதும் அறியாத ஒருவரைப் பற்றி சொல்வதில்லை. தந்தைப் பெரியார் என்கிற தகுதியை தமிழக மக்கள் (எல்லாருமா ன்னு கேட்காதிங்க, பெருவாரியானவர்கள், அவரால் தலை நிமிர்ந்தவர்கள்) வழங்கி இருக்கிறார்கள். அவரின் பிறந்த நாள் அன்று அந்த நிகழ்வை மறைக்காமல் வீரமணி குறிப்பிட்டு இருக்கிறார். இதில் வீரமணி தரப்பில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. பெரியார் தங்கள் குடும்பத்தினரை ஏமாற்றியதால் தான் கோவில் புனிதம் கெட்டுவிட்டது என்றும் அதற்கும் முன்பு அவ்வாறெல்லாம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பது போல் நண்பர் எழுதிய போது அபத்தமாகவே பட்டது அதற்குத்தான் இந்த இடுகையை எழுதினேன். சறுக்கல் யாருக்குமே இருக்கும், என்னைப் பொருத்தவரையில் ரத்னேஷ் எழுதில் இது சறுக்கல் தான். நான் உட்பட. தாம் சொல்வது தவறு என்று உணரவாய்ப்பும் இல்லாமல், அதற்கு முயற்சியும் எடுக்காதவர்கள் எவருமே அதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். ரத்னேஷும் விதிவிலக்கு இல்லையே.

வழக்கம் போல் காந்தி மீது காழ்புணர்வு கொள்ளும் ஆர்எஸ்எஸ் அபிமானிகள் காந்தி குறித்து நான் சொன்னதை வைத்து காந்தி செய்ததும் தவறு என்கிற அவர்களது கருத்துக்களை வலியுறுத்துகிறார்கள். :)

TBCD சொன்னது…

முதலில் இந்த சம்பவத்தை புரிந்துக்கொண்டதில் இரு தரப்பினருக்கும் சிறு குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது..

வீரமணி ஒரு தகவல் தவறான சொன்னால், அவருடைய செயல்கள் அனைத்தும் தவறு என்றாகிவிடாது...(போலவே அவருடைய தவறான செயல்களும்...)

பெரியார், தனது மனைவிக்கு உணர்த்த விரும்பியது, ஆபத்துக் காலத்தில் "ஆபத்பாந்தவா, அனாதரட்ஷகா" என்று அலறினால், கடவுள் பிரசன்னமாவார் என்று நம்பிக்கொண்டியிருந்த நம்பிக்கை பொய் என்பதே. அதை சரியாக, அவர் அவருடைய அதிரடி போக்கிலேயே செய்து இருக்கிறார்.

பொலிட்டிகலி கரெக்டாக செய்யவேண்டும் என்றால், பெரியாரின் கலகங்கள் எல்லாம், விளக்கெண்ணை குடித்ததுப் போல் தான் இருந்திருக்கும்..அதிரடி பானி அவருடையது...உலகமே கடவுள் என்று அஞ்சி நடுங்கிய போது, பரிட்சார்த்த முயற்சியாக இதை செய்யவும் பெரிய மனத்துணிவு வேண்டும்..அது அவருக்கு இருந்திருக்கிறது...

"நோய் நாடி..." என்ற குறள் இங்கே சாலப் பொருந்தும்...

Bharath சொன்னது…

//வழக்கம் போல் காந்தி மீது காழ்புணர்வு கொள்ளும் ஆர்எஸ்எஸ் அபிமானிகள் காந்தி குறித்து நான் சொன்னதை வைத்து காந்தி செய்ததும் தவறு என்கிற அவர்களது கருத்துக்களை வலியுறுத்துகிறார்கள். :)//

அநேக‌மாக‌ என்னைத்தான் குறிப்பிடுகிறீர்க‌ள் என்று நினைக்கிறேன்.. நான் உலகில் ம‌திக்கும் த‌லைவ‌ர்க‌ளில் முத‌ன்மையாக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் காந்தியும், பெரியாரும்.. அதனால் தான் அவர் செயலின் தவறு புரிந்த்வுடன் அதை விட்டு விட்டார் என்று குறிப்பிட்டேன். அத‌ற்காக அவ‌ர்க‌ளின் எல்லா செய‌லையும் நியாயப‌டுத்துவ‌து த‌வ‌று என்று நினைப்ப‌வ‌ன். அம்பேத்காரையும், போஸ‌யும் அவர் ச‌ரியாக புரிந்துகொள்ள‌வில்லை என்ற‌ விம‌ர்ச‌ன‌ம் அவ‌ர் மீது உண்டு..

நீங்க‌ள்தான் ர‌த்னேஷ் சொன்ன‌த‌ன் அர்த‌த்தை புரிந்துகொள்ளாம‌ல் as usual கொழ‌ப்பிவிட்டீர்க‌ள்.. அதுவும் அந்த‌ program பார்க்காம‌லேயே க‌ண்முடித்த‌ன‌மாக‌ defend செய்வ‌தைத்தான் ஏற்க‌ முடிய‌வில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
முதலில் இந்த சம்பவத்தை புரிந்துக்கொண்டதில் இரு தரப்பினருக்கும் சிறு குழப்பம் இருப்பதாகவே தெரிகிறது..

வீரமணி ஒரு தகவல் தவறான சொன்னால், அவருடைய செயல்கள் அனைத்தும் தவறு என்றாகிவிடாது...(போலவே அவருடைய தவறான செயல்களும்...)

பெரியார், தனது மனைவிக்கு உணர்த்த விரும்பியது, ஆபத்துக் காலத்தில் "ஆபத்பாந்தவா, அனாதரட்ஷகா" என்று அலறினால், கடவுள் பிரசன்னமாவார் என்று நம்பிக்கொண்டியிருந்த நம்பிக்கை பொய் என்பதே. அதை சரியாக, அவர் அவருடைய அதிரடி போக்கிலேயே செய்து இருக்கிறார்.

பொலிட்டிகலி கரெக்டாக செய்யவேண்டும் என்றால், பெரியாரின் கலகங்கள் எல்லாம், விளக்கெண்ணை குடித்ததுப் போல் தான் இருந்திருக்கும்..அதிரடி பானி அவருடையது...உலகமே கடவுள் என்று அஞ்சி நடுங்கிய போது, பரிட்சார்த்த முயற்சியாக இதை செய்யவும் பெரிய மனத்துணிவு வேண்டும்..அது அவருக்கு இருந்திருக்கிறது...

"நோய் நாடி..." என்ற குறள் இங்கே சாலப் பொருந்தும்...

10:19 PM, September 17, 2008
//

TBCD,

கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். எனது இந்த பதிவும் அப்படியே. யாருடைய எண்ணங்களையும் வலியுறுத்தி மாற்றவைக்க முடியும் என்ற திறன் யாருடைய எழுத்துக்கும் கிடையாது. அவர்களாகவே மாற்றிக் கொண்டால் தான் உண்டு. நான் நிர்பந்தம் செய்வதோ, அதற்கான தகுதி எனக்கு இருப்பதாகவோ நான் கருதுவதும் இல்லை.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. எல்லாவற்றிற்கும் பொருள் ஆராய்ந்து விலக்கிக் கொண்டே வந்தால் வெளிச்சம் முழுதும் மறைந்து நம்மைச் சுற்றி இருட்டு தான் இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Bharath said... நீங்க‌ள்தான் ர‌த்னேஷ் சொன்ன‌த‌ன் அர்த‌த்தை புரிந்துகொள்ளாம‌ல் as usual கொழ‌ப்பிவிட்டீர்க‌ள்.. அதுவும் அந்த‌ program பார்க்காம‌லேயே க‌ண்முடித்த‌ன‌மாக‌ defend செய்வ‌தைத்தான் ஏற்க‌ முடிய‌வில்லை

10:32 PM, September 17, 2008
//

வெளிச்சம் காட்டுவதற்கு நன்றி ! இந்த அளவுக்கு ஆராயும் அறிவு இருந்திருந்தால் நான் இந்த இடுகையே எழுதி இருக்க மாட்டேன்.

மீண்டும் நன்றி !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தான் செய்ததை அப்படியே எழுதியதால் அவர் மகாத்மாவாகப் போற்றப்பட்டார். மறைத்திருந்தால் அவர் மறக்கப்பட்டிருப்பார். 100 சதவீதம் யாரையும் நல்லவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னால் அது பொய்யாக இருக்க முடியும் அல்லது அவரைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்களால் ஏற்றுக்கொள்ள முடியும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. அண்ணா, பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர் மற்றும் எல்லோருக்கும் பொருந்தும். (கணவன் மனைவி? உஷ்!) திரு.கி.வீரமணி அய்யா அவர்கள் பெரியார் செய்த நல்ல விடயங்களைச் சொல்ல தனக்கு வழங்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said... திரு.கி.வீரமணி அய்யா அவர்கள் பெரியார் செய்த நல்ல விடயங்களைச் சொல்ல தனக்கு வழங்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும்.//

ஜோதி பாரதி,
இன்னும் பெரியார் பற்றிய நல்ல விடயங்கள் யாருக்குமே தெரியாதது போலவே சொல்கிறீர்கள், அவர் இல்லாவிட்டால் திராவிடக் கட்சிகள், காங்கிரஸ் வளர்ச்சி, கம்யூனிச ஆதரவு என எந்த கட்சியும் நிலைபெற்று இருக்க முடியாது. வரலாறுகL மறைந்துவிட்டதால், அது நடக்கவில்லை என்பது பொருளல்ல. பெரியாரைப் பற்றி தெரியாதவர்களுக்கு அவரின் தேவை தற்போது இல்லை, அவை நிறைவு செய்யப்பட்டுவிட்டது என்றும் நினைக்க முடியவில்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
நாம் நம் உடலுக்கு தாடுப் பூசி போடும்போது என்ன செய்கிறோம்? நாம் உடம்பே நல்லா தான் இருக்கும். இருப்பினும் நாம் எந்த நோய்க்கு இலக்கு ஆகாமல் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த நோயை உண்டு பண்ணும் கிருமியில், வீரியம் குறைக்கப்பட்ட அல்லது நீக்கப்ட்ட அந்த நோய் கிருமியை தானே உள்ளே அனுப்புகிறோம் ஊசி மூலமாக. யாராவது நல்ல இருக்கிற உடம்பிலே கிருமியை என் செலுத்துகிறாய் என்று கேட்க்கிறோமா??//

தடுப்பூசியை விடுங்கள், தனக்கு இருக்கும் நோய் பெயர் தெரியாமல் வெறு ஒன்றைச் சொல்லி மருந்து வாங்கிச் பயன்படுத்தினாலும் உடலும் கெடும், நோயும் தீராது

//பெரியார் எண்ணம் அனைத்து மக்களின் நலத்திற்காக. அன்றும் இன்றும் என்றும் புனிததத்தை கெடுக்கும் செயல்களில் பெரியாரோ, பெரியாரின் தொண்டர்களோ செய்வதில்லை.
( இதை நான் அண்ணன் ரத்னேஷ் அவர்களின் மேற்படி பதிவிலும் பின்னூடடமாக இட்டு இருக்கிறேன்)

5:05 PM, September 17, 2008
//

பெரியார் பெயரை பயன்படுத்திக் கொள்ளும் பிழைப்பு வாதிகள் இருக்கிறார்கள். இன்றைய திராவிடக் கட்சிகளே அப்படித்தான் ஒரு படமாக கூ(ட்)டங்களில் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
நோ சீரியஸ் பின்னூட்டம்... ஜஸ்ட்...

.
.
.
பிரசன்ட் சார்...

5:34 PM, September 17, 2008
//

பல சமயம் எஸ்கேப் ஆவது தான் நல்ல வழி, நானும் கூட இந்த இடுகையை தவிர்த்திருக்கலாம். :(

கோவி.கண்ணன் சொன்னது…

//Bharath said...
உங்கள் வீட்டு பெண்களிடம் இவ்வாறு செய்ய மனம் ஒப்புமா? அல்லது பெண்கள் எல்லாம் பட்டால்த்தான் புரிந்துகொள்வார்கள் என்ற எண்ணமா.. அதயே அவர்கள் பள்ளிக்கோ கடைத்தெருவுக்கோ செல்லும்பொழுது வேறு ஒருவர் செய்தால், அவர்களை பள்ளிக்கே போகவேண்டாம் என்று சொல்லிவிடுவாரா??
//

அவர் அவருடைய வீட்டு பெண்களுக்கு அந்த வைத்தியம் கொடுத்திருக்கிறார், அதுதான் பேசப்படுகிறது இங்கே. இங்கே எதற்கு எங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றியெல்லாம் நீங்கள் பேச வேண்டும் ? அதற்கான உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது, மன உளைச்சல் கொடுக்கும் உத்தி என்று சொல்வார்களே அந்த வகையோ.

நல்லது, ரத்னேஷ் அண்ணாவின் பதிவுக்கு எதிர்கருத்துக் கூறியதற்கு அவருக்கு ஆதரவு கொடுக்கிறேன் பேர்வழி என்ற ரீதியில் இப்படி ஒரு பின்னூட்டம். தேவைதான்.

manikandan சொன்னது…

இவ்வளவு சீரியஸா எதுக்கு எல்லாம் சண்டை போடறீங்க ?

இனியா சொன்னது…

"இந்த திமுக நாய்கள், பெரியார்லாம் வந்தபிறகுதான், பறையன், பள்ளன் லாம் திமிரெடுத்து செருப்புக்காலோடு நம்ம அக்ரகாரத்துல பயமில்லாம நடந்து போறாங்கள்" - நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், பக்கத்தில் உள்ள அக்ரகாரத்தில் இரு ஆசிரியர்கள் பேசக்கேட்டது. இதை விட வேறு என்ன பெருமை வேண்டும் திமுகவிற்கும், பெரியாருக்கும்?

நல்லதந்தி சொன்னது…

யப்போ!.ரொம்ப பெரியாளுங்க.பெரிய விஷயத்தைப் பத்தி பேசறாங்க!.நமக்கும் பெரிய விஷயங்களுக்கும் ஆகாது.நான் வர்றேன் சார்!.

கோவி.கண்ணன் சொன்னது…

ரத்னேஷ் அண்ணாவுக்கு மட்டுமல்ல, அவரைப் போல் அந்த நிகழ்வு குறித்து தவறான எண்ணம் கொண்டு இருப்பவர்கள் அனைவருக்கான மறுமொழியாகவே இதனை எழுதுகிறேன்.

ஆண்கள் பார்த்தாலே பெண்களுக்கு 'கற்பு' கெட்டுப் போச்சு என்று வீட்டுக்குள் அவளை வைத்து கதவடைக்கும் காலத்தில், தன் வீட்டு பெண்களை பிறரை வைத்து கிண்டல் செய்து திருத்துவதற்கும் பெரிய மனதே இருந்திருக்க வேண்டும். வடிவேலு படத்தைப் பார்த்த அதிர்ச்சியில் அதையும் பெரியார் செயலையும் ஒப்பிட்டுப் பார்த்து இரண்டும் ஒன்றாக தெரியும் உங்களிடம் கேட்கிறேன், ஒருவர் தன் மனைவிக்கு பிரசவத்திற்கோ, உடலியல் நோய்களுக்கோ ஆண் மருத்துவரை ஏற்பாடு செய்து இருந்தால் அதையும் அப்படித்தான் எடுத்துக் கொள்வேன் சொல்வீர்களோ ? என் மனைவிக்கு ஆண் மருத்துவர்கள் தான் மகப்பேறுக்கு உதவினர். பெண்களுக்கு அப்போது கூச்சமே இருக்காது என்கிறீர்களா ? இருக்கும், ஆனால் பொருத்துக் கொள்வார்கள். எல்லாம் போச்சு என்று நானோ, மனைவியோ கூப்பாடு போடவில்லை.

மானம் உள்ள ஆண்மகன் எவனாவது தன் மனைவிக்கு ஆண் மருத்துவரை ஏற்பாடு செய்து, தனக்கு உரிமையுடைய அல்லது தான் மாட்டுமே பார்க்கக் கூடிய அவளுடைய முழுவுடலை ஆண் மருத்துவர் பார்க்க அனுமதிப்பானா ? வடிவேலு படத்தில் தான் அப்படியெல்லாம் உண்டு, ஆனால் உண்மையிலேயே வடிவேலு தங்கள் வீட்டுப் பெண்களை ஆண் மருத்துவரைப் பார்க்கச் சொல்லும் அளவுக்கு கேவலமானவராக இருக்கமாட்டார் என்றே நினைக்கிறேன் என்பீர்களோ ? இது அபத்தமான உதாரணமாகத் தெரிந்தால், நீங்கள் சொல்வதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடே இல்லை.

பெரியார் தேர்ந்தெடுத்தது குறுக்குவழி என்பதை ஒப்புக் கொள்கிறேன். சில வியாதிகளைக் குணப்படுத்த முன்பெல்லாம் சூடுகூட போடுவார்கள், இப்பொழுது மின்சார சாக் கொடுக்கிறார்கள். ஆனால் பெரியாரின் அந்த செயல்களுக்கு பிறகு தான் கோவில்களில் புனிதம் கெட ஆரம்பித்துவிட்டது என்று நீங்கள் இங்கே ஊகம் கிளப்பி இருப்பதை ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. பெரியார் எதையுமோ சுய நல லாப நோக்கோடு செய்தது இல்லை. அவர் நினைத்திருந்தால் மாநில முதல்வராக இருந்திருக்கலாம், அவரது திக கட்சியைக் கூட அவர் அரசியலில் ஈடுபட அனுமதித்தது இல்லை.

*********

பெரியார் பற்றிய சில விமர்சனங்கள் இருக்கிறது,

கீழவெண்மணியில் 40 தலித்துக்களை குடிசையில் வைத்து 'இருஞ்சூர் நாயகன்' தீ வைத்த சம்பவத்திற்கு பெரியார் தரப்பில் இருந்து பெரிய எதிர்ப்பு வரவில்லை. அதையே ஒரு பார்பனர் செய்திருந்தால் பெரிய எதிர்பாக கிளம்பி இருக்கும், 'நாயகன் என்பதால் கண்டிக்க வில்லையா ?' என்ற கேள்வியை அவ்வப்போது பெரியாருக்கு எதிர்தரப்பினர் கேட்டுவருகிறார்கள். பெரியார் ஏன் இதைக் கண்டிக்கவில்லை என்ற கேள்வியை வீரமணி அவர்களிடம் (நண்பர் ஒருவர்) முன் வைத்தபோது (நான் உடன் இருந்தேன்), "ஆம், அதுபற்றி பெரியார் வெளிப்படையாக பேசவில்லை' என்றார். அதற்கு காரணத்தையும் சொன்னார், "தீ வைப்பு சம்பவத்தை சாக்கிட்டு திமுக ஆட்சியைக் கலைக்க காங்கிரசார் முயன்றார்கள், அந்த நேரத்தில் அதை பிரச்சனையாக்கினால் காங்கிரஸ் கை ஓங்கி இருக்கும், 40 பேருக்கு குரல் கொடுக்கப் போய், 4 கோடி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் திமுக அரசுக்கு பாதமாக அமைந்துவிடும் என்பதால் பெரியார் அமைதி காத்தார்" என்றார்.

இது ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்து என்றாலும், கொஞ்சம் ஜீரணிக்க கடினமானதாகவே இருக்கிறது.

கோவை சிபி சொன்னது…

அய்யாவின் பிறந்தநாளில் இப்படியொரு பதிவு (முயலின் பதிவு)ஒரு மட்டமான எரிச்சலின் வெளிப்பாடுதான்.
//பார்ப்பனர்களை விட பார்ப்பன அடிவருடிகளிடம் தான் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.//
என்ற கருத்து நாளுக்குநாள் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது.
உங்களின் விளக்கம் சிறப்பாக உள்ளது.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவை சிபி said...
அய்யாவின் பிறந்தநாளில் இப்படியொரு பதிவு (முயலின் பதிவு)ஒரு மட்டமான எரிச்சலின் வெளிப்பாடுதான்.
//

கோவை சிபி,

மன்னிக்க வேண்டும் அண்ணன் ரத்னேஷ் எதிர்ப்புகளைப் பற்றி அஞ்சாமல் எதையும் எழுதுபவர், அவரது எழுத்துக்களின் சிறப்புத் தன்மையே அதுதான். எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்தையே ஒருவர் எழுத வேண்டுமென்பது இல்லை. ஆனால் எழுதும் முன்பு நமது கற்பனைத் தவிர அதில் வேறெதும் இல்லை என்பதைப் பிறர் சுட்டிக் காட்டும் போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கூட இல்லை, உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாலே போதும்.

பின்னவினத்துவம் எழுத முயற்சி செய்கிறார் போல, ஆனால் சரியாக வரவில்லை. :)

மற்றபடி பார்பன அடிவருடி, எரிச்சலின் வெளிப்பாடு என்று அவரைச் சுட்டிச் சொல்லும் கருத்தாக்கங்களை நிராகரிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி said...
யப்போ!.ரொம்ப பெரியாளுங்க.பெரிய விஷயத்தைப் பத்தி பேசறாங்க!.நமக்கும் பெரிய விஷயங்களுக்கும் ஆகாது.நான் வர்றேன் சார்!.
//

நல்லதந்தி சார்,

வாங்க நாம நம்ம பெரியவரின் வாழை இலை - நெல்லிக்குப்பம் கிருஷ்ண மூர்த்தி செயல் பற்றி விவாதிப்போம், அது சின்ன விசயம் தான்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இனியா said...
"இந்த திமுக நாய்கள், பெரியார்லாம் வந்தபிறகுதான், பறையன், பள்ளன் லாம் திமிரெடுத்து செருப்புக்காலோடு நம்ம அக்ரகாரத்துல பயமில்லாம நடந்து போறாங்கள்" - நான் பள்ளியில் படிக்கும் காலத்தில், பக்கத்தில் உள்ள அக்ரகாரத்தில் இரு ஆசிரியர்கள் பேசக்கேட்டது. இதை விட வேறு என்ன பெருமை வேண்டும் திமுகவிற்கும், பெரியாருக்கும்?

2:45 AM, September 18, 2008
//

இனியா,

கருத்துக்கு நன்றி, பெரியாரும் மகாத்மா காந்தி கூட விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல, ஆனால் தவறான ஊகங்களை 'அதானால் தானா?... இதெல்ல்லாம் நடந்தது..' என்று ஊகங்களை வலியுறுத்தல் செய்வதற்கு முன் சற்று யோசிக்கலாம்.

கோவை சிபி சொன்னது…

என்ன எழுதிகிறோம் என்று தெரியாமல் எழுதும் அளவிற்கு பெரியாரைப்பற்றி ஒன்றும் அறியாதவராய் அப்பதிவர் இருக்கவாய்ப்பில்லை.மேலும் அப்பதிவின் பின்னூட்ட கருத்துகள் பதிவின் சாராம்சத்தை வலுப்படுத்தவதாகவே உள்ளது.ஆகையால் ''எரிச்சல்,அடிவருடி என்ற சொல்லாடலை பயன்படுத்த எந்த தயக்கமும் இல்லை.உங்களின் நிராகரிப்பில் உள்ள ஜனநாயகத்தை மதிக்கிறேன்.
நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//அவனும் அவளும் said...
இவ்வளவு சீரியஸா எதுக்கு எல்லாம் சண்டை போடறீங்க ?
//

அவனும் அவளும்,

மூடநம்பிக்கையும், ஆத்திகமும் ஒன்று என்ற புரிதலில் பக்தியாளர்கள் கண்டும் காணாமல் அடக்கி வாசிப்பது போல் எங்களால் இருக்க முடியவில்லை.

மூடநம்பிக்கைகள் ஒழிந்தால் கடவுள் நம்பிக்கையே இருக்காது என்று பக்தியாளர்கள், மதப்பற்றாளர்கள் அபத்தமாக நினைப்பது போல் எங்களால் இருக்க முடியாது.

தவறுகளை நேரடியாகவே சுட்டிக் காட்டி விவாதிப்போம், அதற்கான புரிந்துணர்வு இருக்கிறது

உங்களுக்கு இது சண்டை போல் தோன்றுகிறதோ ?

கிருஷ்ணா சொன்னது…

//கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்றே நான் எடுத்துக் கொள்கிறேன். எனது இந்த பதிவும் அப்படியே. யாருடைய எண்ணங்களையும் வலியுறுத்தி மாற்றவைக்க முடியும் என்ற திறன் யாருடைய எழுத்துக்கும் கிடையாது. அவர்களாகவே மாற்றிக் கொண்டால் தான் உண்டு. நான் நிர்பந்தம் செய்வதோ, அதற்கான தகுதி எனக்கு இருப்பதாகவோ நான் கருதுவதும் இல்லை.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. எல்லாவற்றிற்கும் பொருள் ஆராய்ந்து விலக்கிக் கொண்டே வந்தால் வெளிச்சம் முழுதும் மறைந்து நம்மைச் சுற்றி இருட்டு தான் இருக்கும்.
//

Super...

கார்க்கிபவா சொன்னது…

ஆஜர்... எனக்கு இவ்வளவு விஷயம் தெரியாது சகா..

RATHNESH சொன்னது…

//இவ்வளவு சீரியஸா எதுக்கு எல்லாம் சண்டை போடறீங்க ?//

அவனும் அவளும் சார்,

இது சண்டை இல்லை; கருத்துப் பரிமாற்றம்.

manikandan சொன்னது…

பக்தியாலர்கள நாத்திகர்கள் திருத்தறதும், நாதிகர்கள பக்தியாளர்கள் திருத்தறதும் நம்ப ஊர்ல ஒரு பொழப்பா போச்சு....வெறும் கருத்து பரிமாற்றம் தான் அப்படின்னா நல்லது தான்.

Govi sir,

spiritual, religious - Can you translate it in tamil for me ?

Bharath சொன்னது…

// இங்கே எதற்கு எங்கள் வீட்டுப் பெண்களைப் பற்றியெல்லாம் நீங்கள் பேச வேண்டும் ? அதற்கான உரிமையை யார் உங்களுக்கு கொடுத்தது, மன உளைச்சல் கொடுக்கும் உத்தி என்று சொல்வார்களே அந்த வகையோ.

நல்லது, ரத்னேஷ் அண்ணாவின் பதிவுக்கு எதிர்கருத்துக் கூறியதற்கு அவருக்கு ஆதரவு கொடுக்கிறேன் பேர்வழி என்ற ரீதியில் இப்படி ஒரு பின்னூட்டம். தேவைதான்.
//

I just meant it as a generalization.. I'm sorry if you have taken it the other way. I don't mean to demean your family..

//அவர் அவருடைய வீட்டு பெண்களுக்கு அந்த வைத்தியம் கொடுத்திருக்கிறார், அதுதான் பேசப்படுகிறது இங்கே.//

அது கொஞ்சம் MSP'ஷ் ஆக இருக்கு என்பதுதான் பிரச்சனையே..

//மானம் உள்ள ஆண்மகன் எவனாவது தன் மனைவிக்கு ஆண் மருத்துவரை ஏற்பாடு செய்து, தனக்கு உரிமையுடைய அல்லது தான் மாட்டுமே பார்க்கக் கூடிய அவளுடைய முழுவுடலை ஆண் மருத்துவர் பார்க்க அனுமதிப்பானா ? //

மருத்துவ தொழிலயே கேவலப்படுத்தும் ஒரு statement. I request Dr.Bruno to come and answer in the right sense.

Coming back to the point.. பெரியாரின் இந்த செயல் அவர் பிறந்தநாளில் போற்றிப்பேச வேண்டிய அளவுக்கு முக்கியம் வாய்ந்ததாக படவில்லை..

முத்துகுமரன் சொன்னது…

கோவி.நல்ல பதிவு.

பெரியாரை பெரியார் திரைப்படம் கொண்டு பார்ப்பதே மிகப்பெரிய அபத்தம். பெரியார் திரைப்படம் அவரைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த எடுத்து கொண்ட ஒரு முயற்சியே. அந்த இயக்குனரின் உள்வாங்கலைப் பொறுத்து வெளிப்பட்டிருந்தது. அதுவே இறுதியானது அல்ல.

பெரியார் எந்த ஒரு சூழலிலும் தன்னை மகாத்மாகவோ, உத்தமராகவோ அறிவித்துக் கொண்டிருந்தவர் அல்ல. மிகவும் வெளிப்படையாக தன்னைப் பற்றியான எதிர்மறையான விசயங்களைக் கூட பதிவு செய்தவர். புனிதம் என்னும் போலிக்கட்டை தன்னளவிலே உடைத்துக் காட்டியவர் அவர். வீரமணி சொன்ன விசயங்களை முதன் முதலில் பதிவு செய்தவர் திரு.சாமி சிதம்பரனார். தமிழர் தலைவர் என்னும் நூலில்தான் இந்த குறிப்பு இடம் பெற்றூள்ளது. இந்த புத்தகம் பெரியாரின் ஒப்புதலோடு வெளிவந்த புத்தகம் என்பது இதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

ஒரு செய்தி/ நிகழ்விற்கு பல கோணங்கள் உண்டு. நாம் எத்தகையதொரு கோணத்தில் பார்க்கிறோம் அல்லது உள்வாங்குகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் அர்த்தம் விளங்கிக்கொள்ளப்படும். அவரவர் தேவையைப் பொறுத்தும் அவசியத்தைப் பொறுத்தும் அதன் ஆழம் புரிகிறது.

பெண்களுக்கு அவர்களுக்கு எதிராக எத்தகைய கொடுமைகள் இழைக்கப்படுகின்றன என்பது கூட தெரியாமால் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்கு முறைகளுக்கும் உட்பட்டு வீட்டளவிலே கருத்து சொல்ல முடியாத முடக்கப்பட்ட சமூக கட்டமைப்பில் வளர்ந்த/வாழ்ந்த இருந்த நாகம்மையார் அவர்களுக்கு புரிய வைக்க எடுத்து கொண்ட செயல் அது.

கோயில்களின் பெயராலும் ஆண்டவனின் பெயராலும் தாசிகளை உருவாக்கிய மனிதர்களும்/ மதமும் வலுவாக இருந்த காலகட்டத்தில் செய்யப்பட்ட ஒரு செயல். அதன் அனைத்து பரிணாமங்களையும் பார்ப்பதே சரியானதாகும். பெரியாரின் செயலை விமர்சிக்க முனைபவர்கள் அவருக்கு அந்த நிர்பந்தத்தை ஏற்படுத்திய சமூக கட்டமைப்பை கேள்விக்கு உள்ளாக்கமல் மெளனம் காப்பது ஏன்? விமர்சனம் என்பது ஒற்றைத் தன்மையாக இருந்த்தல் கூடாது.

ரத்னேஷ் கொண்டிருப்பது பார்வை மாறுபாடு. பெரியாரின் இயக்கத்திற்கு/ செயல்பாடுகளுக்கு சமூகத் தேவையிருந்தது. அவரின் வார்த்தைகளை மட்டும் பிடித்து தொங்கிக்கொண்டிருந்தால் முற்றிலும் அதிர்ச்சியூட்டக்கூடிய ஒரு மனிதராகவே இருந்தவர் அவர். நேரடியான ஆபத்து என்று வரும் போது மனிதர்களாலேதான் உதவி செய்ய இயலுமே தவிர எந்த கடவுளும் அவதரித்து விடப்போவதில்லை என்பதை உணர்த்த எடுத்துக் கொண்ட முறையே அது.

ஒழுக்கம்/நேர்மை என்பது வலிமையுடவன் நிர்ணயிக்கும் ஒரு பண்டம் அல்ல.

பெரியாரை விமர்சிப்பது மகிழ்ச்சிதான்.சீதையை அக்கினி குண்டத்தில் இறக்கியவனின் இழித்தனத்தை கேள்வி கேட்கப் போவது எப்போது??

கோவி.கண்ணன் சொன்னது…

//spiritual, religious - Can you translate it in tamil for me ?//

ஆன்மிகம் மற்றும் மதம் !

வேறு என்ன ? இதில் என்ன குழப்பம் ?

கையேடு சொன்னது…

//பெரியார் தேர்ந்தெடுத்தது குறுக்குவழி என்பதை ஒப்புக் கொள்கிறேன். //

இதைக் குறுக்கு வழி/மோசடி என்று அழைப்பது அவரவர் பார்வைபொருத்தது.

குடும்ப உறுப்பினர்களிடம் மோசடி/குறுக்கு வழி செய்து காரியம் சாதிப்பது எல்லா குடும்பங்களிலும் பொதுவான ஒன்று.

குழந்தைக்கு, உணவு ஊட்டுவது, பள்ளிக்கு அனுப்புவது துவங்கி கண்ணைக்குத்தும் என்று கடவுளையும், மதத்தையும் கற்றுக்கொடுக்கும் வரை பெரிய மோசடி/குறுக்கு வழிகளில் தான் அரங்கேறுகிறது.

அவரவர் பார்வையில் அவரவர்க்கான செய்தியை வைத்துவிட்டுச் சென்றவர் தந்தை பெரியார் அவர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...
இதைக் குறுக்கு வழி/மோசடி என்று அழைப்பது அவரவர் பார்வைபொருத்தது.

குடும்ப உறுப்பினர்களிடம் மோசடி/குறுக்கு வழி செய்து காரியம் சாதிப்பது எல்லா குடும்பங்களிலும் பொதுவான ஒன்று.

குழந்தைக்கு, உணவு ஊட்டுவது, பள்ளிக்கு அனுப்புவது துவங்கி கண்ணைக்குத்தும் என்று கடவுளையும், மதத்தையும் கற்றுக்கொடுக்கும் வரை பெரிய மோசடி/குறுக்கு வழிகளில் தான் அரங்கேறுகிறது.
//

சரிதான், தன் குடும்பம் ஒன்று சேர பல குறுக்குவழிகளை ஒளவை சண்முகி மாமி தேர்ந்தேடுத்து, ஜெமினி மாமா சண்முகி மாமியை ஜொள்விடும் விபரீதங்கள், நாசருக்கு பார்பனர் வேசம் போடுவது என படம் முழுவதும் காமடி சரவெடி. :) கலக்கல் !

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்துகுமரன் said...
கோவி.நல்ல பதிவு.

பெரியாரை பெரியார் திரைப்படம் கொண்டு பார்ப்பதே மிகப்பெரிய அபத்தம். பெரியார் திரைப்படம் அவரைப் பற்றிய புரிதலை ஏற்படுத்த எடுத்து கொண்ட ஒரு முயற்சியே. அந்த இயக்குனரின் உள்வாங்கலைப் பொறுத்து வெளிப்பட்டிருந்தது. அதுவே இறுதியானது அல்ல.
//

முத்துகுமரன்,

வேலை பளுவுக்கு இடையில் பெரியார் பற்றி இவ்வளவு பெரிய பின்னூட்டம் எழுதியிருப்பதிலிருந்தே அவர்மீது நீங்கள் வைத்திருக்கும் பெருமதிப்பு. நெடுநாள் சென்று இங்கு வந்து நல்ல கருத்துக்களைச் சொல்லி இருக்கிறீர்கள். மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//மருத்துவ தொழிலயே கேவலப்படுத்தும் ஒரு statement. I request Dr.Bruno to come and answer in the right sense. //

புரூனோ மனநல மருத்துவராக இருந்தால் நீங்கள் சொல்வதை பொருமையாகக் கேட்டுக் கொள்வார்.

//Coming back to the point.. பெரியாரின் இந்த செயல் அவர் பிறந்தநாளில் போற்றிப்பேச வேண்டிய அளவுக்கு முக்கியம் வாய்ந்ததாக படவில்லை..//

செயல் பற்றி பேசியதா ? அந்த செயலை விமர்சனம் செய்து பேசியதா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்