பின்பற்றுபவர்கள்

15 செப்டம்பர், 2008

எப்படி நினைக்கிறோமோ... !

வேண்டுதல்கள் வேலை செய்யுமா ? செய்யும் என்பார்கள் ஆன்மிகவாதிகள். ஆனால் அதற்கெல்லாம் தரவு காட்டவே முடியாது, சாமியார் சொன்னார், நடந்தது ! என்பது போல் 16ரீல்கள் அளவுக்கு பாகங்களாக இருக்கும் புத்தகங்கள் தான் அவர்களுக்கு சாட்சி,

"எல்லாவற்றையும் இழுந்து, நின்றேன், கிட்டதட்ட வாழ்கையே முடிந்து போய்விட்டது என்று நினைக்கும் போது, எப்போதோ சந்தித்த ஒருவர் இந்த சாமியாரை வேண்டிக் கொண்டால் கஷ்டமெல்லாம் தீர்ந்துவிடும், என்று சொன்னார், நான் நம்பவில்லை, வேண்டா வெறுப்பாகத்தான் சாமியாரிடம் மனத்தின் வழியாக எனது குறையைச் சொன்னேன், என்ன ஆச்சரியம் ? வெகுநாட்களாக சிக்கலாக இருந்த குடும்ப சொத்தின் வழக்கு முடிவுக்கு வந்து கனிசமான பணம் கிடைத்தது, எனது கஷ்டமெல்லாம் தீர்ந்தது, முன்பைவிட நான் நல்ல நிலையில் இருக்கிறேன், அடிக்கடி படத்திலிருந்து திருநீரைக் கொட்டி என்னை ஆசிர்வதித்துக் கொண்டே இருக்கிறார்"

இது போன்ற மெகா ரீல்களைத் தான் பல்வேறு சம்பவங்களின் கூடிய நடந்த கதை கதையாக பரப்புவார்கள், சாமியார் பிறக்கும் முன்பு உலகமே ஒருவேளை சோறு கிடைக்காமல் பிச்சை எடுத்தது போலவும், சாமியாரின் அவதாரத்தால் லோக ஷேமம் அடையப் போவதாக இவர்கள் நம்புவதுடன், பிறருக்கு அத்தகைய (மூட) நம்பிக்கையை ஊட்டி கூட்டம் சேர்ப்பார்கள், இதில் அவர்களுக்கு தனிப்பட்ட ஆதாயம் என்றால் 'இவர் அனுக்கிரகம்' பெற்றவர் என்று பிறரை எண்ணச் செய்வதுதான், அடுத்த ஆதாயம் சாமியாரின் ஏஜெண்டாக இருப்பதால் வேறு நன்மைகள் கூட இருக்கலாம்.

******

வேண்டுதல்கள் வேலை செய்கிறதா ? எண்ணங்கள் வேலை செய்யும். எப்படி ? ஒரு செயலுக்கான முதல் விதையே அதைப் பற்றிய எண்ணம் தான், அது தனக்கு பயனாக(சாதகம்) இருக்கிறதா என்பதை அறிவு (புத்தி) ஆராயும், இருந்தால் செயல்வடிவம் கொடுப்பதற்கான முயற்சியைத் தொடங்கி செயல்படுத்த முனைவர்.

"நான் பணக்காரர் ஆக வேண்டும்" என்று நினைக்கும் ஒருவரின் எண்ணம் அடுத்து அதை செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறது, 'பணம் சேர்ப்பத்தில்' நேர்மையுடன் செயல்படுபவர்கள் நல்ல வழியைத் தேர்ந்தெடுத்து தொழில் தொடங்கி மேலே வருவர், குறுகிய காலத்தில் அதை செய்யவேண்டும் என்று நினைப்பவர்களே குறுக்கு வழியில் செல்வர், ஆக இருவருமே இலக்கை அடைந்துவிடுவர், ஒன்று நேர்வழி, மற்றது தீயவழி.

"நான் விளையாட்டு வீரனாக ஆகவேண்டும்" என்று எண்ணுபவனே அதற்கான முயற்சி எடுத்து அந்த நிலையை எட்டுகிறான். எண்ணங்களில் ஒன்றிப்போய் முனைப்புடன் முயற்சித்தால் வெற்றி உறுதிதான். இவையெல்லாம் வாழ்க்கையின் லட்சியங்கள் என்பதற்கான பல்வேறு தரப்பினரின் பலவிதமான எண்ணங்கள்.

"நான் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும், பிறரை நேசிக்க வேண்டும்" என்கிற எண்ணங்களை வாழ்வின் லட்சியமாக நாம் கொள்வதே இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், மகிழ்விற்கு புறக்காரணிகளாக இருக்கும் அனைத்தில் இருந்தும் நாம் விலகிவிடுவோம், இயல்பாகவே மகிழ்ச்சியுடன் நாம் இருக்க முடியும், அது போல் பிறரை எப்போதும் நேசிக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தால், மறந்தும் கூட பிறரின் மீது சுடுசொற்களை வீசிவிடமாட்டோம். நமது சுற்றுச் சூழல்கள் நன்றாகவே இருக்கும்.

ஆனால் நாம் இது போல் நல்ல எண்ணங்களில் பற்றுறுதி வைத்துக் கொள்வது என்பதே உண்மை, நமது மகிழ்ச்சியை வெளிக்காரணிகள் தீர்மானிக்கிறது என்பதே நமது ஆழ்ந்த எண்ணமாக இருப்பதால், அதற்கு நம்மாலான முயற்சியை நாம் எடுப்பதே இல்லை.

நாம் எப்படி இருக்க முடியுமோ அப்படி நம்மை மாற்றுவது நம் எண்ணங்களே ! அது மகிழ்ச்சியா, பணமா, சமூக மதிப்பா (அந்தஸ்து), உயர்ந்த படிப்பா ? இவையெல்லாம் எண்ணத்தால் விளைவதே. இவையெல்லாம் சேர்ந்தே கிடைப்பது கடினம் தான், ஏனெனில் நமது எண்ணங்கள் எப்போதும் பலன் கொடுக்கும் ஒன்றில் மட்டுமே குவிந்து இருப்பதுடன், அதனை செயல் வடிவத்திலும் கொண்டுவரும், பிறவற்றிற்கு தேவையான காலம் கிடைப்பதும் அரிதே. எல்லாவற்றிலுமே குறிப்பிட்ட எல்லையை உறுதி செய்து கொண்டால் எல்லாவற்றையும் ஓரளவு அடைய முடியும். செயல்முறையில் மிகக் கடினம் தான்.

பணம் மட்டுமே (ஈட்ட) வேண்டும் என்று நினைத்தால் அது மட்டுமே கிடைக்கும் !

உங்களுக்கு எது கிடைத்ததோ அது உங்கள் எண்ணங்களால் கிடைத்தது,
எது கிடைக்க இருக்கிறதோ அதுவும் உங்கள் எண்ணங்களாலேயே கிடைக்கும் ! எனவே நமக்கு எதுவேண்டும் என்ற எண்ணத்தை நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

12 கருத்துகள்:

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

இந்த புத்தகத்தை படித்தால் பணக்காரர் ஆகலாம் என்பதும், இந்த சாமியாரை கும்பிட்டால் பணக்காரர் ஆகலாம் என்பதும் முழுக்க முழுக்க உண்மையே.

ஆனால் பணக்காரர் ஆகப் போவது படிப்பவரோ அல்லது கும்பிடுபவரோ அல்ல. புத்தகத்தை எழுதியவரும், சாமியாரும் தான் அது.

SurveySan சொன்னது…

///உங்களுக்கு எது கிடைத்ததோ அது உங்கள் எண்ணங்களால் கிடைத்தது,
எது கிடைக்க இருக்கிறதோ அதுவும் உங்கள் எண்ணங்களாலேயே கிடைக்கும்///

என் கிருத்துவ நண்பன் ஒருவன் பாதிரியார் ஆயிட்டான்.
அவன் சொல்றது, மச்சி, வாயை விட்டு வெளியீல் வரும் வார்த்தை ஒவ்வொண்ணும் யோசிச்சு சொல்லணும்.
நம்மசி சுற்றி நல்ல தேவதைகளும், துர் தேவதைகளும் இருக்கும். (angels)

நாம சொல்றத செயல்படுத்தரதுதான் அவங்க வேலையாம்.
அதுக்காக எல்லாத்தையும் செய்யமாட்டாங்களாம்.

கிட்டத்தட்ட நீங்க சொல்ர கருத்துதான் அவருதும் ;)

கார்க்கிபவா சொன்னது…

உங்க ப‌திவ முழுசா படிக்கிற வரத்த எனக்கு எந்த சாமியார் தருவார்? இன்னும் படிக்கல.. வந்து சொல்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said... கிட்டத்தட்ட நீங்க சொல்ர கருத்துதான் அவருதும் ;)//

SurveySan,
மாறா(த) உண்மைகளை யார் சொன்னாலும் எப்படி சொன்னாலும் அதன் பொருள் ஒன்று தான் !

எதை மிகவும் விரும்புகிறோமோ அது மட்டும் தான் கிடைக்கும் !

அதுக்காக என் நண்பன் உயிருக்கு உயிராக ஒரு பெண்ணைக் காதலித்தான் கிடைக்கவில்லை என்று சொல்லாதீர்கள். அது இன்னொருவருடைய மனம் அதைப் பெற இருவருடைய எண்ணங்களும் சேர்ந்து செயல்படவேண்டும்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
உங்க ப‌திவ முழுசா படிக்கிற வரத்த எனக்கு எந்த சாமியார் தருவார்? இன்னும் படிக்கல.. வந்து சொல்றேன்.

1:50 PM, September 15, 2008
//

கார்கி,
யாராவது சாமியார் வரத்துக்கு பதில் வருத்தத்தைத் தந்தால் அதன் பிறகு படிப்பீர்கள். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
இந்த புத்தகத்தை படித்தால் பணக்காரர் ஆகலாம் என்பதும், இந்த சாமியாரை கும்பிட்டால் பணக்காரர் ஆகலாம் என்பதும் முழுக்க முழுக்க உண்மையே.

ஆனால் பணக்காரர் ஆகப் போவது படிப்பவரோ அல்லது கும்பிடுபவரோ அல்ல. புத்தகத்தை எழுதியவரும், சாமியாரும் தான் அது.

1:20 PM, September 15, 2008
//

புத்தகத்தைப் படிப்பது அல்ல எண்ணங்களில் ஏற்படும் ஆசையை அறிவினால் நிர்ணயம் செய்து கொள்ளும் போது நம் செயலும் அதில் தான் முனைப்பு காட்டும்.

செல்வன் சொன்னது…

நல்ல பதிவு.

புதுகை.அப்துல்லா சொன்னது…

விபத்தில் காயமடைந்த தாங்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்!வாழ்த்துகிறேன்!

RATHNESH சொன்னது…

தமிழ்நாட்டில் பலரும் அடுத்த முதல்வர் தாமே என்று நினைக்கிறார்கள்; அதுமட்டும் ஏன்ங்க நடக்க மாட்டேங்குது?

செல்வன் சொன்னது…

தாங்கள் விரைவில் குணமடைய!வாழ்த்துகிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
தமிழ்நாட்டில் பலரும் அடுத்த முதல்வர் தாமே என்று நினைக்கிறார்கள்; அதுமட்டும் ஏன்ங்க நடக்க மாட்டேங்குது?
//

இரத்னேஷ்,
எழுதிக் கொடுத்த வசனம் பேசுறவங்க, எம்எல்ஏ கூட ஆகமுடியாது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//புதுகை.அப்துல்லா said...
விபத்தில் காயமடைந்த தாங்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன்!வாழ்த்துகிறேன்!

5:03 PM, September 15, 2008
//

அன்புக்கு நன்றி !

//செல்வன் said...
தாங்கள் விரைவில் குணமடைய!வாழ்த்துகிறேன்!

6:41 PM, September 15, 2008
//
அன்புக்கு நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்