பின்பற்றுபவர்கள்

23 செப்டம்பர், 2008

புதிய பதிவர்களே... ! யாரும் கண்டு கொள்ளவில்லையா ? கவலை வேண்டாம் !

புதிதாக பதிவு எழுத வரும் போது எல்லோருக்கும் இருக்கும் தடைதான், யாருமே பின்னூட்டமாட்டாங்க, அதற்கு காரணம் நிறைய இருக்கு. பழைய பதிவர்கள் பலர் புதிய பதிவு திறந்து வச்சி யாரையாவது கலாய்பாங்க, அதனால் புதிய பதிவர்களைப் பற்றிய கவனம் வெளியே தெரிய சுமார் ஒரு மாதம் கூட ஆகும், அதுவும் நாளைக்கு 1 பதிவாவது போட்டு வந்தால் மட்டுமே.

புதிய பதிவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு எளிய வழிகள்

1. நாள் தோறும் ஒரு பதிவாவது போடுங்கள்
2. உங்களைப் போல் யார் யாரெல்லாம் புதிய பதிவர்கள் என்று அடையாளம் காணுங்கள், அது எளிதுதான், எப்பொழுது முதல் பதிவை எழுதி இருக்கிறார்கள், அல்லது புரொபைல் பார்த்தால் பதிவு தொடங்கிய தேதி தெரிந்துவிடும்
3. அப்படி கண்டு கொண்டவர்களுக்கு பின்னூட்டம் போட்டு அவர்களை ஊக்கப்படுத்துங்கள், ஏனென்றால் அவர்களும் இதே போன்று 'நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லை' என்றே நினைத்திருப்பார்கள்.
4. அவர் உங்களுக்கு பதிலுக்கு பின்னூட்டம் போடவில்லையே என்று சோர்ந்து விடாதீர்கள், தொடர்ந்து அவர்களை ஊக்கப்படுத்தி வாருங்கள்
5. அப்படி செய்யும் போது புதுப்பதிவர்களென உங்களுக்குள் ஒரு குழுவே ஏற்பட்டுவிடும், அப்பறம் என்ன பின்னூட்ட மழைதான்.
6. பரிசல், வடகரைவேலன் அண்ணாச்சி, அனுஜன்யா, வெண்பூ இன்னும் பலர் இப்படித்தான் ஆரம்பத்தில் புதியவர்களை அவர்களுக்குள் கண்டுகொண்டு ஊக்கப்படுத்திக் கொண்டு தங்களுக்குள் உற்சாகப்படுத்திக் கொண்டார்கள்
7. இது போன்ற பின்னூட்ட குழுவை முதலில் உருவாக்க வேண்டும், உங்களுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பு வந்தவர்களோ, உங்களுக்கு பிறகு வருபவர்களோ உங்களுடன் தொடர்ந்து எழுதுபவர்களாகவும், உங்களுடன் புரிந்துணர்வோடும் வளர்ந்து வருவார்கள்.
8. "லக்கிலுக்குவுக்கு நறுக்கென்று நாலு கேள்வி", "இட்லி வடை யாரென்று கண்டுபிடித்துவிட்டேன்", "நமீதாவுடன் நேருக்கு நேர்" இது போன்ற தலைப்புகளில் மொக்கையாக வாரத்திற்கு 3 பதிவாவது போட்டால் தான் ஏற்கனவே எழுதிக் கொண்டு இருக்கும் பழைய பதிவர்களின் கவனம் பெறுவீர்கள். அந்த பதிவில் நகைச்சுவையும் இருந்தால் பழைய பதிவர்களாலும் கண்டு கொள்ளப் படுவீர்கள்.
9. சர்ச்சைக்குறிய செய்திகளை கட்டுரையாக்குங்கள், விவாதம் ஆக்குங்கள் எல்லோருடைய கவனமும் பெறுவீர்கள்
10. மொக்கைப் பதிவர்களின் தலைவரான குசும்பனின் பின்னூட்ட கும்மியில் கலந்து கொள்ளுங்கள், அதன் பிறகு பின்னூட்டம் போடுவது, பதிவு எழுதுவது எலலாமே எளிதாகிவிடும், டீக்குடிக்கிற நேரத்தில் கூட ஒரு பதிவை எழுதிவிட முடியும்

எல்லாவற்றையும் விட முதன்மையான யோசனை, உங்கள் பகுதியில் வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தால் தவறாது கலந்து கொள்ளுங்கள்

பதிப்புரிமை : கோவி.கண்ணன்

66 கருத்துகள்:

பரிசல்காரன் சொன்னது…

நிஜமாகவே புதியவர்கள் பின்பற்றவேண்டிய விஷயங்களைச் சொல்லியுள்ளீர்கள்!

CA Venkatesh Krishnan சொன்னது…

டாங்க்ஸ் கோவியாரே !

புதிய பதிவர்களின் கலங்கரை விளக்கம் நீங்க

நீங்க சொல்ரா மேரியே நடந்துக்கிறேன்

பரிசல்காரன் சொன்னது…

நான்தான் முதலா? ஆஆஆஆஆ

சரவணகுமரன் சொன்னது…

நல்லா தொகுத்து வழங்கி இருக்கீங்க...

விஜய் ஆனந்த் சொன்னது…

:-)))...

ஐடியா கிடங்கு!!!!

வெண்பூ சொன்னது…

நிஜமாகவே நல்ல யோசனைகள் கோவி.கண்ணன். என்ன, இந்த குழு சேர்தலால் ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கு புதிய பதிவர்களுடன் தொடர்பே அற்றுப்போய் விட்டது. நேரமின்மையால் ரீடரில் இருக்கும் 20 அல்லது 30 பதிவர்களின் பதிவுகளையேதான் படித்து வருகிறேன். :(

Athisha சொன்னது…

அண்ணா என்னைப்போன்ற புதியவனுக்கு மிகவும் பயனுள்ள பதிவு

கட்டாயம் இதனை மனதில் எழுதிவைத்து கடைபிடிக்கிறேன்

anujanya சொன்னது…

அண்ணா,

என்னை அந்த ஸ்டார் லிஸ்டுல சேர்த்து விட்டாச்சா! ஆனால் உங்கள் அவதானிப்பு அபாரம். உங்கள் 'எளிய வழிகள்' உண்மையிலேயே பயனுள்ளவை. ஒரே ஒரு சிந்தனை. பரிசல்/வேலன்/லக்கி/நீங்கள் எவ்வளவு எழுதினாலும், தினந்தோறும் பதிவுகள் வந்துகொண்டிருந்தாலும், தரம் எப்போதும் தாழ்வதில்லை. ஒரு பரபரப்புக்கு என்று மட்டும் போட ஆரம்பித்தால், நிறைய (அதிக என்று போட நினைத்து உங்களுக்கு பயந்து, ச்சே, அஞ்சி மாற்றிவிட்டேன்) நாள் தாக்குப் பிடிக்க முடியாது அல்லவா. பல்வேறு வாசிப்பும் தேவை அல்லவா.

அனுஜன்யா

பி.கு. : நிறைய நாட்கள் ஆகிவிட்டன நீங்கள் அங்கு வந்து

பெயரில்லா சொன்னது…

இதை நான் வந்த காலத்தில் சொல்லியுருக்கலாம்...

குடுகுடுப்பை சொன்னது…

சரிங்க , அப்படியே எல்லாரும் நம்ம பக்கம் வாங்க

Blogger சொன்னது…

பயனுள்ள பதிவு..
நன்றி..

சும்மா அதிருதுல சொன்னது…

பின்னுட்டம் மட்டும் இடுபவர்களை அல்லது அனானியாக இடுபவர்களை
ஊக்க படுத்தி பதிவு இல்லையா..:)

SP.VR. SUBBIAH சொன்னது…

////எல்லாவற்றையும் விட முதன்மையான யோசனை, உங்கள் பகுதியில் வலைப்பதிவாளர் சந்திப்பு நடந்தால் தவறாது கலந்து கொள்ளுங்கள்///

இது முக்கியமான விஷயம்
இதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது!
எதை எழுதினாலும் சுவாரசியமாக எழுதுங்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...


இது முக்கியமான விஷயம்
இதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது!
எதை எழுதினாலும் சுவாரசியமாக எழுதுங்கள்!

12:03 AM, September 24, 2008
//

நீங்களும் சுவாரிசியமாகத்தானே எழுதுனிங்க 'விடாது கருப்புவுக்கு ஒரு கேள்வின்னு' பதிவைப் போட்டிங்க, அதில் கவனம் பெற்றீர்கள், அதன்பிறகு தான் மாணவர் அணி உங்களுக்காக திரண்டது.
:)

நல்லதந்தி சொன்னது…

கோவி சார்! புதிய பதிவர்கள் பழைய பதிவர்களை ஏன் கண்டு கொள்ள வேண்டும்?.நான் முன்பு எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டேன்!.ஆனால் புதிய பதிவர்கள் பின்னூட்டமிட்டால் அதைப் பழைய புகழ் பெற்ற பதிவர்கள் அந்த பின்னுட்டத்தைக் கழிப்பதைப் போல எழுதும் போது எனக்குத் தோன்றுவது அவருடைய பதிவு என்ன கக்கூஸா?.,அவருடைய பதிவில் பின்னூட்டமிட அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா?.பதிவு உலகத்தில் உள்ளப் பதிவகர்களே இந்த அளவுக்கு தாம் புகழ் பெற்றதாக நினக்கும் போது பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளார்கள்.எவ்வள்வோ அலட்டிக் கொள்ள வேண்டும்?.பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளரகள் இம்மாதிரி ஆணவப் போக்கோடு அலட்டிக்கொள்வதை நான் பார்த்த நியாபகம், இல்லை!.ஆனால் ஒரு பதிவர்,அவ்ருடைய எல்லை எல்லையைத்தாண்டி அலட்டும் போது வருத்தம் வருகிறது!.எனென்றால் முன்பு சொன்ன பத்திரிக்கையாளாரை நாம் காணப் போவதும் இல்லை.அவருடன் எந்த தொடர்பும் இருக்கப் போவதுமில்லை.இணைய உலகம் கட்டற்ற சுதந்திரம் கொடுப்பதால் ஒருவருடைய பதிவிற்கு விமரிசனம் சொல்கிறோம்.அவருடைய உடனடி பதிலைப் பெறுகிறோம்.இப்படி சுதந்திரம் இருக்கும் போது மற்ற பதிவளார்களின் அதாவது சம்பந்தப் பட்ட பதிவாளாரின் கருத்தை தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பதில் வியப்பில்லையே?.ஆனால் இந்த ஆர்வத்தை களங்கப் படுத்தும் போது ஒரு பதிவர் கோபம் கொள்வதில் என்ன குற்றம் காணமுடியும்?.அதற்க்காக அவரை பதிவின் ஹிட்டிற்காக தன்னுடைய பெயரைப் பயன் படுத்துகிறார் என்று எழுதினால் அவருக்கு வரும் கோபம் நியாயமா இல்லையா?.எனென்றால் எல்லாப் பதிவர்களும் இம்மாதிரி வருவதில்லை,நினப்பதும் இல்லை.நான் உட்பட.. அவர்களுக்கு இம்மாதிரி எழுதுவதைப் பார்க்கும் போது அதுவும் இணையத்தில் நல்ல மாதிரி எழுதும் நண்பர்கள் எழுதும் போது கோபம் ஏற்படுவது இயற்கையே!.நான் இதற்கும் மேல் வளர்த்துக் கொண்டு போக விரும்ப வில்லை.ஆதனினால் புதிய பதிவர்களுக்கு ஆதரவு தாருங்கள்.அவர்கள் வரும் போதே இணய அரசியலில் அழிக்க நினக்காதீர்கள்.அது அவர்களுக்கு இழப்பல்ல!.இணயத்திற்க்குத்தான்!

கோவி.கண்ணன் சொன்னது…

//Thooya said...
இதை நான் வந்த காலத்தில் சொல்லியுருக்கலாம்...

10:51 PM, September 23, 2008
//

தூயா,

இப்போதெல்லாம் வாரத்துக்கு 10 - 15 புதியவர்கள் வருகிறீர்கள், அதனால் ஒரு வழிகாட்டுதலுக்காக எழுதினேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
நிஜமாகவே புதியவர்கள் பின்பற்றவேண்டிய விஷயங்களைச் சொல்லியுள்ளீர்கள்!
//
அப்படின்னா மொக்கைன்னு படிக்க ஆரம்பிச்சிங்களா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி said...
கோவி சார்! புதிய பதிவர்கள் பழைய பதிவர்களை ஏன் கண்டு கொள்ள வேண்டும்?.நான் முன்பு எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டேன்!.
//
நல்லதந்தி சார்,

நீங்க நெசமாவே முன்பு எழுதவில்லையா ?
:)

//அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா?.//

இங்கேயும் கலைஞர் பாலிடிக்ஸா ? வாழ்க நீ எம்மான்

//பதிவு உலகத்தில் உள்ளப் பதிவகர்களே இந்த அளவுக்கு தாம் புகழ் பெற்றதாக நினக்கும் போது பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளார்கள்.எவ்வள்வோ அலட்டிக் கொள்ள வேண்டும்?.பத்திரிக்கைகளில் எழுதும் எழுத்தாளரகள் இம்மாதிரி ஆணவப் போக்கோடு அலட்டிக்கொள்வதை நான் பார்த்த நியாபகம், இல்லை!.//

எல்லா இடத்திலும் அலட்டிக் கொள்பவர்கள் இருப்பார்கள், ஆனால் இங்கே ஊன்றி கவனிப்பதால், சுற்றி சுற்றி வருவதால், சின்ன விசயம் கூட பெரிசா எடுத்துக் கொள்கிறோம்.

//அவர்களுக்கு இம்மாதிரி எழுதுவதைப் பார்க்கும் போது அதுவும் இணையத்தில் நல்ல மாதிரி எழுதும் நண்பர்கள் எழுதும் போது கோபம் ஏற்படுவது இயற்கையே!.நான் இதற்கும் மேல் வளர்த்துக் கொண்டு போக விரும்ப வில்லை.ஆதனினால் புதிய பதிவர்களுக்கு ஆதரவு தாருங்கள்.அவர்கள் வரும் போதே இணய அரசியலில் அழிக்க நினக்காதீர்கள்.அது அவர்களுக்கு இழப்பல்ல!.இணயத்திற்க்குத்தான்!//

பதிவில் யாரும் ஆடவும் முடியாது ஆட்டி வைக்கவும் முடியாது, நல்ல எழுத்துத் திறமை உள்ளவர்களை யாராலும் திட்டமிட்டு புறக்கணிக்கவும் முடியாது.

அனுபவத்தை எழுதியது போல் எழுதி இருக்கீறீர்கள், நீங்கள் சொல்வது கூட சரியாகத்தான் இருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// சும்மா அதிருதுல said...
பின்னுட்டம் மட்டும் இடுபவர்களை அல்லது அனானியாக இடுபவர்களை
ஊக்க படுத்தி பதிவு இல்லையா..:)

11:46 PM, September 23, 2008
//.

இரவு 12 மணிக்கு உங்க ப்ரொபைல் படத்தைப் பார்த்தால் அதிரல, ஒதருது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//இளைய பல்லவன் said...
டாங்க்ஸ் கோவியாரே !

புதிய பதிவர்களின் கலங்கரை விளக்கம் நீங்க

நீங்க சொல்ரா மேரியே நடந்துக்கிறேன்

10:28 PM, September 23, 2008
//

நன்றி, எல்லாம் செய்முறையில் பின்பற்றிய வழிமுறைகள் தான். ஒர்க் அவுட் ஆகும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// அதிஷா said...
அண்ணா என்னைப்போன்ற புதியவனுக்கு மிகவும் பயனுள்ள பதிவு

கட்டாயம் இதனை மனதில் எழுதிவைத்து கடைபிடிக்கிறேன்

10:45 PM, September 23, 2008
//

ஹிஹி நீங்க எழுத வந்து 8 மாதம் ஆகுது, இன்னேரம் பழம் திண்ணு கொட்டை போட்டு செடியாக்கி இருப்பிங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

// பரிசல்காரன் said...
நான்தான் முதலா? ஆஆஆஆஆ
//

பரிசல்காரன் போனி நல்லா போகுது, பின்னூட்டம் தான் ! :(

// சரவணகுமரன் said...
நல்லா தொகுத்து வழங்கி இருக்கீங்க...

10:34 PM, September 23, 2008
//

பாராட்டுக்கு நன்றி !

நாமக்கல் சிபி சொன்னது…

நல்லதந்தி!

ஒரு காலத்தில் யார் புதுசா பதிவு போட்டாலும் போட்டி போட்டுக் கொண்டு போயி முதல் பின்னூட்டமெல்லாம் போட்டுக் கொண்டுதானிருந்தோம்!

ஒரு பக்கம் அவர்களை உற்சாகப் படுத்தற மாதிரியும் இருக்கும். (இன்னொரு பக்கம் நம்ம பதிவுகளுக்கு வாசகர் வட்டம் அதிகமாகும் என்ற சுயநலமும் கூடத்தான்). அப்படி இருந்த காலத்துலதான் புதுப்புதுப் பேருல பழைய ஆளுகளே சிலபேரு வந்து சிலபேரை சிக்கல்ல மாட்டி விட்டாங்க!

அதான் இப்ப யாராவது புதுசா வந்தாலும் எங்களை மாதிரி ஆட்கள் கொஞ்சம் யோசிச்சே கமெண்ட் போடுறோம்! ஆனா நல்லா நகைச்சுவையாவோ/சீரியஸானா விஷயமாவோ/மொக்கையாவோ ரசிக்கக் கூடியதாக இருந்தா கண்டிப்பா படிச்சிகிட்டித்தான் இருக்கோம்!

அவர்களுக்கான ஊக்குவிப்பும் உற்சாகமும் தானக வரும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
நிஜமாகவே நல்ல யோசனைகள் கோவி.கண்ணன். என்ன, இந்த குழு சேர்தலால் ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கு புதிய பதிவர்களுடன் தொடர்பே அற்றுப்போய் விட்டது. நேரமின்மையால் ரீடரில் இருக்கும் 20 அல்லது 30 பதிவர்களின் பதிவுகளையேதான் படித்து வருகிறேன். :(

10:45 PM, September 23, 2008
//

வெண்பூ,

வேலை இருப்பதால் பதிவிட முடியலை என்று வருந்தாதீர்கள்.
வேலை தான் முதன்மையானது, பதிவு எப்போது வேண்டுமானாலும் எழுதலாம், குழுசேர்க்கலாம், கும்மி அடிக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
:-)))...

ஐடியா கிடங்கு!!!!
//

வாய்யா, பதிவு எழுத தொடங்கும் ஐடியா எதுவும் இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//அனுஜன்யா said...
அண்ணா,

என்னை அந்த ஸ்டார் லிஸ்டுல சேர்த்து விட்டாச்சா! ஆனால் உங்கள் அவதானிப்பு அபாரம். உங்கள் 'எளிய வழிகள்' உண்மையிலேயே பயனுள்ளவை. ஒரே ஒரு சிந்தனை. பரிசல்/வேலன்/லக்கி/நீங்கள் எவ்வளவு எழுதினாலும், தினந்தோறும் பதிவுகள் வந்துகொண்டிருந்தாலும், தரம் எப்போதும் தாழ்வதில்லை. ஒரு பரபரப்புக்கு என்று மட்டும் போட ஆரம்பித்தால், நிறைய (அதிக என்று போட நினைத்து உங்களுக்கு பயந்து, ச்சே, அஞ்சி மாற்றிவிட்டேன்) நாள் தாக்குப் பிடிக்க முடியாது அல்லவா. பல்வேறு வாசிப்பும் தேவை அல்லவா.//

பரிசல் அண்ட் குழுவை கவனித்து தான் எழுதினேன் :) பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி !

//அனுஜன்யா

பி.கு. : நிறைய நாட்கள் ஆகிவிட்டன நீங்கள் அங்கு வந்து
//

வாசிப்பு குறைந்துவிட்டது, நீங்கள் வேண்டுமானால் தமிழ்மணம் பதிவர் பின்னூட்டதிரட்டியில் பாருங்க, பிறர் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடுவதும் குறைந்துவிட்டது. ஓரளவு பரவலாக படித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்தவாரம் எல்லோருக்கும் பின்னூட்டம் தான்.
:))))))))

நல்லதந்தி சொன்னது…

நான் எப்போதுமே லக்கிலுக் என்ற பெயரைப் பய்ன் படுத்தியது இல்லை!.இனிமேலும் பயன் படுத்த வேண்டிய அவசியமும் இராது!.நான் இதுவரை ஐம்பது இடுகைகள் இட்டிருக்கிறேன்!.(இதே எனக்கு பெரிய ஆச்சரியம்!)அதில்,துரதிர்ஷ்ட வசமாக நாற்பத்திற்கும் மேல் தமிழ் மணத்திலும் சரி,தமிழிஷிலும் ஹிட்டானது. அதற்க்காக என் வீட்டில் எந்த அடுப்பும் எரியாது!.இந்த ஹிட் வியாதி இயல்பாகவே இணையத்தில் ”அடிக்ட்” ஆனவர்களுக்கு வரும் போல் இருக்கிறது!.நல்லவேளை எனக்கு அது இதுவரை இல்லை.இனிமேலும் வருவற்கு வாய்புகள் குறைவு.
அம்மாதிரி லக்கிலுக் பெயரைப் போட்டு எழுதினால்தான் ஹிட் ஆகும் என்ற நிலைவந்தால் (அவர்தான் இதைச் சொன்னார்) இணையத்தில் எழுத நினைக்க மாட்டேன்.பிளீச்சிங் பெளடர் சொன்னது போல் எனக்கு வேறு வேலை இருக்கிறது!.அவராவது பொட்டி தட்டுவார் போலிருக்கிறது.எனக்கு கம்ப்யூட்டர் பக்கமே வர வேண்டிய அவசியம் இருக்காது! :). இவ்வளவையும் இவன் ஏண்டா இங்கே கொட்டிட்டி போறான் என்று நினைத்தால், எனக்குத் தெரிந்து எல்லாத் தரப்பினரையும் அரவணைத்துப் போகிற பக்குவம் உங்ககிட்ட இருக்கு,நீங்க நல்லவரு,வல்லவருன்னு சொல்லற்தை விட(அது நிஜம்தான்!).நீங்க இந்தப் பதிவைப் போட்டதுதான் காரணம்.அதனால என்னை நீங்கள் தூண்டி விட்டுட்டீங்க.எனவே..இ.பி.கோ/302 ம் செக்க்ஷன்படி......? ... :)

Thamira சொன்னது…

புதிய பதிவர்களின் கலங்கரை விளக்கம் நீங்க// ரிப்பீட்டு.!

manikandan சொன்னது…

ரொம்ப சிம்பிள் அட்வைஸ் புதிய பதிவர்களுக்கு :- ஹிட் கவுண்டர் வைக்காதீங்க. தமிழ்மணத்துல சேராதீங்க. தமிளிஷ்ள பிரசுரம் பண்ணாதீங்க. உங்களுக்கு புடிச்சத மட்டும் எழுதுங்க. உங்களுக்கு புடிச்ச பதிவுக்கு மட்டும் பதில் எழுதணும்ன்னு தோணினா பின்னூட்டம் எழுதுங்க. ஒரு அஞ்சி இல்லாட்டி ஆறு மாசம் கழிச்சி கூட உங்களுக்கு எழுத மேட்டர் இருந்ததுனா தமிழ்மணம்ல சேருங்க, தமிளிஷ்ள பிரசுரம் பண்ணுங்க. எல்ல தில்லாலங்கடி வேலையும் செய்யுங்க உங்க பதிவ பிரபலபடுத்த.

நல்லதந்தி சொன்னது…

//ரொம்ப சிம்பிள் அட்வைஸ் புதிய பதிவர்களுக்கு :- ஹிட் கவுண்டர் வைக்காதீங்க. தமிழ்மணத்துல சேராதீங்க. தமிளிஷ்ள பிரசுரம் பண்ணாதீங்க. உங்களுக்கு புடிச்சத மட்டும் எழுதுங்க. உங்களுக்கு புடிச்ச பதிவுக்கு மட்டும் பதில் எழுதணும்ன்னு தோணினா பின்னூட்டம் எழுதுங்க. ஒரு அஞ்சி இல்லாட்டி ஆறு மாசம் கழிச்சி கூட உங்களுக்கு எழுத மேட்டர் இருந்ததுனா தமிழ்மணம்ல சேருங்க, தமிளிஷ்ள பிரசுரம் பண்ணுங்க. எல்ல தில்லாலங்கடி வேலையும் செய்யுங்க உங்க பதிவ பிரபலபடுத்த.//

சும்மாவே இருங்க! அப்படிங்கிறத இவ்ளோ சுத்தி வளைச்சி சொல்லனுமா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி said...
நான் எப்போதுமே லக்கிலுக் என்ற பெயரைப் பய்ன் படுத்தியது இல்லை!.இனிமேலும் பயன் படுத்த வேண்டிய அவசியமும் இராது!.நான் இதுவரை ஐம்பது இடுகைகள் இட்டிருக்கிறேன்!.(இதே எனக்கு பெரிய ஆச்சரியம்!)அதில்,துரதிர்ஷ்ட வசமாக நாற்பத்திற்கும் மேல் தமிழ் மணத்திலும் சரி,தமிழிஷிலும் ஹிட்டானது. அதற்க்காக என் வீட்டில் எந்த அடுப்பும் எரியாது!.இந்த ஹிட் வியாதி இயல்பாகவே இணையத்தில் ”அடிக்ட்” ஆனவர்களுக்கு வரும் போல் இருக்கிறது!.நல்லவேளை எனக்கு அது இதுவரை இல்லை.இனிமேலும் வருவற்கு வாய்புகள் குறைவு.
அம்மாதிரி லக்கிலுக் பெயரைப் போட்டு எழுதினால்தான் ஹிட் ஆகும் என்ற நிலைவந்தால் (அவர்தான் இதைச் சொன்னார்) இணையத்தில் எழுத நினைக்க மாட்டேன்.பிளீச்சிங் பெளடர் சொன்னது போல் எனக்கு வேறு வேலை இருக்கிறது!.அவராவது பொட்டி தட்டுவார் போலிருக்கிறது.எனக்கு கம்ப்யூட்டர் பக்கமே வர வேண்டிய அவசியம் இருக்காது! :). இவ்வளவையும் இவன் ஏண்டா இங்கே கொட்டிட்டி போறான் என்று நினைத்தால்//

ஓ ஓ மறுபடியும் பாலிடிக்ஸ், நான் வரலை, இரண்டு பேருக்கும் இடையில் கொடுக்கல் வாங்கல் இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளுங்க, ஆனால் என்னை பஞ்சாயத்துக்கு கூப்பிடாதிங்க (அவரு கூப்பிடமாட்டார்) பஞ்சாயத்து பண்ணப் போய் பஞ்சர் ஆகி இருக்கிறேன். பெரிதாக பாதிப்பு இல்லை, இருந்தாலும் வேண்டாத வேலை அது.

நான் எஸ்கேப்பு ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
நல்லதந்தி!

ஒரு காலத்தில் யார் புதுசா பதிவு போட்டாலும் போட்டி போட்டுக் கொண்டு போயி முதல் பின்னூட்டமெல்லாம் போட்டுக் கொண்டுதானிருந்தோம்!

ஒரு பக்கம் அவர்களை உற்சாகப் படுத்தற மாதிரியும் இருக்கும். (இன்னொரு பக்கம் நம்ம பதிவுகளுக்கு வாசகர் வட்டம் அதிகமாகும் என்ற சுயநலமும் கூடத்தான்). அப்படி இருந்த காலத்துலதான் புதுப்புதுப் பேருல பழைய ஆளுகளே சிலபேரு வந்து சிலபேரை சிக்கல்ல மாட்டி விட்டாங்க!

அதான் இப்ப யாராவது புதுசா வந்தாலும் எங்களை மாதிரி ஆட்கள் கொஞ்சம் யோசிச்சே கமெண்ட் போடுறோம்! ஆனா நல்லா நகைச்சுவையாவோ/சீரியஸானா விஷயமாவோ/மொக்கையாவோ ரசிக்கக் கூடியதாக இருந்தா கண்டிப்பா படிச்சிகிட்டித்தான் இருக்கோம்!

அவர்களுக்கான ஊக்குவிப்பும் உற்சாகமும் தானக வரும்!
//

பித்தானந்தா, தங்கள் திருவாக்கும் மிகச் சரியே

வள்ளிமகன் சொன்னது…

நன்றி கோ.வி.க. ஐயா!

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
சரிங்க , அப்படியே எல்லாரும் நம்ம பக்கம் வாங்க

11:02 PM, September 23, 2008//

வருவாங்க வருவாங்க, நல்லகாலம் பிறக்கும் !
:)


//The Rebel said...
பயனுள்ள பதிவு..
நன்றி..

11:11 PM, September 23, 2008
//

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//தாமிரா said...
புதிய பதிவர்களின் கலங்கரை விளக்கம் நீங்க// ரிப்பீட்டு.!

12:34 AM, September 24, 2008
//

:)) ஹிஹி நன்றி !

நல்லதந்தி சொன்னது…

//நல்லதந்தி சார்,

நீங்க நெசமாவே முன்பு /எழுதவில்லையா ?/
என்னங்க கோவி சார் இப்படி சொல்றீங்க? :(
//இருந்த காலத்துலதான் புதுப்புதுப் பேருல பழைய ஆளுகளே சிலபேரு வந்து சிலபேரை சிக்கல்ல மாட்டி விட்டாங்க!//


அடப்பாவிகளா?.இதுவும் எனக்கா?

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி said...

நீங்க நெசமாவே முன்பு /எழுதவில்லையா ?/
என்னங்க கோவி சார் இப்படி சொல்றீங்க? :(
//

நல்லா எழுதுறிங்க, அதனால் கேட்டேன்.

//அடப்பாவிகளா?.இதுவும் எனக்கா?
//
ஏன் பாதர் குதுருக்குள்ளே இல்லைன்னு சொல்லனும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

// வள்ளி said...
நன்றி கோ.வி.க. ஐயா!

12:56 AM, September 24, 2008
//

உங்களுக்கும் நன்றி !

CA Venkatesh Krishnan சொன்னது…

என்னுடைய கமென்டை ரிப்பீட்டிய தாமிராவுக்கு நன்றி ! ! !

அதற்கு நன்றி தெரிவித்த கோவியாருக்கு நன்றி ! ! !

நல்லதந்தி சொன்னது…

//நல்லா எழுதுறிங்க, அதனால் கேட்டேன்./
ரொம்ப பொய் சொல்லுவீங்க போல! :))

புதுகை.அப்துல்லா சொன்னது…

பரிசல், வடகரைவேலன் அண்ணாச்சி, அனுஜன்யா, வெண்பூ இன்னும் பலர்
//

பரிசல் அணியில் அந்த இன்னும் பலரில் எனக்குத் தெரிந்த சிலர் நான்,தாமிரா,ராப்,ச்சின்னப்பையன்,வழிப்போக்கன்(கொஞ்சநாளா தலைமறைவு ஆயிட்டாரு),கிரி,ஜோசப் பால்ராஜ்,விஜய் ஆனந்த்,கார்க்கி,இன்னும் சிலர் :))

புருனோ Bruno சொன்னது…

இதில் சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை :(
--
என்னைப்பொருத்த வரை சில யோசனைகள்

1. வெட்டி ஒட்டுவதை தவிர்க்கவேண்டும்

2. 2 வரி எழுதினாலும் சொந்தமாக எழுத வேண்டும்

3. மறுமொழியில் மாற்று கருத்து கூறப்பட்டால் - உங்கள கருத்தை வலியுருத்த ஆதாரம் அளிக்க வேண்டும் அல்லது உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்

// உங்களைப் போல் யார் யாரெல்லாம் புதிய பதிவர்கள் என்று அடையாளம் காணுங்கள்//

அதே போல் --> நீங்கள் எழுத நினைக்கும் தலைப்புகளில் எழுதும் (புதிய / பழைய / பெயருள்ள / அனானி) பதிவர்களை அடையாளம் கண்டு அங்கு மறுமொழிகளை எழுதுவது என்னைப்பொருத்த வரை சிறந்த யோசனை.

இதில் உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து கொண்டவர்களின் பதிவை தவிர்க்காமல் அங்கு கூட உங்களின் (பொறுத்தமான, அந்த இடுகைக்கு சம்பந்தமுள்ள) கருத்துக்களை பதியலாம்

உதாரணம் :
ஜோதிடம் உண்மை x பொய்
இடப்பங்கீடு வேண்டும் x வேண்டாம்
பொதுவுடமை x முதலாளித்துவம்
--
கோவி சார், தவறென்றால் கூறவும்

பெயரில்லா சொன்னது…

சரியான வழிகாட்டுதல் கோவி.

நான் மே 2008ல் இருந்துதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஒரு 6 மாதம் வலையில் எல்லோருடைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருந்தேன். கோவைராஜா என்ற பெயரில் சில பதிவுகளில் பின்னூட்டம் கூட இட்டிருக்கிறேன். சூட்சுமம் புரிந்த பின் தான் எழுதத் தொடங்கினேன்.

புதுப் பதிவர்கள் அனேகருக்கு தங்களை வகைப் படுத்திக் கொள்வதில் சிரமமிருக்கிறது. தமிழ்மணத்தில் xxx பிரச்சினை வந்தபோது புதியவர்கள் இரு பக்கமும் பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்தனர்.

சீனியர் பதிவர்களின் பழைய பதிவுகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வளர்ச்சியும் பரிணாமமும் தெரியும்.

வளரும் பதிவருக்கு, ஒரு சீனியர் பதிவரின் நெருக்கம் அவசியம்.

மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல், தாங்கள், ஜோசப், பரிசல், வெயிலான், கிரி, அனுஜன்யா, புதுகை அப்துல்லா, வெண்பூ, அதிஷா, ஷென்ஷி, ராப், வால்பையன், தமிழ் பிரியன், சின்னப் பையன், சஞ்சய், விக்கி போன்றவர்களுடனான உறவு ஒரு தைரியத்தைத் தருகிறது. இது கூடுதல் பலம்.

தமிழன்-கறுப்பி... சொன்னது…

:(

தமிழன்-கறுப்பி... சொன்னது…

:((

தமிழன்-கறுப்பி... சொன்னது…

நானும் புதிய பதிவர்தான் கோவி அண்ணே...:)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

நம்மளை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாய்ங்கப்பா...;)

தமிழன்-கறுப்பி... சொன்னது…

இதைபக்கூட ஒரு பதிவா போடலாம்கிறதும் ஒரு ஐடியாதான்...

மூத்த பதிவர் கோவி கண்ணன் அண்ணன் வாழ்க...

துளசி கோபால் சொன்னது…

என்னுடைய ஒரு வேண்டுகோள் புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும்,

எது எழுதுனாலும் உங்கச் சொந்த வார்த்தைகளில் (நாலே நாலுவரியானாலும் பாதகமில்லை)எழுதுங்க. இந்த கட் & பேஸ்ட் வேணாமே தயவுசெஞ்சு.

என்னுடைய ஆரம்பகாலப் பதிவுகளில் எண்ணி மூணு பின்னூட்டம் வந்துருந்தால் அதிகம்.

நாம் எழுதுவது நம்முடைய மனதிருப்திக்குன்னு நினைச்சுக்கணும்.

மற்றபடி கோவியார் சொன்னதுக்கு ரிப்பீட்டேய்.......

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன் said...
//SP.VR. SUBBIAH said...


இது முக்கியமான விஷயம்
இதைவிட முக்கியமானது ஒன்று உள்ளது!
எதை எழுதினாலும் சுவாரசியமாக எழுதுங்கள்!

12:03 AM, September 24, 2008
//

நீங்களும் சுவாரிசியமாகத்தானே எழுதுனிங்க 'விடாது கருப்புவுக்கு ஒரு கேள்வின்னு' பதிவைப் போட்டிங்க, அதில் கவனம் பெற்றீர்கள், அதன்பிறகு தான் மாணவர் அணி உங்களுக்காக திரண்டது.
:)
//

கோவியாரே,
நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கிறீர்கள்!
பதிவுலகிற்கு வந்த புதிதில் எனக்கு விடாது பல
பின்னூட்டங்கள் வந்தன. கருப்பு,சிவப்பு வெள்ளை,பச்சை என பலவகைப்பட்டது.
எல்லாத்தையும் மட்டுறுத்திதான் பிரசுரம் செய்ய வேண்டியிருந்தது.

SurveySan சொன்னது…

இப்படி உசுப்பேத்தி விட்டு தான் இன்னிக்கு பலபேரு வாழ்க்கைய தொலச்சுட்டு, இங்கணயே கும்மிக்கினு அலையரானுவ ;)

குசும்பன் சொன்னது…

அண்ணே நீங்க கலங்கரை விளக்கம், இதன் படி இனி நடக்க முயற்சிக்கிறேன்.

☀நான் ஆதவன்☀ சொன்னது…

எங்க கஷ்டம் உங்களுக்காவது தெரிஞ்சிருக்கே அது வரைக்கும் சந்தோஷம்

Tech Shankar சொன்னது…

Neenga nallavaraa ? kettavaraa?

Idea supernga..

thanks

by

Unga dear dude

அமிர்தவர்ஷினி அம்மா சொன்னது…

Dear Senior

thanks for your tips.

will follow accordingly

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

என் போன்றோருக்கு உதவியாக, நாங்களும் பிரபலமடையும் வழிமுறைகளை விளக்கி வழிகாட்டும் பதிவுலக பீஷ்மர் கோவியாருக்கு கோடானு கோடி நன்றிகள்.

முரளிகண்ணன் சொன்னது…

நீங்க மூத்த பதிவர்ன்னு இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே

லக்கிலுக் சொன்னது…

உங்கள் யோசனைகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி!!

Keddavan சொன்னது…

புதிய பதிவர்களுக்கு நீங்கள் அழிக்கும் ஆதரவு மனதிற்க்கு மகிழ்ச்சி அழிக்கின்றது..

சங்கணேசன் சொன்னது…

//நல்லதந்தி சொன்னது...

புதிய பதிவர்கள் பின்னூட்டமிட்டால் அதைப் பழைய புகழ் பெற்ற பதிவர்கள் அந்த பின்னுட்டத்தைக் கழிப்பதைப் போல எழுதும் போது எனக்குத் தோன்றுவது அவருடைய பதிவு என்ன கக்கூஸா?.,அவருடைய பதிவில் பின்னூட்டமிட அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா? //

இந்தளவிற்கு வார்த்தைகளால் கோபமில்லையென்றாலும்..நிச்சியம் லக்கிலுக் மீது கோபமுண்டு...ஏனென்றால் யார்மீதோ உள்ள கோபத்தையெல்லாம் பொதுவாக கொட்டியிருந்தார்..

//லக்கிலுக் சொன்னது... சரக்கிருக்கிருந்தால் ஒரு நாளைக்கு 2 பதிவுகூட போடுவேன், சரக்கில்லாதவந்தான் பின்னூட்டத்தில் வந்து விமர்ச்சனம் செய்வான், வாந்தியெடுப்பான், ...கழிவு..etc..etc.//

திருமணத்திற்கு பின்பு புத்தகம் படிக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறதேயென்று (”ஏங்க வேலைக்கு போயிட்டு வந்து எங்ககூட கொஞ்சம் நேரம்கூட பேசாம புத்தகத்தை எடுத்துட்டு உட்கார்ந்தால் எப்படி”-கேள்வி நியாயமோ?) கவலைப்பட்டு கொண்டிருந்த வேளையில் தமிழ்மணம் பார்த்து மணம்மகிழ்ந்தவன் நான்..(நான் ஆபிசில்தானே த.ம. படிக்கிறேன்..பின்னூட்டமிடுவது எல்லமே)..

நிஜமாகவே மனதிற்கு பிடித்திருந்தால் அந்தந்த பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு வருவேன்.. கழிவுகள் என்றால் எப்படி?..


லுக்கிலுகின் பதிவை படித்துவிட்டு அவருக்குத்தான் பின்னூட்டமிட முடியுமே தவிர.. பரிசலுக்கா பின்னூட்டமிடமுடியும்..
..சரக்கு...வாந்தி..கழிவு..நேர்த்தியான எழுத்தாளர்க்கு(இது நிஜமாகவே பாராட்டுதான்) இது அழகா?..
..
//நல்லதந்தி,..
அதாவது கழிக்க கலைஞர் என்ற ஒரு ரூபாய் பணமோ அல்லது சூப்பர் என்ற சொல் ஒரு ரூபாய் பணமோ கொடுக்க வேண்டுமா?.//
//கோவி..
இங்கேயும் கலைஞர் பாலிடிக்ஸா ? வாழ்க நீ எம்மான்//
ரெண்டுமே சூப்ப்ர்...

இன்னும் சொல்லலாம்..போதுமே!!

நல்லதந்தி சார், எப்படி எனக்கு தோன்றியதே உங்களுக்கும்..

நல்லது..நன்றி கோவியார்க்கு களம் தந்ததற்கு..

BLOG -ல் மார்க் வேண்டும்
BLOCK MARK -காக வேண்டாம்

சி தயாளன் சொன்னது…

அடடா.. என்னா கற்பனை...!

சங்கணேசன் சொன்னது…

//லுக்கிலுகின் பதிவை படித்துவிட்டு அவருக்குத்தான் பின்னூட்டமிட முடியுமே தவிர.. பரிசலுக்கா பின்னூட்டமிடமுடியும்..//

பரிசல் தமிழ்மணத்திற்கு வருவதற்கு முன்பே தெரியுமென்பதால் உரிமையுடன் அவர் பெயரை பயன்படுத்திக்கொண்டேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//இளைய பல்லவன் said...

என்னுடைய கமென்டை ரிப்பீட்டிய தாமிராவுக்கு நன்றி ! ! !

அதற்கு நன்றி தெரிவித்த கோவியாருக்கு நன்றி ! ! !//
இளைய பல்லவன், நன்றிக்கு மீண்டும் நன்றி !


//நல்லதந்தி said...

//நல்லா எழுதுறிங்க, அதனால் கேட்டேன்./
ரொம்ப பொய் சொல்லுவீங்க போல! :))//
சூழலுக்கு ஏற்றார் போல் சொல்வது எல்லோருக்கும் பொதுவானது தானே, வள்ளுவரே சொல்லி இருக்காரு இல்லே (வள்ளுவர் பொய் சொல்ல இருக்காருன்னு சொல்லவில்லை :) , சூழலைப் பொருத்து சுயநலம் இல்லாமல் சொல்லலாம் என்றார்)


//புதுகை.அப்துல்லா said...

பரிசல், வடகரைவேலன் அண்ணாச்சி, அனுஜன்யா, வெண்பூ இன்னும் பலர்
//

பரிசல் அணியில் அந்த இன்னும் பலரில் எனக்குத் தெரிந்த சிலர் நான்,தாமிரா,ராப்,ச்சின்னப்பையன்,வழிப்போக்கன்(கொஞ்சநாளா தலைமறைவு ஆயிட்டாரு),கிரி,ஜோசப் பால்ராஜ்,விஜய் ஆனந்த்,கார்க்கி,இன்னும் சிலர் :))//
அப்துல்லா, பரிசல் அணியின் ஒருங்கிணைப்பாளர் பரிசல் தான். குசும்பனை பரிசல் குழுவுடன் கோர்த்துவிட்ட திருப்பணியை அடியேன் தான் செய்தேன். ச்சின்னப்பையன் பரிசலுக்கு சீனியர் :)


//புருனோ Bruno said...

இதில் சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை :(
--
என்னைப்பொருத்த வரை சில யோசனைகள்

1. வெட்டி ஒட்டுவதை தவிர்க்கவேண்டும்

2. 2 வரி எழுதினாலும் சொந்தமாக எழுத வேண்டும்

3. மறுமொழியில் மாற்று கருத்து கூறப்பட்டால் - உங்கள கருத்தை வலியுருத்த ஆதாரம் அளிக்க வேண்டும் அல்லது உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்

// உங்களைப் போல் யார் யாரெல்லாம் புதிய பதிவர்கள் என்று அடையாளம் காணுங்கள்//

அதே போல் --> நீங்கள் எழுத நினைக்கும் தலைப்புகளில் எழுதும் (புதிய / பழைய / பெயருள்ள / அனானி) பதிவர்களை அடையாளம் கண்டு அங்கு மறுமொழிகளை எழுதுவது என்னைப்பொருத்த வரை சிறந்த யோசனை.

இதில் உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து கொண்டவர்களின் பதிவை தவிர்க்காமல் அங்கு கூட உங்களின் (பொறுத்தமான, அந்த இடுகைக்கு சம்பந்தமுள்ள) கருத்துக்களை பதியலாம்

உதாரணம் :
ஜோதிடம் உண்மை x பொய்
இடப்பங்கீடு வேண்டும் x வேண்டாம்
பொதுவுடமை x முதலாளித்துவம்
--
கோவி சார், தவறென்றால் கூறவும்//
புரூனோ, நீங்கள் சொன்னால் தவறாக இருக்குமா ? :) மாற்று கருத்து உண்டு, ஏற்கனவே எழுத்துப்பயிற்சி உள்ளவர்கள், எதை எழுத வேண்டும் என்று தீர்மானத்துடனேயே எழுத வந்திருப்பார்கள், புதியவர்களுக்கு எழுத்து பயிற்சியும், அறிமுகமும் கிடைக்க கொஞ்ச நாட்கள் ஆகும், அதற்குள் அவர்கள் 'கருத்து' எழுத கொஞ்சம் தயக்கமாகவே இருக்கும். வெட்டி ஒட்டுவதை கண்டிப்பாக தவிர்க்கனும், அப்படி செய்தால் சரக்கு இல்லைன்னு நினைத்துவிடுவார்கள். கைதேர்ந்த எழுத்தாளர், சமூகப்பார்வையாளர்கள் மட்டுமே ஆதரத்துடன் எழுதுவார்கள், எழுத்தின் தொடக்கத்தில் இருப்பவர்களுக்கு அது கடினம் தான். அடுத்து எதிர்கருத்து குறித்து நீங்கள் சொல்லி இருப்பது மிகச் சரி, ஒவ்வொருவருக்கும் மாற்றுப்பார்வை, மாற்றுக்கருத்து அல்லது மேம்பட்ட ஒத்த கருத்து இருக்கும், அவற்றை தனிப்பதிவாக இட்டு எழுத்துத் திறமையை மேம்படுத்திக் கொள்ளலாம்


//வடகரை வேலன் said...
சரியான வழிகாட்டுதல் கோவி.

நான் மே 2008ல் இருந்துதான் எழுதத் தொடங்கினேன். ஆனால் ஒரு 6 மாதம் வலையில் எல்லோருடைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருந்தேன். கோவைராஜா என்ற பெயரில் சில பதிவுகளில் பின்னூட்டம் கூட இட்டிருக்கிறேன். சூட்சுமம் புரிந்த பின் தான் எழுதத் தொடங்கினேன்.

புதுப் பதிவர்கள் அனேகருக்கு தங்களை வகைப் படுத்திக் கொள்வதில் சிரமமிருக்கிறது. தமிழ்மணத்தில் xxx பிரச்சினை வந்தபோது புதியவர்கள் இரு பக்கமும் பின்னூட்டம் இட்டுக் கொண்டிருந்தனர்.

சீனியர் பதிவர்களின் பழைய பதிவுகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வளர்ச்சியும் பரிணாமமும் தெரியும்.

வளரும் பதிவருக்கு, ஒரு சீனியர் பதிவரின் நெருக்கம் அவசியம்.

மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல், தாங்கள், ஜோசப், பரிசல், வெயிலான், கிரி, அனுஜன்யா, புதுகை அப்துல்லா, வெண்பூ, அதிஷா, ஷென்ஷி, ராப், வால்பையன், தமிழ் பிரியன், சின்னப் பையன், சஞ்சய், விக்கி போன்றவர்களுடனான உறவு ஒரு தைரியத்தைத் தருகிறது. இது கூடுதல் பலம்.


//
வடகரை அண்ணாச்சி,
உங்களைப் போல் தான் நானும் பதிவுகளை ஆறுமாதம் வாசித்துவிட்டு எழுத வந்தேன், அப்போது பின்னூட்டம் போடவில்லை. நீங்கள் குறிப்பிட்டு இருப்பவைகளும் நல்ல தகவல்கள் வழிகாட்டல்கள், பாராட்டுக்கள் மற்றூம் நன்றி.



//தமிழன்... said...

நானும் புதிய பதிவர்தான் கோவி அண்ணே...:)//
இன்று புதிதாக பிறந்தோம், ஒவ்வொரு நாள் பதிவும் எனக்கு புது பதிவுதான், நானும் புதிய பதிவர்தான் :)


//தமிழன்... said...

நம்மளை யாருமே கண்டுக்க மாட்டேங்கிறாய்ங்கப்பா...;)//
கவலைப்படாதிங்க எல்லாவற்றிற்கும் 'காலம்' வரும்


//தமிழன்... said...

இதைபக்கூட ஒரு பதிவா போடலாம்கிறதும் ஒரு ஐடியாதான்...

மூத்த பதிவர் கோவி கண்ணன் அண்ணன் வாழ்க...//



மூத்தப்பதிவர்கள் யாருமில்லை, எழுத்தனுபவமிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள், பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தில் எதிர்நீச்சல் போடுபவர்கள் பலர் இருக்கிறார்கள், ரத்னேஷ், ஜமாலன் போன்றவர்கள் பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தை எழுதி பிழிந்தவர்கள் :) நான் அவங்களுக்கெல்லாம் ஜூனியர். வாழ்த்துக்கு நன்றி !



//துளசி கோபால் said...

என்னுடைய ஒரு வேண்டுகோள் புதியவர்களுக்கும் பழையவர்களுக்கும்,

எது எழுதுனாலும் உங்கச் சொந்த வார்த்தைகளில் (நாலே நாலுவரியானாலும் பாதகமில்லை)எழுதுங்க. இந்த கட் & பேஸ்ட் வேணாமே தயவுசெஞ்சு.

என்னுடைய ஆரம்பகாலப் பதிவுகளில் எண்ணி மூணு பின்னூட்டம் வந்துருந்தால் அதிகம்.

நாம் எழுதுவது நம்முடைய மனதிருப்திக்குன்னு நினைச்சுக்கணும்.

மற்றபடி கோவியார் சொன்னதுக்கு ரிப்பீட்டேய்.......//
துளசி அம்மா, பதிவுலகம் பற்றி அனைத்தும் அறிந்த பதிவு மாதா மற்றும் பதிவானந்தமயி தாங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும், புதிய பதிவர்களுக்கு உங்கள் பின்னூட்டம் தானே பிள்ளையார் சுழி.


//ஜோதிபாரதி said...


கோவியாரே,

பதிவுலகிற்கு வந்த புதிதில் எனக்கு விடாது பல
பின்னூட்டங்கள் வந்தன. கருப்பு,சிவப்பு வெள்ளை,பச்சை என பலவகைப்பட்டது.
எல்லாத்தையும் மட்டுறுத்திதான் பிரசுரம் செய்ய வேண்டியிருந்தது.//
ஜோதிபாரதி,

அதெல்லாம் பழைய(ர்) அனுபவம், அந்த அனுபவங்களெல்லாம் புதியவர்களுக்கு ஏற்படவேண்டாம் என்று வாழ்த்துவோம்.


//SurveySan said...

இப்படி உசுப்பேத்தி விட்டு தான் இன்னிக்கு பலபேரு வாழ்க்கைய தொலச்சுட்டு, இங்கணயே கும்மிக்கினு அலையரானுவ ;)

//



இட்லிவடை யாருன்னு நீங்க சர்வே வைத்தது போல் சர்வேசன் யாருன்னு சர்வே வைக்க வேண்டும் :) எல்லோரும் மண்டையைப் பிச்சிக்கிறாங்களாமே.



//குசும்பன் said...

அண்ணே நீங்க கலங்கரை விளக்கம், இதன் படி இனி நடக்க முயற்சிக்கிறேன்.//
தம்பி குசும்பா, கண்ணு கலங்குதடா :)))))))))


//நான் ஆதவன் said...

எங்க கஷ்டம் உங்களுக்காவது தெரிஞ்சிருக்கே அது வரைக்கும் சந்தோஷம்//

அனுபவம் பாடம் தான், புதியவர்களுக்கு பயனாக இருக்கும் என்பதற்காக எழுதினேன். உங்கள் மகிழ்ச்சியும் எனக்கு நெகிழ்ச்சியாக இருக்கிறது
//தமிழ்நெஞ்சம் said...


//Neenga nallavaraa ? kettavaraa?// தெரியலையே :))))

Idea supernga..

thanks

by

Unga dear dude//
பாராட்டுக்கு நன்றி !


//AMIRDHAVARSHINI AMMA said...

Dear Senior

thanks for your tips.

will follow accordingly//
முடிந்த அளவு பின்பற்றுங்கள், டாக்டர் புரூனோ சொல்வதையும், வடகரை வேலன் அண்ணாச்சி மற்றும் துளசி அம்மா சொல்வதையும் பின்பற்றுங்கள். நன்றி !


//ஜோசப் பால்ராஜ் said...

என் போன்றோருக்கு உதவியாக, நாங்களும் பிரபலமடையும் வழிமுறைகளை விளக்கி வழிகாட்டும் பதிவுலக பீஷ்மர் கோவியாருக்கு கோடானு கோடி நன்றிகள்.//
நீங்கள் ஏற்கனவே லக்கி லுக்குக்கு எதிர்பதிவு போட்டு, பதிவர் சந்திப்பு நடத்தி அறியப்பட்டவர் ஆகிட்டிங்க, அதனால் உங்களைக் குறிப்பிடவில்லை


//முரளிகண்ணன் said...

நீங்க மூத்த பதிவர்ன்னு இப்பவாவது ஒத்துக்கிட்டீங்களே//

முரளி சார்,


மூத்தப்பதிவர்கள் யாருமில்லை, எழுத்தனுபவமிக்கவர்கள் பலர் இருக்கிறார்கள், பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தில் எதிர்நீச்சல் போடுபவர்கள் பலர் இருக்கிறார்கள், ரத்னேஷ், ஜமாலன் போன்றவர்கள் பதிவில் எழுத ஆரம்பிக்கும் முன்பே எழுத்தை எழுதி பிழிந்தவர்கள் :) நான் அவங்களுக்கெல்லாம் ஜூனியர். வாழ்த்துக்கு நன்றி ! - (மேலே தமிழனுக்கு போட்டது இங்கும் சரியாக இருக்கும்)



//லக்கிலுக் said...

உங்கள் யோசனைகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி!!//
ஹலோ, இதெல்லாம் ரொம்ப ஓவர் கடலுக்கே உப்புக்காட்டியது போல் இருக்கும் உங்களுக்கு இந்த பதிவு,


//rajeepan said...

புதிய பதிவர்களுக்கு நீங்கள் அழிக்கும் ஆதரவு மனதிற்க்கு மகிழ்ச்சி அழிக்கின்றது..//
அழிக்கும் ஆதரவா ? :)))))))) அளிக்கும் !!!

வால்பையன் சொன்னது…

//சர்ச்சைக்குறிய செய்திகளை கட்டுரையாக்குங்கள், விவாதம் ஆக்குங்கள் எல்லோருடைய கவனமும் பெறுவீர்கள்//

அத்துடன் செமத்தியாக கட்டம் கட்ட படுவீர்கள்
பிளாக்கை விட்டே ஓடி போகலாம் என்று நினைக்கும் அளவுக்கு டார்ச்சர் செய்ய படுவீர்கள்.

இத சேக்காம விட்டுடிங்களே

புதுகை.அப்துல்லா சொன்னது…

குசும்பனை பரிசல் குழுவுடன் கோர்த்துவிட்ட திருப்பணியை அடியேன் தான் செய்தேன்.
//

:))))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...


அத்துடன் செமத்தியாக கட்டம் கட்ட படுவீர்கள்
பிளாக்கை விட்டே ஓடி போகலாம் என்று நினைக்கும் அளவுக்கு டார்ச்சர் செய்ய படுவீர்கள்.

இத சேக்காம விட்டுடிங்களே

11:04 PM, September 24, 2008
//

வால்பையன்,

தாதாக்களின் ஆட்டமெல்லாம் அடங்கிவிட்டது. கவலை வேண்டாம் !
:)))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்