பின்பற்றுபவர்கள்

15 டிசம்பர், 2009

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் !

சதுர்வர்ணம் மாயா சிருஷ்டம் - இது பகவத் கீதையில் 'நானே நான்கு வருணங்களைப் படைத்தேன்' என்பதாக சொல்லப்படும் கண்ணனின் வாக்கு மூலம். பகவத் கீதை போர்களத்தில் சொல்லப்பட்டது என்றும் மகாபாரதத்தின் ஒரு பகுதி என்பதும் சான்று அற்றது, ஆனால் அப்படியாக நம்பப்படுவது வெறும் நம்பிக்கைதான். பகவத் கீதை மகாபாரத பகுதி அல்ல என்றே, அதன் சொற்கள் இலக்கிய அமைப்பு ஆகியவை மகாபாரதச் செய்யுள் இலக்கணத்திற்கு மாறுபட்டது என்பதாக அம்பேத்கார் உட்பட பல ஆய்வளர்கள் கருதுகின்றனர். பகவத் கீதை மகாபாரதத்தின் பகுதியா ? இல்லையா ? என்கிற ஆராய்சிகளை நான் பெரிதாக நினைப்பது இல்லை. மகாபாரதம் ஒரு கற்பனை இலக்கியம், பல்வேறு வட்டாரக் கதைகளை இணைத்துக் கொண்ட தொகுப்பு அல்லது ஒரு மூலக் கதைக்க்கு துணையாக அன்றைய கற்பனை இலக்கிய வாதிகள் எழுதிய பல்வேறு சிறுகதைகளின் மாபெரும் தொகுப்பு என்றுக் கூறப்படும் கருத்து சரியாக இருக்கும் என்றே என்னளவில் கருதுகிறேன்.

மகாபாரத இலக்கியத்தில் ஒரு லட்சம் செய்யுள்கள் வரையில் இருப்பதாகவும், அதில் இணைத்துக் கூறப்பட்ட கீதை தனியாக 18 பகுதிகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மகாபாரதக் கதை காட்டும் தீர்வு 'தர்மம் வெற்றிபெரும் அதர்மம் அழியும், சூதாட்டம், பேராசை ஆகியவை சமூக ஒழுங்கீனங்களாக காட்டப்படுகிறது.முழுக்கதையைப் படித்தால் அதர்மம் எவ்வாறு அதர்மாகவே வெற்றிக் கொள்ளப் படுகிறது என்பது புரியும். அதாவது நேர்மையான போர் என்று சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து குறுக்குவழிகளும் கடை பிடிக்கப்பட்டு அதர்மம் அழிவதாக கதை எழுதப்பட்டு இருக்கும். ஓரளவு மகாபாரதக் கதை அனைவரும் அறிந்தது தான், அது எவ்வாறு அனைத்து இந்துக்களுக்குமான பொதுவான இலக்கியம் என்று முன் மொழியப்பட்டது, இந்திய பாரம்பரியம் அனைத்தும் பரத வம்சத்தைச் சேர்ந்தது என்று திரிக்கப்பட்ட அரசியலுக்கும் நான் போகவிரும்பவில்லை.

இதையெல்லாம் தவிர்த்து இந்து சமயவாதிகள் அடிக்கடிச் சொல்லும் அல்லது பரப்படும் ஒன்று 'வருணம் பிறப்பு அடிப்படை அன்று அது குணம் சார்ந்ததே, வருணம் தோற்றுவிக்கப்பட்டப் போது அல்லது வருணத்தின் பிரிவுகள் சரியாக 'அனுஷ்டிக்கப்பட்டபோது' நான்கு வருணத்தினரிடையே வேற்றுமைகள் இல்லை, பின்னால் வந்தவர்கள் வருணத்தைப் பிறப்பு அடிப்படையாக்கிக் கெடுத்துவிட்டார்கள்' என்பதே. இந்தக் கூற்றில் இம்மியளவும் உண்மை இல்லை. வருணம் இருந்த அன்றைய இன்றைய காலத்தில் அவை என்றுமே குண அடிப்படையில் அமைந்த ஒன்று அல்ல, அவை பிறப்பு அடிப்படையிலே பயன்பாட்டில் இருந்திருக்கிறது' என்பதே உண்மை. எனக்கு தெரிந்து எந்த ஒரு இந்து சமய இலக்கியத்திலும் சூத்திரன் ஒருவன் பிரமணாக உயர்ந்தான் என்றோ, சத்திரியன் ஒருவன் பிரமணானாக உயர்ந்தான் என்றோ படித்ததே இல்லை.

மகாபாரதக் கதையிலேயே கர்ணன் பிறப்பு அடிப்படையில் பல இடங்களில் தூற்றப்படுவான், இராதேயன், தேரோட்டி மகன் என்றும், தாழ்ந்த குலத்தில் பிறந்தவன் என்றும் தூற்றப்படுவன். வில்வித்தையை தானே கற்றுக் கொண்ட ஏகலைவனும் பிறப்பால் சத்திரியன் அல்ல அவன் வில்வித்தையை பயன்படுத்தக் கூடாது என்றே அவன் விரல் துரோனரால் 'குரு காணிக்கை' என்ற பெயரில் வஞ்சகமாக வெட்டப்படும். மகாபாரதக் கதையில் பிரவருணத்தினர் வேறு ஒரு வருணத்தினராக புரோமசன் அடைந்ததாக எந்த ஒரு கிளைக் கதையும் கூடக் கிடையாது. சூத்திரர் மற்றும் வருணமற்ற சண்டாளர்கள் (நான்கு வருணத்திற்குள் சேர்க்கபடாதவர்கள்) தவிர்த்து மற்ற மூன்று வருணத்தினர்களை இருபிறப்பாளர்கள் என்றும் அவர்களுக்கு உரிய வயதில் பூணுல் அணிவித்து இரண்டாம் பிறப்பைக் கொண்டாடுவது வழக்கமாக இருந்திருக்கிறது, அதாவது பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோருக்கு பூணுல் அணிவது உரிமையும், கடமையும் ஆக்கப்பட்டு இருந்தது.

பிராமணன் குண மேன்மையானவன் என்பது ஒரு சித்தாந்தமே அன்றி அப்படி வாழ்ந்த பிராமணர்கள் என்று எந்த ஒரு இதிகாசத்திலும் புராணத்திலும் கதை அளவில் கூட இடம் பெற்றிருக்கவில்லை என்பதை பழங்கதைகளைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். வேறு சில நூல்களை நான் வாசிக்க நேர்ந்த போது, இந்த நால் வருண பகுப்பு என்பது பார்பனர்களிடம் மட்டுமே அவர்களுக்குள் இருந்தது என்றும், அவர்கள் இந்திய அளவில் பரவி வாழ்ந்த போது பிராமணன் என்ற தகுதியை அவர்களே தக்கவைத்துக் கொண்டு அவரவர் செய்யும் வேலைக்கு ஏற்றார் போல் வருணப் பகுப்பை பார்பனர் அல்லாத சமூகத்திற்கும் பரிந்துரைத்தார்கள், அவர்கள் பல்வேறு அரசுகளின் அமைச்சரவைகளில் உயர்ந்த பதவியில் இருந்ததால் அரசர்களை வருணப் பரிந்துரைக்கு வேண்டுகோள் வைத்து சாதித்தாகக் கூறப்படுகிறது.

வருணப் பகுப்பு என்பது (என்றுமே இல்லாத மற்றும் பரிந்துரைக்கப்பட்ட) குண அடிப்படை வருணம் என்ற பெயரில், தொழில் அடிப்படையிலும், நிற அடிப்படையிலும் பகுப்புகள் வைத்திருந்தது வேற்றுமை பாராட்டியதுடன் அதை இன்றும் ஞாயப்படுத்தும் கேடு கெட்டச் செயல், இதன் மூலம் பார்பன சமூகம் தவிர்த்து பிற சமூகம் பெரிய அளவில் நன்மை அடையாவிட்டாலும், பார்பனர்களின் அடுத்த நிலையில் இருப்பவர்களாக இருக்கும் பார்பனர் அல்லாத பிற ஆளுமை வர்கத்தினர் பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களை இன்னும் அடிமையாகவே நடத்துவதற்கு அந்த வருணப் பகுப்பு வழி செய்துவிட்டது.

குண அடிப்படையில் மேலாணவன் என்று இதிகாச இலக்கியங்களில் சொல்லப்படும் பிராமணன் என்றும் வாழ்ந்ததே இல்லை, நாளை ஒரு நல்லவன் வருவான் என்று சொல்லும் நம்பிக்கைப் போலவே, பிராமணன் என்பவன் குண மேன்மையானவன், அவ்வாறு இருந்தான் என்பது வெறும் நம்பிக்கை, அல்லது வெறும் சித்தாந்தம் மட்டுமே. என்றுமே இல்லாத பிராமணனை சோ இராமசாமி போன்ற பிற்போக்கு, பழமை வாதப் பார்பனர்கள் இன்றும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

பார்பனர்களை பிராமணர் என்று பிற சமூகத்தினர் அழைப்பது தத்தம்மை தாழ்த்தி சூத்திரனாக ஒப்புக் கொள்வதாகும், எப்போதும் அப்படி ஒரு இருப்பை உறுதி படுத்துவதாகும் . அன்பு கூர்ந்து அந்த தவற்றைச் செய்யாதீர்கள். பிராமணர் என்று கூறப்படும் தன்மையுடன் எந்த ஒரு சமூகமும் அல்லது ஒருவரும் கூட வாழ்ந்தது கிடையாது. புராண இதிகாசங்களை சாதி மேலாண்மை ஆதரவுக்கு சப்பை கட்டி, காட்டி, பார்பனர்கள் இன்றும் தம்மை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வது சமூக விச(ம)த்தனம் !

***************************
நஹூஷனுக்கும் யுதிஷ்டிரருக்கும் நடந்த உரையாடல் வருமாறு..

ந : எவன் பிராமணன்? எது அறியத்தகுந்தது?

யு : சத்யம், தயை, பொறுமை, நல்ல நடத்தை, பூர்ணமாக ஹிம்ஸையை விலக்குதல், புலனடக்கம், கருணை என்ற குணங்கள் கொண்டவனே பிராமணன். சுக துக்கங்களைக் கடந்த பிரம்மமே அறியத்தக்கது. அதை அறிவதால் ஒருவன் பூர்ணத்துவம் பெறுகிறான்.

மேலும் படிக்க...
***************************

பெண்களில் பத்தினி யார் என்று கேட்கும் கேள்விக்கு சீதை, நளாயினி, சாவித்திரி என்று கதைச் சொல்லத் தெரிந்த பார்பனர்களின் கதைகளுக்கு, பிராமணன் யார் என்று கேட்கும் கேள்விக்கு இன்னார் என்று காட்ட ஒரு பிராமணனும் வாழ்ந்தது இல்லை என்பதே உண்மை.


பின்குறிப்பு : இந்திய வரலாற்றில், இந்து இதிகாசங்கள் எதோ ஒன்றில் எந்த ஒரு தனிமனிதனும், வரலாற்று நாயகனும் பிராமணத் தகுதி என்று சொல்லப்படும் சிறப்புத் தகுதியுடன் வாழ்ந்தான் என்று சுட்டிக்காட்டினால் நான் இந்த இடுகையையே எடுத்துவிடுகிறேன்

142 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

இல்லாத குணத்தை, அல்லது குணவானை சோ தேடுகிறார், டோண்டு ஆதரிக்கிறார், பதிவு எழுதுகிறார்!

அது அவர்களுடைய தேடல், இலக்கு அல்லது ஆதர்சம் இப்படி எதோ ஒன்றாக இருந்துவிட்டுப்போகட்டுமே!

உங்களுக்கு உடன்பாடு இல்லை,அதுவரை சரி! பார்ப்பனர்களை, அல்லது அப்படிச் சொன்னால் கேள்வி வருமே? பார்ப்பனர்களை அல்ல பார்ப்பனீயத்தைத் தான் என்று சௌகரியமாக மாற்றிக் கொண்டு, ஏதோ ஒரு ஈயத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குவதற்குப் பதிலாக,
ஒரு நல்ல மாற்று, அல்லது குறைந்தபட்சம் ஒரு தொடக்கப் புல்லியாகவாவது இருக்க முயற்சிக்கலாமே!

விமரிசனங்களில் இரண்டு வகை இருக்கிறது!

இடித்துக் கொண்டே இருப்பது! இப்படி இடித்துக் கொண்டிருக்கிற சுகத்திற்காக மட்டுமே இடிப்பவர்கள், ஒரு நேரத்தில் இடிபடவும் வேண்டியிருக்கும். இதை, பொழுதுபோக்கு நாத்திகமாகப் பிழைப்பை நடத்திக் கொண்டிருப்பவர்களின் சமீப கால வளர்ச்சியே சொல்கிறது.

அடுத்து இடித்துரைப்பது அதாவது Constructive Criticism! ஆக்கபூர்வமான விமரிசனம், விமரிசனம் செய்கிரவருக்கும், செய்யப்படுபவர் இருவருக்குமே பயனுள்ளதாக இருக்கும். வளர்ச்சிக்கான அடையாளமும், விதையுமே இங்கே இருந்து தான் ஆரம்பிக்கிறது!

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//பின்குறிப்பு : இந்திய வரலாற்றில், இந்து இதிகாசங்கள் எதோ ஒன்றில் எந்த ஒரு தனிமனிதனும், வரலாற்று நாயகனும் பிராமணத் தகுதி என்று சொல்லப்படும் சிறப்புத் தகுதியுடன் வாழ்ந்தான் என்று சுட்டிக்காட்டினால் நான் இந்த இடுகையையே எடுத்துவிடுகிறேன்//

சுட்டிகாட்டி இந்த இடுக்கையை எடுத்தாலோ.. அல்லது அப்படியே இருந்தாலோ என்ன பலன் வந்துவிடப் போகிறது?

பயனற்ற விஷயத்தில் பயனற்ற சவால்...!

என்னை போல எழுதமுடியுமா என சிலர் விட்ட சவால் போல முறியடிக்க முடியாதது :)

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

//எனக்கு தெரிந்து எந்த ஒரு இந்து சமய இலக்கியத்திலும் சூத்திரன் ஒருவன் பிரமணாக உயர்ந்தான் என்றோ, சத்திரியன் ஒருவன் பிரமணானாக உயர்ந்தான் என்றோ படித்ததே இல்லை.//

ஒன்பதாம் நூற்றண்டின் துவக்கத்தில் வாழ்ந்த மணிவாசகர் திருவாசகத்தின் வரிகள்


"முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்,
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தனை விரலியும், நீயும் உன் அடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் பொரை திருமேனியும் காட்டி,
திருப்பெருந்துறையுரை கோவிலுங் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டிவந்தாண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே...

" அந்தணன் ஆவது" சாத்தியமே. இதை திருமறைகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்தக் குழப்பமெல்லாம், 9ம் நூற்றண்டின் இறுதியில் வந்த மன்னன் ராசராசனுக்கு பின்னர் தான்.


கங்கை வென்றான், அங்கிருந்து 5000 இந்து புரோகிதர்களை இங்கு அழைத்து வந்து, அவர்களுக்காக சதுர்வேதி மங்களங்கள் அமைத்து, அவர்கள் வசம் இந்து மத தத்துவங்களையும், சமயத்தையும் வளர்க்கும்படி ஊக்குவித்தான்.

அதன் பின்னர் தான், இந்த் வர்ணாசிரமங்களும், மண்ணாங்கட்டிகளும்....


பகவத் கீதையின் உண்மை நிலை பற்றியும், அதன் புரட்டுக்களையும் ஆய்வு செய்து தமிழர் தேசிய தலைவர் அய்யா.பழ. நெடுமாறன் ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தால் வாங்கிப் படித்துப் பாருங்கள். இவர்களின் துரோகங்கள் விளங்கும்.

பதிவிற்கு வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//அடுத்து இடித்துரைப்பது அதாவது Constructive Criticism! ஆக்கபூர்வமான விமரிசனம், விமரிசனம் செய்கிரவருக்கும், செய்யப்படுபவர் இருவருக்குமே பயனுள்ளதாக இருக்கும். வளர்ச்சிக்கான அடையாளமும், விதையுமே இங்கே இருந்து தான் ஆரம்பிக்கிறது!//

கிருஷ்ண மூர்த்தி ஐயா,

'எங்கே பிராமணன் ?' என்ற 'தேடலில்' இருக்கும் சோ இராமசாமியைத் தவிர்த்து தனிப்பட்ட யாரையும் நான் விமர்சனம் செய்யவில்லை. சோ இராமசாமி பழமை வாதி என்று மட்டும் தான் கூறி இருக்கிறேன்.

பார்பன அடையாளம் தேவை என்போர் புண்பட்டால் படட்டுமே, சூத்திரர்கள் பட்ட புண்ணைவிட பெரும் புண்ணா ஏற்பட்டுவிடப் போகிறது !

தவறுகளைச் சுட்டிக் காட்டுவது புண்படுவதற்கு அல்ல, மாற்றிக் கொள்ளவே. அந்த புரிதலில் தான் எனது இடுகைகள் அமைத்திருக்கின்றன.

சமூக அவலங்கள் அப்படியே இருக்க, அங்கேயே நின்று கொண்டு எந்த சமூகத்திற்காக எந்த நல்ல கருத்தை, எப்படி நின்று கொண்டு சொல்வது என்று எனக்கும் தெரியவில்லை :)

வேண்டுமென்றால் எல்லாம் நல்லா தான் போய் கொண்டு இருக்கிறது என்று நானாக நினைத்துக் கொண்டால் ஒருவேளை நல்லக் கருத்துகளையே பார்த்து நல்லதையே சொல்லுவோம் என்கிற மன நிலை வருமான்னு தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுட்டிகாட்டி இந்த இடுக்கையை எடுத்தாலோ.. அல்லது அப்படியே இருந்தாலோ என்ன பலன் வந்துவிடப் போகிறது?
//

அது தெரிந்தது தான். நீங்கள் பார்த்த 'பிராமணர்களையாவது' சொல்லி இருக்கலாமே !

கோவி.கண்ணன் சொன்னது…

ஆருரான் விசுவநாதன்,

தகவலுக்கு நன்றி.

இந்தியா முழுவதும் சாதி பிரிவினைகள் தீண்டாமைகள் பரவிக் கிடக்க, தமிழர்கள் திராவிடர்கள் தான் சாதியைக் கொண்டாடினார்கள், தமிழகத்தில் தான் சாதிப் பிரிவினைகள் கிடக்கிறது என்பது போல், என்றெல்லாம் கூட சிலர் சொல்லுகின்றனர்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு ஆரூரான் விஸ்வனாதன் சான்று கொடுத்துவிட்டார் ;)....

சீக்கிரம் எல்லோரும் இந்த இடுக்கையை படியுங்கள்... கொஞ்ச நேரத்தில் இது மாயமாகும் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...

திரு ஆரூரான் விஸ்வனாதன் சான்று கொடுத்துவிட்டார் ;)....

சீக்கிரம் எல்லோரும் இந்த இடுக்கையை படியுங்கள்... கொஞ்ச நேரத்தில் இது மாயமாகும் :)//

என்ன சான்று கொடுத்தார்.

நீங்கள் தெய்வம் ஆவது சாத்தியமே என்றால் மட்டும் போதுமா ? அதற்கு முன்னால் அந்ந தகுதியுடன் எத்தனை பேர் ஆனார்கள் என்று காட்ட வேண்டமா ? அதைத்தான் கேட்டேன்

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

//சாதிப் பிரிவினைகள் தமிழகத்தை விட வட இந்தியாவில் தான் மிகக் கொடுமையானது. உங்களையெல்லாம் பெரியார் காப்பாற்றிவிட்டார்// இது நான் சொன்ன வார்த்தைகள் அல்ல. முன்னாள் பிரதமர் திரு சந்திரசேகர் அவர்கள் கன்னியாகுமரியிலிருந்து டில்லி வரை ஒரு நடைப்பயணம் நடத்தினார். 1980ன் இறுதியில் என நினைக்கின்றேன்.

அப்போது அவருடன் சிலநாட்கள் தங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது தான் தாழத்தப்பட்டவனாக பிறந்ததால், இழந்தவைகளைப் பற்றி அவர் சொல்லி வருத்தப் பட்டதை கேட்டிருக்கிறேன்.

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

"அந்தணர் ஆவதும் காட்டினாய்" என்று மாணிக்க வாசகர் சொன்னார் என்றுதான் சொன்னேனே தவிர, ஆனவர்களைப் பற்றி எனக்கும் தெரியாது. ஆகவும் முடியாது.

இதில் வேடிக்கை என்ன வென்றால் மணிவாசகரும் பிறப்பால் பிராமணர்தான்.

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

பிறப்பால் பிராமணனான மணிவாசகர், "திருப்பெருந்துறை கோவிலுங் காட்டி, அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் " என்பதை பார்க்கும் பொழுது, அந்தணன் என்பது வேறு என்றுதான் தோன்றுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆரூரன் விசுவநாதன் said...

பிறப்பால் பிராமணனான மணிவாசகர், "திருப்பெருந்துறை கோவிலுங் காட்டி, அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய் " என்பதை பார்க்கும் பொழுது, அந்தணன் என்பது வேறு என்றுதான் தோன்றுகிறது.//

ஒருவர் நல்லவர் ஆகும் வழிகள் என்பது போல் பிராமணன் ஆகும் வழிகள் என்பதாக அவர் சொல்லி இருப்பார். மற்றபடி அவரும் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்பது அதன் பொருள் உணர்த்துகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...

//சாதிப் பிரிவினைகள் தமிழகத்தை விட வட இந்தியாவில் தான் மிகக் கொடுமையானது. உங்களையெல்லாம் பெரியார் காப்பாற்றிவிட்டார்// இது நான் சொன்ன வார்த்தைகள் அல்ல. முன்னாள் பிரதமர் திரு சந்திரசேகர் அவர்கள் கன்னியாகுமரியிலிருந்து டில்லி வரை ஒரு நடைப்பயணம் நடத்தினார். 1980ன் இறுதியில் என நினைக்கின்றேன்.

அப்போது அவருடன் சிலநாட்கள் தங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது தான் தாழத்தப்பட்டவனாக பிறந்ததால், இழந்தவைகளைப் பற்றி அவர் சொல்லி வருத்தப் பட்டதை கேட்டிருக்கிறேன்.//

நல்ல தகவல். பெரியார் பெயரைச் சொன்னாலே சிலர் அலறுவதில் இருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger ஆரூரன் விசுவநாதன் said...

"அந்தணர் ஆவதும் காட்டினாய்" என்று மாணிக்க வாசகர் சொன்னார் என்றுதான் சொன்னேனே தவிர, ஆனவர்களைப் பற்றி எனக்கும் தெரியாது. ஆகவும் முடியாது.

இதில் வேடிக்கை என்ன வென்றால் மணிவாசகரும் பிறப்பால் பிராமணர்தான்.//

திருமூலர் - மாடுமேய்த்தவர், அவரைப் பார்பனராகக் கூறுவதும் உண்டு, திருமூலம் பார்பனர் உடலில் இருந்து மாடுமேய்பவர் உடலுக்கு புகுந்ததாக கதைச் சொல்லுவார்கள். ஏனென்றால் திருமந்திரம் போன்ற பக்தி நெறியை பார்பனர் அல்லாதவர் சொல்லிவிட முடியாது என்பதாக சொல்வதற்கு அவ்வாறு திரித்துச் சொல்வதுண்டு.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

கண்ணன்,எதற்கு இப்படி கருணாநிதி மாதிரி ஆன்னா,ஊன்னா பார்ப்பனர்,சூத்திரர் என்று beating the bush செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

நன்றாக எழுதுகிறீர்கள்,நல்ல விதயங்களைப் பற்றி கன்ஸ்ட்ரக்டிவ் ஆக எழுதுங்களேன்..

சரி,இப்போது சான்று பற்றி:
சம்பந்தர் தேவாரத்தில் திருப்பாணாழ்வார் என்று ஒருவரைப் பற்றிய செய்தி இருக்கும்.திருப்பாணாழ்வார் தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட குலத்தில் பிறந்தவர்,பிறப்பால்;அவரது பக்தி,இசையறிவு,இறையன்பு ஆகிய காரணத்தால் அவரைத் தான் சென்ற இடமெல்லாம் அழைத்துச் சென்று,'ஐயரே' என்று விளித்து,விளிக்கச் செய்து,தன் குலமான பிராம்மணர்களின் எதிர்ப்புக்கிடையிலும் சமூகநீதியை நிலைநிறுத்தியவர் சம்பந்தர்..ஆனா என்ன செய்வது,அவரெல்லாம் உங்களுக்கு வில்லனாயிற்றே?

சரி,எப்போ,இடுகையை தூக்கப் போறீங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

// அறிவன்#11802717200764379909 said...

கண்ணன்,எதற்கு இப்படி கருணாநிதி மாதிரி ஆன்னா,ஊன்னா பார்ப்பனர்,சூத்திரர் என்று beating the bush செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

நன்றாக எழுதுகிறீர்கள்,நல்ல விதயங்களைப் பற்றி கன்ஸ்ட்ரக்டிவ் ஆக எழுதுங்களேன்..

சரி,இப்போது சான்று பற்றி:
சம்பந்தர் தேவாரத்தில் திருப்பாணாழ்வார் என்று ஒருவரைப் பற்றிய செய்தி இருக்கும்.திருப்பாணாழ்வார் தாழ்ந்த குலம் என்று கருதப்பட்ட குலத்தில் பிறந்தவர்,பிறப்பால்;அவரது பக்தி,இசையறிவு,இறையன்பு ஆகிய காரணத்தால் அவரைத் தான் சென்ற இடமெல்லாம் அழைத்துச் சென்று,'ஐயரே' என்று விளித்து,விளிக்கச் செய்து,தன் குலமான பிராம்மணர்களின் எதிர்ப்புக்கிடையிலும் சமூகநீதியை நிலைநிறுத்தியவர் சம்பந்தர்..ஆனா என்ன செய்வது,அவரெல்லாம் உங்களுக்கு வில்லனாயிற்றே?

சரி,எப்போ,இடுகையை தூக்கப் போறீங்க?//

அறிவன் சார்,

கால்டுவெல் கூட தமிழ்பற்றாளர்களால் ஐயர் என்று அழைக்கப்பட்டார் அவரை பிராமணர் என்று சொல்லுவோமா ?
:)

திருப்பணந்தாழ் ஆழ்வார் சிலை பெருமாள் சிலைக்கு அருகில் நிற்பது தீட்டுப்படும் அபச்சாரம் என்று விலகச் சொல்லப்பட்டதாக தாத்தாச்சாரியார் இந்து மதம் எங்கே ? என்ற நூலில் எழுதினார்.

//சமூகநீதியை நிலைநிறுத்தியவர் சம்பந்தர்//

ஆமாம் ஆமாம் சமணர்களை கழுவேற்றிய இரத்தத்தில் சமூக நீதிகாத்தார் என்றும் சொல்கிறார்கள்.

"வாழ்க அந்தணன்" என்று எழுதிய ஏடே சக்தி படைத்ததாக ஆற்று நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றதாமே ? சம்பந்தர் புராணம் பற்றி இன்னும் சொல்லலாம். பயனில்லை

Kesavan சொன்னது…

கோவியாருக்கு மிகவும் பிடித்தது 4 வருணங்கள் பற்றி எழுதுவது மட்டுமே. 12 ஆழ்வர்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாளை தவிர மற்றவர்கள் பிராமண வகுப்பில் பிறந்தவர்கள் இல்லை. ஆனால் அந்த ஆழ்வார்களை பிராமணர்கள் இன்றும் பொற்றுகிறார்கள.இதை பல முறை சொல்லி விட்டேன். பலன் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

கோவியாருக்கு மிகவும் பிடித்தது 4 வருணங்கள் பற்றி எழுதுவது மட்டுமே. 12 ஆழ்வர்களில் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாளை தவிர மற்றவர்கள் பிராமண வகுப்பில் பிறந்தவர்கள் இல்லை. ஆனால் அந்த ஆழ்வார்களை பிராமணர்கள் இன்றும் பொற்றுகிறார்கள.இதை பல முறை சொல்லி விட்டேன். பலன் இல்லை.//

நான் பிராமணன் என்பதே தகுதி அடிப்படை வகுப்பு கிடையாது அது பிறப்பு அடிப்படையிலானது என்று கருதுகிறேன். அதைப் பற்றி அல்லது மறுத்து எதுவும் தெரிந்தால் யாரையாவது சுட்டிக்காட்ட முடிந்தால் காட்டுங்கள்

Kesavan சொன்னது…

முடிந்தால் ராமானுஜர் சரிதத்தை படியுங்கள். உங்களுக்கு தேவையான பதில் கிடைக்கும். ராமானுஜர் எவ்வளவு பேரை வைஷணவர்களாக மாற்றினார் என்பது தெரியும்

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

முடிந்தால் ராமானுஜர் சரிதத்தை படியுங்கள். உங்களுக்கு தேவையான பதில் கிடைக்கும். ராமானுஜர் எவ்வளவு பேரை வைஷணவர்களாக மாற்றினார் என்பது தெரியும்//

அது தெரியும், அதனால் தான் வடகலை தென்கலை பிரிவே வைணவத்தில் வந்தது. அதில் ஒரு பிரிவினர் உண்மையான பிராமணர்கள் கிடையாது என்று ஒரு பிரிவு பார்பனர்கள் கூறுவார்கள்.

Kesavan சொன்னது…

நீங்கள் ராமானுஜர் சரிதிரத்தையே கற்பனை என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

நீங்கள் ராமானுஜர் சரிதிரத்தையே கற்பனை என்று சொன்னாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை//

நான் எதையெல்லாம் கற்பனை என்பேன் என்பது எனது விருப்பம் தான், அதை நீங்கள் முடிவு செய்து ஹாஸ்யம் கூறிவிட முடியாது.

Kesavan சொன்னது…

எதில் தான் உட்பிரிவு இல்லை. எல்லா வைஷ்ணவர்களளும் இறாமானுஜர் போட்றபடுகிறார். அது உமக்கு தெரியாது. எதையும் படித்து விட்டு எழுதகூடாது. நேரில் சென்று ஆய்வு செய்து எழுத வேண்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

எதில் தான் உட்பிரிவு இல்லை. எல்லா வைஷ்ணவர்களளும் இறாமானுஜர் போட்றபடுகிறார். அது உமக்கு தெரியாது. எதையும் படித்து விட்டு எழுதகூடாது. நேரில் சென்று ஆய்வு செய்து எழுத வேண்டும்//

நான் வைணவர்கள் இராமானுஹரைத் தூற்றுகிறார்கள் என்று எழுதவில்லை, வடகலையா தென்கலையா என்று ஒருவரை ஒருவர் உட்பிரிவுக்குள் தூற்றுகிறார்கள். யானைக்கு எந்த நாமம் வழக்கு இன்னும் முடியலையாம்.

இராமானுஜர் கோபுரம் ஏறிக் கூவியதும் அந்தப் கதையும் உமக்கு தெரியுமா ஓய் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan


எதில் தான் உட்பிரிவு இல்லை. எல்லா வைஷ்ணவர்களளும் இறாமானுஜர் போட்றபடுகிறார். அது உமக்கு தெரியாது. எதையும் படித்து விட்டு எழுதகூடாது. நேரில் சென்று ஆய்வு செய்து எழுத வேண்டும்//

இந்தக் கதை இங்கு எதற்கு ?

பார்பனர்களை பிராமணர்கள் என்று இன்றும் அழைக்கச் சொல்வதற்கும், அழைக்கப்படுவதற்கும் என்ன ஞாயம் என்பதை மட்டும் சொல்லுங்கள், அதைத்தான் கேட்டு இருக்கிறேன் இந்த கட்டுரையில்.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

{தீட்டுப்படும் அபச்சாரம் என்று விலகச் சொல்லப்பட்டதாக தாத்தாச்சாரியார் இந்து மதம் எங்கே ? என்ற நூலில் எழுதினார்.}

தாத்தாசாரியார்,பெரியார்,கி.வீ.யெல்லாம் சுட்டாதீங்க கண்ணன்.அவர்களெல்லாம் பார்ப்பன துவேஷத்தை ஒரு அஜண்டாவாகவே வைத்திருந்தவர்கள்.அந்த சுட்டிகளைசெ சுட்டி பயன் இல்லை.

{//சமூகநீதியை நிலைநிறுத்தியவர் சம்பந்தர்//

ஆமாம் ஆமாம் சமணர்களை கழுவேற்றிய இரத்தத்தில் சமூக நீதிகாத்தார் என்றும் சொல்கிறார்கள்.}

ஆமாமாம்..மற்றவர்களெல்லாம் தம்மை கடிக்க வந்த பாம்பைக் கூட முத்தமிட்டு அனுப்புபவர்கள் பாருங்கள்..சம்பந்தர் மட்டும் சமணர்களைக் கொன்றார்..

சம்பந்தர் காலத்தில் அவரை ஒழித்துக் கட்ட பல வகைகளில் முயற்சி செய்தார்கள சமணர்கள்,அதுவும் அவர்களை ஆதரித்த மன்னர்கள் மூலம்.அதோடு சமணர்கள் வடமொழியை முன்னிறுத்தி தமிழை அழிக்கும் அழுத்தும் முயற்சிகளிலும் ஈடுபட்டார்கள்.

தமிழும் சைவமும் வளர வேண்டுமெனில்,சமணர்களை மட்டுப் படுத்த வேண்டும்;மேலும் அரசனின் தயவும் வேண்டும் என்ற சூழலில்தான் வாதப்போர் துவங்கியது.

சமணர்கள் தோற்றால் கழுவேற வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டுத்தானே வாதத்தில் ஈடுபட்டார்கள்,தோற்றதனால் கழுவேற நேர்ந்தது.வென்றிருந்தால் சம்பந்தர் என்ன ஆகியிருப்பார்?

உங்களுக்கு உயிர்ப் பயம் ஏற்படுத்தும் எதிரி எதிரில் நின்றாலும் நீங்கள் அவனைக் கண்ணே மணியே என்று கொஞ்சுவீர்களோ !

இவ்வளவு சூழலிலும் அவர் திருமணத்தன்றே உயர் சாதீய சக்திகளால் கூண்டோடு கொல்லப்பட்டருக்க வேண்டும் என்றுதான் ஊகப்பட வேண்டியிருக்கிறது..

இந்த நிலையில் எப்படி அவரைக் குறை காண்பீர்கள்?

தமிழகத்தின் முதல் மொழிப் பற்றாளர்,சமூகநீதி காத்தவர் சந்தேகமின்றி அவர்தான்!

அவர் இல்லையென்றால் முக வகையறாக்களுக்கு தமிழின் பெயர் சொல்லிப் பிழைக்க தமிழ் என்ற மொழியே இல்லாமல் போயிருக்கலாம்!

{"வாழ்க அந்தணன்" என்று எழுதிய ஏடே சக்தி படைத்ததாக ஆற்று நீரோட்டத்தை எதிர்த்துச் சென்றதாமே ? சம்பந்தர் புராணம் பற்றி இன்னும் சொல்லலாம். பயனில்லை}}

வாழ்க பார்ப்பணர் என்று எழுதவில்லையே,அந்தணர் என்பவர் அறவோர் தானே,அறவோரை அந்தணர் என்றுதானே சுட்டினார்..என்ன பிழை?????

பார்ப்பார்,அந்தணர்,ஐயர் சொற்களின் மூலத்திற்கு இளங்குமரன் எழுதிய சொல்லாராய்ச்சி நூலைப்படித்துப் பாருங்கள்..முக வகையறாக்களின் துவேஷத்துக்கு கொடி பிடிக்காதீர்கள்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

வைணவம் பற்றி! வடகலை, தென்கலை பேதம், யார் பார்ப்பனன், யார் இல்லை என்பதைப் பற்றியது அல்ல. அது தத்துவத்தைப் புரிந்து கொள்வதில் இருக்கும் சிறு பேதம் தான்! உண்மையைச் சொல்லப் போனால், ஒன்று காஞ்சிபுரம் உசத்தி என்கிற கோஷ்டி, இன்னொன்று ஸ்ரீரங்கம் தான் உசத்தி என்கிற கோஷ்டி! அவ்வளவுதான்!

ஸ்ரீ ராமானுஜர் மாதிரி சமூக சீர்திருத்தங்களை, அதுவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே செய்துகாட்டியவர் எவருமில்லை!
காலப்போக்கில், உடையவர் அப்படி செய்தார் என்று மட்டுமே சொல்லிக் கொண்டு காலம் போக்கிக் கொண்டிருக்கிறார்கள், அதை முன்னெடுத்துச் செல்லவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, இங்கே கோவியார் சொல்லியிருப்பது முழுக்க முழுக்கத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பதில் தான்.

நாத்திகம் பேசுங்கள்! நாத்திகராய் இருங்கள்! அது உங்களுடைய தனி மனித உரிமை!

எதிர்த் தரப்பு என்ன சொல்கிறது என்பதை, எதிர்வாதம் செய்வதற்காக மட்டுமே என்று பார்க்காமல், அதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்பதையும் பார்க்க முனைந்தால் மட்டுமே, உங்களுக்கு உதவியாக இருக்கும்!

passerby சொன்னது…

அறிவன்

திருப்பாணருக்கும் (திருப்பாணாற்றாழ்வார்) சம்பந்தருக்கும் எவ்வித தொடர்புமில்லை. இருவரும் வெவேறு காலத்தவர். இருவர் சமயமும் வெவேறானாவை. முதல்வரின் சமயம் வைணவம். மற்றவ்ர் (சம்பந்தர்) சமயம் சைவம். அக்காலததில் அவை வெவேறு சமயங்கள் என்றே கொள்ளப்பட்டன.

சம்பந்தரின் காலம் பிற்காலம். அவர் திருமங்கையாழ்வாரின் சமகாலத்தவர். இருவருக்கும் நேருக்கு-நேர் நடந்தது சிதம்பரம் கோயிலுள்ளே என்பது வரலாறு. இதன் குறிப்பு திருமங்கையாழ்வாரின் பாசுரத்தில் உள்ளது.

திருப்பாணரைத் தோளில் வைத்து சுமந்து செல் என்பதாக திருவரங்கன் கட்டளையிட்டதாகவும் அதன்படி,திருவரங்கம் கோயில் தலைக்குருக்கள் (லோக சாரங்க முனிவர்) திருவரங்க இராசவீதிகளில் வழியாக நடந்து சென்றதாகவும், பின்னர் பாணர் இரங்கனக்கண்ணாரக்கண்டு, பத்துப்பாசுரங்கள் பாடினதாகவும் ஆழ்வார் வர்லாறு.

லோகசாரங்க முனிவருக்கு கொடுக்கப்பட்ட கட்டளை அவர் திருப்பாணரைத் ஜாதித்துவேசம் சொல்லி கல்லால் அடித்ததாகவும், கனவில் முனிவரின் கனவில் இரங்கன் தன்னுடலில் பலவிடங்களில் குருதி சொட்ட வர முனிவர் பதறிப்போய் வினாவி, ‘நீதான் என்னைக்கல்லால் அடித்தாய்’ எனச்சொல்ல, திருப்பாணனை அடித்தது என்னை அடித்ததாகவும் அதற்கு பிராய்ச்சித்தம் நீ உன் தோள்களின் அவரைச்சுமந்து என் சன்னதியில் கொண்டுவிடுவதே ஆகும்’ என்பதெல்லாம் அவ்வரலாறு.

சம்பந்தர் ஜாதிபார்ப்பவர். அவர் மடத்தலைவராகவும் இருந்தார். அவர் தான் வைதீக பிராமணனர்கள வாழ்வைக்க அவதாரம் செய்ததாகச் சொல்லியதாக தெய்வத்தின் குரலில் மகாபெரியவாள் எழுதியிருக்கிறார். அவர்களைக்காக்கவே சமணர்களோடு பெரும்போராட்டத்தை மேற்கொண்டார் சம்பந்தர்.

அறிவன் படித்துத் தெளிந்தபின்னரே எழுதுக.

Rajan சொன்னது…

சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலைன்னு சொல்றாங்களே ! அது வடகலையா ? தென்கலையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

அறிவன் சார்,

பிள்ளைக் கறியை விரும்பிக் கேட்டான் சிவன் என்று சிறுதொண்டர் புராணத்தில் கூறி இருந்தால் அது உண்மையாக இருக்கும் என்கிற மனநிலையில் இருப்பவர்களிடம் நான் என்ன விவாதம் செய்துவிட முடியும் ? ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகு சிவன் வருவதற்கு வாய்ப்பே ஏன் ஏற்படவில்லை, சிவ புராணங்களைப் படித்துவிட்டு மக்கள் எல்லோரும் சிவ (மை)மயம் ஆகிவிட்டார்களா என்ன ?

64 சிவனடியார்களுக்கு காட்சி கொடுத்து திருத்தொண்டர் ஆக்கிக் கொண்ட சிவன் அந்த எண்ணிக்கை போதுமானது என்று மக்கள் / தொண்டர் முன் தோன்றுவதை நிறுத்திக் கொண்டாரா ? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது.

நீங்களும் சிவநெறியாளர் தானே. சிவனை கண் முன் தோன்றச் சொல்லி காட்சி பெற முடியுமா என்று முயற்சி செய்யலாமே ?

******

புராணங்களில் எழுதப்படும் கதைகளை உண்மை என்று நினைப்போரிடம் என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வெறும் நம்பிக்கை மட்டுமே விவாதம் ஆக முடியாது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

நந்தன் எரிக்கப்பட்டான் என்று நான் நம்புவேன் நீங்கள் நம்பமாட்டீர்கள், அப்படி நம்புங்கள் என்று நானும் வழியுறுத்துவதும் இல்லை.

இங்கே விவாதத்தில் பிராமணன் என்னும் பல்வகை மேன்மைக் குணம் யாருக்கு இருந்தது என்றே கேள்வி ?

சம்பந்தர் அழைத்ததால் திருப்பணந்தாழ் ஆழ்வார் பிராமணன் ஆனார் என்று சொல்கிறீர்கள். வைணவப் பார்பனர்களே ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்க்காவே தாத்தாச்சாரியர் எழுதியதைக் கூறினேன்.

அப்பர் வயதில் சம்பந்தரைவிட மூத்தவர் தானே அவரை ஏன் அவ்வாறு அழைக்கவில்லை ? அப்பருக்கு தீட்சைக் கொடுத்து பிரமணராக்கி பிறவி அற்ற பெறுநிலை பெரும் பேறு கொடுத்து இருக்கலாமே சம்பந்தர்.

சம்பந்தர் திருமணத்திற்கு வந்த பெரும் கூட்டமே சோதியில் கலந்ததாம், அத்தனை பேருக்கும் சோதியில் கலக்கும் பாக்கியம் கிடைப்பது எவ்வாறு சாத்தியம் ? எனக்கு திருமண மண்டபத்தில் ஒரு முறை தீ விபத்து நடந்து மணமகன் இறந்தது தான் நினைவுக்கு வருகிறது

Kesavan சொன்னது…

கோவியார் மிகவும் சாமர்த்தியமாக எழுத கூடியவர் . ஆனால் சில விஷயங்களை தெரிந்து எழுதுவதில்லை . விதண்டவாதத்திற்கு எழுதுவார் அவ்வளவு தான் .அவருக்கு தேவை பிரமநர்களை த்வேஷிப்பது மட்டும் தான் . வேறு ஒன்றும் இல்லை

துளசி கோபால் சொன்னது…

அந்தணர் என்போர் அறவோர்.

அறத்தின் வழி நடக்கும் அனைவரும் அந்தணர்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

//வாழ்க பார்ப்பணர் என்று எழுதவில்லையே,அந்தணர் என்பவர் அறவோர் தானே,அறவோரை அந்தணர் என்றுதானே சுட்டினார்..என்ன பிழை?????

பார்ப்பார்,அந்தணர்,ஐயர் சொற்களின் மூலத்திற்கு இளங்குமரன் எழுதிய சொல்லாராய்ச்சி நூலைப்படித்துப் பாருங்கள்..முக வகையறாக்களின் துவேஷத்துக்கு கொடி பிடிக்காதீர்கள்.//

நான் பார்பன துவேசமாக எதையும் எழுதவில்லை. பிராமணர் என்பது பார்பனர்கள் படித்துவாங்கும் பட்டமா ? என்பதாகத் தான் கேட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan


கோவியார் மிகவும் சாமர்த்தியமாக எழுத கூடியவர் . ஆனால் சில விஷயங்களை தெரிந்து எழுதுவதில்லை . விதண்டவாதத்திற்கு எழுதுவார் அவ்வளவு தான் .அவருக்கு தேவை பிரமநர்களை த்வேஷிப்பது மட்டும் தான் . வேறு ஒன்றும் இல்லை//

அபச்சாரம் அபச்சாரம், நான் இங்கே பிராமணர்கள் என்று யாருமே இருந்தது இல்லை என்று எழுதி இருக்கிறேன். பிறகு எங்கே துவேசிப்பது. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

அந்தணர் என்போர் அறவோர்.

அறத்தின் வழி நடக்கும் அனைவரும் அந்தணர்களே.//

துளசி அம்மா,

அதுவும் செல்லாது செல்லாது

'அறவாழி அந்தணன்' என்பது சமண (திருத்தங்கரின்) பெயர் ! என்கின்றனர் சமண மதத்தினர்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

கேசவன்,

இங்கு கட்டுரைக்கு தொடர்பானதை எழுதுங்கள், மற்றது உங்களுக்கு தேவையற்றது. உங்களைப் பற்றி எதுவும் எழுதினால் மறுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு.

நான் எதை எழுத வேண்டும் என்பதை தீர்மாணிக்கு உரிமை உங்களுக்கு இல்லை. விதண்டாவாத பின்னூட்டங்கள், மொக்கை வாதங்கள் நீக்கப்படும்

passerby சொன்னது…

கிருஷணமூர்த்தி, கேசவன்!

வடகலை, தென்கலை வேறுபாடுகள் பற்றி அரைகுறையாகவே தெரிந்து எழுதாதீர்கள்.

வருணக்கொள்கை, யார் பார்ப்பனர், என்பதிலும் அவர்கள் பெருத்த அளவில் வேறுபடுகிறார்கள்.

தென்கலை ஜாதிகளை ஏற்றுக்கொள்வதில்லை. இறைவன் முன் அனைவரும் சமம் என்பதை உறுதியாக நம்புகிறது.

வடகலை ஜாதிகளை ஏற்றுகொள்கிறது. அவர்களின் படி,
திருப்பாணரும், திருமழியிசையாழ்வாரும் (இவரும் தலித்தே) இருவரும் பிராமணத்துவம் அடைய முடியாது. ஆனால் ஆழ்வார்கள் ஆக முடியும். இருசொற்களுக்கும் வேறுபாடுண்டு. ஆழ்வார்களுக்கு பிராமணனுக்கு கொடுக்கும் மரியாதை கிடைக்காது. அவர்கள் பிறப்பால் பிரமாணராயில்ல்லவிட்டால்.

திருமழியிசாயாழ்வாருக்கு மரியாதை தரமாட்டோம் எனச்சொன்ன்வர்கள் பார்ப்பனர்கள்.

இதேவண்ணமாக நம்மாழ்வாருக்கு திருமாலைப்பற்றிப் பாட தகுதியில்லை அவர் சூத்திரர் எனச்சொன்னவரும் பார்ப்பனரே.

இது நிற்க.

ஏன் வடகலையார் யாரும் பிராமணனாக மாற முடியாது எவ்வளவுதான் புனித வாழ்க்கை வாழினுன்.

இதுதான் அவர்கள் கொள்கை:

‘காமதேனுவானாலும் பசுத்தன்மை போகாது’

என்பதுவெ.

வடகலையினர் சித்தாந்த்த்தின்படி, ஆழ்வார்களைவிட வேதங்களே முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்று வழக்கில் அவர்கள் ஆழ்வார்களை ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் கொள்கையின் படி வடமொழி வேதங்களுக்கு நிக்ரானவரை அல்ல ஆழ்வார்கள் பிர்பந்தங்கள்.

ஆனால், தென்கலையினருக்கு ஆழ்வார்களின் பிரபந்தமே முதல்.தென்கலையாருக்கு, ஆழ்வார்கள் திருமாலின் திருமேனின் அம்சங்கள். ஆண்டாள் பிராட்டியின் அவதாரம்.

வடகலை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை.

மேலும், வடகலை, திருமாலையும் திருமகளையும் பிரான், பிராட்டியாகப்பார்த்து, திருமகள் தனியாக இருக்க முடியும் எனச்சொல்கிறது.

தென்கலை, திருமகள் தனித்திருக்க முடியாது என்கிறது. திருமகள் ஒரு mediatrix மட்டுமே. Her power is only recommendatory என்றும் சொல்கிறது.

கேசவன்:

ஆழ்வார்கள் ஜாதிகள்:

நம்மாழ்வார் - சூத்திரர்
திருமங்கையாழ்வார் - கள்ளர் (குலத்தொழில் வழிப்பறிக்கொள்ளையடிப்பது. திருமாலையும் திருமகளையும் வழிப்பறிக்கொள்ளையடித்ததாகவும், அவர்கள் அவரிடமிருந்து தப்பிக்க ‘எல்லாத்தையும் முடிந்தால் எடுத்துக்கோ’ என்றதாகவும் அப்போத்த்தான் ‘த்டுத்தாட்கொள்ளப்பட்ட’ நிகழ்ச்சி நடந்ததாகவும் வர்லாறு. அதை அவரும் எழுதிவைத்துவிட்டார்)
பெரியாழ்வார் - பிராமணன் - குலத்தொழில் - குருக்கள் in a small temple. He also supplied flowers to the main temple at Srivilliputhur)

ஆண்டாள் - His adopted daughter. No one knows her parents. Since she was found in an agraharam deserted at birth, it is a fair guess she was born to brahmin parents. அக்ரகாரத்திலேயே வாழ்ந்ததால், பெரியாழ்வாரால் வள்ரக்கப்பட்டதால், பிராமணர்.

திருமழியிசையாழ்வார் - தலித்து. (காஞ்சிபுர்தது குரவர்) பிராமணர்களால் அவமானப்படுத்தப்பட்டவர். கோபத்தில் தான் எழுதிய அனைத்தையும் காவேரியில் வீசியவர்.

திருப்பாணாற்றாழ்வார் - தலித்து (பறையர்)

தொண்டரிப்பொடியாழ்வார் - முன்குடிமி சோழிய பிராமணர்.

பொய்கை, பூதம், பேய் - இவர்கள் காலத்தால் மூத்தவர்கள்

பொய்கை - காஞ்சி
பூதம் - மாமல்லபுரம்
பேய் - மைலாப்பூர்

(ஜாதியைப் பற்றி மூச்சே விடவில்லை இவர்கள். But it is a fair gues who பேய் was)

He is called PEY because, he used to get into trances and danced wildly. அப்போது அவர் நீண்ட சிகை நாலாபுரமும் சிதறி ஆடும். கண்ட மக்கள் இவர் பேய் போல ஆடுகிறாரே என அப்பேரே இவர் திருப்பெயாராயிற்று.

மதுரகவி - பிராமணர். சிர்வைகுண்டம் - திருத்தொலைவில்லிமங்களம்

எத்தனை பேர் பிராமணர்கள் இங்கே?

passerby சொன்னது…

Krishnamoorthy!

The core issue in Kovi Kannan's blog is just this.

THERE IS NO SUCH ENTITY CALLED BRAHMANAN.

Therefore, there is no question os seeking such an entity.

Your point is:
Let us seek it an an ideal.

Agreed. What is the use of such a search when it is hundred percent impracticable in today world?

What is the motive then, in Cho's seeking it? What for is he doing?

A scientist seeks fossils. He discovers one. He brings it to lab, and draws his conclusions. We generally accept them. Then, they become a historical proof of some civilization which lived eons ago. What is the purpose of his discovery? Only as a curiosity in a history book.

According to Kovi, Cho cant even discover that, because never in history a Brahmin existed. In other words, the ideal was never realized.

He challenges you: Show me one.

Krishnamoorthy,

Dont you want to see all these? Do only want to try to gag anyone who questions the futile search of people like Cho?

In my opinion, the search itself is badly motivated to boggle the minds of non-brahmins to get imaginary respect for brahmins, nay, paarppanras, as Kovi wants us to call theml!

It is mischievous. It is only to drive a wedge between Tamil brhamins and others. Tamil brahmins have already been criticised by others for trying to be different from others. Cho and his men will deepen the divide.

Simple question: When the ideal is found, and when it is known clearly that no one can live according to it, why are you wasting time over it?

Rajan சொன்னது…

//அபச்சாரம் அபச்சாரம், நான் இங்கே பிராமணர்கள் என்று யாருமே இருந்தது இல்லை என்று எழுதி இருக்கிறேன். பிறகு எங்கே துவேசிப்பது. :)//

நல்ல பார்ம்ல இருக்கீங்க !
கெளப்புங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//கள்ளபிரான்


Krishnamoorthy!

The core issue in Kovi Kannan's blog is just this.//

கள்ளபிரான்,

விளக்கமாக எடுத்து எழுதியதற்கு நன்றி !

passerby சொன்னது…

துளசியாரே

முழுக்குறளையும் சொல்க:

அந்தணர் என்பர் அறவோர் எவ்வுயிருக்கும்
செந்தண்மை பூண்டொழுகலால்.

இன்று யாராவது எவ்வுயிருக்கும் செந்தண்மைபூண்டு ஒழுகுபவர்கள் இருக்கிறார்களா? இதுதான் இன்றைய கேள்வி.

இப்படியிருக்க ஒரு சாதியார் தாங்களே ‘அந்தணர்கள்’ என்று சொல்லித்திரிந்தால்...?

எனவேதான், கோவி கண்ணன் சொல்கிறார். :

“‘பார்ப்பனர்கள்’ என அழைப்போம். அது, நாடார், தேவமார், பிள்ளைமார், வன்னிமார், செட்டிமார், முதலிமார் என்பது போல ஒரு social community ஆக விருந்து. அதற்கும் மதத்தில் சொல்லப்பட்ட, பிராமணருக்கும் தொடர்பில்லை எனவாகும்” என்கிறார். ‘பார்ப்ப்னமார்’ என்று சேர்த்துக்கொள்க. எல்லாரும் மரியாதைக்குரியவரே என்பது எம்கொள்கை.

அப்படி கிடையாது என்று சொன்னால், நான் அதை ஒரு ஏமாற்று வேலையென்பேன்.

தமிழ்நாடு பிராமணர் சங்கம். அப்புறம், தமிழ்நாடு அந்தணர் வரலாறு,’அந்தணர் வாழி’ என்பதெல்லாம், ஒரு ஏமாற்று. அதைச்சம்பந்தர் செய்தாலும், சோ செய்தாலும் ‘குற்றம், குற்றமே!’

கோவி.கண்ணன் சொன்னது…

//எனவேதான், கோவி கண்ணன் சொல்கிறார். :

“‘பார்ப்பனர்கள்’ என அழைப்போம். அது, நாடார், தேவமார், பிள்ளைமார், வன்னிமார், செட்டிமார், முதலிமார் என்பது போல ஒரு social community ஆக விருந்து. அதற்கும் மதத்தில் சொல்லப்பட்ட, பிராமணருக்கும் தொடர்பில்லை எனவாகும்” என்கிறார். ‘பார்ப்ப்னமார்’ என்று சேர்த்துக்கொள்க. எல்லாரும் மரியாதைக்குரியவரே என்பது எம்கொள்கை.//

100 விழுக்காடு உடன்படுகிறேன். பார்பனர்கள் சாதி பாசம் கொண்டு சாதி வேண்டும் என்று சொன்னால் தவறே இல்லை, அவர்களைப் பார்பனர் என்றே அழைக்க விரும்புகிறேன். ஆனால் எங்களை பிராமணர்கள் என்று அழையுங்கள் என்று கூறினால், அவர்கள் காட்டும் பிராமணத் தகுதி மற்றும் குணம் எதுவும் இல்லை என்று நன்கு தெரிந்தும் என்னால் அப்படி அழைக்க முடியாது, போலி டாக்டர் என்று தெரிந்தும் அவரைப் போய் டாக்டர் என்று அழைக்க முடியுமா ? அவர் பெயரைச் சொல்லித்தான் அழைக்க முடியும் !

Jawahar சொன்னது…

//பார்பனர்கள் இன்றும் தம்மை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வது சமூக விச(ம)த்தனம் !//

தேசத்தையும், சமூகத்தையும், தனி மனிதனையும் கொடுமைப் படுத்தும் இந்தச் செயலை நீங்களாவது தைரியமாகத் தட்டிக் கேட்கிறீர்களே! வாழ்த்துக்கள்.

http://kgjawarlal.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

//Jawahar said...

//பார்பனர்கள் இன்றும் தம்மை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வது சமூக விச(ம)த்தனம் !//

தேசத்தையும், சமூகத்தையும், தனி மனிதனையும் கொடுமைப் படுத்தும் இந்தச் செயலை நீங்களாவது தைரியமாகத் தட்டிக் கேட்கிறீர்களே! வாழ்த்துக்கள்.

http://kgjawarlal.wordpress.com//

நன்றி !

பார்பனர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வது பிராமண துவேசம் இல்லையா ?
:)

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

@ கோவியனந்தா மற்றும் அனைவருக்கும்,

உங்களுக்கு உண்மையிலேயே ஒரு பிராமண குடும்பத்தை பார்க்க ஆசையாக இருக்கிறதா? ஊருக்கு வரும்போது சொல்லுங்கள். நான் அழைத்துச்செல்கிறேன். நம் நாகையில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் உள்ள அரசவனங்காட்டில் (திருவாரூர் to குடவாசல் சாலை) அவர்களை நான் 11 வருடங்களுக்கு முன்னர் பார்த்தேன். இப்போதும் சென்று பார்க்கிறேன், இறை அருளால் இனிமேலும் சென்று பார்ப்பேன்.

அவரது பெயர் ராகவன். அவரது மனைவி அருணா, மகள் நிருபமா. அனைவரும் சேர்ந்து ஷிக்க்க்ஷயதன் எனும் பெயரில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அந்த பின்தங்கிய கிராமத்தில் கல்விப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்குள்ள சிறார்களில் பெரும்பாலோனர் அவர்களது தலைமுறையில் தற்போது தான் முதன்முறையாக கல்வி கற்கிறார்கள்.

அவர்களின் அனுக்கிரஹா இணையதளத்தின் சுட்டி -
http://www.absolsoftec.com/netact/index.htm

ஆக பிராமணர்கள் என்று யாரும் இல்லையென்று சாதிக்காதீர்கள். இணையம் மட்டும் உலகமில்லை. உண்மையான உலகமானது நாம் நினைப்பதை விட பரந்துவிரிந்த ஒன்று. அவ்வ்வ்வ் ..



with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

வால்பையன் சொன்னது…

வர்ணரீதியான பார்பனனை தேடி கண்டுபிடிப்பதில் நாட்டுக்கு என்ன நன்மை இருக்கு!?

தன்னை பெரிய ஆளாக(சாதியாக) காட்டி கொள்ளும் குறுக்கு புத்தியை தவிர!

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

{சம்பந்தர் ஜாதிபார்ப்பவர். அவர் மடத்தலைவராகவும் இருந்தார். அவர் தான் வைதீக பிராமணனர்கள வாழ்வைக்க அவதாரம் செய்ததாகச் சொல்லியதாக தெய்வத்தின் குரலில் மகாபெரியவாள் எழுதியிருக்கிறார். அவர்களைக்காக்கவே சமணர்களோடு பெரும்போராட்டத்தை மேற்கொண்டார் சம்பந்தர்.

அறிவன் படித்துத் தெளிந்தபின்னரே எழுதுக.}

படிக்க வேண்டியது நீங்களேயன்றி நானல்ல,படிக்க வேண்டிய புத்தகம்-பெரியபுராணம் ஒரு ஆய்வு-அசஞா.

காஞ்சி மடம் இன்றைய பிராமண சாதியார்களின் மடம்;அவர்களுக்கு ஆதரவான கருத்து,நிகழ்வு எதையும் உபயோகப்படுத்திக் கொள்வார்கள்.மேலும் சம்பந்தர் வைதீக பிராமணர்களை முன்னிறுத்தினார் என்று சொல்வதற்கான தரவுகள் எதுவும் நான்றிந்து இல்லை;அப்படி சந்திரசேகரர் சொன்னால் அது அவர் கருத்து மட்டுமே.அவர் எனக்கான ஆதர்சம் அல்ல,அவர் சொன்ன எல்லாவற்றையும் வேத வாக்காக எடுத்துக் கொள்வதற்கு!

நான் சொல்ல வந்தது,இன்றைய சூழலில் சாதித் துவேஷத்தைக் கொண்டு வராதீர்கள் என்றது.

இரண்டையும் தொடர்பின்றி முடிச்சிட்டுக் கொள்கிறீர்கள்.


{பிள்ளைக் கறியை விரும்பிக் கேட்டான் சிவன் என்று சிறுதொண்டர் புராணத்தில் கூறி இருந்தால் அது உண்மையாக இருக்கும் என்கிற மனநிலையில் இருப்பவர்களிடம் நான் என்ன விவாதம் செய்துவிட முடியும் ? ஆறாம் நூற்றாண்டிற்கு பிறகு சிவன் வருவதற்கு வாய்ப்பே ஏன் ஏற்படவில்லை, சிவ புராணங்களைப் படித்துவிட்டு மக்கள் எல்லோரும் சிவ (மை)மயம் ஆகிவிட்டார்களா என்ன ?}

அதைப்பற்றிய விவாதம் இங்கு எதற்கு,சிவன் வந்தால் என்ன,வராவிட்டால் என்ன?உளன் எனில் உளன்;இலன் எனில் இலன் என்பதன் படி அவரவர் நோக்கு.இலன் என்று சொல்ல சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறதுதானே !

{ நீங்களும் சிவநெறியாளர் தானே. சிவனை கண் முன் தோன்றச் சொல்லி காட்சி பெற முடியுமா என்று முயற்சி செய்யலாமே ?}

என் கவலையை நீங்கள் ஏன் சுமக்கிறீரகள் பாவம்?மேலும் எனக்கான காட்சிகள் கிடைக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்?
கண்டநான் விண்டிலனாக இருக்கலாமல்லவா?

{புராணங்களில் எழுதப்படும் கதைகளை உண்மை என்று நினைப்போரிடம் என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் வெறும் நம்பிக்கை மட்டுமே விவாதம் ஆக முடியாது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.}

சிரிப்பாக இருக்கிறது.அதே புராணத்தில் இருக்கும் சமணர் கழுவேற்ற நிகழ்வைத்தானே சான்றாக நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்.நான் ஏன் அதே புராண நிகழ்வை சுட்டக் கூடாது?

{நந்தன் எரிக்கப்பட்டான் என்று நான் நம்புவேன் நீங்கள் நம்பமாட்டீர்கள், அப்படி நம்புங்கள் என்று நானும் வழியுறுத்துவதும் இல்லை.}

சம்பந்தரே எரிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றுதானே நானும் சொல்கிறேன்..இன்றைய காரண காரியங்கள் என்ன என்பதுதான் பாடு பொருள்!

{இங்கே விவாதத்தில் பிராமணன் என்னும் பல்வகை மேன்மைக் குணம் யாருக்கு இருந்தது என்றே கேள்வி ?}

இல்லை;தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறப்பால் பிறந்த ஒருவரை அவரின் மேன்மை கருதி(அந்தணர் என்பவர் அறவோர் !) அந்தணராக ஏற்றுக் கொண்ட சாட்சி இருக்கிறதா? என்பதுதான் உங்கள் கேள்வி.

அதற்கான பதில்தான் திருப்பாணரை சம்பந்தர் நடத்திய விதம் பற்றிய என் குறிப்பு.

அதைத் தந்தால் திரும்பவும் புராணத்தை எப்படி நம்புவது என்கிறீர்கள் !!!!!!


{அப்பர் வயதில் சம்பந்தரைவிட மூத்தவர் தானே அவரை ஏன் அவ்வாறு அழைக்கவில்லை ? அப்பருக்கு தீட்சைக் கொடுத்து பிரமணராக்கி பிறவி அற்ற பெறுநிலை பெரும் பேறு கொடுத்து இருக்கலாமே சம்பந்தர்.}
உங்களுக்கு ஒன்று தெரியுமா?இறைவியே பாலூட்டியதாக சித்தரிக்கப்பட்ட சம்பந்தர்தான் அவரை தனக்கு அப்பா,என்ற மேன்மையான ஸ்தானத்தில் அவரை அப்பரே என்று முதலில் அழைத்தவர்!தன் தந்தை என்று அழைத்த பின் தனியாக பிராமணர் என்று அழைக்க வேண்டுமா என்ன?



{சம்பந்தர் திருமணத்திற்கு வந்த பெரும் கூட்டமே சோதியில் கலந்ததாம், அத்தனை பேருக்கும் சோதியில் கலக்கும் பாக்கியம் கிடைப்பது எவ்வாறு சாத்தியம் ? எனக்கு திருமண மண்டபத்தில் ஒரு முறை தீ விபத்து நடந்து மணமகன் இறந்தது தான் நினைவுக்கு வருகிறது}

முதலிலேயே பதில் சொல்லி விட்டேன்..இது வைதீகர்களின் செயலாகவும் இருக்கலாம்,எஞ்சிய சமணர்களின் செயலாகவும் இருக்கலாம்..

என் கேள்வி எல்லாம் இன்றைய துவேஷத்தில் என்ன பொருள்,அர்த்தம் இருக்கிறது என்பதில்தான்..

கோவி.கண்ணன் சொன்னது…

// Muhammad Ismail .H, PHD, said...

@ கோவியனந்தா மற்றும் அனைவருக்கும்,

உங்களுக்கு உண்மையிலேயே ஒரு பிராமண குடும்பத்தை பார்க்க ஆசையாக இருக்கிறதா? ஊருக்கு வரும்போது சொல்லுங்கள். நான் அழைத்துச்செல்கிறேன். நம் நாகையில் இருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் உள்ள அரசவனங்காட்டில் (திருவாரூர் to குடவாசல் சாலை) அவர்களை நான் 11 வருடங்களுக்கு முன்னர் பார்த்தேன். இப்போதும் சென்று பார்க்கிறேன், இறை அருளால் இனிமேலும் சென்று பார்ப்பேன்.//

பிராமணத் தகுதி இன்ன இன்ன என்பதற்கான சுட்டியையும் அவர்கள் அளிக்கும் விளக்கத்துடன் இருப்பதை இணைத்திருக்கேன். அந்த தகுதிகள் நீங்கள் குறிப்பிடும் நபர்களுக்கு இருக்கிறதா என்று பாருங்கள் ?

அன்னைத் தெரசாவை விட நீங்கள் குறிப்பிடுபவர்கள் செயற்கரிய செயல்களைச் செய்பவர்களா ?

அன்னைத் தெரசா பிரமணத் தகுதி என்று சுட்டிக்காட்டப்படுவதைவிட குறைவான தகுதி நிறைந்தவரா இல்லையா ?

காந்தியின் பண்புகள் பிராமணத் தகுதிகளை விட மேலானதா இல்லையா ?

இவர்களையே அவ்வாறெல்லாம் சொல்ல சமூகம் முயற்சிக்காத போது நீங்கள் குறிப்பிடும் இருவர்....?

:)

Kesavan சொன்னது…

எனக்கு தெரிந்து எந்த பிராமணனும் தன்னை பிரமணன் என்று கூப்பிட சொல்ல வில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் சொல்ல வந்தது,இன்றைய சூழலில் சாதித் துவேஷத்தைக் கொண்டு வராதீர்கள் என்றது.//

அறிவன் சார்,

இடுகையின் சாரத்தைப் புரிந்து கொள்ளூங்கள் சாதி துவேசம் எதையும் செய்யவில்லை, பார்பனர்களை நான் விமர்சனமும் செய்யவில்லை.

தகுதிகள் என்று சிலவற்றை நிர்ணயம் செய்து அதற்கு ஒரு பெயரை வைத்து அந்தப் பெயரால் எந்த தகுதியும் இல்லாத ஒருவர் பிறப்பின் அடைப்படையில் அதைச் சூட்டிக் கொள்வது தவறாக உங்களுக்கு படவில்லையா ?

ஒருசாரர் தங்களைப் பிராமணர் என்று சொல்லும் போது மற்றவர்கள் சூத்திரர் என்பது அங்கு சொல்லாமல் சொல்லப்படுவது உங்களுக்குத் தெரியவில்லையா ? இரண்டுமே கற்பனையானது தானே.

உண்மையான பிராமணன் இன்றைய தேதியிலும் என்றுமே இல்லாத போது இன்றைக்கும் நிலைக்கும் பிராமணன் என்கிற சொல்லால் சமூகம் அடையும் பயன் தான் என்ன ? அது சாதிய அடையாளமாக திரிந்து தூற்றப்படுவதும், அப்படி அழைக்காமல் இருப்பதும் ஒன்று தானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Kesavan said...

எனக்கு தெரிந்து எந்த பிராமணனும் தன்னை பிரமணன் என்று கூப்பிட சொல்ல வில்லை.//

Blogger Kesavan said...

எனக்கு தெரிந்து எந்த 'பார்பனரும்' தன்னை பிரமணன் என்று கூப்பிட சொல்ல வில்லை.

என்பதாக இருந்தால் உங்கள் கூற்று சரியாக இருக்கலாம். அப்படி இருப்பவர்களும் உண்டு, எனக்கு தெரிந்த பல பார்பனர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைக்கச் சொல்லுவது கிடையாது. நானும் அவ்வாறு அழைப்பதும் இல்லை

Jawahar சொன்னது…

//பார்பனர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வது பிராமண துவேசம் இல்லையா ?
:)//

துவேஷம்தான். இல்லாத பிராமணர்களுக்கு எப்படி துவேஷம் செய்ய முடியும்?

http://kgjawarlal.wordpress.com

Rajan சொன்னது…

எதுவுமே பிரியலப்பா !

கோவி.கண்ணன் சொன்னது…

// Jawahar said...

//பார்பனர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வது பிராமண துவேசம் இல்லையா ?
:)//

துவேஷம்தான். இல்லாத பிராமணர்களுக்கு எப்படி துவேஷம் செய்ய முடியும்?

http://kgjawarlal.wordpress.com//

நன்றி !
இது சூப்பர் ! சரியாக பதிவைப் படிச்சிருக்கிங்க !

:)

Kesavan சொன்னது…

பல பார்பனர்கள் சொல்லாத பொது இந்த விவாதமே தேவை இல்லாதது. யாரும் யாரையும் இப்படி தான் அழைக்க வேண்டும் என்று சொல்லாதபோது எதற்கு இந்த இடுகை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan said...

பல பார்பனர்கள் சொல்லாத பொது இந்த விவாதமே தேவை இல்லாதது. யாரும் யாரையும் இப்படி தான் அழைக்க வேண்டும் என்று சொல்லாதபோது எதற்கு இந்த இடுகை./

நான் சொல்லி இருப்பது உனக்கு பொருந்தாது. பைதவே எனக்கு தெரிந்த பார்பனர்கள் தான் பார்பன சமூகத்தின் அளவுகோளும் இல்லை :)

Kesavan சொன்னது…

நீங்கள் எழுதியது உங்களுக்கு தெரிந்த பார்பன சமுகத்தின் அளவ இல்லை உங்களுக்கு தெரியாத பார்பன சமுகத்தின் அளவா?

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

{ஒருசாரர் தங்களைப் பிராமணர் என்று சொல்லும் போது மற்றவர்கள் சூத்திரர் என்பது அங்கு சொல்லாமல் சொல்லப்படுவது உங்களுக்குத் தெரியவில்லையா ?}

எப்படி பிராமணர் Vs சூத்திரர் என்ற குதிரைக் கண் சேணத்திற்குள் அடைபடுகிறீர்கள்..அவர்கள் பிராமணர் என்று சொல்லிக் கொண்டால் நீங்கள் எப்படி சூத்திரர் ஆகிறீர்கள்?

நான் நல்லவன் என்று நான் சொன்னால நீங்கள் எப்படி கொலைஞன் ஆகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

நான் அறவழியின் படி நடக்கிறேன்,நானும் பிராமணர் என்று சொல்லி விட்டுப் போங்களேன்,எது தடுக்கிறது? தன் நெஞ்சறிவது பொய்யற்க-அவ்வளவுதான்!

சோ கூட அந்தப் புத்தகத்தில் இன்று பிராமணர் எவரும் இல்லை;அனைவரும் வைசியர்-வியாபாரிதான்- என்றுதான் கூறுகிறார் என்று நினைக்கிறேன்.

வரலாற்றின் இடைக்காலத் தவறுகளின் பொதிகளை பொதிமாடு போல சுமந்து கொண்டு திரியாதீர்கள் என்பதுதான் நான் கடைசியாக சொல்ல விழைவது!

இதேயேதான்,நான் பிராமண குலத்தில பிறந்து விட்ட ஒரே காரணத்திற்காக நான் கொம்பு என்று எவராவது சொன்னாலும் நான் சொல்வேன்;சொல்லியிருக்கிறேன்!

That's it.

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

@ கோவியாரே,

என்னை என்ன நுனிப்புல் மேய்பவர் எனக்கருதிவிட்டீரா? இடுகை, அதிலுள்ள தொடுகையனைத்தையும் படித்துவிட்டுத்தான் பின்னூட்டமிட்டேன். ஆனால் நான் பொறுமையாக படித்தது போல் உங்களுக்கு நான் தந்த தொடுப்பை படிக்க நேரமில்லை எனக்கருதுகிறேன். ஆதலால் தான் இங்கே தெரசா அம்மையார் வந்துவிட்டார். ஆனால் நான் தெரசாவை குறைத்து மதிப்பிடவில்லை. தெரசா தானிருந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு எப்படி உழைத்தாரே அது போலத்தான் இந்த பிராமண குடும்பத்தினரும் உழைக்கிறார்கள். இருவரிலும் யார் பெஸ்ட் என்றால் என்னுடைய கருத்து "இருவருமே' என்பது தான்.



என்னைப் பொறுத்தவரை யாரையும் அவரது சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து தான் கணிப்பேன். வெறும் வாய்ச்சொல் வீரர்களை மதிக்க நான் என்ன உங்களைப் போல் 'இணைய புலியா'?


கல்வி என்பது மானிடர்களுக்கு மிக அத்தியாவசியமான ஒன்று. சரியான கல்வி தான் நன்மை, தீமை இரண்டையும் பிரித்து பார்க்க உதவும். ஆதலால் தான் பிராமணர்க்கு சமுதாயத்திற்க்கு கல்வி புகட்டும் வேலை தரப்பட்டது.


அவர்களுக்கு கடல் பயணமும் தடுக்கப்பட்டது. காரணம் "Brain Drain" ஆவதை தடுக்கத்தான். அவர்களுக்கு பிச்சை/தானம் தரப்பட்டதற்கு காரணம் கல்வி புகட்டுவதை விட்டு அவர்களுடை கவனம் தங்களுடைய பசிப்போக்க வேறு வேலைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காகத்தான்.


இன்னும் நான்றிந்த உண்மைகளை எழுதுவேன். ஆனால் எழுதிக்கிழித்து எதற்க்கும் உதவாத இணைய ஹிட் வாங்குவதை விட நான் ஆற்ற வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளன. ஆகவே அதற்க்குத்தான் முக்கியத்துவம். என்க்கு கர்மாவை நிறைவேற்றுவதில் தான் 'அரிப்பு' அதிகம் எழுதி தள்ளுவதில் அல்ல.


குறிப்பு - பிறகு இந்த இடுகையை நீங்கள் அவசர அவசரமாக பிரபாகரனின் மரணச்செய்தி பற்றி இடுகையிட்டு விட்டு இரண்டே நாளில் 10.0 மேல் ஹிட் வாங்கி விட்டு , அதன் பின் இது உறுதிப்படுத்தப்படாத செய்தி என டெலீட்டியது போல் டெலீட்ட வேண்டாம். நான் தந்த தகவல்கள் அனைத்தும் பல வருடங்களாக கண்டு, கேட்டு உணர்ந்த விஷயங்கள்.
நன்றி . வணக்கம்.


with care & love,

Muhammad Ismail .H, PHD,
http://gnuismail.blogspot.com

Kesavan சொன்னது…

இனிமேல் யாரும் தங்கள் வீட்டு நல்லது கெட்டதிற்கு பிரமணர்களை ( அதாவது உங்கள் வாக்கு படி பார்பனர்களை கூபிடாதீர்கள் ). பற்பணனுக்கு அந்த தகுதி இல்லாத போது எதற்கு கூப்பிட வேண்டும் . அப்படி அழைத்தீர்கள் என்றால் நீங்கள் இங்கே எழுதுவது இந்த இடுக்கைக்கு மட்டும் தான் ( பின் குறிப்பு - வீட்டில் உள்ளவர்களை திருப்தி படுத்தே வேண்டும் என்பதற்காக கூப்பிட்டேன் என்று சொல்ல வேண்டாம் )

Jawahar சொன்னது…

//நான் நல்லவன் என்று நான் சொன்னால நீங்கள் எப்படி கொலைஞன் ஆகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.//

அறிவன் அவர்களின் இந்தக் கருத்து சுவாரஸ்யமானது. "அவன் புத்திசாலிய்யா" என்று சொல்கிற போது "அப்ப நான் முட்டாளா?" என்று கேட்கிற பல பேரை நான் அறிவேன். இது சைல்ட் ஈகோ விலிருந்து வருவது.

http://kgjawarlal.wordpress.com

Kesavan சொன்னது…

//நான் நல்லவன் என்று நான் சொன்னால நீங்கள் எப்படி கொலைஞன் ஆகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.//

//அறிவன் அவர்களின் இந்தக் கருத்து சுவாரஸ்யமானது. "அவன் புத்திசாலிய்யா" என்று சொல்கிற போது "அப்ப நான் முட்டாளா?" என்று கேட்கிற பல பேரை நான் அறிவேன். இது சைல்ட் ஈகோ விலிருந்து வருவது//

அப்படி என்றால் பிராமணன் என்று சொல்லும் போது மற்றவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லுவது எதில் வருகிறது

passerby சொன்னது…

அறிவன்!

உங்களுக்குத் தெரிந்தவைகளைவிட மகா பெரியவாளுக்கு நிறைய, ரொம்ப நிறைய தெரிந்திருக்கும் என்பதை யாரேனும் மறுக்கமுடியுமா? நீங்கள் ameteur. அவர் professional. அவர் வாழ்வே அது. அவர் சொல்வது பிழையாகுமா?

நிற்க.

நான் ‘தெரிந்து எழுதுக’ எனச்சொன்னது உங்களது தமிழக சமய வரலாற்றப்பற்றியே.

திருப்பாணார் யாரென்றே தெரியாமல் குருட்டாம்போக்கிலல்ல்வா எழுதியிருந்தீர்கள். அதத்தான் சொன்னேன்.

passerby சொன்னது…

//நான் சொல்லவந்தது இன்றைய சூழலில் ஜாதித்துவேசத்தை கொண்டுவராதீர்கள்//

அறிவன்!

இதையேதான் என் கருத்தும். மற்றவர்களைச்சொல்லும் உங்களைப்போன்றோரை நான் கேட்கிறேன்.

நீங்கள் - ‘எங்கே பிராமணன்’ என்று தொலைகாட்சித்தொடரும், புத்தகங்களூம், ‘தமிழ்நாடு பிராமணர் சங்க்ம்’ (பத்தரிக்கையைச்சொல்கிறேன்) அதில் பிராமணன் என்று என்னெவெல்லாம் கற்பனையாகப்பட்ட்தோ அவற்றைப்பற்றி இன்றைய பார்ப்பனத்தலைமுறையை radicalisation பண்ணுகிறீர்களே, இது ஜாத்துவேசத்தின் catalyst என்கிறேன்.

இதை நிறுத்துங்கள். மற்ற தமிழர்களை உங்களுள் ஒருவராகப்பாருங்க்ள் என்கிறேன்.

இப்போது யார் ஜாதித்துவேசம் பண்ணுகிறார்.

நீங்களா? நாங்களா?

passerby சொன்னது…

//இதேயேதான்,நான் பிராமண குலத்தில பிறந்து விட்ட ஒரே காரணத்திற்காக நான் கொம்பு என்று எவராவது சொன்னாலும் நான் சொல்வேன்;சொல்லியிருக்கிறேன்//


இது டுபாக்கூர்.

நீங்கள் பிராமண குலத்தில் பிறக்கவில்லை.

நீங்கள் பிறந்த்து பார்ப்பன வகுப்பு. தமிழர்களில் ஒரு பிரிவினர்.

‘பிராமணன்’ எனச்சொல்லும் ஒவ்வொரு முறையும், நீங்கள் மற்றவர் காதில் பூச்சுற்றப்பார்க்கிறீர்கள் என்பதே இப்பதிவின் மையக்கருத்து

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

{நீங்கள் ameteur. அவர் professional. அவர் வாழ்வே அது. அவர் சொல்வது பிழையாகுமா?

நிற்க.}
இம்மாதிரி ஹீரோ வொர்ஷிப்புகளுக்கு என்னிடம் பதில் இல்லை.ரஜினி ரசிகரிடம் ரஜினி நடிகர் மட்டும்தான் என்று சொன்னால் கேட்கவா போகிறார்கள் !

{நான் ‘தெரிந்து எழுதுக’ எனச்சொன்னது உங்களது தமிழக சமய வரலாற்றப்பற்றியே.

திருப்பாணார் யாரென்றே தெரியாமல் குருட்டாம்போக்கிலல்ல்வா எழுதியிருந்தீர்கள். அதத்தான் சொன்னேன்.}

I still stick to my word,pl read my suggestion & then come & discuss.

{
அறிவன்!

இதையேதான் என் கருத்தும். மற்றவர்களைச்சொல்லும் உங்களைப்போன்றோரை நான் கேட்கிறேன்.

நீங்கள் - ‘எங்கே பிராமணன்’ என்று தொலைகாட்சித்தொடரும், புத்தகங்களூம், ‘தமிழ்நாடு பிராமணர் சங்க்ம்’ (பத்தரிக்கையைச்சொல்கிறேன்) அதில் பிராமணன் என்று என்னெவெல்லாம் கற்பனையாகப்பட்ட்தோ அவற்றைப்பற்றி இன்றைய பார்ப்பனத்தலைமுறையை radicalisation பண்ணுகிறீர்களே, இது ஜாத்துவேசத்தின் catalyst என்கிறேன்.

இதை நிறுத்துங்கள். மற்ற தமிழர்களை உங்களுள் ஒருவராகப்பாருங்க்ள் என்கிறேன்.

இப்போது யார் ஜாதித்துவேசம் பண்ணுகிறார்.

நீங்களா? நாங்களா?}

I do not see any sanity in this statement,even after reading all the arguments.
Live long!

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் நல்லவன் என்று நான் சொன்னால நீங்கள் எப்படி கொலைஞன் ஆகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

நான் அறவழியின் படி நடக்கிறேன்,நானும் பிராமணர் என்று சொல்லி விட்டுப் போங்களேன்,எது தடுக்கிறது? தன் நெஞ்சறிவது பொய்யற்க-அவ்வளவுதான்!
//

இங்கே நான் நல்லவனா இல்லையா ? என்பதை நான் சமூகம் முன் நிருபனம் செய்தால் தான் நான் நல்லவன் என்று பிறர் சொல்ல நான் நல்லவன் ஆக முடியும், அது எதுவுமே இல்லாமல் எனக்கு நானே நான் நல்லவன் நல்லவன் மேலும் நான் மட்டுமே நல்லவன் என்பதும் எதிரே இருப்பவரை வம்புக்கு இழுப்பது ஆகும்.

பெரியார் காட்டும் உதாரணம் "நல்லோர் பலர் வாழும் ஊரில் ஒருவர் மட்டுமே தன் மனைவி பத்தினி என்று எழுதி பலகை வைத்தால் அது பிறருக்கு முகம் சுளிப்பும், தேவையற்ற கலகத்தையும் ஏற்படுத்தும்"

மற்றவர்களுக்கும் தங்களுக்கும் வேறுபாடாக பிராமணன் என்ற சொல்லப்படும் மேன்மையான குணம் இருக்கிறதா என்று பார்க்காமல் வழிந்து போட்டுக் கொள்வது எந்த விதத்திலும் வேற்றுமையையே வளர்க்கும்.

போலி டாக்டர் தன்னை டாக்டர் என்றே அழைக்க வேண்டும் சொல்வதை நீங்கள் அவர் போலி என்று தெரிந்தே அழைப்பீர்களா ? அவர் செயலில் ஞாயம் இருக்கிறது என்று சொல்லுவீர்களா ?

பலர் கூடியிருக்கும் சபையில் ஒருவன் எழுந்து நான் உத்தமிக்கு பிறந்தவன் என்று கூறினால் அவனுக்கு அங்கு கிடைக்கும் மரியாதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு செட்டியாரை செட்டியார் என்றும், நாடாரை நாடார் என்று அழைக்கும் போது யாரும் குறைபட்டுக் கொள்ளாத போது பார்பனர்களை பார்பனர்கள் என்று அழைக்கும் பொழுது என்ன இழிவு இருக்கிறது ? எதற்காக மற்றவர்கள் அவர்களை பிராமணர்கள் என்று அழைக்க வேண்டும் ?

பிரமணன் குண அடிப்படை அல்ல என்றுமே அது வர்க, பிறப்பு அடிப்படையில் தான் வருகிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதை குணத் தகுதியாகக் காட்டி வருணாசிரமத்தை ஞாயப்படுத்தாதீர்கள். சோ அப்படி ஒரு முயற்சியைத் தான் தேடுதல் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்.

passerby சொன்னது…

//அப்படி என்றால் பிராமணன் என்று சொல்லும் போது மற்றவர்கள் சூத்திரர்கள் என்று சொல்லுவது எதில் வருகிறது//

கேசவன்!

பிராமணன் என்று சுட்டும்போது, அது ஒரு பெரிய உண்மையைப் பகர்கிறது:

அப்படிச்சொன்னவன், வருணக்கொள்கையை ஏற்றுக்கொள்கிறான். வருணக்கொள்கையை ஏற்றால்தான், பிராமணன் என்று சொல்லமுடியும்.

வருணக்கொள்கையை ஏற்றபின, அதில் நால்வகை குலங்கள் உண்டு. அதில் நான் பிராமணன் எனக்கென ஒரு தொழில் (thought not today. We are dealing with theory here, not practice) அதுபோன்று மற்ற மூவகையினருக்கென்று தொழில்கள்.

நால்வகை குலத்தார் பிரிக்கப்பட்டது அவர்தம் பிறப்பால்வரும் குணங்களால். அதன்படி, பிராமணன் ஆகிய நான், சத்வகுணத்தோடு பிறந்தேன். என்வே என்னால்தான் படித்துப் பிறருக்கு கல்வி புகட்ட முடியும். அதிலும் கூட நாலாம் குலத்தானான சூத்திரனுக்குப்புகட்டா மாட்டேன். (This was practised by Uu.Ve.Sa. He refused to be a teacher to Narana Duraikkannan as he was a suthra). நான் உடலுழைத்து பிழைக்கமாட்டேன். என மூளை மட்டுமே போதும். பிறர் எனக்கு உழைப்பர்.”

இவ் நால்வகை குலத்துக்கும் அப்பால், குலமேயில்லாத தலித்துகள் தீண்டத்தகாதவர்கள். அவர்களை நான் காண்பதே பாவம். அவர்களின் தீட்டுப்பட்டால், நான் பரிகாரம் பண்ணவேண்டும்’

இவையனைத்தும் யார் தன்னைப்பிராமணன் என்று சொல்கிறாரோ அவர் ஏற்றுக்கொள்கிறார்.

எனவே தலித்து என்று ஒருவன் உண்டு. தீண்டாமை என்று ஒன்று உண்டு. அவன் ஆழ்வாரே ஆனாலும், அவன் என்னைப்போல் பிராமணன் ஆக முடியாது.

The above is theory. It is not denied in the vedic religion which is followed by Tamilbrahmins.

So, you commit a crime against humanity in the theorical treatment of certain humanbeings as polluting you, the brahmin, religiously.

Therefore, it is unsafe to call yourself a Brahmin.

At the same time, it is quite safe to call yourself paarppanar. If caste hindus treat dalits like dirt, you can join with them, to give dalit the same treatment. For all intents and purposes, you are with Caste Hindus (assuming you like the idea!).

I say this, because the CH escapes the religious attack - as I have done here against you,indirectly! - in treating dalits as untouchbales.

Recall here the general charge against third parties like me, byt the Tamil brahmins:

"அவாள்தான் எங்களைவிட பறை பள்ளியெல்லாம் அசிங்கமா நடத்றா. நாங்க இப்ப அப்படியில்ல. ஆனால் எங்களை மட்டும் போட்டு உலுக்கிறா!’

This is a common but true charge. Yet, it conceals one thing: namely, the CH escapes the relgious angle. You are in it by calling yourself a brahmin, and trying to hark back upon your glorious days centuries or even millennia. (which, according to many, utter nonsense, as there is no real glory in it)

But, as of today, the CHs also attack you for treating them lower than you in your theory. A gigantic proportion of Tamil population comes under the category of suthraas.

So, in order to be safe, drop the pretention of calling yourselves Brahmins!

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னைப் பொறுத்தவரை யாரையும் அவரது சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை வைத்து தான் கணிப்பேன். வெறும் வாய்ச்சொல் வீரர்களை மதிக்க நான் என்ன உங்களைப் போல் 'இணைய புலியா'?//

நீங்களாகவே என்னைப் பற்றி கற்பனையாக ஒரு உயர்வைக் கற்பித்துவிட்டு அதை நீங்களாகவே மட்டம் தட்டுவதற்கு நான் பொறுப்பாக முடியாது ?

உங்களிடம் வேண்டுமானால் நான் வேறொரு கேள்விக் கேட்க முடியும் ? காஃபிர்கள் என்பதற்கான விளக்கம் கொடுங்கள் நான் காஃபிர் இல்லையா என்பதைத் தெரிந்து கொள்கிறேன்

passerby சொன்னது…

//I still stick to my word,pl read my suggestion & then come & discuss.//

Dear Arivan!

நாமத்தைசொல்லப்பா? நல்ல சாமிப்பேரை வீட்டில் விட்டுருப்ப்பங்க. ஆசையாகக்கூப்ப்ட்லாமென்றால்...!

நிற்க.

உங்களோடு வாதம் பண்ணி ஜெயிக்கவேண்டுமென்பது என்னவாவல்ல.

தப்பா எழுதினால் அதைத் திருத்திக்கொள்ள வெட்கப்படமாட்டேன்.

என்பதிவைபடியுங்கள். பாரதி மீதே கோபம் கொண்டி பதிவு போட்டிருக்கிறேன். அவரும் உங்களை மாதிரி திருப்பள்ளையெழுச்சி எழுதியது யார் என்று தெரியாமல் இருந்திருக்கிறார் என்பது என் கோபம்.

இன்னொன்றும் இங்கு சொல்லிக்கொள்ள ஆவல் பொதுவாக.

இப்பதிவு, அல்லது என்னைப்போன்றோரிடம் பின்னூட்டங்கள், போன்றவை பார்ப்பனத்ததுவேசம் என்ற category யில் வரா. எல்லோரும் நலம் பெற வாழவேண்டுமென்பதே எங்களவா. எங்களுக்கு எல்லோரையும் பிடிக்கும்.

பாப்பனத்துவேசம் என்று ஒன்று இருந்தால் அஃது அழியவேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை.

அதில் ஒரு நப்பாசைதான் நாங்கள் சொல்வது. என்ன அது?

அக்காலத்தில் வாழாதீர்கள்? இக்காலத்துக்கு வாருங்கள்.” என்பது.

தென்கலை வைணவம் ஜாதியில்லா சமூகத்தைக்காட்டுகிறது. அதில் தலித்து, கள்ளர், பார்ப்பனர் எல்லோரும் எங்களது தெய்வங்களாகி விட்டார்கள் அல்லவா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Jawahar


//நான் நல்லவன் என்று நான் சொன்னால நீங்கள் எப்படி கொலைஞன் ஆகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.//

அறிவன் அவர்களின் இந்தக் கருத்து சுவாரஸ்யமானது. "அவன் புத்திசாலிய்யா" என்று சொல்கிற போது "அப்ப நான் முட்டாளா?" என்று கேட்கிற பல பேரை நான் அறிவேன். இது சைல்ட் ஈகோ விலிருந்து வருவது.

http://kgjawarlal.wordpress.com
//

சுவாரிசியம் ஆனது தான், இதே கருத்தில் சற்று மாற்றி, நண்பரிடம் நான் ஒருத்தனுக்கு பிறந்தவன், எனக்கு அறிவு அதிகம்" என்று கூறினால் அவன் என்னை செருப்பால் அடிக்க வருவான், அப்போது நான் அவனிடம் உனக்கு ஏன் ஈகோ, நீயும் அவ்வாறு கூறிக் கொள்ளேன் என்று சொன்னால் அவன் சாதுவாக அடங்கி ஒடுங்கிவிடுவான். போங்க சார்.

லாஜிக்கு லாஜிக்காம் !

priyamudanprabu சொன்னது…

இந்த நால் வருண பகுப்பு என்பது பார்பனர்களிடம் மட்டுமே அவர்களுக்குள் இருந்தது என்றும், அவர்கள் இந்திய அளவில் பரவி வாழ்ந்த போது பிராமணன் என்ற தகுதியை அவர்களே தக்கவைத்துக் கொண்டு அவரவர் செய்யும் வேலைக்கு ஏற்றார் போல் வருணப் பகுப்பை பார்பனர் அல்லாத சமூகத்திற்கும் பரிந்துரைத்தார்கள், அவர்கள் பல்வேறு அரசுகளின் அமைச்சரவைகளில் உயர்ந்த பதவியில் இருந்ததால் அரசர்களை வருணப் பரிந்துரைக்கு வேண்டுகோள் வைத்து சாதித்தாகக் கூறப்படுகிறது.
///

sariye

மணிகண்டன் சொன்னது…

&&&
தமிழ்நாடு பிராமணர் சங்க்ம்’ (பத்தரிக்கையைச்சொல்கிறேன்) அதில் பிராமணன் என்று என்னெவெல்லாம் கற்பனையாகப்பட்ட்தோ அவற்றைப்பற்றி இன்றைய பார்ப்பனத்தலைமுறையை radicalisation பண்ணுகிறீர்களே
&&&

கள்ளபிரான், உங்களோட பல கருத்துக்கள படிச்சி இருக்கேன். சரியா/ தவறான்னு முடிவு பண்ணும் அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது. ஆனா மேலே நீங்க எழுதி இருக்கறது ஒருவேளை காமெடி வேல்யூ கருதி எழுதி இருப்பீங்கன்னு நினைக்கறேன். அப்படி ஒரு பத்திரிகை இருக்கும்..(ஏன்னா நீங்க எழுதி இருக்கீங்க). ஆனா அதோட circulation எவ்வளவு இருக்கும்ன்னு guess பண்றது கடினமா இல்லை :)- மொத்தமா ஒரு முப்பது பேரு படிக்கலாம். :)- அதன் மூலமா radicalize பண்றது எல்லாம் கோவி கண்ணன் பதிவு படிச்சி ஒருவித புரிதல் வந்ததுன்னு சொல்றதுக்கு சமம் :)-

priyamudanprabu சொன்னது…

பின்குறிப்பு : இந்திய வரலாற்றில், இந்து இதிகாசங்கள் எதோ ஒன்றில் எந்த ஒரு தனிமனிதனும், வரலாற்று நாயகனும் பிராமணத் தகுதி என்று சொல்லப்படும் சிறப்புத் தகுதியுடன் வாழ்ந்தான் என்று சுட்டிக்காட்டினால் நான் இந்த இடுகையையே எடுத்துவிடுகிறேன்
////

அது...........

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

{
பிரமணன் குண அடிப்படை அல்ல என்றுமே அது வர்க, பிறப்பு அடிப்படையில் தான் வருகிறது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதை குணத் தகுதியாகக் காட்டி வருணாசிரமத்தை ஞாயப்படுத்தாதீர்கள்.}

வருணாசிரமம் என்பது பிறப்படிப்படையில் புகுத்தப்பட்டது என்பதும் அதனாலேயே அது வலுவாக எதிர்க்கப்பட்டது;அதில் நியாயமும் இருக்கிறது.
உண்மையில் குணம்\தொழில் சார்ந்ததாகத்தான் அது இருக்க வேண்டும் என்பது உரத்த சிந்தனை...

இப்போது உல்டாவாக வாதிக்கிறீர்கள்..சுத்தம் !

மற்றபடி வேண்டியமட்டும் சொல்லியாகிவிட்டது.

பொறுமையான விவாதத்திற்கு நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

{ஒருத்தனுக்கு பிறந்தவன், எனக்கு அறிவு அதிகம்" என்று கூறினால் அவன் என்னை செருப்பால் அடிக்க வருவான், அப்போது நான் அவனிடம் உனக்கு ஏன் ஈகோ, நீயும் அவ்வாறு கூறிக் கொள்ளேன் என்று சொன்னால் அவன் சாதுவாக அடங்கி ஒடுங்கிவிடுவான். போங்க சார்.

லாஜிக்கு லாஜிக்காம் !}

I guess this is not in good taste & gives me amber signal.

Jawahar சொன்னது…

//சுவாரிசியம் ஆனது தான், இதே கருத்தில் சற்று மாற்றி, நண்பரிடம் நான் ஒருத்தனுக்கு பிறந்தவன், எனக்கு அறிவு அதிகம்" என்று கூறினால் அவன் என்னை செருப்பால் அடிக்க வருவான், அப்போது நான் அவனிடம் உனக்கு ஏன் ஈகோ, நீயும் அவ்வாறு கூறிக் கொள்ளேன் என்று சொன்னால் அவன் சாதுவாக அடங்கி ஒடுங்கிவிடுவான். போங்க சார்.

லாஜிக்கு லாஜிக்காம் !//

கண்ணன்ஜி, என்ன ஆச்சு? ஒருத்தனுக்குப் பிறக்கிறது, பலபேருக்குப் பிறக்கிறது எல்லாம் ஏன் வந்தது? அதுக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்? அதைக் கேக்கறவன் ஏன் செருப்பால அடிக்கணும்?

http://kgjawarlal.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவன்#11802717200764379909


{ஒருத்தனுக்கு பிறந்தவன், எனக்கு அறிவு அதிகம்" என்று கூறினால் அவன் என்னை செருப்பால் அடிக்க வருவான், அப்போது நான் அவனிடம் உனக்கு ஏன் ஈகோ, நீயும் அவ்வாறு கூறிக் கொள்ளேன் என்று சொன்னால் அவன் சாதுவாக அடங்கி ஒடுங்கிவிடுவான். போங்க சார்.

லாஜிக்கு லாஜிக்காம் !}

I guess this is not in good taste & gives me amber signal.
//

இது திசைத் திருப்பல், நான் என்னைத் தான் உதாரணமாக வைத்துக் கூறினேன். கேட்கவே நாரசமாக இருக்கிறதே. அதே போன்று தான் ஒருவர் தன்னைத் தானே பிராமணன் என்று அழைத்துக் கொள்ளும் போது பிறரை மறைமுகமாக சூத்திரன் ஆக்குவது

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்ணன்ஜி, என்ன ஆச்சு? ஒருத்தனுக்குப் பிறக்கிறது, பலபேருக்குப் பிறக்கிறது எல்லாம் ஏன் வந்தது? அதுக்கும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்? அதைக் கேக்கறவன் ஏன் செருப்பால அடிக்கணும்?

http://kgjawarlal.wordpress.com//

எல்லோருமே ஒருத்தருக்குத்தான் பிறந்திருப்பார்கள், ஆனால் அதை அழுத்திச் சொன்னால் அந்த இடம் ரணகளம் ஆகும். அதைத்தான் சுட்டிக்காட்ட விரும்பினேன். தன்னை அறிவாளி என்றுக் கூறிக் கொள்வதால் பிறரை முட்டாள் என்று கூறுவது ஆகுமா என்று அறிவன் சார் கேட்டாரே, அதே லாஜிக் தான், அவர் சொல்வது டீசண்ட் உதராணம் நான் சொல்வது இண்டீசண்ட் உதாரணம் ஆக மொத்தம் இரண்டுமே அபத்தம் என்பதை உணருவீர்கள் என்றே நினைக்கிறேன்.

ஒரு கருத்து டீசண்டாக சொல்வதால் ஏற்கலாம் என்கிற மன நிலையையும், இண்டீசண்டாகச் சொன்னால் அதில் உள்ள ஞாயங்களைக் கூட இண்டீசன்சியைச் சுட்டிக்காட்டி மறுத்துவிடுகிறோம், நமது சமூகப் புரிந்துணர்வு என்பது உணர்வு சார்ந்தது அல்ல அவை வெறும் சொற்களால் கட்டமைக்கப்படுவதால் உணர்வையும் அதுவே முடிவு செய்கிறது

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

80

Jawahar சொன்னது…

கண்ணன்ஜி, நான் ஒருத்தனுக்குப் பிறந்தவன் என்பதை ஒருத்தன் அழுத்திச் சொன்னால் அதில் அவனுக்கே ஐயமிருக்கிறது என்று அர்த்தம். அப்போது அந்த இடம் ரண களம் ஆனால் கேட்கிறவனுக்கும் தன்னைப் பற்றி சந்தேகம் என்று பொருளாகும். அதற்கு பதில் ஒருத்தன் நான் ஒருத்தனுக்குப் பிறந்தவன் என்று சொல்கிற போது அவனைப் பார்த்து யார் பரிதாபப் படுகிறானோ அவன்தான் நிஜமான புத்திசாலி. அங்கே செருப்புக்கு வேலையே இல்லை.

http://kgjawarlal.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

// Jawahar said...
கண்ணன்ஜி, நான் ஒருத்தனுக்குப் பிறந்தவன் என்பதை ஒருத்தன் அழுத்திச் சொன்னால் அதில் அவனுக்கே ஐயமிருக்கிறது என்று அர்த்தம். அப்போது அந்த இடம் ரண களம் ஆனால் கேட்கிறவனுக்கும் தன்னைப் பற்றி சந்தேகம் என்று பொருளாகும். அதற்கு பதில் ஒருத்தன் நான் ஒருத்தனுக்குப் பிறந்தவன் என்று சொல்கிற போது அவனைப் பார்த்து யார் பரிதாபப் படுகிறானோ அவன்தான் நிஜமான புத்திசாலி. அங்கே செருப்புக்கு வேலையே இல்லை.

http://kgjawarlal.wordpress.com
//

நீங்கள் அறிவுபூர்வமாக இப்படி நடப்பது தான் சரி என்று நினைத்துப் பார்க்கிறீர்கள், ஆனால்
அதை ப்ராக்டிகலாக செய்து பார்க்கும் போது நடப்பதே வேறு. அதைப் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன்


&&&
தமிழ்நாடு பிராமணர் சங்க்ம்’ (பத்தரிக்கையைச்சொல்கிறேன்) அதில் பிராமணன் என்று என்னெவெல்லாம் கற்பனையாகப்பட்ட்தோ அவற்றைப்பற்றி இன்றைய பார்ப்பனத்தலைமுறையை radicalisation பண்ணுகிறீர்களே
&&&

கள்ளபிரான், உங்களோட பல கருத்துக்கள படிச்சி இருக்கேன். சரியா/ தவறான்னு முடிவு பண்ணும் அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது. ஆனா மேலே நீங்க எழுதி இருக்கறது ஒருவேளை காமெடி வேல்யூ கருதி எழுதி இருப்பீங்கன்னு நினைக்கறேன். அப்படி ஒரு பத்திரிகை இருக்கும்..(ஏன்னா நீங்க எழுதி இருக்கீங்க). ஆனா அதோட circulation எவ்வளவு இருக்கும்ன்னு guess பண்றது கடினமா இல்லை :)- மொத்தமா ஒரு முப்பது பேரு படிக்கலாம். :)- அதன் மூலமா radicalize பண்றது எல்லாம் கோவி கண்ணன் பதிவு படிச்சி ஒருவித புரிதல் வந்ததுன்னு சொல்றதுக்கு சமம் :)-
//

மணி, radicalize பண்றது இதைப் படித்தால் நடக்காதான்னு கொஞ்சம் படித்துச் சொல்லுங்க !
:)

Jawahar சொன்னது…

கண்ணன்ஜி, நீங்கள் போட்டிருக்கும் ஸ்மைலிக்கு நிறைய அர்த்தம் இருக்கிறது. ஆனாலும் ஒன்றே ஒன்றை சொல்லிக் கொண்டு என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன். நான் சொல்வது, செய்வது, எழுதுவது எல்லாமே அனுபவத்திலிருந்துதான். நீயே அனுபவிக்கிற வரை எதையும் நம்பாதே என்று சொன்ன என் குருவை (விவேகானந்தா) நான் மதிக்கிற வரை அனுமானமாகவோ, செவி வழிச் செய்தியாகவோ எதையும் கூடுமானவரை சொல்ல மாட்டேன். நன்றி,

http://kgjawarlal.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

// Jawahar said...
கண்ணன்ஜி, நீங்கள் போட்டிருக்கும் ஸ்மைலிக்கு நிறைய அர்த்தம் இருக்கிறது. ஆனாலும் ஒன்றே ஒன்றை சொல்லிக் கொண்டு என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன். நான் சொல்வது, செய்வது, எழுதுவது எல்லாமே அனுபவத்திலிருந்துதான். நீயே அனுபவிக்கிற வரை எதையும் நம்பாதே என்று சொன்ன என் குருவை (விவேகானந்தா) நான் மதிக்கிற வரை அனுமானமாகவோ, செவி வழிச் செய்தியாகவோ எதையும் கூடுமானவரை சொல்ல மாட்டேன். நன்றி,

http://kgjawarlal.wordpress.com
//

ஜவஹர் சார்,

நான் போட்ட ஸ்மைலிக்கு சிரிப்பு என்பதைத் தவிர வேறு உட் பொருள் எதுவும் இல்லை என்பதை அதைப் போட்டவன் என்பதால் உறுதியாகச் சொல்ல முடியும்,

உங்கள் இறுதி பின்னூட்ட்டம் குறித்து நான் குறிப்பிட்டது இது தான், அறிவு பூர்வமாக அப்படிச் சொல்பவரிடம் இப்படித்தான் நடந்து கொள்வது புத்திசாலித்தனம் என்கிறீர்கள், ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அப்படியான உரையாடல் நடக்கும் போது அங்கு உடனே எதிர்வினையாற்ற உணர்வு தான் வேலை செய்யும் அதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

ஒரு எதிர்பாரா நிகழ்வில் உணர்வா அறிவா எதன் முடிவு என்பதில் 90 விழுக்காடு உணர்வின் முடிவே முந்தும் என்று நினைக்கிறேன்.

Jawahar சொன்னது…

//ஒரு எதிர்பாரா நிகழ்வில் உணர்வா அறிவா எதன் முடிவு என்பதில் 90 விழுக்காடு உணர்வின் முடிவே முந்தும் என்று நினைக்கிறேன்.//

கரெக்ட்... உணர்வு டாமினன்ட்டாக இருக்கிற எல்லாரும் அப்படித்தான் இருப்பார்கள்.

இன்னொரு விஷயம். சிரிப்பு என்பது எபெக்ட். அதற்கு ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களோ நிச்சயம் இருக்கும்.... சரிதானே? :)

http://kgjawarlal.wordpress.com

Unknown சொன்னது…

//Kesavan


இனிமேல் யாரும் தங்கள் வீட்டு நல்லது கெட்டதிற்கு பிரமணர்களை ( அதாவது உங்கள் வாக்கு படி பார்பனர்களை கூபிடாதீர்கள் ). பற்பணனுக்கு அந்த தகுதி இல்லாத போது எதற்கு கூப்பிட வேண்டும் . அப்படி அழைத்தீர்கள் என்றால் நீங்கள் இங்கே எழுதுவது இந்த இடுக்கைக்கு மட்டும் தான் ( பின் குறிப்பு - வீட்டில் உள்ளவர்களை திருப்தி படுத்தே வேண்டும் என்பதற்காக கூப்பிட்டேன் என்று சொல்ல வேண்டாம் )//

I think Mr.Kovi missed to answer this comment :) and I hope he will give a proper answer :):):)

கட்டபொம்மன் சொன்னது…

இப்ப உங்க பிரச்சனை தான் என்ன , என்ன சொல்ல வாறீங்க , ஏன் இப்படி !!!.
அவனனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை !!!

சரி தெரியாமத்தான் கேட்கிறேன் இப்படி சண்டை போடுவதால் எல்லா பிரச்சனையும் தீர்ந்திடுமா ...

Unknown சொன்னது…

அதாவது....நம்ம கண்ணன் சாருக்கு போர் அடிச்சா இப்படி தான் எதாவது பண்ணுவார் :)))))
அவர் பிடிச்ச முயலுக்கு எப்பவுமே மூணு கால் தான் :)))))))))))))))))

கட்டபொம்மன் சொன்னது…

படித்தவன் பாட்டைக் கெடுத்தான் ; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழமொழி மாதிரி இருக்கு

passerby சொன்னது…

I refer to the message of Jawahar: 'It is child ego...'

In a nursery class, you find sex war. Girls vs boys. To you, it will appear a child quarrel.

But the war continues all along the life in every form. So, we carry the child ego.

Copenhagan, World Wars etc. are germinated in child egos which dont go away in adulthood.

கோபன்கேகனில், ‘நீங்க செய்யல...இல்ல இல்ல நீங்கதான் செய்யல...ஏன் நாங்க மட்டும் செய்யனும்? இவ்வளுவுதான் செய்வோம்...பின்ன நாங்க மட்டும் இளிச்ச வாயன்களா?’

இவைகள் இன்றும் எல்லாவற்றயும் உலகமேடைகளில், சமூக மனிதக்கூடங்களில், நடைபெறும் child egoes carried into adulthoods.

இந்தப்பதிவின் தலைப்பே, பார்ப்பன்ர்களின் childegoவைச் சுட்டிக்காட்டும் நோக்கத்தில் எழுதப்பட்டதாக நினைக்கிறேன். நீங்கள் அதை மாற்றிச்சொல்கிறீர்கள்.

என் கருத்து: இருபுறமும் இருக்கலாம்.

பார்ப்பனத்துவேசத்தை மாற்றும் பெரும்பங்கு பார்ப்பனர்கள் கைகளிலும் இருக்கிறது.

இல்லை என்று சாதிப்பதும், ஒரு child ego.

பெரியார் சொன்னதாக படித்தது:

இவ்வீட்டில் இருப்பவர்கள் ‘குடும்பப்பெண்கள்’ என்று அறிவிப்புப்பலகை போட்டால், அது கண்டிப்பாக பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் விபச்சாரிகள் என்பதாகும். தாங்கள் பிராமண்ர்கள் என்றால், மற்றவர்களைச் சூத்திரர்கள் என்பதாகும் என்றார்.

இது child egoவா?

தன்னை பிராமணன் என்று சொல்லும் ஒவ்வொருவனும், ஒருவனைத் தலித்து என்று சொல்லிப்புதைத்து, அதன் மேல் மாளிகைகட்டி வாழ்பபதாகும் என்பது என்கருத்து. அதை நான் இங்கு விளக்கிவிட்டேன்.

passerby சொன்னது…

முகமது இசுமாயில் என்ற பாவனைப்பெயரில் எழுதும் அன்பர், தான் ஒரு பிராமணனைக்கண்டதாகச்சொன்னார்.

நன்று.

இது போன்ற பலரை நான் கண்டதுண்டு. படித்ததுண்டு. ஆ.வியில் சில் சமயங்களில் இப்படிப்பட்டவர்களைப்பற்றி சிறுகுறிப்புகளோ கட்டுரைகளோ வருவதுண்டு. ஆனால் இவர்கள் யாரோ. ஒருவர் கூவம் நதிக்கரைக்குடிசைக்குழந்தகளுக்கு இரவுப்பள்ளி நடாத்துகிறார். இவர்களெல்லாம் பிறப்பால் பார்ப்பனரல்ல.

இப்போது இவர்களெல்லாம் ‘பிராமணர்’ என்று இசுமாயில் சொல்வாரா?

அவர் கண்ட ‘பிராமணர்கள்’, தாங்கள் அவ்வகுப்பில் பிறந்தத்னால் அச்சேவை செய்கிறார்களா? அன்றி, ஒரு நல்ல மனிதர்கள் என்ற அடையாளத்தில் மட்டுமே செய்தார்களா?

அச்செயலைச்செய்தால், உடனே ஏன் பிராமணப்பட்டம்?

அப்படியே எடுத்தாலும், அவர்கள் இருவருக்கு ஈடாக சேவைபுரியும் மற்றவர்களைப்பற்றி இவர் என்ன சொல்கிறார்? அவர்களுக்கு என்ன பட்டம்?

passerby சொன்னது…

என் பின்னூட்டங்களை வைத்து வைணவர்கள் என்னை வைய முடியும். அப்படிச்செய்யின் அது சரியே. அவர்கள் செய்வதற்கு முன் என்னை நான் காத்துக்கொள்ள் விழைகிறேன்.

என்ன அது?

ஆழ்வார்களுக்கு ஜாதி சொன்னது.

இங்கு பேசப்படும் ஜாதிகள் நம்மைப்போன்ற மனிதருக்கே. மனிதருக்குள்ளேதான் சண்டை இவ்விடய்த்தில்.

ஞானிகளுக்கும், ப்ரம ஞானிகளுக்கும் ஜாதிகள் கிடையா.

ப்ரம் ஞானிகள் என்போர் வைணவத்தில் ஆச்சாரியர்கள் என அழைக்கப்படுவோர். முதலாவது வருபவர் இராமானுஜர். இவருக்கு ஜாதி சொல்வது குற்றமாகும். பூர்வாச்சாரியர்கள் (இவர் முதலாக) ஜாதிகள் சொல்வது குற்றம்.

ஆழ்வார்கள் பரம் ஞானிகளுக்கும் மேலே. இவர்கள் திருமாலில் அம்சங்கள். ஆண்டாள், திருமாலின் திருமார்பில் இருக்கும் திருமகளின் அம்சம்.

ஆழ்வார்களுக்கு ஜாதிகள் சொல்வது பெருங்குற்றம். அவர்கள் மனித ஜாதியில்லையே, எப்படி வரும் ஜாதிகள்.

என்வே நான் சொன்னது குற்றம்.

இருப்பினும், இடத்துக்குத் தகுந்தது போலத்தானே பேச்சும். என்வே சொன்னேன்.

இன்னொன்றயும் சொல்லி அமர்கிறேன்.

passerby சொன்னது…

That is regarding the nomenclature BRAHMANAN.

பிராமணன் எனத்தன்னை சொல்லிக்கொள்வது இந்துமதக் கொள்கையை ஒரு இனத்தார் செய்யும் துர்பிரயோகம் என்பது கோவி. கண்ணன், மற்றும் என்னைப்போன்றோரின் வாதம். இங்கு முன் வைக்கப்பட்டது.

பார்பபனர் என அழைத்துக்கொள்ளுங்கள் என்றாயிற்று.

இருப்பினும், அச்சொல் ஒரு அவச்சொல் என சிலரால் கருதப்படுகிறபடியால், அதற்கும் எதிர்ப்புண்டு. தினமலர் அச்சொல்லைப்பயன் படுத்துவதில்லை.

இதன் கரணியம்- பார்ப்பன எதிர்ப்பாளர்கள் இச்சொல்லையே பயன்படித்தியதால். அவர்களுக்கு முன், இச்சொல் ஒரு தூய தமிழ்ச்சொல்லே. பாரதியும் இச்சொல் அவச்சொல்லாக மாற ஒரு காரணம்.

‘ஓய்..ஏன் பார்ப்பனரை பாப்பான் எனத்திட்டுகிறீர்” என்று கேட்டவருக்கு அவர் கொடுத்த பதில்”

‘நான் ஆயிரம் பார்ப்பனரயும் திட்டவில்லை. அவர்க்ளில் இருக்கும் பத்து கெட்டவரைத்தான் திட்டுகிறேன்’

என்றார். இது எவ்வள்வு தூரம் சரியென்பதை இதை வாசிப்போரிடம் விட்டுவிடுகிறேன். என சொந்தக்கருத்து என்பதிவில் வரும்.

அதற்காக அந்தணன் என்ற பெயரைச்சொல்லலாம் என்றால், திருவள்ளுவர் குறுக்கே வருகிறார். அவர் எழுதியது, எங்களைத்தான் என இறுமாப்பு அடையும் மப்புக்கூட்டம் பார்ப்பனிடையே உண்டு.

மட்டுமில்லாமல், கோவி கண்ணன் சுட்டிய சம்பந்தர் பாடலும் குறுக்கே வருகிற்து.

‘அந்தணர் வாழி! அவர் அறச்ச்செயல் வாழி’

(முழுப்பாடலும் நாளை)

இவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு, அந்தணர் என்ற சொல்லையும் துர்பிரயோகம் செய்கிறார்கள் தங்களை பிறரிடமிருந்து
Holier than thou என்று காட்ட.

வள்ளுவரும் சம்பந்தரும் எங்கள ஜாதியைத்தான் உயர்வாகச்சொன்னார் எனறு சொன்ன ஒரு கிழட்டுப்பாப்பானிடம் நான் போட்ட சண்டை ஒரு சபையில் பிரபலம்.

புதுச்சொல்லைக்கண்டுபிடிக்க் வேண்டும். தமிழக அரசு தலித்துகள் அனைவருக்கும் ஆதிதிராவிடர் என்ற சொல்லைக்கண்டது போல!

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

@ கள்ளபிரான்,

உங்களின் கணனி அறிவு என்னை வியக்க வைக்கிறது. எதை வைத்து எனது தாய், தந்தை நான் பிறந்த போது தேனும், பாலும் தொட்டு பிரியமாக வைத்த பெயரை, புனை பெயர் என்ற முடிவுக்கு வந்தீர்கள் ?. கணனி அறிவு உங்களுக்கு ரொம்ம்ம்ம்ப அதிகம் தான்.

நானென்றும் மற்றவர்களைப்போல் தொடை நடுங்கி அல்ல. முக்காடு போட்டுக்கொண்டு வந்து இணையத்தில் உலாவ. எனக்கு இணையமானது இந்தியாவிற்கு வந்த முதல் நாளான 15 ஆகஸ்ட் 1995 இருந்து பழக்கம். எனது ப்ரோபைலில் பார்த்தால் தெரியும். உங்களுக்கு விளங்கவிட்டால் http://www.iibc.in/itws/contact_rvfe.htm இங்கே சென்று பார்க்கவும். இந்த கணையாழி-ஒன் ID card ஐ நாங்கள் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருக்கும் போதே 100 கோடிக்கும் மேலான இந்தியர்கள் அனைவருக்கும் இது போல் தரச்சொல்லி வடிவமைத்து அனுப்பினோம். மற்றவர்களைப்போல் "இணைய ஹிட்" அரிப்பிற்கு சளக், புளாக்க கூடிய ஆள் நான் இல்லை. உங்களைப்போன்ற நபர்கள் எதையுமே முழுமையாக படிக்க மாட்டீர்களா ? எல்லாத்திலும் அரை குறை தானா?


பிறகு உங்களின் பெயர் இந்த கள்ளபிரான் என்பது புனைப்பெயரா எனக்கேட்க மாட்டேன். அது எனக்கு தேவையும் அல்ல. ஆனால் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது.

"தான் திருடி தன்னையும் நம்பான், பிறரையும் நம்ப மாட்டான்"


வேறேன்னத்தை சொல்ல !!!


with care & love,

Muhammad Ismail .H, PHD,

மணிகண்டன் சொன்னது…

***
மணி, radicalize பண்றது இதைப் படித்தால் நடக்காதான்னு கொஞ்சம் படித்துச் சொல்லுங்க !
***

இப்படி ஒரு வலைத்தளமா ? நடக்கட்டும் நடக்கட்டும் :)- ஆனா அதுல ஒன்னு / ரெண்டு படிச்சி பார்த்தேன். நீங்க சொல்லும் எதுவும் இருக்குதான்னு தெரியல ! வினவு தளம் படிச்சிட்டு ஒருத்தர் stalinist ஆவாரா ? சொல்லுங்க. அதை விட இதுக்கு சான்ஸ் கம்மி தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//# Kamal

//Kesavan


இனிமேல் யாரும் தங்கள் வீட்டு நல்லது கெட்டதிற்கு பிரமணர்களை ( அதாவது உங்கள் வாக்கு படி பார்பனர்களை கூபிடாதீர்கள் ). பற்பணனுக்கு அந்த தகுதி இல்லாத போது எதற்கு கூப்பிட வேண்டும் . அப்படி அழைத்தீர்கள் என்றால் நீங்கள் இங்கே எழுதுவது இந்த இடுக்கைக்கு மட்டும் தான் ( பின் குறிப்பு - வீட்டில் உள்ளவர்களை திருப்தி படுத்தே வேண்டும் என்பதற்காக கூப்பிட்டேன் என்று சொல்ல வேண்டாம் )//

I think Mr.Kovi missed to answer this comment :) and I hope he will give a proper answer :):):)
1:36 AM, December 16, 2009

//

பார்பனர்களை ஓட ஓடத் துறத்துங்கள் என்று இங்கு எங்கும், என் பதிவில் எழுதி இருக்காத பொழுது இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது தேவையற்றது என்று நினைக்கிறேன். பார்பனர்களின் பிழைப்பை கெடுங்கள் என்று நான் எழுதியது போன்று நினைவு இல்லை.
:)

//#
கட்டபொம்மன்


இப்ப உங்க பிரச்சனை தான் என்ன , என்ன சொல்ல வாறீங்க , ஏன் இப்படி !!!.
அவனனுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை !!!

சரி தெரியாமத்தான் கேட்கிறேன் இப்படி சண்டை போடுவதால் எல்லா பிரச்சனையும் தீர்ந்திடுமா ...//

அதே அதே, அவன் அவன் இருக்கு என்கிற நம்பிக்கையில் கடவுளைத்தான் தேடுகிறான், என்றால் இங்கே என்றுமே இல்லாத ஒன்றுக்கு பிராமணன் என்கிற ஒரு உருவகம் கொடுத்து பிராமணனைத் தேடுகிறார்களாம் சோ போன்ற பழமை வாதப் பார்பனர்கள்.

மறைந்து போன, என்றுமே பொதுப் பயன்பாட்டிற்கு குந்தகம் விலைவித்து வந்த வருணாசிரம த(க)ருமத்தை மீட்டெடுக்கும் முயற்சி தேவையா ?

வேறு வேலையே இல்லையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Kamal said...

அதாவது....நம்ம கண்ணன் சாருக்கு போர் அடிச்சா இப்படி தான் எதாவது பண்ணுவார் :)))))
அவர் பிடிச்ச முயலுக்கு எப்பவுமே மூணு கால் தான் :)))))))))))))))))//

'எங்கே பிராமணன்' என்கிற மாபெரும் தேடலில் எபிசோட் போடும் பார்பனர்களுக்கு அதைச் சொல்லுங்கள். என்னைக்காவது பிராமணனைப் பார்த்தால் கூட அவனும் ஒத்த பிரமணானாக வந்தால் பிரச்சனை ஆகிடுமோ !!!

கோவி.கண்ணன் சொன்னது…

//http://www.iibc.in/itws/contact_rvfe.htm இங்கே சென்று பார்க்கவும். இந்த கணையாழி-ஒன் ID card ஐ நாங்கள் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருக்கும் போதே 100 கோடிக்கும் மேலான இந்தியர்கள் அனைவருக்கும் இது போல் தரச்சொல்லி வடிவமைத்து அனுப்பினோம். மற்றவர்களைப்போல் "இணைய ஹிட்" அரிப்பிற்கு சளக், புளாக்க கூடிய ஆள் நான் இல்லை. உங்களைப்போன்ற நபர்கள் எதையுமே முழுமையாக படிக்க மாட்டீர்களா ? எல்லாத்திலும் அரை குறை தானா?//

மிஸ்டர் முகமது இஸ்மாயில் பிஎச்டி,

உங்க இணையத்தளத்திற்கான வெளம்பரம் வேறு பிரபலமான இணையப்பக்கத்தில் கொடுத்தால் ஹிட்டு அதிகமாகக் கிடைக்கும், இங்கு எட்டிப் பார்க்கும் எண்ணிக்கை மிகக் குறைவு, காரணம் நாங்களெல்லாம் சளக்குறோம், புளக்குறோம்.

ஏன் சார் புலம்புறிங்க, நாங்க தான் அறிவே இல்லாமல் எழுதுகிறோம் என்று நாளைஞ்சு பதிவைப் பார்த்ததும் தெரிந்து இருக்குமே, பிறகு ஏன் தொடந்து இந்த கருமாந்திரத்தைப் படித்துவிட்டு, புலம்பனும், திரு முகமது இஸ்மாயில் பிஎச்டி ஓடிவாங்க ஓடிவாங்க புதுசா ஒண்ணு எழுதி இருக்கிறேன் என்று உங்களை அழைத்து தொந்தரவு செய்திருந்தால் நீங்கள் அலுத்துக் கொள்ள உரிமையும், ஞாயமும் இருக்கிறது

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

@ கோவியார்,

அப்ப அந்த கள்ளபிரான் ID உங்களின் இன்னொரு முகமா? என்னக்கொடுமை சார் இது. அவருக்கு பதில் கொடுத்தால் உங்களுக்கு பின்னீல் புகைகிறது !!! ஆச்சரியம் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Muhammad Ismail .H, PHD, said...

@ கோவியார்,

அப்ப அந்த கள்ளபிரான் ID உங்களின் இன்னொரு முகமா? என்னக்கொடுமை சார் இது. அவருக்கு பதில் கொடுத்தால் உங்களுக்கு பின்னீல் புகைகிறது !!! ஆச்சரியம் தான்.//

பின்னாடி புகைவது முன்னாடி புகைவதெல்லாம் தெரியும் அளவுக்கு மோப்ப சக்தி உங்களுக்கு இருக்கோ, கிரேட் சார்.


//
அப்ப அந்த கள்ளபிரான் ID உங்களின் இன்னொரு முகமா? //


உங்கக் கண்டிபிடிப்பை தஞ்சாவூரில் எதாவது மலைப்பாறை இருந்தால் அதில் வெட்டி வைத்துவிட்டு அங்கேயே குத்தவைத்து உட்கார்ந்து கொள்ளுங்கள்.

***

நீங்க அவரு (கள்ளபிரான்) குலம் கோத்திரம் கேட்கலையே, பொதுவாக உங்களைப் பற்றி வெளம்பரம் செய்திருந்தீர்கள் என்பதால் நான் பதில் சொன்னேன். அவரைப் பற்றி தனிப்பட்ட கேள்வி எழுப்பி இருந்தால் அவரு பதில் சொல்லி இருப்பார். எங்கு நீங்கள் வெளம்பரம் செய்ததால் நான் அதைக் குறிப்பிட்டேன்

இன்னொரு முறை கூட வெளம்பரம் செய்து கொள்ளுங்கள் ஆனால் அதனால் பெரிய பயன் இல்லை என்பது என் பரிந்துரை.

அவரைப் பற்றி சொல்லி இருந்தால் அவரை மட்டுமே சொல்லி இருக்கனும் 'போன்ற நபர்கள்' என்று பொதுப்படுத்தியதால் நான் பதில் சொன்னேன். பிரிஞ்சுதா ?

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

// பின்னாடி புகைவது முன்னாடி புகைவதெல்லாம் தெரியும் அளவுக்கு மோப்ப சக்தி உங்களுக்கு இருக்கோ, கிரேட் சார். //


அப்ப கண்ணனும் நான் தான், கள்ளனும் நான் தாங்கற ஒத்துகிறீங்க. நல்ல முடிவு. இப்பவாச்சும் உண்மைய ஒத்துகொண்டீரே . அதுவரை சந்தோஷம்.

கள்ளபிரான் அதாவது உங்களின் இன்னோரு முகத்திடமிருந்து எனது பெயர் பாவனையனது என்ற போது தான் நான் அப்படி இல்லை என ஆதாரங்களை தந்தேன். நீங்கள் ஒரு விஷயமும் தெரியாமல் சளக், புளாக்குவீர்கள். நாங்கள் ஆமா சாமி போட என்னா மடப்பயலா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஆவ்வ்வ்வ்வ்!

கோவியாருக்கு 101 வச்சு மாலையிட்டு இருக்குற மாதிரி தெரியுது!

கோவி.கண்ணன் சொன்னது…

/Muhammad Ismail .H, PHD, said...

// பின்னாடி புகைவது முன்னாடி புகைவதெல்லாம் தெரியும் அளவுக்கு மோப்ப சக்தி உங்களுக்கு இருக்கோ, கிரேட் சார். //


அப்ப கண்ணனும் நான் தான், கள்ளனும் நான் தாங்கற ஒத்துகிறீங்க. நல்ல முடிவு. இப்பவாச்சும் உண்மைய ஒத்துகொண்டீரே . அதுவரை சந்தோஷம்.

கள்ளபிரான் அதாவது உங்களின் இன்னோரு முகத்திடமிருந்து எனது பெயர் பாவனையனது என்ற போது தான் நான் அப்படி இல்லை என ஆதாரங்களை தந்தேன். நீங்கள் ஒரு விஷயமும் தெரியாமல் சளக், புளாக்குவீர்கள். நாங்கள் ஆமா சாமி போட என்னா மடப்பயலா ?//

Muhammad Ismail .H, PHD என்ற பெயரில் பின்னூட்டம் போட்டு வெளம்பரம் செய்வது நான் தான்
:)

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

பிறகு இங்கே விளம்பரம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை கடந்த 4 வருடங்களாக இந்த அனைத்து உயிர் காக்கும் முயற்சியை நடத்திவரும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கள்ளபிரான் அதாவது உங்களின் இன்னோரு முகத்திடமிருந்து எனது பெயர் பாவனையனது என்ற போது தான் நான் அப்படி இல்லை என ஆதாரங்களை தந்தேன். நீங்கள் ஒரு விஷயமும் தெரியாமல் சளக், புளாக்குவீர்கள். நாங்கள் ஆமா சாமி போட என்னா மடப்பயலா ?//

நீ பத்தினியா ஆதாரம் காட்டுன்னு எவனாவது அவன் மனைவியிடம் கேட்டால் செருப்பால் அடிவாங்குவான். உம்மைப் போன்ற அனாமதேயங்கள் ஆதரம் கேட்பதற்கெல்லாம் நான் செவி சாய்ப்பது கூடக் கிடையாது.

நானும் கூட ஒரு வெப்சைட்டும், ஒரு மொபைல் நம்பரும் போட்டுவிட்டு இது நான் இது நான் தான் நம்புங்கன்னு கூவ வாய்ப்பு இருக்கிறதே. எவ்வளவோ பார்த்துட்டோம். இதைப் பார்க்க மாட்டோமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Muhammad Ismail .H, PHD, said...

பிறகு இங்கே விளம்பரம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை கடந்த 4 வருடங்களாக இந்த அனைத்து உயிர் காக்கும் முயற்சியை நடத்திவரும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்.//

அதன் பெயரில் எதாவது நிதி திரட்டி ஸ்வாகா செய்யப்படுகிறதா என்பது 'ஆண்டவனுக்கே' வெளிச்சம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//Muhammad Ismail .H, PHD, said...

பிறகு இங்கே விளம்பரம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை கடந்த 4 வருடங்களாக இந்த அனைத்து உயிர் காக்கும் முயற்சியை நடத்திவரும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்.//

உண்மையிலேயே சேவை செய்கிறவர்கள் அதை வெளியே சொல்லி வெளம்பரம், புகழ்ச்சி தேடி அலையமாட்டாங்க. பார்த்து...உங்கள் பெயரைக் குறிப்பிட்டு என்னைகாவது பொதுச் சேவை என்ற பெயரில் நிதித்திரட்டல் மோசடி என்கிற் தலைப்பில் செய்தி எதையும் நான் படித்துவிடக் கூடாது என்று விரும்புகிறேன்

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

// முகமது இசுமாயில் என்ற பாவனைப்பெயரில் எழுதும் அன்பர், தான் ஒரு பிராமணனைக்கண்டதாகச்சொன்னார். // இது கள்ளபிரான் ID யிலிருந்து நீங்கள் சொன்னது .

கோவி.கண்ணன் சொன்னது…

//Muhammad Ismail .H, PHD,


பிறகு இங்கே விளம்பரம் செய்து ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதை கடந்த 4 வருடங்களாக இந்த அனைத்து உயிர் காக்கும் முயற்சியை நடத்திவரும் எங்களுக்கு நன்றாகவே தெரியும்.//

உண்மையிலேயே பொதுச் சேவைன்னு பொறுப்பில் இருப்பவன் எவனும், காரைகால் நேரப்படி காலங்கார்த்தால மாங்கு மாங்குன்னு பின்னூட்டம் போட்டுக் கொண்டு இருக்கமாட்டான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Muhammad Ismail .H, PHD, said...

// முகமது இசுமாயில் என்ற பாவனைப்பெயரில் எழுதும் அன்பர், தான் ஒரு பிராமணனைக்கண்டதாகச்சொன்னார். // இது கள்ளபிரான் ID யிலிருந்து நீங்கள் சொன்னது .//

உம்முடைய நம்பகத்தன்மையே கேள்விக்குறி, உம்முடைய சந்தேகத்திற்கெல்லாம் நான் பதில் சொல்லி நிருபனம் செய்ய எனக்கு தேவை இல்லை மிஸ்டர் பிஎச்டி

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

பொதுச்சேவையில் இருப்பதால் தான் இரவு முழுவதும் கண்விழித்து உலகில் ஏற்படும் பூகம்பங்களை கண்காணித்து கொண்டிருக்கிறேன். தவிர இதை நாங்கள் நடத்துவது சொந்த கைக்காசில்.

யாரிடமும் கைநீட்டி வாங்கியல்ல. இப்ப பிரிஞ்சுதா ?

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

// உம்முடைய சந்தேகத்திற்கெல்லாம் நான் பதில் சொல்லி நிருபனம் செய்ய எனக்கு தேவை இல்லை மிஸ்டர் பிஎச்டி //

இதென்ன ஒரு பொறுப்பற்ற பதில் ! அப்ப இருக்கும் ஒன்றை இல்லையென்பீர்கள். நாங்கள் அதைக்கேட்டு உங்களுக்கு ஒத்துத வேண்டுமா என்ன?

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Muhammad Ismail .H, PHD, said...

பொதுச்சேவையில் இருப்பதால் தான் இரவு முழுவதும் கண்விழித்து உலகில் ஏற்படும் பூகம்பங்களை கண்காணித்து கொண்டிருக்கிறேன். தவிர இதை நாங்கள் நடத்துவது சொந்த கைக்காசில்.

யாரிடமும் கைநீட்டி வாங்கியல்ல. இப்ப பிரிஞ்சுதா ?//

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// Muhammad Ismail .H, PHD, said...

// உம்முடைய சந்தேகத்திற்கெல்லாம் நான் பதில் சொல்லி நிருபனம் செய்ய எனக்கு தேவை இல்லை மிஸ்டர் பிஎச்டி //

இதென்ன ஒரு பொறுப்பற்ற பதில் ! அப்ப இருக்கும் ஒன்றை இல்லையென்பீர்கள். நாங்கள் அதைக்கேட்டு உங்களுக்கு ஒத்துத வேண்டுமா என்ன?//

வானம் ஏறி கூவவும் ! ஒரு அலை பேசி எண், நாளைஞ்சு வெப்சைட்டில் இருந்து எடுத்த தகவலை ஒரு வெப்சைட்டில் போட்டுவிட்டு நான் பொதுச் சேவை செய்கிறேன் ஓடிவாங்க, நிதி உதவுங்க ன்னு யாரிடமும் கை நீட்டி காசு வாங்கியதே இல்லையா ?

பார்த்து சார், என்றைக்காவது கையும் வெப்சைட்டுமாக பிடித்துவிடப் போகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//தவிர இதை நாங்கள் நடத்துவது சொந்த கைக்காசில்.

யாரிடமும் கைநீட்டி வாங்கியல்ல. இப்ப பிரிஞ்சுதா ?////

அப்பன் ஆத்தா அம்புட்டு சேர்த்து வைத்திருக்கிறார்களா ? அப்ப நடத்துங்க சார். ஆசிகள் !!!
:)

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

என்ன கோவியரே உங்களுக்கு இப்படி புகையுது !!! . நான் யாரிடமாவது இதற்காக கை நீட்டி நிதி வாங்கினேன் என்று உங்களால் நிருபிக்க இயலுமா?


இறைவன் அருளால் இதுவரை அந்த நிலை எங்களுக்கு வந்ததில்லை. இனிமேலும் வராமல் அவனே காப்பற்றுவான். சும்மா வாய்க்கு வந்தபடி சளக, புளாக்க கூடாது.

பாவம் எப்படி இருந்த கோவியானந்தா இப்படி ஆகிவிட்டரே !!!

கோவி.கண்ணன் சொன்னது…

//Muhammad Ismail .H, PHD, said...

என்ன கோவியரே உங்களுக்கு இப்படி புகையுது !!! . நான் யாரிடமாவது இதற்காக கை நீட்டி நிதி வாங்கினேன் என்று உங்களால் நிருபிக்க இயலுமா?
//

நான் எதற்கு நிருபனம் செய்யனும் ? பொதுச் சேவை என்று பீற்றிக் கொள்வோர் தான் அதன் நம்பகத்தன்மையை நிருபனம் செய்வது தேவையாக இருக்கிறது. இல்லை என்றால் என்றாவது ஒரு நாள் யாராவது நேரிடையாக பாதிக்கப்படும் போது காவல் துறை வழியாக அது நிருபனம் செய்யப்படும்.

// இறைவன் அருளால் இதுவரை அந்த நிலை எங்களுக்கு வந்ததில்லை. இனிமேலும் வராமல் அவனே காப்பற்றுவான். சும்மா வாய்க்கு வந்தபடி சளக, புளாக்க கூடாது.

பாவம் எப்படி இருந்த கோவியானந்தா இப்படி ஆகிவிட்டரே !!!//

போய் கடலைப் பார்த்து அமருங்கள், சுனாமி வந்தால் அப்பறம் தெரியாமல் போய்விடும்.

பிரேமானந்தா கூட ஒரு காலத்தில் பொதுச் சேவை செய்வதாகத்தான் சொன்னான்

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

நான் இதற்காக காசு வாங்கினேன் என அவதூறாக கூறியது நீங்கள் தான். ஆகவே நீங்களே அதை நீருபிக்க வேண்டும்.


// இல்லை என்றால் என்றாவது ஒரு நாள் யாராவது நேரிடையாக பாதிக்கப்படும் போது காவல் துறை வழியாக அது நிருபனம் செய்யப்படும். //

ஏன் நீங்களே அதை தாராளமாக செய்யலாமே. உண்மை எது பொய் எது என அனைவரும் தெரிந்து கொள்ளட்டுமே ! என்னைபற்றி இணையத்தில் அனைத்து தகவல்களும் உள்ளது.

கோவி.கண்ணன் சொன்னது…

// Muhammad Ismail .H, PHD, said...

நான் இதற்காக காசு வாங்கினேன் என அவதூறாக கூறியது நீங்கள் தான். ஆகவே நீங்களே அதை நீருபிக்க வேண்டும்.


// இல்லை என்றால் என்றாவது ஒரு நாள் யாராவது நேரிடையாக பாதிக்கப்படும் போது காவல் துறை வழியாக அது நிருபனம் செய்யப்படும். //

ஏன் நீங்களே அதை தாராளமாக செய்யலாமே. உண்மை எது பொய் எது என அனைவரும் தெரிந்து கொள்ளட்டுமே ! என்னைபற்றி இணையத்தில் அனைத்து தகவல்களும் உள்ளது.//

அப்துல்கலாம் பெயரையெல்லாம் பயன்படுத்தி இணைய வெளம்பரம் செய்யும் இணைய பிராடுகளுக்கு நான் நேரத்தை வீனாக்கப் போவதில்லை. உம் நம்பகத்தன்மையை நீரே நிருபனம் செய்வீர்.

நீர் சேவை என்ற பெயரில் சுனாமி அலர்ட் கொடுக்கிறேன் என்பவை ஏற்கனவே earthquake.usgs.gov/ இணையத் தளங்களிலும், அரசு சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கைகளும் கொடுக்கப்படுகிறது. நீர் அதில் புதிதாக எதையும் செய்யவில்லை, அந்த தகவல்களை உம்முடைய இணையத்தளத்தில் அப்துல்கலாம் பெயரைப் பயன்படுத்தி வெளம்பரமாக வைத்திருக்கிறீர். அவ்வளவு தான். இதில் பாராட்டுவதற்கோ, செயற்கரிய செயல் என்று சொல்வதற்கோ ஒன்றும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏன் நீங்களே அதை தாராளமாக செய்யலாமே. உண்மை எது பொய் எது என அனைவரும் தெரிந்து கொள்ளட்டுமே ! என்னைபற்றி இணையத்தில் அனைத்து தகவல்களும் உள்ளது.//

நிறைகுடம் தளும்பாதுமாபாங்க, உம்முடைய எரிச்சல்களையும், சலம்பல்களையும் பார்த்தால் நீர் குறைக் குடம் கூட இல்லை. காலிக் குடம்

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

// நிறைகுடம் தளும்பாதுமாபாங்க, உம்முடைய எரிச்சல்களையும், சலம்பல்களையும் பார்த்தால் நீர் குறைக் குடம் கூட இல்லை. காலிக் குடம் //

ஹையேடா, வந்துட்டாரு குடம் வியாபாரி. இதை படிப்பவர்களுக்கு தெரியும் யார் காலிக்குடம் என்பது !!!

இருக்கின்ற ஒன்றை இல்லை என்பாராம். அதை நாங்கள் கேட்டுக்கொண்டு தலையை ஆட்ட வேண்டுமாம். மேற்கொண்டு விபரங்களை தந்தால் விளம்பரம் செய்கிறோமாம் ! அதற்கும் பதிலளித்தால் அவதூறை அள்ளி வீசி அவதூறு ஆறுமுகமாக அவதாரம் எடுப்பாராம்.

// இணைய பிராடு //

இதற்கே நான் உங்களை ஒரு வழி பண்ண இயலும். ஆனால் நான் கற்ற கல்வி தடுக்கிறது. ஆனால் அங்கே

'வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு'

இருக்கின்ற சரக்கிற்கு தானே எழுத இயலும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//
இதற்கே நான் உங்களை ஒரு வழி பண்ண இயலும்.//

மிரட்டல்களையெல்லாம் வேறு எங்காயாவது வைத்துக் கொள்ளுவீர்.
எதிரே எதிரே உள்ளவர் மிரட்டலையே நான் சட்டை செய்வது இல்லை, உம்மைப் போன்ற அனாமதேயங்கள் மிரட்டுவது சிரிப்பை வரவழைக்கிறது.
:)

// ஆனால் நான் கற்ற கல்வி தடுக்கிறது. ஆனால் அங்கே //

இது பிஎச்டி படிப்புக்கான வெளம்பரமா ?

இந்த பிஎச்டி காரனோட தொல்லை தாங்க முடியலையே, கவுண்டர் ஜோக் தான் நினைவு வருது !

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

வார்த்தைகளை அள்ளி சிதறவிட்டது நீங்கள் தான் கோவியாரே. நான் இது வரை கண்ணியக்குலைவு ஏற்ப்படுத்தாமல் தான் உரையாடிக்கொண்டிருக்கிறேன். இதைப்படிப்பவர்களுக்கு புரியும்.

ஆனால் நீங்கள் தான் இடுகையையே டெலீட்டிவிட்டு உத்தம புத்திரனாக காட்டுபவர் ஆச்சே . இதற்கு உதாரணம். பிரபாகரனின் மரணச்செய்தி பற்றி சளக், புளாக்கி விட்டு அடுத்த 48 மணி நேரத்தில் அதை உறுதிபடுத்த இயலாத தகவல் என மாற்றிவிட்டீர். பிறகு அதை டெலீட்டினீர். இந்த இடுகை கூட டெலீட்டப்படலாம். யார் கண்டது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த இடுகை கூட டெலீட்டப்படலாம். யார் கண்டது ?//

உம்முடைய ஆசை நிறைவேறாது என்பதை அன்புடன் கூறிக் கொள்வது கோவியார்.

//இதற்கு உதாரணம். பிரபாகரனின் மரணச்செய்தி பற்றி சளக், புளாக்கி விட்டு அடுத்த 48 மணி நேரத்தில் அதை உறுதிபடுத்த இயலாத தகவல் என மாற்றிவிட்டீர்.//

உறுதிபடுத்தாத தகவலை யாராவது வீம்புக்காக வைத்திருக்கும் பழக்கம் எனக்கு இல்லை. உமக்கு வேண்டுமானால் அப்துல்கலாமிடம் அனுமதி பெறாமலேயே அவர் பெயரை இணையப்பக்கத்தில் பயன்படுத்தி பொதுச் சேவை செய்கிறேன் என்று வெளம்பரப்படுத்திக் கொள்ள மனது வரலாம்.

நான் கண்ணியக் குறைவாக எதையும் எழுதவில்லை, ஆனால் பிராடு தனத்தை பிராடு தனம் என்று சொல்வது கண்ணியக் குறைவாக எனக்கும் படவில்லை என்றை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

நாங்கள் அவரிடமிருந்து கிடைத்த அங்கீகாரத்தை இங்கே தர இயலும். ஆனால் அதைப்பார்த்த உடன் உங்களுக்கு அனைத்து தூவரங்களிலும் புகை வந்து நீங்கள் படும் பாட்டையும், அதையும் வெளம்பரம் என அவதூறு ஆறமுகமாக கூறிவீர்கள். காரணம் காமலைக்கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்ளாகத்தானே தெரியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//uhammad Ismail .H, PHD, said...

நாங்கள் அவரிடமிருந்து கிடைத்த அங்கீகாரத்தை இங்கே தர இயலும். ஆனால் அதைப்பார்த்த உடன் உங்களுக்கு அனைத்து தூவரங்களிலும் புகை வந்து நீங்கள் படும் பாட்டையும், அதையும் வெளம்பரம் என அவதூறு ஆறமுகமாக கூறிவீர்கள். காரணம் காமலைக்கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்ளாகத்தானே தெரியும்.//

சரி அரிப்பு வந்தால் நீர் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புகிறேன். எதாவது செய்ய முடியுமான்னு பாருங்க

******

வெளம்பரப் பிரியனான உம்மையும் மதிப்பதால் தான் பதிலாவது போடுகிறேன்.

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

// சரி அரிப்பு வந்தால் நீர் கொடுத்திருக்கும் மொபைல் எண்ணுக்கு எஸ் எம் எஸ் அனுப்புகிறேன்.//

உங்களுக்கு அரிப்பு எங்கிருந்து வந்ததோ அங்கேயே அதற்கான தீர்வையும் தேடுங்கோ !!! என் கிட்ட மருந்து இல்லை.

ஆனா பாருங்க மக்களே, இவரை சிறிதேனும் காரமாக சொல்லிவிட்டால் அது தனிமனித தாக்குதலாம். இடுகையின் கருத்தை திசை திருப்புதல் என அலறுவார் .ஆனால் இதையே அவர் அடுத்தவர் மீது அள்ளி வீசுவாராம். நல்லா இருங்கடே !!!

Jawahar சொன்னது…

//இவ்வீட்டில் இருப்பவர்கள் ‘குடும்பப்பெண்கள்’ என்று அறிவிப்புப்பலகை போட்டால், அது கண்டிப்பாக பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் விபச்சாரிகள் என்பதாகும். தாங்கள் பிராமண்ர்கள் என்றால், மற்றவர்களைச் சூத்திரர்கள் என்பதாகும் என்றார்.

இது child egoவா?//

ஆமாம்.

கள்ளபிரான் சார், child ego என்பது childhood இல் வரும் ஈகோ அல்ல.

http://kgjawarlal.wordpress.com

வால்பையன் சொன்னது…

//ஏன் சார் புலம்புறிங்க, நாங்க தான் அறிவே இல்லாமல் எழுதுகிறோம் என்று நாளைஞ்சு பதிவைப் பார்த்ததும் தெரிந்து இருக்குமே, பிறகு ஏன் தொடந்து இந்த கருமாந்திரத்தைப் படித்துவிட்டு, புலம்பனும், திரு முகமது இஸ்மாயில் பிஎச்டி ஓடிவாங்க ஓடிவாங்க புதுசா ஒண்ணு எழுதி இருக்கிறேன் என்று உங்களை அழைத்து தொந்தரவு செய்திருந்தால் நீங்கள் அலுத்துக் கொள்ள உரிமையும், ஞாயமும் இருக்கிறது //

நான் சொல்றதை சொல்லிகிட்டு தான் இருப்பேன், நீ ஏன் வர்ற என்ற தோணியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!

டோண்டுவின் பார்பன பக்தியைவிட, இந்த நாட்டாமை புத்தி ரொம்ப மோசமானது!

தயவுசெய்து மறுபரிசீலணை செய்யவும்!

வால்பையன் சொன்னது…

@ இஸ்மாயில்

அந்த ஐடி கார்டிஉல் ஏன் இஸ்லாம் என்று அடிச்சிருக்கு, இந்திய சிட்டிசன் என்பதை விட இஸ்லாமியன், இந்து, கிரிஸ்தவன் என்பதில் அப்படி என்ன பெருமை வேண்டி கிடக்கு!?

இவ்விடத்தில் தான் நாம் வேறுபட்டு நிற்கிறோம்!

கோவி.கண்ணன் சொன்னது…

//
நான் சொல்றதை சொல்லிகிட்டு தான் இருப்பேன், நீ ஏன் வர்ற என்ற தோணியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!//

அது உங்க நாட்டாமை புத்தி !!!

என்னத்தை எழுதிக் கிழிக்கிறே...நீ எழுதித் தான் ஆகப் போவுதான்னு சொல்றவங்களுக்கு உங்க பாணிப் பதில் என்ன ?

வால்பையன் சொன்னது…

////
நான் சொல்றதை சொல்லிகிட்டு தான் இருப்பேன், நீ ஏன் வர்ற என்ற தோணியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!//

அது உங்க நாட்டாமை புத்தி !!!

என்னத்தை எழுதிக் கிழிக்கிறே...நீ எழுதித் தான் ஆகப் போவுதான்னு சொல்றவங்களுக்கு உங்க பாணிப் பதில் என்ன ? //

இப்போ நானும் நாட்டாமையா?

இங்கே யாரும் எழுதி சமுதாயத்தை பொரட்டி போட்டுவிட முடியாது, நமக்கான புரிதல்களும், தெளிவுகளுக்காவே உரையாடல்கள், அவர்கள் அப்படி சொன்னால் நாமும் ஏன் வர்றேன்னு கேக்கனுமா?

சிரித்து விட்டு சொல்லுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//////
நான் சொல்றதை சொல்லிகிட்டு தான் இருப்பேன், நீ ஏன் வர்ற என்ற தோணியை நான் வன்மையாக கண்டிக்கிறேன்!//

அது உங்க நாட்டாமை புத்தி !!!

என்னத்தை எழுதிக் கிழிக்கிறே...நீ எழுதித் தான் ஆகப் போவுதான்னு சொல்றவங்களுக்கு உங்க பாணிப் பதில் என்ன ? //

இப்போ நானும் நாட்டாமையா?

இங்கே யாரும் எழுதி சமுதாயத்தை பொரட்டி போட்டுவிட முடியாது, நமக்கான புரிதல்களும், தெளிவுகளுக்காவே உரையாடல்கள், அவர்கள் அப்படி சொன்னால் நாமும் ஏன் வர்றேன்னு கேக்கனுமா?

சிரித்து விட்டு சொல்லுங்கள் //

அப்படி சிரித்துவிட்டு செல்வது வால்பையனால் முடியலாம். ஆனால் எல்லோரும் வால்பையன் அல்ல. எல்லோரும் இப்படித்தான் செய்யனும் என்கிற வலியுறுத்தல் நாட்டாமை புத்தி இல்லையா ?

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

// அந்த ஐடி கார்டிஉல் ஏன் இஸ்லாம் என்று அடிச்சிருக்கு, இந்திய சிட்டிசன் என்பதை விட இஸ்லாமியன், இந்து, கிரிஸ்தவன் என்பதில் அப்படி என்ன பெருமை வேண்டி கிடக்கு!?

இவ்விடத்தில் தான் நாம் வேறுபட்டு நிற்கிறோம்!//


@ அன்பின் அருண் alias வால்பையன்,

நாம் விரும்பினாலும் விரும்பவிட்டாலும் உலகின் பெரும்பாலான மக்கள் இறைசக்தி என்பதை நம்பி ஏதே ஒரு இஸத்தின் நம்பிக்கையில் தான் வாழ்கிறார்கள். மீதம் உள்ள மக்கள் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. உங்களைப்போல் உள்ள நபர்கள் கடவுள் பற்றி கவலைப்படுவதில்லை. நானும் சில நிகழ்வுகள் நடந்தால் ஒழிய அதை நம்ப போவதில்லை ;-).


அந்த ID கார்டானது முப்பாலினாருக்காகவும் தயாரிக்கப்பட்டது. அதாவது ஆண், ஹிஜ்ரா(மூன்றாம் பாலினம்), பெண் என நாங்கள் பகுத்து வைத்தோம். தவிர இந்த இஸங்களின் மீதான நம்பிக்கையின் அடையாளம் தேவை என்பதை சில அனுபவ பாடங்களில் இருந்து கற்றவைகள் தான்.ITZ நண்பர் சொன்ன நிகழ்வு. இது புனைவு போலிருந்தாலும் இது போல் நடக்க நிறைய வாய்ப்பு உண்டு. அவரது ஊரில் பஸ்ஸில் செல்வதற்காக நின்று கொண்டிருந்த வெளியூரைச்சேர்ந்த வயதான நபர் திடீரென அங்கேயே நெஞ்சுவலியால் மரணமடைந்துவிட்டார் . அவரது பையில் பணத்தை தவிர எந்த விபரமும் இல்லை. ஆகையால் அந்த சடலத்தை எப்படி உறவினர்க்கு அனுப்பி வைப்பது எனத்தெரியாமல் உள்ளூர் நிர்வாகம் திண்டாடி அந்த சடலத்தை பிணவறையில் பல நாள் வைத்துள்ளனர். பத்திரிக்கையிலும் புகைப்படம் போட்டு விளம்பரம் கொடுத்துள்ளனர். யாரும் சடலத்தை உரிமை கோர வரவில்லை.


இதற்கு பிறகு தான் ஆட்டமே ஆரம்பம். யாரும் உரிமை கோராத அந்த சடலத்திற்கு இறுதி மரியாதை செய்ய உள்ளூர் நிர்வாகம் சட்டப்படி முடிவெடுத்தபோது வில்லங்கம் ஆரம்பமானது. பிணப்பரிசோதனையின் அறிக்கைபடி அந்த வயதான ஆணிண் குறியானது முன்தோல் நீக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது தோற்றமோ ஒரு ஹிந்து சகோதரரைப் போலிருந்திருக்கிறது. அவ்வளவு தான். இது வரை யாரும் உரிமை கோரத சடலத்திற்கு நிறைய உரிமையாளர்கள் இரண்டு மதத்திலிருந்தும் முளைத்து விட்டனார். ஊர் உயிரற்ற சடலத்தினால் நிம்மதி இழந்து விட்டது. இந்த முன்தோல் நீக்குதல் எனபது மருத்துவ காரணத்திற்காகவும் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லையே. ஆதலால் தான் சில மனிதர்கள் இறந்த பிறகாவது மற்ற மனிதர்கள் நிம்மதி இழக்கமல் இருக்க இது அவசியம் என அறிந்தோம். தவிர அது தாங்கள் இந்த நம்பிக்கையை சார்ந்தவர்கள் என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதைக்கேட்டு சில வருடங்களுக்கு பிறகு மலேசியாவில் இது போல் ஒரு பிரச்சினை ஏற்பட்டதையும் அறிந்தேன். தவிர உங்களைப்போன்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது atheism எனும் பிரிவு. ஆகவே கவலை வேண்டாம். பிறகு இந்த atheism ல் நம்பிக்கையுள்ள வாழும் நபரின் தகவல்கள் என்னிடத்தில் இல்லை. இந்த மூன்றாம் பாலினருக்கு தகவல் சேகரிக்கவே நாய் பாடு பட்டேன்.

அது பற்றிய சுட்டி - http://tech.groups.yahoo.com/group/Indian_Techies_Zone/message/115

ஐயோ இந்த சுட்டி தந்ததைப்பார்த்துவிட்டு கோவியார் இந்த மூன்றாம் பாலினாரிடத்தில் நான் காசு வாங்கினேன் என்பாரே ! ஹிட்டுக்காக இங்கே விளம்பரம் செய்கின்றேன் என்பாரே ! ஐயகோ. நான் என் செய்வேன். ;-))))

அறிவிலி சொன்னது…

கோவியாரே... மன்னிக்கவும். வால் பையன் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். உங்கள் வார்த்தைகள்தான் கொஞ்சம் மாற்றிப் போட்டிருக்கிறேன் கீழே。

“ஏன் சார் புலம்புறிங்க, அவர்தான் அறிவே இல்லாமல் எழுதுகிறார் என்று நாளைஞ்சு வார துக்ளக் பார்த்ததும் தெரிந்து இருக்குமே, பிறகு ஏன் தொடந்து அந்த கருமாந்திரத்தைப் படித்துவிட்டு, புலம்பனும், திரு கோவி கண்ணண் ஓடிவாங்க ஓடிவாங்க புதுசா ஒண்ணு எழுதி இருக்கிறேன் என்று உங்களை அழைத்து தொந்தரவு செய்திருந்தால் நீங்கள் அலுத்துக் கொள்ள உரிமையும், ஞாயமும் இருக்கிறது“

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவிலி said...
கோவியாரே... மன்னிக்கவும். வால் பையன் சொன்னதை நான் ஆமோதிக்கிறேன். உங்கள் வார்த்தைகள்தான் கொஞ்சம் மாற்றிப் போட்டிருக்கிறேன் கீழே。
//

நன்றி !

நானும் "இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - பகுதி 2" போடலாம் என்ற யோசனையில் உள்ளேன்.
:)
:)

பெயரில்லா சொன்னது…

காஞ்சிபுரம் செக்ஸ் அர்ச்சகர் மீது
மேலும் ஒரு பெண் புகார்

குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கருவறை-யில் என்னை வன்கலவி செய்தார் என காஞ்சிபுரம் செக்ஸ் அர்ச்சகர் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்து உள்ளார். காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகர் தேவ-நாதன், கோவில் கருவறை-யில் பல பெண்களுடன் செக்ஸ் வைத்ததாக புகார் எழுந்-தது. அதை அவரே செல்-போனில் படம் பிடித்த-தாகவும் புகாரில் கூறப்-பட்டது.

இதில் காவலர்கள் தன்னை தேடுவதை அறிந்த தேவநாதன் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை காவல்துறையினர் 2 நாள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் உயர்நீதிமன்றத்-தின் அனுமதியுடன் மேலும் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

அவரை ஜாமீனில் விடக்கோரி அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்-தில் மனு தாக்கல் செய்-திருந்த நிலையில், அவர் மீது ஒரு பெண் கற்-பழிப்பு புகார் செய்த-தைத் தொடர்ந்து ஜாமீன் மனுவை அவர் திரும்ப பெற்றார். அவரை நீதி-மன்றத்-தில் ஆஜர் படுத்த வந்த போது பெண்கள் செருப்பு, துடைப்பம் ஆகி-யவற்றால் தாக்கியதால், மறுபடியும் அவரை நீதி-மன்றத்தில் ஆஜர்படுத்த முடியாத நிலைமை ஏற்-பட்டது. இதனால் வீடியோ கான்பரன்சிங் மூலம் அவரது காவல் நீடிக்கப்-பட்டது.

இந்த நிலையில், காஞ்-சி-புரம் பூக்கடை சத்தி-ரத்தைச் சேர்ந்த பூக்காரப் பெண் ஒருவர், மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு விஜயராக-வனிடம் நேரில் வந்து, தேவநாதன் தன்னை குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கோவில் கருவறையில் கலவி செய்ததாக புதிய புகார் ஒன்றை அளித்தார். புகா-ரில் அவர் கூறி இருப்ப-தாவது:

பூ வியாபாரம் செய்-யும் நான், கோவில் அர்ச்சகர் தேவநாதனு-டைய தாத்தா வீட்டிற்கு பூ கொடுப்பது வழக்கம். அங்கு தேவநாதனை பல முறை சந்தித்துள்ளேன். அப்போது அவர் நீ எங்க கோவிலுக்கும் வந்து பூ கொடு எனக்கூறினார். அதேபோல் நானும் கோவிலுக்கு சென்று பூ கொடுத்து வந்தேன். ஒரு நாள் அவர் எனக்கு மயக்க மருந்து கலந்த ஒரு குளிர்-பானம் கொடுத்தார். அதை குடித்ததும் நான் அரை மயக்கத்திற்கு தள்ளப்பட்டேன். பிறகு அவர் என்னை அவர் தோள் மீது சாய்த்துக்-கொண்டு கோவில் கரு-வறைக்குள் வைத்து என்னை வன்கலவி செய்ததை அவரது செல்-போனில் படம் பிடித்து வைத்துக் கொண்டு, நான் பூ கொடுக்க வரும் போதெல்லாம் காட்டி, காட்டி மிரட்டி பல முறை என்னிடம் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொண்டார்.

என்னைப்போல பல பெண்களின் ஆபாச படம் அவரது செல்-போனில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்-தேன் இவ்வாறு அவர் தனது புகாரில் கூறி-யுள்ளார்.

பெயரில்லா சொன்னது…

காஞ்சியிலே என்ன நடக்கிறது? மச்சேஸ்வரன் கோயிலாம் _ அங்கு ஓர் அர்ச்சகப் பார்ப்பானாம். _ அவன் பெயர் தேவநாதனாம்.

கோயிலுக்கு வரும் பக்தப் பெண்களைக் கோயில் கருவறைக்-குள்ளேயே வைத்து சரசலீலை செய்தானாம் _ உடலுறவு கொண்டனாம் _ ஊரே சிரிக்கிறது.

அந்தக் காவாளி அந்தக் கேடு கெட்ட காரியத்தைச் செய்ததை கைப்பேசி வழியாக ஒளிப்படமும் எடுத்து வைத்திருக்கிறானாம் - _ புழுத்த நாய் குறுக்கே போகாது _ அப்படி ஒரு ஆபாசக் கூவம்!

நீதிமன்றத்திற்கு வந்தவனைத் தமிழ்நாட்டுப் பெண்கள் “நல்ல முறையில் வரவேற்று இருக்-கிறார்கள்.

செருப்படி, துடைப்பக் கட்டை அடி, சாணியடி சகிதமாக வர-வேற்று இருக்கிறார்கள்.
அதே காஞ்சியிலே ஜெயந்திர சரஸ்வதி அரங்கேற்றிய சமாச்-சாரத்தை அவரின் சிஷ்ய கே(£)டி தொடர்ந்திருக்கிறான் _ அவ்வளவு-தான்.
இவ்வளவு ஆபாசம் வழிந்து ஓடியதே _ அந்தக் கோயிலின் நடையைச் சாத்தினார்களா? சந்நிதானம் தீட்டுப்பட்டு விட்டது என்று சுத்திகரிப்புச் செய்தார்களா?
ஆகமத்துக்கு விரோதமாக அநியாயங்கள் நடந்துவிட்டன என்று சொல்லி ஆன்மிக முறையில் சடங்குகளைச் செய்தார்களா?
அப்படி ஏதாவது செய்திதான் கசிந்ததுண்டா? இதே பார்ப்பனர்-கள் சாமிக்குத் தமிழில் பூஜை செய்தால் தீட்டுப் பட்டுவிடும் என்று “சோ” ராமசாமி வரை புலம்பு-கிறார்கள்.
கரூரையடுத்த திருமுக்கூடலூரில் உள்ள திருமணி முத்தீசுவரவர் கோயிலில் தமிழில் குடமுழுக்குச் செய்ததற்காக (9.9.2002) பார்ப்பன அர்ச்சகர்கள் என்ன செய்தார்கள்? கோயிலை இழுத்துப் பூட்டவில்லையா? பல நாள்கள் இக்கோயில் மூடிக் கிடக்கவில்லையா? சாங்கியங்கள், சுத்திகரிப்புச் செய்யப்பட்ட பிறகு-தான் கோயிலை மீண்டும் திறந்-தார்கள். தமிழில் குடமுழுக்குச் செய்ததற்காக காஞ்சி சங்கராச்சாரி-யார் ஜெயேந்திர சரஸ்வதி, அர்ச்சகர் சங்கமும் கண்டனம் தெரிவிக்க-வில்லையா?
சிதம்பரம் நடராசன் கோயில் திருச்சிற்றம்பலத்திலே தமிழில் தேவாரம் பாடினார் என்பதற்காக ஓதுவார் ஆறுமுகசாமி என்ற பெரியவர் தீட்சதப் பார்ப்பனர்-களால் அடித்துத் துவைக்கப்பட-வில்லையா? அவர் கை முறிந்து விடவில்லையா?
மனநலம் சரியில்லாத கிறித்துவ இளைஞன் டேவிஸ் குருவாயூர் கோயி-லுக்குள் நுழைந்தான் என்ப-தற்காக, கோயில் தீட்டுப்பட்டு விட்-டது என்று கூறி, சுத்திகரித்தார்களே (தினகரன் 21.11.2005) அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் செய்தது அதைவிட அல்பமான காரியமோ? பெரியவா செய்தால் பெருமாள் செய்தது மாதிரி என்பதுஇதுதானோ!
1971_இல் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை நிறைவேற்றிய போது அதனை எதிர்த்துப் பார்ப்பனர்-கள் உச்சநீதிமன்றம் சென்றார்களே _ நினைவிருக்கிறதா?
அப்பொழுது இந்தப் பார்ப்பனர்கள் “வைகனாச” ஆகமம்” என்ற ஒன்றை அவர்களுக்கு வசதியாகத் தாக்கல் செய்தார்களே _ அந்த வைகனாச ஆகமம் என்ன சொல்லுகிறது?
பொது வழிபாட்டுக்குரிய கோயில்-களில் கடவுளின் உருவத்தையோ, சிலையையோ அர்ச்சகரைத் தவிர சத்திரியர்கள் தொட்டு விட்டால் சாமி சிலை தீட்டாகி விடும். அதனை சுத்திகரிக்க தூய நீரினால் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். பின்னர் ஏழு கலசங்களை வைத்து முறைப்படி வணங்கியபின் சம்ப்ரோட்சணம் செய்ய வேண்டும். வைசியர்கள் தொட்டு விட்டாலும் சாமிதீட்டாகி விடும். 24 கலசங்களைச் செய்து வைத்து சம்ப்-ரோட்சணம் செய்ய வேண்டும் _ பிராமண போஜனமும் செய்யப்பட வேண்டும்.
சூத்திரர்களான நான்காம் வருணத்-தவன் தீண்டினாலும் கடவுள் தீட்டாகி விடுவார் அப்பொழுது என்ன செய்ய-வேண்டுமாம்? 108 கலசங்களைச் செய்து வைத்து, மஹாசாந்தி ஹோமமும், பிராமண போஜனமும் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே, இந்த ஆகமக் கூற்றுகளை ஏற்றுக் கொண்டுதானே நீதிபதிகள் தீர்ப்புக் கூறினார்கள்?
(அதிலே ஒரு நீதிபதி அர்ச்சகர் குடும்பத்தைச் சேர்ந்த பார்ப்பனர்)
“ஒரு சைவ, அல்லது வைஷ்ணவ கோயிலில், அர்ச்சகர் நியமனம் அந்தக் கோயிலுக்கு இணக்கமான ஆகமத்தில் கூறப்பட்டிருக்கும் ஆணைகளுக்கு இணங்கவே செய்யப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் அது இச்சட்டத்தின் 28 ஆவது செக்ஷனுக்கு முரணானது மட்டுமல்ல, மதப் புழக்கத்தில் தலையிடுவதாகவும் ஆகும். இதன் தவிர்க்க முடியாத விளைவாக கடவுளின் உருவம் தீட்டுப்பட்டு விடும் என்று தீர்ப்புக் கூறப்பட்டதே!
இப்படியெல்லாம் ஆகமங்கள் கூறுகின்றன _ உச்சநீதிமன்றமும் தீர்ப்புக் கூறுகிறது.

பெயரில்லா சொன்னது…

கோயிலில் உள்ள ஓர் அர்ச்சகன் கோயில் கருவறைக்குள்-ளேயே பெண்களை இழுத்துச் சென்று காமக் களியாட்டம் ஆடி, உடலுறவு கொண்டு கோயிலைக் காமக் கோட்ட-மாக _ பள்ளியறையாக, _ படுக்கை-யறையாக மாற்றிக் கூத்தடித்தால் சாமி சிலை தீட்டாகி விடாதா? அதற்குப் பரிகாரம் செய்யப்படாதது ஏன்? பக்தர்கள் யாராவது இந்தக் கேள்வியை எழுப்பியதுண்டா?

அர்ச்சகப் பார்ப்பான் எப்படியும் நடந்து கொள்ளலாம். காரணம், அவன் பிர்மாவின் நெற்றியிலே பிறந்தவன் _ பிர்மாவே, தான் பெற்ற மகள் சரஸ்-வதியையே பெண்டாளவில்லையா? அந்தப் பிர்மாவின் நெற்றியில் பிறந்த பிராமணன் கருவறையைக் காமக் கழிநீர் கழிக்கும் (கழிவறை) கக்கூசாகப் பயன்படுத்துவதில் என்ன தவறு என்று “சோ” ராமசாமிகள் எழுதினாலும் எழுதுவார்கள்; அதற்கு வக்காலத்து வாங்கி பழ. கருப்பையாக்கள் “ஹார்-மோனி’’யம் வாசித்தாலும் வாசிப்பார்கள் _ யார் கண்டது?

அன்றைக்குத் தீட்சிதப் பார்ப்-பனர்கள் சிதம்பரம் நடராசன் கோயிலில் தமிழராகிய ஆறுமுகசாமியைத் தாக்-கினார்கள். இன்றைக்கோ தமிழ்ப் பெண்கள் காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாத-னுக்கு நல்ல பாடம் கற்பித்துள்ளனர்.

விழுந்தது செருப்படி _ ஏதோ தேவநாதன் என்ற ஒரு பார்ப்பான்மீது மட்டும் என்று நினைக்க வேண்டாம்! இன்றைக்கு பார்ப்பனர்களைத் தாங்கிப் பிடிக்கும் பார்ப்பனியப் பாதங்களைக் கழுவிக் குடிக்கும் கபோதிகளுக்கும், பார்ப்பனியத் திமிரைப் பூணூல் போட்டு முறுக்கிக் காட்டும் கும்பலுக்-கும், பக்தியின் பெயரால் நடத்தும் ஆபாசக் கூத்துகளுக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள் கொடுத்த “பரிசு அது”. அன்று தமிழ் நாட்டு வீரப் பெண்கள் புலியை முறத்தால் அடித்து விரட்டினார்கள். என்றால், இன்றைக்குத் தமிழ்நாட்டுப் பெண்கள் பார்ப்பனிய ஆபாச சேட்டைகளுக்குச் செருப்பாபிஷேகம் (பாதுகா பட்டாபிஷேகம்) செய்து, பெரியார் மண்ணின் மகத்துவத்தை _ வீர தீரத்தைப் பாரீர் என்று பாருல-குக்கே தெரிவித்து விட்டார்கள்! வாழ்க அந்த மறக்குல மானமிகு தமிழ் மகளிர் பட்டாளம்!

பார்ப்பனர்களோ கப்-_சிப்! உப்புக்-கண்டம் பறிகொடுத்த பழைய பார்ப்-பனத்திபோல பதுங்கிக் கிடக்கிறார்கள். தமிழர்களே, உரக்க ஒரு முறை சிரியுங்கள். பக்திக் குட்டையில் உழலும் தமிழர்களும் உடம்பைக் கொஞ்சம் கிள்ளிக் கொண்டாவது சிந்தித்துப் பார்க்கட்டும்!

குமரன் (Kumaran) சொன்னது…

கோவி.கண்ணன்,

முன்பு இடுகையைப் படித்திருந்தேன். இன்று தான் பின்னூட்டங்களைப் படிக்க முடிந்தது. அதுவும் பாதிவரை தான். நீங்களும் முகம்மது இஸ்மாயிலும் 'பேசிக்' கொண்ட பின்னூட்டங்கள் சிலவற்றையே படித்தேன்; அதில் அவ்வளவாகத் தகவல்கள் இல்லை என்று தோன்றியதால் மிச்ச பின்னூட்டங்கள் படிக்கவில்லை.

சரி. இப்ப எதுக்கு வந்தேன்னு கேக்குறீங்களா? ஒரே ஒரு தகவலைச் சொல்லத் தான். சம்பந்தருடன் இருந்தவர் 'திருநீலகண்ட யாழ்ப்பாணர்'. கள்ளபிரான் சொன்ன ஆழ்வார் 'திருப்பாணாழ்வார்'. பெயர் குழப்பத்தால் ஒருவர் சொன்னதை மற்றவர் தவறு என்று சொல்லியிருக்கிறார்கள். இருவர் சொன்னதும் சரியே; பெயரில் மட்டுமே குழப்பம்.

ADS Kumar சொன்னது…

மஹாபாரதத்தில் பிறப்பால் ஒருவன் பிராமனனாகவோ, சத்ரியனாகவோ, வைசியனாகவோ ஆகிவிட முடியாது என்று வருகிரது, ஆக பிராமன குலம், சத்திரிய, வைசிய குலம் என்று ஒன்று இருக்கின்றது என்றுதானே அர்த்தம்?


பிறப்பால் ஒருவன் பிராமனன் ஆகிவிட முடியாது என்றால், பிராமனன் மகன் என்பதால் அவன் பிராமனன் ஆகிவிட முடியாது, சத்திரியனின் மகன் என்பதால் அவன் சத்திரியனாகிவிட முடியாது என்று தான் விளக்கம் கொள்ளவேண்டும், இதற்க்கும் மஹாபாரதத்தில் பல உதாரணங்களை முன்வைக்க முடியும், பாண்டுவின் அண்னன் திருதிராக்ஷ்ட்டிரன் சத்திரியன் இல்லை, மூத்தவராக இருந்தும் மன்னர் பதவி மறுக்கபட்டது, இதற்கு பலரது மேலாட்டமான விளக்கம் அவர் ஊனமானவர், பார்வையற்றவர் என்பதாகும், தார்பரிய விளக்க படி அவர் மனதளவில் ஊனமானவர், சத்ரியர்களின் குணங்களில் ஒன்றான அனைவறையும் சமாக பார்க்கும் பார்வையற்றவர், சத்திரிய தகுதி மற்றும் திறமையால் அவர் மன்னர் பதவிக்கு வரவில்லை, நிற்பந்தத்தால் பதவிக்கு வந்தவர், ஆசையால் பதவியில் ஒட்டி கொண்டவர், அவரே சத்திரியன் குணம் அல்லாத ஒருவன் மன்னர் பதவி (தகுதி்க்கு பொருத்தம் இல்லாத பொறுப்பை ஏற்றல்) அடைந்தால் என்ன கதி அடைவான் என்பதறக்கு திருதிராக்ஷ்ட்டிரனே முக்கியமான உதாரணம், பந்த்ததில் கட்டுண்டவன் சத்திரியன் இல்லை, திருதிராக்ஷ்ட்டிரன் பந்த்ததில் கட்டுண்டவன் , மன அமைதியோடு அனைத்தையும் இழந்தான். அவர் மகன் துர்யோதனன் சத்ரியன், ஒரு சத்ரியனால் மற்றொரு சத்ரியனை கடடுபடுத்தவோ, வசபடுத்தவோ முடியும் இதிலும் தோற்றவர் திருதிராக்ஷ்ட்டிரன்.


Please visit : http://www.dharmam.in/

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்