பின்பற்றுபவர்கள்

14 செப்டம்பர், 2008

குண்டு வெடிப்புகளும், மதவாதிகளின் அக்'கறை'களும் !

எங்கே குண்டு வெடித்தாலும் பொதுக்களின் நலன் குறித்து மிகவும் அக்'கறை'படுபவர்கள் இந்த மதவாதிகள் தான். குண்டுவெடிப்புகளுக்கு மறைமுக காரணங்களும் இவர்கள் தான்.

பிணம் விழுந்தால் தான் பசி ஆற்றிக் கொள்ளமுடியும் என்று நினைக்கும் ஓனாய்களுக்கும் இவர்களுக்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை.

"அப்பாவி" இளைஞர்களுக்கு இடையூறு இல்லாது குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று சொல்லும் அக்கரையில், தீவிரவாதிகளை அரசுக்கு பிடித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்தே இருக்கிறது என்று ஏன் நினைப்பதே இல்லை ? தீவிரவாதிகள் யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு கொடிய செயலை முற்றிலும் சரியாக செய்துவிட முடியாது. முளையிலேயே கிள்ளி எறியப் படவேண்டிய ஒன்றை கண்டும் காணாமல் இருந்துவிட்டு, "அப்பாவிகள்" குறித்த அக்கரை உண்மையான அக்கரைப் போலவே தெரியவில்லை.

பாதிக்கப்படுபவர்கள் கைநீட்டி குற்றம் சொல்லத் தானே செய்வார்கள், நம்ம வீட்டில் ஒன்றாக இருந்த உடன்பிறப்பு ஒருவர் மறைவாக இருந்து கொண்டு பொதுமக்களுக்கு அவ்வப்போது இடையூறு செய்து கொண்டு இருக்கிறார் என்றால், அவரை கண்டுபிடிக்க முடியாமல் போகும் போது கடுப்பில் பொதுமக்கள் குற்றம் சுமத்துவது நம்மையும் சேர்த்தே தான். நாங்கள் தவறு செய்யவில்லையே என்று ஒதுங்கிக் கொள்வதால் பொதுமக்களின் தூற்றல் குறைந்துவிடுமா ? பொதுமக்களுடன் சேர்ந்து அவரை கண்டுபிடிக்க செய்யும் முயற்சிதானே பொதுமக்களின் சுடுசொற்கள், குற்றம் சாட்டால் இவற்றில் இருந்து காக்கும் ?

******

குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு பிறகு மதவாதிகள் ஒன்றை ஒன்று கைநீட்டி குற்றம் சொல்லுவது என்னவிதமான அக்கரை ? இதனால் யாருக்கு பலன் ? பொதுமக்களின் உணர்வை தூண்டி உணர்வு விளையாட்டு விளையாண்டு வருகின்றன. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் 'அப்பாவிகள்' பற்றிய கவலையை விட தீவிரவாதிகளை மக்கள் மன்றத்திற்கு முன்பு நிறுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க முன்வரவேண்டும், இது ஒன்றுதான் 'அப்பாவிகளை' பிடித்து விசாரிக்கும் அரசின் செயலை தடுக்கும். மற்றபடி 'அப்பாவிகள்' குறித்த வெறும் அறிக்கைகள் அவர்கள் பாதிக்கப்படுவதை எந்த விதத்திலும் காப்பாற்றி விடாது. சந்தேகத்தின் பெயரில் எவரையும் விசாரிக்கும் உரிமையை அரசுக்கு கொடுத்தது நாம் தானே. அதாவது நம்மால் தேர்வு செய்யப்பட்ட அரசுகள் தானே அதைச் செய்துவருகின்றன. அரசுகள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோள் மட்டும் போதுமா? அதில் ஒரு அங்கமாக சேர்ந்து செயல்பட்டு கொடியவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவேண்டாமா ?

அப்பாவிகள் விசாரிக்கப்படுவது குறித்து இருக்கும் அக்கரை. குண்டுவெடிப்பால் இறந்தவர்களும் அப்பாவிகள் தான் என்பதை உணர்ந்து, பலரும் பாராட்டும் வண்ணமும் அது போன்ற நிகழ்வுகளை தடுத்தால், முறியடித்தால் 'அப்பாவிகள்' குறித்த அக்கரையை நியாயம் என்று நினைக்க முடியும். அப்படி செய்துவிட்டால் 'அப்பாவிகள்' குறித்த அக்கரை தேவையில்லாமல் கூட போய்விடும்.

21 கருத்துகள்:

பனிமலர் சொன்னது…

இதிலே இப்போ செய்தி வியாபாரிகளின் தொல்லை வேற தாங்க முடியல....

RATHNESH சொன்னது…

தீவிரவாதி என்பவன் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்லன்; மனித மிருகம் என்கிற உணர்வு எல்லோருக்கும் ஏற்படும் வரை இந்த அவலம் தொடரத் தான் செய்யும்.

Unknown சொன்னது…

//தீவிரவாதிகளை அரசுக்கு பிடித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் சேர்ந்தே இருக்கிறது என்று ஏன் நினைப்பதே இல்லை ? தீவிரவாதிகள் யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு கொடிய செயலை முற்றிலும் சரியாக செய்துவிட முடியாது.//

மிகவும் சரியான கூற்று..

என்னுடைய வீட்டுக்கு அருகில் வெளியூர்க்காரன் வந்து தங்கினால் நிச்சயம் என்னால் அடையாளம் காட்ட முடியும். என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனது நடவடிக்கைகள் அய்யத்திற்குரியதாக இருந்தால் நிச்சயம் அடையாளம் காட்ட முடியும். அது போல ”அப்பாவி”களைப் பற்றிக் கவலைப் படுபவர்கள் இந்த “படுபாவிகளைக்” காவற்றுறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
அப்பாவிகளை விசாரிக்காமலிருக்க இவர்களாகவே முன்வந்து குற்றவாளிகளை பிடித்துக் கொடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
”அப்பாவிகளின்” துணையின்றி “படுபாவிகளால்” இது போன்ற கொடூரங்களை நிகழ்த்த முடியாது.

தருமி சொன்னது…

//அப்பாவிகள் விசாரிக்கப்படுவது குறித்து இருக்கும் அக்கரை. குண்டுவெடிப்பால் இறந்தவர்களும் அப்பாவிகள் தான் என்பதை உணர்ந்து, பலரும் பாராட்டும் வண்ணமும் அது போன்ற நிகழ்வுகளை தடுத்தால், முறியடித்தால் 'அப்பாவிகள்' குறித்த அக்கரையை நியாயம் என்று நினைக்க முடியும். அப்படி செய்துவிட்டால் 'அப்பாவிகள்' குறித்த அக்கரை தேவையில்லாமல் கூட போய்விடும்.//

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. நன்று

K.R.அதியமான் சொன்னது…

இஸ்லாமிய பயங்கரவாதம் ஏன் தொட‌ர்கிற‌து ?
இஸ்லாமிய பயங்கரவாதம் (வேறு என்ன பெயரில் அழைப்பது ?) மிக அதிகமாக காரணிகள் என்று பல காலம் நான் கருதியது :

1.காஸ்மீர் பிரச்சனை : காஸ்மீரில் வாழும் இஸ்லாமிய மக்கள் தனி நாடாகாவோ அல்லது பாக்கிஸ்தானுடன் இணயவோ விருப்புவதால் விளைந்த 'கலகம்'
அதை இந்திய‌ அர‌சு கையாண்ட‌ ல‌ச்ச‌ன‌ம் ம‌ற்றும் மீற‌ல்க‌ள் / அட‌க்குமுறைக‌ள்

2.பாப‌ரி ம‌சுதி இடிப்பு ம‌ற்றும் அத‌ன் தொட‌ராக‌ விளைந்த‌ வ‌ன் கொடுமைக‌ள் ம‌ற்றும் கொலைக‌ள். அதிக‌ம் பாதிக்க‌ப்ப‌ட்ட‌து இஸ்லாமிய‌ ம‌க்க‌ள். ப‌ல‌ ஆயிர‌ம் அப்ப‌விக‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். ராம‌ர் கோவில் விச்ய‌த்தை ஊதிக் கிள‌ப்பி பி.ஜெ.பி ஆட்சியை பிடித்த‌து. 2002இல் குஜ‌ராத்தில் ந‌ட‌ந்த‌ வ‌ன் கொலைக‌ள். அத‌ன் கார‌ணிக‌ள் இன்றும் த‌ண்டிக்க‌ப்ப‌டாத‌து..

3.வி.ஹெ.பி / ஆர்.எஸ்.எஸ் போன்ற‌ இய‌க்க‌ங்க‌ளின் இடைவிடாத‌ பிர‌ச்சார‌ம் ம‌ற்றும் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌ங்க‌ளை தூண்ட‌ கார‌ணிக‌ளாக‌ செய‌ல்ப‌டுவ‌து.

இந்த‌ 3 பிர‌ச்ச‌னைக‌ளும் ந‌ல்ல‌ வித‌மாக‌ தீர்க்க‌ப்ப‌ட்டு : வி.ஹெ.பி வ‌கைய‌ராக்க‌ள் ஒர‌ம் க‌ட்ட‌ப்ப‌ட்டு, பி.ஜெ.பி ம‌க்க‌ளால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்டு, பாப‌ரி மசுதி இட‌ம் இஸ்லாமிய‌ர்க‌ளிட‌மே திருப்பி அளிக்க‌ப்ப‌ட்டு, க‌ஸ்மீர் பிர‌ச்ச‌னை அய்.நா ச‌பையின் உத‌விய்ட‌ன் 'தீர்க்க‌ப்' ப‌ட்டு அமைதி ம‌ற்றும் ம‌த‌ ந‌ல்லிண‌க்க‌ம் திரும்பினால், இந்தியாவில் இஸ்லாமிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ம் ம‌ற்றும் குண்டு வெடிப்புக‌ள் ஒழியும் என்றுதான் ந‌ம்பி வ‌ந்தேன்.

ஆனால் அல் கொய‌தா வ‌கை இய‌க்க‌ங்க‌ள் அத‌ன் இந்திய‌ / பாகிஸ்தானிய‌ துணை அமைப்புக‌ள் போன்ற‌வை மேற்க‌ண்ட‌ குறிக்கோள்க‌ளை 'ம‌ட்டும்' நோக்கி செய‌ல‌ப‌டுவ‌தில்லை. அவ‌ர்க‌ளின் இன்றைய‌ குறிக்கோள் இந்தியாவை 'ப‌ழி' வாங்கி அழிக்க‌ வேண்டும். நாடே சின்னாப்பின்ன‌மாக‌ வேண்டும். ம‌த‌க்க‌ல‌வ‌ர‌ங்க‌ள் பெரிய‌ அள‌வில் தூண்டிவிட‌ப்ப‌ட்டு அனைத்து மாநில‌ங்க‌ளிலும் காஸ்மீர் போல் வ‌ன்முறை ம‌ற்றும் பிரிவினை தூண்ட‌ப்ப‌ட‌ வேண்டும் ; இந்திய‌ பொருளாதார‌ம் அழிய‌ வேண்டும்...

லூசுப்ப‌ய‌ல்க‌ள்... Brain washed idiots...

கோவி.கண்ணன் சொன்னது…

// பின்னூட்டம் பெரியசாமி.. said...

மிகவும் சரியான கூற்று..

என்னுடைய வீட்டுக்கு அருகில் வெளியூர்க்காரன் வந்து தங்கினால் நிச்சயம் என்னால் அடையாளம் காட்ட முடியும். என்னுடைய பக்கத்து வீட்டுக்காரனது நடவடிக்கைகள் அய்யத்திற்குரியதாக இருந்தால் நிச்சயம் அடையாளம் காட்ட முடியும். அது போல ”அப்பாவி”களைப் பற்றிக் கவலைப் படுபவர்கள் இந்த “படுபாவிகளைக்” காவற்றுறையிடம் ஒப்படைக்க வேண்டும்.
அப்பாவிகளை விசாரிக்காமலிருக்க இவர்களாகவே முன்வந்து குற்றவாளிகளை பிடித்துக் கொடுத்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
”அப்பாவிகளின்” துணையின்றி “படுபாவிகளால்” இது போன்ற கொடூரங்களை நிகழ்த்த முடியாது.
//

பின்னூட்டம் பெரியசாமி,
சரியான கருத்து அப்படியே காவிக் கொடி தீவிரவாதிகளையும் காட்டி கொடுப்போம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
தீவிரவாதி என்பவன் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்லன்; மனித மிருகம் என்கிற உணர்வு எல்லோருக்கும் ஏற்படும் வரை இந்த அவலம் தொடரத் தான் செய்யும்.

5:04 PM, September 14, 2008
//

அதுக்குள்ளே 'அல்லா மன்னிக்க மாட்டார்' என்று கருத்து சொல்பவர்களை என்ன சொல்வது ?

இந்து மதத்தின் பெயரில் அட்டூழியம் செய்யும் குஜராத், ஒரிசா பாவிகளையும் 'அல்லா' மன்னிக்கக் கூடாது என்று மறந்தும் கூட சொல்லமாட்டேன்கிறார்களே.

தீவிரவாதிகள் மதம் சார்ந்தவர்கள் அல்ல உங்களது கருத்து 100 விழுக்காடு சரி. வழிமொழிகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//3.வி.ஹெ.பி / ஆர்.எஸ்.எஸ் போன்ற‌ இய‌க்க‌ங்க‌ளின் இடைவிடாத‌ பிர‌ச்சார‌ம் ம‌ற்றும் ம‌த‌க்க‌ல‌வ‌ர‌ங்க‌ளை தூண்ட‌ கார‌ணிக‌ளாக‌ செய‌ல்ப‌டுவ‌து.//

அரசு பலத்தோடு செய்யப்படுவது தீவிரவாதம் இல்லை என்றே பலர் நம்புகிறார்கள், பரப்புகிறார்கள், சப்பைக் கட்டுகிறார்கள். நீங்கள் அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள், நன்றி ! பாராட்டுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பனிமலர் said...
இதிலே இப்போ செய்தி வியாபாரிகளின் தொல்லை வேற தாங்க முடியல....

4:01 PM, September 14, 2008
//

ஹூம் :(

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க. நன்று

8:06 PM, September 14, 2008
//

நன்றி ஐயா !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

ஆதங்கப் பதிவு!

நல்லா இருக்கு.

Unknown சொன்னது…

// காவிக் கொடி தீவிரவாதிகளையும் காட்டி கொடுப்போம் //
உங்கள் மத வெறியர்களுக்குச் சாதகமாக மாறிவிடும் அல்லது ஒருதலைப் பட்சமான மத பிரச்சாரக் குசும்பு உங்களை விட்டுப் போகாது போல தெரிகிறது.. :(

இந்தப் பதிவில் நீங்கள் எந்த இடத்திலும் பச்சைக் கொடி மத வெறி பிடித்த தீவிரவாதிகளை நேரடியாக பச்சைக் கொடி தீவிரவாதிகள் என்றோ மதவெறியர்கள் என்றோ குறிப்பிடவில்லை.என்ன காரணம் என்பது தெரியவில்லை. அதே நேரம் இஸ்லாமியர் அனவரையும் தீவிரவாதிகள் என்று சொல்லுவதில் உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருந்திருக்கக் கூடும். பச்சைக் கொடி பிடிப்பவரெல்லாம் மத வெறியரோ, தீவிரவாதியோ இல்லை என நீங்கள் கருதியிருக்கலாம். ஆனால் இந்து மத தீவிரவாதிகளை மட்டும் காவிக்கொடி பிடிப்பவர் தீவிரவாதியென்று கூச்சமின்றி உங்களால் கூற முடிகிறது. ஆழ்வாரும், நாயன்மாரும் காவிக் கொடி பிடித்தனரே? அவர்கள் தீவிரவாதியா? வள்ளலாரும், குன்றக்குடி அடிகளாரும், திருவாவடுதுறை ஆதீனம் போன்ற சிவனடியார்களும் காவிக் கொடி பிடிகின்றனரே? அவர்கள் தீவிரவாதிகளா? எத்தனை பேர் குடியை இவர்கள் குண்டு வைத்து கெடுத்தார்கள் என்று சொல்ல முடியுமா?
தவிரவும் இந்து மதத்தில் தீவிரவாதிகள் இருக்கத்தான் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., இந்து முன்னணி,மேலும் சிலர்.இவர்களில் யாரும் இஸ்லாமிய தீவிரவாதிகள் போன்று குண்டு வைத்து சமூக அமைதியைக் கெடுத்தவர்கள் இல்லை. இவர்கள் அனைவரும் இஸ்லாமிய தீவிரவாதிகளால் பாதிக்கப் பட்டவர்களாயிருப்பர். இஸ்லாமிய தீவிரவாதம் என்னவோ இப்போதுதான் தோன்றியதல்ல. எப்போது பாபர் இந்தியாவின் மீது படை எடுத்து வந்தானோ அப்பொதே தொடங்கி விட்டது. அதற்கு முன்னர் நீங்கள் சொல்வது போல் காவிக் கொடி பிடித்த தீவிரவாதிகள் என்று எவரும் இருந்ததில்லை. இந்து மத வெறி இயக்கங்களின் தாயான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு முன்னால் இது போல எதெனும் ஒரு இந்து தீவிரவாத இயக்கத்தின் பெயரைக் கூற முடியுமா?

ஆனால் இஸ்லாமியக் கொடுங்கோலன்களை பாபர் முதல் அனைவரையும் வரிசைப் படுத்த முடியும்.
இது போல இந்து, புத்த, சமண மதத்தைச் சார்ந்த மன்னர்கள் யாரையாவது கூர முடியுமா?

என் வீட்டுக்கு அருகில் குண்டு வைக்கும் ஒருவன் இருந்தால் அவன் பச்சை கொடி பிடிக்கிரானா? அல்லது காவிக் கொடி பிடிகின்றனா? என்றெல்லாம் பார்க்கமாட்டேன்.

நீங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளை வலிக்காமல் அடிப்பது போல, மற்ற மதத்தினர் என்றால் வலிந்து தாக்குதல் நடத்துவது போலெல்லாம் நாங்கள் கிடையாது.
நீங்கள் எந்தவகையிலும் சேர மாட்டீர்கள். ஒன்று மட்டும் நிச்சயம் இஸ்லாமிய தீவிரவாதிகள் இதே ரீதியில் தொடர்ந்தால், இந்து மத வெறியர்கள் கையில் நாடு சிக்குவதைத் தடுக்க முடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்தப் பதிவில் நீங்கள் எந்த இடத்திலும் பச்சைக் கொடி மத வெறி பிடித்த தீவிரவாதிகளை நேரடியாக பச்சைக் கொடி தீவிரவாதிகள் என்றோ மதவெறியர்கள் என்றோ குறிப்பிடவில்லை.//

இதற்கு அடுத்த பதிவில் விளக்கமாக, வெளிப்படையாக எழுதியாவிட்டது, அங்கு பின்னூட்டமிட்டு இருக்கிறீர்கள்.

suvanappiriyan சொன்னது…

தீவிரவாதி என்பவன் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்லன்; மனித மிருகம் என்கிற உணர்வு எல்லோருக்கும் ஏற்படும் வரை இந்த அவலம் தொடரத் தான் செய்யும்.

Robin சொன்னது…

// இந்து மதத்தில் தீவிரவாதிகள் இருக்கத்தான் இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி., இந்து முன்னணி,மேலும் சிலர்.இவர்களில் யாரும் இஸ்லாமிய தீவிரவாதிகள் போன்று குண்டு வைத்து சமூக அமைதியைக் கெடுத்தவர்கள் இல்லை. // ஆமாம் காவி பயங்கரவாதிகள் குண்டு வைக்க மாட்டார்கள். ஆனால் அரசாங்கத்தின் துணையோடு கலவரம் என்ற பெயரில் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையை வெட்டிக் கொன்றும் பெண்களையும் குழந்தைகளையும் உயிரோடு கொளுத்தியும் சமூக அமைதியை நிலை நாட்டுவார்கள். இவர்களின் பயங்கரவாதம் மட்டும் கலவரம் என்ற பெயரில் மட்டும் மீடியாவால் அழைக்கப்படும். மேலும் காவி பயங்கரவாதிகள் யாரும் சட்டத்தின் பிடியில் சிக்க மாட்டார்கள். சம்பந்தப்பட்ட மாநில அரசே அவர்களை காப்பாற்றி விடும்.

Robin சொன்னது…

//ஆனால் இஸ்லாமியக் கொடுங்கோலன்களை பாபர் முதல் அனைவரையும் வரிசைப் படுத்த முடியும்.இது போல இந்து, புத்த, சமண மதத்தைச் சார்ந்த மன்னர்கள் யாரையாவது கூர முடியுமா?// - எட்டாயிரம் ஜைன துறவிகளை கழுவில் ஏற்றிய மன்னர்கள் எல்லாம் எவ்வளவு இரக்க குணம் உள்ள மன்னர்கள்!

Robin சொன்னது…

//நீங்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளை வலிக்காமல் அடிப்பது போல, மற்ற மதத்தினர் என்றால் வலிந்து தாக்குதல் நடத்துவது போலேல்லாம் நாங்கள் கிடையாது. // - நாங்கள் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகளை மட்டும்தான் வலிப்பது போல் அடிப்போம். இந்து தீவிரவாதிகள் என்றால் ஏதாவது
சப்பைக் காரணங்களை சொல்லி நியாயப்படுத்தி விடுவோம் :) வேறு காரணங்கள் கிடைக்காவிட்டால் சில நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த முகலாயர் வரலாற்றை கிண்டுவோம். ஆனால் தப்பித் தவறிக் கூட அதற்க்கு முந்தைய வரலாற்றுக்கு செல்ல மாட்டோம்; சென்றால் எங்கள் சாயம் வெளுத்துவிடும்:) நாங்கள் கலவரம் என்ற பெயரில் செய்யும் பயங்கரவாதத்திற்கு சொல்லும் காரணங்களை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் உங்களை தேசத்துரோகிகள் என்று அழைப்போம். ஜாக்கிரதை!

K.R.அதியமான் சொன்னது…

Robin,

What are you trying to prove ?
just because paarpaneeyam and VHP type fanatics did evil things, do you justify the recent terror bombings of inncoents ?

IF you feel that the 'revenge' by SIMI is correct, then shall we stop the police investigations and lift the ban on SIMI, etc. let the people decide their fate then ?

I guess you live safely in TN. Suppose if a close relative or freind of yours has been killed in this Delhi blast, will you then write in this way ?

solluvathu yaarukkum elithu ; ariyavaam.....

Robin சொன்னது…

k.r.Athiyaman,
What have you inferred from my views? Have I ever written that terrorism in the name of islam is just?
//IF you feel that the 'revenge' by SIMI is correct, then shall we stop the police investigations and lift the ban on SIMI, etc. let the people decide their fate then ?// What do you mean that 'if you feel..'? Why do you 'imagine' and accuse me? I doubt your commonsense. Read my writings once again. I just want to remind that saffron terrorism is also dangerous to the society.
//I guess you live safely in TN. Suppose if a close relative or freind of yours has been killed in this Delhi blast, will you then write in this way ? // Your gusses always prove wrong. I have personally seen saffron terrorism.
But saffron terrorism is always taken lightly and in most of the cases state govt.s are directly and indirectly supporting them.

K.R.அதியமான் சொன்னது…

/// just want to remind that saffron terrorism is also dangerous to the society.
///

Robin,

athu engalukkum thgeiryum.

is this the time and place to talk like this when people are dying and police and IB are working overtime ? ok then .What practical solution do offer. other than blamming hindu communislists for all this..

what should be done now ?

Robin சொன்னது…

//athu engalukkum thgeiryum.// Remba santhosham.

//is this the time and place to talk like this when people are dying and police and IB are working overtime ? ok then .What practical solution do offer. other than blamming hindu communislists for all this..//
This is the rigt time to talk about saffron terrorists. While your memory retains what happened in Delhi, it conveniently forgets what is happening in Orissa and karnataka. What police and IB are doing in Orissa? Simply watching when people are burnt alive. Do you have double stanadards: one for saffrons, one for others? Practical solution is that all the saffron terrorist organizations should be banned just like simi. Whoever induces riots should
be treated like terrorists and punished. But what is happening in India, one who executed riots that led to killing of many is now a CM.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்