பின்பற்றுபவர்கள்

10 மே, 2010

பார்பனர்களைப் தொடர்ந்து பாராட்டும் முதல்வர் !

ஒருகாலத்தில் பார்பனர்களின் 'தீண்டத்தகாத கட்சி' என்று அவர்களுக்குள் விமர்சனம் செய்யப்பட்ட திமுகவிற்கு எஸ்வீசேகர் உட்பட பல பார்பனர்களின் நேரடி ஆதரவும், 'ஷோ' இராமசாமி போன்ற பார்பனர்களின் மறைமுக ஆதரவும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கிறது. காரணம் எம்ஜிஆருக்கு பிறகான ஜெ தலைமை அதிமுகவில் தலைமைத் தவிர்த்து தேவர் சாதியின் பிடி அதிமுகவில் இறுகி உள்ளதாலும், பார்பனர்களின் இராஜ குருவான ஜெயேந்திர சரஸ்வதியை கைது செய்ததாலும் பார்பனர்கள் அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்டனர், தமிழகத்தைப் பொறுத்த அளவில் அதிமுக திமுக தவிர்த்து பிறக்கட்சிகளுக்கு பெரிய செல்வாக்கு கிடையாது என்பதால் பார்பனர்களின் இருக்கும் இரு வாய்ப்புகளுக்குள் கடந்த பத்தாண்டுகளில் திமுக ஆதரவு என்பதாக தொடர்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட தேசிய கட்சிகள் அனைத்தும் பார்பனர்களின் வழிகாட்டுதலில் அல்லது தலைமையில் இயங்குகின்றன என்பது அனைவரும் அறிந்தவை தான். தமிழகத்தில் பார்பனர்கள் நுழைய முடியாத ஒரே கட்சி திக மட்டுமே, பெரியாருக்கு பிறகான திகவின் ஒரே கொள்கையும் பார்பன எதிர்ப்பு என்பதால் அந்த நிலை நீடிக்கிறது என்றாலும் கூட தேர்தலில் நிற்காத ஒரே கட்சி என்பதால் திகவின் பார்பன எதிர்ப்பு அல்லது பார்பனர்களின் திக எதிர்ப்பு நிலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை. கட்சியில் இருக்கும் மந்திரிகளின் ஊழல் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டும் போது மட்டும் தமது கட்சி திராவிடக் கட்சி என்பதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொள்ளும் கருணாநிதி 'பார்பன சதி', 'தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வெறுப்பு' துவேசம்', 'காழ்புணர்வு' என்பதாக கிளப்பிவிட்டுவிட்டு மறந்துவிடுவார்.

*****

அண்மையில் ஒய்ஜிமகேந்திரனுக்கு பாராட்டுவிழா நடந்தது, 50 ஆண்டுகளாக நாடகத் துரையில் கலைப்பணிகளுக்காக எடுக்கப்பட்ட விழாவாம், கருணாநிதி கலந்து கொண்டு வாழ்த்தினார், கருணாநிதி கலந்து கொண்டதால் அரசு சார்பு விழா போன்ற தோற்றம் ஏற்பட்டது, மற்றபடி அது அரசு சார்பு விழா அல்ல. நாடகத்துறையில் கிரேசிமோகன், மெளலி மற்றும் விசு போன்ற பார்பனர்கள் இருக்க, அவர்களை விட மகேந்திரன் என்ன சாதனை செய்தார் என்றே தெரியவில்லை.

அடுத்து 5600 முறை நாடகம் போட்ட எஸ்வீசேகரைப் பாராட்டுகிறாராம் கருணாநிதி, எஸ்வீசேகருக்கு வயது 60 என்று வைத்துக் கொண்டாலும், 20 வயதில் இருந்து 40 ஆண்டுகளாக (14600 நாட்கள்) நாடகம் போடுகிறார் என்று வைத்துக் கொண்டாலும் கூட இரண்டரை நாள்களுக்கு ஒரு நாடகம் என்ற கணக்கில் வருகிறது. எஸ்வீசேகர் நாடகம் இரண்டரை நாட்களுக்கு ஒரு முறை கடந்த 10 ஆண்டுகளில் எங்கும் நடந்தது போல் தெரியவில்லை. ஆண்டுக்கு 50 தடவை என்றாலும் பத்தாண்டுகளில் 500 முறையும் அதற்கு முன்பு அடிக்கடி அதாவது ஆண்டுக்கு 100 முறை என்றாலும் கூட 1000 முறைகள் ஆக மொத்தம் 1500 முறை, ஒரு நாள் நாடக நிகழ்வு என்பது இரு காட்சிகள் என்று வைத்துக் கொண்டாலும் கூட 3000 நாடக காட்சிகள் தான் வரும். அதற்கு கிட்டதட்ட இருமடங்கு அதாவது 5600 முறை என்ற எண்ணிக்கையில் நடத்தியதாக விக்கிப்பீடியா உட்பட செய்திகளில் கொடுத்திருக்கிறார்கள், இவர்களின் எண்ணிக்கை தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. எண்ணிக்கையை விட்டுப் பார்த்தாலும் எஸ்வீசேகர் நாடகங்கள் நகைச்சுவை என்ற பெயரில் கிராமத்தினரின் பெயர்களையும் அவர்களின் வாழ்க்கைமுறையையும் கிண்டல் செய்தே பெயர்வாங்கியவை தான். இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். நகைச்சுவை என்ற பெயரில் பலவீனமானவர்களை விமர்செய்யும் பாணியிலான பணியைத்தான் 5600 முறை செய்திருக்கிறார். 5600 முறைகளிலான எண்ணிக்கை என்பது தாழ்த்தப்பட்டவர்களை விளிம்பு நிலை மனிதர்களை கிண்டல் செய்த எண்ணிக்கை. இதற்கு பாராட்டுவிழாவாம், இதில் கலந்து கொண்டு 'தமிழர்களின் ஒரே தலைவரான' கருணாநிதி வாழ்த்துகிறாராம்.

வலையுலகில் 'மாட்டிக் கொள்ளாமல் உடலுறவு கொள்வது எப்படி ?' மற்றும் '80 வயது கிழவி கூட விடுதலைப் புலிதலைவரின் தாய் என்பதால் திருப்பி அனுப்பவது ஞாயம் தான்' என்பதாகவும், 'ஷோ' இராமசாமியின் தேடலான 'எங்கே பிராமணன் ?' குறித்தெல்லாம் 1000 பதிவுகளுக்கு மேலாக எழுதிவரும் வலைப்பதிவின் டெண்டுல்கர் என்று லக்கிலுக் யுவகிருஷ்ணாவால் சிறப்பிக்கப்பெற்ற நம்ம டோண்டு இராகவன் சாருக்கு திமுக அனுதாபியான லக்கிலுக் '1000 பதிவுகள் கண்ட டோண்டு இராகவன் வடகலை ஐயங்கார் அவர்களுக்கு பாராட்டு' என பாராட்டு விழா ஏற்பாடு செய்தாலும் கருணாநிதி கலந்து கொள்வார். வலையுலகிற்கும் பெருமை :)

(டோண்டு சார், மன்னிக்கவும், 'நீங்கள் என்ன எழுதினீர்கள்?' என்று நினைத்தால் உடனடியாக பலருக்கும் நினைவுக்கு வருபவை அவைகள் தான் என்பதால் அவற்றைக் குறிப்பிட்டேன்)

73 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

//பார்பனர்களின் இராஜ குருவான ஜெயேந்திர சரஸ்வதியை கைது செய்ததாலும் பார்பனர்கள் அதிமுக ஆதரவை விலக்கிக் கொண்டனர், தமிழகத்தைப் பொறுத்த அளவில் அதிமுக திமுக தவிர்த்து பிறக்கட்சிகளுக்கு பெரிய செல்வாக்கு கிடையாது என்பதால் பார்பனர்களின் இருக்கும் இரு வாய்ப்புகளுக்குள் கடந்த பத்தாண்டுகளில் திமுக ஆதரவு என்பதாக தொடர்கிறது. //

ஆகா ! இதெல்லாம் அவர்களுக்கு தெரியுமா?

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல ஆய்வு.
அரசியல்வாதிகளுக்கு காசிதான் கடவுள். கொள்கைகளெல்லாம் தூண்டிற்புழுக்களே.

Unknown சொன்னது…

தமிழகத்தில் பார்பனர்கள் நுழைய முடியாத ஒரே கட்சி திக மட்டுமே, பெரியாருக்கு பிறகான திகவின் ஒரே கொள்கையும் பார்பன எதிர்ப்பு என்பதால் அந்த நிலை நீடிக்கிறது.
1.பெரியாருக்குப் பின் தி.க வின் ஒரே கொள்கை, பார்ப்பன எதிர்ப்பு என்ற தங்களின் கூற்று, பாராட்டா அல்லது உள்குத்தா?
2. பார்ப்பனர்கள் சேர முடியாத மற்ற கட்சிகள் - மனித நேய மக்கள் கட்சி?
3.தி.க என்பது ஒரு கட்சி அல்ல. கல்ட்(cult)- அதாவது ஒரு சாமியார் மடம்

dondu(#11168674346665545885) சொன்னது…

1. Take it easy கோவி கண்ணன்.

2. லூசுல விடுங்கன்னு தமிழ்லேயே சொல்லத்தான் நினைத்தேன், இருப்பினும் அது தவறாக புரிந்து கொள்ளப்படும் என்ற ஐயத்தால் ஆங்கிலத்திலேயே கூறிவிட்டேன்.

3. மன்னிப்பு கேட்கும் அளவுக்கெல்லாம் உங்கள் பதிவில் என்னை எதிர்த்து எதுவும் எழுதப்படவில்லை.

4. அதிலும் டோண்டு வடகலை ஐயங்கார் என்று படித்ததும் நீங்களும் லக்கிலுக்கும் ஒருவருவர் அன்புடன் வடகலை/தென்கலை ஐயங்கார் என விளித்தது நினைவுக்கு வந்து புன்னகையையே வரவழைத்தது.

5. //நாடகத்துறையில் கிரேசிமோகன், மெளலி மற்றும் விசு போன்ற பார்பனர்கள் இருக்க, அவர்களை விட மகேந்திரன் என்ன சாதனை செய்தார் என்றே தெரியவில்லை.//
சௌம்யா தியேட்டர்ஸின் டி.வி. ராதாகிருஷ்ணன், காத்தாடி ராமமூர்த்தி, ஏ.ஆர்.எஸ்., டில்லி கணேஷ், இந்திரா பார்த்தசாரதி ஆகியோரை விட்டு விட்டீர்கள்.

6. உங்கள் கலைஞர் பற்றிய நையாண்டியை மிகவும் ரசித்தேன். அதெல்லாம் அவருக்கு உறைக்கும் என நினைக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//6. உங்கள் கலைஞர் பற்றிய நையாண்டியை மிகவும் ரசித்தேன். அதெல்லாம் அவருக்கு உறைக்கும் என நினைக்கிறீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்//

அவரு என் பதிவையெல்லாம் படிக்க மாட்டார். அபிமானிகளுக்கு உறைத்தால் பெரியவிசயம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சௌம்யா தியேட்டர்ஸின் டி.வி. ராதாகிருஷ்ணன், காத்தாடி ராமமூர்த்தி, ஏ.ஆர்.எஸ்., டில்லி கணேஷ், இந்திரா பார்த்தசாரதி ஆகியோரை விட்டு விட்டீர்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

டிவீஆர் எங்கும் தன்னை பார்பனராக வலைப்பதிவில் அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடாதபோது, தனக்கு சாதிய அடையாளம் பெருமைக்குறியதாக அவர் நினைப்பதில்லை என்னும் பட்சத்தில் நீங்கள் அவர் குறித்து சொல்லுவது அவர் மீதான உங்களின் வெறுப்பு (என் ஊகம் தான்) என்று நினைத்துக் கொள்ளலாமா ?

Unknown சொன்னது…

//டிவீஆர் எங்கும் தன்னை பார்பனராக வலைப்பதிவில் அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடாதபோது, தனக்கு சாதிய அடையாளம் பெருமைக்குறியதாக அவர் நினைப்பதில்லை என்னும் பட்சத்தில் நீங்கள் அவர் குறித்து சொல்லுவது அவர் மீதான உங்களின் வெறுப்பு (என் ஊகம் தான்) என்று நினைத்துக் கொள்ளலாமா ?///

ரைட்டு ..

dondu(#11168674346665545885) சொன்னது…

//அவர் மீதான உங்களின் வெறுப்பு (என் ஊகம் தான்) என்று நினைத்துக் கொள்ளலாமா ?//
1. தவறான நினைப்பு.

2. ஏற்கனவேயே டி.ஆர்.அசோக் அவரை அடையாளம் காட்டி விட்டார், நான் புதிதாகச் சொல்லவில்லை.

3. நாடகங்களுக்கு அவரும் கரூர் தங்கராஜும் செய்து வரும் சேவை மறக்கக் கூடியதல்ல என்பதாலேயே நான் குறிப்பிட்டேன்.

4. பார்க்க: http://dondu.blogspot.com/2009/03/blog-post_28.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

//2. ஏற்கனவேயே டி.ஆர்.அசோக் அவரை அடையாளம் காட்டி விட்டார், நான் புதிதாகச் சொல்லவில்லை.//

டிவீஆரை டி.ஆர்.அசோக் நேரடியாக குறிப்பிட்டது போல் தெரியவில்லை, மறைமுகமாக குறிப்பிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். அவர் சொன்ன முன்வரிசையில் எனக்கு தெரிந்த பார்பனர்கள் அல்லாதவர்களும் இருந்தனர். டி.ஆர்.அசோக்கின் அந்த பதிவு உங்களுக்கு ஒரு சாக்கு மட்டுமே. மற்றபடி வேறு சில இடத்திலும் கூட நீங்கள் அவ்வப்போது டிவீஆரை அடையாளப்படுத்தி இருந்தீர்கள்.

dondu(#11168674346665545885) சொன்னது…

//பார்பனர்களைப் தொடர்ந்து..//
சந்திப்பிழை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

அன்புள்ள கோவி கண்ணன்!

அவரவர் தங்கள் சொந்த ரசனையைத் தான் மற்றவரிகளிடமும் தேடுகிறார்கள் என்பதை மறுபடியும் மெய்ப்பித்திருக்கிரீர்கள்!

டோண்டு ராகவன் சார் பதிவில், யோம் கிப்பூர், அப்புறம் சுடச் சுட Good Touch, Bad Touch நிகழ்ச்சியைப் பற்றிய விரிவான பதிவு உட்பட நிறைய சுவாரசியமான விஷயங்களைத் தேடிப் படித்த அனுபவம் எனக்கிருக்கிறது!

இதே மாதிரி உங்களுடைய பதிவிலும் கூடப் பல விஷயங்களைத் தேடிப்பார்த்துப் படித்ததும் உண்டு!

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...

அன்புள்ள கோவி கண்ணன்!

அவரவர் தங்கள் சொந்த ரசனையைத் தான் மற்றவரிகளிடமும் தேடுகிறார்கள் என்பதை மறுபடியும் மெய்ப்பித்திருக்கிரீர்கள்!

டோண்டு ராகவன் சார் பதிவில், யோம் கிப்பூர், அப்புறம் சுடச் சுட Good Touch, Bad Touch நிகழ்ச்சியைப் பற்றிய விரிவான பதிவு உட்பட நிறைய சுவாரசியமான விஷயங்களைத் தேடிப் படித்த அனுபவம் எனக்கிருக்கிறது!

இதே மாதிரி உங்களுடைய பதிவிலும் கூடப் பல விஷயங்களைத் தேடிப்பார்த்துப் படித்ததும் உண்டு!//

உங்களுக்கு எஸ்வீசேகர் நாடகம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும், எனக்கு அதில் இருக்கும் வன்மம் மட்டும் தான் தெரியும், அவரவர் வாழும் சமூகங்களைப் பொருத்தே சமூகக் கருத்துகள் பொருள்படுத்தப்படும், நீங்க வேண்டுமென்றால் டோண்டு சாரின் பதிவுகளில் பலரால் பேசப்பட்டு 'போலி டோண்டு' உருவாக்கம் வரை சென்ற பதிவுகள் எது என்று அவரையே கேட்டுப்பாருங்களேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// dondu(#11168674346665545885) said...

//பார்பனர்களைப் தொடர்ந்து..//
சந்திப்பிழை.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

நான் இங்கே பிரமணர், பிரமணாள் என்று எழுதாதவரை சந்திப்பிழைகளெல்லாம் லூசில் விடலாம்.

:) இருந்தாலும் நன்றி.

TBR. JOSPEH சொன்னது…

என்ன கண்ணன் நீங்களுமா? இந்த காலத்துல போயி பார்ப்பனர், முதலியார்னு பதிவு எழுதிக்கிட்டு...எஸ்.வி.சேகர் ஒரு கலைஞர் அப்படீன்னு மட்டும் பாருங்க. கலைஞர் எஸ்.வி. சேகர் என்கிற ஒரு நாடக கலைஞரை பாராட்டுகிறார். அவ்வளவுதான். அதே எஸ்.வி.சேகர் கலைஞரை விட்டுவிட்டு மீண்டும் மேடத்திடமே சென்றுவிடவும் வாய்ப்புண்டு என்பதை கலைஞரால் எண்ணி பார்க்க முடியாதா என்ன?

கோவி.கண்ணன் சொன்னது…

//டி.பி.ஆர் said...

என்ன கண்ணன் நீங்களுமா? இந்த காலத்துல போயி பார்ப்பனர், முதலியார்னு பதிவு எழுதிக்கிட்டு...எஸ்.வி.சேகர் ஒரு கலைஞர் அப்படீன்னு மட்டும் பாருங்க. கலைஞர் எஸ்.வி. சேகர் என்கிற ஒரு நாடக கலைஞரை பாராட்டுகிறார். அவ்வளவுதான். அதே எஸ்.வி.சேகர் கலைஞரை விட்டுவிட்டு மீண்டும் மேடத்திடமே சென்றுவிடவும் வாய்ப்புண்டு என்பதை கலைஞரால் எண்ணி பார்க்க முடியாதா என்ன?//

எஸ்வீசேகர் நாடகக் கலைஞர் என்பது சரிதான், அவர் நாடகத்தின் மூலமாக நகைச்சுவை என்ற பெயரில் செய்த கிராமிய விமர்சனங்கள் சகித்துக் கொள்ள முடியாதவை.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/நீங்க வேண்டுமென்றால் டோண்டு சாரின் பதிவுகளில் பலரால் பேசப்பட்டு 'போலி டோண்டு' உருவாக்கம் வரை சென்ற பதிவுகள் எது என்று அவரையே கேட்டு.../


அதற்கு அவசியமே இல்லை திரு கோவி கண்ணன்!

வருடத்துக்கொரு முறை, கடந்த பன்னிரண்டு மாதங்களில் மட்டுமே இருமுறை கிளம்பிய, இன்னும் ரிபீட் ஆகப் போகிற இந்த விவகாரத்தைக் குறித்து, டோண்டு சாருடைய, உங்களுடைய, செந்தழல்ரவியுடைய, உண்மைத்தமிழனுடைய, இப்படிப் பலருடைய பதிவுகளிலும் பழைய காயங்களைப் பற்றிப் பேசியதைப் படித்திருக்கிறேன்.

அதெல்லாவற்றையும் மீறி,ஒவ்வொரு பதிவரிடத்திலும் நிறைய நல்ல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமிருப்பதையுமே புரிந்து கொண்டிருக்கிறேன்.

ஆக, கருத்து வேறுபாடுகள் இங்கே முக்கியமான விஷயமில்லை!கருத்து வேறுபாடுகளைப் புரிந்துகொள்கிற மாதிரியே, அதை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதை மட்டுமே நான் முக்கியப்படுத்த விரும்புகிறேன். அதனால் தான் அடிக்கடி நல்லெண்ணங்களை விதைத்தல் என்று தென் கொரியாவில் நடக்கும் சுமாயிசே , சொன்ஃபில் இயக்கங்களைப் பற்றி நினைபடுத்தும் பதிவுகளையும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அப்புறம் எஸ் வி சேகருடைய துணுக்குத் தோரணங்கள் பற்றி....!

டோண்டு சார் பதிவிலேயே என்னுடைய மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.

தனி காட்டு ராஜா சொன்னது…

//நினைவு படுத்திக் கொள்ளும் கருணாநிதி 'பார்பன சதி', 'தாழ்த்தப்பட்டவர்கள் மீதான வெறுப்பு' துவேசம்', 'காழ்புணர்வு' என்பதாக கிளப்பிவிட்டுவிட்டு மறந்துவிடுவார்.//

நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா ...? அவருக்கு தெரியுதுதான் ....அதனால அவர் முதல்வர் .........

இது தெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா......

Kesavan சொன்னது…

//பார்பனர்களின் இராஜ குருவான ஜெயேந்திர சரஸ்வதி//

குட் ஜோக். தங்களின் பொதுபுத்தி நன்றாக தெரிகிறது.

அப்போது பார்பனர் அல்லாத மக்களுடைய ராஜகுரு யாரு

//அண்மையில் ஒய்ஜிமகேந்திரனுக்கு பாராட்டுவிழா நடந்தது, 50 ஆண்டுகளாக நாடகத் துரையில் கலைப்பணிகளுக்காக எடுக்கப்பட்ட விழாவாம்,//

சினிமாவில் நடித்து 50 வருடங்கள் கொண்டாடுவதை விட நாடகத்தில் நடித்து 50 வருட விழாவை கொண்டாடியதில் கோவியார் என்ன குற்றம் காண்கிறாரோ.

//நாடகத்துறையில் கிரேசிமோகன், மெளலி மற்றும் விசு போன்ற பார்பனர்கள் இருக்க, அவர்களை விட மகேந்திரன் என்ன சாதனை செய்தார் என்றே தெரியவில்லை. //

நாரதர் கலகம் நன்மையில் முடிய வேண்டும் . ஆனால் அவர்களுக்கு விருது கொடுத்தாலும் பார்பனர்களுக்கு விருது கொடுகிறார்கள் என்று சொல்லாமலா இருப்பீர்கள் .

கோவியார் எழுதுவதை படிக்கும் போது பார்பனர்களுக்கு விருது கொடுப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்பது மட்டும் தான் தெரிகிறது. அவர் பார்பனர்களை எதிர்ப்பதில் பார்ப்பனீயவாதி

Kesavan சொன்னது…

//பார்பனர்களின் இராஜ குருவான ஜெயேந்திர சரஸ்வதி//

குட் ஜோக். தங்களின் பொதுபுத்தி நன்றாக தெரிகிறது.

அப்போது பார்பனர் அல்லாத மக்களுடைய ராஜகுரு யாரு

//அண்மையில் ஒய்ஜிமகேந்திரனுக்கு பாராட்டுவிழா நடந்தது, 50 ஆண்டுகளாக நாடகத் துரையில் கலைப்பணிகளுக்காக எடுக்கப்பட்ட விழாவாம்,//

சினிமாவில் நடித்து 50 வருடங்கள் கொண்டாடுவதை விட நாடகத்தில் நடித்து 50 வருட விழாவை கொண்டாடியதில் கோவியார் என்ன குற்றம் காண்கிறாரோ.

//நாடகத்துறையில் கிரேசிமோகன், மெளலி மற்றும் விசு போன்ற பார்பனர்கள் இருக்க, அவர்களை விட மகேந்திரன் என்ன சாதனை செய்தார் என்றே தெரியவில்லை. //

நாரதர் கலகம் நன்மையில் முடிய வேண்டும் . ஆனால் அவர்களுக்கு விருது கொடுத்தாலும் பார்பனர்களுக்கு விருது கொடுகிறார்கள் என்று சொல்லாமலா இருப்பீர்கள் .

கோவியார் எழுதுவதை படிக்கும் போது பார்பனர்களுக்கு விருது கொடுப்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்பது மட்டும் தான் தெரிகிறது. அவர் பார்பனர்களை எதிர்ப்பதில் பார்ப்பனீயவாதி

பனித்துளி சங்கர் சொன்னது…

இப்பொழுதெல்லாம் நன்றாகத்தான் சிந்திக்கின்றோம் ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டும் ஏனோ தூங்கிவிடுகிறோம் . மிகவும் பயங்கரமான அலசல்தான் பகிர்வுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//குட் ஜோக். தங்களின் பொதுபுத்தி நன்றாக தெரிகிறது.

அப்போது பார்பனர் அல்லாத மக்களுடைய ராஜகுரு யாரு//

ஓ.....பார்பனர்கள் அல்லாதவருக்கும் அவருதான் இராச குருவா ?

Kesavan சொன்னது…

//ஓ.....பார்பனர்கள் அல்லாதவருக்கும் அவருதான் இராச குருவா ? //
அதை பத்தி நீங்க தான் சொல்லணும். உங்களுக்கு தான் பார்பனர்களை பற்றி , பார்பனர்களை விட நன்றாக தெரிகிறதே :)

Barari சொன்னது…

கருணாநிதி பார்ப்பனர்களுக்கு எப்படித்தான் சோப்பு போட்டாலும் அவர்களை சார்ந்தவர்களுக்கு (அவால்களுக்கு)ஏதாவது பிரச்சினை என்றாள் அவாள் அவாள் பக்கமே சாய்ந்து விடுவார்கள்.கருணாநிதி அப்போது சூத்திரனாகி விடுவான்

Matra சொன்னது…

//எஸ்வீசேகர் நாடகக் கலைஞர் என்பது சரிதான், அவர் நாடகத்தின் மூலமாக நகைச்சுவை என்ற பெயரில் செய்த கிராமிய விமர்சனங்கள் சகித்துக் கொள்ள முடியாதவை //

அப்பொ DK/Periyar, ஹிந்துக்களை காட்டுமிராண்டிகள் etc etc என்று அசிங்மாக‌ விமர்சனம் செய்தது ?

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

நல்ல கேள்வி! பெரியார் / தி.க அது மாதிரி செய்தற்கு காரணமே கிராமத்தான் என்ற போர்வையில் தீண்டாமையை பார்பனர்கள் வளர்த்தது. கிராமத்தான் என்றாலே முட்டாள்கள் என்று சொன்னது. இல்லாத சாமியை / கடவுளை ஒழித்தால் பார்பனர்கள் கோட்டம் அடங்கும். தீண்டாமையும் ஒழியும். பெரியாரை முழுதுமாக படியுங்கள் அப்புறம் பினாத்துங்கள்.

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

நல்ல கேள்வி! பெரியார் / தி.க அது மாதிரி செய்தற்கு காரணமே கிராமத்தான் என்ற போர்வையில் தீண்டாமையை பார்பனர்கள் வளர்த்தது. கிராமத்தான் என்றாலே முட்டாள்கள் என்று சொன்னது. இல்லாத சாமியை / கடவுளை ஒழித்தால் பார்பனர்கள் கோட்டம் அடங்கும். தீண்டாமையும் ஒழியும். பெரியாரை முழுதுமாக படியுங்கள் அப்புறம் பினாத்துங்கள்.

kavirimainthan சொன்னது…

கோவி.கண்ணன்,

கொஞ்சம் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம் -
---------------------------------------------------------------
." தமிழகத்தில் பார்பனர்கள் நுழைய முடியாத ஒரே கட்சி திக மட்டுமே,

பெரியாருக்கு பிறகான திகவின் ஒரே கொள்கையும் பார்பன எதிர்ப்பு

என்பதால் அந்த நிலை நீடிக்கிறது என்றாலும் கூட தேர்தலில் நிற்காத

ஒரே கட்சி என்பதால் திகவின் பார்பன எதிர்ப்பு அல்லது

பார்பனர்களின் திக எதிர்ப்பு நிலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை."
-----------------------------------------------------
உங்களின் இந்தக்கூற்று சரியா?

சட்டமன்றத்திலேயே தன்னை " நான் பாப்பாத்தி தான்"
என்று சொல்லிக்கொண்ட ஜெயலலிதாவிற்கு
தாசானுதாசனாக - மானமிகு
தமிழர் தலைவர் வீரமணி செயல்படவில்லை ?

பாப்பாத்தி ஜெயலலிதாவிற்கு மானம்மிகு தமிழர் தலைவர் -

கொள்கையை விடாத செம்மல் வீரமணி
"சமூக நீதி காத்த வீராங்கனை"
என்று பட்டம் கொடுக்கவில்லை ?

யார் பதவிக்கு வந்தாலும் ஜால்ரா போடுவதையே

கொள்கையாக்கி விட்ட வீரமணி வசம் இருப்பது
தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகமா ?

பெரியார் சேர்த்த சொத்துக்கள் மட்டுமே
வீரமணியிடம் உள்ளது.பெரியார் உருவாக்கிய
திராவிடர் கழகம் இன்று
இல்லை - இல்லை - இல்லவே இல்லை !

அதெப்படி - உங்கள் வசதிக்கு சரித்திரத்தையே
மாற்றுகின்றீர்கள் !

ஜெயலலிதாவை வீரமணி
ஆதரித்ததே இல்லை என்று கூறப்போகிறீர்களா
அல்லது ஜெயலலிதா
பிராம்மணர் அல்ல எனறு கூறப்போகிறீர்களா ? -

காவிரிமைந்தன்
http://www.vimarisanam.wordpress.com

kavirimainthan சொன்னது…

கோவி.கண்ணன்,

கொஞ்சம் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் பார்ப்போம் -
---------------------------------------------------------------
." தமிழகத்தில் பார்பனர்கள் நுழைய முடியாத ஒரே கட்சி திக மட்டுமே,

பெரியாருக்கு பிறகான திகவின் ஒரே கொள்கையும் பார்பன எதிர்ப்பு

என்பதால் அந்த நிலை நீடிக்கிறது என்றாலும் கூட தேர்தலில் நிற்காத

ஒரே கட்சி என்பதால் திகவின் பார்பன எதிர்ப்பு அல்லது

பார்பனர்களின் திக எதிர்ப்பு நிலையில் மாற்றங்கள் ஏற்படவில்லை."
-----------------------------------------------------
உங்களின் இந்தக்கூற்று சரியா?

சட்டமன்றத்திலேயே தன்னை " நான் பாப்பாத்தி தான்"
என்று சொல்லிக்கொண்ட ஜெயலலிதாவிற்கு
தாசானுதாசனாக - மானமிகு
தமிழர் தலைவர் வீரமணி செயல்படவில்லை ?

பாப்பாத்தி ஜெயலலிதாவிற்கு மானம்மிகு தமிழர் தலைவர் -

கொள்கையை விடாத செம்மல் வீரமணி
"சமூக நீதி காத்த வீராங்கனை"
என்று பட்டம் கொடுக்கவில்லை ?

யார் பதவிக்கு வந்தாலும் ஜால்ரா போடுவதையே

கொள்கையாக்கி விட்ட வீரமணி வசம் இருப்பது
தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகமா ?

பெரியார் சேர்த்த சொத்துக்கள் மட்டுமே
வீரமணியிடம் உள்ளது.பெரியார் உருவாக்கிய
திராவிடர் கழகம் இன்று
இல்லை - இல்லை - இல்லவே இல்லை !

அதெப்படி - உங்கள் வசதிக்கு சரித்திரத்தையே
மாற்றுகின்றீர்கள் !

ஜெயலலிதாவை வீரமணி
ஆதரித்ததே இல்லை என்று கூறப்போகிறீர்களா
அல்லது ஜெயலலிதா
பிராம்மணர் அல்ல எனறு கூறப்போகிறீர்களா ? -

காவிரிமைந்தன்
http://www.vimarisanam.wordpress.com

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெயலலிதாவை வீரமணி
ஆதரித்ததே இல்லை என்று கூறப்போகிறீர்களா
அல்லது ஜெயலலிதா
பிராம்மணர் அல்ல எனறு கூறப்போகிறீர்களா ? -

காவிரிமைந்தன்
http://www.vimarisanam.wordpress.com//
//
வீரமணி இல்லை வெறும் மணி இந்து/பார்பன எதிர்ப்பை மட்டுமே கொள்கையாக வைத்திருக்கிறார் என்பதைத்தான் பச்சையாகச் சொல்லாமல் நாசுக்காகச் சொன்னேன்.

sriram சொன்னது…

கண்மூடித்தனமான Anti - Brahmin வரிகள் கொண்ட கீழ்த்தரமான எண்ண வெளிப்பாடு கோவி. கண்ணன்.

என்ன சொல்ல வருகிறீர்கள்? பிராமண குலத்தில் பிறந்த எவருக்கும் பாராட்டோ விழாவோ இருக்கக் கூடாதுன்னா?

50 வருஷம் சினிமாத்துறையில் இருந்ததுக்காக கமலஹாசன் என்கிற ஐயங்காருக்கு விழா எடுத்தாங்களே? அப்போ ஏன் எழுதல??

50 வருஷம் அரசியல்ல இருந்ததுக்காக கருணாநிதிக்கு விழா எடுத்தாங்களே - அப்போ ஏன் எழுதல??

சேகர் - 5600 முறை மேடை கண்டவர் என்கிற குறிப்புக்கு எதிரான உங்கள் கேள்வி / வாதம் நியாயமானது. Every other day நாடகம் போட்டிருந்தால் மட்டுமே அது சாத்தியம். கிராமத்தான்களை அவர் கிண்டல் அடித்ததும் உண்மைதான் ஆனால் பிராமணர் அல்லாதோரை அவர் கிண்டல் பண்ணியதை நான் கண்டதில்லை.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கோவி.கண்ணன் சொன்னது…

//கிராமத்தான்களை அவர் கிண்டல் அடித்ததும் உண்மைதான் ஆனால் பிராமணர் அல்லாதோரை அவர் கிண்டல் பண்ணியதை நான் கண்டதில்லை.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

கிராமத்தான்கள் என்கிற உங்கள் தொனிமட்டமாக இருக்கும் போது நான் பார்பனர் குறித்து எழுதியது உங்களுக்கு பொங்கி இருக்கக் கூடாது. கிரமத்தினர்கள் பார்பனர்களா ? அவர்களும் பார்பனர்கள் அல்லாதவர்கள் தானே. ஓ மனு வழிகாட்டுதல் படி அவர்கள் சதுர்வருணத்தில் இடம் பிடிக்காத சண்டாளப் பிரிவு என்னும் ஐந்தாம் பிரிவு என்கிறீர்களோ ?

sriram சொன்னது…

//கிராமத்தான்கள் என்கிற உங்கள் தொனிமட்டமாக இருக்கும் போது நான் பார்பனர் குறித்து எழுதியது உங்களுக்கு பொங்கி இருக்கக் கூடாது. //

WHAT?? This is getting CRAZY. நானெப்போ கிராமத்தான்கள் என்றால் கேவலம் என்று சொன்னேன். சேகர் கிண்டலடித்தது உண்மை என்று மட்டுமே சொன்னேன். In fact that is one of the few points where I agreed with you.

”பொதுப் புத்தியை” பதிவில் மட்டுமல்லாமல் பின்னூட்டங்களின் பதில்களிலும் காட்டுகிறீர்கள். கேட்ட கேள்விகளுக்கு பதிலெங்கே??

(கோவி என்ற நண்பருக்கு மைனஸ் அவர் கருத்துக்களுக்கு) என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கோவி.கண்ணன் சொன்னது…

//WHAT?? This is getting CRAZY. நானெப்போ கிராமத்தான்கள் என்றால் கேவலம் என்று சொன்னேன். சேகர் கிண்டலடித்தது உண்மை என்று மட்டுமே சொன்னேன். In fact that is one of the few points where I agreed with you.

”பொதுப் புத்தியை” பதிவில் மட்டுமல்லாமல் பின்னூட்டங்களின் பதில்களிலும் காட்டுகிறீர்கள். கேட்ட கேள்விகளுக்கு பதிலெங்கே??

(கோவி என்ற நண்பருக்கு மைனஸ் அவர் கருத்துக்களுக்கு) என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

கிரமத்தான்கள் என்று சொல்லிவிட்டாலே அதன் பிறகு தனியாக கேவலம் என்று சொல்லத் தேவை இல்லை. 'கிராமத்தினர்' என மரியாதை விகுதியிடன் உங்களால் சொல்லும் அளவுக்குக் கூட அவர்களைப் பற்றிய ஒரு உயர்வான எண்ணம் உங்களுக்கு இல்லாமல் 'கிரமத்தான்கள்' என்று எஸ்வீசேகர் பானியிலேயே பேசுகிறீர்கள்.

//”பொதுப் புத்தியை” பதிவில் மட்டுமல்லாமல் பின்னூட்டங்களின் பதில்களிலும் காட்டுகிறீர்கள். கேட்ட கேள்விகளுக்கு பதிலெங்கே??//

உங்கள் கேள்விக்கு பதிவிலேயே பதில் இருக்கு.

//கண்மூடித்தனமான Anti - Brahmin வரிகள் கொண்ட கீழ்த்தரமான எண்ண வெளிப்பாடு கோவி. கண்ணன்.

என்ன சொல்ல வருகிறீர்கள்? பிராமண குலத்தில் பிறந்த எவருக்கும் பாராட்டோ விழாவோ இருக்கக் கூடாதுன்னா?//

நான் பிராமணர்கள் குறித்து எதுவும் எழுதவில்லை. பார்பனர்கள் குறித்து தான் எழுதி இருக்கிறேன். எனக்கு தெரிந்து எந்த பார்பானும் பிராமணன் கிடையாது. பிறகு எங்கே குலம் குட்டை ? நான் பார்பனர்களுக்கு பாராட்டுவிழா நடத்தக் கூடாது என்று சுட்டிய வரிகளைக் காட்டவும்.

//
50 வருஷம் சினிமாத்துறையில் இருந்ததுக்காக கமலஹாசன் என்கிற ஐயங்காருக்கு விழா எடுத்தாங்களே? அப்போ ஏன் எழுதல??//

கமலஹாசன் தம்மை பார்பனர் என்று அறிவித்துக் கொள்ளவில்லை. எனவே உங்கள் கேள்வியை நிராகரிக்கிறேன்.

//50 வருஷம் அரசியல்ல இருந்ததுக்காக கருணாநிதிக்கு விழா எடுத்தாங்களே - அப்போ ஏன் எழுதல??//

நீங்க எழுதுங்க நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

sriram சொன்னது…

//கமலஹாசன் தம்மை பார்பனர் என்று அறிவித்துக் கொள்ளவில்லை. எனவே உங்கள் கேள்வியை நிராகரிக்கிறேன்.//

Y.G.Mahendra தன்னை பிராமின் என்று எங்காவது சொன்னாரா? இல்லை பிராமின்கள் மத்தவங்களை விட ஒசந்தவங்கன்னு சொன்னாரா???

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

கோவி.கண்ணன் சொன்னது…

//Y.G.Mahendra தன்னை பிராமின் என்று எங்காவது சொன்னாரா? //

அவரு பார்பனர் இல்லையா ?, பார்பனர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் பள்ளியை நடத்துபவர் பார்பனர் அல்லாதவரா ? அல்லது பொதுவானவரா ?

//இல்லை பிராமின்கள் மத்தவங்களை விட ஒசந்தவங்கன்னு சொன்னாரா???//

அப்படி சொன்ன பிறகு தான் அதுபற்றிப் பேசனுமா ? அவ்வ்வ், உங்களுக்கு அவரு மேல ஏன் அவ்வளவு காண்டு ?

கிராமத்தினரை கிராமத்தான் என்று விமர்சிக்கும் ஒங்களுக்கு பார்பனர்கள் குறித்து பொங்குவது கூட சாதிப் பாசம் தானே சார்.

Kesavan சொன்னது…

//கிராமத்தான்கள் என்கிற உங்கள் தொனிமட்டமாக இருக்கும் போது நான் பார்பனர் குறித்து எழுதியது உங்களுக்கு பொங்கி இருக்கக் கூடாது.//

கிராமத்தில் பிராமணர்கள் இல்லையா . அப்படிப்பட்ட பிரமனர்களையும் கிராமத்தான் என்று தான் சொல்வார்கள் . கிராமத்தான் என்பது பொது வார்த்தை. ஒரு சிலர் வீட்டில் உள்ள பெரியவர்களை கூட பெயர் சொல்லி தான் கூப்பிடுவார்கள் . அப்படி என்றால் அவர்கள் மட்டமா . உங்கள் நினைப்பு தவறாக இருந்தால் மற்றவர்கள் சொல்வதும் தவறாக தான் தெரியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Kesavan has left a new comment on your post "பார்பனர்களைப் தொடர்ந்து பாராட்டும் முதல்வர் !":

//கிராமத்தான்கள் என்கிற உங்கள் தொனிமட்டமாக இருக்கும் போது நான் பார்பனர் குறித்து எழுதியது உங்களுக்கு பொங்கி இருக்கக் கூடாது.//

கிராமத்தில் பிராமணர்கள் இல்லையா . அப்படிப்பட்ட பிரமனர்களையும் கிராமத்தான் என்று தான் சொல்வார்கள் . கிராமத்தான் என்பது பொது வார்த்தை. ஒரு சிலர் வீட்டில் உள்ள பெரியவர்களை கூட பெயர் சொல்லி தான் கூப்பிடுவார்கள் . அப்படி என்றால் அவர்கள் மட்டமா . உங்கள் நினைப்பு தவறாக இருந்தால் மற்றவர்கள் சொல்வதும் தவறாக தான் தெரியும். //

பொதுவாக சப்பைக் கட்டுகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களுக்கு சொறிந்துவிடுபவர்கள் என்று சொல்லுவார்கள். நீ நல்லா செய்கிறாய் தம்பி.

Kesavan சொன்னது…

//பொதுவாக சப்பைக் கட்டுகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களுக்கு சொறிந்துவிடுபவர்கள் என்று சொல்லுவார்கள். நீ நல்லா செய்கிறாய் தம்பி. //

உங்களிடம் இருந்து கற்று கொண்டது தான் அண்ணா.

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

//பொதுவாக சப்பைக் கட்டுகளுக்கு முட்டுக் கொடுப்பவர்களுக்கு சொறிந்துவிடுபவர்கள் என்று சொல்லுவார்கள். நீ நல்லா செய்கிறாய் தம்பி. //

உங்களிடம் இருந்து கற்று கொண்டது தான் அண்ணா.//

தம்பி, "தான் ஆடாவிட்டாலும் பூணூல் ஆடும்" என்று புது பழமொழி அறிமுகப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்

மணிஜி சொன்னது…

காரணம் ரொம்ப சிம்பிள்.. வியாபாரந்தான் முக்கியம். அவாளை இழுக்கணும் ஓய்...இல்லைன்னா கல்லா தேறாது..(விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன்)

மணிஜி சொன்னது…

என்ன எழவை பண்ணித்தொலைக்கிறது?

எங்க போனாலும் இருந்து தொலைக்கிறார்கள். எனக்கு தெரிஞ்சு ஒருத்தன் கட்டண கழிப்பிடம் கூட நடத்துறான்..

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிஜீ...... said...

என்ன எழவை பண்ணித்தொலைக்கிறது?

எங்க போனாலும் இருந்து தொலைக்கிறார்கள். எனக்கு தெரிஞ்சு ஒருத்தன் கட்டண கழிப்பிடம் கூட நடத்துறான்.//

மணிஜீ,

"இருந்து" தொலைக்கிற இடத்தில் கட்டண கழிப்பிடம் நடத்துவது நல்ல பிசினஸ் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிஜீ...... said...

காரணம் ரொம்ப சிம்பிள்.. வியாபாரந்தான் முக்கியம். அவாளை இழுக்கணும் ஓய்...இல்லைன்னா கல்லா தேறாது..(விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன்)//

தண்டோரா சார்,

நாடகம் வழியாக எஸ்வீசேகர் கொடுத்த மெசேஜ் என்ன ? மேல் தட்டு வர்கத்திற்கு நகைச்சுவை என்ற பெயரில் கீழ்தட்டு வர்கத்தை கிண்டல் அடித்தது தானே. அதற்கெல்லாம் பாராட்டுவிழான்னு போது ....

Kesavan சொன்னது…

அவராவது நையாண்டி செய்கிறார் . சிலர் தெருவுக்கு தெரு ஒழி பெருக்கி வைத்து காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளை சொல்லி அதற்கு பாராட்டு விழா வைத்து கொள்கின்றார்கள் . அதற்க்கு என்ன சொல்வது

கோவி.கண்ணன் சொன்னது…

// Kesavan said...

அவராவது நையாண்டி செய்கிறார் . சிலர் தெருவுக்கு தெரு ஒழி பெருக்கி வைத்து காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளை சொல்லி அதற்கு பாராட்டு விழா வைத்து கொள்கின்றார்கள் . அதற்க்கு என்ன சொல்வது//

பூணூல், பாப்பான், குடுமி, பருப்பு சாதம் என்று எழுதினால் மட்டும் இழிவு படுத்துகிறார்கள் என்று மூக்கு சிந்துகிறீர்கள், எஸ்வீசேகர் செய்வது நையாண்டியா ? ஒலிபெருக்கி வைக்கிறர்களைப் போய் கேளுங்க, நானா வந்து கையைப் பிடிச்சு தடுத்தேன்

மணிஜி சொன்னது…

//பூணூல், பாப்பான், குடுமி, பருப்பு சாதம் என்று எழுதினால் மட்டும் இழிவு படுத்துகிறார்கள் என்று மூக்கு சிந்துகிறீர்கள், எஸ்வீசேகர் செய்வது நையாண்டியா ? ஒலிபெருக்கி வைக்கிறர்களைப் போய் கேளுங்க, நானா வந்து கையைப் பிடிச்சு தடுத்தேன்//

ஒரு கர்சீஃப் ப்ளீஸ்

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிஜீ...... said...

மகேந்திரன்னு இருக்கணுமோ? எல்லா இழவும் ஒன்னுதான் இல்லை கோவி.//

மகேந்திரன் நாடகமெல்லாம் நடித்திருக்காருன்னு பேப்பரைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஆனால் அவரது கண்றாவிக் காமடி(என்று சொல்லப்படுவதை) திரையில் பார்த்ததோடு சரி.

மணிஜி சொன்னது…

மேல்தட்டு வர்க்கம்னா எதுங்க? மு.க, திருமா, ராம்தாசு, வீரமணியா? எனக்கு தெரிஞ்சு ரெண்டு வர்க்கம்தான்.. ஒன்னி இருக்கிறவங்க, அப்புறம் இல்லாதவங்க..இன்னும் எத்தனை நாள்தான் இந்த இத்து போன மேட்டரை எழுதி கிட்டேயிருப்பீங்க? தெற்கெ போய் அங்கன இருக்கிற ஆதிக்க சாதியை சாடுங்க சார்..அதுக்கு முட்டியில கஞ்சி வேணும் மக்கா..சும்மா பார்பான் புண்ணாக்குன்னு...

மணிஜி சொன்னது…

சும்மாவா 1000 இடுகைகள் போட்டிருக்கீங்க? கிட்டதட்ட ஒரு சமுதாய புரட்சியெ ஏற்படுத்தி விட்டீர்கள்..பார்க்காத ஒரு ஆளை பற்றியே இவ்வளவுன்னா?

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிஜீ...... said...

மேல்தட்டு வர்க்கம்னா எதுங்க? மு.க, திருமா, ராம்தாசு, வீரமணியா? எனக்கு தெரிஞ்சு ரெண்டு வர்க்கம்தான்.. ஒன்னி இருக்கிறவங்க, அப்புறம் இல்லாதவங்க..இன்னும் எத்தனை நாள்தான் இந்த இத்து போன மேட்டரை எழுதி கிட்டேயிருப்பீங்க? தெற்கெ போய் அங்கன இருக்கிற ஆதிக்க சாதியை சாடுங்க சார்..அதுக்கு முட்டியில கஞ்சி வேணும் மக்கா..சும்மா பார்பான் புண்ணாக்குன்னு...//

இத்துப் போன மேட்டர் என்று ஒருவரும் சலிக்காதவரை எழுதினால் தவறு இல்லை என்று நினைக்கிறேன்.

எங்கோ படித்த ஞாபகம் "திருடனை திட்டினால் முன்னாள் திருடனுக்கு கோபம் வரக்கூடாது" அது தான் திருந்தியதன் அடையாளம் என்று

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிஜீ...... said...

சும்மாவா 1000 இடுகைகள் போட்டிருக்கீங்க? கிட்டதட்ட ஒரு சமுதாய புரட்சியெ ஏற்படுத்தி விட்டீர்கள்..பார்க்காத ஒரு ஆளை பற்றியே இவ்வளவுன்னா?//

தண்டோரா சார், நான் நீங்கள் அறிவு சார்ந்து எதுவும் எழுதவில்லை என்று ஒருபோதும் கண்டுபிடித்தோ, அலுத்துக் கொண்டதோ விமர்சனமோ செய்ததில்லை என்னும் போது ஏன் இந்த வன்மம் ?

மணிஜி சொன்னது…

பொழுது போக்கையும்,மெஸேஜையும் போட்டு குழப்பிக்காதீங்க கோவி.. சும்மா ஒரு மெம்போக்கான விமர்சனம் இது. சும்மா அறிவுரை சொன்னா ,எந்த ஜாதிக்காரனுக்கும் பிடிக்காது.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிஜீ...... said...

பொழுது போக்கையும்,மெஸேஜையும் போட்டு குழப்பிக்காதீங்க கோவி.. சும்மா ஒரு மெம்போக்கான விமர்சனம் இது. சும்மா அறிவுரை சொன்னா ,எந்த ஜாதிக்காரனுக்கும் பிடிக்காது.//

இலக்கியம் கலை இவற்றின் இன்றைய வடிவம் வெறும் பொழுது போக்காக மட்டும் இருந்ததென்றால் எம்ஜிஆர் உள்ளிட்டவர்கள் முதல்வர் ஆகி இருக்க முடியாது. கலை இலக்கியத்தின் வழியாகத்தான் மக்களைச் சென்றடையும் கருத்துக்களைச் சொல்லி வந்தார்கள். கிராமத்தினர் என்றால் நகைக்கத்தக்கவர்கள் என்கிற மட்டமான நகைச்சுவையை எஸ்வீசேகர் செய்யவில்லை என்றால் நான் இது பற்றி எழுதப் போவதே இல்லை. பொழுது போக்குத்தான் அரசியல் ஆகிறது. நானும் பொழுது போக்குக்குத்தான் எழுதுகிறேன் என்றால் நீங்கள் ஏன் அதில் பார்பன அரசியலை நான் பேசுவதாக நினைக்க வேண்டும். அதை எதிர்ப்பதற்கு உங்களுக்கான தேவை என்ன என்றெல்லாம் நீங்கள் சிந்தித்துப்பாருங்கள்.

மணிஜி சொன்னது…

//மகேந்திரன் நாடகமெல்லாம் நடித்திருக்காருன்னு பேப்பரைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஆனால் அவரது கண்றாவிக் காமடி(என்று சொல்லப்படுவதை) திரையில் பார்த்ததோடு சரி.//

இதுக்கு என்ன அர்த்தம் சார்? நீங்கள் பார்த்தேயிராத ஒரு விஷயத்தை விமர்சனம் செய்கிறீர்கள். அது துவேஷம்தானே...வாழ்க உங்கள் பொது அறிவு..தொடருட்டும் உங்கள் சமுதாயப் பிணி..

இன்னொரு வருத்தம்.. நீங்கள் நாளைய திருடர்களை உருவாக்குகிறீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//இதுக்கு என்ன அர்த்தம் சார்? நீங்கள் பார்த்தேயிராத ஒரு விஷயத்தை விமர்சனம் செய்கிறீர்கள். அது துவேஷம்தானே...வாழ்க உங்கள் பொது அறிவு..தொடருட்டும் உங்கள் சமுதாயப் பிணி..

இன்னொரு வருத்தம்.. நீங்கள் நாளைய திருடர்களை உருவாக்குகிறீர்கள்//

அரைகுறை புரிதல், நான் நாடக விமர்சனம் குறித்து எழுதி இருப்பது எஸ்வீசேகரின் நாடகங்கள். ஒய்ஜிமகேந்திரனை விமர்சனம் செய்ததுள்ளது அவர் தனக்குத்தானே நடத்திக் கொண்ட பாராட்டுவிழாவை.

மணிஜி சொன்னது…

கோவி சார் அவாளை மாற்றி விடலாம். நிச்சயம் உங்களை மாற்றவே முடியாது. தேவையும் இல்லை. (நானும் பொழுது போக்குக்குத்தான் எழுதுகிறேன் என்றால் நீங்கள் ஏன் அதில் பார்பன அரசியலை நான் பேசுவதாக நினைக்க வேண்டும்)ஒரு முறை உங்கள் தலைப்பை பாருங்கள். நீங்களும் கல்லாதான் கட்டுகிறீர்கள். எது சந்தையில் விலை போகும் என்று தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..

மணிஜி சொன்னது…

மன்னிக்கவும்.. அரையும் ,குறையுமாக எழுதியிருப்பதை அப்படியே புரிந்து கொண்டதற்கு...

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிஜீ...... said...

மன்னிக்கவும்.. அரையும் ,குறையுமாக எழுதியிருப்பதை அப்படியே புரிந்து கொண்டதற்கு...//

உங்களுக்கு நக்கல் அடிக்க சரியாக வரவில்லை. எஸ்வீசேகரின் நாடகங்களை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிஜீ...... said...

//பூணூல், பாப்பான், குடுமி, பருப்பு சாதம் என்று எழுதினால் மட்டும் இழிவு படுத்துகிறார்கள் என்று மூக்கு சிந்துகிறீர்கள், எஸ்வீசேகர் செய்வது நையாண்டியா ? ஒலிபெருக்கி வைக்கிறர்களைப் போய் கேளுங்க, நானா வந்து கையைப் பிடிச்சு தடுத்தேன்//

ஒரு கர்சீஃப் ப்ளீஸ்//

தம்பி கேசவன் வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

////மணிஜீ...... said...

கோவி சார் அவாளை மாற்றி விடலாம்.//

அவர்கள் இன்னும் மாறவில்லை என்று ஒப்புதல் கொடுத்ததற்கு நன்றி.

//ஒரு முறை உங்கள் தலைப்பை பாருங்கள். //
நான் தான் வெளிப்படையாகவே எழுதுகிறேனே. இதில் மறைத்தல் என்று எங்கே இருக்கிறது.

//நீங்களும் கல்லாதான் கட்டுகிறீர்கள். எது சந்தையில் விலை போகும் என்று தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்..//

பார்பனர்களை இன்றும் பொதுச் சமூகம் எதிர்க்கும் அளவில் இருப்பதால் பார்பன ஆதிக்கம் இன்று இருக்கிறது என்று சம்பந்தப்பட்டவர்கள் மகிழலாமே சார்.

மணிஜி சொன்னது…

//பார்பனர்களை இன்றும் பொதுச் சமூகம் எதிர்க்கும் அளவில் இருப்பதால் பார்பன ஆதிக்கம் இன்று இருக்கிறது என்று சம்பந்தப்பட்டவர்கள் மகிழலாமே சார்.//

உங்களால் முடிந்த அளவிற்கு புறக்கணிக்கலாமே..(எனக்கு 500000 ரூபாய் சம்பளம் கொடுத்தால் கூட நான் வீரமணியிடம் வேலை செய்ய மாட்டேன்)

மணிஜி சொன்னது…

//உங்களுக்கு நக்கல் அடிக்க சரியாக வரவில்லை. எஸ்வீசேகரின் நாடகங்களை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்//

உண்மைதான்..உங்கள் அளவிற்கு வரவில்லைதான்.(வேண்டாம் என்றொரு காரணமும் உண்டு)

கோவி.கண்ணன் சொன்னது…

// மணிஜீ...... said...
உங்களால் முடிந்த அளவிற்கு புறக்கணிக்கலாமே..(எனக்கு 500000 ரூபாய் சம்பளம் கொடுத்தால் கூட நான் வீரமணியிடம் வேலை செய்ய மாட்டேன்)//

நான் வீரமணிக்காக வேலைக்கு ஆள் எடுக்கவில்லை. நானும் வேலை செய்யவில்லை. உங்களை அவ்வாறு அழைப்பவர்களிடம் முடியாது என்று சொல்லுங்கள். இங்கிட்டு ஏன் வீரமணியை இழுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. எனக்கு வீரமணி வெறும் மணி தான் என்று சொல்லிக் கொள்கிறேன்

மணிஜி சொன்னது…

//உங்களால் முடிந்த அளவிற்கு புறக்கணிக்கலாமே..(எனக்கு 500000 ரூபாய் சம்பளம் கொடுத்தால் கூட நான் வீரமணியிடம் வேலை செய்ய மாட்டேன்)//

இந்த பதில் இன்னொரு பெரிய வெங்காயத்திற்கு

மணிஜி சொன்னது…

//நான் வீரமணிக்காக வேலைக்கு ஆள் எடுக்கவில்லை. நானும் வேலை செய்யவில்லை. உங்களை அவ்வாறு அழைப்பவர்களிடம் முடியாது என்று சொல்லுங்கள். இங்கிட்டு ஏன் வீரமணியை இழுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. எனக்கு வீரமணி வெறும் மணி தான் என்று சொல்லிக் கொள்கிறேன்//

வெங்காயம்...என் அந்த பின்னூட்டதில் எந்த அர்த்தமோ, நக்கலோ இல்லை யென்று தெரிவித்து கொள்கிறேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிஜீ...... said...

வெங்காயம்...என் அந்த பின்னூட்டதில் எந்த அர்த்தமோ, நக்கலோ இல்லை யென்று தெரிவித்து கொள்கிறேன்..//

வெங்காயம்...யாருன்னு தெரியல. கர்சிப் வைத்திருப்பவர்களுக்கு எதிரியா நண்பனா ?
:)

Kesavan சொன்னது…

//அரைகுறை புரிதல், நான் நாடக விமர்சனம் குறித்து எழுதி இருப்பது எஸ்வீசேகரின் நாடகங்கள். ஒய்ஜிமகேந்திரனை விமர்சனம் செய்ததுள்ளது அவர் தனக்குத்தானே நடத்திக் கொண்ட பாராட்டுவிழாவை //

உங்களுடைய தானை தலைவர் செய்துகொள்ளாத பாராட்டு விழாவா :) சினிமாவை விட நாடகம் நடத்துவது மிகவும் கஷ்டமான வேலை. சினிமாவில் நடிபவர்கள் பாராட்டு விழா நடத்தும் பொது சொல்லாதவர்கள் இவர்களை பற்றி குறை கூறுவது அருகதை இல்லாதவர்கள். கமல் தன்னை பாபனர் என்று சொல்ல வில்லை என்கிறீர்கள் . ஆனால் அவர் எடுத்த படங்களில் பார்பனர்களின் கதை தான் அதிகமாக இருக்கும் . என் இன்றைய சினிமா உலகில் பார்பனர்களை கேலியாக தான் சித்தரிகிரார்கள். அதை பற்றி நீங்கள் சொல்ல மாடீர்கள் . என் என்றால் நீங்கள் பார்பனர்களை எதிர்ப்பதில் பார்பநீயவாதி . பார்பனர்களை வைத்து சினிமாவில் கல்லா கட்டியவர்கள் ஏறலும் ஒய்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்களுடைய தானை தலைவர் செய்துகொள்ளாத பாராட்டு விழாவா :)//

இப்போதைக்கு பார்பனர்களுக்கு கருணாநிதிதான் தலைவர். பாராட்டுவிழாவில் தவறாது கலந்து கொள்கிறார்

// சினிமாவை விட நாடகம் நடத்துவது மிகவும் கஷ்டமான வேலை. ///
நாடகம் எளிதானது என்று நான் சொல்லவில்லை. கேவலமான நகைச்சுவையைத்தான் குறிப்பிட்டேன்

//சினிமாவில் நடிபவர்கள் பாராட்டு விழா நடத்தும் பொது சொல்லாதவர்கள் இவர்களை பற்றி குறை கூறுவது அருகதை இல்லாதவர்கள்.//

நீங்க குறைச் சொல்லுங்க நான் வேண்டாம் என்று சொல்லவில்லையே.

//கமல் தன்னை பாபனர் என்று சொல்ல வில்லை என்கிறீர்கள் . ஆனால் அவர் எடுத்த படங்களில் பார்பனர்களின் கதை தான் அதிகமாக இருக்கும் .//

கமல் அரை லூசு வேடத்திலும் கூட சில படங்களில் நடித்திருக்கிறார்

// என் இன்றைய சினிமா உலகில் பார்பனர்களை கேலியாக தான் சித்தரிகிரார்கள். அதை பற்றி நீங்கள் சொல்ல மாடீர்கள் . //

அடடா....இஸ்லாமியர் என்றாலே கள்ளக்கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் என்று கூடத்தான் எடுக்கிறார்கள்.

Kesavan சொன்னது…

//அடடா....இஸ்லாமியர் என்றாலே கள்ளக்கடத்தல்காரர்கள், தீவிரவாதிகள் என்று கூடத்தான் எடுக்கிறார்கள். //

ஆமாம் அவர்களுக்கு தமிழ் தீவரவாதிகளை பற்றி தெரிவதில்லை

Kesavan சொன்னது…

// கேவலமான நகைச்சுவையைத்தான் குறிப்பிட்டேன் //

எதுவுமே எடுத்துகொள்ளும் மனோ பாவத்தை பொருத்து இருக்கு. வைரமுத்துவின் கவிதைகளில் இல்லாத ஆபாசமா . நாடக துறையை விட சினிமா உலகம் தான் மக்களை அதுவும் பாமர மக்களை விரைவில் சென்றடைகிறது. அந்த சினிமாவில் இல்லாத ஆபாசமா .

priyamudanprabu சொன்னது…

வலைப்பதிவின் டெண்டுல்கர் எ
////////////
எங்க தலை பெயரை தவறாக பயன்படுதியதுக்கு கண்டனங்கள்

ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது…

திரு கோவி.கண்ணன் அவர்களுக்கு:

உங்களது ஈமெயில் விலாசம் இல்லாததால் இந்த இடுகையில் எனது எண்ணத்தை பதிவு செய்கிறேன்.

////அடுத்து 5600 முறை நாடகம் போட்ட எஸ்வீசேகரைப் பாராட்டுகிறாராம் கருணாநிதி.........அதற்கு கிட்டதட்ட இருமடங்கு அதாவது 5600 முறை என்ற எண்ணிக்கையில் நடத்தியதாக விக்கிப்பீடியா உட்பட செய்திகளில் கொடுத்திருக்கிறார்கள், இவர்களின் எண்ணிக்கை தகவல் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை.//

நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. 5600 முறை நாடகம் அவர் போடவில்லை. பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும்.....

மேலும் விக்கிப்பீடியா வில் உங்களது எதிர்ப்பை நீங்கள் தெரிவிக்கலாம். கட்டாயம் தெரிவிக்கவேண்டும். விக்கிப்பீடியா வில் உங்களது கருத்தை, தோராயாமாக எவ்வளவு, நாடகம் அவரால் போட்டிருக்க முடியும் என்று நீங்கள் "S.V.Sekar" எழுதியதை மாற்றி எழுத முடியும். மாற்றி உண்மையை எழுத வேண்டும். அவர்கள் அப்படி 5600 முறை நாடகம் போட்டது உண்மை என்று அவர்கள் தான் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் அதை அந்தப் பொய்யை விக்கிப்பீடியா வில் இருந்து தூக்கிவிட முடியும். அதை நீங்கள் செய்யுங்கள்.

மேலும் "S.V Sekar" பிறந்த வருடம் 1954. அவ்வாறு அவர் பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். மேலும் 1981 (or later, is it 1983, I am not sure)-- ஆம் வருடம் வறுமையின் நிறம் சிகப்பு என்ற படத்தின் மூலம் தான் "limelight" -- உக்கு வந்தார். இப்ப கணக்கு போடுங்கள் எவ்வளவு நாடகம் அவர் போட்டிருப்பார் என்று? உண்மையை மறைத்து பொய்யை எழுதி குXவ கயிறா திரிப்பதில் அவர்களை அடிக்க ஆள் இல்லை. அப்படித்தான் வந்து ஜாதி மதம், கடவுள், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று.

இதை நீங்கள் மறுத்து எழுதாவிட்டால் நாளை 5600 முறை நாடகம் போட்ட எஸ்வீசேகரைப் முதல் அமைச்சர் கருணாநிதியே பாராட்டி உள்ளார் என்று இந்த நிகழ்ச்சியை மேற்கோள் காட்டுவார்கள். அப்புறம் அதுவே உண்மை என்று ஆகிவிடும். அவாளுடைய பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும்...அவாளுடைய தொழிலே இது தான். .. இதைத் தடுக்க விக்கிப்பீடியா வில் உங்கள் எதிர்ப்பை காட்டுங்கள் எழுதுங்கள்.....அவாள் அதை நீங்கள் எழுதியதை உண்மை இல்லை என்று ஆதாரத்துடன் நிரூபிக்கட்டும்.

வாழ்க வளர்க கோவி.கண்ணன் அவர்களின் சேவை....

பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் அவாளை ஆதாரத்துடன் அடியுங்கள்.

ஜோதிஜி சொன்னது…

நீங்கள் வவ்வால் பதிவில் கொடுத்த இந்த தலைப்பை இன்று தான் படிக்க முடிந்தது.

நண்பர் ஒருவர் வளைகுடா நாட்டில் தற்போது பணிபுரிகின்றார். முஸ்லீம். சிறு வயதில் சாப்பாட்டுக்கு கூட மொத்த குடும்பமும் கஷ்டப்பட்டது. அதாவது எந்த வீட்டிலாவது விசேடங்கள் நடந்தால் அன்று தான் அவர்கள் வீட்டில் நல்ல சாப்பாடு. அந்த அளவுக்கு வறுமை.

இன்று அவர் வாங்கும் சம்பளம் ஏறக்குறைய மாதம் 2 லட்சத்திற்கு மேல். கூடவே உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் அத்தனை பேர்களுக்கும் நல்ல வழி காட்டி முடிந்த வரைக்கும் மேலே ஏற்றி விட்டார். ஆனால் அதே ஊரில் அதே இனத்தில் இன்னும் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் போல வறுமையில் தான் இருக்கிறார்கள். இவரின் பணி முடிவுக்கு வந்து விட்டது. வேறு எவர் குறித்தும் அக்கறையில்லை. அவருக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மனம் இல்லை.

ஏறக்குறைய நான் பார்த்த வரைக்கும் பிராமணர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். பிராமணீயம் என்று எளிதாகச் சொல்லி விட முடிகின்றது. அதிலும் பயங்கரமான வறுமையில் வாடும் பலரை எனக்குத் தெரியும். ஆனால் எவரும் உதவக்காணோம். மற்றபடி மணிஜி சொன்னது போல அரசியல்வாதிகளுக்கு கொள்கை ரீதியான நோக்கங்கள் வேறு. எதார்த்த நடை முறை வாழ்க்கை வேறு.

கலைஞர் அதிலும் கில்லாடி. வீரமணியோ கில்லாடிக்கு கில்லாடி. இவர்கள் இருவரின் சொத்து சம்மந்தப்பட்ட அத்தனை பாதுகாப்பு சமாச்சாரங்களிலும் முக்கிய இடங்கிளல் பிராமணர்கள் தான் இருக்கிறார்கள்.

புத்தி இருப்பவர்களை பாராட்டுவது, பக்கத்தில் வைத்துக் கொள்வது, அவர்கள் மூலம் காரியம் சாதித்துக் கொள்வதும் மன்னர் காலத்தில் இருந்தே இருக்கும் நடைமுறை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்