பின்பற்றுபவர்கள்

30 ஜூலை, 2009

லேசா லேஸா ஈசா ஈஸா !

அதிரை போஸ்ட் என்னும் வலைப்பக்கத்தைப் படிக்க நேர்ந்தது, முஸ்லிமை "லேசா" நினைத்து மி(ம)திக்கும் சினிமா ! என்ற தலைப்பில் ஓர் இடுகை. அதில் சொல்லப்பட்டு இருப்பது திரை உலகினர் இஸ்லாமியர்களை கேவலாமாக சித்தரிக்கிறார்கள் என்கிற குற்றச் சாட்டு, அதில் உண்மை இல்லாமல் இல்லை, தீவீரவாதிகள், கள்ளக் கடத்தல்காரர்களின் பெயர்களும் அவர்களின் செயல்கள் அரபு நாடுகளுடன் தொடர்புடையதாகவும், ஷேக்குகளுக்கு மத்தியில் கவர்ச்சி நடிகையின் குத்தாட்டாங்கள் நடைபெறுவதாகவும் பல படங்களில் காட்டப்படுவது உண்மையே. அதைப் பலரும் எழுத்துகளால் கண்டித்துள்ளனர். அந்தப் போக்கு திரையில் அண்மைய காலங்களில் குறைவாக இருக்கிறது.

ஆனால் அந்த இடுகையை எழுதிய நண்பர், "இது மட்டுமன்றி முஸ்லீம் பெண்ணை இந்து மற்றும் கிறிஸ்தவ ஆண்களோடு காதல் வயப்படுவதாக தொடர்ந்து காட்டுவது; இவ்வாறு சினிமாவிற்கு சம்மந்தமில்லாத முஸ்லிம்களை சினிமாவில் இழிவு படுத்துவதே தலையாய பணியாக ஒரு கூட்டம் செய்து வருகிறது." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திரையில் தனிமனிதர்களின் வாழ்க்கையில் நடந்தக் கதையை திரித்து அவ்வாறு காட்டவில்லை. புனைவுக்காக அது போன்ற கதைகளைக் காட்டுகிறார்கள், எனினும் உண்மையகாவே இஸ்லாமியராக பிறந்த பெண்களை இந்து ஆண் காதலித்து திருமணம் செய்து கொள்வது போலவே, இஸ்லாமிய ஆண் இந்துப் பெண்ணை மணந்து கொள்வது நடந்தே வருகிறது. இந்து ஆண் பெரும்பாலும் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணின் பெயரை மாற்றுவதோ, மதம் மறுவதற்கோ வற்புறுத்துவதில்லை. ஆனால் இந்துப் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய ஆண் அவளை கட்டாயமாக மதம் மாறச் சொல்கிறான். எனது நண்பரின் தங்கைக்கே இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. பிரச்சனை அதுவல்ல. மதம் மாறி காதலிப்பது குற்றமா ? அதைப் படத்தில் புனைவாகச் சொல்வது குற்றமா ? பாத்திமா (பாபு), நதியா போன்ற இஸ்லாமிய பெண்கள் இந்து ஆண்களை மணந்து கொண்டு வாழ்கிறார்கள் அது உண்மை இல்லையா ?


காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் ஆண் பெண் மனது, அவர்களுக்கிடையே உள்ள ஈர்ப்பு, இதில் மதம் எங்கிருந்து வந்தது ? பிறக்கும் எவருக்கும் பிறக்கும் போதே எதாவது மத அடையாளம் இருக்கிறது என்று எவரேனும் நிரூபனம் செய்தால் நான் எழுதியது அனைத்தையும் அழித்துவிடுகிறேன். மதம் என்பது நாம விரும்பாமலேயே நம்மீது திணிக்கப்படும் ஒன்று, இதில் பெருமைப் பட ஒன்றுமே இல்லை, உலகத்தினரோடு நம் ஒட்டிவாழாமல் இருக்க நம்மீது மதம் என்கிற பெயரில் திணிக்கப்படும் அசிங்கத்தை நினைத்து உண்மையிலேயே ஒவ்வொருவரும் வருத்தம் தான் அடைய வேண்டும். அண்மையில் இஸ்லாமிய சகோதரிக்கும் இந்து சகோதரிக்கும் பிறந்த குழந்தை யாருடையது என்பதில் பெரிய சர்சையே ஏற்பட்டு முடிவில் மரபு பரிசோதனை மூலம் இஸ்லாமிய சகோதரியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது, பிறக்கும் எவருக்கேனும் ஆணுறுப்பு அல்லது பெண்ணுறுப்பு, பெற்றோர்களைப் போன்ற உடலியல் தவிர்த்து மத அடையாளம் என்று எதையாவது சொல்ல முடியுமா ? ஆடையில்லாமல் தான் பிறக்கிறோம் அப்படியே இருந்துவிடுகிறோமா அது நம்மீது திணிக்கப்படுவதில்லையா என்று எதிர்த்து குதர்கமாக கேட்கத் துடிக்கும் மதவாதிகளுக்கு நான் சொல்லும் பதில் நம் குடும்பத்தினர் முன் நம்மால் அப்படி நிற்க முடிந்தால் அது தேவை இல்லை என்றே சொல்வேன். ஒருவாராலும் முடியாது. எனவே ஆடையையும் மதத்தையும் தொடர்பு படுத்தாதீர்கள். சட்டையை கழட்டிப் போட முடியும் வேறு அணிந்து கொள்ளமுடியும், விரும்பி அணியும் மத அடையாளங்கள் என்றாவது களையப்படுகிறதா ?

பம்பாய், ராமன் அப்துல்லா போன்ற படங்களில் முஸ்லிம் பெண்ணை இந்து ஆண் காதலிப்பதாகக் காட்டுகிறார்கள் அது இஸ்லாமியர்களை அவமானப்படுத்துவதாகச் சொல்கிறார். கள்ளழகர் என்ற படத்தில் இஸ்லாமியராக நடிக்கும் விஜயகாந்த் கதைபடி கடைசியாக தான் இஸ்லாமியர் என்று சொல்லுவார். அதற்கு முன்பே இந்துப் பெண்ணை காதலிப்பார். இதையெல்லாம் பார்த்துவிட்டு இந்துக்கள் கொதித்தி எழுந்து போஸ்டரை கிழிக்கச் சென்றதாகத் தெரியவில்லை.

அதைவிடப் பெரிய காமடி, 'ஈசா' என்ற பெயரில் வரப் போகும் ஒரு படம் இஸ்லாமியர்கள் இழிவுப் படுத்துகிறதாம். தெளிவாக அச்சிட்டிருக்கும் 'ஈசா' இவருக்கு 'ஈஸா'வாக தெரிவது யாருடைய குறை ?, ஈஸா என்பது இஸ்லாமியர்களின் இறைத்தூதர் ஒருவரின் பெயர், அதைப் பயன்படுத்தி இருப்பது இஸ்லாமியர்களை புண்படுத்துகிறது என்கிறார். இஸ்லாமிய நம்பிக்கைப் படி கிறித்துவர்களின் ஏசு(ஜீஸஸ்) தான் இஸ்லாமியர்களுக்கு ஈஸா. ஈஸா இஸ்லாமிய இறைத் தூதர் என்று இஸ்லாமியர்கள் சொல்வதை இதுவரை எந்த ஒரு கிறித்துவரும் ஏற்றுக் கொண்டது இல்லை. மாறாக இஸ்லாம் கிறித்துவ மதத்தின் கிளை என்று மட்டுமே ஒப்புக் கொள்வார்கள். அதனால் தான் இரு மதங்களும் சேர்த்து ஆப்ரகாமிய மதங்கள் அதாவது ஆப்ரகாம் மற்றும் ஆதாம் தொடர்புடன் வரும் மதங்கள் மேல்நாட்டு முற்போக்குவாதிகளால் அழைக்கப்படுகிறது. "கிறித்துவர்கள் அனைவருமே முகமது நபியை ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர்கள் ஏனெனில் ஈஸா இஸ்லாமிய இறைத் தூதர்" என்று கிறித்துவர்கள் ஒப்புக் கொள்ளாத ஒரு கருத்தை அவர்கள் மீது தொடர்ந்து திணிக்கிறோம் என்பதை இஸ்லாமியர்கள் என்றாவது எண்ணிப் பார்த்தது உண்டா ? அதைவிடுகிறேன், அது தேவையற்றதும் கூட

சிவனை ஈசன் என்று குறிப்பிடுவதும் இந்துக்களின் வழக்கம், 'ஈஸ்வர் அல்லா தேரா நாம்' மகாத்மாவின் புகழ்பெற்ற வாக்கியத்திலும் ஈசன் என்பது சிவனைக் குறிக்கும் சொல்லாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது. கேசவனை கேசவா....என்று விளிப்பது போல் ஈசனை 'ஈசா... எனக்கு அருள் !' என்று சொல்வதும் ஈசா என்று விளிப்பது சொல்வழக்கு. இவருக்கு ஈசா என்று தெளிவாக எழுதி இருப்பது ஈஸா என்று தெரிவது வியப்பாக இருக்கிறது. அவர் எழுதியது போன்ற அரைகுறைப் புரிதல் நம்பிக்கையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இருமதத்தினரிடையே தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும். மத நல்லிணக்கத்தையே கெடுத்துவிடும். இது குறித்து சுறுக்கமாக நான் எழுதிய பின்னூட்டங்கள் இரண்டில் ஒன்றை அந்த நண்பர் வெளி இடவில்லை.

இஸ்லாமியர்கள், 'தனது மதத்தை பழிக்கிறார்கள்' என்று கண்டு ஆவேசம் அடைய வேண்டியது முதலில் யாரிடம் என்றால் இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாத கும்பல்களை நோக்கித்தான். இந்துத்துவாக்களைக் கண்டிக்க எந்த ஒரு இந்துவும் முன்வருவது போல் இஸ்லாமிய சமூதாயம் தங்களுக்குள் களையெடுக்க முன்வருவதும் மிக மிகத் தேவை.

95 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\இது குறித்து சுறுக்கமாக நான் எழுதிய பின்னூட்டத்தை அந்த நண்பர் வெளி இடவில்லை.\\

இந்த இடுகையை வரவேற்கிறேன்

Raja சொன்னது…

Actually I am scared to support here, but you are very positive.
Great!

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//லகத்தினரோடு நம் ஒட்டிவாழாமல் இருக்க நம்மீது மதம் என்கிற பெயரில் திணிக்கப்படும் அசிங்கத்தை நினைத்து உண்மையிலேயே ஒவ்வொருவரும் வருத்தம் தான் அடைய வேண்டும்.//

அதை தூக்கி எரிய தயங்குவதின் காரணம் என்னவாக இருக்கும்? வருத்தப்படுபவர்களின் அடுத்த நடவடிக்கை என்ன? அடுத்த சந்ததியினருக்கு அதை திணிப்பது தானே? காலங்காலமாக சமூகத்திற்கு பயந்து பொய்யான வாழ்க்கையை தானே வாழ்கிறார்கள்?

நையாண்டி நைனா சொன்னது…

present sir.

கிடுகுவேலி சொன்னது…

தேவையான ஒரு பதிவு. 'சுள்' என்று இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//கதியால் said...
தேவையான ஒரு பதிவு. 'சுள்' என்று இருக்கிறது.

11:21 AM, July 30, 2009
//

கதியால்,

உறைப்பதற்காகச் சொல்லவில்லை. முரண்கள், தேவையற்ற சமூகச் சீண்டல்கள் தவிர்க்கலமே என்பதற்காக இந்த இடுகை எழுதினேன்

சென்ஷி சொன்னது…

இந்த இடுகையை வரவேற்கிறேன்

Sri சொன்னது…

well said

Srini

சீமாச்சு.. சொன்னது…

பதிவின் பேரைப் பாத்த உடனே, ஏதோ ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா பத்தி எழுதியிருக்கீங்களோன்னு நெனச்சு வந்தேன்..

இருந்தாலும் நல்ல ஒரு பதிவு.. கடைசியில் சொல்லிய கருத்து “இஸ்லாம் தீவிரவாதிகளைக் களையெடுக்கவேண்டும்” என்று சொன்னது மிக மிகத் தேவையான ஒன்று.

ரொம்பக் குழப்பாம.. பாயிண்டைப் புடிச்சி தெளிவாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்

நான் சொன்னது…

அரண்டவனுக்கு இருண்டெதெல்லாம் பேய்........

ஆ.ஞானசேகரன் சொன்னது…

இந்த கருத்து பொதுவாக பேசப்பட்டு வருகின்றது.. பழைய திரைப்படங்களில் கோள்ளை கூட்ட தலைவனாக ஒரு கிருஸ்துவனை காட்டப்பட்டு இருக்கும்... இதற்கெல்லாம் மத சண்டையை உருவாக்க முடியுமா? சமிபகாலமாக தீவிரவாதிகளை முஸ்லீமாக காட்டுவது ஒரு நெருடல்தான் என்பதையும் ஒப்புகொள்ளதான் வேண்டும்... கொஞ்சம் தவிற்கப்படலாம்

வால்பையன் சொன்னது…

சில நாட்களாகவே இம்மாதிரி பதிவுகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன்!

மற்றொரு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் வெளிவரவில்லை!

அதில் இருந்த செய்தி!
சூரியகிரகணத்தின் போது நபிகள் செய்த தொழுகையை பற்றியது!

அதில் ஒரு கேள்வி யார் அதிகமாக நரகத்திற்கு போவார்கள் என்று!

நபி சொல்றார், பெண்கள் தான் என்று!

காரணம் கேட்டால், பெண்கள் எந்த உதவியையும் உடனே மறந்து விடுவார்களாம்!

அதற்கு நான் இட்ட பின்னூட்டதை வெளியிடாத போதே அவர்களது குருட்டுதனமான மூட நம்பிக்கைகள் வெட்ட வெளிச்சமாகிறது!

1700 வருடங்களுக்கு முன்னர் தனக்கு தோன்றியவற்றை எழுதிட்டு போயிட்டாங்க, இவுங்க உலகை மீண்டும் கற்காலத்துக்கே கொண்டு போயிருவாங்க!

இம்மாதிரி ஒரு சில இஸ்லாமியர்களால தான் மொத்த இஸ்லாமியர்களுக்கும் இழுக்கு!

யாசவி சொன்னது…

r u seriously answer for this?

:-)))

poyee pulla kuttingalai padikka vaingga

Samuel | சாமுவேல் சொன்னது…

///இஸ்லாமியர்கள், 'தனது மதத்தை பழிக்கிறார்கள்' என்று கண்டு ஆவேசம் அடைய வேண்டியது முதலில் யாரிடம் என்றால் இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாத கும்பல்களை நோக்கித்தான்.////
நல்ல கருத்து .
மேல சொன்ன கருத்திற், 'இஸ்லாமியர்கள்' 'மதம்' சொல்ற இடத்தில், 'தமிழர்' , 'தமிழ் இனம்' மாற்றி போட்டு படிச்சு பாருங்க ...அதை நீங்க ஒத்துகிட்டா சரி தான்.

// கள்ளழகர் என்ற படத்தில் இஸ்லாமியராக நடிக்கும் விஜயகாந்த் கதைபடி கடைசியாக தான் இஸ்லாமியர் என்று சொல்லுவார்.//

ஹிந்து கதாநாயகன் , அதுவும் சபரி மலை மாலை போட்டுட்டு, ஒரு முஸ்லிம் பொன்னை கூட்டீடு ஓட விடுங்க, ஓடும் பொது பின்னணியில் நல்ல மியூசிக் போட்டுட்டு, slow motion ல மாலைய தூக்கி எரியிற மாதிரி எடுத்து , டிவி ல டெய்லி போட்டு போட்டு காமிங்க?
போஸ்டர் விடுங்க , அந்த மாதிரி காட்சி எடுத்தா தியேடரே எரியும்.
சரி அப்படியும் காந்தி வழியில் அமைதியாவே இருக்கீங்கனு ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம். நாங்க ஒன்னும் பண்ணலையே, நீங்களும் ஒன்னும் பண்ண கூடாதுனு சொல்றது எந்த விதத்துல நியாயம்.
(மன்னிக்கவும், கருத்தை சொல்றதுக்காக செய்த ஒரு கற்பனை , யாரையும் குறிப்பாக மாலை போடுபவர்களை, எந்த மத துறையினரையும் குறைவாக எழுதுவது என் நோக்கமல்ல )

//மதம் மாறி காதலிப்பது குற்றமா ? அதைப் படத்தில் புனைவாகச் சொல்வது குற்றமா ? ///

இல்லை, ஆனால் நம்மவர்கள் அதோடு நிக்காம, பர்க்கா தூக்கி போற்ற மாதிரி காமிச்சது குற்றம் தான். டைரக்டர் வேற என்னமோ சொல்றார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

நேசன்=நேசா, தாசன் = தாசா; ராசன் = ராசா; வாசன் = வாசா; தேசன் = தேசா போல் ஈசன் = ஈசா
அந்த சுவரொட்டியில் அது தெளிவாக உள்ளது.
அத்துடன் ஈசன் என்பது சிவனைக் குறிப்பது அதனால் ஈசா என்பதும் அவரையே குறிக்கும்; இதையிட்டு
எவருமே வீண்சர்ச்சைகளைக் கிளப்ப வேண்டிய அவசியமில்லை.
சைவசமய ஆன்றோர்கள் யாவருமே ஈசா எனச் சிவனைப் போற்றியுள்ளார்கள்.
எதையுமே சர்ச்சையாக்குவதென்பது ஆரோக்கியமல்ல; சரியான சர்ச்சைகள் கூட தட்டிக்கழிக்க
வாய்ப்பை ஆக்கிக் கொடுக்க வேண்டாம்.

துபாய் ராஜா சொன்னது…

//அரைகுறைப் புரிதல் நம்பிக்கையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். //

உண்மை தான்.இப்படிதான்
'அல்லாஹூ அக்பர்' என்பதை 'அக்பரே கடவுள்' என ஒரு பதிவர் எழுதினார்.

அப்பாவி முரு சொன்னது…

மனிதன் மாறிவிட்டான்,

மததில் ஏறிவிட்டான்!

பீர் | Peer சொன்னது…

//வால்பையன் said...
....இம்மாதிரி ஒரு சில இஸ்லாமியர்களால தான் மொத்த இஸ்லாமியர்களுக்கும் இழுக்கு!//

உண்மை.

//...மற்றொரு பதிவில் நான் இட்ட பின்னூட்டம் வெளிவரவில்லை!//

வால், அந்த பதிவின் லிங்க் குடுங்க.

வால்பையன் சொன்னது…

பீர்,

சூரிய கிரகணத்தின் போது தொழுகை என்ற தலைப்பில் இருந்தது,
கூகுளில் தேடிப்பாருங்கள்!

பீர் | Peer சொன்னது…

//இது குறித்து சுறுக்கமாக நான் எழுதிய பின்னூட்டங்கள் இரண்டில் ஒன்றை அந்த நண்பர் வெளி இடவில்லை.//

கோ, அந்தப் பின்னூட்டத்த இப்ப வெளியிட்ருக்காங்க.

பீர் | Peer சொன்னது…

//தீவீரவாதிகள், கள்ளக் கடத்தல்காரர்களின் பெயர்களும் அவர்களின் செயல்கள் அரபு நாடுகளுடன் தொடர்புடையதாகவும், ஷேக்குகளுக்கு மத்தியில் கவர்ச்சி நடிகையின் குத்தாட்டாங்கள் நடைபெறுவதாகவும் பல படங்களில் காட்டப்படுவது உண்மையே//

இன்னும் இருக்கு,
பச்ச பெல்ட், கட்டம் போட்ட கைலியோட கறிக்கடை பாயா வருவாரு், கொட்டு வச்சு பாட்டு பாடுவாரு இல்லைன்னா சாம்பிராணி போட்டு பிச்சை எடுக்க வருவாரு... அப்பல்லாம் இந்த முஸ்லீம் சமூகம் வாய் திறக்கவில்லை.
பிறகு கொஞ்சம் மாறி தாடி தொப்பி வச்ச தீவிரவாதியா காட்றாங்க.

//அந்தப் போக்கு திரையில் அண்மைய காலங்களில் குறைவாக இருக்கிறது.//

அதுதான் பயமா இருக்கு, இதவிட வேற கொடிய உருவத்தில காட்ட யோசனை பண்றாங்களான்னு...

அமீர் ஒரு பத்திரிக்கை பேட்டியில் சொல்லியிருப்பார், ' இஸ்லாமியனை அவனுடைய உண்மையான முகத்தை எந்த திரைப்படமும் காட்டியது கிடையாது. தமிழ் சினிமாவை வச்சு பாத்தீங்கன்னா, இஸ்லாமியர்கள் இந்த நாட்ல வாழ்றாங்களா இல்லையான்னே தெரியாது. பதிவு செய்யப்படாத ஒரு சமூகம் இது.' என்பதாக.

வால்பையன் சொன்னது…

//இஸ்லாமியனை அவனுடைய உண்மையான முகத்தை எந்த திரைப்படமும் காட்டியது கிடையாது.//

ஏன்னா யாருக்கும் அப்படி ஒரு முகம் தெரியல!

சராசரி மனிதர்களுக்கும் இந்த உண்மையான இஸ்லாமியர்களுக்கும் என்ன வித்தியாசம் கொஞ்சம் விளக்குங்களேன்!

Chittoor Murugesan சொன்னது…

தற்போதுள்ள இந்து உண்மையான இந்துவே அல்ல‌
தற்போது பின்பற்றப்படும் முறைகளுக்கும் ,இந்துமதத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தற்போதைய இந்துக்கள் வெளியிடும் எந்த கருத்துக்கும்,பதிவு செய்யும் எதிர்ப்புக்கும் அடிப்படை அவரவர் அகந்தையும், முட்டாள் தனமும்,அறியாமையுமே
தற்போதுள்ள முஸ்லீம் உண்மையான முஸ்லீமே அல்ல‌
தற்போது முஸ்லீம்களால் பின்பற்றப்படும் முறைகளுக்கும் ,இஸ்லாமுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தற்போதைய முஸ்லீம்கள் வெளியிடும் எந்த கருத்துக்கும்,பதிவு செய்யும் எதிர்ப்புக்கும் அடிப்படை அவரவர் அகந்தையும், முட்டாள் தனமும்,அறியாமையுமே
தற்போதுள்ள கிறிஸ்தவன் எவனும் உண்மையான கிறிஸ்தவன் அல்லன்
தற்போது கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படும் முறைகளுக்கும் கிறிஸ்தவ‌த்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
தற்போதைய கிறிஸ்தவர்கள் வெளியிடும் எந்த கருத்துக்கும்,பதிவு செய்யும் எதிர்ப்புக்கும் அடிப்படை அவரவர் அகந்தையும், முட்டாள் தனமும்,அறியாமையுமே

இதை நான் சொல்ல அடிப்படை :
உண்மையான இந்து மதமோ, உண்மையான இஸ்லாமோ, உண்மையான கிறிஸ்தவமோ ( நான் அறிந்தவரை) இது போன்ற கருத்துக்களை எள்ளளவும்
அனுமதிக்காது அங்கீகரிக்காது.. அட எந்த மதமுமே மனிதனில் மதத்தன்மையை தான் கோருகிறதே தவிர லோகாயத விஷயங்களில் மதத்தின் பெயரால் குழப்பம் விளைவிப்பதை கோருவதில்லை

உம்: "அரசனுக்கு உரியதை அரசனுக்கு கொடுங்கள் கர்த்தருக்கு உரியதை கர்த்தருக்கு கொடுங்கள்" என்ற ஏசு

வால்பையன் சொன்னது…

சித்தூர் முருகேஷன்!

இப்போ இருக்குறவன் உண்மையான மனுஷனே அல்லன்னு ஒரே வரியில முடிச்சிருக்கலேமே!

ஏன் இம்மாம் பெருசு!

பீர் | Peer சொன்னது…

//வால்பையன் said...
...ஏன்னா யாருக்கும் அப்படி ஒரு முகம் தெரியல!

சராசரி மனிதர்களுக்கும் இந்த உண்மையான இஸ்லாமியர்களுக்கும் என்ன வித்தியாசம் கொஞ்சம் விளக்குங்களேன்!//

சராசரி மனிதன் தான் இந்த உண்மையான இஸ்லாமியன். இவனும் நாட்டு விடுதலைப் போரில் உயிர் நீத்தான். இவனும் தீவிரவாதத்தை வெறுக்கிறான், எதிர்கிறான். இவனும் கடவுளை நேசிக்கிறான். இவனும் நன்மைகளை ஏவுகிறான் தீமைகளை தடுக்கிறான். இவைகள் தான் திரையில் மறைக்கப்படுகின்றன என்கிறேன்.

வால்பையன் சொன்னது…

அப்புறம் ஏன் அதை சொன்ன அமீர் அவர் படத்துல அப்படி கேரக்டர் வைக்கவேயில்ல!

மெளனம் பேசியதே
ராம்!?
பருத்திவீரன்

என்ன கொடும சரவணா இது!

பீர் | Peer சொன்னது…

முஸ்லிமை "லேசா" நினைத்து மி(ம)திக்கும் சினிமா ! என்ற பதிவுக்கு வக்காலத்து வாங்கவில்லை. அதில் எழுதியிருப்பவை அனைத்தும் ஏற்புடையதல்ல.
ஆனாலும், அவர்கள் குறிப்பிட்டிருக்கும் சினிமாக்களில் நான் பம்பாய் மட்டுமே பார்த்துள்ளேன், அதிலிருந்து நான் சொல்ல வருவதை நண்பர் சாம் சொல்லிவிட்டார்.

நான் பார்த்தவரையில் விஜயகாந்த் திரைப்படங்களில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக அல்லது தீவிரவாதிகளை முஸ்லீம்களாகத்தான் காட்டியிருக்கிறார்கள். இது நிச்சயம் பன்முக சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவேதான், அந்த போக்கு மாற வேண்டும், அதற்கு நாம் ஒரு சிறு பங்காற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்.

பீர் | Peer சொன்னது…

அதை அந்த சரவணனிடம் தான் கேட்கவேண்டும்... ;)


ஒரு பாலச்சந்தர் வரவுக்குப்பின் தான் அவருடைய பிராமண சமுதாய வாழ்வை பதிவு செய்தார். அதிலுள்ள நல்லது கெட்டதுகளை சொல்லியிருக்கார். பாரதிராஜாவிற்குப் பிறகு முக்குலத்தோர் பற்றிய பதிவுகள் சினிமாவில் அதிகமாச்சு.

இஸ்லாம் தெரிந்த ஒரு இஸ்லாமியன் திரைத்துறைக்கு வந்தால் தான் இந்த சமூதாயத்தை பதிவு செய்ய முடியும். இறைவன் நாடினால் அத்தகைய நேர்மையான ஒரு பதிவைச் செய்வேன். - அமீர்.

தினேஷ் சொன்னது…

சில பேருக்காக எல்லோரையும் சொல்ல முடியாது . இருந்தாலும் ஒவ்வொரு இஸ்லாமியனும் ஜமாத்துக்கு கட்டுபட்டு இருக்கும் போது ஜமாத்தல் இதை தடுக்க முடியும் என்பது என் எண்ணம்.

வால்பையன் சொன்னது…

இஸ்லாமியர்களை தீவிரவாதியாக காட்டுவது பாகிஸ்தான் மீது இந்திய மக்களுக்கு இருக்கும் பொது புத்தியே காரணம்!
அங்கேயும் அந்த தீவிரவாதி பாகிஸ்தானிலிருந்து வந்ததாக தான் காட்டுவார்கள்!

அவர்களுக்கு இங்கே ஒரு மாமாகார எட்டப்பன் இருப்பான் ஆனால் அவன் இஸ்லாமியனாக இருக்கமாட்டான், அதற்கு என்ன பண்ணலாம்!

இஸ்லாமிய நாடுகளில் யூதர்களையும், கிருஸ்தவர்களையும் எதிரியாகவும்,
கிருஸ்தவ நாடுகளில் இந்தியாவை விட படுகேவலமாக இஸ்லாமியர்களையும் சித்திரிக்கும் படம் உண்டு!

பம்பாய் படத்திலும் அந்த தீவிரவாதியை மனிதநேயம் மிக்கவனாக காட்டியிருப்பார் இயக்குனர் ஆனால் அந்த படத்தில் மனிஷாவை குலுங்க குலுங்க ஓடவிட்டதற்காக சில அவரது வீட்டில் குண்டு எறிந்தார்களாம்!


யாரும் யாரையும் வேண்டுமென்றே தாழ்த்துவதில்லை! நாமே அப்படி கற்பனை செய்து கொள்கிறோம்!

பீர் | Peer சொன்னது…

அதேபேட்டியில் அமீர் இந்த இஸ்லாமிய சமுதாயத்தை சாடவும் தவறவில்லை.

'கேபில் டிவி ஹராம்(தடுக்கப்பட்டது)ன்னு ஃபத்வா கொடுத்தீங்க, உங்க பேச்ச கேட்டு கேபில் டிவி நடத்திகிட்டிருந்த எங்க மாமா அத விட்டுட்டாரு. நல்லா சம்மாதிச்ச மனுஷன் இப்ப கூலி வேல செஞ்சு கஷ்டப்படுறாரு. அதே கேபில் டிவில தான் நீங்க இப்ப பயான் (சொற்பொழிவு) பண்றீங்க. டிவி கூடாது, கேபில் ஹராம்னா உங்க பயான எதுல போயி பார்க்கறது?'

வால்பையன் சொன்னது…

//அதேபேட்டியில் அமீர் இந்த இஸ்லாமிய சமுதாயத்தை சாடவும் தவறவில்லை. //


அவர் பிராக்டிகல் மனிதனாக இருக்கிறார்!
விரைவில் இஸ்லாமிய சமுதாயத்தை பற்றி நல்ல சினிமா கொடுப்பார்னு நம்புவோமாக!

பீர் | Peer சொன்னது…

//இஸ்லாமிய நாடுகளில் யூதர்களையும், கிருஸ்தவர்களையும் எதிரியாகவும்,கிருஸ்தவ நாடுகளில் இந்தியாவை விட படுகேவலமாக இஸ்லாமியர்களையும் சித்திரிக்கும் படம் உண்டு!//

நாம் பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் இருக்கிறோம், நம் சமுதாயத்தை மதத்தின் பெயரால் சீர் கெடுக்கும் தமிழ் சினிமாவை பற்றி பேசுகிறோம். நம் தவறுகளை திருத்தாமல் மற்றவர்களை என்ன சொல்வது?

//வால்பையன் said...
...அவர் பிராக்டிகல் மனிதனாக இருக்கிறார்!
விரைவில் இஸ்லாமிய சமுதாயத்தை பற்றி நல்ல சினிமா கொடுப்பார்னு நம்புவோமாக!//

நம்புவோம். அதில் இந்துக்களை / கிருத்தவர்களை தீவிரவாதிகளாக காட்டாதவரை மகிழ்ச்சியே. :)

வால்பையன் சொன்னது…

//அதில் இந்துக்களை / கிருத்தவர்களை தீவிரவாதிகளாக காட்டாதவரை மகிழ்ச்சியே. :) //

தீவிரவாதியை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் யாரையும் காட்டாமல் வேற்றுகிரகத்தவரையா காட்ட முடியும்!
அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிங்க தல!

வால்பையன் சொன்னது…

//நாம் பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் இருக்கிறோம், நம் சமுதாயத்தை மதத்தின் பெயரால் சீர் கெடுக்கும் தமிழ் சினிமாவை பற்றி பேசுகிறோம்.//

சினிமாவில் பல வகை உண்டு!
ஷகிலா நடிச்ச கில்மா படமும் சினிமா தான்!
சமூகத்தை கெடுப்பது எதுவென்று பார்த்தால் அனைத்துமே தான்!
நாம் தான் நல்லவற்றை மட்டும் எடுத்து கொண்டு தீயதை தள்ளிவிடவேண்டும்!

பீர் | Peer சொன்னது…

வால்பையன் said...
//அதில் இந்துக்களை / கிருத்தவர்களை தீவிரவாதிகளாக காட்டாதவரை மகிழ்ச்சியே. :) //

தீவிரவாதியை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் யாரையும் காட்டாமல் வேற்றுகிரகத்தவரையா காட்ட முடியும்!
அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிங்க தல!

:))))

நான் சொல்ல வந்தது, தீவிரவாதிகளுக்கு மதச்சாயம் பூசி திரையில் காட்சிப்படுத்தாத வரை இங்கு எந்த சச்சரவும் ஏற்படப்போவதில்லை, என்பதே.

//நல்லவற்றை மட்டும் எடுத்து கொண்டு தீயதை தள்ளிவிடவேண்டும்!//

நம்மால் ஆன மட்டும் தடுக்கவும் வேண்டும்.

வால்பையன் சொன்னது…

//நான் சொல்ல வந்தது, தீவிரவாதிகளுக்கு மதச்சாயம் பூசி திரையில் காட்சிப்படுத்தாத வரை இங்கு எந்த சச்சரவும் ஏற்படப்போவதில்லை, //

நக்ஸ்லைட்டுகளை தவிர மற்ற தீவிரவாதிகளுக்கு மதத்தை தவிர வேறு ஒரு காரணம் காட்டுங்களேன்!

பீர் | Peer சொன்னது…

இஸ்லாமியன் மட்டும் தான் தீவிரவாதி என்று தமிழ் சினிமா காட்டி வருகிறது.

நக்ஸ்லைட்டுகள், தாகூரிகள், மாவோயிஸ்டுகள்... மற்றும் அண்டை நாடுகளிலுள்ள தீவிரவாதிகளை காட்டும் போது அவர்களுக்கு எந்த சாயமும் பூசப்படுவதில்லையே? அவர்கள் விடுதலைக்காக போராடுகிறார்கள் என்பது மட்டும் தான் காட்சிப்படுத்தப்படும். அவர்கள் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் என்றும் சொல்லப்படும்.

பீர் | Peer சொன்னது…

//இந்துத்துவாக்களைக் கண்டிக்க எந்த ஒரு இந்துவும் முன்வருவது//

அனைத்து இந்துக்களும் அல்ல... நீங்கள், வால் போன்று நல்லவர்கள் சிலர்.

//இஸ்லாமிய சமூதாயம் தங்களுக்குள் களையெடுக்க முன்வருவதும் மிக மிகத் தேவை.//

நான் அறிந்தவரை, நான் மற்றும் என் நண்பர்கள் சிலர் இருக்கிறோம். நிச்சயம் எங்களால் ஆன மட்டும் தீமையை தடுப்போம்.
அமைப்பு / இயக்கம் தனிமனிதனை பரவலாக சிந்திக்கவிடாமல் தடுக்கும் என்பதால், எந்த ஒரு அமைப்பிலும் சேரும் எண்ணமும் எங்களுக்கில்லை.

- இரவீ - சொன்னது…

very well said

Pebble சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Pebble சொன்னது…

///இஸ்லாமியர்கள், 'தனது மதத்தை பழிக்கிறார்கள்' என்று கண்டு ஆவேசம் அடைய வேண்டியது முதலில் யாரிடம் என்றால் இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாத கும்பல்களை நோக்கித்தான்.////

இஸ்லாமியர்கள், இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் தீவிரவாதிகளை ஆவேசம்/கண்டிப்பதில்லை என்று பொதுவாக கூறவேண்டாம். இஸ்லாமிய இயக்கங்களும், இஸ்லாமிய ஜமாத்துகளும், தனி மனிதர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து கொண்டுதான் இருக்கின்றனர்.
உங்களுக்கு தெரிந்த பெரிய வட்டத்தில் வேண்டுமனால் இல்லாமல் அல்லது அறியப்படாமல் இருக்கலாம், மெயின் ஸ்டீரிம் மீடியாவால் தெரிவிக்கப்படாமல் அல்லது மறைக்கப்பட்டு இருக்கலாம்.
கண்டனம் தெரிவிக்கும் இஸ்லமிய ஜமத்துகளும், இயக்கங்களும், தனி மனிதர்களும் tamilmanam.net-ல் பதிவு இடுவது அல்லது உங்களது கன்டன இடுகைகளில் பின்னூட்டம் இடுவது என்பது இயலாத காரியம்.

பதி சொன்னது…

தேவையான இடுகை....

அப்பாவி முரு சொன்னது…

ரத்த ஆறே ஓடியிருக்கு,

ஆனா, சிங்கத்தை(கோவி) இன்னும் காணமே?

கோவி.கண்ணன் சொன்னது…

பீர்,

இஸ்லாமை கேள்வி கோட்கும் அல்லது இஸ்லாமியர்கள் தவறு செய்கிறார்கள் என்று சுட்டிக்காட்டும் பதிவு அல்ல இது, எனக்கு அந்தக் கவலையும் கிடையாது, ஒவ்வொரு சமூகம் அவரவர் களைகளை களைவது அவர்தம் பொறுப்பு.

//அனைத்து இந்துக்களும் அல்ல... நீங்கள், வால் போன்று நல்லவர்கள் சிலர்.//

அனைத்து இந்துக்களும் இல்லை என்கிறீர்கள், அப்படி என்றால் இந்துக்கள் பெரும்பாண்மையாக மக்கள் தொகை அடிப்படையில் இருப்பதால், இஸ்லாமியர் பெரும்பாண்மையாக இருக்கும் பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் நிலைதானே இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டு இருக்க வேண்டும். நீங்கள் அப்படித்தான் இருக்கிறது என்கிறீர்களா ?

இந்துக்கள் தொகை 75 விழுக்காடு இருக்கும் தமிழ்நாட்டில் பிஜேபி பிடறியில் அடிப்பட்டு ஓடுகிறது. ஆனால் ஆனால்.....தமிழக இஸ்லாமியர்களின் பெரும்பாலான வாக்குகள் இஸ்லாம் சமூகத்தை அரவணைக்கும் கட்சிக்கு அல்லது இஸ்லாம் பெயரில் இயங்கும் கட்சிக்கே கிடைக்கிறதே எப்படி ?

குல்லாப் போட்டவனும் தாடி வைத்திருக்கிறவனெல்லாம் தீவிரவாதி இல்லை என்று எப்படி நம்புகிறீர்களோ அதே போல் தான் பொட்டு வைத்தவன், திருநீறு பூசியவன், நாமம் போட்டவன் அனைவரும் இந்துத்துவா இல்லைன்னு நம்ம மறுக்க எதேனும் விசேச காரணம் உண்டா ?

இந்துக்களில் பெரும்பாண்மையினர் மதவெறியோடு அலைகிறார்கள் என்று நம்புகிறீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
இஸ்லாமியன் மட்டும் தான் தீவிரவாதி என்று தமிழ் சினிமா காட்டி வருகிறது. //

:) தீவிரவாதிகளுக்கு இஸ்லாம் பெயர் இருந்தால் அவர்களுடைய பெயரில் தானே காட்டுவார்கள். அதையேன் மதத்தோடு தொடர்ப்பு படுத்திப் பார்க்கனும் ?

இப்ப ரஜினி காந்த் நடிச்ச சிவாஜி படத்தைப் பார்தால், சுமன் அழகாக பொட்டு வைத்து பக்திப் பழமாகத்தான் படம் முழுவதும் வருவார். அதுக்காக கொடித் தூக்கிய இந்துக்களைக் காட்டுங்கள்.

நானே பல விமர்சனங்களில் இப்போதெல்லாம் வில்லன்களாக மச்சம் ஒட்டியவர்களைக் காட்டுவதில்லை பக்திப் ப்ழமாகக் காட்டுகிறார்கள், அதில் உண்மையும் இருக்கிறது என்றே எழுதி இருக்கிறேன்

//நக்ஸ்லைட்டுகள், தாகூரிகள், மாவோயிஸ்டுகள்... மற்றும் அண்டை நாடுகளிலுள்ள தீவிரவாதிகளை காட்டும் போது அவர்களுக்கு எந்த சாயமும் பூசப்படுவதில்லையே? அவர்கள் விடுதலைக்காக போராடுகிறார்கள் என்பது மட்டும் தான் காட்சிப்படுத்தப்படும். அவர்கள் தீவிரவாதிகள் அல்ல போராளிகள் என்றும் சொல்லப்படும்.
//

பிரிட்டீஸ்காரன் பார்வையில் நேதாஜி தீவிரவாதி, காங்கிரசு, இலங்கை அரசு பார்வையில் தமிழ் போராளிகள் தீவிரவாதிகள்.

வால்பையன் சொன்னது…

உள்நாட்டு பிரச்சனையில் போரிடபவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்த முடியாது!
உரிமைகள் முறுக்கப்படும் போது சில நேரங்களில் கலவரங்கள் வெடிக்கத்தான் செய்யும்!

ஆனால் அண்டை நாட்டிலிருந்து இங்கு வந்து தாக்குவது அவ்வாறு சுலபமாக தள்ளிவிடமுடியாது!
மேலும் அந்த பாம்புக்கு பால் ஊற்றி வளர்பவர்களும் கண்டத்துகுறியவர்களே!

கோவி.கண்ணன் சொன்னது…

//நாம் பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் இருக்கிறோம், நம் சமுதாயத்தை மதத்தின் பெயரால் சீர் கெடுக்கும் தமிழ் சினிமாவை பற்றி பேசுகிறோம். நம் தவறுகளை திருத்தாமல் மற்றவர்களை என்ன சொல்வது?//

பீர்,

தமிழ் சினிமா பற்றிய பின்னூட்டம் தான் அந்தப் பதிவுக்கு நான் போட்டது.

இஸ்லாமியர்கள் தமிழ் சினிமாவில் நடிக்க இந்துப் பெயர் தேவையாக இருப்பதையும் அப்படி வைத்துக் கொள்வதையும் எந்த அரசியலில் சேர்ப்பது.

இந்துப் பெயரில் ஹீரோ இருப்பதை தமிழர்கள் விரும்புகிறார்கள் என்று எந்த மடையன் சொன்னான் என்றே தெரியவில்லை. ஆனால் அந்த வியாதி பரவி இருக்கிறதா இல்லையா ?

தமிழ்படவுலகம் இந்துக்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால் அப்படி ஒரு போலி நிலையை எடுத்தார்களா ? அல்லது *கான்*கள் கொடிகட்டிப் பறக்கும் மும்பை பட உலகம் சென்னை திரை துறையைவிட முற்போக்கு சிந்தனைவாதிகளால் இயங்குகிறதா ?

பிரேம், நசீர், நாசர் போன்ற முன்னனி நடிகர்கள், பாசில் போன்ற இயக்குனர்கள் இஸ்லாமிய பெயரிலேயே புகழ் பெற்று இருக்கும் போது, ஷியாம், ஆர்யா......இந்தப் பெயர்களின் தேவை தான் என்ன ? எனக்கு ஒண்ணும் புரியல, தற்போதைய சூழல் இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக இயங்குகிறார்கள் என்கிற குற்றச் சாட்டுகளில் உண்மை இருப்பதாக நான் நினைக்கவில்லை.

கிறித்துவ குடும்பங்களின் கதைகளாக மின்சாரக் கனவு போன்ற கதைகள் வந்தது போல் இஸ்லாமிய குடும்பத்தை முன்னிறுத்திய கதைகள் ஏன் வருவதில்லை. சிறுபான்மையாக இருக்கும் பார்பன சமூகக் கதைகள் அதிகம் எடுக்கப்பட்ட அளவுக்கு கிராம பின்னனி படங்கள் வந்திருக்கவில்லை... திரைத் துரையைப் பொருத்த அளவில் அது ஒரு பணம் கொழிக்கும் தொழில் அதில் ரொம்ப எதிர்பார்க்க முடியாது என்று தேற்றிக் கொள்வதுடன் சரி.

பொழுதுபோக்கு துறையை வாழ்க்கைக்கு வழிகாட்டும் துறையாக நாம நினைப்பதற்கு சினிமா உலகம் என்ன செய்யும்

கோவி.கண்ணன் சொன்னது…

//இன்னும் இருக்கு,
பச்ச பெல்ட், கட்டம் போட்ட கைலியோட கறிக்கடை பாயா வருவாரு், கொட்டு வச்சு பாட்டு பாடுவாரு இல்லைன்னா சாம்பிராணி போட்டு பிச்சை எடுக்க வருவாரு... அப்பல்லாம் இந்த முஸ்லீம் சமூகம் வாய் திறக்கவில்லை.
பிறகு கொஞ்சம் மாறி தாடி தொப்பி வச்ச தீவிரவாதியா காட்றாங்க. //

:) இதுக்கு என்ன சொல்வது ? தற்போதைய வில்லன்களெல்லாம் இந்துப் பெயர் வைத்திருந்தால் இந்துக்களை கேவலப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியுமா ? ஒரு கேரக்டர் அதுக்கு ஒரு பெயர் அதையேன் மததுடன் தொடர்ப்பு படுத்தனும் ?

கரிக்கடைக்காரர் பூணூல் போட்டிருப்பதாகக் காட்டினால் கேரக்டரோடு ஒன்றாதே :)

கோவி.கண்ணன் சொன்னது…

// Seemachu said...
பதிவின் பேரைப் பாத்த உடனே, ஏதோ ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா பத்தி எழுதியிருக்கீங்களோன்னு நெனச்சு வந்தேன்..

இருந்தாலும் நல்ல ஒரு பதிவு.. கடைசியில் சொல்லிய கருத்து “இஸ்லாம் தீவிரவாதிகளைக் களையெடுக்கவேண்டும்” என்று சொன்னது மிக மிகத் தேவையான ஒன்று.

ரொம்பக் குழப்பாம.. பாயிண்டைப் புடிச்சி தெளிவாக எழுதியமைக்குப் பாராட்டுக்கள்

12:00 PM, July 30, 2009
//

சீமாச்சு அண்ணா,

மற்றவங்க பாராட்டும் போது மகிழ்ச்சியாக இருக்கும் உங்களைப் போன்ற பெரியவர்கள் பாராட்டும் போது குளிர்ச்சியாக இருக்கும். நன்றி !

Arun சொன்னது…

நம்முடைய இணைய பக்கத்திற்கு அல்லது பதிவிற்கு அதிக ஹிட்ஸ் கொண்டு வருவதில் திரட்டிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. உங்கள் பதிவுகளை அல்லது இனைய பக்கத்தை அனைத்து தமிழ் திரட்டிகளிலும் வெளியிட ஒரு பட்டன் மட்டுமே போதும்.

தமிழ் பக்கங்களை Reedit.com, Digg.com என்று submit செயும்போது கிடைக்கும் ஹிட்ஸ்கலை விட தமிழ் திரட்டிகளில் submit செயும்போது அதிக ஹிட்ஸ் கிடைக்கும். அதுவே இந்தியா சார்ந்த ஆங்கில தளங்கள் என்றால் Hotkilix, Humsuffer போன்ற இந்திய ஆங்கில திரட்டிகளில் இருந்து அதிக ஹிட்ஸ் கிடைக்கும் .

தற்போது FindIndia.net என்ற இணையத்தளம் இந்த சேவையை வழங்குகிறது . இந்த பட்டனை முற்றிலும் இலவசமாக இந்திய மொழி தளங்களுக்கு மட்டுமே பயன்படுத்தலாம் . இதை நாம் நம் பிளாக்கர் ப்ளாகிலோ அல்லது நமது இணையத்தளத்தில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் ( எனது ப்ளாகின் Sidbarல் காண்க). இதன் மூலம் அதிக பார்வையாளர்களை நம் தளத்திற்கு வர செய்யலாம்.


தற்போது BETA பதிப்பில் உள்ள இத்தளம் தற்போது தமிழ் , இந்திய ஆங்கில Social Bookmarking தளங்களுக்கு பதிவுகளை submit செய்வதற்கான பட்டங்களை
வழங்குகிறது. இது தமிளிஷ், தமிழ்மணம், தமிழர்ஸ் என்று பல பட்டன்கள் நம் தளத்தில் add செய்வதற்கு பதில் ஒரு Buttonலையே எல்லா திரட்டிகளிலும் பதிவுகளை submit செய்ய எளியதாக இருக்கும் .


Add-தமிழ் பட்டன் பெறுவதற்கான இணையதள முகவரி : இங்கு கிளிக் செய்யவும்
www.findindia.net

பீர் | Peer சொன்னது…

//அனைத்து இந்துக்களும் இல்லை என்கிறீர்கள், அப்படி என்றால் இந்துக்கள் பெரும்பாண்மையாக மக்கள் தொகை அடிப்படையில் இருப்பதால், இஸ்லாமியர் பெரும்பாண்மையாக இருக்கும் பாகிஸ்தானில் இருக்கும் இந்துக்கள் நிலைதானே இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஏற்பட்டு இருக்க வேண்டும். நீங்கள் அப்படித்தான் இருக்கிறது என்கிறீர்களா ?//

கோ, தயவுசெய்து பாகிஸ்தானோடு இந்தியாவை ஒப்பிட வேண்டாம். அது தன்னை இஸ்லாமிய நாடு என்று சொல்லிக் கொள்கிறது. நாம் இங்கு பேசுவது பன்முகத் தன்மை கொண்ட நம் இந்தியா, நம் மக்கள், நம் சினிமா பற்றியது.

நான் சொல்ல வந்தது,

//இந்துத்துவாக்களைக் கண்டிக்க எந்த ஒரு இந்துவும் முன்வருவது போல்//

அனைத்து இந்துக்களும் இந்துத்துவாவை கண்டிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், அந்த இந்துத்துவா எங்கிருந்து யாரிடமிருந்து வருகிறது? இந்துத்துவாக்களைக் கண்டிக்க எந்த ஒரு இந்துவும் அல்ல, ஏதோ ஒரு இந்து முன்வருகிறார். அவ்வாறு முன்வருபவர்கள் இந்து மக்கள் தொகையில் 75 விழுக்காடாக இருக்கலாம், அதே விழுக்காட்டில் (அல்லது சற்றேறக்குறைய) முஸ்லீம்களும் அவர்களிடையே இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதத்தை கண்டிக்கிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. (மீதி விழுக்காட்டினர் முழுவதும் இந்துத்துவாவை / தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்கள் என்பதாகாது, அவர்கள் என்ன நடந்தால் எனக்கென்ன என்ற போக்குடையவர்கள், எந்த பக்கமும் சாயும் தன்மையுடையவர்கள். இவர்களால் எப்போதும் ஆபத்துதான்)

பீர் | Peer சொன்னது…

//இந்துக்கள் தொகை 75 விழுக்காடு இருக்கும் தமிழ்நாட்டில் பிஜேபி பிடறியில் அடிப்பட்டு ஓடுகிறது. ஆனால் ஆனால்.....தமிழக இஸ்லாமியர்களின் பெரும்பாலான வாக்குகள் இஸ்லாம் சமூகத்தை அரவணைக்கும் கட்சிக்கு அல்லது இஸ்லாம் பெயரில் இயங்கும் கட்சிக்கே கிடைக்கிறதே எப்படி ?//

இந்துத்துவாவை எக்காலத்திலும் கைவிட மாட்டேன் என்று சொல்லும் பிஜேபி க்கு இஸ்லாமியர்களின் பெரும்பாலான வாக்குகள் மற்றும் இந்துத்துவாவை விரும்பாத இந்துக்களின் வாக்குகளும் கிடைக்காதது போலவே இஸ்லாமிய சமூகத்தை அரவணைக்கும் கட்சிக்கும், இஸ்லாம் பெயரில் இயங்கும் கட்சிக்கும் இந்துத்துவா வாக்குகள் கிடைப்பதில்லை என்பதும் எதார்தம்.

//இந்துக்களில் பெரும்பாண்மையினர் மதவெறியோடு அலைகிறார்கள் என்று நம்புகிறீர்களா ?//

நிச்சயமாக இல்லை

பீர் | Peer சொன்னது…

/:) தீவிரவாதிகளுக்கு இஸ்லாம் பெயர் இருந்தால் அவர்களுடைய பெயரில் தானே காட்டுவார்கள். அதையேன் மதத்தோடு தொடர்ப்பு படுத்திப் பார்க்கனும் ?//

இஸ்லாத்தின் பெயரில் மட்டும் தான் தீவிரவாதி இருக்கிறானா?

//இப்ப ரஜினி காந்த் நடிச்ச சிவாஜி படத்தைப் பார்தால், சுமன் அழகாக பொட்டு வைத்து பக்திப் பழமாகத்தான் படம் முழுவதும் வருவார். அதுக்காக கொடித் தூக்கிய இந்துக்களைக் காட்டுங்கள்.//

பொட்டு வைத்து பக்திப் பழமாக படம் முழுவதும் வருபவரை தீவிரவாதியாக காட்டினால் கொடி தூக்குவார்கள்.

//பிரிட்டீஸ்காரன் பார்வையில் நேதாஜி தீவிரவாதி, காங்கிரசு, இலங்கை அரசு பார்வையில் தமிழ் போராளிகள் தீவிரவாதிகள். //

ஹமாஸையும், அபுஸையாஃபையும், நாமும் அப்படித்தானே பார்க்கிறோம்?
ஜயா, ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொல்லும் அனைவரும் தீவிரவாதிகள்தான். அவர்களுக்கு மதச்சாயம் பூசக் கூடாது என்பது தான் என் எண்ணம். எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை.

பீர் | Peer சொன்னது…

//உள்நாட்டு பிரச்சனையில் போரிடபவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குத்த முடியாது!
உரிமைகள் முறுக்கப்படும் போது சில நேரங்களில் கலவரங்கள் வெடிக்கத்தான் செய்யும்!

ஆனால் அண்டை நாட்டிலிருந்து இங்கு வந்து தாக்குவது அவ்வாறு சுலபமாக தள்ளிவிடமுடியாது!//

முந்தைய பின்னூட்டத்தில் கோவியாருக்கு அளித்துள்ள பதிலே இதற்கும் பொருந்தும்.

//மேலும் அந்த பாம்புக்கு பால் ஊற்றி வளர்பவர்களும் கண்டத்துகுறியவர்களே!//

மறுப்பதற்கில்லை, வால்.

பீர் | Peer சொன்னது…

//திரைத் துரையைப் பொருத்த அளவில் அது ஒரு பணம் கொழிக்கும் தொழில் அதில் ரொம்ப எதிர்பார்க்க முடியாது என்று தேற்றிக் கொள்வதுடன் சரி.//

அது சரி...

Samuel | சாமுவேல் சொன்னது…

பீர் ....உங்க விவாதம் ரொம்பவே பிடிச்சிருக்கு ...யாரு மனசும் புண்படாம தெளிவா எழுதிறீங்க .குறிப்பா நீங்க எழுதிருக்கும்
//ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொல்லும் அனைவரும் தீவிரவாதிகள்தான்//

கோவியாரே ..
//பிரிட்டீஸ்காரன் பார்வையில் நேதாஜி தீவிரவாதி, காங்கிரசு, இலங்கை அரசு பார்வையில் தமிழ் போராளிகள் தீவிரவாதிகள். //
நேதாஜி பாவம்ங்க அவரை எதுக்கு இதில் இழுத்து , அதுவும் LTTE சமமா. உங்க முந்தய பதிவில் நெஞ்சம் பொறுக்குதிலையே ,"இவனையெல்லாம் பிடிச்சு முட்டிக்கு முட்டி..." ...photo லம் போடீங்க 'child abuse'..கொஞ்சம் யோசிச்சு பாருங்க , அவரு பைக் முன்னாடி தான் படுக்க வச்சாங்க , சிலர் பீரங்கி முன்னாடி ல படுக்க வச்சாங்க ....

Samuel | சாமுவேல் சொன்னது…

என்ன பொருத்தவரைக்கும் , அடுத்தவர்கள் நம்பிக்கை புண்படும் படியா எடுக்கும் காட்சிகள் , படங்கள் , சொல்லும் அறிக்கைகள் , எல்லாமே கண்டனத்துக்குரியது ...அது கலைஞர் ராமர் பத்தி சொன்னாலும் சரி, மணி ரத்னம் படத்தில் சொன்னாலும் சரி, இல்லேன்னா வருன் காந்தி அறிகைனாலும் சரி .....அவர்கள் நம்பிக்கை புன்பற்றது தப்புநு சொல்றதுக்கு நாம யாரு ...நீங்க யாரு ..

உங்களுக்கு மொழி , மொழியை சார்ந்தவர்கள் முக்கியம் , அவுங்களுக்கு மதம் , மத நம்பிக்கை , அதை சார்ந்தவர்கள் முக்கியம் ...உங்களுக்கு தமிழ் இனத்துக்காக குண்டு வச்சா , அப்பாவிகள் செத்தா அது போராட்டம் . அவுங்களுக்கு மதம் யாராவது இழிவு செஞ்சா , அதுக்காக குண்டு வச்சா அது போராட்டம் ..பீர் சொன்ன மாதிரி அப்பாவிகள் கொல்லும் எல்லாருமே தீவிரவாதிகள் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//Sammy said...

என்ன பொருத்தவரைக்கும் , அடுத்தவர்கள் நம்பிக்கை புண்படும் படியா எடுக்கும் காட்சிகள் , படங்கள் , சொல்லும் அறிக்கைகள் , எல்லாமே கண்டனத்துக்குரியது ...அது கலைஞர் ராமர் பத்தி சொன்னாலும் சரி, மணி ரத்னம் படத்தில் சொன்னாலும் சரி, இல்லேன்னா வருன் காந்தி அறிகைனாலும் சரி .....அவர்கள் நம்பிக்கை புன்பற்றது தப்புநு சொல்றதுக்கு நாம யாரு ...நீங்க யாரு ..//

எல்லாவற்றிற்கும் கண்ணு காது மூக்கு வைத்துப் பார்ப்பது தவறுங்க. படத்தில் பிச்சைக்காரனைக் காட்டினால் எங்களையெலலம் கேவலப்படுத்துறிங்க, மனம் புண்படுத்துன்னு பிச்சைக்காரனுக்கும் சொல்லும் உரிமை உண்டுங்க. இதே போல் ஒண்ணு ஒண்ணுக்கும் பாருங்க, ஒருத்தனும் படம் எடுக்க முடியாது. அதுக்காக உள்நோக்கத்தோடு வரும் படங்கள் இல்லைன்னு நான் சொல்ல வரலை.

நரிக்குறவ சமூகத்தை நகைச்சுவைக்காக காட்டும் படங்களைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். அவங்க வாழ்வியல் முறை நமக்கு கோமாளித்தனமாக தெரிவது யாருடைய குற்றம் ?

//உங்களுக்கு மொழி , மொழியை சார்ந்தவர்கள் முக்கியம் , அவுங்களுக்கு மதம் , மத நம்பிக்கை , அதை சார்ந்தவர்கள் முக்கியம் ...உங்களுக்கு தமிழ் இனத்துக்காக குண்டு வச்சா , அப்பாவிகள் செத்தா அது போராட்டம் . அவுங்களுக்கு மதம் யாராவது இழிவு செஞ்சா , அதுக்காக குண்டு வச்சா அது போராட்டம் ..பீர் சொன்ன மாதிரி அப்பாவிகள் கொல்லும் எல்லாருமே தீவிரவாதிகள் தான்//

"எல்லோரும்" என்று பொதுவாகச் சொல்வது ரொம்ப எளிதுங்க. அவை அரசாங்கங்கள் சொல்லும் தீவிரவாதத்திற்கு எதிரான கண்டன அறிவிப்பு போல எதற்குமே பயன்படாது. எதிர்குழுக்களைப் பெயர்ச் சொல்லி சொல்லும் போது தம்மைச் சார்ந்தவர்களை (எல்லோரும் அப்பாவிகள் என்று நினைத்துக் கொள்ளும்) மன நிலையில் எவருமே தன்பக்கம் பார்க்க மாட்டார்கள் என்பதே உண்மை. அது பீர் சொன்னாலும் சரி, யார் சொன்னாலும் சரி. அவை எதார்த்தம் அது அவர்களது நிலை நிர்பந்தம் என்ற அளவிற்குத்தான் புரிந்து கொள்ளவும் படுகிறது. நான் இந்தப் பதிவை எழுதியதற்கு என்னை இந்துத்துவா என்று திட்டி வந்த பின்னூட்டம் உண்டு, அதை நான் நீக்கிவிட்டேன்.

Samuel | சாமுவேல் சொன்னது…

//நான் இந்தப் பதிவை எழுதியதற்கு என்னை இந்துத்துவா என்று திட்டி வந்த பின்னூட்டம் உண்டு, அதை நான் நீக்கிவிட்டேன்.////
//இந்துத்துவாக்களைக் கண்டிக்க எந்த ஒரு இந்துவும் முன்வருவது போல் இஸ்லாமிய சமூதாயம் தங்களுக்குள் களையெடுக்க முன்வருவதும் மிக மிகத் தேவை.//

நீங்க எழுதியது படிச்சா அப்படி தான் இருக்கு, முஸ்லிம் சமுதாயத்துக்கே advice பண்றீங்க , இதில் கிறிஸ்தவம் மதத்துக்கும் , முஸ்லிம் மதத்துக்கும் இல்லாத பிரசினையை எல்லாம், அரை குறை புரிதலோடு எழுதிருக்கீங்க ...கடைசியா
தேவையற்றது நீங்களே சொல்றீங்க ....எல்லாத்தையும் எழுதிட்டு , ஹிந்து மத கரரர்கள் எல்லாம் ரொம்பவே நல்லவன்னு எழுதிருக்கீங்க ...உங்க பதிவு, உரிமை இருக்கு எழுத..

நான் இதை கேட்க வேண்டாம்னு நினைச்சேன், இருந்தாலும் சொல்றேன் .....குஜராத் முஸ்லிம் குடும்பங்களை உயிரோடு எரிச்சாங்க, கந்தமால் , ஒரிசாவில் பாதிரியார்களை உயிரோடு புதசாங்க, ஒரு முழு கிராமமே எரிசிடாங்க, ஒன்னும் இல்லாத மக்கள் காட்டுலயும் , மலைலயும் ஒளிஞ்சு வாழ்ந்திட்டு இருகாங்க .. இதை எல்லாம் எத்தனை ஹிந்துக்கள் கண்டிசாங்க ...உங்களுடுய குறுகிய பதிவுலகத்தில் எத்தனை பேர் இதுக்கு கண்டனம் பன்னாங்க ?

Samuel | சாமுவேல் சொன்னது…

ஒரு பத்து வருஷமா இந்த மாதிரி சம்பவங்கள் நடந்துட்டு தான் இருக்கு ...எத்தனை சினிமாக்களில் கற் சேவா, பஜ்ரங் டல், சிவா சேனா பத்தி காமிசிருகாங்க ..இப்போ உள்ள இந்து மத தலைவர்களுக்கு யாரு சார் செல்ல பிள்ளை .....வருன் காந்தி , ஏன் ஆனார் ?. பிள்ளிபிதில் வருன் காந்தி தோதுருகும்னுல, எந்த ஒரு ஹிந்துவும் கண்டிச்சு இருந்தா ?,..பிள்ளிபித் விடுங்க , எனக்கு தெரிஞ்சு தென்னகத்தில் நிறைய பேருக்கு அவர் ஹீரோ . BJP அடுத்த ப்ரிதமர் வேட்பாளர் யார் ...மோடி ? எப்படி கட்ச்யில் முன்னணியில் வந்தார் ?

கோவி.கண்ணன் சொன்னது…

// Sammy said...

நீங்க எழுதியது படிச்சா அப்படி தான் இருக்கு, முஸ்லிம் சமுதாயத்துக்கே advice பண்றீங்க , இதில் கிறிஸ்தவம் மதத்துக்கும் , முஸ்லிம் மதத்துக்கும் இல்லாத பிரசினையை எல்லாம், அரை குறை புரிதலோடு எழுதிருக்கீங்க ...கடைசியா
தேவையற்றது நீங்களே சொல்றீங்க ....எல்லாத்தையும் எழுதிட்டு , ஹிந்து மத கரரர்கள் எல்லாம் ரொம்பவே நல்லவன்னு எழுதிருக்கீங்க ...உங்க பதிவு, உரிமை இருக்கு எழுத..//

அண்ணே, நான் 'தன் முதுகை தான் பார்க்க முயற்சிக்க வேண்டும் என்பது அட்வைஸா ?' அது முடியாது என்பது இயல்பு என்பதால் தான் எல்லோருமே அடுத்தவரின் அழுக்கைக் காட்டுகிறார்கள்.

இந்து மதக்காரர்கள் மோசமான மதவெறியுடன் இருந்தால் இந்தியா இந்து நாடு என்று தானே சொல்லப்பட்டு இருக்கும், ஆனால் அப்படி இல்லையே, உலகெங்கிலும் பெரும்பாண்மை மதத்தினர்கள் இருக்கும் நாடுகள் அந்தந்த மதங்களின் அடையாளம் பேணவில்லையா ?

அரைகுறை புரிதல் எதுங்க ? ஈசா வை ஈஸா என்பது முழுப்புரிதலா ? அது போன்ற குழப்ப வாதிகளுக்கு உங்கள் பதில் என்ன ?

// நான் இதை கேட்க வேண்டாம்னு நினைச்சேன், இருந்தாலும் சொல்றேன் .....குஜராத் முஸ்லிம் குடும்பங்களை உயிரோடு எரிச்சாங்க, கந்தமால் , ஒரிசாவில் பாதிரியார்களை உயிரோடு புதசாங்க, ஒரு முழு கிராமமே எரிசிடாங்க, ஒன்னும் இல்லாத மக்கள் காட்டுலயும் , மலைலயும் ஒளிஞ்சு வாழ்ந்திட்டு இருகாங்க .. இதை எல்லாம் எத்தனை ஹிந்துக்கள் கண்டிசாங்க ...உங்களுடுய குறுகிய பதிவுலகத்தில் எத்தனை பேர் இதுக்கு கண்டனம் பன்னாங்க ?//

ஏன் கண்டிக்கவில்லை, எனது பதிவுகளில் எத்தனை இணைப்புகள் உங்களுக்கு காட்ட வேண்டும் ? இன்னும் பிறர் பதிவுகளில் எத்தனை இணைப்புகள் உங்களுக்கு காட்டவேண்டும். அதுபோல் குண்டு வெடித்த அடுத்த நொடியே இவை இந்துவெறியர்களால் கூட நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சொல்லும் அவசரக் குடுக்கைப் பதிவுகள் உங்களுக்கு எத்தனை காட்டவேண்டும் ?

மும்பையிலும் கோவையிலும் மிக மோசமான குண்டுவெடிப்பில் இறந்த பொதுமக்கள் அனைவரும் இந்துத்துவாக்களா ? அமைப்பின் பெயரைக் குறிப்பிடாமல் 'யார்' என்று பொதுப்படுத்திய 'யார்' செய்திருந்தாலும் என பொத்தாம் பொதுவாக பெயரளவில் கண்டனம் தெரிவிப்பதெல்லாம் ஏன் ? அமைப்பின் பெயரைக் குறிப்பிடக் கூடாது என்று யார் கையைப் பிடித்து தடுக்கிறார்கள் ?

கோவி.கண்ணன் சொன்னது…

// Sammy said...

ஒரு பத்து வருஷமா இந்த மாதிரி சம்பவங்கள் நடந்துட்டு தான் இருக்கு ...எத்தனை சினிமாக்களில் கற் சேவா, பஜ்ரங் டல், சிவா சேனா பத்தி காமிசிருகாங்க ..இப்போ உள்ள இந்து மத தலைவர்களுக்கு யாரு சார் செல்ல பிள்ளை .....வருன் காந்தி , ஏன் ஆனார் ?. பிள்ளிபிதில் வருன் காந்தி தோதுருகும்னுல, எந்த ஒரு ஹிந்துவும் கண்டிச்சு இருந்தா ?,..பிள்ளிபித் விடுங்க , எனக்கு தெரிஞ்சு தென்னகத்தில் நிறைய பேருக்கு அவர் ஹீரோ . BJP அடுத்த ப்ரிதமர் வேட்பாளர் யார் ...மோடி ? எப்படி கட்ச்யில் முன்னணியில் வந்தார் ?//

டெல்லியில் இருக்கும் ஒரு இமாம் தான் ஒரு இஸ்லாமியர் என்கிற காரணத்தினால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதைக் கூட இந்த நாடு அனுமதிக்கிறது என்பதையும் நீங்கள் ஏன் நினைத்துப் பார்ப்பது இல்லை ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நேதாஜி பாவம்ங்க அவரை எதுக்கு இதில் இழுத்து , அதுவும் LTTE சமமா. உங்க முந்தய பதிவில் நெஞ்சம் பொறுக்குதிலையே ,"இவனையெல்லாம் பிடிச்சு முட்டிக்கு முட்டி..." ...photo லம் போடீங்க 'child abuse'..கொஞ்சம் யோசிச்சு பாருங்க , அவரு பைக் முன்னாடி தான் படுக்க வச்சாங்க , சிலர் பீரங்கி முன்னாடி ல படுக்க வச்சாங்க ....//

பீரங்கியா.... அதையெல்லாம் நான் பார்க்கவில்லை. நீங்கள் சொல்வதால் தெரிந்து கொள்கிறேன். எனக்கும் கூடத்தான் அல்ஜெஸிரா தொலைகாட்சியில் 'அல்லாஹு அக்பர்' என்று கூறிக் கொண்டு ஒரு முகமூடிக் கூட்டம் அந்தர்யாமி என்கிற ஒருவாலிபனின் தலையில் சுட்ட் காட்சி நினைவுக்கு வருகிறது, அதையெல்லாம் எழுத முடியுமா ?

நான் child abuse, என்று பைக் ஓட்டியவனைக் குறிப்பிட்டது சமூகத்தில் வீன்பெருமைக்காகக் நடத்தப்படும் திருவிளையாட்கள் குறித்தது, அதையும் போராளிக்குழுக்கள், தீவிரவாதிகள் நடத்தும் திருவிளையாடல்களுக்கும் என்ன தொடர்ப்பு ? அதை எப்படி ஒப்பிட முடியும் ?

பாக்கெட் அடித்தவனைப் பற்றி எழுதும் போது போஃபர்ஸ் பற்றியும் எழுது என்றால் எப்படி ? அது வேற......அதெல்லாம் உயர்மட்டம் அதையெல்லாம் எழுதுபவர்களின் ரேஞ்சே வேற !

Nathanjagk சொன்னது…

யப்பா... பின்னு பின்னுன்னு பின்னறாங்களே பின்னூட்டத்தில?? //மதம் என்பது நாம விரும்பாமலேயே நம்மீது திணிக்கப்படும் ஒன்று, இதில் பெருமைப் பட ஒன்றுமே இல்லை// ஆமோதிக்கிறேன் ​ஜிகே.

Samuel | சாமுவேல் சொன்னது…

ஜெகநாதன் ..
//மதம் என்பது நாம விரும்பாமலேயே நம்மீது திணிக்கப்படும் ஒன்று, இதில் பெருமைப் பட ஒன்றுமே இல்லை//

இது மொழி , இனம் அடங்குமா ..பிறக்கும் குழந்தைக்கு ..நான் தமிழன் , தமிழ் இனம் அடையாளம் என்று எதையாவது சொல்ல முடியுமா ? அதுக்காக எல்லாரும் உணர்ச்சி வசபற்றோமே ? இலங்கை பிரச்சினைனா நாம தலையிற்றோமே ...தீவிரவாதம் பண்ணாலும் ஆதரிச்சோமே ?

Samuel | சாமுவேல் சொன்னது…

//டெல்லியில் இருக்கும் ஒரு இமாம் தான் ஒரு இஸ்லாமியர் என்கிற காரணத்தினால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதைக் கூட இந்த நாடு அனுமதிக்கிறது என்பதையும் நீங்கள் ஏன் நினைத்துப் பார்ப்பது இல்லை ?///

இமாம் தேர்தல் நின்னு ஜெயிகலை ...என்னுடைய வாதம் மக்கள் தேரந்தடுதவர்கள் பற்றி, மத கலவரம், மத கொலை...சம்பந்த பட்டவர்கள் தேர்ந்தடுதது பற்றி ......புரியாமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.
கண்டிப்பா ஹிந்துக்கள் ஆதரவு சிருபான்மயற்கு இருக்கு, இது உலகம் அறிந்த உண்மை, இதை பத்தி யாரும் இங்கு விவாதிக்க வில்லை...நம்முடைய விவாதமே 'எந்த ஒரு ஹிந்துவும் ' நீங்க எழுதியதற்கு.

Unknown சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Unknown சொன்னது…

மதம் என்றாலே பிறச்சனைதான், தொடங்கிறவருக்கும் தொடர்புவருக்கும் என்றும் பிறச்சனைதான். நீங்க "முஸ்லிமை "லேசா" நினைத்து மி(ம)திக்கும் சினிமா!" பதிவுக்கு பதில் எழுதனுமா? பாருங்க தொடர்பு இல்லாதவங்க எவ்வளவு பேரு அடிச்சுக்கு சாகுறாங்க...

மனித இயல்பு "தான் செய்வதுதான் சரி" என்று நினைப்பதுதான், ஆனால் இப்போது "தான் செய்வது மட்டும்தான் சரி" என்று நினைப்புதான் தீவிரவாதத்தை/வன்முறையே தூண்டுது...

பீர், சம்மி சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை, அதே நேரத்தில் உலகத்தில் ஒரே கருத்துடன் அனைவரும் வாழ்ந்ததா சரித்திரமே இல்லை... உலகத்தில் உள்ள அனைவருக்கும் "மக்கள் இப்படி இருந்தா நல்லா இருக்குமே" அல்லது "சிலபேர் இப்படி மாறினால் நாம நல்லா இருக்கலாமே" அப்படிங்கிற எண்ணம் இருக்கும், அவ்வாறு சிந்திக்கிறவர்கள் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுவார்கள்/வெளிப்படுத்தபடுவார்கள் , ஒரு விசயத்தை முழுமையாக ஆராயாமல்அதனைப்பற்றி தவறாக கூறுவது மிக மிக தவறானது.


எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு


படம் வெளி வரட்டும் பாக்கலாம்

மொத்ததில் இங்கு கருத்து சொன்ன அனைவரும், ஈசா படத்துக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Sammy said...
ஜெகநாதன் ..

இது மொழி , இனம் அடங்குமா ..பிறக்கும் குழந்தைக்கு ..நான் தமிழன் , தமிழ் இனம் அடையாளம் என்று எதையாவது சொல்ல முடியுமா ? அதுக்காக எல்லாரும் உணர்ச்சி வசபற்றோமே ? இலங்கை பிரச்சினைனா நாம தலையிற்றோமே ...தீவிரவாதம் பண்ணாலும் ஆதரிச்சோமே ?

12:35 AM, August 03, 2009
//

பெரும்பாலும் முற்போக்கு என்ற பெயரில் மொழி இனம் கடந்த மனிதன் வேண்டும் என்று நினைப்போர் சொல்லக் கூடிய வாதம் இவை அடிப்படையில் சாத்தியமற்றவை என்று அறிந்தே வெறும் வாதத்திற்கு இவ்வாறு சொல்லப்படுவது உண்டு.

உங்களுக்கு எந்த ஒரு வெளி அடையாளம் இல்லை என்றாலும் உங்கள் முகம், நிறம் அமைப்பை வைத்து தமிழர் என்று சொல்வது கடினம் அல்ல அது கடினமானதென்றாலும் தென்னிந்தியர் என்று சொல்வது கடினமல்ல, அது கூட கடினமானதாக இருந்தாலும் இந்தியன் என்று சொல்வது கடினமல்ல, ஆனால் மத அடையாளம் தானாக சொன்னாலோ, குறிப்பிட்ட ஆடை அடையாளங்களைப் பேணுவதால் மட்டுமே இன்ன மதக்காரர் என்று சொல்ல முடியும்.

ஒரு இந்தியர் இஸ்லாமியர் என்பதற்காக சவுதி போன்ற தொழுகைத் தவிர்த்து, இஸ்லாமிய நாடுகளில் கிடைக்கும் சலுகைகள் எதுவும் கிடையாது.

உங்களுடைய உரிமைகள் அனைத்தும் நாடு, மொழி சார்ந்தவையே. கர்நாடகத்திலோ இன்னும் பிற மாநிலங்களிலோ அமர்ந்து கொண்டு நீங்கள் தமிழ் தாய்மொழிக் கல்வி வேண்டுவதற்கு, பெறுவதற்கான உரிமை பெற முடியாது. இன / மொழி அடையாளம் என்பது வெளித்தெரியாத உறுப்பு போன்றவை, அவற்றை நீங்கள் விரும்பினாலும் மாற்றிக் கொள்ள / அழிக்க முடியாது. ஆனால் மத அடையாளங்கள் விரும்பி ஏற்றுக் கொள்ளும் ஒன்றா ?

இயற்கையாக அமைந்த மொழி/இன அடையாளமும், பிறப்பினால் அல்லது திணிப்பினால் அமையப்பெறும் மத அடையாளமும் ஒன்று அல்ல.

வெளிநாட்டில் கலவரங்களில் உதை பெறும் எவரும் இன அடையாளத்தால் தான் உதை பெறுகிறார் என்பதை நினைத்துப்பாருங்கள்,ஆனால் இதை நீங்களே விரும்பினாலும் தவிர்க்க முடியாது.

உடல்மீது இருக்கும் நிறமும் சட்டையும் ஒன்று அல்ல. இன்னும் சொல்லப் போனால் உள்நாட்டில் மதக்கலவரங்கள் ஏற்பட்டால் உங்களைப் போலவே இருக்கும் ஒரு சக தமிழன் ஒருவனை மத அடையாளம் பார்த்து வெட்ட முடியும். அதுவே வெளிநாட்டில் இனக்கலவரமாக ஏற்பட்டால் எந்த மதம் சார்ந்தனாகா இருந்தாலும் ஒரே இனத்துக்காரர்கள் ஒன்றாகவே அதை எதிர்கொள்ள வேண்டி இருக்கும், அங்கு நண்பர்கள், அது தான் மத அடையாளத்திற்கும் நிற/இன/மொழி அடையாளத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு.

கோவி.கண்ணன் சொன்னது…

///இமாம் தேர்தல் நின்னு ஜெயிகலை ...என்னுடைய வாதம் மக்கள் தேரந்தடுதவர்கள் பற்றி, மத கலவரம், மத கொலை...சம்பந்த பட்டவர்கள் தேர்ந்தடுதது பற்றி ......புரியாமல் எழுதியதற்கு மன்னிக்கவும்.
கண்டிப்பா ஹிந்துக்கள் ஆதரவு சிருபான்மயற்கு இருக்கு, இது உலகம் அறிந்த உண்மை, இதை பத்தி யாரும் இங்கு விவாதிக்க வில்லை...நம்முடைய விவாதமே 'எந்த ஒரு ஹிந்துவும் ' நீங்க எழுதியதற்க

1:11 AM, August 03, 2009//

இமாம் தேர்தலில் நின்னு ஜெயிக்கல சரி, இமாம் இன்னாருக்கு ஓட்டுப் போடுங்க என்று சொல்லவே மாட்டாரா ? அப்படி அவர் சொன்னார் என்றால் அதை எந்த ஒரு இஸ்லாமியரும் காது கொடுத்துக் கூட கேட்கமாட்டாரா ? என்ன சார் சொல்றிங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஹமாஸையும், அபுஸையாஃபையும், நாமும் அப்படித்தானே பார்க்கிறோம்?
ஜயா, ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை கொல்லும் அனைவரும் தீவிரவாதிகள்தான். அவர்களுக்கு மதச்சாயம் பூசக் கூடாது என்பது தான் என் எண்ணம். எந்த மதமும் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை.

10:19 PM, July 31, 2009
//

பீர், எந்த மதமாக இருந்தாலும் நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தீவிரவாதிகள் ஒன்று சேர்வதற்கானக் காரணமும், தீவிரவாதத்திற்கான காரணமும் மதம் தான். மதம் என்கிற ஒற்றைச் சொல் இல்லை என்றால் எங்கோ இருக்கும் பாலஸ்தீனத்திற்கு பரிதாபப்படும் இஸ்லாமியர்களில் பலர், இலங்கையில் விடுதலைப் புலிகள் அழிவுக்கு மகிழ்ச்சி தெரிவிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது, மோடிகளின் செயலுக்கு சப்பைக்கட்டுபவர்களில் கூட எவரும் என அவ்வாறு நடந்து கொள்பவர்களில் எவரும் தீவிரவாதிகள் கிடையாது என்பதும் உண்மை.

மதங்களின் அடைப்படைக்கொள்கைகள் எதுவும் தீவரவாதத்தை ஆதரிப்பது இல்லை என்பது அனைவரும் அறிந்தவைதான். வருண பேதம் கூட மக்களிடையே வேற்றுமை பேணவில்லை, அதில் சிலர் செய்தவர்கள் செய்த தவறுகளினால் அவ்வாறு நடந்துவிட்டது என்று சொன்னால் அது சரியான கூற்றாகுமா? எதைப் பற்றியுமே காலத்திற்கு ஒவ்வாதைகள் என்கிற கருத்துகள் ஏன் ஏற்படுகின்றன என்தில் இருக்கும் உண்மைகளை ஏன் நாம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

நீங்களும் நானும் நண்பர்கள் என்பதற்கு ஆயிரம் சிறப்பான காரணங்கள் இருக்கலாம், ஆனால் நாம் இருவரும் நொடியில் எதிரிகள் ஆக வேறு வேறு மதம் என்கிற ஒரே ஒரு சிறிய காரணம் காரணமாகிப் போனால் அது மனித இனத்தின் மாபெரும் தவறு / சாபக்கேடு இல்லையா ?

பீர் | Peer சொன்னது…

ஐயா உமக்கு தூக்கமே வராதா? நீங்க தூங்கிற நேரம்தான் எது? ;)

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
ஐயா உமக்கு தூக்கமே வராதா? நீங்க தூங்கிற நேரம்தான் எது? ;)
//

ஐயா எனக்கு எப்போதோ விடிந்துவிட்டது (மணி காலை 10 ஆகிறது என்பதையும் குறிபிட்டு விடுகிறேன்...இல்லை என்றால் 'நான் எப்போதோ கரை ஏறிவிட்டேன்' என்கிற டயலாக் போல இருக்கும்)

:)

பீர் | Peer சொன்னது…

//நீங்களும் நானும் நண்பர்கள் என்பதற்கு ஆயிரம் சிறப்பான காரணங்கள் இருக்கலாம், ஆனால் நாம் இருவரும் நொடியில் எதிரிகள் ஆக வேறு வேறு மதம் என்கிற ஒரே ஒரு சிறிய காரணம் காரணமாகிப் போனால் அது மனித இனத்தின் மாபெரும் தவறு / சாபக்கேடு இல்லையா ?//

பாய்ண்டுக்கு வந்துட்டீங்க, நம்மை நண்பர்களாக்க ஆயிரம் காரணங்கள் இருக்கும் போது, நம்மிருவரையும் நொடியில் எதிரிகளாக்கும் ஒரே காரணியான மதத்தை சினிமாகாரர்கள் ஏன் ஒரு சார்பாக படம்பிடித்து காட்டவேண்டும்?

என்னடா இவன ஆள காணோமேன்னு புடிச்சு இழுக்கிறீரா? கவனிச்சுகிட்டுதான் இருக்கேன், வாதம் சினிமாவ விட்டு திசைமாறிப் போறதாலதான் பேசாம இருக்கேன். மதத்தீவிரவாதம்னு ஒரு பதிவு போடுங்க இத விவாதிப்போம்... ;)

பீர் | Peer சொன்னது…

நான் தூங்காம விடியலுக்காக காத்துகிட்டிருக்கேன்.

(ஹி ஹி.. இங்க இப்பதான் 5 மணியாவுது)

பீர் | Peer சொன்னது…

உங்க ஐடி என்ன கோ?

google: pr.mohammed

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னடா இவன ஆள காணோமேன்னு புடிச்சு இழுக்கிறீரா? கவனிச்சுகிட்டுதான் இருக்கேன், வாதம் சினிமாவ விட்டு திசைமாறிப் போறதாலதான் பேசாம இருக்கேன். மதத்தீவிரவாதம்னு ஒரு பதிவு போடுங்க இத விவாதிப்போம்... ;)
//

இது ஒரு தவறான புரிந்துணர்வு, யாருடைய சட்டையையும் கழட்ட வேண்டும் என்று நான் நினைப்பது கிடையாது. அப்படி உங்களுக்கு என்னுடைய இந்தப் பதிவிலோ, பின்னூட்டத்திலோ எதாவது புரிதல் ஏற்பட்டு நான் உள்நோக்கத்துடன் எழுதி இருக்கிறேன் என்று நீங்கள் மீண்டும் ஒருமுறைக் குறிப்பிட்டால் இந்தப் பதிவை நீக்குவதில் எனக்கு தயக்கமே இல்லை.

பொதுவாக எழுத்துக்கு நான் கொடுக்கும் மதிப்பு தனிமனிதர்களை அது தாக்குவதாக உணரப்பட்டால் அதை குப்பைக் கூடையில் போடலாம் என்பதே, அவை என்னுடைய எழுத்துக்கும் பொருந்தும் என்கிற முடிவில் தான் எழுதிவருகிறேன்.

மததீவிரம் பற்றி புதிதாக எழுத என்ன இருக்கிறது ? பொது உணர்வுடன் பேசிக் கொண்டு இருப்பவர்களை விட திசைத் திருப்பி விடும் அபாயங்கள் அதில் எப்போதும் உண்டு என்பதைப் போன்ற மிக எளிய ஆபத்துகளும், அணுஆயுதங்களின் திரிகளை கொழுத்தும் ஆற்றல் என பெரிய அளவிலான பேராபத்துகள் நிறைந்தவை என்பதைத் தவிர்த்து வேறென்ன எழுத முடியும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
உங்க ஐடி என்ன கோ?

google: pr.mohammed
//

இதெல்லாம் ஓவரு, எனக்கு நீங்கள் ஏற்கனவே மின் அஞ்சல் செய்திருக்கிறீர்கள்.

:)

பீர் | Peer சொன்னது…

//இது ஒரு தவறான புரிந்துணர்வு, யாருடைய சட்டையையும் கழட்ட வேண்டும் என்று நான் நினைப்பது கிடையாது. //

ஐயா, சீரியஸா போகுதேன்னு இடைல ஒரு பிட்ட போட்டா... மேட்டர ரொம்ப சீரியஸாக்குறீங்களே...

முதல்ல கோவின்ற முன் கதை சுருக்கத்த மாத்துங்க, எதுக்கெடுத்தாலும் கோச்சுகிட்டு...

பீர் | Peer சொன்னது…

//இதெல்லாம் ஓவரு, எனக்கு நீங்கள் ஏற்கனவே மின் அஞ்சல் செய்திருக்கிறீர்கள்.//

ஆமா எனக்கும் நினைவிருக்கிறது இதே டைம்ல தான் அனுப்பினேன். ஆனா, அட்ரஸ் புக்ல காணோமே?

Samuel | சாமுவேல் சொன்னது…

பீர்....நீங்க பீர் இல்லை ..நீங்க ஒரு பீர்பால் . உங்க பதில் எல்லாம் ரொம்பவே டிப்லோமடிக்கா இருக்கு. உங்க வலைப்பதிவு பார்த்தேன், நம்ம ஒரு காரைங்க, போல இருக்கு , ரொம்பவே சந்தோசம்ங்க ....
அப்புறம் எல்லாருக்கும் குறிப்பா கோவியாருக்கும், நான் வரம்பு மீறி எழுதியதற்கு மன்னிக்கவும் , நான் முஸ்லிம் இல்லை , ஹிந்துகளை வெருப்பவனும் இல்லை, ஒரு ஆரோக்யமான விவாதமாக இருக்கட்டும்னு எழுதினேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் முஸ்லிம் இல்லை , ஹிந்துகளை வெருப்பவனும் இல்லை, ஒரு ஆரோக்யமான விவாதமாக இருக்கட்டும்னு எழுதினேன்.//

அண்ணே நீங்கள் முஸ்லிமா இந்துவாங்கிறது பிரச்சனை இல்லை, அப்படி என்றால் நான் பீரின் கருத்துக்களுக்கு அவர் பெயரை வைத்து தான் நான் மறுமொழிக் கூறுவதாக நீங்கள் பொருள் கொள்கிறீர்கள். கருத்து எதிர்கருத்து இதில் மதத்தை நுழைத்துப் பார்ப்பது தேவையற்றது. அப்படிப் பார்த்தால் உன் முதுகை நீ பார்த்துக் கொள் என்பது போல் எஸ்கேப் இசம் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// //இது ஒரு தவறான புரிந்துணர்வு, யாருடைய சட்டையையும் கழட்ட வேண்டும் என்று நான் நினைப்பது கிடையாது. //

ஐயா, சீரியஸா போகுதேன்னு இடைல ஒரு பிட்ட போட்டா... மேட்டர ரொம்ப சீரியஸாக்குறீங்களே...

முதல்ல கோவின்ற முன் கதை சுருக்கத்த மாத்துங்க, எதுக்கெடுத்தாலும் கோச்சுகிட்டு...

10:43 AM, August 03, 2009
Delete
Blogger பீர் | Peer said...

//இதெல்லாம் ஓவரு, எனக்கு நீங்கள் ஏற்கனவே மின் அஞ்சல் செய்திருக்கிறீர்கள்.//

ஆமா எனக்கும் நினைவிருக்கிறது இதே டைம்ல தான் அனுப்பினேன். ஆனா, அட்ரஸ் புக்ல காணோமே?//

என்னது உங்கப் பதிவை ஹேக் பண்ணிட்டாங்களா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !

பீர் | Peer சொன்னது…

//Blogger Sammy said...

பீர்....நீங்க பீர் இல்லை ..நீங்க ஒரு பீர்பால் .//


//Blogger கோவி.கண்ணன் said...

என்னது உங்கப் பதிவை ஹேக் பண்ணிட்டாங்களா ?//

என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணலேயே?

பீர் | Peer சொன்னது…

//Blogger கோவி.கண்ணன் said...
... அண்ணே நீங்கள் முஸ்லிமா இந்துவாங்கிறது பிரச்சனை இல்லை, அப்படி என்றால் நான் பீரின் கருத்துக்களுக்கு அவர் பெயரை வைத்து தான் நான் மறுமொழிக் கூறுவதாக நீங்கள் பொருள் கொள்கிறீர்கள். கருத்து எதிர்கருத்து இதில் மதத்தை நுழைத்துப் பார்ப்பது தேவையற்றது.//

சரியான கருத்து, கோ. வரவேற்கிறேன்.

Samuel | சாமுவேல் சொன்னது…

சுருக்கமா நீங்க சொன்ன கருத்தை படீங்க .....

உங்க பதவில் எழுதியது ..
// ....என்றால் இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாத கும்பல்களை நோக்கித்தான். இந்துத்துவாக்களைக் கண்டிக்க எந்த ஒரு இந்துவும் முன்வருவது போல் இஸ்லாமிய சமூதாய//

கேட்ட கேள்வி ....
//பிள்ளிபிதில் வருன், குஜராதில் மோடி எப்படி ஜெயிதார்கள் ....//

உங்க பதில் ....
//டெல்லியில் இமாம், பாகிஸ்தான் ஆதரவா அறிக்கை விட்டார், அவர் சொன்னா முஸ்லிம் சமுதாயம் கேட்காதா ? .....///

Samuel | சாமுவேல் சொன்னது…

உங்க பதவில் எழுதியது ..
// .பிறக்கும் எவருக்கும் பிறக்கும் போதே எதாவது மத அடையாளம் இருக்கிறது என்று எவரேனும் நிரூபனம் செய்தால் நான் எழுதியது அனைத்தையும் அழித்துவிடுகிறேன்//

கேட்ட கேள்வி ....
//பிறக்கும் எவருக்கும் பிறக்கும் போதே எதாவது மொழி , இனம் அடையாளம் இருக்கிறதா ....//

உங்க பதில் ....
//பிறகும் குழந்தை ரொம்ப எளிதா விட்டுட்டு ..உங்களையும் , என்னையும் பத்தி எழுதிறீங்க , உடல் அமைப்பை வைத்து என்னால சொல்ல முடியும், அவன் தமிழன் என்று .....///


பின்னுட்டத்தில் செஞ்சுரி போற்றுவீங்க போல இருக்கு ...

கோவி.கண்ணன் சொன்னது…

// Sammy said...
உங்க பதவில் எழுதியது ..
// .பிறக்கும் எவருக்கும் பிறக்கும் போதே எதாவது மத அடையாளம் இருக்கிறது என்று எவரேனும் நிரூபனம் செய்தால் நான் எழுதியது அனைத்தையும் அழித்துவிடுகிறேன்//

கேட்ட கேள்வி ....
//பிறக்கும் எவருக்கும் பிறக்கும் போதே எதாவது மொழி , இனம் அடையாளம் இருக்கிறதா ....//

உங்க பதில் ....
//பிறகும் குழந்தை ரொம்ப எளிதா விட்டுட்டு ..உங்களையும் , என்னையும் பத்தி எழுதிறீங்க , உடல் அமைப்பை வைத்து என்னால சொல்ல முடியும், அவன் தமிழன் என்று .....///
//

நான் எழுதியதில் முன்னுக்கு பின் முரண் இருப்பதாக தெரியவில்லையே. எதுக்கு இதைச் சுட்டிக்காட்டுகிறீர்கள் என்று புரியவில்லை.

//பின்னுட்டத்தில் செஞ்சுரி போற்றுவீங்க போல இருக்கு ...
//

எல்லாம் ஈசன்...ஈஸா அருள் !

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
//Blogger Sammy said...

பீர்....நீங்க பீர் இல்லை ..நீங்க ஒரு பீர்பால் .//


//Blogger கோவி.கண்ணன் said...

என்னது உங்கப் பதிவை ஹேக் பண்ணிட்டாங்களா ?//

என்னய வச்சு காமெடி கீமெடி பண்ணலேயே?

11:18 PM, August 03, 2009
//

உண்மையைச் சொல்லுங்க நீங்க அடிக்கிற ஜோக்கை எல்லோரும் கு'பீர்' ஜோக்குன்னு தானே சொல்லுவாங்க.

பீர் | Peer சொன்னது…

கு'பீர்' ஜோக்குகள்...
அய்... இது சோக்கா கீதே... ;)

தருமி சொன்னது…

இந்தக் கட்டுரையில் கூட //உணர்ச்சி வசப்பட்ட உணர்வுள்ள முஸ்லிம் இளைஞர்கள் வெடி குண்டுகளை மணி ரத்தினத்தின் வீட்டில் வீசினர்.....இந்த வழக்கில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்// என்று இருக்கிறது.

என் ஐயம்: யார் "உணர்ச்சி வசப்பட்ட உணர்வுள்ள முஸ்லிம் "?
யார் "அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்" என்று?!

தருமி சொன்னது…

அதென்னங்க, சில கேள்விகள் கேட்டா பதிலே வர மாட்டேங்குது????????

பீர் | Peer சொன்னது…

தருமி, இன்றே இப்படம் கடைசின்னு நேத்தே போர்டு போட்டாங்களே நீங்க பாக்கலையா?

(தருமி என்ற பெயர் பதிவர்கள் அழைக்கத்தான் வைத்தேன், ஆனாலும் தருமி ஐயா என்றே அழைக்கிறீர்கள் என்று நீங்கள் வருந்தியதால், தருமிக்கு பின்னால் தொங்கிய ஐயாவை தூக்கிவிட்டேன்) ;)

Samuel | சாமுவேல் சொன்னது…

நம்ம 'பீர்'பால் , அவருடைய பதிவில் இந்த பதிவு ஒரு வழியா முடிவுக்கு வந்ததுல மகிழ்ச்சி தெரிவிசிருந்தார், அதான் பதில் எழுதவில்லை. 'பீர்'பால் இந்த இடுகைக்கு மன்னிக்கவும்.

///என் ஐயம்: யார் "உணர்ச்சி வசப்பட்ட உணர்வுள்ள முஸ்லிம் "?////
மணிரத்னம் வீட்டில் குண்டு வைத்தவர்கள்.

//யார் "அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள்" என்று?!///
போலீஸ் கைது செய்த, குண்டு வைக்காத இளைஞர்கள் .

என்னுடைய சிறிய அறிவுக்கு புரிந்தது, எழுதிட்டேன் .

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்