பின்பற்றுபவர்கள்

22 ஜூலை, 2006

சார்பு நிலை - வலை அரசியல் !

தனித்தன்மை என்ற சிறப்பை அழிப்பது சார்பு நிலை என்னும் தன்மையே ஆகும். சார்பு நிலை என்றால் ஒன்றைச் சார்ந்து இருப்பது என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் ஒன்றைச் சார்ந்தே இருக்கவேண்டும் ? என்பதை எத்தனைப் பேர் தங்களுக்குள் கேட்டுக்கொள்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

நமக்கு சில விசயங்கள் பிடித்திருக்கும், அதன் மூலம் ஒத்த கருத்துக்களை உடைய ஒருவரை நமக்கு பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஒத்தக் கருத்துடயவருக்கும் நமக்கும் சில விசயங்களில் கருத்து வேற்றுமை இருக்கலாம். ஆனால் அந்த கருத்து வேற்றுமைகளை நாளடைவில் நம்மைச் சார்ந்தவர் வைத்திருப்பது என்பதால் நாமும் நாளடைவில் அந்த வேற்றுக் கருத்துக்களை முதலில் சகித்தாலும், பிறகு ஊள்வாங்கிக் கொள்வதால் நாளடைவில் மாற்றம் ஏற்பட்டு, அந்த கருத்துக்களை வைத்திருப்பவரைக் காட்டிலும் அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடுவோம்.

ஆக நம் தனித்தன்மையாக எதிர்த்துவந்த சில மாற்றுக் கருத்துக்களை, விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு வேண்டாத பழக்கம் போல் புதிதாக ஏற்றுக் கொண்ட சார்பு நிலை மூலம் நாமே நம் தனித்தன்மை அழிக்க துணிந்தும் விடுகிறோம்.

இதுமட்டுமல்ல, முன்பு தன் சொந்தக் கருத்துக்களை, தான் விரும்பிய விசயங்களை முன்னைக் காட்டிலும் முனைப்புடன் தானே அழிப்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்து விடுவோம். இதில் யாருக்கு வெற்றி ? கண்டிப்பாக சார்பு நிலைக்குள் (தெரியாமல்) சிக்கவைத்தவருக்குத் தான் வெற்றி. அவர் எதிர்க்கும் விசயங்களை அவர் தனி ஒருவராக எதிர்க்கவேண்டியதில்லை. மேலும் அவரை நேரிடையாக எதிர்க்கும் விசயங்களையும் அவரே எதிர்க்கவேண்டும் என்ற நிலை இல்லாது, அந்த வேளையை சார்பு நிலையில் பீடிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் சார்பு நிலையில் பீடிக்கப்பட்டவருக்கு மூளை மழுங்கியதுதான் மிச்சம், சுய சிந்தனைகளை தொலைத்தது தான் மிச்சம்.

ஒரு விசயம் அல்லது ஒரு கருத்து நமக்கு மற்றவர்களிடம் ஒத்துப் போகிறதா ? அதைப் பாராட்டுவதுடன்,நிறுத்திக் கொள்ளலாம். அவருடைய எல்லாக் கருத்துக்களுக்கும் முட்டுக் கொடுப்பது தேவையற்றது. அவ்வாறின்றி நமக்கோ, நமக்கு பிடித்த மற்றவருக்கோ சில விசயங்களில் மாற்றுக் கருத்து இருக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா ? அது தவறான கருத்து எனும் போது தெளியவைக்க முயலலாம். இல்லையெனில் விட்டுவிடலாம். மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதற்காக முற்றிலும் நிராகரிக்கத் தேவையில்லை. அப்படி நிராகரித்தால் சார்ப்பு நிலை உங்களுக்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு தெளிவடைவது நலம்.
நமக்கு தெரியாமல் வளரும் சார்பு நிலையை நாமே கண்டு கொள்ளாமல் விட்டால், தனித்தீவு, குழுமங்கள் இவற்றில் ஏதோ ஒன்றில் சிக்கிக் கொள்வோம். கிணற்றுத் தவளைக்கும் நமக்கும் பிறகு வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

அவரவர் கருத்து அவரவர்கே, நாம் சார்ந்துள்ளவர்களின் கருத்தாக்கங்கள் எல்லா வற்றையும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பது தேவையற்ற செயல்தானே. ஒரு பூந்தோட்டத்தில், ஒரே இனத்தில் ஒரே தோற்றத்தில் இருக்கும் வெவ்வேறு (ரோஜா)செடிகளில், பூக்கள் வேறு நிறங்களில் பூக்களாம். இந்த வண்ணம் எனக்கு பிடிக்க வில்லை என்று அந்த வண்ணம் சார்ந்த செடிகளை வெட்டி வீசினால், மீதம் இருக்கும் செடிகளில் பூக்கள் பூத்தாலும் பூந்தோட்டம் வண்ணமயமாய் இருக்காது !


புதிய வலைப்பாதிவாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வலை அரசியலில் இதுவும் ஒன்று. அவர்கள் ஏதாவது ஒரு குழுவில் சிக்கிக்கொண்டு தங்கள் சுய சிந்தனைகளைத் தொலைத்துவிடக் கூடதென்ற சின்ன அக்கறை.

இந்த பதிவுக்கு என்ன அவசியம் ? அது ஒரு சிதம்பர ரகசியம்.

இந்த கட்டுரையின் கருத்தையும் சார்பு நிலையற்றுப் படித்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நல்லது. அந்த விதத்தில் இந்கு பின்னூட்டமிட்ட திரு சிவபாலனின் கருத்துக்களை நான் மதிக்கிறேன்.

பிகு : இந்த பதிவு ... முந்தைய
இந்த பதிவின் தொடர்ச்சி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

64 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கோவி கண்ணன் என்னோடு ஒத்த கருத்தை முன்வைத்ததற்கு பாராட்டுக்கள்..

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சிறில் Alex said...
கோவி கண்ணன் என்னோடு ஒத்த கருத்தை முன்வைத்ததற்கு பாராட்டுக்கள்.. :) //
சீறில் வாங்க வாங்க, உங்களை மாதிரி நல்ல பதிவாளர்கள் இருப்பதால் தான் எழுந்து ஓடாமல் எழுதத் தோன்றுகிறது.
:))
உம்மோடு சேர்ந்து யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வலையுலகம் :):)

பெயரில்லா சொன்னது…

சார்புநிலை குழுக்களில் விழாதிருக்க அறிவுறுத்தும் உங்கள் கருத்துடன் சார்ந்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

// மணியன் said...
சார்புநிலை குழுக்களில் விழாதிருக்க அறிவுறுத்தும் உங்கள் கருத்துடன் சார்ந்திருக்கிறேன்//

இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தெரிந்திருப்பதால் தான் வலையுலகில் 'தாக்கு' தவிர்க்க முடிகிறது :))

பெயரில்லா சொன்னது…

//புதிய வலைப்பாதிவாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வலை அரசியலில் இதுவும் ஒன்று. அவர்கள் ஏதாவது ஒரு குழுவில் சிக்கிக்கொண்டு தங்கள் சுய சிந்தனைகளைத் தொலைத்துவிடக் கூடதென்ற சின்ன அக்கரை.//
intha karuththil n-aan unggaLoodu oththu pookiReen.

பெயரில்லா சொன்னது…

இதில் பெரிய சோகம் என்னவெனில், ஒரு கருத்துக்கு ஆதரவாய்ப் பாராட்டி எழுதியததால் மட்டுமே மாற்றுக் கருத்தோரால் எதிரி என முத்திரை குத்தப்பட்டு அவமதிக்கப்படும் அவலம்தான்!

உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்!
புதியவருக்கு ஒரு முன்னெச்சரிக்கையாய் இருக்குமே அன்றி, பலன் ஏதும் விழையுமோ என்பது ஒரு கேள்விக்குறியே!

பாராட்டுகள்!

கோவி.கண்ணன் சொன்னது…

// SK said...
இதில் பெரிய சோகம் என்னவெனில், ஒரு கருத்துக்கு ஆதரவாய்ப் பாராட்டி எழுதியததால் மட்டுமே மாற்றுக் கருத்தோரால் எதிரி என முத்திரை குத்தப்பட்டு அவமதிக்கப்படும் அவலம்தான்!//
சொல்ல மறந்துபோய் விடுப்பட்ட விசயத்தை மிகச்சரியாக சொல்லியிருக்கிறீர்கள்... பாராட்டுக்கள்
:)))

கோவி.கண்ணன் சொன்னது…

// SK said... உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்!//
உணர்ந்ததன் பிறகுதான் வலைப் பதிகளே எழுத ஆரம்பித்தேன் :)))

பெயரில்லா சொன்னது…

நல்லா சொன்னீங்க அண்ணாத்த, ஒரு பதிவு போய் பின்னூட்டம் இட்டா நமக்கு ஒரு குருப்பே வந்து நான் யாரு, என் குலம் என்ன, என் கோத்திரம் என்னனு அவங்களே ஒரு ஜாதகம் கணிச்சு நமக்கு அனுப்பி வைக்குறாங்க. நமக்கும் இங்க அப்ப அப்ப(நல்லா படிக்கவும்) அப்ப அப்ப வேலை பார்த்து மண்டை காய்ச்சலா இருக்கும் போது படிப்பதற்கு நல்லா தமாசா இருக்கும். ஆதனால இத எல்லாம் நான் கண்டுக்குறது இல்ல.

யாரையும் சார்ந்து இல்லாமல் தனிமையாக இருப்பது தான் எல்லாருக்கும் நல்லது.
நல்ல பதிவு அண்ணாத்த!

பெயரில்லா சொன்னது…

//உணர்ந்ததன் பிறகுதான் வலைப் பதிகளே எழுத ஆரம்பித்தேன் :))) //
ஹிஹி.....
அக்கரை - அக்கறை
எ.பி. இன்னிக்கு ஆப்சென் டா ;)

கோவி.கண்ணன் சொன்னது…

// நாகை சிவா said...
//உணர்ந்ததன் பிறகுதான் வலைப் பதிகளே எழுத ஆரம்பித்தேன் :))) //
ஹிஹி.....
அக்கரை - அக்கறை
எ.பி. இன்னிக்கு ஆப்சென் டா ;)
//
சிவா நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு பதிவு போய் பின்னூட்டம் இட்டா நமக்கு ஒரு குருப்பே வந்து நான் யாரு, என் குலம் என்ன, என் கோத்திரம் என்னனு அவங்களே ஒரு ஜாதகம் கணிச்சு நமக்கு அனுப்பி வைக்குறாங்க.//
நீங்க சொல்வதும், விதமும் நல்ல தமாஸ் :)) இன்றைக்கு நான் படித்த சிறந்த காமடி இது :)))

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் அய்யா,

நீங்கள் சொல்வதை என்னால் முழுமையாக ஏற்று கொள்ள முடியவில்லை. எனினும் சில கருத்துக்களை ஏற்று கொள்கிறேன்.

நான் பொதுவாக சொல்லாமல், என்னைப் பற்றி இங்கே குறிப்பிட விரும்பிகிறேன்.

அதாவது, நான் இங்கே நுழையும் போது எநத ஒரு அரசியலில் நுழையாமல் சென்று கொண்டிருந்தேன்.

ஆனால் என் ஆழ்மனதில் உள்ள சில் விசயங்கள் சிலருடைய கருத்துடன் ஒத்துப் போனது.

அதனால் நானும் எனக்கு தெரிந்த கருத்துக்களை முன் வைத்தேன்.

இந்த விசயத்தை பொருத்தவரையில் என்னை யாரும் சார்பு நிலைக்கு உந்தவில்லை.

என்னை பொருத்தவரையில் இப்பதிவு எதோ சார்பு நிலையுடன் இருப்பதாக உணர்கிறேன்.

மன்னிக்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த விசயத்தை பொருத்தவரையில் என்னை யாரும் சார்பு நிலைக்கு உந்தவில்லை.//

யாரும் உந்துகிறார்கள் என்று நான் எங்கும் குறிப்பிடவில்லை. நாம் எவ்வாறு சிக்கிக்கொள்கிறோம் என்று தான் சொல்லியிருக்கிறேன்.

//என்னை பொருத்தவரையில் இப்பதிவு எதோ சார்பு நிலையுடன் இருப்பதாக உணர்கிறேன்.//

இக் கட்டுரையைப் படிப்பவர்கள் அல்லது நீங்கள் தான் இப்பதிவில் 'ஏதோ' என்று சொல்லாமல் எது என்று சொன்னால், கட்டுரையில் அது குறை என்று கண்டு திருத்துவேன். தயங்காமல் சொல்லுங்கள்.

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் அய்யா,

உந்துதல் சக்தியும் கருத்தொற்றுமையும் ஒருவரை "சிக்கவைக்கிறது". (இந்த வார்த்தை என்னால் ஏற்றுக் கொள்கிறோம்.)

எல்லோருக்கும் கொஞ்சம் சுய புத்தி இருக்கும் என நம்புகிறேன். யாரும் யாரையும் சிக்க வைக்க முடியாது என்பது என் கருத்து.

நீங்கள் இப்பதிவில் நடுநிலையார்கள் மனதில் வைத்து சொல்ல முற்படுவது, ஏனோ பு,பி.களுக்கு முழுவதுமாக ஒத்துப் போகிறது. இது என்னுடைய பார்வை. (ஒரு வேளை மாலைக் கண்ணோ).

பெயரில்லா சொன்னது…

உந்துதல் சக்தியும் கருத்தொற்றுமையும் ஒருவரை "சிக்கவைக்கிறது". (இந்த வார்த்தை என்னால் ஏற்றுக் கொளமுடியவில்லை,)

பெயரில்லா சொன்னது…

//எல்லோருக்கும் கொஞ்சம் சுய புத்தி இருக்கும் என நம்புகிறேன். யாரும் யாரையும் சிக்க வைக்க முடியாது என்பது என் கருத்து.//
சிவபாலன், சிக்க வைக்க முடியும், உங்கள் உணர்ச்சிகளை மெல்லமாக தட்டி விட்டு சிக்க வைப்பது தான் தற்பொழுது தமிழ் வலைப்பதிவில் நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் இருந்து தப்பிப்பது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. ஆனால் அந்த உணர்ச்சி வேகத்தில் ஒரு சில இல்லை பல பேர் மாட்டி விடுகின்றார்கள்.
இது என் விளக்கம், கண்ணன், மிக சிறந்த விளக்கத்தை தருவார் என்று எண்ணுகின்றேன்.

பெயரில்லா சொன்னது…

நீங்க சொல்வதும், விதமும் நல்ல தமாஸ் :))
இது தாமஷ் இல்லங்க. உண்மையாக நடப்பது, நடந்து கொண்டு இருப்பது.

// இன்றைக்கு நான் படித்த சிறந்த காமடி இது :))) //
அப்படினா சரி.... ;)))))

பெயரில்லா சொன்னது…

//எல்லோருக்கும் கொஞ்சம் சுய புத்தி இருக்கும் என நம்புகிறேன். யாரும் யாரையும் சிக்க வைக்க முடியாது என்பது என் கருத்து.

நீங்கள் இப்பதிவில் நடுநிலையார்கள் மனதில் வைத்து சொல்ல முற்படுவது, ஏனோ பு,பி.களுக்கு முழுவதுமாக ஒத்துப் போகிறது. இது என்னுடைய பார்வை. (ஒரு வேளை மாலைக் கண்ணோ).
//
I second this..ஆனால், சார்பு நிலைத் தத்துவத்துக்குள் விழாமல் இருக்க, முழுப் பதிவையும், சிவபாலனின் முழுப் பின்னூட்டத்தையும், இரண்டையுமே நான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதை ஹி ஹி.. தெரிவித்துக் கொள்கிறேன் ;)

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் இப்பதிவில் நடுநிலையார்கள் மனதில் வைத்து சொல்ல முற்படுவது, ஏனோ பு,பி.களுக்கு முழுவதுமாக ஒத்துப் போகிறது.//

பு.பி.ங்கள் என்றுக் கூறிக்கொள் பவர்களின் சார்பு நிலை தங்களுக்குத் தெரிந்திருந்தால்.. அவர்களின் கட்டுரையின் பின்னூட்டங்கள் அவற்றின் சார்புநிலைகளை 50% சார்ந்து (ஒத்து ஊதியதாக) இருக்கும்.

50% விகிதம் கேலி, (ஜல்லியடித்தல் என்று) ஏளனமாகவே கட்டுரையில் உள்ள இட்டுக்கப்பட்ட பொய்களை சுட்டிக் காட்டியவைகளாக இருக்கும். என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

நீங்கள் சொல்வது சரிதான்.. சொந்த புத்தி உள்ளவர்கள் ஜல்லியடித்தலில் சிக்கிக் கொள்வதில்லை :))

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் அய்யா,

தங்கள் மனதை புன்படுத்தும் நோக்கில் இங்கே நான் எதும் சொல்லவில்லை என நம்புகிறேன். அப்படி இருந்தால் மன்னிக்கவும்.

நான் மதிக்கும் வலைப் பதிவாளர்களில் நீங்களும் ஒருவர்.

நிச்சயம் தேவையான ஒரு பதிவு

மிக்க நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//தங்கள் மனதை புன்படுத்தும் நோக்கில் இங்கே நான் எதும் சொல்லவில்லை என நம்புகிறேன். அப்படி இருந்தால் மன்னிக்கவும்.
//
இது நல்ல ஜோக் ... என் கருத்துக்கு எதிர்கருத்துக் கூடாது ... அல்லது நான் சொல்வது சரி என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா ?
புன்படுவதா ? இதற்கெல்லாம் புன்படக்கூடாது ... உங்கள் கருத்துக்கள் பன்படத்தான் வைக்கிறது.

உங்கள் கருத்துகளை தெரிவிப்பதில் உள்ள தயக்கமும், ஏற்றுக் கொள்வேனா ? என்ற நினைப்பும் தான் 'புன் பட' என்ற வார்த்தையை உங்களை எழுத தூண்டியிருக்கிறது.
:))))))))))

பெயரில்லா சொன்னது…

நாகை சிவா

உணர்வுகள் கருத்தொற்றுமை ஏற்பட்டு வெவ்வேறு விதங்களாக வெளிப்படும். ஒருவர் அவ்வாறு வெளிப்படுத்துவதால் சிக்கிக் கொண்டார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் அய்யா,


//உங்கள் கருத்துகளை தெரிவிப்பதில் உள்ள தயக்கமும், ஏற்றுக் கொள்வேனா ? என்ற நினைப்பும் தான் 'புன் பட' என்ற வார்த்தையை உங்களை எழுத தூண்டியிருக்கிறது.//


உணமைதான். ஏற்றுக்கொள்கிறேன்.

நன்றி.

பெயரில்லா சொன்னது…

// என் கருத்துக்கு எதிர்கருத்துக் கூடாது ... அல்லது நான் சொல்வது சரி என்று எங்காவது சொல்லியிருக்கிறேனா ? புன்படுவதா ? இதற்கெல்லாம் புன்படக்கூடாது ... //
கோவி, சில பேர் தன் நண்பர்கள் இப்படி நினைப்பாங்களோன்னு நினைச்சு சில கருத்துகளுக்கு எதிர்கருத்து கொடுத்துப் "புண்படுத்த" விரும்பாம பாலிஷ்டா போவாங்க.. அதுவும் ஒரு மாதிரி சார்பு நிலைல சேர்ந்துடும்.. அதையும் சொல்லுங்க :)

பெயரில்லா சொன்னது…

மாற்றம் என்பது எல்லா நிலையிலும் நிகழ்கிறது. காலம் இதில் ஒரு முக்கிய காரணி. இது ஒருவருடைய சுயசிந்தனைக்கும் பொருந்தும்.

//ஒத்தக் கருத்துடயவருக்கும் நமக்கும் சில விசயங்களில் கருத்து வேற்றுமை இருக்கலாம். ஆனால் அந்த கருத்து வேற்றுமைகளை நாளடைவில் நம்மைச் சார்ந்தவர் வைத்திருப்பது என்பதால் நாமும் நாளடைவில் அந்த வேற்றுக் கருத்துக்களை முதலில் சகித்தாலும், பிறகு உள்வாங்கிக் கொள்வதால் நாளடைவில் மாற்றம் ஏற்பட்டு, அந்த கருத்துக்களை வைத்திருப்பவரைக் காட்டிலும் அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடுவோம்//.

இந்தக்கூற்று ஏற்க இயலாததாய் இருக்கிறது. எடுத்துகாட்டாக நானும் முத்து தமிழினியும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்(ஒரு வலைப்பதிவில், குழுமத்தில்). சுந்தர ராமசாமி குறித்து முன்பு எனக்கு என்ன எண்ணம் இருந்ததோ அதேதான் இன்றுவரை இருக்கிறது. அவருடன் பழகியதால் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அவரும் தன் எண்ணங்களை மாற்றிக்கொள்ளவில்லை. குழும இயக்கங்கங்களினால் தனித்தன்மை போய்விடும் என்பது ஏற்க இயலாதது.
இந்த தனித்தன்மை குறித்து திராவிட தமிழர்கள் தளத்தில் பலமுறை சொல்லியிருக்கிறோம். ஒரு பொது கருத்தில் ஒன்றினைவதால் ஒருவரின் தனித்தன்மை போய்விடாது. தேர் இழுக்க வேண்டுமென்றால் கூடித்தான் ஆக வேண்டும்.

சுருக்கமாக, குழும இயங்கங்களென்பதே பாவகரமானது போன்ற தோற்றத்தை இந்த பதிவு தருகிறது.

இது எனது சுய கருத்து என்பதை குறிப்பிட விரும்புகிறேன்:-))

கோவி.கண்ணன் சொன்னது…

// பொன்ஸ் said... கோவி, சில பேர் தன் நண்பர்கள் இப்படி நினைப்பாங்களோன்னு நினைச்சு சில கருத்துகளுக்கு எதிர்கருத்து கொடுத்துப் "புண்படுத்த" விரும்பாம பாலிஷ்டா போவாங்க.. அதுவும் ஒரு மாதிரி சார்பு நிலைல சேர்ந்துடும்.. அதையும் சொல்லுங்க :) //
பொன்ஸ் அவர்கள் சொல்வது முற்றிலும் சரியான கருத்தாக நான் கருதுகிறேன்.
பொன்ஸ் அவர்களே ! அப்ப அப்ப வந்து தலையில் கைவைத்து ஆசிர்வாதம் பண்ணிட்டு போங்க :))

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்துகுமரன் said...
மாற்றம் என்பது எல்லா நிலையிலும் நிகழ்கிறது. காலம் இதில் ஒரு முக்கிய காரணி. இது ஒருவருடைய சுயசிந்தனைக்கும் பொருந்தும். //

நீங்கள் சொல்வது சிலருக்குத்தான் பொருந்துகிறது. இதில் மாற்றுக் கருத்து இல்லை.

புதிதாக வலைப்பதிவுக்குள் நுழையும் பலர் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் பின்னூட்டங்களைப் போட்டுவிட்டு வசுவுகளை வாங்கிக் கொண்டு சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லிவிடுகிறார்கள்.
:)))

அந்த விதத்தில் சமீபத்தில் மனம் நொந்த ஒருவர் குமரன் (எண்ணம்) அவரைப் போன்றவர்கள் சிலவற்றை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக எழுதினேன்.

சார்பு நிலையில் சிக்கிக் கொள்ளாதாவர்களுக்கு இந்த பதிவு தேவையற்றதாக தெரிவதில் எனக்கு வியப்போ, ஏமாற்றமோ இல்லை
:)))

பெயரில்லா சொன்னது…

//அந்த விதத்தில் சமீபத்தில் மனம் நொந்த ஒருவர் குமரன் (எண்ணம்) அவரைப் போன்றவர்கள் சிலவற்றை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக எழுதினேன்//

உங்கள் நற்பணிக்கு எனது ஆதரவு மற்றும் வாழ்த்துகள் கோவி.கண்ணன்.

பெயரில்லா சொன்னது…

//பொன்ஸ் அவர்களே ! அப்ப அப்ப வந்து தலையில் கைவைத்து ஆசிர்வாதம் பண்ணிட்டு போங்க :))//
பொன்ஸ், நல்லா படிக்கவும்., கை (துதிக்கை) வைத்து தான். கால் வைத்து அல்ல. ஆயிரம் தான் இருந்தாலும் கண்ணன், எங்க ஊருக்காரு.

கோவி.கண்ணன் சொன்னது…

// முத்துகுமரன் said... உங்கள் நற்பணிக்கு எனது ஆதரவு மற்றும் வாழ்த்துகள் கோவி.கண்ணன். //

எவர் எந்தக்கருத்துக்கள் எழுதினாலும் தயக்கமில்லாத சொந்தக் கருத்துக்களாக இருக்கவேண்டும் என்பது தான் நான் எல்லோரிடமும் கேட்டுக் கொள்ளவிளைவது. உங்கள் புரிந்துணர்வுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// shiva said.. பொன்ஸ், நல்லா படிக்கவும்., கை (துதிக்கை) வைத்து தான். கால் வைத்து அல்ல. ஆயிரம் தான் இருந்தாலும் கண்ணன், எங்க ஊருக்காரு. //

சிவா...சரியாக கையை தும்பிக்கை என்று சொல்லியிருக்கிறீர்கள்... காட்டுங்கள் உங்கள் காலை :)))

பெயரில்லா சொன்னது…

//சிவா...சரியாக கையை தும்பிக்கை என்று சொல்லியிருக்கிறீர்கள்... காட்டுங்கள் உங்கள் காலை :))) //
ஹிஹி. பரவாயில்ல இருக்கட்டும் அண்ணன்.

பெயரில்லா சொன்னது…

//எவர் எந்தக்கருத்துக்கள் எழுதினாலும் தயக்கமில்லாத சொந்தக் கருத்துக்களாக இருக்கவேண்டும் //

கண்ணன், இதைச் செய்யும் போது புதியவர்கள் சந்திக்கக் கூடிய ஒன்றையும் சொல்லிக் கொள்கிறேன்..

உங்கள் கருத்துகள் இருக்கும்.. உங்கள் கருத்துகளாக இருக்கும்னு மத்தவங்க நினைப்பதும் இருக்கும்.. இதனால், உங்கள் உண்மைக் கருத்துகளை முன்வைக்கும் போது, "நீங்களா இப்படி?", "சும்மாவாச்சும் பொதுவில் நல்ல பெயர் வாங்கச் சொல்றீங்களா?" மாதிரியான விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி இருக்கும்..

இதை விடுத்து உண்மையைப் பேசுகிறீர்கள் என்று புரிந்து பாராட்டுபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.. இதற்கும் வருந்தக் கூடாது..

பெயரில்லா சொன்னது…

சுந்தர ராமசாமி உதாரணம் இங்கு சரியானதாகப் படவில்லை "எனக்கு".
எனக்கு மீன் சோறு பிடிக்கும் உனக்கு கறிசோறு பிடிக்கும் என்பது போன்ற தனிப்பட்ட விருப்புகள் அவை.
கோவியார் சொல்ல வருவது ஒரு பொதுவான நிகழ்வில் ஒருவருக்கொருவர் இருக்கும் சிலபல கருத்து வேறுபாடுகளைக் குறித்து என நான் நம்புகிறேன்.

அந்தக் குறிப்பிட்ட பிரச்சினையின் அணுகுமுறைகளில் இருக்கும் வேறுபாடுகளைக் காலப்போக்கில் உள்வாங்கி, குறைந்த பட்சம் மறுத்துச் சொல்லாத அளவிற்காவது சகிப்புத்தன்மை வளர்ந்து விடுகிறது, சார்பு நிலையால், எனவே நான் கருதுகிறேன்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் தனிப்பட்டவையாகவே இருந்து நிற்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// நாகை சிவா said...
ஹி. பரவாயில்ல இருக்கட்டும் அண்ணன்.
//
என்னதான் ஒரே ஊர்காரர் என்றாலும் தும்பிக்கை தெரிந்த உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லை. காலை வாரிவிட மாட்டேன் :)))

பெயரில்லா சொன்னது…

SK அய்யா,

நீங்கள் சொல்லும் கருத்து எல்லா ஊடங்களுக்கும் பொருந்தும். வலைப் பதிவுகளில் கருத்தை பதிய வாய்ப்பு இருப்பதால் அவ்வாறு செய்கிறோம். இதை எப்படி சிக்கிக் கொள்வது என சொல்ல முடியும்.

பெயரில்லா சொன்னது…

கோவியாரே,

அருமையான முயற்சி, வாழ்த்துக்கள். இது மிகவும் அவசியமான பதிவுதான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

என்னைப் பொருத்தவரையில் கருத்துப் பறிமாற்றம் எல்லா தடைகளையும் தாண்டி வெளிக்கொணரப் பட வேண்டியது அவசியம்.

அது நண்பனாகவே இருந்தாலும் "இடித்துக் கூறும் இடத்தில் இடித்துக் கூறல் அவசியம்."

No polishly, getting away from doing it, is, healthy. I want to say more in this, maybe on Sunday. Thanks again.

TheKa.

பெயரில்லா சொன்னது…

//என்னதான் ஒரே ஊர்காரர் என்றாலும் தும்பிக்கை தெரிந்த உங்களுக்கு என்மேல் நம்பிக்கை இல்லை. காலை வாரிவிட மாட்டேன் :))) //
நம்பிக்கை எல்லாம் உங்க மேல நிறையவே இருக்கு. ஏகப்பட்ட ஜல்லி பதிவுகள் தொடர்ந்து நம்ம பதிவில் அடிச்சாச்சு. கண்ணி வெடி - பாகம் 2 எழுதி விட்டு தான் மறுபடியும் ஜல்லியடிப்பதை தொடங்கலாம் என்று இருக்கின்றேன். உங்களுக்கு கால் காட்டுகின்றேன் என்று அடுத்து ஒரு ஜல்லி அடிக்கும் பதிவை போட வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் பரவாயில்ல இருக்கட்டும் என்று கூறினேன். இது தற்சமயத்துக்கு தான். எதிர்காலத்தில் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வராமலா போயி விட போகின்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவியார் சொல்ல வருவது ஒரு பொதுவான நிகழ்வில் ஒருவருக்கொருவர் இருக்கும் சிலபல கருத்து வேறுபாடுகளைக் குறித்து என நான் நம்புகிறேன்.//

பதிவு நீளமாகி படிப்பவர்கள் பதுங்கிவிடுவார்கள் என்று நிறைய விளக்கத்துடன் எழுதமுடியவில்லை. :))

sk ஐயா சொல்வது சரி. புதிய வலைப்பதிவாளர்கள் மீது தேவையற்ற முத்திரைகள் விழுந்து அதன் மூலம் அவர்களின் கருத்துக்கள் முடங்கி விடக்கூடாது.

ஆரம்பத்தில் அதை ஒரு அங்கீகாரமாக நினைத்துப் பின்னாளில், அந்த சூழலில் சிக்கிக்கொள்வார்கள்.

தனக்கு பின்னூட்டமிடுபவர்களின்
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை வைத்து பதிவாளர்கள் அவர்களை வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

அதே போல் தன் நன்பருக்கு பிடிக்காது என்று தாங்களாகவே நினைத்துக் கொண்டு மாறுபட்ட விசயங்களை சொல்லவும் தயக்கம் காட்டக் கூடாது.

கருத்துக்களை மதிக்கவேண்டும் என்று சொல்வதும் ... கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்வதும் ஒரே பொருளல்ல.

மாறுபட்ட கருத்துக்களை சொந்தவிருப்பம் என்று மதிக்கவேண்டும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்ஸ் said... தை விடுத்து உண்மையைப் பேசுகிறீர்கள் என்று புரிந்து பாராட்டுபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.. இதற்கும் வருந்தக் கூடாது.. //

உண்மைதான் என்று கருதுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan said...
கோவியாரே,

அது நண்பனாகவே இருந்தாலும் "இடித்துக் கூறும் இடத்தில் இடித்துக் கூறல் அவசியம்." //

தெகா..
இது இது ... இதுதான்... இந்த உணர்வுதான் எல்லோருக்குள்ளும் வளரவேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

கண்ணி வெடி - பாகம் 2 எழுதி விட்டு தான் மறுபடியும் ஜல்லியடிப்பதை தொடங்கலாம்//

சீக்கிரமாக கண்ணிவெடியை வீசுங்கள்.. இதுதான் சரியான சந்தர்பம்... இப்பதான் பம்பாயில் குண்டு வெடிச்சிருக்கு. அப்பொழுதுதான் சூட்டோடு சூடாக இருக்கும் :))

பெயரில்லா சொன்னது…

நல்ல கட்டுரை. சார்பு நிலை என்பது ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. அது வளர்ப்பு முறையிலேயே வருவது. ஆயினும் சார்பு நிலையை தவிர்ப்பது நலம். தவிர்க்க முயற்சியாவது மேற்கொல்வது நல்லது.

கோவி.கண்ணன் சொன்னது…

//கலை அரசன் said...
நல்ல கட்டுரை. சார்பு நிலை என்பது ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. அது வளர்ப்பு முறையிலேயே வருவது. ஆயினும் சார்பு நிலையை தவிர்ப்பது நலம். தவிர்க்க முயற்சியாவது மேற்கொல்வது நல்லது. //


கலையரசன் சரிதான்...சிறிய
பரிணாம வளர்ச்சி வளர்ந்து, பெரிய
பரிமாணமாகிறது :))

பெயரில்லா சொன்னது…

அன்பு சிவபாலன்,
நான் எங்கும் "சிக்க"வைப்பதைப் பற்றிச் சொல்லவில்லையே!
அது உங்கள் உரிமை.
அதில் நான் தலையிடவில்லை.

நான் சொன்னதெல்லாம், எப்படி ஒத்த கருத்தில் ஒத்துப்போனவர்கள் சிறு சிறு வேறுபாடுகளை ஒரு பொதுக்கருத்தில் வெளிப்படையாக மறுதளிக்கத் தயங்குவார்கள் என்பது குறித்து மட்டுமே!

ஏதேனும் உதாரனம் கூறப்போய் அது திசை திருப்பி விடுமோ என்ற அச்சத்தால் அப்போது விளக்கமாகக் கூறவில்லை.

இப்போது சொல்கிறேன்.

சிதம்பரம் கோயில் விவகாரத்தில், தமிழில் பாடத்தடை என முதலில் வந்தது.
தமிழார்வலர் அனைவரும் நியாயமான ஆவேசத்துடன் பொங்கி எழுந்தனர், நான் உட்பட![திரு.முத்துகுமரனின் முருகா வா பதிவில்]

பிறகு இது தமிழ் பற்றிய நிகழ்வல்ல; எங்கு பாடமுடியும், பாடவேண்டும் என்ற நிகழ்வு என்பது தெளிவானவுடன் என் கருத்து மாறியது. சில பதிவுகளிலும் அதனைப் பதிந்தேன். [முகமூடி, ஓகை, இன்னும் சில]

ஏனெனில், எனக்கு கருத்துகளுடன் தான் வேறுபாடே தவிர, கருத்துக்காரகளிடம் அல்ல.
ஆனால், இன்னும் எத்தனை பேர் அதனைத் தெரிந்தும், சக பதிவாளரோடு வேறுபட்டிருக்கிறார்கள்? அவர்களிடம் உண்மை நிலையினைச் சொல்லியிருக்கிறார்கள்?

மாறாக, அவர்களை ஆதரித்தே பதிவிட்டு வருகின்றனர், இன்னும்!

இதுதான் சார்பு நிலை செய்யும் கோளாறு என நான் நினைக்கிறேன்.

தமிழுடன் உறவு வேறு; உணர்வு வேறு!

தமிழ் எனக்குத் தாய்!
அவளை என் வீட்டில் வைத்து அன்பு செலுத்தி அழகு பார்க்கவே விரும்புவேன்! உறவென்பதால்!
முச்சந்தியில் வைத்து அல்ல! உணர்வுகளுக்கு அடிமையாகாததால்!

நன்றி!

பெயரில்லா சொன்னது…

///
அந்த விதத்தில் சமீபத்தில் மனம் நொந்த ஒருவர் குமரன் (எண்ணம்) அவரைப் போன்றவர்கள் சிலவற்றை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக எழுதினேன்.
///

ரொம்ப நன்றீங்க கோவி எனக்காக ஒரு பதிவு எழுதியதற்கு.

நல்லாத்தாங்க எழுதியிருக்கிறீங்க ஆனால் என்னைத் தனியாக எடுத்துப் பார்க்கும் பொழுது நான் இது போல அல்ல என்றுதான் தோன்றுகிறது. நான் வலைப் பூக்களில் பல வலைப் பதிவாளர்களின் எழுத்துக்களை ரசிக்கிறேன் ஆனால் ஒவ்வொருவருடனும் என்னுடைய கருத்துக்களில் வேறுபாடுகள் உள்ளன. இருப்பினும் நான் அவர்களைப் பிடிக்கிறதே என்று என்னுடைய கருத்துக்களை மாற்றி கொள்வதில்லை.

///
அது ஒரு சிதம்பர ரகசியம்
///

கொஞ்ச நாளா சிதம்பரத்தோட தலை ரொம்ப உருளுது போங்க :-))))

பெயரில்லா சொன்னது…

//சுந்தர ராமசாமி உதாரணம் இங்கு சரியானதாகப் படவில்லை //

சரியாகப்படாதுதான்.

அதற்கு சு.ராவை படிக்க வேண்டும்.அவருடைய அரசியல்,அவருடைய பார்வை, அவருடைய இலக்கியம் எல்லாம் தெரிந்தால்தான் இதைப்பற்றி கூறமுடியும்.அவரை எதிர்ப்பவர் பார்வை,அவரை ஏற்பவர் பார்வை இதெல்லாம் தெரியவேண்டும்.
நடிகர் விஜயை பிடிக்குமா விக்ரமை பிடிக்குமா என்பதுபோல் இல்லை இது.

Govi,

i donot have much to say about this post...becos my stand on this issues is crystal clear..

கோவி.கண்ணன் சொன்னது…

//Govi,
i donot have much to say about this post...becos my stand on this issues is crystal clear..//
முத்து அவர்களே நன்றி !

பெயரில்லா சொன்னது…

காலம்" அனைத்திற்க்கும் மருந்திடும் நன்றி

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு.

இதை நடுநிலையோட சொல்றேன்.

பெயரில்லா சொன்னது…

கோவி.கண்ணன் ஐயா. இன்று தான் இந்தப் பதிவைப் படிக்க முடிந்தது. மிகத் தீர்க்கமான சிந்தனை. மிகவும் ஆழ்ந்து படித்தேன். உண்மை தான். நானும் உணர்ச்சி தூண்டப்பட்டு பலமுறை இந்த சார்பு நிலைகளில் சிக்கியிருக்கிறேன். பலமுறை என் சொந்தக் கருத்துகளைச் சொன்னதால் முத்திரையும் குத்தப்பட்டிருக்கிறேன். வலையகத்தில் அரசியல் செய்பவர்களால் தவறாக எண்ணப்பட்டிருக்கிறேன். அண்மைக்காலமாக இந்த உணர்ச்சித் தூண்டுதல்களில் அகப்படாமல் இருக்கவேண்டும் என்ற உறுதி வந்துள்ளது. நல்ல வேளையில் நீங்களும் இந்தப் பதிவை எழுதி என் எண்ணத்தை உறுதி செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அருமையான பதிவு.

இதை நடுநிலையோட சொல்றேன்.
//
துளசி அக்கா,
என்ன இது கொடுமை ! நடுநிலை இல்லாமல் கூட எங்காவது சொல்லியிருக்கிறீர்களா ?
:))))))))))))))))))))))

பெயரில்லா சொன்னது…

//நீங்கள் இப்பதிவில் நடுநிலையார்கள் மனதில் வைத்து சொல்ல முற்படுவது, ஏனோ பு,பி.களுக்கு முழுவதுமாக ஒத்துப் போகிறது. இது என்னுடைய பார்வை//

சிவபாலன். கவனித்துப் பார்த்தீர்களானால் பு.பி. என்று அடையாளம் காண்பிப்பவர்கள் எல்லோருமே ஒரு சார்பு நிலையைச் சேர்ந்தவர்களாகவும் பு.பி. என்று முத்திரை குத்தப்படுபவர்கள் எல்லோருமே அவர்கள் சார்பு நிலையைக் கேள்வி கேட்டு அவர்களால் பதிலளிக்க முடியாமல் செய்தவர்களாகவும் இருப்பார்கள். இதுவும் 'நம் எதிர்கருத்து சொல்பவர்களை இனத் துரோகி, தேசத் துரோகி, மதத் துரோகி, மொழித் துரோகி' என்று முத்திரை குத்துவதைப் போலத் தான்.

இது நான் பார்த்தவரை என் கருத்து மட்டுமே.

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் (Kumaran) said...
என் சொந்தக் கருத்துகளைச் சொன்னதால் முத்திரையும் குத்தப்பட்டிருக்கிறேன்.//
திரு குமரன்,
ஒரு சிலரின் கட்டுரைகளைப் படித்துவிட்டு, நமக்கு பிடித்த விசயங்களைப் பாராட்டினால், எழுதியவர் ஒட்டுமொத்த கட்டுரையையும் பாராட்டியதாக எடுத்துக்கொள்கின்றனர். அதே கோணத்தில் அவருக்கு வேண்டாதவர்களும் ஒட்டுமொத்த கருத்துக்கு ஆதரவு கொடுப்பதாக நினைத்து 'அடிவருடிகள்' என்ற பட்டத்தை அன்பு ஓட கொடுக்கின்றனர். :)). நாம் எப்படி என்பது நமக்கு நன்றாகவே தெரியும் ...விட்டுத்தள்ளுங்கள் பாஸ் !

பெயரில்லா சொன்னது…

உண்மை எப்போதுமே உடனே சுடும், நெருப்பை விட விரைவக!
என்னை ஏமாற்றவில்லை நீங்கள், மு. த.!!

நான் சு.ரா.வைப் படித்தவனல்ல; நீங்கள்தான் படித்தவ்ர் என,.......... அவனவன் 6 சொல் கதை எழுதத் திணறும் வேளையில், ஒரு சொல் "கதை" சொல்லியிருக்கிறீர்களே!

உண்மையிலேயே மெத்தப்படித்தவர்தான் நீங்கள்:!!

பெயரில்லா சொன்னது…

எஸ்.கே,

அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்:))

(வேறு தளத்தில் சந்திப்போம்)

நிழல் குத்து நண்பருக்கு,

மன வேதனையை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொட்டித் தீர்க்கலாம்.(குற்ற உணர்வு தீரும்வரை)

ஆனால் உண்மை உண்மையாகத்தான் இருக்கும்.

பெயரில்லா சொன்னது…

//
முத்து(தமிழினி) said...
உண்மை உண்மையாகத்தான் இருக்கும். //

உண்மை ஊமையாகவும் இருக்கும் :)))

உகு, வெகு தெரியும்.... இது என்ன புது வார்த்தை நிழல் குத்து ! புரியவில்லை, அப்ப வெயில் குத்து, மழை குத்து இதெல்லாம் கூட இருக்கா ? :)))

பிகு : இந்த பின்னூட்டம் ஒரு தமாஸ் :))

பெயரில்லா சொன்னது…

கோவி,

//உண்மை ஊமையாகவும் இருக்கும் :)))//

ஹிஹி...உண்மைதான்...அப்பீலே கிடையாது இதுக்கு...

பெயரில்லா சொன்னது…

ரொம்ப சரி. கருத்துக்களை மட்டும் சார்ந்து இருங்க. மனிதர்களை அல்ல. நண்பனிடம் கருத்து வேறுபாட்டை தெரிவிக்கவும், எதிரியிடம் ஒத்த கருத்துக்களை கண்டறியவும் நிறைய மெச்சூரிட்டி வேணும்.

பெயரில்லா சொன்னது…

எனக்கு இந்த தலைப்பில் எவ்வளவு ஈடுபாடு இருந்தால் ஒரு பின்னூட்டம் விடாம படிச்சிருப்பேன்னு யோசிச்சு பாருங்க, கோவி. நல்ல விஷயத்தை எடுத்து நல்லா எழுதியிருக்கீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//At July 26, 2006 8:58 AM, Venkataramani said…

ரொம்ப சரி. கருத்துக்களை மட்டும் சார்ந்து இருங்க. மனிதர்களை அல்ல. நண்பனிடம் கருத்து வேறுபாட்டை தெரிவிக்கவும், எதிரியிடம் ஒத்த கருத்துக்களை கண்டறியவும் நிறைய மெச்சூரிட்டி வேணும்.//


நண்பரிடம் கருத்து வேறுபாடுகளை பகிர்ந்து கொள்வது சுலபம், அதைப் போல் எதிரியிடம் ஒத்தக் கருத்துக்களை கண்டறிந்து பாராட்டுவதும் நலம். ஆனால் செய்யமாட்டோம், முதல்விசயத்தில் நட்பு கெட்டுவிடும் என்ற அச்சம், இரண்டாவதில் எதிரியிடம் தாழ்ந்து போவதாக தமக்கு தாமே நினைத்துக் கொள்வது. இவைகள் தான் வேறுபாடுகளுக்கு இடைவெளியை அதிகப்படுத்துகிறது.

//At July 26, 2006 11:33 AM, Venkataramani said…

எனக்கு இந்த தலைப்பில் எவ்வளவு ஈடுபாடு இருந்தால் ஒரு பின்னூட்டம் விடாம படிச்சிருப்பேன்னு யோசிச்சு பாருங்க, கோவி. நல்ல விஷயத்தை எடுத்து நல்லா எழுதியிருக்கீங்க.//

திரு வெங்கட ரமணி,
எனக்கு அரசியல் பிடிக்கும், அரசியல் பண்றவங்களையும் பிடிக்கும், அப்பாவித் தொண்டர்களைத்தான் பிடிக்காது, அவர்கள் தலைவனுக்கு வாள்பிடித்து தீக்குளிப்பது பிடிக்காது. தொண்டர்களை நினைத்துக் கண்ணீர்விட்டு இந்த பதிவை எழுதினேன் :)))

பெயரில்லா சொன்னது…

//இரண்டாவதில் எதிரியிடம் தாழ்ந்து போவதாக தமக்கு தாமே நினைத்துக் கொள்வது. //

3 letters - EGO. difficult to get away with.

பெயரில்லா சொன்னது…

உங்கள் கருத்தை ஒட்டிய எனது பார்வை இங்கே
http://kilumathur.blogspot.com/2006/07/blog-post_28.html

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்