பின்பற்றுபவர்கள்

9 செப்டம்பர், 2008

ஜோதிடம் கேயாஸ் தியரியும் !

கிரகங்களால் நற்பலனா ? கிரகங்களுக்கே நற்பலன் இல்லாமல் போனதால் என்னவே புளூட்டோ கிரகம் சூரியனின் ஞான ஒளி எனக்கு வேண்டாம் என்று கோவித்துக் கொண்டு சூரிய குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றதா ? மற்ற உயர்ந்த கிரகங்களால் தள்ளி வைக்கப்பட்டதா என்றே தனியாக தத்துவ ஆராய்ச்சியே நடத்தலாம்.

"இந்த கலர் கல்லுல மோதிரம் செஞ்சிப் போட்டுக் கொள்ளுங்கள்" - ஒரு பக்கம் இராசிக் கற்களால் பிழைப்பு நடத்துபவன்

"உங்க வீட்டு கக்கூசு சூரியனைப் பார்த்தபடி இருக்கு, ஆகாதுங்க...மாத்துங்க" - வாஸ்து பெயரில் மோசடி கும்பல்கள்

"பேரை மாத்திட்டிங்கன்னா... நீங்கதான் தேர்த்தல் நடத்தாமலேயே செவ்வாய் கிரகத்துக்கு அதிபதி ஆவிங்க...." அள்ளிவிடும் பெயர் சோதிடக்காரர்கள்.

"நாடி ஜோதிடம் பார்த்திங்கன்ன...நடந்தது நடக்கப் போறது எல்லாம் தெரிஞ்சிக்கலாம்..." நாடி சோதிடன் ஒருபக்கம் பனையோலையை மண்ணில் புதைத்து எடுத்து வண்ணம் பூசி பழைய ஓலைச்சுவடியாக காட்டி அதில் அவர்களே எழுதிய பொய்யுளை (!) வைத்து சோதிடம் நாடி ஜோதிடம்

"கிளிக்கு இறக்க முளைச்சுடுத்து... ஒடச்சி கூண்டில அடைச்சிட்டேன்....மினாட்சி... தம்பி பேருக்கு ஒரு சீட்டெடுத்துப் போடு' பறவை வதை செய்யும் கிளி சோசியன்

"கை ரேகையிலதான் உங்க தலையெழுத்தே அடங்கி இருக்கு, ஆண்கள் வலது கையையும் பெண்கள் இடது கையையும் காட்டுங்க..." கைரேகை சோசியன்

இன்னும் மச்ச சோதிடன், மயிர் சோதிடன் ( இது ஒரு படத்தில் வரும்.. தியாகராஜன் ஸ்ரீதேவியின் கூந்தல் மயிரை வைத்து அவருக்கு தொடையில் மச்சம் இருப்பதைச் சொல்லுவார்), குறிகாரன், குடுகுடுப்பை, பில்லி சூனியம் வைக்கிறவன் என பல ரகங்களில் சோதிடம். சாமியாடிகள் தனி ரகம்.

இவர்கள் எல்லாரும் சோதிடம் உண்மை என்று பரப்பிக் கொண்டு அதில் பிழைப்பையே நடத்துவார்கள். சோதிடம் பார்க்கச் செல்லும் எவருக்குமே, உங்கள் வாழ்கை இனி நன்றாகவே இருக்கும் என்று சொல்வதே இல்லை. உனக்கு தோஷம், பித்தம், வயிற்றுப் போக்கு, வாந்தி இன்னும் என்னன்னவோ சொல்லி, இதுக்கெல்லாம் பரிகாரம் செய்தால் சரியாப்போய்விடும் என்றே ஜோதிடம் கேட்க வந்தவர்களை மன அளவில் மிரட்டுவார்கள்.

சோதிடம் பார்க்காவிட்டால் இந்தியர்கள் செத்துவிடுவார்களா ? உலகில் எங்கும் முன்னேறிய சமூகம் எதிலுமே தன்னம்பிக்கையை மூட நம்பிக்கை இரையாக்கிவிட்டு ஏமாந்து நிற்பது இல்லை. கிரகம் பாதிக்கும் என்று நம்புவார்கள், பரிகாரத்தினால் கிரகத்துக்கு அல்வா கொடுக்க முடியும் என்றும் நம்புவார்கள். இதெல்லாம் என்ன வகையான நம்பிக்கை என்றே தெரியவில்லை.

இறை நம்பிக்கை உடையவர்களை கிரக பலன்கள் என்ன செய்துவிட முடியும் ? இறை சக்தியை விட கிரகங்களின் சக்தியே பெரிது சமயத்தில் சனியனுக்கு பயந்து கொண்டு புங்கை காய்க்குள் பதுங்கி கொண்டான் சிவபெருமான் என்ற கதையெலாம் கூடச் சொல்வார்கள். இறைவனே கிரகங்களுக்கு பயப்படுவான் என்றால் இறைவன் பேராற்றல் மிக்கவன் என்று சொல்வதும் கூட பொய்யாகிவிடுகிறது.

ஜோதிடம் ஆன்மிக வளர்ச்சிக்கு எப்போதாவது நன்மை அளித்திருக்கிறதா என்றால் அப்படி ஒன்றும் தெரியவில்லை, அட நெய்விளக்கு வியாபாரம் வளர்ச்சி பெற்று இருக்கிறதா ? பெரிய அளவில். நாம கொளுத்தி வச்சிட்டு அந்த பக்கம் சென்றவுடனே அணைத்து எடுத்துக் கொண்டு மறுவிற்பனைக்கு ஆயத்தம் செய்துவிடுவார்கள். ஜோதிடத்தினால் ஆன்மீகம் வீழ்ச்சி அடைந்தே இருக்கிறது, மூட நம்பிக்கையை வளர்த்ததில் போலி சாமியார்களுக்கு உரிய பங்கு ஜோதிடர்களுக்கும் உண்டு.

விதியை மதியால் வெல்ல முடியுமா ? காற்றில் ஆடிக் கொண்டு இருக்கும் ஒரு பொருள் உங்கள் மண்டையை பதம் பார்க்கும் முன் 'ஆடுவதால் நிச்சயம் விழுந்துவிடும்' என்பதை மதியால் உணர்ந்து அதனை அகற்றவேண்டும், 'விழுந்தாலும் அடிபாடாது' என்று நினைத்து அதற்குக் கீழே நின்றால் ஈர்ப்பு விசை என்னும் விதி அங்கே வேலைசெய்தாலும் செய்துவிடும் அல்லவா ?

எத்தனையோ கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும் கிரகங்களுக்கு எள்ளுப்பூ மாலை அணிவித்து, குளிர்விக்க நெய்விளக்கும் ஏற்றுவது கேயாஸ் தியரியின் தத்துவமா ? இங்கே செய்வது அங்கே சென்று பாதங்களின் வீரியத்தைக் குறைத்து நற்பலனாக மாறிவிடுமா ?

****

ஜோதிடத்தில் கைக்காசை செலவு செய்யும் பரிகாரம் எதுவும் கிடையாது!
இறைவனைப் பிரார்த்திப்பது ஒன்றுதான் பரிகாரம்.
- சுப்பையா வாத்தியார்

41 கருத்துகள்:

கார்க்கிபவா சொன்னது…

மொத போனி ஆஜர்

வால்பையன் சொன்னது…

மறுபடியும் செவிடன் காதுல சங்கா!
நான் கூவி கூவி பாத்து விட்டுட்டேன்

திடீர்னு பார்த்தா தமிழ்மனத்துலேயே ஒரு ஆள்
ஓம்சதிஷ்ன்னு பேரு,
இந்த ராசிக்கு அந்த கல்லு போடு
அந்த ராசிக்கு இந்த கல்லு போடுன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்.

நக்கல் அடிக்கிற மாதிரி ஒரு பின்னூட்டம் மட்டும் போட்ட்டுட்டு வந்துட்டேன்

ஜெகதீசன் சொன்னது…

இதெல்லாம் நல்லாயில்லை ஆமா சொல்லீட்டேன்...

மற்ற ஜோதிடம் பற்றி எனக்குத் தெரியாது.. ஆனால் பெயர் ஜோதிடம் முற்றிலும் உண்மை...

உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... "கோ.கண்ணன்" என்ற உங்கள் பெயரை "கோவி.கண்ணன்" என்று நான் மாற்றி வைக்க ஆலோசனை சொன்னதால் தானே நீங்கள் இவ்வளவு பிரபலமானீர்கள்?

:P

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//ஜெகதீசன் said...
இதெல்லாம் நல்லாயில்லை ஆமா சொல்லீட்டேன்...

மற்ற ஜோதிடம் பற்றி எனக்குத் தெரியாது.. ஆனால் பெயர் ஜோதிடம் முற்றிலும் உண்மை...

உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... "கோ.கண்ணன்" என்ற உங்கள் பெயரை "கோவி.கண்ணன்" என்று நான் மாற்றி வைக்க ஆலோசனை சொன்னதால் தானே நீங்கள் இவ்வளவு பிரபலமானீர்கள்? //

கன்னா பின்னானு வழி மொழியிறேன். இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க.
நீங்க ஏன் கோ.கண்ணண்ங்கிற உங்க பெயர கோவி.கண்ணண்னு மாத்துனீங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
மொத போனி ஆஜர்
//

நன்றி ! உங்களுக்கு சுக்ர திசை ஆரம்ப மாகட்டும் ! ஐயையோ தரண் துரத்தி துரத்தி உதைக்கிற மாதிரி இருக்கே :))))

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
மறுபடியும் செவிடன் காதுல சங்கா!
நான் கூவி கூவி பாத்து விட்டுட்டேன்

திடீர்னு பார்த்தா தமிழ்மனத்துலேயே ஒரு ஆள்
ஓம்சதிஷ்ன்னு பேரு,
இந்த ராசிக்கு அந்த கல்லு போடு
அந்த ராசிக்கு இந்த கல்லு போடுன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்.

நக்கல் அடிக்கிற மாதிரி ஒரு பின்னூட்டம் மட்டும் போட்ட்டுட்டு வந்துட்டேன்

2:08 PM, September 09, 2008
//
VP,
கேளாதவர்கள் காதில் ஊதும் சங்கு அல்ல. கேளாதவர்களாக ஆகிவிடக் கூடாது என்பதற்கான சங்கு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
இதெல்லாம் நல்லாயில்லை ஆமா சொல்லீட்டேன்...

மற்ற ஜோதிடம் பற்றி எனக்குத் தெரியாது.. ஆனால் பெயர் ஜோதிடம் முற்றிலும் உண்மை...

உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... "கோ.கண்ணன்" என்ற உங்கள் பெயரை "கோவி.கண்ணன்" என்று நான் மாற்றி வைக்க ஆலோசனை சொன்னதால் தானே நீங்கள் இவ்வளவு பிரபலமானீர்கள்?

:P
//

நக்கலு ? விட்டால் எங்க அப்பாவுக்கே உங்க தாத்தாதான் பெயர் ராசி பார்த்து பெயர் வைத்தார் என்பீர்கள் போல !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//கன்னா பின்னானு வழி மொழியிறேன். இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க.
நீங்க ஏன் கோ.கண்ணண்ங்கிற உங்க பெயர கோவி.கண்ணண்னு மாத்துனீங்க?

3:03 PM, September 09, 2008
//

:) பதிவு எழுத ஆரம்பிக்கும் முன்பே வைத்துக் கொண்ட பெயர் தான். கோ.கண்ணன் என்று வைத்திருந்தால் 'கோவி' என்று அழைப்பது வந்திருக்குமா ? ஜெகதீசன் போலி சாமியாரின் கைக்கூலி அவன் சொல்வதை நம்பாதீர்கள்.

ஜெகதீசன் சொன்னது…

உங்களைப் போல் நன்றி கெட்ட மனிதரை நான் எங்கும் பார்த்ததில்லை...
நான் வைத்த பெயரால் இவ்வளவு பிரபலமாகிவிட்டு, என்னையே போலி என்கிறீர்.... :((

நான் போலியில்லை என்பதற்கும் & பெயர் சோதிடம் உண்மை என்பதற்கும் சாட்சியாக டிபிசிடி யின் பின்னூட்டம்:

*******************************
TBCD said...

ஆமாம் பெயர் மாற்றம் செய்தப் பிறகு எங்கள் வீட்டில் தேனாறு, பாலாறு ஓடுகிறது..ஊருக்கே பால் எங்கள் வீட்டிலிருந்து தான் போகிறதென்றால் பார்த்துக்கோங்களேன். என் பெயரை மாற்றியதற்கு நான் என்றென்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீலஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜெகதீசனாருக்கு கடமைப்பட்டுள்ளேன்.

*******************************

இது ஒன்றே போதும் நான் போலி இல்லை என்பதை நிரூபிக்க!

லின்க்: http://jegadeesangurusamy.blogspot.com/2008/08/blog-post_29.html

கோவி.கண்ணன் சொன்னது…

//இது ஒன்றே போதும் நான் போலி இல்லை என்பதை நிரூபிக்க!//

ஸ்ரீலஸ்ரீ ஜகதீசன் ஐயர்,

தேனாறும் பாலாரும் டிபிசிடி வீட்டுக்கு பக்கமாக ஓடி கொசுத்தொல்லை ஏற்பட நீதான் காரணமா ? மாநகராட்சி உன்னைத்தான் தேடுது !

விஜய் ஆனந்த் சொன்னது…

கார்க்கி,
வால்பையன்,
ஜெகதீசன்,
ஜோசப் பால்ராஜ்,
&மறுபடியும் ஜெகதீசன்,
TBCD...

எல்லோருக்கும் செம்ம்ம ஸ்ட்ராங்கா ரிப்பீட்டேய்!!!

(என்ன பாத்து அப்படி சொல்லிட்டீங்கள்ல...இருங்க..இருங்க..ஆணியெல்லாத்தையும் புடுங்கிட்டு வந்து, என்னோட கருத்து கந்தசாமி மறுபக்கத்த காமிக்கிறேன்!!!)

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

எனதருமை கோவி.கண்ணன் அவர்களுக்கு,
இது நகைச்சுவை பதிவு அல்ல என நினைக்கிறேன். அவ்வாறு இருந்தால் எனது கருத்தை நீக்கி விடவும்.

உங்கள் பதிவில் இருக்கும் அனேக விஷயங்களை வரவேற்கிறேன்.

வாஸ்து, பெயரியல், நவரத்தின கல் என பல வழிகளில் மோசடி நடக்கிறது.

தங்கள் பிரச்சனை தீர மக்கள் ஜோதிடரிடம் செல்லும் பொழுது அவர்களின் இயலாமையை பயன்படுத்துகிறார்கள்.
பரிகாரங்களாலோ அல்லது வேறு முறையாலோ எதிர்காலத்தை மாற்ற முடியாது.
ஜோதிட சாஸ்திரத்தில் இவை எல்லம் இல்லை...
கர்மா எவ்வாறு செயல்படும் , கர்மாவின் அடுத்த நிலை என்ன என கூறவே ஜோதிடம்.

கோளறு பதிகம் பாடி திருஞானசம்பந்தர் போல கிரக பாதிப்பிலிருந்து வெளியேற நினைக்கும் மக்கள் தாங்கள் திருஞான சம்பந்தர் போல

இருக்கிறோமா? என சிந்திப்பது இல்லை.

நள மஹாராஜ போல திருநள்ளாறில் முக்தி பெற நினைக்கும் அவர்கள் நளன் போல நல்லவனாக இருக்க முயலுவதில்லை.

ஒவ்வொரு சனி பெயர்ச்சி அன்றும் திருநள்ளாறு கோவிலில் இருந்து 10 டன் அளவு துணிகள் குப்பையாக எடுக்கப்படுகிறது.
எந்த சாஸ்திரமும் கட்டிய துணியை கோவிலில் கழற்றி எறிய சொல்லவில்லை.

குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி என்ற பெயரில் சிலர் அடிக்கும் கொள்ளை மிகவும் மோசமானது.

முன்பு ஜோதிடத்தை சிறந்த வழிகாட்டியாக பயன்படுத்தினார்கள். ஆன்மீக வழிகாட்டியாக ஜோதிடம் இருந்தது.

நீங்கள் குறிப்பிடுவது போல ஆன்மீகத்திற்கு ஜோதிடமும் கிரகங்களும் தேவை இல்லை என்றால், கோவிலில் ஏன் நவக்கிரக சன்னிதி

வைத்தார்கள்? வேத சாஸ்திரத்தின் கண் என ஏன் ஜோதிடத்தை கொண்டாடினார்கள்?

காலம் அனுமதித்தால் ஜோதிடம் பற்றிய விரிவான பதிவை இடுகிறேன். முழுமையான ஜோதிட சாஸ்திரம் கற்றவன் “பூரண கால தந்திரி” என

பிறால் பாராட்டபட்டவன் என்ற நிலையில் ஜோதிடம் சாஸ்திர பதிவு எழுதும் யோக்கியதை எனக்கு உண்டு என கருதுகிறேன்.


உங்கள் பதிவின் தலைப்புல் கேஸ்தியரி என குறிப்பிட்டீர்களே ஆனால் அதை பற்றிய விளக்கம் எதுவும் இல்லையே?

எனது பின்னூட்டத்தை அடுத்த கிளையில் தொடர்கிறேன்

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

ஒருமுறை எனது வலைதளத்தில் ஆன்மீகத்தை தவிர பிற விஷயத்தையும் எழுது என கேட்டிருந்தீர்கள்... உங்கள் ஆசைக்காக இதோ....

ஓர் கதை...

நியூமராலஜி வேலை செய்கிறது.....

காலை தினசரியை புரட்டிகொண்டிருந்த தனுஷ்...அந்த விளம்பரத்தை பார்த்தான்...

"ஆசியாவிலேய முதல் பெயரியல் நிபுணர் விஜயம்....உங்கள் பெயர் மூலம் அதிர்ஷ்டத்தை அடையுங்கள்......"

தனுஷுக்கு நியூமராலஜி மேல் நம்பிக்கை இல்லை , இது போன்ற நம்பிக்கையை பயன்படுத்தும் அவனது நண்பர்களை கிண்டல் செய்வது அவனது வாடிக்கை.

ஆனாலும் அன்று அந்த விளம்பரத்தை பார்த்ததும் அவனக்கு ஓர் ஆவல். தொலைக்காட்சியில் வரும் அந்த நபர் நமது நகரத்திற்கு வருகிறார் ஒரு முறை சென்று பார்ப்போம் என எண்ணினான்.

தொலை பேசியில் அனுமதி வாங்கி அவரை சென்று சந்தித்தான். பிறந்த தேதி மற்றும் பெயரை வாங்கி எண்களை கொண்டு கூட்டி கடைசியில் ஒரு முடிவாக பேச ஆரம்பித்தார் பெயரியல் நிபுணர்...

"தனுஷ் அவர்களே உங்கள் வாழக்கையில் 5 ஆம் எண் சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கை முழுவதுமே 5 ஆம் எண் ஆதிக்கம் இருக்கிறது. உங்கள் பெயரும் 5 ஆம் எண் தான். எனவே ஐந்தாம் எண்ணை நன்றாக பயன்படுத்துங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டம் வரும்.."

தனுஷால் அவரின் கருத்தை நம்ப முடியவில்லை... அவர் கேட்ட பிரகாரம் ஐயாயிரம் ரூபாயை கொடுத்து விட்டு வீட்டிற்கு வந்தான்.

தனது பைக்கை நிறுத்தும் பொழுதுதான் கவனித்தான் அவனது வாகன எண் 1445.

மெல்ல நடந்து காலிங் பெல்லை அழுத்தும் பொழுது
கருப்பு வட்டத்தில் வெள்ளை நிறத்தில் எழுதபட்ட அவனது வீட்டின் எண் கண்களுக்கு பட்டது (32)

அவனுக்கு ஏதோ புரிய துவங்கியது..

தனது அனுபவத்தை மனைவியிடம் கூறினான் தனுஷ்.

அவனை மையமாக பார்த்த அவனது மனைவி “அஞ்சு” அவனை பார்த்து...”எனக்கு உண்மையா இருக்கும் பொல இருக்குங்க நீங்க கூட நாலு பெண்ணை பார்த்த பிறகு தான் என்னை பெண் பார்த்து கல்யாணம் பண்ணிட்டீங்க. நியூமராலஜி பார்க்க கூட 5000 பீஸ் கொடுத்திருக்கீங்க. உங்களுக்கும் ஐந்தாம் எண்ணுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்குங்க...:” என்றாள்.

தனது நண்பன் பஞ்சாபகேசனுக்கு தொலைபேசியில் தனது ஐந்து எண்ணின் மகத்துவத்தை கூறினான் தனுஷ்.
பஞ்சாபகேசன் உற்சாகமடைந்தான். ஐந்தாம் எண்ணை அதிர்ஷ்டமாக்கும் யோசனைகள் விவாதிக்கபட்டது..
இருவரும் ஐந்தாம் எண்ணின் அதிர்ஷ்டத்தை சோதிக்க குதிரை பந்தையத்திற்கு போகலாம் என முடிவாயிற்று.

தனது வங்கி இருப்பிலிருந்து ஐந்தாம் எண்ணின் சக்தி கொண்ட 50,000 ரூபாயை எடுத்து கொண்டு குதிரை பந்தைய மைதானத்திற்கு இருவரும் சென்றனர்..

எந்த குதிரை மேல் பணம் கட்டுவது என்று குதிரையின் பெயர் பட்டியலில் சோதனை செய்தனர்..

ஃபைவ் ஸ்டார் பிளாக்கி“ என்ற பெயர் அவர்களின் ஐந்தாம் எண்ணுக்கு ஏற்ப அமைந்திருந்தது.

தனது கைகளில் இருந்த ஐம்பதாயிரம் ரூபாய் முழுவதும் அந்த குதிரை மேல் காட்டினான் தனுஷ்.

பந்தையம் ஆரம்பித்தது... இருவரும் உற்சாகமானார்கள். தனுஷின் முன் பண மழை பொழியும் கனவுகள் வந்து போயின...

பந்தைய முடிவு அறிவிக்கப்பட்டது...

ஃபைவ் ஸ்டார் பிளாக்கி எனும் குதிரை ஐந்தாவதாக வந்திருந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//எனதருமை கோவி.கண்ணன் அவர்களுக்கு,
இது நகைச்சுவை பதிவு அல்ல என நினைக்கிறேன். அவ்வாறு இருந்தால் எனது கருத்தை நீக்கி விடவும்.//

சுவாமி ஓம்கார் அவர்களே, நகைச்சுவைப் பதிவு அல்ல, எழுத்தில் மட்டுமே இருக்கும் !

//உங்கள் பதிவில் இருக்கும் அனேக விஷயங்களை வரவேற்கிறேன்.//

மிக்க நன்றி !

வாஸ்து, பெயரியல், நவரத்தின கல் என பல வழிகளில் மோசடி நடக்கிறது.

//கர்மா எவ்வாறு செயல்படும் , கர்மாவின் அடுத்த நிலை என்ன என கூறவே ஜோதிடம்.//

ஒப்புக் கொண்டாலும்....கர்மாவை மாற்றிவிடும் சக்தி ஜோதிட பரிகாரத்திற்கு உண்டா ? நல்ல கர்மாவுக்கு நல்லதும், கெட்ட கர்மாவுக்கு கெட்டதும் நடந்தே தீரும், இரண்டையும் ஒன்றை வைத்து ஒன்றை சீர்படுத்த செய்ய முடியாது என்றே நினைக்கிறேன். பரிகாரம் பேலன்ஸ்க்குக்காக செய்வதாகச் சொல்கிறார்களே. மனித நீதிமன்றங்களில் வழங்கப்படும் நீதியும் அப்படித்தானே ஒருவர் தானம் செய்பவராக இருந்து அவர் ஒரு கொலையை செய்துவிட்டால் தானம் செய்பவர் என்பதற்காக அவரை மன்னிக்க மாட்டார்களே.
//கோளறு பதிகம் பாடி திருஞானசம்பந்தர் போல கிரக பாதிப்பிலிருந்து வெளியேற நினைக்கும் மக்கள் தாங்கள் திருஞான சம்பந்தர் போல

இருக்கிறோமா? என சிந்திப்பது இல்லை.

நள மஹாராஜ போல திருநள்ளாறில் முக்தி பெற நினைக்கும் அவர்கள் நளன் போல நல்லவனாக இருக்க முயலுவதில்லை.

ஒவ்வொரு சனி பெயர்ச்சி அன்றும் திருநள்ளாறு கோவிலில் இருந்து 10 டன் அளவு துணிகள் குப்பையாக எடுக்கப்படுகிறது.
எந்த சாஸ்திரமும் கட்டிய துணியை கோவிலில் கழற்றி எறிய சொல்லவில்லை.
குரு பெயர்ச்சி மற்றும் சனி பெயர்ச்சி என்ற பெயரில் சிலர் அடிக்கும் கொள்ளை மிகவும் மோசமானது.
//

புதிய தகவல்கள் ! திருநள்ளாரில் அழுக்குத் துணிகள் இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன்.
//முன்பு ஜோதிடத்தை சிறந்த வழிகாட்டியாக பயன்படுத்தினார்கள். ஆன்மீக வழிகாட்டியாக ஜோதிடம் இருந்தது.

நீங்கள் குறிப்பிடுவது போல ஆன்மீகத்திற்கு ஜோதிடமும் கிரகங்களும் தேவை இல்லை என்றால், கோவிலில் ஏன் நவக்கிரக சன்னிதி //

ஆன்மீகத்துக்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பா ? ஒருவன் ஆன்மிக வாதியாக ஆவான் என்று ஜோதிடத்தில் பலன் இருந்தாலும் கூட ஆன்மிக வாதியாகவே ஆகிவிட்டவனுக்கு ஜோதிடத்தினால் பலன் என்ன ? மனத் திடம் உள்ள ஒருவனை ஜோதிட பலன் எந்த வகையில் பாதித்துவிடப் போகிறது. கோவில், நவக்கிரக சன்னதி இதெல்லாம் பக்தியாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ள சின்னங்கள் தானே. எந்த சாமியை எதற்கு கும்பிடுகிறோம் என்பது போலவே நவக்கிரகத்தை எண்ணிக்கை அடிப்படையில் சுற்றிவருவார்க்ள். என்னைக் கேட்டால் பிரகலாதன் போல் திடமான நம்பிக்கை உடையவர் ஜோதிடத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை.
//வைத்தார்கள்? வேத சாஸ்திரத்தின் கண் என ஏன் ஜோதிடத்தை கொண்டாடினார்கள்?

காலம் அனுமதித்தால் ஜோதிடம் பற்றிய விரிவான பதிவை இடுகிறேன். முழுமையான ஜோதிட சாஸ்திரம் கற்றவன் “பூரண கால தந்திரி” என

பிறால் பாராட்டபட்டவன் என்ற நிலையில் ஜோதிடம் சாஸ்திர பதிவு எழுதும் யோக்கியதை எனக்கு உண்டு என கருதுகிறேன்.//

எழுதுங்கள் எனக்கு பயனில்லாவிட்டாலும், அதன் மீது நம்பிக்கை கொண்டோர் நிறைய பேர் உள்ளார்கள், உங்கள் எழுத்துக்களை ஒப்பிட்டு போலி ஜோதிடனிடம் ஏமாறாமல் இருக்க அவர்களுக்கு பயனாக அமையும்

//உங்கள் பதிவின் தலைப்புல் கேஸ்தியரி என குறிப்பிட்டீர்களே ஆனால் அதை பற்றிய விளக்கம் எதுவும் இல்லையே? //

தசவதாரம் திரைப்படத்தில் ஒரு வண்ணத்து பூச்சி பறப்பதைக் காட்டுவார்கள், பெரிய நில அதிர்வுக்கும், வண்ணத்து பூச்சியின் இறக்கை படபடப்பிற்கும் கூட தொடர்பு உண்டு என்பதாகச் சொன்னார்கள், அது தான் கேயாஸ் தியரியாம். நீங்கள்

//எனது பின்னூட்டத்தை அடுத்த கிளையில் தொடர்கிறேன் //

மிக்க நன்றி !

ஒன்றின் அடிப்படையே திரியும் பொழுது அதனை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய கொள்கைகளை புகுத்துவது தான் நல்லது, புதிய மதங்கள், சமயங்கள் இப்படித்தானே தோன்றின. ஏனென்றால் திரிந்தவை முற்றிலும் சரிசெய்ய முடியாத நிலையிலேயே இருக்கின்றன. பொன்னான காலத்தை சரி செய்வதற்கு பயன்படுத்துவது சரியா, புதுப்பிப்பதற்கு பயன்படுத்துவது சரியா ?

ஜெகதீசன் சொன்னது…

சுவாமிஜியின் கதை சூப்பர்....
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
ஒருமுறை எனது வலைதளத்தில் ஆன்மீகத்தை தவிர பிற விஷயத்தையும் எழுது என கேட்டிருந்தீர்கள்... உங்கள் ஆசைக்காக இதோ....

ஓர் கதை...
//

ஸ்வாமி ஓம்கார்,

அருமையான கதை. சகலகலா வல்லவராகவே இருக்கிறீர்கள், நிலை காரணமாக அடக்கிவாசிக்கிறீர்கள் என்றே நினைக்கிறேன். மூட நம்பிக்கைகளைக் குறை சொல்வது ஆத்திகனின் வேலை இல்லை என்றே ஆத்திகர்கள் பலர் நினைக்கிறார்கள், நீங்கள் அப்படி இல்லை என்பதாகவே உங்களின் இந்த சிறுகதை புரிய வைக்கிறது. பாராட்டுக்கள் !

முரளிகண்ணன் சொன்னது…

லிப்பாலஜி யை விட்டுவிட்டீர்களே

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
லிப்பாலஜி யை விட்டுவிட்டீர்களே

5:51 PM, September 09, 2008
//

முரளி சார்,
அப்படின்னா என்ன ?

Unknown சொன்னது…

சுவாமிஜியின் கதை சூப்பர்....
:)

ஆமா, சூப்பரோ சூப்பர்....

கோவி, அருமையான பதிவு போட்டுருக்கீங்க.

கலக்கல்.

Kanchana Radhakrishnan சொன்னது…

உங்கள் இந்த பதிவைப் படித்ததும் 'புதிய பறவை' படத்தில்..மரத்தடி மாமுனியாய் வந்த ஏ.கருணாநிதி,நாகேஷ் நகைச்சுவைக் காட்சிகள்தான் ஞாபகம் வந்தது

குரங்கு சொன்னது…

====
இறை சக்தியை விட கிரகங்களின் சக்தியே பெரிது சமயத்தில் சனியனுக்கு பயந்து கொண்டு புங்கை காய்க்குள் பதுங்கி கொண்டான் சிவபெருமான் என்ற கதையெலாம் கூடச் சொல்வார்கள். இறைவனே கிரகங்களுக்கு பயப்படுவான் என்றால் இறைவன் பேராற்றல் மிக்கவன் என்று சொல்வதும் கூட பொய்யாகிவிடுகிறது.
====

நெத்தியடி...

சுப்பர் டுப்பர் டீப்பர் பதிவு.

எல்லாம் வல்லவனு இறைவனை சொல்லுறாங்க...
நவகிரகங்களை படைத்த்தே அவர்தான்னு சொல்லுவாங்க...
ஆனா, இறைவனும் நவகிரகங்களுக்குளே அடங்கனும்னு சொல்லுவாங்க...
இதெயெல்லாம் எடுத்து சொன்னா, நாத்திகன்னு திட்டுறாங்க...

முரளிகண்ணன் சொன்னது…

கோவி சார், உதட்டில் உள்ள வரிகளை வைத்து கணிப்பது லிப்பாலஜி

வடுவூர் குமார் சொன்னது…

இது சீரியஸ் பதிவா? மொக்கையா?
வர பின்னூட்டங்களை பார்த்தால் ஒரே சிரிப்பாக இருக்கு.
ஆமாம், இந்த ஸ்வாமி பழைய பதிவரா? என்று உங்கள் அளவுகோளை வைத்து கண்டுபிடிக்க முடியுமா? :-))
அந்த பதிவை எப்போதோ படித்தது.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி.கண்ணன் அவர்களே,

ஜோதிடத்திற்காக துவங்க பட்ட எங்கள் பதிவு உங்களுக்காக...


http://vediceye.blogspot.com/

ஸ்வாமி ஓம்கார்

Subbiah Veerappan சொன்னது…

/////ஜோதிடத்தில் கைக்காசை செலவு செய்யும் பரிகாரம் எதுவும் கிடையாது!
இறைவனைப் பிரார்த்திப்பது ஒன்றுதான் பரிகாரம். - சுப்பையா வாத்தியார்///

அதை எடுத்து எழுதியவர் - இதையும் சேர்த்திருக்கலாமே:

"உண்மைத்தமிழர் போன்று இறையன்பர்கள் - இறைவன் மேல் அதீதப் பற்று
உள்ளவர்கள் - ஜாதகத்தைப் பார்க்கத் தேவையில்லை! கடாசி விடலாம்!"

பெயரில்லா சொன்னது…

நியூ மரலாஜி என்னும் கலை சோதிடத்துடன் சேர்ந்து ,மக்களிடம் வேகமாக பரவி வரும் ஒரு கலை ஆகும்.ஜோதிட பரிகாரம் போல இதில் பெயரில் சிறு திருத்தும் செய்து கொள்ள ஆலோசனை சொல்ல படுகிறது .
ஜோதிடம்,நியூ மரலாஜி இரண்டும் மனிதனின் பிரச்சனைகளுக்கு சரியான வழிகாட்ட கூடிய உன்னத கலைகளாகும் .
ஜோதிடம் போல இதையும் கிண்டலடிபோர் ஏராளம் உள்ளனர். இவர்கள் தங்களை பகுத்தறிவு வாதி போல நினைத்து கொள்கின்றனர்.அறிவியல் நுட்பம் வளர்வதற்கு முன்பாகவே தங்கள் நுண்ணறிவால் நம் முன்னோர் ஏராளமான ,வான சாஸ்திர அறிவு தேர்ச்சி பெற்று இருந்தனர் .அவற்றில் ஜோதிடம்,கைரேகை,எண்ணியலும் ஒன்று.பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகபடுத்தியது நாம்தான் .செவ்வாய் கிரகம் சிவந்த நிறம் என அமெரிக்கக்காரன் கண்டு பிடிப்பதற்கு முன்பே .செவ்வாய் சிவப்பு நிறம் என்றும் அதன் ராசி மேஷம்,விருச்சிகம் என்றும் இதற்க்கு சிவப்பான பவள கல் அணியலாம் என்றும் .நம் பெரியோர் சொல்லி வைத்தனர்.சீவக சிந்தாமணி,குண்டலகேசியில் அதாரம் உள்ளது.
எண்களால்எதையும் ஆராய்ந்து செயல்படுத்தினால் வெற்றி உண்டு.எண்கணிதமும் அப்படித்தான்பிறந்ததேதியை கொண்டு அவரது பிரச்சனை களைஉணர்ந்து அதற்கேற்ப சிறு திருத்தம்செய்துஆலோசனை கூற படுகிறது .பெயரை முழுவதும் மாற்றினால் பில் கேட்ஸ் ஆகமுடியாது.பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.உதாரணமாக திருமண எண்ணம் இருந்து ம ,திருமணம் தாமத மாவத்தை தடுக்கமுடியும் .தொழில் அமையாத பிரச்சனையை சரி செய்ய முடயும் .கடன் பிரச்சனை உள்ளவர்களை அதிலிருந்து மீள வழி சொல்லமுடயும்.தலைக்கு வந்தது தலை பகையுடன் போனது போல சில பிரச்சனைகளை சரி செய்யலாம்.அதற்காக எந்த பெயரையும் மாற்றி,ராமசாமியை அஜித் என மாற்றி வைத்தால் தான் ஜெய்க்க முடியும் , என்பது நியூ மரஃலஜி அல்ல.
நடைமுறைக்கு சாத்திய படும்படியும் இருக்க வேண்டும் .பெயரில் ஒரு இன்சியலை சேர்க்கலாம்,அல்லது குறைக்கலாம்.அதன் மூலம் நிச்சயம் அவர் வாழ்வில் நல்ல மாறுதல் ஏற்படும்.பிறந்த தேதி படி சரி செய்ய வேண்டும்.இப்பொழுது சில ஜோதிடர்கள் இஷ்டம் போல பெயர் மாற்றி வைத்து ,இது தான் நியூமரலாஜிஎன்பதற்காக நியூ மரலாஜிஎன்பதே தவறு என வாதிடுவது,சூரியனை பார்த்து குலைப்பது போல வீணான வாதமாகிவிடும் ..
ஒரு பகுத்தறிவு வாதி இவ்வாறு கதை சொலி கிண்டல் செய்துள்ளார் ..


.///// சும்மா கிடந்த எங்க உறவினர் ஒருவரிடம் ஒரு பொறம்போக்கு நீங்க இருக்குற வீடு தான் உங்களுக்கு பிரச்சினை. அதன் நம்பர் சரியில்லை. அதன் நம்பர் நன்றாக இருந்தால் (அவர் ஏற்கனவே நல்லா தான் இருந்தார்) இன்னும் நல்லா முன்னேறி எங்கேயோ போயிருவீங்க என்று சொல்லிவிட்டார். மேலும் உங்க பொண்ணுக்கு சீக்கிரமே நல்ல இடமாக அமைந்துவிடும் என்று மேலும் ஒரு சென்டிமெண்ட் பிட்டை வேறு போட்டுவிட்டார். இத்தனை வருடமாக இந்த வீட்டில் தான் இருக்கிறோம் திடீரென்று எப்படி நம்பரை மாத்துவது என்று எங்க உறவினர் குழம்ப அதற்கும் அந்த பொறம்போக்கு ஒரு ஐடியா கொடுத்தார். உங்க வீட்டு நம்பருக்கு பக்கத்தில் ஏதாவது ஒரு எழுத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்

எங்க உறவினரும் அவர் சொன்னதை நம்பி அவர் வீட்டு நம்பருக்கு பக்கத்தில் தன்னுடைய பெயரை குறிக்கும் விதமாக அவருடைய இனிஷியலை சாக்பீஸால் எழூதி வைத்தார். அப்புறம் தான் பிடிச்சது கிரகமே. அது நாள் வரை அவர் வீட்டு தபால்களை ஒழுங்காக டெலிவரி செய்த தபால்காரர் வீட்டு நம்பரில் புதிதாக சேர்க்கப்பட்ட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கை பார்த்து குழம்பி தபால்களை பக்கத்து வீட்டில் போட ஆரம்பித்தார். அந்த வீடோ ஆள் சஞ்சாரமே இல்லாமல் வெகு நாட்களாக பூட்டி இருக்கும் வீடு. எங்க உறவினர் அவர் பெண்ணுக்கு அலையன்ஸ் தேடிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இது என்னடா புது வம்பா போச்சுன்னு நியூமராலஜியும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று புத்தி தெளிந்து ஒழுங்காக இயல்பு நிலைக்கு திரும்பினார்///

என்ன கதையா இருக்கு .ஒரு பைத்தியக்காரன் இன்னொரு பைத்த்யதிடம் ஏமாந்த கதையை சொல்லி நியூ மரலாஜி என்பதே ஏமாற்று வேலை என முடிவுக்கு வந்து விட்டாராம்.வீட்டின் கதவில் நெம்பர் போட்டு வைத்தால் வீட்டு பிரச்சனை தீராது. வீட்டுக்கு வாஸ்து இருக்கே.அதை பார்த்து கொள்ளலாமே.
பெயரில் சிறு திருத்தம் செய்து கொள்ள தான் நியூ மரலாஜி.இத்துபோய், எதற்கும் ஆகதவனுக்கு கோடீஸ்வரன் ஆக கற்று கொடுக்க அல்ல,அஞ்சாயிரம் சம்பாதிபவன் பத்தாயிரம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்கு தான் இந்த கலை.பிறந்த குழந்தைக்கு முதலில் பெயர் வைக்கும் பொது இதன் படி வைத்தால் நல்லது.ஐம்பத்து வயதானவருக்கு அல்ல.
ஜோதிடம்,வாஸ்து,நியூமரலாஜி ,வழிபாடு இவற்றில் ஆர்வம் உள்ளவர்க்கு இந்த கலை யால் நன்மை செய்ய முடியும் இவை அத்தனையும் பயன்படுத்தி ஆலோசனை செய்து கொண்டால் நிச்சயம் பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியும் என்று முன்னோர் கூறிஉள்ளனர்.இத்தனையும் பயன்படுத்தியா ..என்று இல்லை.ஏதேனும் ஒரு முறையிலாவது இவர் பிரச்சனையை சரி செய்யவேண்டும் என நினைத்து தான் ஜோதிடர் ஆலோசனை கூறி நிவர்த்தி செய்ய முயலுகிறார் .
கன்சல்டிங் பீஸ் வாங்கினால் இந்த பணத்திற்காக தான் இவன் இத்தனை பொய்யையும் சொல்கிறான் என்கிறார்கள்.எந்த கன்சல்டிக் இல் பணம் இல்லை?
பணம் வாங்கி விட்டால் அவன் சொல்வது எல்லாம் புளுகு மூட்டை ஆகிவிடுமா?ஜோதிடத்தை முழுவதும் உணர்ந்து ,அதை தெய்வீக தொழிலாக பாவித்து வந்தவர் பிரச்சனை தீர வேண்டும் என்று உணந்து தான் பல ஜோதிடர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்.
பகுத்தறிவு பேசியவன் எல்லாம் ,பிள்ளையாரை தூக்கி உடைத்தவர் எல்லாம் இன்று பவானி கூடுதுறையில் ,மூன்று வேளையும் விழுந்து ,விழுந்து கும்பிடுவதை பலரும் பார்த்து கொண்டுதான் உள்ளனர்.இதற்கு இந்த வார விகடனில் வெளிவந்த பெரியார் சீடர் பெருமாளே சாட்சி.நெத்தி நிறைய விபூதி பட்டையோடு,பெரியாருடன் சேர்ந்து பிள்ளையார் சிலை உடைத்ததையும் ,இன்று மூன்று வேளையும்காயத்ரி மந்திரம் சொல்வதையும் சிலாகித்து ,அவர் பேட்டி கொடுத்திருப்பதை பார்த்தால் சிரிப்பு வருகிறது. காலம் எதையும் மாற்றி போடும் சக்தி வாய்ந்தது.என உணர்த்துகிர்றது,ஜோதிடம் எல்லாம் எப்போதும் இருக்கும்.கிண்டல் செய்பவர்கள்,பிரச்சனை என வந்தால் முக்காடிட்டு ஜோதிடனிடமோ,கடவுளிடமோ சென்று தான் ஆக வேண்டும்.பகுத்தறிவு என்பது ஜோதிடத்தையும்,கடவுளையும் கிண்டல் செய்வதுமட்டும் தான் , என்றால் இதற்க்கு பெயர் தான் முட்டாள்தனம்.
ஜோதிடத்தை கிண்டல் செய்வதற்காக ,பகுத்தறி வாளர்கள்,ஜோதிடம் கற்று அதில் இருக்கும் உண்மையை உணர்ந்து ஜோதிடர் அனோர் அநேகம் .சில
பகுத்தறிவுவாதிகள் வீட்டுக்குள் சாமி கும்பிட்டு ,ராசிகல் மோதிரம் அணிந்து,ஜோதிடனை துவேசிப்பதால் ,ஜோதிடம் கறைஆகாது.சூரியனை கண்டு உலைப்பதால் சூரியனுக்கு வாய் வலிப்பதில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
நியூ மரலாஜி என்னும் கலை சோதிடத்துடன் சேர்ந்து ,மக்களிடம் வேகமாக பரவி வரும் ஒரு கலை ஆகும்.ஜோதிட பரிகாரம் போல இதில் பெயரில் சிறு திருத்தும் செய்து கொள்ள ஆலோசனை சொல்ல படுகிறது .

//

சதீஷ் குமார்,

ஜோதிடத்தில் பலன்களைப் பெற்று சகல நன்மைகளை தாங்கள் அடையுமாறு வாழ்த்துகிறேன்.

உங்களுக்காக இரு ஜோதிட தளங்கள் இயங்குகின்றன,

1. சுப்பையா வாத்தியாரின் ஜோதிட பதிவு
2. ஸ்வாமி ஓம்காரின் ஜோதிட பதிவு

இவர்கள் ஏமாற்று ஜோதிடர்கள், அல்ல நல்ல ஜோதிடம் தான் எழுதுகிறார்கள், படித்து பயனடையுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...

"உண்மைத்தமிழர் போன்று இறையன்பர்கள் - இறைவன் மேல் அதீதப் பற்று
உள்ளவர்கள் - ஜாதகத்தைப் பார்க்கத் தேவையில்லை! கடாசி விடலாம்!"

12:28 PM, September 10, 2008
//

வாத்தியார் ஐயா.
மார்கண்டேயனுக்கு 16 வயதில் மரணம். அவனுக்கு ஜாதகம் வேலை செய்யலையே அதை வைத்துச் சொல்கிறீர்களா ?

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

எனது அருமை கோவி.கண்ணன்,

நியூமராலஜியை பற்றி உங்கள் பதிவுக்கு வந்த கருத்துக்கள் காணும் பொழுது அந்த நபர் அதீத குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.

அவரிடத்தில் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். உங்கள் அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன்.

1) முதலில் நீயூமராலஜிக்கும் ஜோதிடத்திற்கும் என்ன உறவு என தெரியவில்லை.
ஜோதிடத்தை சப்த ரிஷிகள், பராசரர், ஜெயமினி என முனிவர்கள் கண்டரிந்தனர். ஆனால் நீயூமாராலஜியை கண்டுபிடித்த ஏதாவது ஒருவர் பெயரை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம்? அல்லது புராணத்தில் பெயர்மாற்றம் செய்த எதாவது யுக புருஷரை கூற முடியுமா?

2) நீயூமராலஜியில் A=1, B=2 என எண்களை ஒதுக்கியதன் காரணம் என்ன? ஏன் A=7, B=9 என சொன்னால் உங்களால் ஆதாரத்துடன் மறுக்க முடியுமா? சூரியன்=1, சந்திரன்=2 என சொன்னதன் காரணமும் விளக்கினால் எங்கள் வாழ்வு வளம் பெறும்.ஜோதிடத்தில் அனைத்துக்கும் அதாரமும் அடித்தளமும் உண்டு. ஆனால் நீயூமராலஜியில் அவ்வாறு இல்லை.

3) பெயரை மாற்றினால் அனைவரும் பில்கேட்ஸ் ஆகமுடியாது என்கிறார். பில்கேட்ஸ் எப்பொழுது பெயரை மாற்றி உலகின் கோடிஸ்வர பட்டியலில் இடம் பிடித்தார்?

4) நீயூமராலஜி எனும் வார்த்தையை கூட்டினால் Numrology = 5+6+4+2+7+3+7+3+1= 2 என்ற கூட்டு தொகை வருகிறது. 1,3 அல்லது 9 என்ற உயர் எண்ணில் ஏன் இந்த பெயரை மாற்றி வைத்து நீயூமராலஜியை பிரபலப்படுத்த கூடாது?

5) கடைசி மற்றும் முக்கியமான கேள்வி. உங்கள் நீயூமராலஜியில் GOD என்றாலும் DOG என்றாலும் ஒரே கூட்டுதொகைதானே வரும்? இரண்டும் ஒன்றா?

கைதேர்ந்த அரசியல்வாதி போல ஜோதிடத்தில் அது உண்டு கிரகங்கள் சிகப்பு நிறம் என்றெல்லாம் சொல்லிவிட்டு அதனால் நீயூமராலஜி சரி என வாதம் செய்வது என்ன முறை? நீயூமராலஜி கொண்டு நீயூமராலஜியை பேசுங்கள்.
தயவு செய்து இனிமேலாவது ஜோதிடத்தை வம்புக்கு இழுத்து நீயூமராலஜி சரி என வாதம் செய்யாதீர்கள்.

இவன் உங்கள்
ஸ்வாமி ஓம்கார்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
எனது அருமை கோவி.கண்ணன்,

நியூமராலஜியை பற்றி உங்கள் பதிவுக்கு வந்த கருத்துக்கள் காணும் பொழுது அந்த நபர் அதீத குழப்பத்தில் இருப்பது தெரிகிறது.

அவரிடத்தில் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். உங்கள் அனுமதி கிடைக்கும் என நினைக்கிறேன்.
//

ஸ்வாமி ஓம்கார்,

அவருக்கு பதில் சொல்லி இருப்பேன், கருத்தை மாற்றிக் கொள்வார் என்று தோன்றவில்லை, அதனால் விட்டுவிட்டேன்.

ஒன்பது கோள்களை வைத்துச் கணிக்கப்படும் ஜோதிடம் கணிதத்துடன் தொடர்புடையது என்று சொல்லப்படுவதால் அதனை நான் விமர்சனம் செய்ய நினைப்பது இல்லை, அதை உறுதியாக மறுக்கும் அளவுக்கு ஆராய்ந்து பார்த்ததும் இல்லை.

மற்ற ஜோதிடங்களெல்லாம் 100 விழுக்காடு மோசடிகள் தான், சதீஷ் குமாரின் பின்னூட்டமே அதற்கு சாட்சி.

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//5) கடைசி மற்றும் முக்கியமான கேள்வி. உங்கள் நீயூமராலஜியில் GOD என்றாலும் DOG என்றாலும் ஒரே கூட்டுதொகைதானே வரும்? இரண்டும் ஒன்றா?//


அருமை அருமை !

ஆங்கில மொழிக்கே நியூமரலஜி பார்த்து, ஆங்கில மொழி ஆர்வலரிடம் சொல்லை மாற்றச் சொன்னாலும் சொல்லுவார்கள். DOG க்கு அல்ல. GOD க்கு அப்போது தான் நல்ல பலன்களைக் கொடுப்பார்.

பெயரில்லா சொன்னது…

நாகரீகமற்ற முறையில் ,தான் பெரிய அறிவாளி போலவும் ச்செவிடன் காதில் சங்கு என எழுதியுள்ள ,பின்னூட்டம் இட்டுள்ள வால் பைய்யன் க்கு எனது கண்டனங்கள் ,குறைந்த தண்ணீரில் சரக்கு அடிப்பது எப்படி என நீங்கள் எழுதும் கேடு கெட்ட பதிவை விட எனது பதிவு மோசம் இல்லை.
நல்ல விசயங்களை பற்றி முழுதும் தெரிந்து கொள்ளாமல் தற்குறி தனமாக எழுதும் நீங்களும்,கோவி கண்ணனும் மாறி மாறி .......
அவரவர் காதுகளில் சங்கு oothi கொள்ளுங்கள்.

பெயரில்லா சொன்னது…

//இவர்கள் எல்லாரும் சோதிடம் உண்மை என்று பரப்பிக் கொண்டு அதில் பிழைப்பையே நடத்துவார்கள்.//
//இன்னும் மச்ச சோதிடன், மயிர் சோதிடன் ( இது ஒரு படத்தில் வரும்.. தியாகராஜன் ஸ்ரீதேவியின் கூந்தல் மயிரை வைத்து அவருக்கு தொடையில் மச்சம் இருப்பதைச் சொல்லுவார்//
இதை பற்றி சுவாமிகள் என்ன சொல்கிறார்?
சுவாமிகள் உங்கள் பதிவுக்கு ஜால்ரா தட்டியதால் உச்சி குளிர்ந்த கண்ணன் சர்,
இன்னும் நிறைய அதரன்களோடு தொடர்ந்து பதிவு( நியூ மரலாஜி )
போடுகிறேன்.நீங்களும் சுவாமிகளும் பார்த்துக்கொள்ளுங்கள்.உடனே வேண்டும் என்றால்,
எனது பதிவுக்கு வாருங்கள்;
மயிர் ஜோதிடம் என எழுதியதை கேட்க துப்பில்லாமல் ஜால்ரா தட்டும் சுவாமிகளே ,ஜோதிடம் பொய் என்பது தான் மைய கருத்து .அதை விமர்சித்து விட்டு என்னை விமர்சிக்க வாருங்கள்;
சுப்பையா வாத்தியார்.உண்மையான ஜோதிடர்.தான்.கடைசியில் உண்மை ஜோதிடம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த தற்கு நன்றி.ஏற்கனவே நான் வாத்தியார் மாணவன் தான்.அதில் பெருமை தான்.நீங்களும் மாணவனாய் சேர்ந்து குழம்பி போன உங்கள் மூளையை சரி செய்து கொள்ளுங்கள்;நன்றி;

கோவி.கண்ணன் சொன்னது…

ஆர்.கே.சதீஷ்குமார் said...
//இவர்கள் எல்லாரும் சோதிடம் உண்மை என்று பரப்பிக் கொண்டு அதில் பிழைப்பையே நடத்துவார்கள்.//
//இன்னும் மச்ச சோதிடன், மயிர் சோதிடன் ( இது ஒரு படத்தில் வரும்.. தியாகராஜன் ஸ்ரீதேவியின் கூந்தல் மயிரை வைத்து அவருக்கு தொடையில் மச்சம் இருப்பதைச் சொல்லுவார்//
இதை பற்றி சுவாமிகள் என்ன சொல்கிறார்?
சுவாமிகள் உங்கள் பதிவுக்கு ஜால்ரா தட்டியதால் உச்சி குளிர்ந்த கண்ணன் சர்,
இன்னும் நிறைய அதரன்களோடு தொடர்ந்து பதிவு( நியூ மரலாஜி )
போடுகிறேன்.நீங்களும் சுவாமிகளும் பார்த்துக்கொள்ளுங்கள்.உடனே வேண்டும் என்றால்,
எனது பதிவுக்கு வாருங்கள்;
மயிர் ஜோதிடம் என எழுதியதை கேட்க துப்பில்லாமல் ஜால்ரா தட்டும் சுவாமிகளே ,ஜோதிடம் பொய் என்பது தான் மைய கருத்து .அதை விமர்சித்து விட்டு என்னை விமர்சிக்க வாருங்கள்;
சுப்பையா வாத்தியார்.உண்மையான ஜோதிடர்.தான்.கடைசியில் உண்மை ஜோதிடம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்த தற்கு நன்றி.ஏற்கனவே நான் வாத்தியார் மாணவன் தான்.அதில் பெருமை தான்.நீங்களும் மாணவனாய் சேர்ந்து குழம்பி போன உங்கள் மூளையை சரி செய்து கொள்ளுங்கள்;நன்றி;
//

சதீஷ்குமார்,

சொற்கள் தடிக்கிறதே,
உங்களுக்கு நாக்கில் சனி உட்கார்ந்து இருக்கான் போல தெரியுது ! சனிப்பெயர்ச்சி வரை சற்று பொருமையாக இருக்கலாமே !
:)

பெயரில்லா சொன்னது…

உங்கள் கருத்துக்கு விமர்சனம் செய்தால் மோசடி ஜோதிடர் பட்டமா ?
நன்றி.!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
மயிர் ஜோதிடம் என எழுதியதை கேட்க துப்பில்லாமல் ஜால்ரா தட்டும் சுவாமிகளே ,

5:40 PM, September 12, 2008
//

மயிர் ஜோதிடம் இருக்கிறதா இல்லையா ? சாமுந்திரிகா லட்சனம் என்ற பெயரில் அந்த சோதிடம் சொல்லப்படும், அங்கங்களை வைத்து சொல்வதாம், உதிர்ந்த மயிரை வைத்துத்தான் அந்த படத்தில் சொல்லுவார்கள், நான் கற்பனையாக எதுவும் எழுதவில்லை. படம் பெயர் நினைவு இல்லை, தியாகரானும் ஸ்ரீதேவியும் நடித்தது தான்.

ஒரு ஸ்தபதி ஸ்ரீதேவியின் தலை முடியை வைத்து சிலை செய்வார், செய்து முடித்ததும் தொட்டையில் மச்சம் செதுக்குவார், அரசருக்கு கோபம் வந்து ஸ்பதியை சிறையில் அடைத்துவிடுவார், பிறகு உண்மை தெரிந்து மன்னிப்பு கேட்பார். ஏனென்றால் அந்த மச்சத்தை அரசர் பார்த்ததே இல்லையாம்.

:)

பெயரில்லா சொன்னது…

எனக்கு நாக்கில் சனியா .மயிறு ஜோதிடம் என விமர்சனம் செய்த உங்களுக்கு தான் நாக்கில் சனி.
மற்றவர் நம்பிக்கை யை பழிக்கவும்,விமர்சனம் செய்யவும் உரிமை உண்டு.
அனால் மோசடி என்னும் வார்த்தை மிகவும் மோசமானது.

பெயரில்லா சொன்னது…

யிர் ஜோதிடம் இருக்கிறதா இல்லையா ? சாமுந்திரிகா லட்சனம் என்ற பெயரில் அந்த சோதிடம் சொல்லப்படும், அங்கங்களை வைத்து சொல்வதாம், உதிர்ந்த மயிரை வைத்துத்தான் அந்த படத்தில் சொல்லுவார்கள், நான் கற்பனையாக எதுவும் எழுதவில்லை. படம் பெயர் நினைவு இல்லை, தியாகரானும் ஸ்ரீதேவியும் நடித்தது தான்.

ஒரு ஸ்தபதி ஸ்ரீதேவியின் தலை முடியை வைத்து சிலை செய்வார், செய்து முடித்ததும் தொட்டையில் மச்சம் செதுக்குவார், அரசருக்கு கோபம் வந்து ஸ்பதியை சிறையில் அடைத்துவிடுவார், பிறகு உண்மை தெரிந்து மன்னிப்பு கேட்பார். ஏனென்றால் அந்த மச்சத்தை அரசர் பார்த்ததே இல்லையாம்.//
சாமுத்திரிகா லட்சணம் ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதி.
நல்ல ஜோதிடர் சுவாமி ஓங்கார நந்த இந்த மயிர் ஜோதிடம் பற்றி விளக்கம் கேக்கலாமே

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
எனக்கு நாக்கில் சனியா .மயிறு ஜோதிடம் என விமர்சனம் செய்த உங்களுக்கு தான் நாக்கில் சனி.
மற்றவர் நம்பிக்கை யை பழிக்கவும்,விமர்சனம் செய்யவும் உரிமை உண்டு.
அனால் மோசடி என்னும் வார்த்தை மிகவும் மோசமானது.
//

நான் எள்ளு சாதம் செஞ்சு வச்சு பரிகாரம் செஞ்சுக்கிறேன்.

நான் மோசடி என்று குறிப்பிட்டது நீங்கள் சுட்டிக் காட்டும் தகவல்களைத்தான், நீங்கள் ஜோதிடத்தை வைத்து பிழைப்பு நடத்தினால் 'மோசடி' தான். சோதிடம் உங்களுக்கு பிழைப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

சதீஷ்குமார் சார்,

ரொம்ப சூடாக இருக்கிங்க, எனக்கு அந்த அளவுக்கெல்லாம் எதுவும் கொதிக்கல, அமைதி அடையுங்க !

//சூரியனை பார்த்து குலைப்பது போல வீணான வாதமாகிவிடும் ..//

'நாயை' விட்டுவிட்டு எழுதினால் நீங்கள் எழுதியதெல்லாம் நாகரீகம் என்ற இலக்கணத்தில் வராது, என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எல்லோருக்குமே புரியும்.

பெயரில்லா சொன்னது…

மீண்டும் கண்டனங்கள் .வார்த்தை உங்களுக்கும் தடித்து வருகிறது,நாக ரீகம் இல்லாமலும் /
இதற்க்கு ஜோதிடத்திற்கு தச்நியாக வலை பூ துவங்கயுள்ள சுவாமி ஓங்கார நந்த தான் பதில் சொல்ல வேண்டும் //
மீண்டும் கண்டனங்கள் !.வார்த்தை உங்களுக்கும் தடித்து வருகிறது,நாக ரீகம் இல்லாமலும் /
இதற்க்கு ஜோதிடத்திற்கு தனியாக வலை பூ துவங்கிஉள்ள சுவாமி ஓங்கார நந்த தான் பதில் சொல்ல வேண்டும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்