பின்பற்றுபவர்கள்

11 செப்டம்பர், 2008

கோவிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் சேருவது ஏன் ?

இறைமறுப்பாளர்களை ஏளனம் செய்ய இந்த கேள்வி எப்போதும் கேட்கப்படுகிறது, 'இதோ பார், நீ எவ்வளவுதான் மூட நம்பிக்கையைப் பற்றி விழிப்புணர்வு ஊட்டினாலும், பெருகும் கோவில்களையோ, கூடும் கூட்டத்தையோ குறைக்க முடிகிறதா ? மாறாக பெருகுகிறதே !' என்று பெருமையாகாவும், ஏளனமாகவும் சுட்டிக் காட்டுகிறார்கள். இறைமறுப்பாளர்கள் இந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதற்கு திணறவே செய்வார்கள்.

நாளுக்கு நாள் மூட நம்பிக்கையின் வளர்ச்சி விகிதம் மிகும் போது, கூட்டம் சேருவதும் இயல்புதானே. சாமியார் செய்வது மேஜிக் என்றே நன்கு தெரிந்து சாமியாரை சந்தேகிக்காதவர்கள் பகவானாக போற்றும் போது, மேஜிக் என்றே அறியாதவர்கள் சாமியார் அதிசயம் நிகழ்த்துகிறார், சக்தி உள்ளவர் என்ற அறியா நம்பிக்கையில் கூட மாட்டார்களா ?

விரைவான வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், அதனால் நமது மன அழுத்தம் மிகுந்துவிட்டது, சிந்தித்து சரி செய்து கொள்வதற்கு எவருக்குமே பொறுமை இருப்பது இல்லை. தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள குறுக்கு வழியில் செல்வதையே பலரும் விரும்புகிறார்கள், அதிர்ஷ்ட குலுக்களில் பரிசு விழுந்தால் உடனடியாக பொருளாதாரம் உயர்ந்துவிடும் என்றும், என்றாவது விழுந்தாலும் விழும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து வாங்குவோம் என்று வாங்கி ஏமாறுபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள், லாட்டரி வாங்குபவர்கள் எல்லோருக்கும் அதிர்ஷ்டம் அடித்துவிடுகிறதா ?

கோவில்கள் மட்டும் அல்ல லாட்டரி கடைகளும் மிகுந்துவிட்டதை உணர்ந்து இருப்பீர்கள், மக்கள் சீரழிந்துவிடுவார்கள் என்கிற காரணத்தினால் அரசுகள் அவற்றை தடை செய்து கட்டுபடுத்தி வைத்திருக்கின்றன. முன்பை விட மதுபானங்களை நாடுபவர்களும் மிகுந்துவிட்டார்கள். பக்தி வளர்ந்துவிட்டதே என்று கூறுபவர்கள் டாஸ்மார்க் கடைகளும் பெருகிவிட்டதை நினைத்துப் பார்க்க வேண்டும். முன்பெல்லாம் கோவிலுக்குச் செல்வது ஒரு கடமையாக இருக்கும், கால்வலியைப் பொருட்படுத்தாது நடந்து செல்வர். தற்போது அவசர சூழலில் நம் தெருவில் ஒன்று வைத்துக் கொண்டாலே போதும், வேறு விழா நாட்களில் பெரிய கோவில்களுக்குச் செல்வோம் என்று முடிவெடுத்துவிட்டதால் கோவில்களின் தேவை மிகுந்து பெருகிவிட்டது. இவை பக்தி வளர்ந்தற்கான அடையாளமா ?

பக்தியும், இறை நம்பிக்கையும் வளர்ந்து இருந்தால் அவற்றினால் சமூகத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டு இருக்கவேண்டும் ஆனால் அப்படி இல்லை, கெடுதலும் கூடவே மிகுந்துவிட்டதை ஒப்பு நோக்குக. இறை நம்பிக்கை கெடுதலை ஏற்படுத்திவிட்டது என்று நான் சொல்லவரவில்லை. சமூக ஒழுங்கீனங்கள் மிகுந்துவிட்டதற்கு காரணம் நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டு இருக்கும் மாற்றம். வழிபாட்டு இடங்கள் குற்றவாளிகளின் கூடாராமாக மாறிக்கொண்டு தானே இருக்கிறது. விரைவு வாழ்க்கைச் சூழல், பேராசை என மன அழுத்தம், மன உந்துதல் இவற்றில் இருந்து விடுபட வேறு வழி தெரியாததால் கோவிலை நாடுகிறார்கள்

இணைய வழியாகவே அர்சனைக்கு வேண்டிக் கொண்டு நேரத்தை பணம் ஈட்டுவதற்கு பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு வாழ்க்கை விரைவாகவே செல்கிறது, மற்றவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடபட மார்க்கம் வேண்டி செல்கிறார்கள், பெரும்பாலோர் எதாவது வேண்டுதல், எதிர்ப்பார்ப்பு இவற்றை மனதில் வைத்துக் கொண்டு தான் செல்கிறார்கள்.

கோவிலில் கூட்டம் மிகுந்துவிட்டது உண்மைதான், டாஸ்மார்க் கடைகளிலும், ஷகீலா படங்களுக்கும் கூட கூட்டம் மிகுதி தான், முன்பை விட கோவிலுக்குள்ளும், சாமியார்களிடமும் ஒழுங்கீனங்களும் வளர்ந்துவிட்டதை உணர்ந்து கொண்டால் இதில் பெருமை பட ஒன்றுமே இல்லை.

மூட நம்பிக்கையை மொத்தமாக வைத்துக் கொண்டு விற்பனை நடத்தும் மதவாதிகளின் அறைகூவல்கள் தான் வழிபாட்டு தளங்களில் கூடும் கூட்டம் பற்றிய ஜம்பங்கள், வீண்பெருமைகள். இவர்கள் என்ன தான் இவற்றைச் சுட்டிக்காட்டினாலும் இவற்றில் நடக்கும் ஒழுங்கீனங்களை இவர்களால் தடுத்து நிறுத்த முடிகிறதா ? வழிபாட்டு தளங்கள் வணிக நிறுவனங்கள் ஆகிவிட்டன, அவற்றை மூலதனமாக வைத்திருப்பவர்கள், மக்களின் நம்பிக்கையை காசாக்கிக் கொண்டு இருக்கின்றன, இவர்கள் சரக்கை விற்கவில்லை, அல்லது மட்டமான சரக்கை விற்பனையாக்குகிறார்கள். நம்பிக்கையுடன் செல்பவர்கள் ஏமாறுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே உண்மை. ஏமாறுவது உணரப்படாததாலும், ஏமாறுகிறோம் என்கிற அறியாமையே மீண்டும் மீண்டும் ஏமாற்றத்திலேயே வைத்திருக்கிறது.

கோவில்களில் மட்டுமல்ல, மசூதிகள், சர்ச்சுகள் ஆகியவற்றிலும் கூட வழிபாட்டு நேரங்களில் இடம் கிடைப்பது இல்லை. :) செல்வம் கொடுக்கும் சக்தி உள்ள சாமி என்று கதைகட்டிவிட்டால் போதும் பேராசையில் கூட்டம் பிதுங்கி வழியும் அளவுக்கு கூடிவிடும், திருப்பதி கோவிலில் கூடும் கூட்டம் இத்தகையது தான்.

37 கருத்துகள்:

சிக்கிமுக்கி சொன்னது…

கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லாம், எதற்கெதற்காகப் போகிறார்கள் என்பது எல்லார்க்கும் தெரிந்த செய்தி!

எனவே, கோயிலுக்குக் கூட்டம் சேருவது ஒரு வியப்பான செய்தியே அன்று.

ஜோ/Joe சொன்னது…

//கோவில்களில் மட்டுமல்ல, மசூதிகள், சர்ச்சுகள் ஆகியவற்றிலும் கூட வழிபாட்டு நேரங்களில் இடம் கிடைப்பது இல்லை. :)//

அப்பாடா..இப்போது தான் sarveysan -க்கு நிம்மதியாக இருக்கும் :))

ரங்குடு சொன்னது…

கோவிலுக்குக் கூட்டம் அதிக மாவது ஏன்?

1. ஜனத் தொகை எக்கச்சக்கமாகி விட்டது. மக்கள் எங்காவது போக வேண்டாமா? கோவில், ஓட்டல், பீச் எங்கேதான் கூட்டமில்லை?
2. ஏதோ ஒரு ரஜினி காந்த் ராகவேந்திர் கோவிலைச் சுற்றினதால் சூப்பார் ஸ்டார் ஆனேன் என்று சொல்லியிருப்பதாலும், இளய ராஜா
திருவண்ணாமலையைச் சுற்றியதாலும், எம்.ஜி.ஆர் மூகாம்பிகைக்கு வைர வேலோ எதோ ஒன்று தந்ததாலும், அந்த கடவுள்கள்
நமக்கும் எதாவது செய்ய மாட்டாரா என்ற நப்பாசையில் ஜனங்கள் கோவில்களைச் சுற்ற ஆரம்பித்து விட்டனர்.
3. குறை இல்லாத மனிதர்கள் யாரும் இல்லை என்பதை மறந்து விட்டு, பிள்ளை யில்லாதவர்கள் , வேலையில்லாதவர்கள், பணமில்லாதவர்கள்,
கல்யாணம் ஆன மன நிம்மதியில்லாதவர்கள், கல்யாணம் ஆகாதவர்கள், படித்து விட்டு வேலை கிடைக்காதவர்கள், வேலை கிடைத்து
பதவி உயர்வு வேண்டுபவர்கள், என பலருக்கும் கோவில்தான் கதி.
4. சைட் அடிக்க நி னைப்பவர்கள்,வந்தவர்கள், கும்பலில் பெண்களை இடித்து சுகம் காண்பவர்கள் என பலருக்கும் கோவிலே கதி.
5. திருடர்கள் அந்தக் காலத்தில் தாம் கொள்ளையடித்த பணத்தில் பாதியைக் கோவிலுக்குக் கொடுத்து விடுவார்களாம். தற்காலத்தில்
பல அரசு ஊழியர்களும், அரசியல் வாதிகளும் அந்த வேலையைச் செய்வதால் வரும் கிம்பளத்தில் கொஞ்சம் கோவிலுக்குப்
போய் செலவழிப்பதால் பாவம் போய் விடும் என்று நம்புவதாலும் கோவிலில் கூட்டம் அதிகம்.
6. உண்மையான பக்தனுக்குக் கோவில் தேவையில்லை. நாமெல்லாம் சராசரிக்கும் கீழான மனிதர்கள். நமக்கெல்லாம் கோவில் தேவை.

கோவி.கண்ணன் சொன்னது…

//rangudu said...
6. உண்மையான பக்தனுக்குக் கோவில் தேவையில்லை. நாமெல்லாம் சராசரிக்கும் கீழான மனிதர்கள். நமக்கெல்லாம் கோவில் தேவை.//

இது இது அசத்தல் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...

அப்பாடா..இப்போது தான் sarveysan -க்கு நிம்மதியாக இருக்கும் :))

10:23 AM, September 11, 2008
//

சர்வேசனுக்காக எழுதவில்லை ஜோ !
பகவான் செயலால் எழுதினேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சிக்கிமுக்கி said...
கோயிலுக்குப் போகிறவர்கள் எல்லாம், எதற்கெதற்காகப் போகிறார்கள் என்பது எல்லார்க்கும் தெரிந்த செய்தி!

எனவே, கோயிலுக்குக் கூட்டம் சேருவது ஒரு வியப்பான செய்தியே அன்று.

10:04 AM, September 11, 2008
//

சிக்கிமுக்கி,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !

துளசி கோபால் சொன்னது…

'கடவுள் கொடுத்தார்'ன்னு சொல்லிக்கிட்டே மூச்சுத் திணறிக்கிட்டு இருக்கும் மக்கள்தொகையை முதலில் கட்டுப்படுத்துங்க.

எரியறதைப் பிடுங்குனாக் கொதிக்கறது அடங்கிரும்.

அளவுக்கு மீறி இருக்கும் அமிர்தமும் நஞ்சு.

பாபு சொன்னது…

இறை நம்பிக்கையாளர்கள் எல்லோரும் சாமியார்களை நம்புகிறார்கள் என்பதுபோல், நீங்கள் உங்கள் பதிவுகளில் பொதுவாக எழுதுகிறீர்கள்.
இறை வழிபாட்டை ஒவ்வொருவரும் ஒருவிதமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
கோவிலுக்கு செல்வது என்பது கூட அப்படிதான்,எல்லோரும் நிறைய காசு வேண்டும் என்பதற்க்காக செல்லவில்லை.வயதானவர்கள் நிறைய பேர் கோவிலே கதி என்று இருப்பதை நீங்கள் பார்த்ததில்லையா,அவர்களுக்கு அங்கே கிடைப்பது மன நிம்மதி.நீங்களே சொல்லியிருப்பது போல் இன்றைய அவசர உலகிலே இருக்கும் மன அழுத்தத்திற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வடிகால் தேவை படுகிறது,அது சிலருக்கு கோவில்,சிலருக்கு tasmac ,சிலருக்கு வலை பதிவுகள்
பின்னூட்டம் பெரிதாவதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//இறைமறுப்பாளர்கள் இந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதற்கு திணறவே செய்வார்கள்.
//

கோவி அண்ணா இருந்துமா அவர்களுக்கு இந்தத் திணறல்? :)))

சரி...
மேட்டருக்கு வாரேன்
கோவிலா? கோயிலா??
அவா தான் பெரும்பாலும் கோவில்-ன்னு வா? நீங்களுமா? :)

அப்பறம் அறி"வாலயம்" -ல்லாம் இதுல சேர்த்தி இல்லையா-ண்ணா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

இன்னொரு விடயமும் கவனித்தீர்களா?
இப்பல்லாம் நல்ல நடுத்தர வர்க்க மக்கள் கூட இப்பல்லாம் திருமண மண்டபங்களில் கல்யாணம் வைத்துக் கொள்வதில்லையாம். கோயில்களில் தான் வைத்துக் கொள்கிறார்களாம், எளிமையாக! இது பற்றியும் "ஏதாச்சும்" சொல்லுங்களேன்! :))

கோவி.கண்ணன் சொன்னது…

//சரி...
மேட்டருக்கு வாரேன்
கோவிலா? கோயிலா??
அவா தான் பெரும்பாலும் கோவில்-ன்னு வா? நீங்களுமா? :)///

கேஆர்எஸ்,
ஆக்கிரமிப்பு காஷ்மீர்,ஆசாத் காஷ்மீர் என்று சொல்வது போல,
கோவில் என்றால் ஆக்கிரமிப்பைக் குறிப்பிடுவது, கோயில் என்றால் சுதந்திரமாக சென்றுவருவதைக் குறிப்பிடுவது பெரும்'பாலன' கோயில்களெல்லாம் கோவில்கள் ஆகிவிட்டதால் சரியாகத்தான் குறிப்பிட்டு இருக்கிறேன்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இன்னொரு விடயமும் கவனித்தீர்களா?
இப்பல்லாம் நல்ல நடுத்தர வர்க்க மக்கள் கூட இப்பல்லாம் திருமண மண்டபங்களில் கல்யாணம் வைத்துக் கொள்வதில்லையாம். கோயில்களில் தான் வைத்துக் கொள்கிறார்களாம், எளிமையாக! இது பற்றியும் "ஏதாச்சும்" சொல்லுங்களேன்! :))

2:18 PM, September 11, 2008
//

நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலும் சொல்லிட்டிங்க. மண்டபம் வாடகை 20,000/- முதல் 50,000/- ஆகுது, சாப்பாடெல்லாம் போடனும் செலவு தானே.

லக்கிலுக் சொன்னது…

நான் ஃபிகர் வெட்ட அவ்வப்போது கோயிலுக்கு போவதுண்டு. பிரம்மச்சாரிகளான அய்யப்பன் மற்றும் விநாயகர் கோயிலுக்கு வரும் ஃபிகர்கள் தான் சூப்பராக இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாபு said...

இறை நம்பிக்கையாளர்கள் எல்லோரும் சாமியார்களை நம்புகிறார்கள் என்பதுபோல், நீங்கள் உங்கள் பதிவுகளில் பொதுவாக எழுதுகிறீர்கள்.
இறை வழிபாட்டை ஒவ்வொருவரும் ஒருவிதமாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
கோவிலுக்கு செல்வது என்பது கூட அப்படிதான்,எல்லோரும் நிறைய காசு வேண்டும் என்பதற்க்காக செல்லவில்லை.வயதானவர்கள் நிறைய பேர் கோவிலே கதி என்று இருப்பதை நீங்கள் பார்த்ததில்லையா,அவர்களுக்கு அங்கே கிடைப்பது மன நிம்மதி.நீங்களே சொல்லியிருப்பது போல் இன்றைய அவசர உலகிலே இருக்கும் மன அழுத்தத்திற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வடிகால் தேவை படுகிறது,அது சிலருக்கு கோவில்,சிலருக்கு tasmac ,சிலருக்கு வலை பதிவுகள்
பின்னூட்டம் பெரிதாவதால் இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.நன்றி//

பாபு,
இறைமறுப்பாக நான் எதையும் எழுதுவதில்லை. மூட(ர்) நம்பிக்கைகள் குறித்து மட்டுமே எழுதுகிறேன். ஒட்டுமொத்தமாக கோவிலுக்கு போவோர் அனைவரைப் பற்றிக் குறிப்பிடவில்லை. ஆனால் பெரும்பான்மையினர் அப்படித்தான். ஒரு சில கோவில்களில் கூட்டம் மிகுந்தவையாக இருப்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். சில கோவில்களுக்கு எண்ணை வாங்கவே காசு தேறாது. சென்னையிலும், தமிழகத்திலும் இல்லாத கோவில்களா ? மாநிலம் கடந்து திருப்பதிக்கு சென்று 4 நாட்கள் காத்திருந்து சாமி கும்பிடுவதற்கான தேவை என்ன ? வயசானவங்க கோவிலே கதி என்று தான் கிடப்பாங்க, இல்லை என்று சொல்லவில்லை, இளைஞர் சமுதாயம் அவர்களைப் புறக்கணிப்பதால் (பொழுது) போக்கிடமாகவே அங்கு செல்கிறார்கள். அதற்கும் அனுமதிக்க பிள்ளைகள் முதியோர் இல்லத்திற்கு அனுப்பிவிட்டுவிடுகிறார்கள். இறை நம்பிக்கையை கேலி செய்வது என் நோக்கம் இல்லை, அதில் சேர்ந்துள்ள அசுத்தங்களைச் சுட்டிக் காட்டுகிறேன்.

TBR. JOSPEH சொன்னது…

கண்ணன்,

இதே கருத்துக்களைக் கொண்ட உங்களுடைய முந்தைய பதிவையும் வாசித்தேன். ஆனால் பின்னூட்டம் இட மனம் வரவில்லை.

ஆனால் இதற்கு ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துத்தான் எழுதுகிறேன்.

இறைநம்பிக்கை வேறு மத நம்பிக்கை வேறு. இறைவன் என்றொருவன் இருக்கிறான் என்றும் அவனை வழிபடுவதில் தவறேதும் இல்லை என்னும் பலருள் நானும் ஒருவன்.

அவன் நாம் கேட்பதையெல்லாம் தருவான் என்கிற நம்பிக்கையில் (அது மூட நம்பிக்கை) மட்டுமே கோவிலை அணுகுவதில்லை இவர்கள். ஆனால் நீங்கள் கூறியதுபோன்று இந்த அவசர உலகில் ஒரு மன நிம்மதிக்காகத்தான்.

அதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. எந்த மதமானாலும் அந்த மதத்திற்கு இழுக்கே அதை பரப்புபவர்களால்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். எல்லாமே வணிகமயமாகி வருகிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் கோலாலம்பூரிலுள்ள சர்ச்சுகளில் நடைபெற்ற வழிபாடுகளில் கலந்துக்கொண்டபிறகு எனக்கு இறைநம்பிக்கை கூடியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சைனியர்களின் இறைபக்தியை நேரில் கண்டால்தான் அது புரியும். ஏறத்தாழ அனைவருமே நல்ல வசதி படைத்தவர்களாகத்தான் எனக்கு பட்டார்கள். அவர்கள் ஏதோ தேவைக்காக வந்ததாக எனக்கு படவில்லை. மாறாக தங்களுடைய வாழ்வில் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சிக்காக, நன்மைகளுக்காக நன்றி செலுத்த வந்தவர்களாகவே எனக்குப் பட்டது.

திருப்பதி கோவிலில் குழுமும் பக்தர்களிலும் இத்தகையோர் இருக்கலாம்.

ஆகவே தயவு செய்து இறைநம்பிக்கையை எள்ளி ஒதுக்கிவிடாதீர்கள்.

இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு தனிநபரின் விருப்பம். அதை குறைகூற எவரும் முயலலாகாது என்பது வேண்டுகோள்.

குரங்கு சொன்னது…

====
ஜோ / Joe said...

//கோவில்களில் மட்டுமல்ல, மசூதிகள், சர்ச்சுகள் ஆகியவற்றிலும் கூட வழிபாட்டு நேரங்களில் இடம் கிடைப்பது இல்லை. :)//

அப்பாடா..இப்போது தான் sarveysan -க்கு நிம்மதியாக இருக்கும் :))

10:23 AM, September 11, 2008
====

கலக்கல் ஜோ.


கோவி, கோவிலுக்கு மட்டுமல்ல, பல இடங்களில் மக்களின் கூட்டங்களை பாக்கலாம்.


கோவிலுக்கு போறவங்க எல்லாரும் சாமி கும்பிட போறதில்லை, சாமி கும்பிடுறவங்க எல்லாரும் கோவிலுக்கு போறதில்லை.

Kanchana Radhakrishnan சொன்னது…

குபேரனிடம்..திருமணத்திற்கு வாங்கிய கடனின் வட்டியை மட்டும்தான் இன்னும் திருப்பதி கடவுள் கொடுக்கிறாராம்..அசலைக் கொடுக்க முடியவில்லையாம்..இப்படியும் ஒரு கதை இருக்கிறது..தெரியுமா உங்களுக்கு..
கடனை அடைக்க முடியாத பாலாஜியை மக்கள் தங்களில் ஒருவராக நிகைக்கின்றனர் போலும்(!!!!!!)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

புளியோதரை சுவையாகக் கிடைக்கும் என்று செல்பவர்களும் உண்டு. அம்மா ஆட்சியில் கோயிலில் மதியம் உண்டுவிட்டு அங்கேயே படுத்துத் தூங்கினார்கள்.
மனசை லேசாக்க வருபவர்களை, இல்லை என்றும் சொல்ல முடியாது.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே,
இன்னொரு விடயம்,
கோவில் என்றால் இராமன் என்கிற அர்த்தமும் உண்டு.
கோ+வில் = வில்லை ஆயுதமாகக் கொண்ட அரசன்.(அர்ஜுனனாக எடுத்துக் கொள்ள முடியாது. எனென்றால் இடி மட்டுமே அவருக்குப் புகழ் கொடுத்திருக்கிறது. இராமனுக்கோ கருணாநிதி முதல் அத்வானிவரை அனைவரும் அவர் புகழ் பரப்புகிறார்கள். அப்ப இது தான் சரி.)

RATHNESH சொன்னது…

//கோவில்கள் மட்டும் அல்ல லாட்டரி கடைகளும் மிகுந்துவிட்டதை உணர்ந்து இருப்பீர்கள், மக்கள் சீரழிந்துவிடுவார்கள் என்கிற காரணத்தினால் அரசுகள் அவற்றை தடை செய்து கட்டுபடுத்தி வைத்திருக்கின்றன.//

இந்த வரிகளில் உள்குத்து ஏதும் இல்லையே?

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...

இந்த வரிகளில் உள்குத்து ஏதும் இல்லையே?

12:43 AM, September//

ரத்னேஷ் அண்ணா,
ஞானிகள் சொல்வது நமக்கு விளங்கவில்லை என்றால் அவர்கள் வாக்கில் இருப்பது உள்குத்தா ? மறைபொருளா ?

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கோவியாரே,
இன்னொரு விடயம்,
கோவில் என்றால் இராமன் என்கிற அர்த்தமும் உண்டு.
கோ+வில் = வில்லை ஆயுதமாகக் கொண்ட அரசன்.(அர்ஜுனனாக எடுத்துக் கொள்ள முடியாது. எனென்றால் இடி மட்டுமே அவருக்குப் புகழ் கொடுத்திருக்கிறது. இராமனுக்கோ கருணாநிதி முதல் அத்வானிவரை அனைவரும் அவர் புகழ் பரப்புகிறார்கள். அப்ப இது தான் சரி.)
//

ஜோதிபாரதி,
கோவில் என்றால் இராமனா ? புதிய செய்தி, எதிர் எதிரானவர்களின் ஒன்றைப் பற்றிய வேறு சிந்தனைகள் தான் இராமனின் புகழ் என்கிறீர்கள். மிகச் சரி.

வஜ்ரா சொன்னது…

//
கோவில் என்றால் இராமன் என்கிற அர்த்தமும் உண்டு.
கோ+வில் = வில்லை ஆயுதமாகக் கொண்ட அரசன்.
//

அப்ப நம்ம அருண் கோவில் சரியான தேர்வு தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//டி.பி.ஆர் said...

கண்ணன்,

இதே கருத்துக்களைக் கொண்ட உங்களுடைய முந்தைய பதிவையும் வாசித்தேன். ஆனால் பின்னூட்டம் இட மனம் வரவில்லை.


ஆனால் இதற்கு ஏதாவது எழுத வேண்டும் என்று நினைத்துத்தான் எழுதுகிறேன்.

இறைநம்பிக்கை வேறு மத நம்பிக்கை வேறு. இறைவன் என்றொருவன் இருக்கிறான் என்றும் அவனை வழிபடுவதில் தவறேதும் இல்லை என்னும் பலருள் நானும் ஒருவன்.

அவன் நாம் கேட்பதையெல்லாம் தருவான் என்கிற நம்பிக்கையில் (அது மூட நம்பிக்கை) மட்டுமே கோவிலை அணுகுவதில்லை இவர்கள். ஆனால் நீங்கள் கூறியதுபோன்று இந்த அவசர உலகில் ஒரு மன நிம்மதிக்காகத்தான்.

அதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை. எந்த மதமானாலும் அந்த மதத்திற்கு இழுக்கே அதை பரப்புபவர்களால்தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். எல்லாமே வணிகமயமாகி வருகிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

ஆனால் கோலாலம்பூரிலுள்ள சர்ச்சுகளில் நடைபெற்ற வழிபாடுகளில் கலந்துக்கொண்டபிறகு எனக்கு இறைநம்பிக்கை கூடியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். சைனியர்களின் இறைபக்தியை நேரில் கண்டால்தான் அது புரியும். ஏறத்தாழ அனைவருமே நல்ல வசதி படைத்தவர்களாகத்தான் எனக்கு பட்டார்கள். அவர்கள் ஏதோ தேவைக்காக வந்ததாக எனக்கு படவில்லை. மாறாக தங்களுடைய வாழ்வில் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சிக்காக, நன்மைகளுக்காக நன்றி செலுத்த வந்தவர்களாகவே எனக்குப் பட்டது.

திருப்பதி கோவிலில் குழுமும் பக்தர்களிலும் இத்தகையோர் இருக்கலாம்.

ஆகவே தயவு செய்து இறைநம்பிக்கையை எள்ளி ஒதுக்கிவிடாதீர்கள்.

இறைநம்பிக்கை என்பது ஒவ்வொரு தனிநபரின் விருப்பம். அதை குறைகூற எவரும் முயலலாகாது என்பது வேண்டுகோள்.
8:02 PM, September 11, 2008//

ஜோசப் ஐயா,

நான் இறை நம்பிக்கையை குறைச் சொல்லவில்லை, பதிவில் சொல்லி இருக்கிறேன். எனது பதிவுகளில் இறைமறுப்பு என்ற கருத்தை எனது கருத்தாக வலியுறுத்தி எழுதியதில்லை. நான் கருத்துக் கொண்டு இருப்பது மதம் குறித்தும் மூட நம்பிக்கை குறித்தும் மட்டுமே.

பசிக்கு உணவில்லாத போது தான் மற்ற சிந்தனைகள் இருக்கும், இந்தியா மலேசியாவை ஒப்பிட்டு பார்க்கும் போது ஏழை நாடாக ஆகிவிட்டதால் எது வேண்டுமோ அதை வேண்டித்தான் பக்தர்கள் கோவிலுக்குச் செல்வார்கள். மலேசியாவில் இருக்கும் சீனர்கள் சர்ச்சுக்கு வரும் போது நீங்கள் அவர்கள் முகத்தில் தேவைக்கான அடையாளத்தை நீங்கள் பார்க்கவில்லை என்பதற்கு அவர்களின் வறுமையின்மையே காரணம். வசதி படைத்தவர்களுக்கு மன அழுத்தம் இருக்கும்.

வாழ்வில் எந்தவித துன்பமும் காணாத ஒருவர் வழிபாட்டுக்குச் சென்றால் அவரின் நோக்கம் என்னவாக இருக்கும் ?

"எனக்கு இவையெல்லாம் கிடைத்ததற்கு நன்றி சொல்கிறேன்... இந்த நிலை இப்படியே நீடிக்கவேண்டும்... எனக்கு மனமகிழ்ச்சியில் இனியும் குறைவு இருக்கக் கூடாது ஆண்டவனே" இது தேவை எதுவும் இல்லாதா வேண்டிதலா ? தேவையுடன் கூடிய வேண்டுதலா ? சரி உலக வாழ்வியலுக்கு தேவையானதைக் கேட்கவில்லை என்றாலும் 'சொர்கத்துல எனக்கு சீட்டு போட்டு வை' என்று வேண்டிக் கொள்வார்களா ? இல்லையா ? நம்பிக்கைப் படியே வைத்துக் கொண்டாலும் சொர்க்கப் பதவி வேண்டிதலுக்காகக் கிடைப்பது இல்லை, அவரவர் எந்த அளவுக்கு தன்னுடைய வாழ்கையிலும் சிறந்தவராக வாழ்ந்து, பிறருக்கும் முடிந்த அளவு உதவி இருக்கிறார். அல்லது முற்றிலும் அற்பணித்திருக்கிறார் என்பதைப் பொருத்து தானே. அங்கே வேண்டுதல் வேலை செய்யுமா ?

வழிபாட்டுக்கு வருபவர்களின் வருகைக்கான தேவையின் நோக்கம், இறையன்பு என்பதைவிட மிகுந்தவை. தேவைகளில் ஒருவருக்கு ஒருவர் விழுக்காட்டு அளவில் அவர்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் அவ்வளவு தானே ?

மறுக்க வேண்டும் என்பதற்காக எழுதவில்லை, மாற்றுக்கருத்தாகவே எழுதுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan said...
குபேரனிடம்..திருமணத்திற்கு வாங்கிய கடனின் வட்டியை மட்டும்தான் இன்னும் திருப்பதி கடவுள் கொடுக்கிறாராம்..அசலைக் கொடுக்க முடியவில்லையாம்..இப்படியும் ஒரு கதை இருக்கிறது..தெரியுமா உங்களுக்கு..
கடனை அடைக்க முடியாத பாலாஜியை மக்கள் தங்களில் ஒருவராக நிகைக்கின்றனர் போலும்(!!!!!!)

9:52 PM, September 11, 2008
//

இராதகிருஷ்ணன் சார்,

அவ்வளவு கடன் வாங்கி என்ன செய்தார் ? கிருஷ்ணனாக பிறந்த போது குசேலனுக்கு கொடுத்தாரா ?

'குசேலனுக்கு' எவ்வளவு கொடுத்தாலும் பஞ்சம் தீரவில்லை என்ற புலம்பல் தான் கேட்கும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
'கடவுள் கொடுத்தார்'ன்னு சொல்லிக்கிட்டே மூச்சுத் திணறிக்கிட்டு இருக்கும் மக்கள்தொகையை முதலில் கட்டுப்படுத்துங்க.

எரியறதைப் பிடுங்குனாக் கொதிக்கறது அடங்கிரும்.

அளவுக்கு மீறி இருக்கும் அமிர்தமும் நஞ்சு.

11:31 AM, September 11, 2008
//

துளசி அம்மா,

சரியாச் சொன்னிங்க,

மனித அபிலாசைகளுக்கான சாக்கு போக்கு தான் 'இறைவன் கொடுத்தான்' என்று சொல்லியே தனது தரப்பை ஞாயம்படுத்துவது/

லக்கிலுக் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கோவியாரே,
இன்னொரு விடயம்,
கோவில் என்றால் இராமன் என்கிற அர்த்தமும் உண்டு.
கோ+வில் = வில்லை ஆயுதமாகக் கொண்ட அரசன்.(
//

ஜோதிபாரதி!

இது உங்கள் கண்டுபிடிப்பா?

கோ (அரசன்) + இல் (இல்லம்) = கோயில் - என்பதாக தான் எனக்கு தமிழ் அய்யா சொல்லிக் கொடுத்தார்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//லக்கிலுக் said...
//ஜோதிபாரதி said...
கோவியாரே,
இன்னொரு விடயம்,
கோவில் என்றால் இராமன் என்கிற அர்த்தமும் உண்டு.
கோ+வில் = வில்லை ஆயுதமாகக் கொண்ட அரசன்.(
//

ஜோதிபாரதி!

இது உங்கள் கண்டுபிடிப்பா?

கோ (அரசன்) + இல் (இல்லம்) = கோயில் - என்பதாக தான் எனக்கு தமிழ் அய்யா சொல்லிக் கொடுத்தார்.//


நீங்கள் சொல்வதும் சரிதான் லக்கி.
யாரும் உரிமை எடுத்துக் கொள்வதற்குள் நான் காப்பி ரைட் உறுதி செய்துவிடுவது நல்லது.

Vishwa சொன்னது…

"கோவில்கள் மட்டும் அல்ல லாட்டரி கடைகளும் மிகுந்துவிட்டதை உணர்ந்து இருப்பீர்கள், மக்கள் சீரழிந்துவிடுவார்கள் என்கிற காரணத்தினால் அரசுகள் அவற்றை தடை செய்து கட்டுபடுத்தி வைத்திருக்கின்றன. முன்பை விட மதுபானங்களை நாடுபவர்களும் மிகுந்துவிட்டார்கள். பக்தி வளர்ந்துவிட்டதே என்று கூறுபவர்கள் டாஸ்மார்க் கடைகளும் பெருகிவிட்டதை நினைத்துப் பார்க்க வேண்டும். முன்பெல்லாம் கோவிலுக்குச் செல்வது ஒரு கடமையாக இருக்கும், கால்வலியைப் பொருட்படுத்தாது நடந்து செல்வர். தற்போது அவசர சூழலில் நம் தெருவில் ஒன்று வைத்துக் கொண்டாலே போதும், வேறு விழா நாட்களில் பெரிய கோவில்களுக்குச் செல்வோம் என்று முடிவெடுத்துவிட்டதால் கோவில்களின் தேவை மிகுந்து பெருகிவிட்டது. இவை பக்தி வளர்ந்தற்கான அடையாளமா ?"



நீங்கள் கூறுவதை போன்று நானும் வேறுவிதத்தில் இதை பார்க்கலாம் அல்லவா?
லாட்டரி கடைகளும்,டாஸ்மாக் கடைகளும்,ஷகீலா படங்களும் மிகுந்துவிட்ட இந்த காலசூழளிலும் பக்தி மார்கமும், கோவில்களும், பக்தர்களும் பெருகியுள்ளனவே.அப்படிபார்த்தால் பெரியாரிசம் தொற்றுவிட்டதகவே நான் கருதுகிறேன்!!!!


"விரைவு வாழ்க்கைச் சூழல், பேராசை என மன அழுத்தம், மன உந்துதல் இவற்றில் இருந்து விடுபட வேறு வழி தெரியாததால் கோவிலை நாடுகிறார்கள்"


இக்கருத்தை நான் முழுமையாக ஏற்றுகொள்கிறேன்.இத்தனை இடையூறுகளுக்கிடையே மனிதன் அமைதியை நாடிசெல்லுமிடம் கோவில்தான் என்று உங்களை அறியாமல் ஏற்றுகொண்டதற்கு நன்றி.



"கோவிலில் கூட்டம் மிகுந்துவிட்டது உண்மைதான், டாஸ்மார்க் கடைகளிலும், ஷகீலா படங்களுக்கும் கூட கூட்டம் மிகுதி தான், முன்பை விட கோவிலுக்குள்ளும், சாமியார்களிடமும் ஒழுங்கீனங்களும் வளர்ந்துவிட்டதை உணர்ந்து கொண்டால் இதில் பெருமை பட ஒன்றுமே இல்லை"


ஷகீலா என்று பெண்மீது உங்களுக்கு என்ன அவ்வளவு ஏகதாளம். பெரியார் உங்கள் கண்ணை நோண்டிவிடமாடாரா.இல்லை பெண்ணியம் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. சாமியார்களிடமும் ஒழுங்கீனங்களும் வளர்ந்துவிட்டதை உணர்ந்தும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.கடந்த ஐம்பது வருடத்தைவிட இன்று கல்வியரிவு மேம்பட்டுள்ளது,ஊடகத்தின் வீச்சு இன்று அதிகரித்துள்ளது,இருப்பினும் மக்கள் கூட்டம் கோவில்களை மொய்க்க தொடங்கிவிட்டார்கள். அப்படியென்றால் உங்கள் பெரியார் சிரியாராகிவிட்டரல்லவா. வீரமணி இன்னும் எத்தனை காலத்துக்கு கருப்பு சட்டையை மட்டும் போட்டுகொண்டு காலம் தள்ளபோகிறார்.


"கோவில்களில் மட்டுமல்ல, மசூதிகள், சர்ச்சுகள் ஆகியவற்றிலும் கூட வழிபாட்டு நேரங்களில் இடம் கிடைப்பது இல்லை"


பரவாயில்லையே உங்கள் கண்களுக்கு மசூதிகளும் சர்ச்சுகளும் தென்படுகின்றது...பாத்துங்க உங்கள யாரவது மதவாதினு சொல்லிட போறாங்க!!!


அன்புடன்...
விஷ்வா

Unknown சொன்னது…

வேர்ட்பிரஸ் ஓபன் ஐடியிலும் மறுமொழிய வசதி செய்தால் நலம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Vishwa said... நீங்கள் கூறுவதை போன்று நானும் வேறுவிதத்தில் இதை பார்க்கலாம் அல்லவா?
லாட்டரி கடைகளும்,டாஸ்மாக் கடைகளும்,ஷகீலா படங்களும் மிகுந்துவிட்ட இந்த காலசூழளிலும் பக்தி மார்கமும், கோவில்களும், பக்தர்களும் பெருகியுள்ளனவே.//

பாலியல் தொழிலாளியிடம் சென்று வந்தாலும் மனைவி மீது அன்பு வைத்திருப்பது பெரிய விசயமல்லவா ? அப்படித்தானே !

//அப்படிபார்த்தால் பெரியாரிசம் தொற்றுவிட்டதகவே நான் கருதுகிறேன்!!!!//

பானையில் உள்ள நீர் தாகத்தைத் தீர்க்க திர்க்க குறையவே செய்யும், பானை வரண்டு விட்டது என்று சொல்ல முட்டியாது. எப்போது தேவையோ அப்போது பானையை நிறப்பிக் கொள்வோம், பெரியார் போனால் இன்னொரு பெரியார் வருவார்.

//இத்தனை இடையூறுகளுக்கிடையே மனிதன் அமைதியை நாடிசெல்லுமிடம் கோவில்தான் என்று உங்களை அறியாமல் ஏற்றுகொண்டதற்கு நன்றி.
//

மன அழுத்தம் என்கிற பித்தம் முற்றியவர்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்றே தேடுவார்கள், சொல்வதையெல்லாம் சாப்பிட்டுப் பார்ப்பார்கள்... ஆனாலும் தெளியவே தெளியாது ஒப்புக் கொள்கிறேன்.

//ஷகீலா என்று பெண்மீது உங்களுக்கு என்ன அவ்வளவு ஏகதாளம். பெரியார் உங்கள் கண்ணை நோண்டிவிடமாடாரா.இல்லை பெண்ணியம் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.
//

உங்கள் பெரியார் பற்றும், பெண்ணிய
போற்றுதலும் மெய்சிலிர்க்க வைக்கிறது, நீங்களே பெரியாருக்கு அடியாராக இருக்கத் தகுதியானவர்.

//பரவாயில்லையே உங்கள் கண்களுக்கு மசூதிகளும் சர்ச்சுகளும் தென்படுகின்றது...பாத்துங்க உங்கள யாரவது மதவாதினு சொல்லிட போறாங்க!!!//

ஒளியை உணரும் கண்களுக்கு எல்லாமும் ஒன்றுதான், உங்களுக்கு மசூதியும், சர்ச் தவிர வேறெதன் குறையும் தெரியாமல் போகும், குறையை சரி செய்து கொள்ளுங்கள்.

Vishwa சொன்னது…

"பானையில் உள்ள நீர் தாகத்தைத் தீர்க்க திர்க்க குறையவே செய்யும், பானை வரண்டு விட்டது என்று சொல்ல முட்டியாது. எப்போது தேவையோ அப்போது பானையை நிறப்பிக் கொல்வோம், பெரியார் போனால் இன்னொரு பெரியார் வருவார்."

ஹி ஹி உங்களுக்கு ஹாஸ்ய உணர்வு ஜாஸ்தீங்க.... ஸெத்துபோன பெரியாருடைய கருத்துகளையே நாட்டுடமையாக்க உங்க வீரமணி விடல..இதுல புதுசா பெரியார் வந்து என்ன பண்ண போறாரு. என்னங்க நீங்க பானை,தண்ணின்னு comedy பண்றீங்க!!!!.


"மன அழுத்தம் என்கிற பித்தம் முற்றியவர்கள் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்றே தேடுவார்கள், சொல்வதையெல்லாம் சாப்பிட்டுப் பார்ப்பார்கள்... ஆனாலும் தெளியவே தெளியாது ஒப்புக் கொள்கிறேன்"


ஆனால் ரொம்ப காலமாக தங்கள் பித்தத்தை தெளியவைதுக்கொள்ள நீண்ட நாட்கள் பகுத்தறிவு என்ற பிரசாரத்தை தவிர வேறெந்த உருப்படியான வேலையும் செய்யாமல் இருந்தால் சரி.....கோவிலுக்கு செல்பவர்களால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லை.மன அழுத்தமோ அல்லது வேறெந்த அழுத்தமோ அவர்களுக்கு தேவை ஒரு தீர்வு. அந்த தீர்வினால் யாருக்கும் எந்த விதத்திலும் நட்டம் இல்லை.முடிந்தால் நீங்க கூட "கோவியானந்தா" என்ற பட்டதை வைத்துக்கொண்டு ஊருக்கு பகுத்தறிவை பிரச்சாரம் செய்யுங்கள்.நீங்கள் எத்தனை பேரின் மன அழத்தை தீர்ப்பீர்கள் என்று பார்போம். வீரமணிகூட வருவாரா என்பது சந்தேகமே!!!!அதை விட்டுவிட்டு கம்பி என்னிகொண்டிருக்கும் பிரேமனந்தவிடம் உங்கள் குசும்பை கொப்பளிக்கவைபீர்கள்...உங்க range பெரிய range சார்1!!!!



"உங்கள் பெரியார் பற்றும், பெண்ணிய
போற்றுதலும் மெய்சிலிர்க்க வைக்கிறது, நீங்களே பெரியாருக்கு அடியாராக இருக்கத் தகுதியானவர்."



எல்லாம் உங்களைபோன்றவர்களிண் பெரியாரிச கொள்கைகளின் பாதிப்புதான் சார்.என்னை பெரியாரின் தொண்டன் என்று சொல்லி சிறுமை படுத்த வேண்டாம். அந்த பட்டம் நிரந்தரமாக உங்களிடமே இருக்கட்டும்.உங்களுக்கு ஷகீலா பார்த்தல் மெய்சிலிர்க்கிரதோ அல்லது வேறேதும் சிலிர்கிறதோ...எனக்கு தெரியாது....ஆனால் கண்டிப்பாக நிங்கள் ஷகீலாவை வசைபாடுவதை கண்டால் பெரியாரே உங்களை பின்னி பெடலெடுத்து விடுவார், ஏனென்றால் அவருக்கு ஷகீலா போன்றவர்களை ரொம்ப பிடிக்கும்.."ஷகீலா ஒரு பெண் போராளி,நவீன இந்தியாவின் விடிவெள்ளி" என்றோ கூட அவர் பட்டம் கொடுக்கலாம்.......அதற்க்கு நீங்கள் கூட "ஜெ" போடலாம்


"ஒளியை உணரும் கண்களுக்கு எல்லாமும் ஒன்றுதான், உங்களுக்கு மசூதியும், சர்ச் தவிர வேறெதன் குறையும் தெரியாமல் போகும், குறையை சரி செய்து கொள்ளுங்கள்."


நான் மதவாதி சார். அதனால எனக்கு தெரியாது...நீங்கதான் பகுதறிவுவாதியாச்சே...இனிமேல் எல்லா மதத்துலயும் உள்ள குறைகளை ஒன்னு விடாம விளக்கென்னை விட்டு பாருங்க....என் குறையை கண்டுபுடிச்ச உங்களுக்கு "பகுத்தறிவு கண் டாக்டர்"நு பட்டம் குடுக்குறேன்!!!!!!


அன்புடன்....
விஷ்வா

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் மதவாதி சார். அதனால எனக்கு தெரியாது...நீங்கதான் பகுதறிவுவாதியாச்சே...இனிமேல் எல்லா மதத்துலயும் உள்ள குறைகளை ஒன்னு விடாம விளக்கென்னை விட்டு பாருங்க....என் குறையை கண்டுபுடிச்ச உங்களுக்கு "பகுத்தறிவு கண் டாக்டர்"நு பட்டம் குடுக்குறேன்!!!!!!


அன்புடன்....
விஷ்வா//

விஷ்வா சார்,

நான் கொடா கொண்டன் கிடையாது, வெறும் சொற் சிலம்பங்களுக்காக நான் விவாதிப்பது இல்லை. நன்றி !

முகவை மைந்தன் சொன்னது…

கோ என்றால் தலைவன். இல் என்றால் வீடு. அதாவது அரண்மனை. வழிபாட்டு இலக்கியங்களுக்கு (5 ஆம் நூற்றாண்டு) முன்னால் தலைவனை, அரசனை மட்டுமே பாடி வந்தனர். பாட்டுடைத் தலைவர்களாக இறைவனைப் பாடிய போது இயல்பாகவே வழிபாட்டிடம் கோவிலாகிப் போனது. ஆமாம், கோ+இல் = கோவில், புணர்ச்சி விதிப்படி. கற்று அல்ல, படித்து அறிந்து கொண்ட தகவல். தவறிருப்பின் குட்டலாம்.

@ரவி
//கோவிலா? கோயிலா??
அவா தான் பெரும்பாலும் கோவில்-ன்னு வா?//

(ஏழையின் சிரிப்பில் இருக்கும்) இறைவனிடம் அவா இருந்தா, கோவில்னா என்ன, கோயில்னா என்ன? :-)

Vishwa சொன்னது…

"நான் கொடா கொண்டன் கிடையாது, வெறும் சொற் சிலம்பங்களுக்காக நான் விவாதிப்பது இல்லை"



உங்களிடம் பதில் இல்லை என்ற உண்மையை ஏன் ஒரு நல்ல பகுத்தறிவாளன் போல் போட்டு உடைக்கக்கூடாது?????.


அன்புடன்....
விஷ்வா

நல்லதந்தி சொன்னது…

ஆமாம் கோவி சார்!,யாராவது பகுத்தறிவு கொள்கையை,அதாவது கடவுள் மறுப்புக் கொள்கையை,அல்லது தி.மு.கவின் போலி அரசியலைச் சாடி எழுதினால் அவர்களை அய்யர்களாகவே பார்க்கும் பகுத்தறிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் அய்யமார்களைத் தவிர இந்த விஷயத்தில் யாரும் மாற்றுக் கருத்து கொண்டிருக்க வில்லையா?.மற்ற சாதியில் உள்ளவர்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டார்களா?.பகுத்தறிவுக்காரர்கள்இதைப் பகுத்து அறியாதது ஏன்?.அல்லது இதுதான் (அய்யர்களை மட்டும் இந்துக்களாகப் பார்ப்பது) அவர்களுக்கு சவுகரியமா?.

கோவி.கண்ணன் சொன்னது…

// நல்லதந்தி said...
ஆமாம் கோவி சார்!,யாராவது பகுத்தறிவு கொள்கையை,அதாவது கடவுள் மறுப்புக் கொள்கையை,அல்லது தி.மு.கவின் போலி அரசியலைச் சாடி எழுதினால் அவர்களை அய்யர்களாகவே பார்க்கும் பகுத்தறிவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்//

அப்படியா ? அடிவருடிகள் என்றும் கூடச் சொல்வார்களே, அடிவருடிகளில் பார்பனர் இருப்பது இல்லை.

//அய்யமார்களைத் தவிர இந்த விஷயத்தில் யாரும் மாற்றுக் கருத்து கொண்டிருக்க வில்லையா?.மற்ற சாதியில் உள்ளவர்கள் அனைவரும் பகுத்தறிவுவாதிகள் ஆகிவிட்டார்களா?.பகுத்தறிவுக்காரர்கள்இதைப் பகுத்து அறியாதது ஏன்?.அல்லது இதுதான் (அய்யர்களை மட்டும் இந்துக்களாகப் பார்ப்பது) அவர்களுக்கு சவுகரியமா?.

8:01 AM, September 20
//


அய்யர் என்பது மட்டும் நடத்தையில் கிடைத்த பட்டமா ? அய்யர் என்பது சாதி கிடையாது முதலில் அதில் தெளிந்து கொள்ளுங்கள், சாதியைக் குறிப்பிட வேண்டுமென்றால் பார்பனர் என்று சொல்வதே சரி, அய்யர் என்ற போலிப்பெயர் போலவே பகுத்தறிவாளர் என்று சிலர் சொல்லிக் கொண்டு நேர்மாறாக நடந்துகொள்வது போலித்தனம் தான். போலிப் பகுத்தறிவாளர்களுக்கு இந்துமதத் தாங்கிகள் அனைவரையும் அய்யராகத் தெரியும் போல. லூசில் விடுங்க.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்