பின்பற்றுபவர்கள்

10 செப்டம்பர், 2008

பரிசல்காரனின் புலம்பல் !

நம்ம திருப்பூர் பரிசல் கூட பேசி நாளாச்சு என்று தொலைபேசியில் அழைத்தேன்.

"ஹூம்... சொல்லுங்க கோவிஜி"

"நீங்க கோவிஜி கோவிஜிங்கிறதைப் பார்த்துட்டு 'கோ விஜி' ங்கிற பிகரை ரூட் உடுறதாவும், உமாவிடம் போட்டுக் கொடுக்கப் போவதாகவும் சென்ஷி தலைமையிலான ஒரு கும்பல் சதித் திட்டம் தீட்டுது"

"உமா கிட்டயா ? என்னப் பத்தியா ? வேற எதாவது நடக்கிற கதையாக பேசுங்க கோவிஜி...உமா நான் கிளிச்ச கோட்டை தாண்டாது....."

"ஏன் ? அப்படியே எடுத்து பாத்திரகாரனுக்கு போட்டுட்டு பக்கெட் வாங்கிடுமா உமா ?"

"காலங்கார்த்தால கடிக்காதிங்க கோவிஜி...கம்பெனியே நொந்து போய் இருக்கு.....நானும் நொந்து போய் இருக்கேன்..."

"நொந்து போறதெல்லாம் ஒரு மேட்டரா ? அது எல்லாத்தையும் பதிவுல அவியலாக்கிடுவிங்களே....உங்களுக்காச் சொல்லித்தரனும் ?"

"போட்டுடலாம்... ஆசிப் அண்ணாச்சிக்கு தான் பயப்படுறேன்...."

"இது என்னாது சொட்டத்தலைக்கும் கிரிக்கெட் கிரவுண்டுக்கும் தொடர்பு இருப்பது மாதிரி பீல் பண்ணுறிங்க... அண்ணாச்சி என்ன செய்துடுவார்..மிஞ்சி மிஞ்சி போனா...நிறுத்துங்கடே...ஜட்டிப் போடுங்கடேன்னு சவுண்டு ஊடுவார்"

"மொதலில் சொன்னத செய்ய முடியாது, நிறுத்திவிட்டால் தொழில் பாதிக்கும், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது..."

"பரிசல், கொஞ்சம் புரியிற மாதிரி பேசுங்களே, எல்லோரையும் உமா மாதிரி கேள்வி கேட்காமல் சொல்றதை ஏத்துக்குவாங்கன்னு நினக்கிறது ரொம்ப தப்பு"

"தன்னைப் போல் ....."

"தத்துவமா ? நான் வரலை, இப்ப சொல்லவில்லை என்றால் போனை கட் பண்ணிடுவேன்"

"வர்றேன்....வர்றேன்.... நம்ம ஆர்காடு வீராசாமி இருக்கார் இல்லையா ? அவரால் தான் பிரச்சனையே "

"அவரு என்ன பண்ணினார், பீஸ புடுங்குவார், அதுக்கும் உங்க கம்பெணி உற்பத்தி பாதிக்கிறத்துக்கும் என்ன சம்பந்தம், தொழிற்சாலைக்கு கரண்டு தட்டுபாடு குறைவாகத்தான் இருக்குதாமே ?"

"சரிதான், ஆனால் புரடியூஸ் பண்ணுற பொருளை வாங்கனுமே...எங்க கம்பெனிக்க்கு கரண்டு இருந்து மட்டும் என்ன லாபம்......துணி வாங்கிறவங்க வீட்டுலயும் கரண்டு இருக்கனுமே"

"என்னய்யா இது சுருளி மாதிரி பேசுறிங்க...கரண்டு போனா இருட்டுல எல்லோரும் துணிய அவுத்து வச்சிட்டா இருப்பாங்க..."

"இப்பதான் சரியான பாயிண்டை புடிச்சிட்டிங்க...இராத்திரி ஆனாலே நம்ம ஆளுங்க காத்தாட...ஜட்டியெல்லாம் அவுத்து வச்சிட்டுதான் படுப்பானுங்க....கரண்டு அடிக்கடி போவதால்.......பகலும் புழுக்கம்.....இரவிலும் புழுக்கம்....தமிழ்நாட்டில் ஆம்பளைங்க யாருமே ஜட்டி போடறது இல்லையாம்....."

"என்ன கொடுமை பரிசல்...இப்படியெல்லாமா நடக்கும் ?"

"நடந்துட்டே......மாதம் 1 லட்சம் ஜட்டி தயார் பண்ணுகிற எங்க கம்பெணியில் போன மாதம் வரை தயாராக இருந்த 2 லட்சம் ஜட்டி அப்படியே தேங்கிக் கிடக்கு..."

"ஆர்காட்டாரின் செயல்பாடு எங்கெல்லாமோ பாதிக்குதேய்யா...."

"அதான் கவலையாக இருக்கேன்... ஆண்களுக்கு அது பழகிவிட்டால் ... இப்படியும் நல்லாதானே இருக்குன்னு ... அப்பறம் கரண்டு எப்போதும் வந்தாலும், சூரியாவை வச்சி சுடர்மணி ஜட்டி விளம்பரம் போல் விளம்பரப் படுத்தினாலும் ... பாவிங்க... வாங்கவே மாட்டானுங்க..."

"ஹூம் ஞாயமான கவலைதான்..."

28 கருத்துகள்:

முரளிகண்ணன் சொன்னது…

இன்னைக்கும் ஆற்காடா?

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சொல்லிடலாம், ஆற்காட்டார்கிட்ட சொல்லி, இருட்டுல எல்லாரும் வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கங்கன்னு ஒரு அறிக்கை விடச் சொல்லிடலாம். உடன்பிறப்புகளாவது ஜட்டியா வாங்கி, நம்ம பரிசல்காரருக்கு பதிப்பு இல்லாம செஞ்சுடுவாங்கள்ல? கொஞ்சம் கேரளால இருக்க தோழர்களுக்கும் சலுகை விலையில ஜட்டி கொடுக்க சொல்லலாம்.

சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், இது பரிசலை தாக்குற பதிவா, ஆற்காட்ட தாக்குற பதிவ ? நுண் அரசியல்ல பெரிய ஆளாயிட்டீங்க கோ விஜி.

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
இன்னைக்கும் ஆற்காடா?
//
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
சொல்லிடலாம், ஆற்காட்டார்கிட்ட சொல்லி, இருட்டுல எல்லாரும் வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கங்கன்னு ஒரு அறிக்கை விடச் சொல்லிடலாம். உடன்பிறப்புகளாவது ஜட்டியா வாங்கி, நம்ம பரிசல்காரருக்கு பதிப்பு இல்லாம செஞ்சுடுவாங்கள்ல? கொஞ்சம் கேரளால இருக்க தோழர்களுக்கும் சலுகை விலையில ஜட்டி கொடுக்க சொல்லலாம்.

சரி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், இது பரிசலை தாக்குற பதிவா, ஆற்காட்ட தாக்குற பதிவ ? நுண் அரசியல்ல பெரிய ஆளாயிட்டீங்க கோ விஜி.
//

பரிசோலட துன்பத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் பதிவு, எனக்கு ஒரு யோசனை தோணுது, ஜட்டிகளை சென்னைக் கொண்டு போய் மங்களூர் சிவா திருமணத்திற்கு வரும் ஆண்களிடம் ஜட்டி அணிவதன் சுகாதாரம் வழியுறுத்தி விற்பனை செய்துடலாம். நம்ம நண்பராச்சேன்னு சிவா சம்மதிக்கனும் !
:)))

விஜய் ஆனந்த் சொன்னது…

கரண்டு கட்டால இவ்ளோ பிரச்னையா???

தென்ன மரத்துல தேள் கொட்டுனா, பனை மரத்துல நெறி கட்டுச்சாங்கற மாதிரி...நம்ம பரிசல் ஆற்காட்டாருக்கு ஆலோசனைகளை அள்ளி விட்டப்பவே மைல்டா டவுட்ட்டு வந்திச்சி...பதிவு போட முடியாததுக்கா இப்படி ஃபீல் பண்றாருன்னு..

// ஜோசப் பால்ராஜ் said...
சொல்லிடலாம், ஆற்காட்டார்கிட்ட சொல்லி, இருட்டுல எல்லாரும் வெறும் ஜட்டி மட்டும் போட்டுக்கங்கன்னு ஒரு அறிக்கை விடச் சொல்லிடலாம். //

ஒரு சின்ன திருத்தத்தோடரிப்பீட்டேய்...

அறிக்கை - ஜட்டி மட்டுமாவது போடுங்கப்பா...

குசும்பன் சொன்னது…

வீட்டுக்கு ஒரு ஜட்டி வாங்கும் திட்டத்தை அன்புமணி ராமதாஸிடம் சொல்லி சட்டமாக்க சொல்லுங்க!

பெயரில்லா சொன்னது…

//குசும்பன் said...

வீட்டுக்கு ஒரு ஜட்டி வாங்கும் திட்டத்தை அன்புமணி ராமதாஸிடம் சொல்லி சட்டமாக்க சொல்லுங்க!//

குசும்பா,

ஆளுக்கு ஒரு ஜட்டின்னு இருந்தாத்தானே சரியா இருக்கும். ஒரே ஜட்டி ஒரு குடும்பத்துக்கா? அவ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் சொன்னது…

பரிசலின் எதிர்லாலத்தை கவனத்தில் கொண்டு,
அவருடைய ஜட்டி பிஸினசை பெருக்க

ஜட்டியின் பயன்கள்

என்ற தலைப்பில் எல்லா பதிவர்களும் ஆளுகொரு பதிவு எழுதுமாறு கேட்டுகொள்கிறோம்.

ஆரம்ப பதிவை கோ விஜி அவர்களே எழுதுவார்
(மன்னிச்சுகோங்க தலைவா நான் அடிக்காமயே அங்க ஸ்பேஸ் உளுகுது)

கார்க்கிபவா சொன்னது…

ஆமா, ஜட்டின்னா என்ன? யாராவது சொல்லுங்கப்பா?

கார்க்கிபவா சொன்னது…

//வீட்டுக்கு ஒரு ஜட்டி //

எங்க வீடு ட்ரிபிள் பெட்ரூம்.. அதுக்கு எவ்ளோ பெரிய ஜட்டி வாங்கனும்? பரிசல் கடைல கிடைக்குமா?

கார்க்கிபவா சொன்னது…

//கோ விஜி அவர்களே எழுதுவார்
//

எழுத வாங்கனு கூப்பிடுவதற்கு "கம் விஜி" தான்னே சொல்லனும்.. ஏன் "கோ விஜி" நு சொல்றாங்க?

வெண்பூ சொன்னது…

//இராத்திரி ஆனாலே நம்ம ஆளுங்க காத்தாட...ஜட்டியெல்லாம் அவுத்து வச்சிட்டுதான் படுப்பானுங்க....கரண்டு அடிக்கடி போவதால்.......பகலும் புழுக்கம்.....இரவிலும் புழுக்கம்....தமிழ்நாட்டில் ஆம்பளைங்க யாருமே ஜட்டி போடறது இல்லையாம்....."//

யப்பா... உங்க அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி. ஆமா ஆற்காடுலயாவது எல்லாரும் ஜட்டி போடுறாங்களா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
//குசும்பன் said...

வீட்டுக்கு ஒரு ஜட்டி வாங்கும் திட்டத்தை அன்புமணி ராமதாஸிடம் சொல்லி சட்டமாக்க சொல்லுங்க!//

குசும்பா,

ஆளுக்கு ஒரு ஜட்டின்னு இருந்தாத்தானே சரியா இருக்கும். ஒரே ஜட்டி ஒரு குடும்பத்துக்கா? அவ்வ்வ்வ்வ்வ்
//

அண்ணாச்சி,

குசும்பனுக்கு குசும்புதான், குடும்ப ஜட்டின்னு எங்காவது பார்த்து இருப்பான், அது என்னா படம் ? ஆங் பாண்டியனும், பாண்டியராஜனும் அடிச்சிக்குவாங்களே ஒரு அண்டர்வியருக்கு...ஆண்பாவம், அந்த காட்சியை வச்சி சொல்றான் போல.

:)

பரிசல்காரன் சொன்னது…

நடத்துங்கய்யா.. நடத்துங்க..

பரிசல்காரன் சொன்னது…

இந்தவாரம் நான் தான்னு முடிவாய்டுச்சு... என்ன வேணா பண்ணுங்க...

பரிசல்காரன் சொன்னது…

ஜட்டி பற்றி எழுதப்பட்ட இந்தப் பதிவில் பதிவுலக ஜட்டி நாயகன் லக்கியின் பெயரை வரவே விடாமல் செய்த கோவிஜியை வன்மையாக கண்டிக்கிறேன்!

பரிசல்காரன் சொன்னது…

கிண்டலா தெரிஞ்சாலும் நிறைய உண்மைகள் உள்ள ஒளிஞ்சுகிட்டிருக்கு,,,

(பதிவில... ***ல சொல்லல!)

narsim சொன்னது…

பரிசலாரே..

குசும்பனுக்கு திங்கள்கிழமை நான் போட்ட பின்னூட்டம்..

"திங்ககிழமையே இப்பிடி ஆரம்பிக்குதா பரிசலாருக்கு"...

ரிப்பீட்டாகுது..!

நர்சிம்

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
கிண்டலா தெரிஞ்சாலும் நிறைய உண்மைகள் உள்ள ஒளிஞ்சுகிட்டிருக்கு,,,

(பதிவில... ***ல சொல்லல!)
//
பரிசல்காரன்,

வெளிச்சமாக்கினதாகத்தான் நான் நினைக்கிறேன். நீங்க ஒளிஞ்சுகிட்டு இருக்குகிங்கிறிங்க, ஒண்ணும் புரியல.

கோவி.கண்ணன் சொன்னது…

//narsim said...
பரிசலாரே..

குசும்பனுக்கு திங்கள்கிழமை நான் போட்ட பின்னூட்டம்..

"திங்ககிழமையே இப்பிடி ஆரம்பிக்குதா பரிசலாருக்கு"...

ரிப்பீட்டாகுது..!

நர்சிம்
//

நர்சிம்,

சுவாமிஜி உங்கள் அருளாசி எல்லா பதிவர்களுக்கும் கிடைக்குமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
ஜட்டி பற்றி எழுதப்பட்ட இந்தப் பதிவில் பதிவுலக ஜட்டி நாயகன் லக்கியின் பெயரை வரவே விடாமல் செய்த கோவிஜியை வன்மையாக கண்டிக்கிறேன்!

2:01 PM, September 10, 2008
//

அவருக்கு ஜட்டி மேட்டரெல்லாம் சப்பை மேட்டர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
இந்தவாரம் நான் தான்னு முடிவாய்டுச்சு... என்ன வேணா பண்ணுங்க...

2:00 PM, September 10, 2008
//

நீங்கள் அவியல் போட்டால்,எங்க சக்திக்கு ஏற்றவாரு நாங்க பொறிச்சே எடுப்போம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...


யப்பா... உங்க அழிச்சாட்டியத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி. ஆமா ஆற்காடுலயாவது எல்லாரும் ஜட்டி போடுறாங்களா? :)

1:02 PM, September 10, 2008//

உண்மை ஒரு போதும் உறங்காது !
:)))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
//கோ விஜி அவர்களே எழுதுவார்
//

எழுத வாங்கனு கூப்பிடுவதற்கு "கம் விஜி" தான்னே சொல்லனும்.. ஏன் "கோ விஜி" நு சொல்றாங்க?
//

:))))))))
CAR KEY நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கார்க்கி said...
ஆமா, ஜட்டின்னா என்ன? யாராவது சொல்லுங்கப்பா?

12:29 PM, September 10, 2008
//

அதையும் தாண்டி புனித மானது புனித மானது புதிதாக இருக்கும் வரை !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
பரிசலின் எதிர்லாலத்தை கவனத்தில் கொண்டு,
அவருடைய ஜட்டி பிஸினசை பெருக்க

ஜட்டியின் பயன்கள்

என்ற தலைப்பில் எல்லா பதிவர்களும் ஆளுகொரு பதிவு எழுதுமாறு கேட்டுகொள்கிறோம்.

ஆரம்ப பதிவை கோ விஜி அவர்களே எழுதுவார்
(மன்னிச்சுகோங்க தலைவா நான் அடிக்காமயே அங்க ஸ்பேஸ் உளுகுது)
//

VP,
நல்ல யோசனைத்தான், போட்டிகள் நடத்தி வெல்பவர்களுக்கு இரண்டு செட் ஜட்டி கொடுக்கலாம் !
:)

சென்ஷி சொன்னது…

ஒண்ணியும் ஜொள்ளிக்க முடியல :)

Thamira சொன்னது…

ஒரு ஜட்டி கிழிகிறது..

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்