பின்பற்றுபவர்கள்

10 செப்டம்பர், 2008

பகுத்தறிவாளன் பட்டம் ? எனக்கும் வேண்டாம் !

எனது 'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல ! - பதிவுக்கு, விஷ்வா என்கிற நண்பரிடமிருந்து வந்த பின்னூட்டம் கீழே....

//
நீங்களே கேள்வி கேட்டு நீங்களே பதிலளித்து உங்கள் பகுத்தறிவு ஞானத்தை வெகு சிறப்பாக வெளிபடுதுகுறீர்கள்!!!
கூடிய சீக்கிரம் உங்கள் பெயரை "கண்ணன்"லிருந்து "சத்யராஜ்தாசனாக" மாற்றிகொள்வது உத்தமம்...

நீங்கள் ஒரு இந்துவாக இருப்தால்தான் இந்தளவு வாய்கிழியே உங்கள் பகுத்தறிவு பிரசாரத்தை செய்துகொண்டு இருக்குறீர்கள்.... பிற மதமாக இருந்தால் இந்நேரம் உங்கள்........ தைகபட்டுஇருக்கும்.

உங்கள் ஐம்பது வருட பகுத்தறிவைவிட எங்கள் ஐந்தாயிரம் வருட ஆன்மிகம் மக்களை செம்மைபடுதியுள்ளது.தனிமனித ஒழுக்கம் இல்லாத "பெரியோர்கள்" பிறரை விமர்சனம் பண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?

கண்ணன்,
ஐயாயிரம் வருட போலி ஆன்மீகத்தைவிட ஐம்பதுவருட போலி பகுதறிவுவாதிகள் இந்த நாட்டிற்க்கு செய்த தீங்கு எரளமானது.

கண்ணன்,
சடாரெண்டு ஆன்மீகத்திலிருந்து பெண்ணியத்திற்கு SOOPER"ஆக பரந்துவிட்டீர்..உங்களுக்கு உங்கள் பகுத்தறிவு மீது எந்தளவுக்கு பேச தகுதிஉள்ளதோ அதே அளவு எனது மதத்தின் மீதும் ஆண்மீகதின்மீதும் பேச எனக்கும் முழுத்தகுதியும் உள்ளது. நீங்கள் முதலில் உண்மையான பகுத்தறிவுவாதி என்று எனக்கு வேண்டாம், உங்களுக்கே நிரூபித்து கொள்ளுங்கள்?

எதற்கெடுத்தாலும் ஹிந்து மாதத்தில் அது நடந்ததே இது நடந்ததே என்று ஒப்பாரி மட்டும் வைக்க தெரியும் ஆனால் நேர்மையான கேள்விக்கு மட்டும் "மதவாதி பேசுகிறான்" என்று சொல்லிவிட வேண்டியது....

ஆமாம் எங்களை போன்றவரிடம் எப்படி கருத்து மோதல் வரும் விட்டால் மோதல் மட்டும்தான் வரும்...பகுத்தறிவாளன் என்று சட்டை காலரை துக்கிவிட்டுகொள்வதில் என்ன பிரயோஜனம்.....இன்று உலகில் தொடரும் வன்முறைக்கும் மதச்சண்டைகளுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு...அது சண்டைபோடும் இரு தரப்புகளில் கண்டிப்பாக ஒரு தரப்பு முஸ்லிம்களே...அதற்கு என்ன காரணம்.....அவர்கள் இன்றுவரை விடாமல் பிடித்துகொண்டிருக்கும் பழமைவாதமும் மூடபழக்கவழக்கமே...நீங்கள் அதையும் தோலுரிக்கவேண்டுமே...யாரும் உங்களை எகிப்துக்கோ அல்லது கொஸொவொவுக்கொ போகசொல்லவில்லை... ஆனால் உங்கள் பகுத்தறிவு பார்வையை அங்கேயும் கொஞ்சம் பார்க்க சொல்கின்றோம்...செய்வீர்களா....உலகம் உருண்டைதான் என்று உலகுக்கு சொன்ன விஞ்ஞானியை கொன்றுவிட்டு இன்று அதற்கு பாவமண்ணிப்பு கோரிய போபுகள் இன்று உங்கள் பார்வையில் படாமல் போனதேன்?

இதுதான் விதண்டாவாதமா...போங்கையா நீங்களும் உங்க பகுத்தறிவும்...
//


யாரு சொன்னா நான் பகுத்தறிவாளன் ?

அச்சச்சோ, என்ன கொடுமை சார் இது ? சமரசம் செய்து கொண்டு தான் எல்லாவற்றையும் எழுதனுமா ? பெரியாரின் ஏற்கத்தக்க கருத்துக்களை எழுதினால் உடனே அவனுக்கு பகுத்தறிவாளன் என்ற பட்டம் கட்டுவதா ? முற்போக்காக எதாவது பேசினாலே அவன் பகுத்தறிவாளனாம். பகுத்தறிவாளன் என்றால் நாத்திகமா ? ஆத்திகவாதிகளுக்கு பகுத்து அறியும் திறனே இல்லையா ?

தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்லும் ஒரு மோசடி (ஆ)சாமி தன்னைத் தான் கடவுள், இறைவன் என்று சொல்லும் போது ... ஏன் சாமி மல மூத்திரத்திலும் இருப்பானா ? என்று கேட்டால் பகுத்தறிவாளன் பட்டம் கட்டிவிடுவார்கள், நாத்திகன் என்று சொல்லிவிடுவார்கள், வெறும் கையில் விபூதி வரவழைப்பதற்கு பதில் கையடக்க பூசனிக்காயை வரவழைக்க முடியாதா ? சிம்கார்டு போட்ட செல்போன் வரவைக்க முடியாதா ? வயுத்துக்குள்ளே பொற்கொல்லர் உட்கார்ந்து இருக்காரா தங்கத்தில் எப்படி சாமி லிங்க வாந்தி எடுக்கிறீர்கள் என்று கேட்டால் அவன் நாத்திகனாம்.

நான் என்னமோ பெரியார் கொள்கைகளை பதிவுலகில் பறைசாற்றுவேன் என்று சபதம் செய்து கொண்டு வநதது போலவும் அதில் பிரழ்ந்து எழுதுகிறேன், எனது பகுத்தறிவு புனித(!) தன்மை பால்பட்டு, திரிந்து மோராகிவிட்டதாகவும், பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறேன் என்பது போலவும் புரிந்து கொண்டு, நீ ஏன் இஸ்லாமியரைக் கேட்பது இல்லை, போப்பாண்டவரைக் கேட்பது இல்லை ? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள், நான் பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவனோ அதற்கு பாதுகாவலனோ இல்லை.

மூட நம்பிக்கையை கேள்வி கேட்பவன் எல்லாமே நாத்திகனா ? ஆத்திகவாதி என்றால் சாமியார்களில் லீலைகளை தெய்வீகமாக கருதி அவர்கள் பாதுகாப்புடன் உறவு கொள்ள காண்டம் வாங்கிக் கொடுத்து பணிவிடை செய்ய வேண்டுமா ?

நான் பகுத்தறிவாளன் அல்ல, போலி பகுத்தறிவாளன் தான், போலி மதச்சார்பின்மை என்னும் சந்தர்பவாதம் போல்.... போலி பகுத்தறிவாளனான என்னால் இந்து மதத்தை மட்டுமே கேள்வி கேட்கமுடியும்.

பகுத்தறிவாளனின் லட்சணம் என்ன ? அனைத்து மதத்தையும் சமமாக கருதி, எல்லா மதத்தையும் தூற்ற வேண்டுமாம் ! என்ன ஒரு சூப்பர் புரிதல் ! அப்படி செய்பவர்களைத்தான் பகுத்தறிவாளனாக ஒப்புக் கொள்வார்களாம், மற்றவர்களெல்லாம் போலி பகுத்தறிவாதிகளாம். இப்படி லட்சணத்துடன் இருக்கும் பகுத்தறிவாளனின் செயலை எத்தனை ஆத்திகர்கள் போற்றுகிறார்கள்? பகுத்தறிவாளன் பகுத்தறிவாளானாக இல்லை என்பதற்கு இவர்கள் படும் கவலையில் எதாவது உண்மையான ஆதங்கம் இருக்கிறதா ? கருணாநிதி மஞ்ச துண்டு போட்டால் பகுத்தறிவாதம் செத்துடுமா ? எதுவுமே போடாத பெரியாரை இவர்கள் போற்றி இருக்க வேண்டுமே ? அப்படி எதுவும் செய்தது போல் தெரியவில்லை. பிறகு ஏன் பகுத்தறிவாளன் போலியா ஒரிஜினிலா என்றெல்லாம் கவலைப்பட வேண்டும் ?

நான் பகுத்தறிவாளன் இல்லை, போலி பகுத்தறிவாளன் அல்லது அறைகுறை பகுத்தறிவாளன் !

பகுத்தறிவாளன் பட்டம் வேண்டுமா ? எல்லா மதத்தையும் திட்டிவிட்டு வாருங்கள், அப்பொழுது தான் நீங்கள் உண்மையான பகுத்தறிவாளன் என்ற பட்டம் தந்து உங்களை கவுரவிப்பார்கள், நீங்கள் இந்து மதத்தை மட்டும் குறைத்துச் சொன்னால் நீங்கள் போலி பகுத்தறிவாளன் என்றே தூற்றப்படுவீர்கள் !

நான் போலி பகுத்தறிவாளனாக இருக்கவே விரும்புகிறேன் !
:)))))

இதே கருத்தில் டிபிசிடியின் நொந்த இடுகை இங்கே

43 கருத்துகள்:

சந்தர் சொன்னது…

//ஏன் சாமி மல மூத்திரத்திலும் இருப்பானா ?//

இருப்பான் ஐயா!. 'இருக்காமலே' இருந்து பாருங்களேன் தெரியும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//சந்தர் said...
//ஏன் சாமி மல மூத்திரத்திலும் இருப்பானா ?//

இருப்பான் ஐயா!. 'இருக்காமலே' இருந்து பாருங்களேன் தெரியும்!

4:12 PM, September 10, 2008
//

சந்தர்,
இறைசக்தி உண்டு என்று நான் நம்பினாலும்,கொலைகாரன், பிட்பாக்கெட் திருடன், கூட்டமாக ஒரு பெண்ணை வன்புணருபவன் அவர்களிடமெல்லாம் இறைவன் இருப்பான் என்று இறை நிலையை மிகத் தாழ்த்தி சந்தேகப்பட மாட்டேன்.

அப்போ எல்லாமே இறைவன் என்று போய்விடலாமே, அந்த பார்வையில் நாத்திகன் கூட இறைவன் தானே அவர்களிடம் ஏன் மல்லுக்கட்ட வேண்டும் ?

Bharath சொன்னது…

ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.. ஒரு போலியிடம் பேசி புரியவைப்பது வேஸ்ட்.. நீங்க பாட்டுக்கு உங்க பஜனைய தொடருங்க..(வீட்ல செய்த பிள்ளயார் சதுர்த்தி கொழுக்கட்டையை தின்னுக்கிட்டே..)

சந்தர் சொன்னது…

//கொலைகாரன், பிட்பாக்கெட் திருடன், கூட்டமாக ஒரு பெண்ணை வன்புணருபவன் அவர்களிடமெல்லாம் இறைவன் இருப்பான் என்று இறை நிலையை மிகத் தாழ்த்தி சந்தேகப்பட மாட்டேன்.//

Philosophicalஆக தோன்றினாலும் உண்மை இதுதான். எந்த கெட்டவனும் தன்னுள் இறைவனை உணருவது காலத்தின் கையில். இதனால் தான் ஆடடோ சங்கர் கூட தூக்கிலிடும் தறுவாயில் பைபிளுடன் இருந்தது. இறைவன் யாரையும் நாத்திகன் ஆத்திகன் என்று தரம் பிரிப்பதில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். நம்பினால் நம்புங்கள். The Law of Karma... Won't Leave none சும்மா!
வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

//வெறும் கையில் விபூதி வரவழைப்பதற்கு பதில் கையடக்க பூசனிக்காயை வரவழைக்க முடியாதா ? சிம்கார்டு போட்ட செல்போன் வரவைக்க முடியாதா ? //

குறைந்த பட்சம் ஒரு ரிவால்வாரையாவது வரவழைச்சிருக்கலாம். ஓடி ஒளிந்திருக்க வேண்டியதில்லை.

//நீ ஏன் இஸ்லாமியரைக் கேட்பது இல்லை, போப்பாண்டவரைக் கேட்பது இல்லை ? //

நம்ம வீட்டு ஆளுகளக் கேள்வி கேட்டா நீ ஏன் எதிர்த்த வீட்டுக்காரனக் கேக்கலன்னு கேட்டா அது எப்படி சரியாகும்?

கோவி.கண்ணன் சொன்னது…

//சந்தர் said...


Philosophicalஆக தோன்றினாலும் உண்மை இதுதான். எந்த கெட்டவனும் தன்னுள் இறைவனை உணருவது காலத்தின் கையில். இதனால் தான் ஆடடோ சங்கர் கூட தூக்கிலிடும் தறுவாயில் பைபிளுடன் இருந்தது. இறைவன் யாரையும் நாத்திகன் ஆத்திகன் என்று தரம் பிரிப்பதில்லை. ஒன்று மட்டும் நிச்சயம். நம்பினால் நம்புங்கள். The Law of Karma... Won't Leave none சும்மா!
வாழ்த்துக்கள்.
//

தூக்கு தண்டனை அடைந்து மரணத்திற்கு காத்திருப்பவனுக்கு மரண பயம் இல்லாமல் இருப்பது குறைவுதான், ஆட்டோ சங்கருக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும் என்று ஆசை வார்த்தைக் கூறி அவனிடம் பைபிளைக் கொடுத்து நம்பிக்கை ஏற்படுத்தி போஸ் கொடுக்க வைத்தனர். இதை அருள் செயல் கடவுள் செயல் என்றெல்லாம் சொல்வதற்கோ, ஆட்டோ சங்கர் இறைவனின் அம்சம் என்று சொல்வதற்கோ ஒன்றும் இல்லை.

LAW கர்மா ? இது பற்றியெல்லாம் கவலைப்படாத நாத்திகனும் கத்தியெடுத்துக் கொண்டு யாரையும் வெட்டலாம் என்று அழைவதோ, கொலை செய்துவிட்டு வருந்தாமலோ இல்லை. அந்த வருத்தம் தனக்கு கர்ம பலன்களினால் தண்டனைக் கிடைக்கும் என்பதான நம்பிக்கை இல்லை, பிற உயிர்களுக்கு தீங்கு செய்துவிட்டோம் என்று நினைப்பதால் ஏற்படுபவை. எவராக இருந்தாலும் மனித அபிமானம் என்று ஒன்று இருக்க வேண்டும் அதற்குப் பிறகு தான் இறை நம்பிக்கை மற்ற இத்யாதிகளெல்லாம்.

Vishwa சொன்னது…

ரொம்ப லாவகமாக எனது மற்ற பின்னுட்டங்களை "EDIT" செய்து தேவையானவற்றை மட்டும் முதல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளீர்கள்... நல்ல முயற்சி.....இதுவும் அரைவேக்காட்டு பகுதறிவளானது பண்புதானே..

அன்புடன்...
விஷ்வா

Blogger சொன்னது…

//மூட நம்பிக்கையை கேள்வி கேட்பவன் எல்லாமே நாத்திகனா ?

சரியான கேள்வி!!
கண்மூடித்தனமாக ஆத்திகனாக இருப்பதும் நாத்திகனாக இருப்பதும் ஒன்றே!!

கோவி.கண்ணன் சொன்னது…

//Vishwa said...
ரொம்ப லாவகமாக எனது மற்ற பின்னுட்டங்களை "EDIT" செய்து தேவையானவற்றை மட்டும் முதல் பக்கத்தில் வெளியிட்டு உள்ளீர்கள்... நல்ல முயற்சி.....இதுவும் அரைவேக்காட்டு பகுதறிவளானது பண்புதானே..

அன்புடன்...
விஷ்வா
//

ஹிஹி, உங்களுக்கு மகிழ்ச்சிக் கிடைப்பதாக இருந்தால் அப்படியும் வைத்துக் கொள்ளுங்களேன். எனக்கு ஒன்றும் நட்டமில்லை.

நான் அறைவேக்காட்டு பகுத்தறிவாளன், நீங்கள் முழுவேக்காட்டு பண்பாளர் மற்றும் ஆன்மீகவாதியாக இருங்களேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

மின்தடை வேறு! மின்வெட்டு வேறு!(ஆற்காடு வீராஸ்வாமி(முன்னாடி சும்மா வீராசாமிதான்) சொன்னது)

அது மாதிரிதான்

பகுத்தறிவாளன் வேறு! நாத்திகன் வேறு!(ஜோதிபாரதி சொன்னது(எப்பவும் ஜோதிபாரதிதான்))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
மின்தடை வேறு! மின்வெட்டு வேறு!(ஆற்காடு வீராஸ்வாமி(முன்னாடி சும்மா வீராசாமிதான்) சொன்னது)//

ஜோதிபாரதி,

அதெல்லாம் இல்லை, முன்பு ஆற்காடு வீராச்சாமி, தற்போது வீரப்பு சாமி அல்லது வாய்ச்சொல் வீரச்சாமி !
:)

//அது மாதிரிதான்

பகுத்தறிவாளன் வேறு! நாத்திகன் வேறு!(ஜோதிபாரதி சொன்னது(எப்பவும் ஜோதிபாரதிதான்))
//

ம், பெரியார் தொண்டர்கள் நாத்திகர்களா ? பகுத்தறிவாளர்களா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைப்பவர்களுக்கே உடனே கைமேல பலனாக டாக்டர் பட்டம் கிடைக்கும் போது,(நடிகர் விஜய் கூட டாக்டர் தான்) வளைய வளைய வலையில் எழுதும் வலைஞர், பகுத்துப் பதில் கொடுக்கும் பகுத்தறிவாளர், பட்டத்தைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் மிகையாகாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைப்பவர்களுக்கே உடனே கைமேல பலனாக டாக்டர் பட்டம் கிடைக்கும் போது,(நடிகர் விஜய் கூட டாக்டர் தான்) வளைய வளைய வலையில் எழுதும் வலைஞர், பகுத்துப் பதில் கொடுக்கும் பகுத்தறிவாளர், பட்டத்தைப் பெற்றுக் கொள்வது ஒன்றும் மிகையாகாது.
//

இது நெம்ப ஓவர்.
:)

போலி ஆன்மிக வாதிகள் அப்படித்தான் குற்றம் சொல்லுவார்கள். இருந்தாலும் நிலையைத் தெரிவிக்க இந்த இடுகையை எழுதினேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//அதெல்லாம் இல்லை, முன்பு ஆற்காடு வீராச்சாமி, தற்போது வீரப்பு சாமி அல்லது வாய்ச்சொல் வீரச்சாமி !//


ஒரு ஈ.பி காரன் வீராப்பு பேசினால் ஒத்துக்கலாம். இவரு அஞ்சு வருஷக்காரு! பேஷட்டும்!


//ம், பெரியார் தொண்டர்கள் நாத்திகர்களா ? பகுத்தறிவாளர்களா ?//

பெரியார் தொண்டர்கள் என்று சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். அது முதலாளித்துவத்தை/ஜமீன் களை எதிர்த்த பெரியாரை முதலாளியாக, சாமியாக ஆக்குவதாக அமையும்.

பெயரில்லா சொன்னது…

//ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.. ஒரு போலியிடம் பேசி புரியவைப்பது வேஸ்ட்.. நீங்க பாட்டுக்கு உங்க பஜனைய தொடருங்க..(வீட்ல செய்த பிள்ளயார் சதுர்த்தி கொழுக்கட்டையை தின்னுக்கிட்டே..)//
he..he..

கோவி.கண்ணன் சொன்னது…

//Bharath said...
ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.. ஒரு போலியிடம் பேசி புரியவைப்பது வேஸ்ட்.. நீங்க பாட்டுக்கு உங்க பஜனைய தொடருங்க..(வீட்ல செய்த பிள்ளயார் சதுர்த்தி கொழுக்கட்டையை தின்னுக்கிட்டே..)
//

கொழுக்கட்டை உங்களுக்கும் வேண்டு மென்றால் சொல்லுங்க, படைப்பதெல்லாம் சாமி சாப்பிடுவதில்லை. நாம தான் சாப்பிடுறோம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//பெரியார் தொண்டர்கள் என்று சொல்வது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். அது முதலாளித்துவத்தை/ஜமீன் களை எதிர்த்த பெரியாரை முதலாளியாக, சாமியாக ஆக்குவதாக அமையும்.

11:22 PM, September 10, 2008
//

ஜோதிபாரதி,

தகவல்களை அள்ளித்தருகிறீர்கள், நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...

குறைந்த பட்சம் ஒரு ரிவால்வாரையாவது வரவழைச்சிருக்கலாம். ஓடி ஒளிந்திருக்க வேண்டியதில்லை.//

அது அது !


//நம்ம வீட்டு ஆளுகளக் கேள்வி கேட்டா நீ ஏன் எதிர்த்த வீட்டுக்காரனக் கேக்கலன்னு கேட்டா அது எப்படி சரியாகும்?//

இஸ்லாம் மதத்தினரை தீவிரவாதிகளாக முத்திரை குத்துவாங்க, தனக்கும் அப்படி இருந்தால் நல்லா இருக்கும் என்றெல்லாம் சமத்துவமாக நினைக்க மாட்டாங்க.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
//ஒத்துக்கொண்டமைக்கு நன்றி.. ஒரு போலியிடம் பேசி புரியவைப்பது வேஸ்ட்.. நீங்க பாட்டுக்கு உங்க பஜனைய தொடருங்க..(வீட்ல செய்த பிள்ளயார் சதுர்த்தி கொழுக்கட்டையை தின்னுக்கிட்டே..)//
he..he..
//
ஹிஹி

கோவி.கண்ணன் சொன்னது…

//The Rebel said...
//மூட நம்பிக்கையை கேள்வி கேட்பவன் எல்லாமே நாத்திகனா ?

சரியான கேள்வி!!
கண்மூடித்தனமாக ஆத்திகனாக இருப்பதும் நாத்திகனாக இருப்பதும் ஒன்றே!!

8:00 PM, September 10, 2008
//

கண்ணை திறந்து வச்சிக்கிட்டே மூட நம்பிக்கை துணைபோவோரும் நாத்திகர் தான்.

Vishwa சொன்னது…

"யாரு சொன்னா நான் பகுத்தறிவாளன் ?"



கண்ணா,
உங்கள யாரும் பகுதறிவாளன்னு சொல்லல....போலி பகுதறிவாளன்னுதனே சொன்னேன்

"அச்சச்சோ, என்ன கொடுமை சார் இது ? சமரசம் செய்து கொண்டு தான் எல்லாவற்றையும் எழுதனுமா ? பெரியாரின் ஏற்கத்தக்க கருத்துக்களை எழுதினால் உடனே அவனுக்கு பகுத்தறிவாளன் என்ற பட்டம் கட்டுவதா ? முற்போக்காக எதாவது பேசினாலே அவன் பகுத்தறிவாளனாம். பகுத்தறிவாளன் என்றால் நாத்திகமா ? ஆத்திகவாதிகளுக்கு பகுத்து அறியும் திறனே இல்லையா ?"




கண்ணா,
தயவுசெஞ்சு உங்கபார்வயில எது முற்போக்குன்னு சொல்லுங்க...நான் வேணும்னா பாடம் கத்துக்குறேன்....பெரியாருடைய பல கருத்துக்களில் எனக்கு மிகுந்த உடண்பாடு உண்டு,ஆனால் அவரும் தனது பார்வையை ஹிந்து மதத்தின்மீதே செலுத்தினார்...ரஷியாவுக்கெல்லம் சென்றுவந்தவர்தனே..அங்கு கம்மியுநிஸதீன் பெயரால் அரங்கேறிய கொடுமைகளை எங்காவது என்றாவது தனது திருவாய் மலர கூறியுள்ளாரா....அது போகட்டும் "இந்தியாவுக்கு சுதந்திரமே வேண்டாம்" என்று வெள்ளையனிடம் மண்டியிட்டவர்தனே இந்த பெரியார்.தனிமனித ஒழுக்கமென்றால் எவ்வளவு ரூபாயென்று கேட்பவர்தானே இந்த பெரியார்...பெண்கள் பாப்(BOB) கட்டிங்(CUTTING) செய்துகொண்டால் மட்டும் பெண்ணியம் தழைதோங்குமா.....மக்களை போலி ஆன்மீகவாதிகள் ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறும் உங்கள் பெரியாரையும் அதே குற்றச்சாட்டுடன் கூண்டில் நிறுத்த முடியும்.படிபறிவில்லாத பாமரனை படித்த அறிவாளியான பெரியார் எந்த வகையில் முன்னேற்றியுள்ளான்.பெரியாரின் கருத்துக்கள் காலத்தின்பால் அழியும்..அதற்கு உதாரணம் பெரியாரிசம் பேசும் இன்றைய தமிழக முதல்வர் வீட்டிலேய அவரது மருமகள் மற்றும் மனைவி,துணைவி என்று அனைவரும் தீவிர கடவுள் பற்றாளர்களே!!!பெரியார் வழி வந்த அண்ணாவின் குடும்பமும் கடவுள் பக்தி கொண்டவர்களே. இன்னுமிதுபோன்ற எத்தனையோ உண்மைகள் வெளிவரதொடங்கியுள்ளது....அதகூட விடுங்கள், பெரியாரின் பேரனான இளங்கோவன் செய்யும் கூத்துக்கள் கொஞ்சமா நஞ்சமா....இவர்கள் அனைவரும் ஹிந்துகக்ளே!!!!நீங்கள் "போலி பகுத்தறிவாளன்" என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டவராயிற்றே...எனவே இப்போது கூறுங்கள், உங்களது ஆட்டம் கலைய ஆரம்பித்து விட்டதுதானே? ,பெரியாரது கொள்கைகள் நீர்த்து போய்விட்டதுதானே!!!?.இன்று பெரியார் கொள்கைகளின்பால் தோன்றிய திராவிடர் கழக கூடத்துக்கு எத்தனை பொதுஜனம் வருகிறது .இன்று உண்மைகளை வெளிக்கொணர ஏராளமான ஊடகங்கள் உள்ளனவே...உங்களைபோன்ற போலிகள் பிரம்மப்பியதனம்செய்தும் ஆன்மீகத்தின்பால்,கடவுள் பக்தியின்பல் கூட்டம் அதிகமாகின்றதே தவிர பெரியாரின் கூடத்துக்கு ஆள் சேரவில்லையே.வாருங்கள்,உங்கள் வேலைகளை விட்டுவிட்டு கூட்டதுக்கு, ஆள் சேர்த்து பெரியாரை பிரலயமாக்குங்கள்.செய்வீர்களா?பெரியாரும் காலி பெருங்காய டப்பாவும் ஒன்று,வாசனை இருக்குமே தவிர பயன் ஏதும் இருக்காது.அந்த வாசனையும் கருணாநிதி போன்ற போலிகளால் காலத்தில் நிக்காமல் கானாமல் போகும்.


"தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்லும் ஒரு மோசடி (ஆ)சாமி தன்னைத் தான் கடவுள், இறைவன் என்று சொல்லும் போது ... ஏன் சாமி மல மூத்திரத்திலும் இருப்பானா ? என்று கேட்டால் பகுத்தறிவாளன் பட்டம் கட்டிவிடுவார்கள், நாத்திகன் என்று சொல்லிவிடுவார்கள், வெறும் கையில் விபூதி வரவழைப்பதற்கு பதில் கையடக்க பூசனிக்காயை வரவழைக்க முடியாதா ? சிம்கார்டு போட்ட செல்போன் வரவைக்க முடியாதா ? வயுத்துக்குள்ளே பொற்கொல்லர் உட்கார்ந்து இருக்காரா தங்கத்தில் எப்படி சாமி லிங்க வாந்தி எடுக்கிறீர்கள் என்று கேட்டால் அவன் நாத்திகனாம்."



கண்ணா,
நீங்கள் யாரைவேண்டுமானாலும் விமர்சனம் செய்யுங்கள்.மகாபாரதத்தில் கண்ணன் "நானே அனைத்தும், உனது நண்பனும் பகைவனும் நானே, உனது சகலமும் நானே,ஆக நீயே நான்,நானே நி.நீ செய்யும் பாவமும் நானே ,நீ செய்யும் புன்னியம்மும் நானே" என்று இந்த உலகத்தின் உன்னத தத்துவத்தை கூறிய பின் அர்ஜுனனை வில்லேடுத்து போரிட கூறுவான். ஆக சகலமும் கடவுள் என்றபின் அதில் மலமெங்கே மூத்திரமெங்கே.இன்று நீங்கள் குறிப்பிடும் சாமியார் லிங்கத்தை வாயிலிருந்து எடுப்பவர்தன்,அவரால் பூசணிகாயை கண்டிப்பாக எடுககமுடியாதுதான். ஆனால் அவர் தனது ஒழுங்கினங்களுக்கு அப்பால் ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மற்றும் மேடக் மாவட்டங்களில் (Medak and Ananthpur) மக்களுக்கு நிரந்தர குடிநீர் தீர்வை கொடுத்துள்ளாரே....புட்டபர்த்தியை சுற்றியுள்ள 700 கிராமங்களுக்கு அரசுசெய்யவேண்டிய போதுமான உள்கட்டமைப்பு வேலைகளை செய்துள்ளாரே.ஏன் உங்கள் "பகுத்தறிவு பல்விளக்கி" கருணாநிதிகூட அவரிடம் தமிழகத்திற்கு தன்நீர் உதவி செய்ய்வேண்டும் என்று கூறி அதற்கான திட்டமும் பெற்று அவருக்கு பாராட்டு விழாவும் நடதினாரல்லவா.தனிமனித துவேஷத்தை தாண்டி அவரும் இந்த சமுதாயத்துக்கு,அவர் சார்ந்த,சாராத பிர மத மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நல்லதுதானே செய்துள்ளார்.ஏன் பெரியார்கூட பெண்பித்தராமே, ஆனால் அவர் கொள்கைகளை நீங்கள் ஏற்று கொள்ளவில்லையா?


"நான் என்னமோ பெரியார் கொள்கைகளை பதிவுலகில் பறைசாற்றுவேன் என்று சபதம் செய்து கொண்டு வநதது போலவும் அதில் பிரழ்ந்து எழுதுகிறேன், எனது பகுத்தறிவு புனித(!) தன்மை பால்பட்டு, திரிந்து மோராகிவிட்டதாகவும், பெரியாரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கிறேன் என்பது போலவும் புரிந்து கொண்டு, நீ ஏன் இஸ்லாமியரைக் கேட்பது இல்லை, போப்பாண்டவரைக் கேட்பது இல்லை ? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள், நான் பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவனோ அதற்கு பாதுகாவலனோ இல்லை."




கண்ணா,
உதைபட்டவுடன் இந்த சப்பைகட்டை கட்டிவிடீர்கள்.அரசியலைபற்றியும் சினிமாவை பற்றியும் விமர்சனம் செய்ய அரசியல்வாதியாகவும்,சினிமாகாரனாக இருக்க தேவைல்யில்லை.எனவே உங்கள் போலி பகுத்தறியும் பண்பை, "திக கூட்டதுக்கு நான் செல்லவில்லை அதனால் நான் திக'காரன் இல்லை" என்று சொல்லி நடைகட்ட முடியாது. பெரியாரிசம் பேசிவிட்டு இப்படி தப்பித்தால் என்ன அர்த்தம் கண்ணா?


"மூட நம்பிக்கையை கேள்வி கேட்பவன் எல்லாமே நாத்திகனா ? ஆத்திகவாதி என்றால் சாமியார்களில் லீலைகளை தெய்வீகமாக கருதி அவர்கள் பாதுகாப்புடன் உறவு கொள்ள காண்டம் வாங்கிக் கொடுத்து பணிவிடை செய்ய வேண்டுமா ?"




அய்யோ கண்ணா,
நீங்கள் மூடன் என்றோ முட்டாள் என்றோ யாரும் சொல்லவில்லை. உண்மையை பரப்புவேன் என்று சொல்லி தனது பருப்பு வேகாமல் ஊருக்கு இளைத்தவனை வம்பிழுபதுதனே மடமையின் உச்சகட்டம்.நீங்கள் காண்டமை(CONDOM) யாருக்கும் வாங்கிதரவேண்டியதில்லை.அரசாங்கம் இப்போது செய்யும் உருபடியாண வேலைகளில் அதுவும் ஒன்று. நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒரு முஸ்லிமிடம் போய் "ஐயா உங்கள் மதத்தில் உங்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார்கள்.நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் தலாக்,தலாக்,தலாக் என்ற மந்திர வார்த்தை மூன்று முறை கூறி செய்தகல்யானத்தை செயலிழக்க செய்துவிட்டு மீண்டும் ஒரு பதினாறு வயது மங்கையை கல்யாணம் செய்யலாம்,ஆனால் உங்களுக்கு ஏற்கனவே இருபது வயதில் ஐந்து மகன்கள் உள்ளார்கள்..எனவே உங்கள் ஆத்திர அவசரத்துக்கு இந்த பலுனைகொஞ்சம் போடவேண்டிய இடத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.இனி உங்களுக்கு பிள்ளைகள் பிறக்கவில்லையென்றால் எல்லாம் வல்ல "அல்லா" கோவித்துகொள்ளமாட்டர் என்று அறிவுறுத்துங்கள்.இல்லை கருக்கலைப்பு பாவம் என்று பிதற்றும் கிறித்தவ பாதிரிகளிடம் அந்த "condom"ன் மகிமையை அரிவுருதுங்கள்"



"நான் பகுத்தறிவாளன் அல்ல, போலி பகுத்தறிவாளன் தான், போலி மதச்சார்பின்மை என்னும் சந்தர்பவாதம் போல்.... போலி பகுத்தறிவாளனான என்னால் இந்து மதத்தை மட்டுமே கேள்வி கேட்கமுடியும்."



கண்ணா,
நீங்கள் போலி என்று ஏற்றுகொண்டத்ற்கு எணது பாராட்டுக்கள்.பிற மதத்தை கேள்வி கேட்டால் செருப்படியும் வீட்டுக்கு ஆடோவும் வரும் அல்லவா?ஏன் உங்கள் உயிரே கூட போகலாம். எனவே ஊருக்கு இலைத்தவனிடம் உங்கள் வீரதீரபராகிரமத்தை
காட்டுங்கள்.நீங்கள்தான் உண்மையான வீரன்!!!!



"பகுத்தறிவாளனின் லட்சணம் என்ன ? அனைத்து மதத்தையும் சமமாக கருதி, எல்லா மதத்தையும் தூற்ற வேண்டுமாம் ! என்ன ஒரு சூப்பர் புரிதல் ! அப்படி செய்பவர்களைத்தான் பகுத்தறிவாளனாக ஒப்புக் கொள்வார்களாம், மற்றவர்களெல்லாம் போலி பகுத்தறிவாதிகளாம். இப்படி லட்சணத்துடன் இருக்கும் பகுத்தறிவாளனின் செயலை எத்தனை ஆத்திகர்கள் போற்றுகிறார்கள்? பகுத்தறிவாளன் பகுத்தறிவாளானாக இல்லை என்பதற்கு இவர்கள் படும் கவலையில் எதாவது உண்மையான ஆதங்கம் இருக்கிறதா ? கருணாநிதி மஞ்ச துண்டு போட்டால் பகுத்தறிவாதம் செத்துடுமா ? எதுவுமே போடாத பெரியாரை இவர்கள் போற்றி இருக்க வேண்டுமே ? அப்படி எதுவும் செய்தது போல் தெரியவில்லை. பிறகு ஏன் பகுத்தறிவாளன் போலியா ஒரிஜினிலா என்றெல்லாம் கவலைப்பட வேண்டும் ?"



கண்ணா,
மேலே கூறியதுபோல் பெரியார் கூறிய சில கருத்துக்கள் ஆழமானவை.ஆனால் அவை அனைத்தும் கூர்முனை தீட்டி எறியப்பட்டது ஒரு சமூகத்தின்மேல்.பார்பனீயம் பார்பனீயம் என்று இன்னுமெத்தனை காலத்துக்கு சொல்லிகொண்டிருபீர்கள்.நீங்கள் மட்டும் "பார்பான்'என்று சொல்லலாம் ஆனால் பிறர் மட்டும் "பறையன்" என்றுசொன்னால் வண்கொடுமை சட்டத்தால் கைது கைதுசெய்யபடுவார்களாம். கருணாநிதி எக்கேடு கேட்டால் எனகென்ன.அவர் ஏப்போதும் கடவுள் மறுப்பு சிந்தனை என்ற கருவியை ஆயுதமாக உபயோகிக்க துடிப்பவர்.பெரியார் "எதுவும்"போடமாட்டார் என்று எனக்கு எப்படி தெரியும்((இது வெறும் நகைச்சுவைக்காக))))).


"நான் பகுத்தறிவாளன் இல்லை, போலி பகுத்தறிவாளன் அல்லது அறைகுறை பகுத்தறிவாளன் !"




கண்ணா,
உங்களை நீங்கள் இன்னும் எத்தனை காலத்துக்கு போலி போலி என்று புகழ்ந்துக்கொண்டிருப்பீர்கள்



"பகுத்தறிவாளன் பட்டம் வேண்டுமா ? எல்லா மதத்தையும் திட்டிவிட்டு வாருங்கள், அப்பொழுது தான் நீங்கள் உண்மையான பகுத்தறிவாளன் என்ற பட்டம் தந்து உங்களை கவுரவிப்பார்கள், நீங்கள் இந்து மதத்தை மட்டும் குறைத்துச் சொன்னால் நீங்கள் போலி பகுத்தறிவாளன் என்றே தூற்றப்படுவீர்கள் !

நான் போலி பகுத்தறிவாளனாக இருக்கவே விரும்புகிறேன் !
:)))))"




கண்ணா,
உங்களைபோன்றவர்கள் போலிகளாக மட்டும் இருந்தால் பரவாயில்லை பேடிகளாக அல்லவா இருகிறீர்கள்.இன்ன பிற செயல்களை,அட்டுழியங்களை செய்பவரை பார்க்காமல் ஊருக்கு இளைத்தவனை நோன்டுபவர்களை "பேடியேன்று" சொல்லாமல் வேறென்ன சொல்லவேண்டும் கண்ணன்

அன்புடன்...
விஷ்வா

Vishwa சொன்னது…

துணிவிருந்தால் இந்த பின்னூட்டை உங்கள் blog'in முதல் பக்கத்தில் வெளியிடுங்கள்......

அன்புடன்....
விஷ்வா

கோவி.கண்ணன் சொன்னது…

//Vishwa said...
துணிவிருந்தால் இந்த பின்னூட்டை உங்கள் blog'in முதல் பக்கத்தில் வெளியிடுங்கள்......

அன்புடன்....
விஷ்வா
//

விஷ்வா,

விரல் வலியை பொருட்படுத்தாது கடமையைச் செய்ததற்கு பாராட்டுக்கள், கீதாச்சாரத்தின் படி அதற்கான பலனை கண்டிப்பாக அறுவடை செய்வீர்கள். :)

நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விகளும் பல்வேறு நாட்களில் பலரும் கேட்டவைதான். அனைத்திற்கும் எனது கட்டுரைகளில் பதில்கள் இருக்கின்றன. ஆர்வம் இருந்தால் தேடிப்படித்துக் கொள்ளுங்கள், இடுகைகளை குறி சொற்களுடன் வகைப்படுத்தி இருக்கிறேன். தேடுவதும் எளிதே !

முதல் பக்கத்தில் வெளி இடனுமா ?
என்பதிவை படிப்பவர்கள் எப்போதும் பின்னூட்டத்தையும் படிப்பவர்கள் தான். நான் நேற்று தனிப்பதிவாக இட்டதற்கு வேறு சிலரும் எனது "பகுத்தறிவு" பற்றிய குழப்பத்தில் இருக்கிறார்கள், அவர்களுக்கும் சேர்த்தே சொல்வதற்காக தனிப்பதிவாக இட்டேன். மற்றபடி உங்களுக்கு சிறப்பு சேர்க்கவேண்டும் என்ற தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை.

பேடி, மோடி என உங்கள் சீண்டலுக்கு நான் உணர்ச்சி வசப்படுவேன் என்கிற எண்ணம் மட்டும் தவறு என்றே சொல்லிக் கொள்கிறேன்.

ஒருவரை சொற்களால் வெறுப்பேற்றுவதைவிட பெரிதாக ஒருவரை வெறுப்பேற்றிவிட முடியமா ?

முடியும் ! Just Ignore them.

அறிவகம் சொன்னது…

இந்து மதத்தை இந்த அளவுக்கு கேள்வி கேட்கும் பெரியார் தொண்டர்கள்( பெரியார் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள், பகுத்தறிவாளர்கள் இப்படி எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்) ஏன் இஸ்லாமியத்தையும், கிறிஸ்துவத்தையும் கேள்வி கேட்பது இல்லை என்பது தான் விஷ்வா உட்பட பலரின் ஆதங்கம்.

இதே கேள்வியை தான நானும் எல்லோரிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரியாரின் வரலாரையும் இந்தியாவின் வரலாரையும் ஓரளவுக்கு படித்தபின்பு தான் புரிந்தது. நான் கேட்டதெல்லாம் விதண்டாவாதங்கள் என்று. பெரியார் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள், அவர் கொள்கைகளை பரப்புகிறவர்கள் என்ற வகையில் நானும் ஒரு பகுத்தறிவாளி தான். அதே சமயம் ஒரு ஆன்மீகத்தை போற்றுபவளும் கூட.

சரி விஷ்வாவுக்கு எனது அனுபவ பதில்.

பெரியார் எதிர்த்தது இந்து மதத்தை அல்ல. மூடநம்பிக்கைகளையும், தீண்டாமைகளையும் தான். எனவே பெரியார் கொள்கையோடு மதத்தை சாயம்பூச தேவையில்லை.

அடுத்தது இந்து மதம் என்பது என்ன? அதை முதலில் சொல்லுங்கள் அப்புறம் அதுகுறித்து விவாதிப்போம்.

உலகில் எந்த சமூகசீர்திருத்தவாதியும் செய்யாத சாதனையை பெரியார் செய்திருக்கிறார். எந்த சமூகசீர்திருத்தவாதிக்கும் தன் உள்நாட்டில் மதிப்பு இருக்காது. அங்கு அவரது உபதேசங்கள் எடுபடாது. அது இயேசுகிறிஸ்து முகமது நபிகளார் உட்பட பல மகான்களின் வாழ்க்கையிலும் நடத்திருக்கிறது. ஆனால் பெரியார் அப்படி அல்ல. அவர் தமிழ்நாட்டில் சாதித்துகாட்டியிருக்கிறார்.

கல்வியும் ஜனநாயமும் வளர்ந்துவிட்ட இந்த காலகட்டத்தில் கூட தமிழக & கேரளாவில் சாதிக்கொடுமைகளையும், கோயில் தீண்டாமைகளையும் கண்கூடாக பார்க்க முடிகிறது. அப்புறம் போலிசாமியார்களின் அட்டகாசங்களை நான் சொல்லி தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றில்லை.

பெரியார் என்ன சொன்னார்? தீண்டாமைகளை களைந்த ஒரு முழுமையான உண்மையான மதத்தை காட்டுங்கள் என்று தானே சொன்னார். போலிகள் இல்லாத கடவுளை காட்டுங்கள் நம்புகிறோம், என சொல்வது அவ்வளவு அபத்தமாக எனக்கு தெரியவில்லை. ஆனால தலையில் முடி வளர்ப்பது தான் கடவுளின் வேலை என கூறுவது தான் அபத்தமாக தெரிகிறது.

செருப்பில விநாயகரை பதித்தாலும் பக்தியுடன் வணங்குபவன் தான் இந்து. அதை அவமானமாக கருதி கூக்குரல் இடுபவன் அல்ல இந்து.

ஆனால் உங்கள் கூற்று அப்படி இல்லை. எனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை, அவனுக்கு ஒரு கண்ணாவது போகட்டும் என்பது தான் உங்கள்(திரு. விஷ்வாவுக்கு மட்டும்) இந்து தர்மமா?

கொஞ்சம் இந்திய ஆன்மீக வரலாற்றை புரட்டி பாருங்கள். பெரியாருக்கு முன் எத்தனை பெரியார்கள் உதித்திருக்கிறார்கள் என்பது தெரியும். புத்தர், மகாவீரர், திருவள்ளுவர், ராஜாராம் மோகன்ராய் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் எல்லாம் என்ன போதித்தார்கள்? எதற்கு எதிராக போராடினார்கள்? இந்துதுவம் எனப்படும் இந்திய ஆன்மீகத்தில் புரையோடிய தீண்டாமைகளையும் போலிகளையும் தானே. அந்த வகையில் தான் திரு.கோவி. கண்ணனின் நான் கடவுள் பதிவும் எனக்கு படுகிறது.

ஆனால் உங்கள் வாதம் வேறு எங்கோ செல்வது போல இருக்கிறது.

இந்துத்துவத்திற்கு சாதகமாக எழுதுவதாக எண்ணி மீண்டும் அதை தீண்டாமைக்குள்ளும், மூடநம்பிக்கைகளுக்குள்ளும் புதைத்து விடாதீர்கள். சமஸ்கிருதத்தை கேள்வி கேட்க கூடாது என சமஸ்கிருதவாதிகள் எண்ணியதால் தான் இன்று சமஸ்கிருதமே காணமல் போய்கொண்டிருக்கிறது.

இந்துதுவத்தில் இருக்கும் போலிகளை தோலித்துக்காட்டுங்கள் அதற்காக கண்டீப்பாக அடுத்த மதத்தையும் நாலுவார்த்தை திட்டவேண்டும் என அவசியமில்லை. நம்மை செப்பனிட அடுத்தவரோடு ஒப்பிட அவசியமில்லை. நமக்கே தெரியும் நாம் யார் என. அது தான் இந்து மன்னிக்கவும் இந்திய ஆன்மீகம்.

பெரியாரின் கொள்கைகளை கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்பத்தி தங்கள் மதத்தை இந்தயாவில் வேகமாக பரப்பிய சூத்திரம் கூட தெரியாமல், தொடர்ந்து சூத்திர கொள்கையையே வரட்டுபிடிவாதமாய் பிடித்துக்கொண்டிருந்தால் இந்து மதமும் காலத்தால் அழிந்துவிடும். இது தான் நிதர்சன உண்மை.

எனவே போலிகளை தோலுரித்து காடடும்போது அதை ஊக்குவியுங்கள். அதற்கு எதிராக எழுதுவதை விட்டுவிட்டு உண்மையை கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுங்கள் அது தான் இந்து மதத்திற்கு செய்யும் மிகசிறந்த தொண்டு.

நன்றி.

வஜ்ரா சொன்னது…

//

செருப்பில விநாயகரை பதித்தாலும் பக்தியுடன் வணங்குபவன் தான் இந்து. அதை அவமானமாக கருதி கூக்குரல் இடுபவன் அல்ல இந்து.
//

இவன் தான் இந்து, இவன் இந்து இல்லை என்று தீர்மானிக்கும் உரிமை யாரிடமும் இல்லாமல் இருப்பது தான் இந்து மதத்தின் சிறப்பு.

நீங்கள் சொன்ன இதே வாதத்தை மற்ற மதத்திற்குப் கொஞ்சம் பொருத்திப் பாருங்களேன்.
முகம்மது நபியையே, ஏசு கிருஸ்துவையோ செருப்பில், டாய்லெட் பேப்பரில், ஜட்டியின் உள்புறம் என்று எங்கு வேண்டுமானாலும் அச்சிட்டுப்பாருங்கள்.

ஏன் அங்கே பிள்ளையாருக்குப் பதில் பெரியாரைக்கூட பதித்துப்பாருங்கள். என்ன எதிர்வினை வரும் என்று நம்புகிறீர்கள் ?



யார் இந்து என்று நீங்கள் சர்டிபிக்கேட் கொடுக்கத் தேவையில்லை, நான் பகுத்தறிவாளன் என்ற சுய பட்டம் சூட்டிக் கொள்ள உங்களுக்குத் தகுதியிருக்கா என்று யோசிக்கச் சொல்கிறார்கள்.

ஊருக்கு இளைத்தவனை பரிகாசம் செய்துவிட்டு அதனால் அவன் தன்னைத்தானே வெறுக்கவேண்டும் என்று எண்ணுவதும், அது தான் அவன் குணம் என்றே சொல்லும் உங்கள் நம்பிக்கையை, மூடநம்பிக்கை என்று சொல்லி எதிர்த்துப் பேசுபவனை இந்துத்வாவாதி, தீண்டாமையை ஆதரிப்பவன் என்று பட்டம் கட்டுகிறீர்கள்.

என்னே உங்கள் பகுத்தறிவு. மெச்சிப் போற்றப்படவேண்டிய "அறிவு" அது.


//
பெரியாரின் கொள்கைகளை கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தங்களுக்கு சாதகமாக பயன்பத்தி தங்கள் மதத்தை இந்தயாவில் வேகமாக பரப்பிய சூத்திரம் கூட தெரியாமல், தொடர்ந்து சூத்திர கொள்கையையே வரட்டுபிடிவாதமாய் பிடித்துக்கொண்டிருந்தால் இந்து மதமும் காலத்தால் அழிந்துவிடும். இது தான் நிதர்சன உண்மை.
//

பெரியாரின் கொள்கை அப்படித் தப்பாகப் பயன் படுத்துபவர்களை இதுவரை எத்தனை "பகுத்தறிவாளர்கள்" கேள்வி கேட்டுளனர் ?

எது காலத்தால் அழியும் எது நிற்கும் என்பது காலம் சொல்லிக் கொடுக்கும். இன்றே பலருக்கு பெரியார் என்றால் கேரளத்தில் ஓடும் ஆறு தான் தெரியும் வெண் தாடி வேந்தரைத் தெரியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

// இன்றே பலருக்கு பெரியார் என்றால் கேரளத்தில் ஓடும் ஆறு தான் தெரியும் வெண் தாடி வேந்தரைத் தெரியாது.//

வஜ்ரா,

தெரியவேண்டியவங்களுக்கு தெரிஞ்சி இருக்கே அது போதும் !
:)

எனக்கும் கூடத்தான் ஒரு பெரியவரைப் பற்றி நினைத்தால் ஒரு நடிகைதான் ஞாபகம் வருகிறார். என்ன செய்ய முடியும். 'காலத்தின்' கோலம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவகம் said...

இந்து மதத்தை இந்த அளவுக்கு கேள்வி கேட்கும் //

அறிவகம் ஐயா, அருமையான பின்னூட்டம், நன்றி. விழலுக்கு நீர் இறைக்க வேண்டாம் என்றே சிலருக்கு பதிலுரைப்பதை விட்டுவிட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் சொன்ன இதே வாதத்தை மற்ற மதத்திற்குப் கொஞ்சம் பொருத்திப் பாருங்களேன்.
முகம்மது நபியையே, ஏசு கிருஸ்துவையோ செருப்பில், டாய்லெட் பேப்பரில், ஜட்டியின் உள்புறம் என்று எங்கு வேண்டுமானாலும் அச்சிட்டுப்பாருங்கள்//

வஜ்ரா,
இதுதான் ஆதங்கமேவா !

தனக்கு கிடைப்பது பிறருக்கும் கிடைக்கனும்னு நினைக்கிற உங்கள் பெருந்தன்மையான மனதை போற்றுகிறேன்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

// இன்றே பலருக்கு பெரியார் என்றால் கேரளத்தில் ஓடும் ஆறு தான் தெரியும் வெண் தாடி வேந்தரைத் தெரியாது.//


தெரியாதவர்களுக்கு அது பெரியார் இல்லை. அது பெரியாறு என்று எடுத்துச்சொல்லிப் புரிய வைக்கலாமே. பெரியாரை அது என்று சொல்லக்கூடாதல்லவா?

SurveySan சொன்னது…

கோவிக்கண்ணன், பகுத்தறிவாளனா,போலிப்.பகுத்தறிவாளனான்னு ஒரு சர்வே போட்டுடவமா? மக்கள் கருத்ஸ் தெரிஞ்சுக்கத்தான் :)

//ஊருக்கு இளைத்தவனை பரிகாசம் செய்துவிட்டு அதனால் அவன் தன்னைத்தானே வெறுக்கவேண்டும் என்று எண்ணுவதும், அது தான் அவன் குணம் என்றே சொல்லும் உங்கள் நம்பிக்கையை, மூடநம்பிக்கை என்று சொல்லி எதிர்த்துப் பேசுபவனை இந்துத்வாவாதி, தீண்டாமையை ஆதரிப்பவன் என்று பட்டம் கட்டுகிறீர்கள்.
/////

வஜ்ரா, அழகா சொல்லிருக்கீங்க.


கோவி, என் பார்வையில், நீங்க ஆன்மீகவாதியும் இல்ல பகுத்தறிவாளரும் இல்லை. குழப்பவாதி ;)

SurveySan சொன்னது…

கோவிக்கண்ணன், பகுத்தறிவாளனா,போலிப்.பகுத்தறிவாளனான்னு ஒரு சர்வே போட்டுடவமா? மக்கள் கருத்ஸ் தெரிஞ்சுக்கத்தான் :)

//ஊருக்கு இளைத்தவனை பரிகாசம் செய்துவிட்டு அதனால் அவன் தன்னைத்தானே வெறுக்கவேண்டும் என்று எண்ணுவதும், அது தான் அவன் குணம் என்றே சொல்லும் உங்கள் நம்பிக்கையை, மூடநம்பிக்கை என்று சொல்லி எதிர்த்துப் பேசுபவனை இந்துத்வாவாதி, தீண்டாமையை ஆதரிப்பவன் என்று பட்டம் கட்டுகிறீர்கள்.
/////

வஜ்ரா, அழகா சொல்லிருக்கீங்க.


கோவி, என் பார்வையில், நீங்க ஆன்மீகவாதியும் இல்ல பகுத்தறிவாளரும் இல்லை. குழப்பவாதி ;)

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
கோவிக்கண்ணன், பகுத்தறிவாளனா,போலிப்.பகுத்தறிவாளனான்னு ஒரு சர்வே போட்டுடவமா? மக்கள் கருத்ஸ் தெரிஞ்சுக்கத்தான் :)

//ஊருக்கு இளைத்தவனை பரிகாசம் செய்துவிட்டு அதனால் அவன் தன்னைத்தானே வெறுக்கவேண்டும் என்று எண்ணுவதும், அது தான் அவன் குணம் என்றே சொல்லும் உங்கள் நம்பிக்கையை, மூடநம்பிக்கை என்று சொல்லி எதிர்த்துப் பேசுபவனை இந்துத்வாவாதி, தீண்டாமையை ஆதரிப்பவன் என்று பட்டம் கட்டுகிறீர்கள்.
/////

வஜ்ரா, அழகா சொல்லிருக்கீங்க.


கோவி, என் பார்வையில், நீங்க ஆன்மீகவாதியும் இல்ல பகுத்தறிவாளரும் இல்லை. குழப்பவாதி ;)

2:05 PM, September 11, 2008 //

சர்வேஷன்,

ஊருக்கு இளைத்தவன் என்று யாரைச் சொல்கிறார் என்றே தெரியவில்லை. நாங்களெல்லாம் பிள்ளையார் கோவில் ஆண்டிகளைத்தான் சொல்லுவோம். பிள்ளையார் கோவிலில் ஆண்டிகளோ, பண்டாரங்களோ தற்போது இல்லை, எல்லாமும் பார்பனர்தான். பருப்பும் நெய்யும் சாப்பிட்டு, மறைவாக சிக்கனும் சாப்பிட்டு பளபளப்பாகத்தான் இருக்காங்க, இளைச்சு போயெல்லாம் இல்லை. கவலைப்படாதிங்க.

நான் குழப்பவாதி ?- நீங்க தான் சர்டிபிகேட் அத்தாரிட்டியா ?
:)) தெரியமல் போச்சே !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பெரியாரை ஞானி என்றோ, சமூக சீர்திருத்த வாதி என்றோ சொல்லலாம்.(அதில் முழு வெற்றி பெறாவிட்டால் கூட, ஓரளவு பெற்றிருக்கிறார்).

அவரை வெண்தாடி வேந்தன் என்றோ, பெரியாருக்கு தொண்டு செய்கிறேன் என்றோ சொல்வதை பெரியார் உயிருடன் இருந்தால் ஏற்றுக்கொள்ளமாட்டார்.(அவரின் வாரிசு வீரமணி அய்யா ஏற்றுக்கொள்ளக் கூடும்).


அவரே,
தொண்டு செய்து பழுத்த பழம்.(அவருக்கு யாரும் தொண்டு செய்ய வேண்டியதில்லை)

தூயத் தாடி மார்பில் விழும்.(குழந்தைகளைக் கூட மரியாதையாக அழைக்கும் குணத்துக்குச் சொந்தக்காரர், தூய்மையான தாடி மட்டும் அல்ல, மனமும் கூட...! அதனால் தான் 90 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்தார் போலும்.

பெரியார் கஞ்சன் அய்யா, அவரு தாடி மழிக்க செலவு செய்யாமல் அதை வளர்த்தார் என்று சிலர் சொல்வதுண்டு. எனக்கு அப்படித் தோன்றவில்லை. அப்படி என்றால் கள்ளுக்கடையை எதிர்த்து தனது தோப்பில் உள்ள தென்னைமரங்களை வெட்டிப் போட்டிருக்க மாட்டார். அந்தவகையில் தான் எந்த கொள்கையை மக்கள் மத்தியில் வைக்கிறோமோ அதன்படி தானே நடந்து கொண்டார்.

இப்ப இருக்கிற சீர்திருத்தவாதிகளை அவருடன் ஒரு சதவீதம் கூட ஒப்பிட முடியாது.

அவரிடம் பிடித்த சில விடயங்களைக் குறிப்பிட்டேன். அவரிடம் எல்லா விடயங்களும் கொள்கைகளும் எல்லோருக்கும் பிடிக்க வேண்டும்(அல்லது பிடிக்கும்) என்று சொல்லமுடியாதல்லவா?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

திரு. கருணாநிதியின் புதல்வி திருமதி கனிமொழி என்ன சொல்கிறார் பாருங்கள்!


பகுத்தறிவு வேண்டும்-கனிமொழி!


சென்னை: இளைஞர்கள் அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என கவிஞர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழக இளைஞரணி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை கவிஞர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் அவர் பேசியதாவது:

திராவிடர் கழக இளைஞரணி மாநாட்டில் பேச என்னை அழைத்துள்ளீர்கள். பொதுவாக, மகளிர் அணி மாநாடு, பெண்ணியம், பெண்களும் ஊடகங்களும் என்பது போன்ற கருத்தரங்குகளில் பேசத்தான் பெண்களை அழைப்பார்கள்.

ஆனால் இது பெரியார் பாசறை அல்லவா... இங்குதானே பெண்களுக்கான முக்கியத்துவம் கிடைக்கும்...

இன்றைக்கு இந்தியாவின் மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை 41 சதவீதம். எனவே, நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

இளைஞர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். கேள்வி கேட்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். கேள்வி கேட்டால்தான் புரட்சி வெடிக்கும். உலகப் புரட்சிகளின் பின்னணி கேள்விகள்தான்.

படிப்பில் சிறந்து விளங்கினாலும் சமூக அக்கறை இல்லாவிட்டால் படித்த படிப்பால் ஒரு பயனும் இல்லை. இளைஞர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணராதவர்களாக இருக்கிறார்கள்.

இன்று மதங்களால்தான் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. மதம் இல்லாவிட்டால் தலிபான் பிரச்சினை இல்லை. சாதிச் சண்டைகள் இல்லை. முன்னேறிய நாடுகளில்கூட மதங்கள் தங்கள் பிரச்சினைகளை அரங்கேற்றி வருகின்றன. மதங்கள் சிந்தனையை மழுங்கடித்துவிடும்.

திராவிட இயக்கங்களால்தான் இடஒதுக்கீடு வந்தது. இடஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்க முடிந்திருக்கிறது. மருத்துவ கல்லூரிகளில் அதிகளவு சேர்ந்துள்ளனர்.

சமூக மாற்றம் வந்துவிடக்கூடாது என்பதில் சிலர் தெளிவாக இருக்கிறார்கள். இதற்குச் சரியான தீர்வு பெரியாரின் கருத்துகளை இளைஞர்கள் மனதில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றார் கனிமொழி.

நன்றி: தட்ஸ் தமிழ்

Unknown சொன்னது…

அய்யா கோவி.கண்ணன் அவர்களே..
நீங்கள் உண்மையான பகுத்தறிவு வாதி என்று நினைத்து நான் கூட சில நேரங்களில் பின்னூட்டி இருக்கிறேன். மன்னிக்க..
நீங்கள் எல்லா சாதிகளையும் ஒருபோல் கருதுபவர், எல்லா மதங்களையும் ஒரேபோல் நினைப்பவர் என்றெல்லாம் நினைத்ததால் இந்த தவறான புரிதல்.
ஆனால் இதெல்லாம் இருப்பவர் தான் நல்ல மனிதராக இருக்க முடியும். இஸ்லாமியர்களுடைய தவறுகளையோ, மூட நம்பிக்கைகளையோ நீங்களாகவே எப்போதும் சுட்டிக் காட்டியதில்லை. நான்தான் முஸ்லீம் இல்லையே என்று சப்பைக் கட்டு கட்டலாம்.அதற்குமுன் பார்ப்பனர்களுடைய தவறுகளையோ, மூட நம்பிக்கைகளையோ, ஒடுக்குமுறைகளையோ எடுத்தியம்ப நீங்கள் என்ன பார்ப்பனரா?
அப்படியே மற்றவர்கள் சுட்டிக் காட்டினாலும் அதனை நீங்கள் மழுப்புவதும் திசை திருப்புவதுமாய் தான் உங்கள் பதிலிருக்கும்.நீங்கள் மதவாதியாய் இருந்தால் எல்லா மதத்தினையும் மதிப்பதும், பகுத்தறிவாளராக இருந்தால் எல்லா மதத்தினரையும் விமர்சிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும்.
உண்மையிலேயே நீங்கள் இஸ்லாமியராய் இருந்து அல்லது இஸ்லாம் மதத்திற்கு பிரச்சாரகராக இருந்து புனை பெயர்களில் எழுதுபவராய் இருப்பின் மேற்கூறியவை உங்களுக்குப் பொருந்தாது. எனகென்னவோ இன்னும் கொஞ்சம் பாரபட்சமற்ற சுய மதிப்பீடு தேவை என்று தோன்றுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//பின்னூட்டம் பெரியசாமி.. said...
அய்யா கோவி.கண்ணன் அவர்களே..
நீங்கள் உண்மையான பகுத்தறிவு வாதி என்று நினைத்து நான் கூட சில நேரங்களில் பின்னூட்டி இருக்கிறேன். மன்னிக்க..
..... //

பின்னூட்டம் பெரியசாமி,
தெளிவாகவே சொல்லி இருக்கிறேன்,நான் பகுத்தறிவு பிரச்சார பீரங்கி அல்ல. உங்கள் பொன்னான நேரம் என்பொருட்டு வீணாக்கியதற்கு வருந்துகிறேன். உங்களைப் போன்று பகுத்தறிவு நலவிரும்பிகளை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு எதுவும் எழுதவில்லை.

உண்மையான பகுத்தறிவாளராக பலர் இருக்கிறார்கள் அதனால் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள், ஏன் நீங்களே கூட உண்மையான பகுத்தறிவாளராக மாறி அனைத்து மதங்களுக்கு அர்சனை நடத்தலாம், அங்கு வந்து பாராட்டி பின்னூட்டமிடுகிறேன்.

அறிவகம் சொன்னது…

நான் எதிர்பார்த்த பதில் தான் வந்திருக்கிறது ஆனால் திரு. வஜ்ரா உங்களிடம் இருந்து இபபடி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை. சரி விஷயத்துக்கு போவேம்.

// இவன் தான் இந்து, இவன் இந்து இல்லை என்று தீர்மானிக்கும் உரிமை யாரிடமும் இல்லாமல் இருப்பது தான் இந்து மதத்தின் சிறப்பு.//

இதுதான் கடவுள். இதில் தான் கடவுள் என தீர்மானமாக சொல்லாமல் இருப்பது தான் இந்து மதத்தின் சிறப்பு.

மதம் என்பது ஒரு ஆன்மீகவாதியின் அடையாளம். அதில் நான் இந்து என சொல்லிக்கொள்வதில் பெருமையே. இந்து என்றால் இஸ்லாமியத்துக்கு எதிரானவனோ, விநாயகரையும் ராமரையும் வணங்குபவனோ அல்ல. இந்திய ஆன்மீகத்தை கடைபிடிக்கும் ஒவ்வொருவரும் இந்து தான்.

இந்திய ஆன்மீக வரலாற்றை ஒதுக்கிவிட்டு இந்துமத வரலாற்றை மட்டும் தேடிப்பாருங்கள் எதுவுமே கிடைக்காது.

மேலை நாட்டவர் தங்கள் ஆன்மீகத்துக்கு ஒரு பெயருடனும் ஒரு வேதத்தோடும் வந்தபோது. அவர்களால் கட்டம் கட்டப்பட்ட ஒன்றுபட்ட இந்திய ஆன்மீகம் தான் இந்து மதம்.

வெளி நாடுகளில் உள்ள இந்தியர்களை இந்தியர்கள் என்று தான் அடையாளப்படுத்துகிறார்கள் ஆனால் அவர்களே இந்தியாவுக்கு வந்தால் தமிழர், மளையாளி, , கன்னடர் என பிரித்துகொள்கிறார்கள். அதே போல தான் இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் இந்தியாவுக்கு வந்தபோது இங்குள்ள ஆன்மீகத்தை மொத்தமாக சேர்ந்து இந்துமதம் என்றார்கள்.

இந்துக்கள் செருப்பையும், கழிவறை¬யும் புனிதமாகவோ, இழிவாகவோ கருதவில்லை என்றுதான் நான் கருதுகிறேன். அதே போல தான் விநாயகரையும்.

ஒருவேளை உங்களுக்கு கழிவறையும் செருப்பும் இழிவானதாக பட்டால் எனது கருத்துக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் மற்றவர்கள் உணர்வை மதிப்பது தான் உண்மையான ஆன்மீகம். அதை தான் இந்துமதம் தாரளமாக போதிக்கிறது.

மாட்டு சாணியை எடுத்து வீட்டு முற்றத்தில் பிள்ளையார் பிடிக்கிறோம். வணங்குகிறோம். அதற்காக அந்த சாணி பிள்ளையாரை காலம் முழுவதும் வாசலிலேயேவா வைத்திருக்கிறோம். ஆற்றில் கரைத்துவிடுவது இல்லையா? அப்படி கரைக்காமல் வாசலிலேயே வைத்திருப்பதை தான் மூட நம்பிக்கை என குறிப்பிடுகிறோம்.

இயேசுவையும் நபிகளையும், பெரியாரையும் அப்படி செருப்பில் பதிப்பதை அந்த நம்பிக்கையாளர்கள் இழிவாக கருதினால் அதை நிச்சயமமாக நாம் மதிக்கவேண்டும்.

இன்று சீனாவில் பாம்பு, நாய் எல்லாம் ருசித்து சாப்பிடுகிறார்களாம். அனால் நமக்கோ கேட்கும்போதை குமட்டுகிறது. சீனர்களுக்கு அதுஅமிர்தம். அவர்களை பார்த்து நாம் குமட்டினால் நம்மை உதைக்க தான் செய்வார்கள். அவர்கள் உணவை நாம் மதித்து தான் ஆகவேண்டும். அவர்கள் உணவை நாம் கழிவு எனசொல்லாகுமா? அதே போல தான் மதங்களும்.

இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் செருப்பிலும் கழிவறையிலும் தங்கள் கடவுள் இருப்பதை இழிவாக கருதுகிறார்கள். அதை நாம் மதித்து தான் ஆகவேண்டும். ஆனால் இந்து மதம் அப்படி சொல்லவில்லை. எங்கும் இறைவனை காணச்சொல்கிறது.

சிலையை கடவுளாக பாவித்து வணங்குவது மூட நம்பிக்கை அல்ல. அந்த சிலை இவர்கள் தான் வணங்கவேண்டும். இந்த இடத்தில் தான் இருக்கவேண்டும், அந்த சிலையே தான் கடவுள் என்பது தான் மூடநம்பிக்கை.

நானே கடவுள் என சொல்வது மூடநம்பிக்கையோ போலியோ அல்ல. ஆனால் நான் தான் கடவுள், நான் மட்டும் தான் கடவுளின் கருவறையில் இருக்கவேண்டியவன் என ஊரை கொள்ளையடிப்பதும், மேஜிக் செய்து ஏமாற்றுவதம் தான் பாவமும் மூடநம்பிக்கையும்.

இஸ்லாமியர்கள் திருப்பி தாக்கிவிடுவார்கள். இந்துக்கள் இளைத்தவர்கள் அதனால் அதன்மீது தைரியமாக சேர்வாரி தூற்றுகிறார்கள் என சொல்வது தவறு.

என் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துவிட்டு தான், நான் அடுத்தவர் கண்ணில் துரும்பு இருக்கிறது என சொல்லவேண்டும்.

தயவுகூர்ந்து இந்து மதத்தை இஸ்லாமியத்தோடும் கிறிஸ்துவத்தோடும் ஒப்பிடாதீர்கள். அப்படித்தான் ஒப்பிடுவீர்கள் என்றால் உங்கள் இந்து மதத்தை மட்டும் விமர்சித்து மற்ற மதங்களை விமர்சிக்காமல் விடுபவர்கள் கோழைகளே.

ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இந்துவானாலும் சரி, கிறிஸ்துவானாலும் சரி, இஸ்லாமியமானாலம் சரி மூடநம்பிக்கைளையும் அடக்குமுறைகளையும் தொடர்ந்து விடாபிடியாக பிடித்துக்கொண்டிருந்தால் காலத்தால் அழிந்துவிடும் என்பது தான் எதார்த்த உண்மை. அதற்கு ஒரே சான்று அர்த்தமுள்ள இந்திய மதம். இதுகுறித்து அறிவகம் கட்டுரை தொடரில் ஆதாரங்களுடன் குறிப்பிடுறேன்.

நண்பரே ஒரு வருத்தம்: நான் சொன்ன கருத்துண்மையை விட்டுவிட்டு உதாரணத்தை மட்டும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளீர்களே இந்துமதம் இளைத்ததற்கான காரணமும் இது தான்.

நான் அந்த பின்னூட்டத்தை எழுதும்போதே என் கணவர் குறுக்கிட்டார். விநாயகரை பற்றி எழுதியதை எடுத்து விடு. ஏனெனில் கருத்தை புரிந்து கொள்ளாமல் அந்த காரணத்தை மட்டுமே விவாதிப்பார்கள். உண்மைக்கான விவாதம் திசைதிருப்பபட்டுவிடும் என்றார். மனிதர்கள் உணர்ச்சிவசப்படவேண்டும் அப்போது தான் உண்மையை புரிந்துகொள்வார்கள் என நான் தான் பிடிவாதமாக எழுதினேன்.

என் கணவர் சொன்னது சரியோ என இப்போது யோசிக்க தோன்றுகிறது.

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் அந்த பின்னூட்டத்தை எழுதும்போதே என் கணவர் குறுக்கிட்டார். //

அறிவகம் பதிவர் அவர்களே,

முந்தைய மறுமொழியில் அறிவகம் ஐயா என்று குறுப்பிட்டுவிட்டேன் மன்னிக்க.

உண்மையான ஆன்மிகவாதிகள் இந்துத்துவா வாதிகளுடன் போராடிக்கொண்டு இருக்க வேண்டியது அல்ல, அவர்கள் கட்டிக்காக்க நினைப்பது இறை புகழையோ, ஆன்மிகத்தையோ அல்ல, மதமும் சாதீய அடுக்கு முறைகளைத்தான். அதனால் தான் இவர்களுக்கு பதில் சொல்வது வீண் என்றே வீட்டுவிட்டேன்.

வஜ்ரா சொன்னது…

//
அதனால் தான் இவர்களுக்கு பதில் சொல்வது வீண் என்றே வீட்டுவிட்டேன்.
//

உங்களிடம் பதில் இல்லை என்ற உண்மையை ஏன் ஒரு நல்ல பகுத்தறிவாளன் போல் போட்டு உடைக்கக்கூடாது.

எதற்கு இந்துத்வா முத்திரை குத்துகிறீர்கள் ?



நான் ஒரு இந்துத்வா இயக்கத்தின் ஆபீஸ் பியரர் அல்ல. நான் என் சுய சிந்தனையுடனேயே 3 முறை தி.மு.க வுக்கு வாக்களித்துள்ளேன்.


//
நானே கடவுள் என சொல்வது மூடநம்பிக்கையோ போலியோ அல்ல. ஆனால் நான் தான் கடவுள், நான் மட்டும் தான் கடவுளின் கருவறையில் இருக்கவேண்டியவன் என ஊரை கொள்ளையடிப்பதும், மேஜிக் செய்து ஏமாற்றுவதம் தான் பாவமும் மூடநம்பிக்கையும்.
//

சரி.

நான் தான் கடவுள் மற்ற கடவுள் எல்லாம் பொய்க்கடவுள் என்று சொல்லும் புத்தகத்தை நம்பும் கூட்டம் நல்லவர்களா ? மூட நம்பிக்கை கொண்டவர்களா ?

//
என் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துவிட்டு தான், நான் அடுத்தவர் கண்ணில் துரும்பு இருக்கிறது என சொல்லவேண்டும்.
//

அதை எடுக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு கண்ணைக் குருடாக்கி விடாமல் இருந்தால் சரி. அந்தக்கண் குருடாகவேண்டும் என்று சிலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உணருங்கள்.

பெரியாரை நான் நேரில் பார்த்தது இல்லை. ஆனால், ஒரு சமூகத்தை மட்டுமே குறிவைத்துத் தாக்கினால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தியவர் அவர். அவரால் சாதியை ஒழிக்கவே முடியவில்லை. அவர் கொள்கைகளை முழுவதும் கடைபிடிப்பதால் சாதி ஒழியாது என்பதும் இன்று வெளிச்சமாகியுள்ளது.
இன்னும் அவரைத் தலையில் வைத்து ஆடும் கூட்டம் பகுத்தறிவுக்கூட்டமா ?


பெரியாரை அவர் கொள்கைக்கு விரோதமாக தெருவுக்குத் தெரு சிலை வைத்து, அதில் சந்தனம் பூசுபவனைக் கைது செய்வதில் என்ன பகுத்தறிவு உள்ளது ?




நான் பெரியாரின் கொள்கையைக் கரைத்துக் குடித்தவன், நான் அவனது மாமன், மச்சான், தமையன், தமையனின் பேரன் என்பவனெல்லாம் தான் இன்று பகுத்தறிவுப் பகலவர்கள். பகுத்தறிவுக்கூட்டத்தின் தலைவர்கள். இதில் நான் போலிப்பகுத்தறிவாளன் என்று பெருமை வேறு பட்டுக் கொள்வது.

பகுத்தறிவுக் கொள்கையையே மறுவாசிப்பு செய்யவேண்டிய நேரம் இது. கோவிலுக்குள் கூட்டம் அதிகரித்துள்ளது என்பது இதைத்தான் உணர்த்துகிறது. உணர மறுப்பவர்கள் ஆறிவகம் அவர்கள் சொல்வது போல் அழிந்து போவார்கள்.

Vishwa சொன்னது…

"இன்று சீனாவில் பாம்பு, நாய் எல்லாம் ருசித்து சாப்பிடுகிறார்களாம். அனால் நமக்கோ கேட்கும்போதை குமட்டுகிறது. சீனர்களுக்கு அதுஅமிர்தம். அவர்களை பார்த்து நாம் குமட்டினால் நம்மை உதைக்க தான் செய்வார்கள். அவர்கள் உணவை நாம் மதித்து தான் ஆகவேண்டும். அவர்கள் உணவை நாம் கழிவு எனசொல்லாகுமா? அதே போல தான் மதங்களும்."



எல்லமதத்தையும் மதித்தல் இந்திய இறயான்மையின் மிகச்சிறந்த தத்துவம்.ஆனால் எனது மதத்துக்குள் இருந்துகொண்டு எனதுமதத்தையே விமர்சணம் பண்ணுவது எப்படி ஏற்றுகொள்வது.தவறு இருக்கிறதா?உள்ள வந்து வேலை செய்யுங்கள்...களையை பிடுங்கிதூரபோடுங்கள்.இன்று சாதிய கொடுமைகள், மூடபழக்கம் என்று கூப்பாடு போடும் அனைவரும் ராமானுஜரை மறந்தது எதனால்?அன்று அவர் "ஆண்டவன் படைப்பில் எவனும் உயர்ந்தவன் இல்லை தாழ்ந்தவன் இல்லை, ஆகவே தாழ்த்தப்பட்டவராக கருதப்படும் அனைவரும் இன்றுமுதல் பிராமணனே" என்று கூறி பூணுல் அணிவித்து தன்னுடன் சேர்த்துக்கொண்டு சென்றதை மட்டும் மறந்தால் எப்படி? சீனாவில் உள்ள புத்தனை கண்டால் மனமிருங்கும் நம்மவர்கள், இன்று இந்தியாவில் "கருத்து சுதந்திரம்" என்ற பெயரால் ஒவொரு பிராமணனும்,செட்டியாரும்,முதலியாரும்,தேவனும்,வன்னியநையும் சிறுமையாக பேசுவதில் எங்கே உள்ளது நியாயம்?



"என் கண்ணில் இருக்கும் துரும்பை எடுத்துவிட்டு தான், நான் அடுத்தவர் கண்ணில் துரும்பு இருக்கிறது என சொல்லவேண்டும்."



அப்படி பார்த்தால் இங்கே பெரியார் வகுத்த பகுத்தறிவு காணாமல் போய்விடும். (நான் இங்கு குறிப்பிடுவது நண்பர் கண்ணனை மட்டுமே). நீங்கள் பெரியாரின்படி வந்தவர்..உங்களுக்கு சாதி,மொழி,இனம்,மதம் என்ற அனைத்துவிதமான கட்டுபாடுகள் கிடையாது. அப்படி பார்க்கும்போது எந்த மாதத்தில் தீங்கு இருந்தாலும் நீங்கள் போராடவேண்டும் அல்லவா. அப்படி செய்யாமல் நீ இந்து ,ஆதிக்க சக்தி என்று சொல்வதில் என்ன பயன். ஒன்று நீங்கள் உண்மையான பகுதறிவுவாதியாக அனைத்து மததில்லுள்ள குறைகளை சாடுங்கள். இல்லை "நான் பகுத்தறிவுவாதியல்ல...எனக்கு இந்து மதம் மட்டுமே எதிரி என்று கூறிவிட்டு போகவேண்டியதுதானே" .அதைவிட்டுவிட்டு என்முதுகை நான் சுத்தம்செய்யவே ஆசை படுகிறேன் என்று சொல்வதில் நேர்மை இல்லை. அப்படி உங்கள்முதுகை மட்டும் பார்பவராயின் ஹிந்து மாதத்தில் உள்ள குறைகளை மட்டும் பார்த்ததோடு நிறுத்தாமல் அதில் உள்ள மற்ற நல்ல விஷயத்தையும் பார்கவேண்டும்(இது கண்ணனுக்கு மட்டுமில்லை,அவரை போன்று பெரியாரிசம் பேசும் அனைத்து பெரியவர்களுக்கும்)

அன்புடன்..
விஷ்வா

Vishwa சொன்னது…

"இன்று சீனாவில் பாம்பு, நாய் எல்லாம் ருசித்து சாப்பிடுகிறார்களாம். அனால் நமக்கோ கேட்கும்போதை குமட்டுகிறது. சீனர்களுக்கு அதுஅமிர்தம். அவர்களை பார்த்து நாம் குமட்டினால் நம்மை உதைக்க தான் செய்வார்கள். அவர்கள் உணவை நாம் மதித்து தான் ஆகவேண்டும். அவர்கள் உணவை நாம் கழிவு எனசொல்லாகுமா? அதே போல தான் மதங்களும்."


ஆனால் பிராமணர்கள் பேசும் மொழி,உணவு, கலாச்சாரம்,இசை, குடுமி,பஞ்சகச்சம்,பூணுல் என்று எதனையும் நம்மவர்கள் விடமாட்டார்கள். சரி அப்படி கேலி பேசுவோரை என்ன பண்ணலாம் அறிவகம் மேடம்!!!!?????உங்களுக்கு இப்போது குமட்டவில்லயா!!!?

அன்புடன்....
விஷ்வா

கோவி.கண்ணன் சொன்னது…

//Vajra said... கோவிலுக்குள் கூட்டம் அதிகரித்துள்ளது என்பது இதைத்தான் உணர்த்துகிறது. //

Vajra,

கோவிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் சேருவது ஏன் ?
:)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எவ்வளவு வேகமாக எழுதுவீர்கள் கோவியாரே?

ஆச்சர்யப்பட வைக்கிறீர்கள்!

ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் தனியாக ஒரு பதிவு எழுதக்கூடிய திறமைசாலி!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்