பின்பற்றுபவர்கள்

26 செப்டம்பர், 2008

வால்பையனும் ஞானும் !

சிலரின் எக்ஸ்ட்ரீம் இமேஜினேசன் இதனால் பாதிக்கப்படுபவர் சிலர் உண்டு, நான் ஒரு பதிவருக்கு நெருக்கமாக இருந்ததால் அவரது செயலெல்லாம் எனக்கு தெரிந்திருக்கும், தெரிந்தே ஒப்புக் கொள்ள மறுக்கிறேன் என்று கதை கட்டிவிடப்பட்டது. அதை நிராகரித்துவிட்டேன். ஏனென்றால் அதை மறுப்பதாலோ, ஒப்புக் கொள்வதாலோ ஒரு செல்லாக் காசு அளவுக்குக் கூட எனக்கு தனிப்பட்ட பயனில்லை. சம்பந்தப் பட்டவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று ஒதுங்கியாச்சு.

வால்பையன் வலைப்பதிவு எழுத வந்த போது இப்படித்தான், அவர் யாரோட நண்பராக இருக்கிறார் என்று அவர் வெளிப்படுத்தியதால் அவருக்கு இன்றும் பிரச்சனை. ஏற்கனவே ஒரு நபர் என்னுடன் நண்பராகப் பழகியது, மூர்த்தியுடன் எனக்கு இருந்த தொடர்பை வேவு பார்க்கத்தான் என்று சொல்லியதாலும் கொஞ்சம் எச்சரிக்கையாகி, வால்பையன் இன்னாருக்கு நண்பர் என்று அறிந்ததால், வால்பையனின் பதிவுகளைக் கூட படிப்பதில்லை நான். அவரும் பழகுவது போல் பழகி 'வேவு' பார்த்ததாகச் சொல்லிவிட்டால் ? என்கிற கற்பனையில், அவரது பதிவுக்கு பின்னூட்டம் இடுவதையும் படிப்பதையும் தவிர்த்து வந்தேன்.

இடையில் பரிசல் குழுவில் இருந்தவர்கள் நண்பர்களாக பழக ஆரம்பித்தப் பிறகு, அவர்களுக்குள் அனுப்பிய தொடர் மின் அஞ்சலில் என்னையும் இணைத்திருந்தனர். அந்த குழுவில் இருந்தவர்கள் பலரும் என்னுடன் ஜிமெயில் சாட்டிற்கு வந்தனர். எனது மின் அஞ்சலில் Chat செய்ய விருப்பம் தெரிவித்து யாராவது கேட்டால் மட்டுமே அனுமதிப்பேன். ஐடி மட்டும் தான் வரும், அதன் பிறகு அவர்களது பெயரைக் கேட்ட பிறகு உரையாடுவதுண்டு.

இப்படித்தான் ஒருமுறை அனானியாக ஒருவர் வந்து உங்களிடம் முக்கியமான ஒன்றைப் பேசனும் என்று சாட் பண்ணக் அழைத்தார், யார் என்று கேட்டேன், யாருங்கிறது முக்கியமில்லை, சொல்லப் போறத்
தகவல் தான் முக்கியம் என்றார். ஒரு வேளை எங்க பாஸ் தான் மாறுவேசத்தில வந்து உனக்கு வேலைப் போச்சுன்னு சொல்லப் போறாரு என்று நினைத்து சரி இருக்கட்டும் என்று சாட்டுக்கு ஒத்துக் கொண்டேன்.

சாட்டில் வந்த அனானி நபர் 'மூர்த்தி கம்பி எண்ணுகிறான், நீயும் உள்ளப் போகப் போறே... மூர்த்தி பாஸ்போர்டை முடக்கியாச்சு தெரியும்ல... போலி டோண்டுவாக எழுதியது அவன் தான் என்று மூர்த்தியே வாக்கு மூலம் கொடுத்து இருக்கான், ஆடியோ அனுப்புகிறேன் கேட்கிறியா?... மூர்த்தி, வசந்தம் ரவி, ரத்னேஷ் ஆகிய மூவரும் ஒண்ணுதான் உனக்கு தெரியவே தெரியாதா ?' மூன்று பேருமே ஏப்ரல் மாதத்திற்கு பிறகு ஒரே நேரத்தில் எப்படி பதிவில் இருந்து காணாப் போனாங்க ?, மூவரும் ஒருவரே என்று உனக்கு நல்லாத் தெரியும் நடிக்காதே, உன் பேரையும் எப்ஐஆரில் சேர்த்திருக்காங்களாம், ஆனால் சேர்த்தது ரவி இல்லை' என்றார்

மனதுக்குள் சிரிப்பே வந்தது, வசந்தம் ரவி யாரென்று எனக்கு உண்மையிலேயே தெரியாது, ரத்னேஷ் என்னுடன் பழகுபவர், மின் அஞ்சல் வழி அவரிடம் உரிமை எடுத்துக் கொண்டு 'அண்ணன்' என்று அழைக்கும் தனிப்பட்ட பழக்கம் உண்டு, மூர்த்தியையும் நன்கு தெரியும் என்பதால்...சரி நாமலும் கொஞ்சம் விளையாடாலாம் என்று

'சரிங்க சாமி போலிஸ் என்றால் எனக்கு ஒண்ணுக்கு வரும், நீங்க ரொம்ப பயமுறுத்தாதிங்க, சூட்கேசில் பணம் தேவைப்பட்டாச் சொல்லுங்க, இரவு 12 மணிக்கு பாழடைந்த மண்டப்பத்துக்கு வந்து தருகிறேன், யாருக்கும் தெரியாமல் தனியாளாக வருகிறேன், கருப்புத் துணியை கண்ணில் கட்டிக் கொண்டு வந்துடுங்கோ... பணத்தை வாங்கிட்டு என்னைய மன்னிச்சி விட்டுட்டுங்க'
என்றேன்.

அதோட அந்த நபர் எஸ்கேப். அதன் பிறகு அந்த நபரின் ஐடியை மின் அஞ்சலில் இருந்து நீக்கிவிட்டேன். அனானியாக வந்து எச்சரிக்கைச் செய்யும் அளவுக்கு எம்மேலத்தான் எம்புட்டு கரிசனம்.

மேலே விட்ட இடத்திலிருந்து... பரிசல் குழுவில் இருந்து முதன் முதலில் வால்பையன் சாட்டிற்கு அழைத்தார், இரண்டு மூன்று முறை அனுமதி அளித்தும் அவர் பெயருக்கு நேராக பச்சை சிக்கனல் வரவில்லை, எதோ ஜிமெயில் கோளாறு என்றே நினைக்கிறேன். அதன் பிறகும் வால்பையன் 2 - 3 தடவை ரெகொஸ்ட் அனுப்பினார். என்ன செய்தும் அவரது சாட் ரெகொஸ்ட் சேர்க்க முடியவில்லை. 'டோண்டுவின் நண்பர் என்பதால் கோவி.கண்ணன் சாட் ரெகொஸ்டை ரிஜெக்ட் பண்ணுகிறாரோ...?' என்று வால்பையன் தப்பாக நினைத்துவிடுவாரே... சரி அவருக்கும் நமக்கும் என்ன பிரச்சனை ஒண்ணும் இல்லை, மின் அஞ்சலைப் போடுவோம் என்று போட்டேன், 'வால்பையன்..,எதோ ஜிமெயில் பிரச்சனையால் உங்க சாட் ரெகொஸ்ட் ஆட் ஆக மாட்டேன்கிறது...இப்ப நான் என்ன செய்ய ? ( விழிகளை உருட்டியபடி தம்பிபட மாதவன் மாதிரி கேட்க) ஒண்ணும் செய்யவேனாம், மின் அஞ்சல் தொடர்பு இருந்தால் போதும், இப்ப அனுப்பி இருக்கிங்க... ரெகொஸ்ட் அக்ஸபட் பண்ணினால் சாட் தானாக அனுமதித்துவிடும் என்றார். அப்பறம் சரியாகிவிட்டது.

"உங்களுக்கும் எனக்கும் வாய்க்காத் தகறாரா ? ஆனால் நாம யாருக்கு நண்பராக இருந்தோம் என்பதை வைத்து .... ஒருவருக்கு ஒருவர் எதிரி மாதிரி நினைக்கும் படி ஆகிவிட்டதே...எதிரிகள் அவர்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள் நமக்கு அவர்களில் யாருமே எதிரி இல்லையே ?"

"ஆமாங்க நீங்கச் சொல்வது சரிதான்... நாம ஒருவருக்கொருவர் தெரியாமலேயே எதிரிகளாக நினைத்துக் கொள்ளும் படி ஆகிவிட்டது...வருத்தமாகத்தான் இருக்கு" என்றார்

நேற்று 100 ஆவது பதிவிற்காக சிலவற்றை மனம் திறக்கிறேன் என்ற தலைப்பில் எழுதி இருந்தார். அது குறித்து நான் அவருடன் உரையாடியது

12:11 AM me: என்ன ஆச்சு ?
ஏன் புலம்பி தள்ளி இருக்கிங்க
12:12 AM வால்பையன்: rentu naalaa thookkame illa
12:13 AM me: அடடே
இதுக்கெல்லாம் அலட்டிக்கலாமா
வால்பையன்: cornar panraanungka
engka ponaalum seenturaanungka
me: உங்களுக்கும் எனக்கும் ஒரே பிரச்சனைதான், நான் மூர்த்தியுடன் பழகியதால் என்னை தாக்கினார்கள், நீங்கள் டோண்டுவுடன் பழகுவதால் உங்களைத் தாக்குகிறார்கள்
12:14 AM வால்பையன்: irukkalaam
me: நான் கூட உங்களை தமாதமாகத்தான் புரிந்து கொண்டேன். அவர்களும் புரிந்து கொள்வார்கள் வருந்தாதீர்கள்
வால்பையன்: nanri thalaivaa
12:15 AM me: :) நம்ம பிரச்சனை நமக்கு தெரிகிறது, நமக்கு நாம் தான் ஆறுதல் பட்டுக்கொள்ள முடியும், நன்றியெல்லாம் எதுக்கு... லூஸில் விடுங்க
வால்பையன்: intha aaruthal koota evanum sollalaiye
12:16 AM me: ஏனென்றால் நானும் உங்களை மாதிரி அடிபட்டு இருக்கிறேன்,வலி தெரியும்
வால்பையன்: unmai thaan

************

பல கருத்து வேறுபாடுகள், கற்பனைகளால் ஏற்படுவது தான். இருபக்க ஈகோ காரணமாக அவை அப்படியே இருக்கும். எவனோ எவனுக்கோ நண்பராக இருக்கும் போது பிரச்சனை இல்லை, ஆனால் அவனுங்களுக்கு நாமளும் நண்பராக இருந்து தொலைந்து, அவனுங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டால் நம்ம தலையைப் போட்டு உருட்டுவானுங்க. இதுபோன்ற சிலரால் தனித் தனியாக நல்ல...இல்லை கெட்ட அனுபவம் பெற்றது வால்பையனும், ஞானும் !

நீதி : தெரியாத ஒருவரைப் பற்றி தவறாக நினைப்பது மிகப் பெரிய தவறு.

36 கருத்துகள்:

இனியா சொன்னது…

arumai kovi avargale!!!!

குடுகுடுப்பை சொன்னது…

கருத்து வேறுபாடுகளை மறந்து வால் தனது வாலாட்டத்தை தொடர வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

எனக்கும் இதே கருத்துத்தான் கோவி. ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளத்தைப் பொறுத்தி விடுகிறோம். பின் அவர்கள் சொல்லுவது எழுதுவது எல்லாம் அந்த அடையாளம் மூலம் பொருள் கொள்ளப் படுகிறது; உண்மையான பொருள் வேறாக இருக்கும்.


இதிலிருந்து விடுபட்டு கருத்து அளவில் மோதலோ, விவாதமோ நடந்தால் நல்லது. தனிநபர் தாக்குதல் நல்லதல்ல.

வெண்பூ சொன்னது…

இதுல இவ்ளோ அரசியலா கோவி.கண்ணன்? நிஜமாகவே உங்கள் தலை உருட்டப்பட்டதெல்லாம் எனக்குத் தெரியாது. காரணம் நான் பதிவுகளை படிக்க ஆரம்பித்த போது மூர்த்தி பிரச்சினை ஏற்கனவே முடிந்திருந்தது.

உங்களுக்கு பாராட்டுக்கள், வால்பையனுக்கு ஆறுதல் கூறியதற்காக. காரணம் நேற்று அவர் என்னிடம் பேசும்போது உங்களிடம் சொன்னதையேத்தான் கூறினார். எனக்கு பிரச்சினையின் வீரியம் புரியாததால் சிரித்துக்கொண்டே "அதெயெல்லாம் தொடச்சிட்டு போயிட்டே இருங்க" என்றேன். :(

இன்று அந்த பதிவை பார்த்ததும் அவர் மேல் கோபம்தான் வந்தது. அழைத்து பேசியபோது, "இப்போ தெளிவாயிடுச்சி பாஸ்" என்றார். சந்தோசமாக இருந்தது.

எதற்கும் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கேன். நான் உண்டு என் மொக்கை உண்டுன்னு.. :)

சென்ஷி சொன்னது…

//எதற்கும் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கேன். நான் உண்டு என் மொக்கை உண்டுன்னு.. :)//

ஹா..ஹா.. சூப்பரப்பு :))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வால்ப்பையன்
பிஞ்சு மனசுக்கு சொந்தக்காரரோ?

தங்களின் ஆறுதல் பதிவால் தேறுதல் பெறவேண்டும்.

பின்னூட்டத்தை யாரும் வெளியிடவில்லை என்றால் ஒன்னும் குடி முழுகிப் போய்விடாது.

இதுக்கெல்லாமா கவலைப்படுவது.

பிரச்சனையைப் பிரச்சனைக்கு வெளியே இருந்து
அணுகச்சொல்லுங்கள்!
பிரச்சனை முடிஞ்ச மாதிரி!!

வால்பையன் சொன்னது…

//அவர் யாரோட நண்பராக இருக்கிறார் என்று அவர் வெளிப்படுத்தியதால் அவருக்கு இன்றும் பிரச்சனை. //

நான் நிறைய பேரிடம் நண்பராக இருந்தேன். அதெல்லாம் அவர்களுக்கு பிரச்சினை இல்லை, அந்த குறிப்பிட்ட நபரிடம் நட்புடன் இருந்தது தான் அவர்களுக்கு பிடிக்கவில்லை

வால்பையன் சொன்னது…

//சூட்கேசில் பணம் தேவைப்பட்டாச் சொல்லுங்க, இரவு 12 மணிக்கு பாழடைந்த மண்டப்பத்துக்கு வந்து தருகிறேன், //

பணம் கேட்டா கொடுப்பிங்களா, அவ்ளோ நல்லவரா நீங்க

வால்பையன் சொன்னது…

//வால்பையன்: intha aaruthal koota evanum சொல்லலையே//

இந்த வார்த்தையை டைப் அடித்த மறு நொடியிலிருந்து சாட்டிலும் அலைபேசியிலும் நண்பர்கள் வெளுத்து வாங்கி விட்டார்கள், ஆறுதலும் கூடவே திட்டும்.

இப்போது அடித்து சொல்லுவேன்.
ப்ளாக்கினால் நான் பெற்ற நண்பர்கள்

ஒவ்வொருவரும் ஒரு வைரத்துக்கு
சமம்.

இந்த உலகிலேயே நான் தான் பெரிய பணக்காரன் என்பதை இங்கெ பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்

வால்பையன் சொன்னது…

பதிவாக இட்டதற்கு நன்றி நண்பரே

விஜய் ஆனந்த் சொன்னது…

:-((((....

Athisha சொன்னது…

;-( இதுல நான் கருத்து சொல்ற அளவுக்கு இன்னும் வளரல அண்ணா

அதனால உங்கள் கருத்தை மட்டும் வழிமொழிகிறேன்

நையாண்டி நைனா சொன்னது…

ஐயா.. வாலாரே.... அண்ணன் கோவி மூலமா உங்களுக்கு ஒரு தத்துவம் சொல்றேன், கேட்டுக்கோங்க...
" சின்ன பிரச்சினை நம்மை ஒண்ணும் பண்ணாது, பெரிய பிரச்சினைய நாம ஒண்ணும் பண்ண முடியாது "
எதற்கும் கலங்காதிருங்கள்.

நல்ல நண்பர்களும், நல்ல கருத்துகளும் கூடவே இருப்பதனால் ஏற்றம் வரும்.

george சொன்னது…

//இதுல நான் கருத்து சொல்ற அளவுக்கு இன்னும் வளரல அண்ணா//

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான் வளர்ச்சின்னு ....சொன்னாங்க நீங்க எப்படி ?...


வளந்த பிறகு கருத்து சொல்ல முடியாது ...வெறும் அறிவுரை தான் கொடுக்க முடியும்...

அதனால இப்பவே சொல்ல வந்ததை சொல்லிடுங்க ...இதுக்காக இன்னொரு பதிவு போட்டுடாதீங்க

புதுகை.அப்துல்லா சொன்னது…

//எதற்கும் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கேன். நான் உண்டு என் மொக்கை உண்டுன்னு.. :)
//
வெண்பூவும்,நானும் பின்னே மொக்கையும்..... :)

rapp சொன்னது…

me the 16th?

பரிசல்காரன் சொன்னது…

பலசமயம் வால்பையன் ஒரு குழந்தையை மாதிரிதான். என்னோட வேறொரு நண்பர் சொன்னாரு, எத்தனியோ பேர் தண்ணியடிச்சாலும் ‘ஆமா, நான் வீக் எண்ட்ல தண்ணியடிக்காம இருக்கறதில்ல. மறக்க முயற்சி பண்ணிகிட்டிருக்கேன்' ன்னு சொல்லக் கூடிய தைரியம் வாலுக்கு மட்டும்தான் இருக்கு'ன்னு. அவ்வளவு திறந்த புத்தகம் இவரு.
எல்லாத்தையும் ஒத்துக்கற நான் எதுக்கு வேற பேர்லயெல்லாம் ப்ளாக் எழுதப் போறேன்னு புலம்புறாரு!

அப்படி வேற பேர்ல எழுதறவராயிருந்தா, லக்கிக்கு எதிரா எழுதின கட்டுரையையும் அந்த ப்ளாக்லயே அவரு போட்டிருக்கலாமே!


இந்தப் பிரச்சினைல இவரு பேர் வந்ததுல இவரைவிட, எனக்கு வருத்தம் அதிகம். :-(

ஏன்னா, சம்பந்தப்பட்ட எல்லார்கிட்டயும் நான் பழகிட்டிருக்கேன்.

சிலதையெல்லாம் நெனைச்சா நெஜமாவே மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு கண்ணன். உங்க பிரச்சினைகளை எப்படி எதிர்கொண்டு, இன்னும் தளராம பதிவு போட்டுட்டு இருக்கீங்கன்னு நெனைச்சா பிரமிப்பா இருக்கு!

(அவருகிட்ட அனுமதி கேட்டு, அவரோட மனம் திறக்கிறேனை எதிர்பதிவு போட்டு வெச்சிருக்கேன்! ப்டிச்சுட்டு ஃப்ரீயாய்டுவாரு வுடுங்க!)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//வால்பையனும் ஞானும் !//

நாட்டுக்கு போய் வந்த களை இன்னும் மாறலை போல?
செரிக்கி சம்சாரிக்கணும் பின்னே!
நேக்கு உரு ஸமுஸியம் உண்டு?

கோவி.கண்ணன் சொன்னது…

//சிலதையெல்லாம் நெனைச்சா நெஜமாவே மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு கண்ணன். //

பரிசல்,
உங்கள் வருத்தத்தை நம்ப மாட்டேன், வால்பையன் மாதிரி யார் மீதாவது சத்தியம் பண்ணுங்க, யாரும் கிடைக்கவில்லை என்றால் வடகரை அண்ணாச்சி மீது சத்தியம் பண்ணுங்க
:)

anujanya சொன்னது…

நல்ல பதிவு கோவி. அவ்வப்போது வந்துகொண்டிருக்கும் புதுப் பதிவர்களுக்கு (உங்களுடைய செல்லப்பிள்ளைகள்) திரும்பத் திரும்பப் பதிவிட்டு உணர்த்த வேண்டிய விடயங்கள். எங்களுக்கெல்லாம் .. எதற்கு வம்பு.. எனக்கெல்லாம் வயதுதான் ஆகிறது. உங்களுக்கு அணுகுமுறையில் முதிர்ச்சி உள்ளது. Hats off.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

கருத்து கந்தசாமி எனக் கொண்டாலும், இம்மாதிரியான கருத்துகள் தேவைதானே கோவி!

நல்லா இருந்துச்சு பதிவு.

பரிசல்காரன் சொன்னது…

அண்ணாச்சி மேல உங்களுக்கு அப்படி என்ன கொலைவெறி?

கோவி.கண்ணன் சொன்னது…

//இனியா said...
arumai kovi avargale!!!!
//

இனியா நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
கருத்து வேறுபாடுகளை மறந்து வால் தனது வாலாட்டத்தை தொடர வாழ்த்துக்கள்.
//

:)) ஒரு குவாட்டரோடு தொடருவார்

கோவி.கண்ணன் சொன்னது…

// வடகரை வேலன் said...
எனக்கும் இதே கருத்துத்தான் கோவி. ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளத்தைப் பொறுத்தி விடுகிறோம். பின் அவர்கள் சொல்லுவது எழுதுவது எல்லாம் அந்த அடையாளம் மூலம் பொருள் கொள்ளப் படுகிறது; உண்மையான பொருள் வேறாக இருக்கும்.


இதிலிருந்து விடுபட்டு கருத்து அளவில் மோதலோ, விவாதமோ நடந்தால் நல்லது. தனிநபர் தாக்குதல் நல்லதல்ல.

11:55 PM, September 26, 2008
//

அண்ணாச்சி சொன்ன பிறகு அப்பீல் ஏது !

நன்றி அண்ணாச்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
இதுல இவ்ளோ அரசியலா கோவி.கண்ணன்? நிஜமாகவே உங்கள் தலை உருட்டப்பட்டதெல்லாம் எனக்குத் தெரியாது. காரணம் நான் பதிவுகளை படிக்க ஆரம்பித்த போது மூர்த்தி பிரச்சினை ஏற்கனவே முடிந்திருந்தது.//

வெண்பூ,

அப்படியா ? இடது பக்கம் "போற்றுவோர் போற்றலும்" என்ற தலைப்பில் 4 இடுகைகளின் இணைப்பு இருக்கும் படிச்சு பாருங்க, ஹிஸ்டரி எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள், ஆனால் பைசாவுக்கு பயனில்லை.

//எதற்கும் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கேன். நான் உண்டு என் மொக்கை உண்டுன்னு.. :)//

விதி சமயத்தில வீட்டு வாசலில் வந்து நிற்கும், நாமாக விரும்பிப் போறதில்லை.


உங்களுக்கு பாராட்டுக்கள், வால்பையனுக்கு ஆறுதல் கூறியதற்காக. காரணம் நேற்று அவர் என்னிடம் பேசும்போது உங்களிடம் சொன்னதையேத்தான் கூறினார். எனக்கு பிரச்சினையின் வீரியம் புரியாததால் சிரித்துக்கொண்டே "அதெயெல்லாம் தொடச்சிட்டு போயிட்டே இருங்க" என்றேன். :(

இன்று அந்த பதிவை பார்த்ததும் அவர் மேல் கோபம்தான் வந்தது. அழைத்து பேசியபோது, "இப்போ தெளிவாயிடுச்சி பாஸ்" என்றார். சந்தோசமாக இருந்தது.

எதற்கும் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கேன். நான் உண்டு என் மொக்கை உண்டுன்னு.. :)

11:59 PM, September 26, 2008
//

கோவி.கண்ணன் சொன்னது…

//சென்ஷி said...
//எதற்கும் நான் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கேன். நான் உண்டு என் மொக்கை உண்டுன்னு.. :)//

ஹா..ஹா.. சூப்பரப்பு :))

12:13 AM, September 27, 2008
//

சென்ஷி உங்கள் ஹியூமர் சென்ஷுக்கு ஒரு :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
வால்ப்பையன்
பிஞ்சு மனசுக்கு சொந்தக்காரரோ?..//

ஆமாம் ரொம்ப பிஞ்சு மனசுக்காரர், பாலுக்கு பதில் பீரு குடிச்சு நாக்கு தான் கெட்டுப் போச்சுதாம்.

:)))


//பிரச்சனையைப் பிரச்சனைக்கு வெளியே இருந்து
அணுகச்சொல்லுங்கள்!
பிரச்சனை முடிஞ்ச மாதிரி!!

12:18 AM, September 27, 2008
//

பிரச்சனையை அனுகத்தேவை இல்லை லூசில் விட்டாலே சரியாகிடும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
நான் நிறைய பேரிடம் நண்பராக இருந்தேன். அதெல்லாம் அவர்களுக்கு பிரச்சினை இல்லை, அந்த குறிப்பிட்ட நபரிடம் நட்புடன் இருந்தது தான் அவர்களுக்கு பிடிக்கவில்லை

12:57 AM, September 27, 2008
//
நீங்கள் யாருக்கு நண்பராக இருக்கிங்க என்பது பிரச்சனை இல்லை, யாருக்கு நண்பராக இருக்கக் கூடாதுங்கிறது தான் பிரச்சனை. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...

பணம் கேட்டா கொடுப்பிங்களா, அவ்ளோ நல்லவரா நீங்க

12:57 AM, September 27, 2008
//

:))) அதுக்காக குவாட்டருக்கெல்லாம் காசு தரமுடியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன்: intha aaruthal koota evanum சொல்லலையே//

இந்த உலகிலேயே நான் தான் பெரிய பணக்காரன் என்பதை இங்கெ பெருமையாக சொல்லிக்கொள்கிறேன்

12:57 AM, September 27, 2008
//

அடுத்தது சூட்கேசில் பணத்தை எடுத்துக் கொண்டு இரவு 12 மணிக்கு பாழடைந்த பங்களாவுக்கு அடுத்துப் போகப் போவது நீங்களா ? வாழ்த்துகள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிஷா said...
;-( இதுல நான் கருத்து சொல்ற அளவுக்கு இன்னும் வளரல அண்ணா

அதனால உங்கள் கருத்தை மட்டும் வழிமொழிகிறேன்

1:37 AM, September 27, 2008
//

அதிஷா நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
ஐயா.. வாலாரே.... அண்ணன் கோவி மூலமா உங்களுக்கு ஒரு தத்துவம் சொல்றேன், கேட்டுக்கோங்க...
" சின்ன பிரச்சினை நம்மை ஒண்ணும் பண்ணாது, பெரிய பிரச்சினைய நாம ஒண்ணும் பண்ண முடியாது "
எதற்கும் கலங்காதிருங்கள்.

நல்ல நண்பர்களும், நல்ல கருத்துகளும் கூடவே இருப்பதனால் ஏற்றம் வரும்.

1:39 AM, September 27, 2008
//

உங்களுக்கு பட்டம் ரெடியாகுதாம் கேகே 3.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
கருத்து கந்தசாமி எனக் கொண்டாலும், இம்மாதிரியான கருத்துகள் தேவைதானே கோவி!

நல்லா இருந்துச்சு பதிவு.

3:19 PM, September 27, 2008
//

நன்றி சுந்தர்,

வால்பையனுக்கும் லக்கிலுக்குக்கும் இடையில் யாரோ விளையாடுறாங்க, அவர்கள் இருவரும் புரிந்து கொண்டால் சரி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அனுஜன்யா said...
எனக்கெல்லாம் வயதுதான் ஆகிறது. உங்களுக்கு அணுகுமுறையில் முதிர்ச்சி உள்ளது. Hats off.

அனுஜன்யா

2:19 PM, September 27, 2008
//

இப்ப நான் உங்களை அண்ணன் என்று சொல்வதா தம்பி என்று சொல்வதா ? இப்ப நான் என்ன செய்யயயயயயயயயயயயயயயயயய

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோதிபாரதி said...

நாட்டுக்கு போய் வந்த களை இன்னும் மாறலை போல?
செரிக்கி சம்சாரிக்கணும் பின்னே!
நேக்கு உரு ஸமுஸியம் உண்டு?

11:42 AM, September 27, 2008
//

செரிக்கியா ? என்ன ஆபாசமாக பேசுறிங்க????????
:))))))))))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்