பின்பற்றுபவர்கள்

26 நவம்பர், 2007

பதிவர்களுடன் சென்ற பினாங் (PENANG) சுற்றுலா !

'பதிவர் சந்திப்புகள்' வழக்கமாக நடப்பவை, பதிவர்கள் பதிவு வழியாக அறிமுகம் ஆகுபவர்கள் தானே, மிகுந்தவையாக 'ஹலோ' சொல்லிக் கொள்வது நலம் விசாரிப்பது, ஜிடாக்கில் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது, கூட்டம் சேர்ந்தால் ஒரு இடத்தைக் குறிப்பிட்டு அங்கு பதிவர்களை சந்திப்பது இதுதான் நடைமுறை, பெரிய அளவு கூட்டமான சந்திப்பு என்றால் அங்கு வருபவர்கள் அனைவருடனும் உரையாட முடியாத நிலைமை. எதிர் கோஷ்டிகளுடன் முகம் கொடுக்காத நிலைமை, இதுபோன்ற இடற்பாடுகளும் பதிவர் சந்திப்புக்களில் நிகழ்வதுண்டு, பதிவர் சந்திப்பின் நோக்கம் புதுமுகங்களின் அறிமுகம் மற்றும் சில தீர்மாணங்கள், சில விமர்சனங்கள், சில புரிந்துணர்வுகள் என்ற அளவில் இருக்கும்,

பதிவர்களுடன் இணைந்து சுற்றுலா செல்ல முடியுமா ? சிங்கையில் இருக்கும் பாரி.அரசு மற்றும் ஜெகதீசன் ஆகியோருடன் இணைந்து பினாங்கு சென்று அங்கிருக்கும் டிபிசிடியை சந்தித்து ஊர் சுற்றுவதாக முடிவெடுத்தோம், என் குடும்பத்தினர் பள்ளி விடுமுறைக்காக தமிழகம் சென்றதால் தனிக்கட்டையாக இருந்ததால் சுற்றுலா செல்லுவதற்கு தடைகள் எதுவும் இருக்கவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை முன்பதிவு எதுவும் செய்யாமல் கிடைத்த பேருந்து வழியாக மலேசியாவின் கோலாலம்பூர் சென்று அங்கிருந்து பினாங்கு சென்றோம், பினாங் செல்லும் நேரடி பேருந்து என்று சொல்லப்பட்டு தான் ஏறினோம், ஆனால் இறங்கிய பின்பு தான் தெரிந்தது கோலாம்பூரில் இருப்பது ( அது தனிக்கதை - ஏமாந்ததெல்லாம் எழுதினால் அப்பாவின்னு நினைச்சிடுவிங்க) அதன் பிறகு பினாங் செல்ல பேருந்து எடுத்து பிற்பகல் 2 மணிக்கு சென்றோம், பேருந்து குளறுபடி இல்லை என்றால் காலை 6 மணிக்கே சென்றிருப்போம். நாங்கள் புறப்பட்டதிலிருந்தும், எங்கள் வருகை தாமதமானதை தொடர்ந்து 1மணி நேரத்திற்கு ஒரு முறை நண்பர் டிபிசிடி செல்பேசியில் தொடர்பு கொண்டு நிலவரம் கேட்டுக் கொண்டார். நாங்கள் காலையிலேயே வந்துவிடுவோம் என்று எதிர்பார்ப்பில் மாற்றம் நிகழ்ந்ததால் அவர் மனைவி செய்திருந்த காலை உணவு வீணாகிவிட்டதாம்.

பிற்பகல் நாங்கள் பினாங்கை அடைந்ததும், டிபிசிடி பேருந்து நிலையத்திற்கு வந்து அவரது வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்றார். எங்களுக்கு தங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார். முதன் முறையாக ஜெகதீசனும் டிபிசிடியும் சந்தித்து கொண்டனர். அதற்கு முன்பு பதிவிலும், ஜிடாக்கிலும் தான் பழக்கம். நாங்கள் சென்றதுமே எங்களுக்கான சுவையான உணவை அவரது இல்லாள் தயாராக செய்து வைத்திருந்தார். வாசலில் நுழைந்ததுமே அவர்களது செல்ல மகளின் வரவேற்பு கிடைத்தது, பிறகு உணவு உண்டுவிட்டு, அவர்கள் மூவர், மற்றும் நாங்கள் மூவர், அவரது காரிலேயே வெளியில் சென்று சுற்றுலா இடங்களைக் காணச் சென்றோம்.

முதலில் பினாங்க் மணல் கடற்கரை (Sandy Beach), தண்ணீர் விளையாட்டுகளுடன் கூடிய அழகான கடற்கரை அது, அதில் ஒரு அரை மணி படகு பயணம், பின்பு அங்கே காஃபி அருந்திவிட்டு, சிறுதி நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்து குட்டி இந்தியா இருக்க்கும் ஜார்ஜ் டவுனுக்கு சென்றோம், அங்கு செல்லும் போதே இரவு 9 மணியை கடந்துவிட்டது, அங்கு இரவு உணவை முடித்துக் கொண்டு அவரது வீட்டிற்கு வந்துவிட்டோம்.

மறுநாள் காலையில் பாரி.அரசுவுக்கும், ஜெகதீசனுக்கும் அருமையான இட்லி மற்றும் கோழி குருமா, எனக்கு சைவ சட்டினி மற்றும் மிளாகாய்பொடியும் வைத்து தம்பதி சகிதமாக அன்புடன் அனைவரையும் விருந்தின்ர்களை கவனிப்பது போல் பார்த்து பார்த்து பரிமாறினார்கள். மிகவும் நெகிழ்சியாக இருந்தது. காலை உணவு உண்டவுடன் நாங்கள் மூவர் மற்றும் டிபிசிடி ஆகிய நால்வர் மட்டும் ஊர் சுற்றுவது என்று முடிவு. வெடுத்து காரிலேயே சுற்றினோம், முதலில் பினாங்க் மலை (புகிட் பண்டாரா) சென்றோம்,

அங்கு இழுவை ரயில் மலை உச்சிக்கு அழைத்துச் செல்லும் அங்கிருந்து பினாங்க் தீவின் முழு அழகையும் பார்க்க முடியும், நாங்கள் சென்ற நேரத்தில் இழுவை ரயிலுக்கான பயணச்சீட்டூ பிற்பகல் மூன்று அரை மணிக்கு செல்ல முடியும் படித்தான் கிடைத்தது, இடைபட்ட நேரத்தில் அங்கு அருகில் மற்றொரு மலை இடையில் ஒருக்கும் சீனர்கள் அமைத்த புத்தர் கோவிலுக்கு சென்றோம், பிற்பகல் 2 மணிவாக்கில் அருகில் இருந்த இந்தியரின் உணவகத்தில் பகலுணவை முடித்துக் கொண்டு பினாங் மலை சென்றோம்.

அங்கு ஒரு 2 மணி நேரம் பினாங் அழகை பார்த்துவிட்டு, மாலை 6 1/2 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினோம். மறுநாள் சிங்கையில் இருக்க வேண்டும் என்பதால் முன்பதிவு செய்துவிட்டதால் அன்று இரவு 7.30 மணிவாக்கில் டிபிசிடி வீட்டில் இரவு உணவை முடித்துக் கொண்டு, அவரது இல்லத்தினரிடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பினோம், அவரும் கூடவே வந்து பேருந்து புறப்படும் வரை நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து நட்பு பாராட்டினார்.

இது போன்ற சுற்றுலா நினைத்து பார்க்க முடியாத ஒன்று, பொதுவாக நாம் எங்கு சுற்றுலா சென்றாலும் இல்ல உறவினர் அல்லது நண்பர்களுடன் தான் செல்வோம், ஆனால் இங்கு பதிவுலகில் இவர்களுடன் நான் பழகிய நாட்கள் 6 மாதத்திற்கும் குறைவே. இருந்தாலும் கல்லூரி காலத்து நண்பர்களுடன் எவ்வளவு மகிழ்வுடன் நெருங்கி இருந்து ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டு, கிண்டல் செய்து கொண்டு சுற்றுலா சென்றிருக்கிறோமோ அதற்கு சற்றும் குறைவில்லாது மேலும் அதைவிட நன்கு புரிந்து கொண்டுள்ளப்பட்ட சுற்றுலா பயணமாக இதை உணர்ந்தேன். நாங்கள் நால்வரும் வேறு வேறு மாவட்டத்துக் காரர்க்கள், இதில் நானும் டிபிசிடியும் திருமணம் ஆனவர்கள், இருவர் ஆகாதவர், எனக்கு மூவரைக்காட்டிலும் 10 வயது அதிகம். இப்படி நால்வரும், பல பல மாறுபட்ட அமைப்பு கொண்டவர்கள். வலையில் எழுவது பயனளிக்குமா ? அளிக்காதா ? அதை காலம் தான் சொல்ல முடியும். ஆனால் கை மேல் பலன் நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இனிய நினைவுகளும், நிகழ்வுகளும் அவ்வப்போது கிடைக்கிறது. உங்கள் அனுபவமும் அதுவாகத்தான் இருக்க முடியும்.

47 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:)))))

லக்கிலுக் சொன்னது…

பதிவும் படங்களும் அருமை!

//எனக்கு மூவரைக்காட்டிலும் 10 வயது அதிகம்.//

மூவருக்கும் தலா 30 என்று எடுத்துக் கொண்டால் கூட 90 வயது ஆகிறது. அவர்களை விட 10 வயது அதிகமென்பதால் தங்களுக்கு 100 வயது என்ற உண்மை புலனாகிறது.

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்!!!

SurveySan சொன்னது…

Make use of the photography-in-tamil classes ;)
Pics are dull. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
Make use of the photography-in-tamil classes ;)
Pics are dull. :)
//

சர்வேசன் அண்ணா,

செல்போன் படம் இந்த அளவுக்குத்தான் வரும்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
பதிவும் படங்களும் அருமை!

மூவருக்கும் தலா 30 என்று எடுத்துக் கொண்டால் கூட 90 வயது ஆகிறது. அவர்களை விட 10 வயது அதிகமென்பதால் தங்களுக்கு 100 வயது என்ற உண்மை புலனாகிறது.

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்!!!
//

லக்கி சார்,

'தலா' இல்லைங்க தல,
'விட' த்தான்.

நீங்க சொல்லும் கணக்கு படி நான் தான் தமிழ் பதிவு வலையுலகின் மூத்த பதிவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//
ஜெகதீசன் said...
:)))))
//

ஜெகதீசன்,

என்னது வெறும் சிரிப்பு மட்டும் தானா ? WHA9898 லவ் ஸ்டோரியை நீங்க தான் எழுதனும்.

:)

ஜெகதீசன் சொன்னது…

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!

லக்கிலுக் சொன்னது…

//நீங்க சொல்லும் கணக்கு படி நான் தான் தமிழ் பதிவு வலையுலகின் மூத்த பதிவர்.//

அப்போன்னா மூத்தபதிவர் சமீபத்தில் 1946ல் பிறந்தவர் இல்லையா?

அவரை நோண்டலைன்னா நமக்கு தூக்கமே வராதே? :-)))))

ஜெகதீசன் சொன்னது…

//
என்னது வெறும் சிரிப்பு மட்டும் தானா ? WHA9898 லவ் ஸ்டோரியை நீங்க தான் எழுதனும்.
//
அது என்னங்க ஸ்ட்டோரி... எனக்கு ஒன்னும் தெரியலையே...
:))))

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...

அப்போன்னா மூத்தபதிவர் சமீபத்தில் 1946ல் பிறந்தவர் இல்லையா?

அவரை நோண்டலைன்னா நமக்கு தூக்கமே வராதே? :-)))))
//

லக்கி,
நீர் யாரைச் சொல்றேள்னு நேக்கு விளங்கலை, யாரை வேண்டுமானாலும் சொல்லிக் கொள்வேள். நேக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை. பகவான் புண்ணியத்துல நன்னா தூங்கி எழுறேன்.

ஜெகதீசன் சொன்னது…

//
அப்போன்னா மூத்தபதிவர் சமீபத்தில் 1946ல் பிறந்தவர் இல்லையா?

அவரை நோண்டலைன்னா நமக்கு தூக்கமே வராதே? :-)))))
//
லக்கி அவர்களே,
கோவியார் மற்றும் 1946 இல் பிறந்தவர் போன்ற மூத்த பதிவர்களை கிண்டல் செய்யக்கூடாது..
கோவியார் மூத்த பதிவர்களை மதித்து நடக்கவேண்டும்...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
அது என்னங்க ஸ்ட்டோரி... எனக்கு ஒன்னும் தெரியலையே...
:))))
//

ஜெகதீசன்,
ஒன்னும் தெரியலை ? அப்படின்னா, ஒண்ணு தரும அடிக்கு பயப்படனும், இல்லைன்னா அம்மாவின் செலக்டீவ் அம்னீசீயா உங்களுக்கும் தொற்றி இருக்கனும். இதுக்குத்தான் இலைக்காரன் பதிவில் 'அம்மா வாழ்க' கோஷம் போடாதிங்கன்னு தலைப்பாடாக அடித்துக் கொள்வது.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
லக்கி அவர்களே,
கோவியார் மற்றும் 1946 இல் பிறந்தவர் போன்ற மூத்த பதிவர்களை கிண்டல் செய்யக்கூடாது..
கோவியார் மூத்த பதிவர்களை மதித்து நடக்கவேண்டும்...
//

இதுக்கு பேருதான் படுக்க வச்சு அளவெடுத்து பள்ளம் தோண்டுவதா ?
:)

ஜெகதீசன் சொன்னது…

//
ஜெகதீசன்,
ஒன்னும் தெரியலை ? அப்படின்னா, ஒண்ணு தரும அடிக்கு பயப்படனும், இல்லைன்னா அம்மாவின் செலக்டீவ் அம்னீசீயா உங்களுக்கும் தொற்றி இருக்கனும். இதுக்குத்தான் இலைக்காரன் பதிவில் 'அம்மா வாழ்க' கோஷம் போடாதிங்கன்னு தலைப்பாடாக அடித்துக் கொள்வது.
:))
//

நீங்க சொல்லுறதப் பாத்தா அரசு,
WHA9898 நம்பர் கார்ல வந்த அக்காவை சைட் அடிச்ச மாதிரியும் அதுக்கு டிபிசிடி ஹெல்ப் பண்ணுன மாதிரியும், அத நான் சொல்லாம மறைக்கிற மாதிரியுமில்ல இருக்கு?????
மக்களே, கோவியார் சொல்லுறத நம்பாதீங்க.... பாரி.அரசு நல்லவர்.. அப்படியெல்லாம் செய்யவே இல்லை..
:)))))

ஜெகதீசன் சொன்னது…

மன்னிக்கவும்... தப்பா எழுதீட்டேன்...
//
கோவியார் மூத்த பதிவர்களை மதித்து நடக்கவேண்டும்...
//
இதை கோவியார் போன்ற மூத்த பதிவர்களை மதித்து நடக்கவேண்டும்... என்று வாசிக்கவும்...

VSK சொன்னது…

சுவையான பதிவு!

நான் டிபிசிடி கொடுத்த உணவைச் சொல்லவில்லை!
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
சுவையான பதிவு!

நான் டிபிசிடி கொடுத்த உணவைச் சொல்லவில்லை!
:))
//

வீஎஸ்கே ஐயா,

ரசிப்புக்கு நன்றி, உணவின் சுவையிலும் நிறைவே.

TBCD சொன்னது…

பாரி.அரசு..நல்லவர்...நான் அதை விட நல்லவன்..

வீணான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்..
//*
ஜெகதீசன் said...
//
ஜெகதீசன்,
ஒன்னும் தெரியலை ? அப்படின்னா, ஒண்ணு தரும அடிக்கு பயப்படனும், இல்லைன்னா அம்மாவின் செலக்டீவ் அம்னீசீயா உங்களுக்கும் தொற்றி இருக்கனும். இதுக்குத்தான் இலைக்காரன் பதிவில் 'அம்மா வாழ்க' கோஷம் போடாதிங்கன்னு தலைப்பாடாக அடித்துக் கொள்வது.
:))
//

நீங்க சொல்லுறதப் பாத்தா அரசு,
WHA9898 நம்பர் கார்ல வந்த அக்காவை சைட் அடிச்ச மாதிரியும் அதுக்கு டிபிசிடி ஹெல்ப் பண்ணுன மாதிரியும், அத நான் சொல்லாம மறைக்கிற மாதிரியுமில்ல இருக்கு?????
மக்களே, கோவியார் சொல்லுறத நம்பாதீங்க.... பாரி.அரசு நல்லவர்.. அப்படியெல்லாம் செய்யவே இல்லை..
:)))))*//

துளசி கோபால் சொன்னது…

இணையம் தந்த கொடையில் இந்த நட்பு வட்டமும் முக்கியமானது.

'காலம்' காலமாய்ப் பழகுன ஒரு உணர்வு வந்துருதுங்க.

அப்படியே இங்கேயும் ஒரு நடை வந்துட்டுப்போங்க.

ஜெகதீசன் சொன்னது…

//
பாரி.அரசு..நல்லவர்...நான் அதை விட நல்லவன்..
//
ம்க்கும்... நானும் நல்லவன் தான்...

TBCD சொன்னது…

பினாங் கொடி மலையிலே, நாம் சந்தித்த செக்ஸ்லோவோக்கிய அன்பரைப் பற்றி சொல்லாமல் விட்ட கோவி.கண்ணனுக்கு என் கண்டனங்கள்..

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
இணையம் தந்த கொடையில் இந்த நட்பு வட்டமும் முக்கியமானது.

'காலம்' காலமாய்ப் பழகுன ஒரு உணர்வு வந்துருதுங்க.

அப்படியே இங்கேயும் ஒரு நடை வந்துட்டுப்போங்க.
//

ஆமாம் அம்மா,

உங்களையும், கோபால் ஐயாவையும் என் இல்லத்தினருடன் சந்தித்ததும் நெகிழ்வான சந்திப்புதான்.
:)

உங்க ஊருக்கு நடை வரனுமா ? மாரத்தான் ஓடி வந்தாலும் வரமுடியாத தொலைவு. காலம் கைகூடும்... அப்போது வந்துவிடுவேன். !

கோவி.கண்ணன் சொன்னது…

ஜெகதீசன் மற்றும் டிபிசிடி,

நீங்கள் இருவரும் என்ன சொல்கிறீர்கள் என்று 'புரியல்ல... தயவு செய்து விளக்கவும்'

எல்லோருக்கும் கேட்கட்டும்.

:)

ஜெகதீசன் சொன்னது…

//
முதன் முறையாக ஜெகதீசனும் டிபிசிடியும் சந்தித்து கொண்டனர்.
//
எனக்கு முதல் சந்திப்பு போலவே தெரியவில்லை.. நீண்ட நாள் நண்பர் போலத் தெரிந்தது..
நீங்கள் அந்த செக் நாட்டவரிடம் அறிமுகப்படுத்தும் போது, இது தான் இவர்களின் முதல் சந்திப்பு என்று சொன்ன போது தான், முதல் சந்திப்பு என்பதே நினைவுக்கு வந்தது...
:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
பினாங் கொடி மலையிலே, நாம் சந்தித்த செக்ஸ்லோவோக்கிய அன்பரைப் பற்றி சொல்லாமல் விட்ட கோவி.கண்ணனுக்கு என் கண்டனங்கள்..

2:03 PM, November 26, 2007
//

டிபிசிடி ஐயா,

பாரி.அரசு மேட்டரையெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள், அடிக்க வந்துவிடுவார். அவராக 'பீல்டு' எக்ஸ்பீரியன்ஸை வைத்து எழுதுவார் என்று உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

குசும்பன் சொன்னது…

அருமையான சந்திப்பாக இருக்கும் போல இருக்கே!

பிறகு லக்கிக்கு ஒரு ரிப்பீட்டேய்

ஜெகதீசன் சொன்னது…

B.B.I யில் இருந்து எனக்கு வந்த மடல்:

நவ-24 மற்றும் நவ-25 ஆகிய தேதிகளில் நடந்த சந்திப்பில் யாரும் போண்டா பரிமாறப் படவில்லை எனத் தெரிகிறது. எனவே அச்சந்திப்பை பதிவர் சந்திப்பாகவோ அல்லது மாநாடாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.
இனிமேல் யாராவது பதிவர் சந்திப்பு/மாநாடு நடத்தினால் அங்கு போண்டா பரிமாறப்பட்ட ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே BBI ஏற்றுக்கொள்ளும்!!!!!

இப்படிக்கு,
BBI, South East Asia.

(உங்கள் பதிவில் அதர் ஆப்சன் இல்லாததால் BBIயினர் எனக்கு அனுப்பி உங்கள் பதிவில் கமெண்ட் போடச் சொன்னார்கள்...)

TBCD சொன்னது…

எங்களது உளவுப் பிரிவின் தகவல் படி..போண்டா பரிமாறினால், கஸ்குட்டா போன்ற ஒட்டுண்ணிகள் வருமென்று தகவல் வந்ததால், பதிவர்களின் நலன் கருதி
போண்டா தவிர்க்கப்பட்டது.

இவன்,
எ.ஏ.தி.க தலைவர்

ஜெகதீசன் சொன்னது…

//
TBCD said...

எங்களது உளவுப் பிரிவின் தகவல் படி..
//
இது போன்ற போலி உளவுப் பிரிவின் தகவல்களை யாரும் நம்பவேண்டாம்.. வலையுலகின் அங்கீகரிக்கப்பட்ட ஒரே உளவு நிறுவனம், BBI மட்டுமே!!!

போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!
போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்!!

ஜெகதீசன் சொன்னது…

நமது குழுவில் வந்த "P.C.ஸ்ரீராம்" இன்னும் அவர் எடுத்த வீடியோக்களை (WHA9898 உட்பட) வெளியிடாமல் இருப்பதற்கு கடும் கண்டனங்கள்...

ஜமாலன் சொன்னது…

பதிவுலகம் ஏற்படுத்தித்தரும் அலாதியான நட்பிற்கு இப்பதிவு ஒரு சான்று.

அருமை.

Unknown சொன்னது…

//வலையில் எழுவது பயனளிக்குமா ? அளிக்காதா ? அதை காலம் தான் சொல்ல முடியும். ஆனால் கை மேல் பலன் நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இனிய நினைவுகளும், நிகழ்வுகளும் அவ்வப்போது கிடைக்கிறது//
well said GK.

Unknown சொன்னது…

அடப் பாவி மக்கா என் கிட்ட ஒரு வார்த்த சொல்லியிருந்தா கடேசி நாளும் அதுமா கும்மி இருக்க மாட்டேன் இப்படி மூனு பேரு மாத்திரம் சாட்டிங் பன்றேளே இது நியாயமா

மூத்த பதிவர்கள் ஏன் எப்போதும் மூடி டைப்பாக இருக்கிறார்கள்?

Unknown சொன்னது…

எச்சூஸ்மி நான் உள்ள வரலாமா?

நாகை சிவா சொன்னது…

அருமையான பயணமாக அமைந்து உள்ளது போல இருக்கே.. தொடர்ந்து இதே போல் அமைய வாழ்த்துக்கள் :)

இது போன்ற பயணங்களை அமீரகத்தில் இருக்கும் மக்கள் செய்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

RATHNESH சொன்னது…

வாசிக்கும் போதே அங்கெல்லாம் 'என்ன நடந்திருக்கும்' என்கிற முழு காட்சிகளும் மனக்கண் முன் ஓடுவது போன்ற விவரிப்பு. அருமை.

இத்தனை அலைச்சல்களுக்கு மத்தியில் ஒரே ஒரு வேளை தவிர மற்ற எல்லா வேளைகளிலும் வீட்டு உணவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்றால் TBCD அவர்கள் வீட்டு அன்ன லட்சுமிக்குத் தான் முதல் பாராட்டு போய்ச் சேர வேண்டும். வணங்குகிறேன் தாயே.

நீங்கள் சரியான பேருந்து பிடித்து சரியான நேரத்துக்குப் போயிருந்தால் தான் ஆச்சர்யம்; தங்களுடைய செல்புட் மற்றும் ஸெங்கோ அனுபவப் பதிவுகளைப் படித்த பிறகும் அவர் காலை உணவு தயாரித்து வைத்ததை என்ன என்று சொல்வது!

பாரி அரசு மற்றும் ஜெகதீசன் இருவரும் திருமணம் ஆகாதவர்கள், TBCD துணைவியாருடன் வந்திருக்கிறார். ஒருவர் மட்டும் தான் மனைவியை ஊருக்கு அனுப்பியிருப்பவர். இந்த காம்பினேஷனில் டாக்ஸியில் யார் சேட்டை செய்திருப்பார்கள் என்று யாரும் சொல்ல வேண்டுமா என்ன?

அருமையான பயணம்; அருமையான நண்பர்கள்; அருமையான பதிவு. அடிக்கடி பல இடங்கள் போய் வந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

ரூபஸ் சொன்னது…

வாழ்த்துக்கள் கண்ணன்.

அப்புடியே நாலு பேரோட சுற்றுலாப்புகைப்படங்களையும் போட்டுருந்தீங்கன்னா நல்லாயிருக்கும்..

TBCD சொன்னது…

இதை நான் வாசித்துக் காட்டி வாங்கிக் கட்டிக்கொண்டேன்..

மற்றவர்கள் எல்லாம்..பாராட்டுகிறார்கள், நீங்கள் ஒரு நாளாவது சொல்லியிருக்கிறீர்களா என்று...

கோவி.கண்ணன், குண்டு வைப்போர் சங்கத்திலே, மறைமுகமாக உறுப்பினர் ஆகிவிட்டீர்களே... :)))

//*RATHNESH said...
வாசிக்கும் போதே அங்கெல்லாம் 'என்ன நடந்திருக்கும்' என்கிற முழு காட்சிகளும் மனக்கண் முன் ஓடுவது போன்ற விவரிப்பு. அருமை.

இத்தனை அலைச்சல்களுக்கு மத்தியில் ஒரே ஒரு வேளை தவிர மற்ற எல்லா வேளைகளிலும் வீட்டு உணவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்றால் TBCD அவர்கள் வீட்டு அன்ன லட்சுமிக்குத் தான் முதல் பாராட்டு போய்ச் சேர வேண்டும். வணங்குகிறேன் தாயே. *//

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
அருமையான பயணமாக அமைந்து உள்ளது போல இருக்கே.. தொடர்ந்து இதே போல் அமைய வாழ்த்துக்கள் :)

இது போன்ற பயணங்களை அமீரகத்தில் இருக்கும் மக்கள் செய்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
//

நன்றி சிவா,

அமீரக நண்பர்கள் அடிக்கடி அருகில் இருக்கும் இடங்களுக்கு சென்று வருவர். நாங்கள் சென்றது போல் மூன்று நாள் பயணம் செய்தார்களா என்று தெரியவில்லை.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
பினாங் கொடி மலையிலே, நாம் சந்தித்த செக்ஸ்லோவோக்கிய அன்பரைப் பற்றி சொல்லாமல் விட்ட கோவி.கண்ணனுக்கு என் கண்டனங்கள்..
//

ஏன்யா,

அவரைத்தான் முண்டம் ஆக்கி விட்டிங்களே போதாதா ?
கம்யூனிசம் இல்லாமல் நாங்க நல்லதான் இருக்கோம், என்றார் அவர், ஆனால் பாரி.அரசு அவரை விட்டாரா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...

well said GK.//
நன்றி ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
வாசிக்கும் போதே அங்கெல்லாம் 'என்ன நடந்திருக்கும்' என்கிற முழு காட்சிகளும் மனக்கண் முன் ஓடுவது போன்ற விவரிப்பு. அருமை.

இத்தனை அலைச்சல்களுக்கு மத்தியில் ஒரே ஒரு வேளை தவிர மற்ற எல்லா வேளைகளிலும் வீட்டு உணவு சாப்பிட்டிருக்கிறீர்கள் என்றால் TBCD அவர்கள் வீட்டு அன்ன லட்சுமிக்குத் தான் முதல் பாராட்டு போய்ச் சேர வேண்டும். வணங்குகிறேன் தாயே.

நீங்கள் சரியான பேருந்து பிடித்து சரியான நேரத்துக்குப் போயிருந்தால் தான் ஆச்சர்யம்; தங்களுடைய செல்புட் மற்றும் ஸெங்கோ அனுபவப் பதிவுகளைப் படித்த பிறகும் அவர் காலை உணவு தயாரித்து வைத்ததை என்ன என்று சொல்வது!

பாரி அரசு மற்றும் ஜெகதீசன் இருவரும் திருமணம் ஆகாதவர்கள், TBCD துணைவியாருடன் வந்திருக்கிறார். ஒருவர் மட்டும் தான் மனைவியை ஊருக்கு அனுப்பியிருப்பவர். இந்த காம்பினேஷனில் டாக்ஸியில் யார் சேட்டை செய்திருப்பார்கள் என்று யாரும் சொல்ல வேண்டுமா என்ன?

அருமையான பயணம்; அருமையான நண்பர்கள்; அருமையான பதிவு. அடிக்கடி பல இடங்கள் போய் வந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
//

வாங்க ரத்னேஷ்,

அடுத்து இந்தியா செல்லும் போது அஸ்ஸாம் சென்று வந்த அனுபவத்தையும் எழுத உள்ளேன்.
:)

டாக்ஸியில் போகவில்லை. டிபிசிடி கார் வைத்திருந்தார். அவரும் காரும் இல்லை என்றால் எங்க பாடு கடினம் தான். அடுத்து யாராவது பினாங் போவதாக கேள்வி பட்டால் சொல்லுங்க டிபிசிடி முகவரியை வாங்கித் தருகிறேன்.
:)

நண்பர் டிபிசிடியின் வீட்டு உணவு அருமை. மச்சானுங்களுக்கு விருந்து வைப்பது போல் நண்பர்களுக்கு நாட்டு கோழி அடிச்சு போட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
மன்னிக்கவும்... தப்பா எழுதீட்டேன்...
//
கோவியார் மூத்த பதிவர்களை மதித்து நடக்கவேண்டும்...
//
இதை கோவியார் போன்ற மூத்த பதிவர்களை மதித்து நடக்கவேண்டும்... என்று வாசிக்கவும்...
//

ஜெகதீசன்,

என்னை மூத்த பதிவர் என்று சொல்லலாம் தப்பே இல்லை, ஆனால் மூப்பு பதிவர் என்று சொல்லாதவரை மகிழ்ச்சியே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
அருமையான சந்திப்பாக இருக்கும் போல இருக்கே!

பிறகு லக்கிக்கு ஒரு ரிப்பீட்டேய்
//

மூவரைவிட 10 அதிகம் என்றால் தலா 3.3 வயது என்று எடுத்துக் கொண்டு, ஏன் எனக்கு 33 வயது என்று லக்கி கொள்ளவில்லை ?
கணக்கு இடிக்குது.

குசும்பன் சார்,

அந்த இருநாட்கள் இனிமையான நாட்கள் என்றால் அது உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
B.B.I யில் இருந்து எனக்கு வந்த மடல்:

நவ-24 மற்றும் நவ-25 ஆகிய தேதிகளில் நடந்த சந்திப்பில் யாரும் போண்டா பரிமாறப் படவில்லை எனத் தெரிகிறது. எனவே அச்சந்திப்பை பதிவர் சந்திப்பாகவோ அல்லது மாநாடாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.
இனிமேல் யாராவது பதிவர் சந்திப்பு/மாநாடு நடத்தினால் அங்கு போண்டா பரிமாறப்பட்ட ஆதாரங்களைச் சமர்ப்பித்தால் மட்டுமே BBI ஏற்றுக்கொள்ளும்!!!!!

இப்படிக்கு,
BBI, South East Asia.

(உங்கள் பதிவில் அதர் ஆப்சன் இல்லாததால் BBIயினர் எனக்கு அனுப்பி உங்கள் பதிவில் கமெண்ட் போடச் சொன்னார்கள்...)
//

ஜெகதீசன்,
உங்களுக்கு மங்குஸ்தான் (ஸெங்கோ) பழச்சாறு கொடுக்காமல் விட்டது தப்பாக போய்விட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
எங்களது உளவுப் பிரிவின் தகவல் படி..போண்டா பரிமாறினால், கஸ்குட்டா போன்ற ஒட்டுண்ணிகள் வருமென்று தகவல் வந்ததால், பதிவர்களின் நலன் கருதி
போண்டா தவிர்க்கப்பட்டது.

இவன்,
எ.ஏ.தி.க தலைவர்
//

மலை உச்சியில் கடலை போட்ட விசயத்தை இன்னும் உடைக்காமல் வைத்திருக்கும் டிபிசிடிக்கு கண்டனங்கள். அதில் உங்களுக்கும் உடந்தை இருக்கும் என்ற சந்தேகம் பெரிதாக வலுக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரூபஸ் said...
வாழ்த்துக்கள் கண்ணன்.

அப்புடியே நாலு பேரோட சுற்றுலாப்புகைப்படங்களையும் போட்டுருந்தீங்கன்னா நல்லாயிருக்கும்..
//

ரூப்ஸ் நன்றி !

நாலு பேரோட இமேஜை காப்பத்திக் கொள்ள வேண்டுமென்றால் புகைப்படம் போடாமல் இருப்பது தான் நல்லது.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்