பின்பற்றுபவர்கள்

30 செப்டம்பர், 2008

களப்பிரர் ஆட்சியும் கலைஞர் ஆட்சியும் !

இன்று தினமலரை மேய்ந்த போது, ஒரு வாசகரின் கருத்தில் இருந்த சில நையாண்டிகள் தான் இந்த பதிவின் தலைப்பு.

களப்பிரர் ஆட்சி - கலைஞர் ஆட்சி இரண்டுக்கும் என்ன தொடர்ப்பு ? இரண்டுமே தமிழகத்தின் இருண்ட காலமாம். களப்பிரர் ஆட்சி உண்மையிலேயே இருண்ட காலமா ? என்று பார்த்தால் வரலாற்று ஆசிரியர்கள் மறுக்கிறார்கள். களப்பிரர் ஆட்சியின் தடயங்களை முற்றிலும் அழித்து அவர்கள் ஆண்டதற்கான ஆதாரங்களையே சைவ சமயத்தினர் அழித்துவிட்டனர். களப்பிரர் ஆட்சி இருண்டகாலம் ஆக்கப்பட்டது என்றுதான் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

களப்பிரர் ஆட்சி : "களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். களப்பாளர் என்றும் இவர்கள் குறிப்பிடப்படுவதுண்டு. இவர்கள் தமிழகத்தை ஏறைக்குறைய கி.பி. 300 - கி.பி. 600 காலப்பகுதியில் ஆண்டுள்ளார்கள். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சமண சமயம், பெளத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சி காலமும், இவர்களது கால தமிழ்ப்படைப்புக்களும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. அதானால் இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது." - தமிழ் விக்கி

இதே தகவல்களை பல்வேறு தமிழ் ஆராய்ச்சி நூல்களிலும் படித்து இருக்கிறேன். அதன் அடிப்படையில் விக்கி கட்டுரை உண்மைதான்.

கலைஞர் ஆட்சி : கலைஞர் ஆட்சியின் போது ஒவ்வொரு முறையும் ஊடகங்கள் முனைந்து செயல்பட்டு கலைஞர் அரசைப் பற்றி தவறான தகவல்களையே பரப்பும். 1996 ன் முந்தைய ஆட்சியின் முடிவில் கலைஞர் அரசின் மீது ஊழல் புகாரே இல்லை என்று அறிந்தவர்கள், 'பணப் புழக்கம்' இல்லை என்று கிளப்பிவிட்டனர். அந்த செய்தி ஊடகங்களின் முழு பலத்துடன் பரப்பப்பட்டது. கிரமத்தினர் கூட கையில் காசில்லை அதற்கு கலைஞர் தான் காரணம் என்று சொல்லும் அளவுக்கு அந்த அவதூறு பிரச்சாரம் வெற்றிகரமாக செயல்பட்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

தற்பொழுது மின்சாரப் பற்றாக்குறை, இது அரசின் குறைபாடுதான், இருந்தும் ஊடகங்களில் அதையே திரும்ப திரும்ப சொல்வதால் கலைஞரின் இலவச திட்டமும் அதனால் பயன்பெற்றவர்களும் மின்சாரப் பற்றாக்குறையைப் பற்றி நினைக்க ஆரம்பித்துவிடுவார்கள், முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியை காலி செய்துவிடால் என்கிற பிரச்சார பின் உத்தி போல் தான் தெரிகிறது.

மின்சார பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் நீண்டகால திட்டம் இல்லாதது தெரிந்தே, பெருகிவரும் தொழிற்சாலைகள், குடியுருப்புகள் தான் முதன்மைக் காரணம், மின்சாரத்தேவை அடுத்த 10 ஆண்டுகளில் இவ்வளவு என்ற வரையரை இல்லாததால் இருக்கும் மின்சாரத்தை பகிர்ந்து கொடுப்பது என்ற சிக்கலுக்குள் விழுத்துவிட்டது. கலைஞர் அரசு ஜெ அரசை குற்றம் சொல்வதிலும் ஞாயம் இல்லாமல் இல்லை, ஆனால் முழுப்பொறுப்பில் பெரும்பான்மை இவர்களையே சாரும் என்பதை மறுப்பதற்கும் இல்லை. இது ஒரு அசாதரமாண சூழல், ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதாலேயே தீர்ந்துவிடாது.

ஆனால் இதை இப்போது பூதகரமாக ஆக்குவதன் மூலம் வருகின்ற பாராளுமன்ற தேர்த்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக மக்களை திருப்ப வாய்பாக மாற்ற எதிர்கட்சிகளும், திமுக எதிர்ப்பு ஊடகங்களும் மிகவும் முனைப்பாகவே செயல்படுகின்றன.

களப்பிரர் ஆட்சி இருண்டகாலமாக ஆக்கப்பட்டதும் சரி, கலைஞர் அரசை இருண்டகாலமாக விமர்சிப்பதும் சரி இவையெல்லாம் திட்டமிட்ட நாடகம் தான். வரலாறுகள் தோறும், வரலாறுகளை இரட்டடிப்பு செய்பவர்களும் எப்போதும் இருப்பதும் கூட வரலாறுகள் தான்.

33 கருத்துகள்:

புருனோ Bruno சொன்னது…

//வரலாறுகள் தோறும், வரலாறுகளை இரட்டடிப்பு செய்பவர்களும் எப்போதும் இருப்பதும் கூட வரலாறுகள் தான்.//

http://www.payanangal.in/2008/09/6850.html படித்தீர்களா

Thamizhan சொன்னது…

பல முறை தானாகவே வாசகர் கடிதங்கள் எழுதி அகப்பட்டுக் கொண்டுள்ள "தினமலம்"எவ்வள்வு நேர்மையானது என்பது அனைவரும் அறிந்ததே.
மின்சாரத்தை வீணடிப்பதில் அனைவருக்கும் பங்குண்டு.24 மணி நேர அநாவசியமாக அமர்த்தப் படாத பயன் பாடு அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது.
கோவில்,திருவிழா,தினமும் மக்களே வெறுக்குமளவுக்குக் கட்டாய ஒலி பெருக்கி ஓலங்கள் இவை அரசியல் வாதிகளுக்கு நாங்கள் குறைந்தவர்கள் அல்ல என்ற மதவாதிகளின் மடத்தன விளம்பரங்கள்.
ஆட்சியைக் கவிழ்க்க ஆடாது ஆடி,பாடாது பாடி வரும் பரதேசிகள் ஆட்சியின் நல்ல செயல்களை இருட்டடிப்பு செய்வதும்,அடுத்தவர் உழைப்பால் உண்டு கொழுக்கும் உஞ்ச விருத்திகள்,பசியென்றால் என்னவென்றே அறியாத பிண்டங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும் அரிசியைக் கிண்டல் செய்வதும் திமிரே தவிர வேறெதுவும் இல்லை.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

அரசியலில் நல்லவற்றையும் புறந்தள்ளிவிட்டு எல்லாவற்றையும் எதிர்பதென்பது இன்று நேற்றாக நடப்பதல்ல.

இதுவும் அசிங்கமாக்கப்பட்டுவிட்ட அரசியலின் ஒரு அங்கமே.

மிந்தடைக்கு முழு காரணமும் தற்போதைய ஆட்சியில்லை என்பது உண்மையானாலும், நிலமை இவ்வளவு மோசமாக ஆனது இவர்கள் ஆட்சியில் தானே? இவ்வளவு மோசமான நிலை வரும் வரை இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? சரியான திட்டமிடலும், தொலை நோக்குப் பார்வையும் கொண்டிருந்தால் இவர்கள் அதை சரி செய்திருக்கலாமே? முழுதுமாய் சரி செய்ய இயலாவிட்டாலும், குறைந்தபட்சம் பாதிப்புகளின் வீச்சையாவது குறைத்திருக்கலமே?

மற்றவர்களின் வீண் ஆடம்பரங்களை விடுங்கள், ஆளும் கட்சி மட்டும் ஆடம்பரம் ஏதும் செய்யவில்லையா? பாலபாரதி பதிவில் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும். தி.நகர் மேம்பால திறப்பிற்கு திமுக கொடி கட்டிய கம்பங்களில் இருந்த மின்விளக்குகளுக்கு திருடப்பட்ட மின்சாரத்தை படத்தோடு போட்டிருந்தார். எல்லாக் கட்சியினரும் செய்வது இதைத்தானே? அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன், இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தா எவனும் நிறுத்த மாட்டான். ஆளும் கட்சி ஏன் முன்மாதிரியா இருக்க கூடாது? நாங்க திருடலை, இனிமே நீங்களும் திருடாதீங்கன்னு ஏன் சொல்லக் கூடாது?

1 ரூபா அரிசி தமிழ்நாட்டில் எல்லாருக்கும் பலன் அளிக்கும் திட்டம் இல்லை. இலவச கலர் டிவி கூட எல்லோருக்கும் கிடையாது. ஆனால் மின்வெட்டு? எல்லோரையும் பாதிக்கும் ஒன்று. பாதிக்கப்பட்ட எல்லோரும் நம்மைபோல் பகுத்தாய்ந்து முடிவெடுக்கப் போவதில்லை. அப்டியெல்லாம் முடிவெடுத்துருந்தா ராஜிவ் கொலைக்கும் கருணாநிதிக்கும் முடிச்சுப் போட்டு 91 தேர்தல்ல அம்மா ஆட்சிக்கு ஓட்டு போட்ருப்பாங்களா ? மக்கள் உணர்சிவசப்பட்டுத்தான் ஓட்டளிப்பார்கள். இத்தனை மின்வெட்டு இருக்கப்பவும் ஆடம்பர விளக்குகள் போட்டு நீங்க கூட்டம் போடுறத நிறுத்தல. அப்றம் மக்கள் மட்டும் மாறனும், யோசிக்கனும்னு நினைச்சா எப்படி?
டிஸ்கி:
(பின்னூட்டத்துக்கு டிஸ்கி போடுற ஒரே ஆளு நானாத்தான் இருப்பேன். ). நான் எந்த‌ க‌ட்சியையும் சாராத‌வ‌ன், என் ஆத‌ங்க‌த்தை தான் வெளிப்ப‌டுத்தியுள்ளேன். த‌ய‌வு செய்து இத‌ற்கு யாரும் க‌ட்சி முலாம் பூச‌ முய‌ல‌ வேண்டாம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!
உங்களுக்கு ஒரு விடயம் சொல்லுறேன்.
மின்வெட்டுளையும் கலைஞர் தான் ஜெயிச்சிருக்கார்.
குழப்புறமாதிரி தோணுதா?
ஒன்னும் இல்லை.
நான் பார்த்தவரையில், யாரும் கலைஞரை குறை சொல்லவில்லை.
எல்லாத்துக்கும் இந்த ஆற்காடு நா.... வீராசாமி தான் காரணமுன்னு அவரைத் திட்டுறாங்க, கார்டூன் போடுறாங்க.
வில் விட்ட ராமன் இருக்க அம்பை நோவானேன்?
இதிலும் கலைஞருக்கே வெற்றி!
ஜெ ஒருமுறை கண்ணகியை சிறை வைத்தார்(கலைஞர் சிலைவைத்தார் என்பது தெரிந்ததே)
அப்போது கலைஞர் அதை பெரிய பிரச்ச்சனையாக்கினார்.
அப்போது விலை வாசி ஏறி காம்ரேடுகள் மக்களை சந்தித்து போராட அழைத்த நேரம். பாவம் நம்ம மக்கள், அவங்கதான் ஒன்னைப் பாத்தா இன்னொன்னை மறந்திடுவாங்களே!
விலைவாசி ஏற்றத்தை மறந்து, கண்ணகியைப் பற்றிப் பக்கம் பக்கமாக செய்தித் தாட்களில் வந்ததை மக்கள் மாங்கு மாங்குன்னு படித்தார்கள். கண்ணகிக்காக ஓட்டை மாற்றிப் போட்டவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இதில் ஜெ வென்றார்.(இல்லாவிட்டால் படுதோல்வி அல்லவா அடையவேண்டும்)
எல்லாம் ஒன்னைப் பலியாக்கி இன்னொன்னை மறக்கடிக்கும் மாயஜாலம்.
ஜீம் பூம் பா...!!!
அப்ப கண்ணகி! இப்ப ஆற்காடு!!

Unknown சொன்னது…

களப்பிரர் காலத்தைப்பற்றிய போதிய ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் அதை இருண்டகாலம் என்று சில வரலாற்று அறிஞர்கள் அழைத்ததையே ஆனந்த விகடனின் மதன் போன்ற ‘மகான்’களெல்லாம் ந்ம்பும்போது - தினமருக்கு கடிதம் எழுதும் வாசகன்/ஆசிரியர் நம்புவதில் வியப்பேதுமில்லை. சங்கம் மருவிய கால இலக்கியங்களும் திருமுறைகளும் களப்பிரர் காலத்தைச் சார்ந்தவை என்கின்றனர் அறிஞர்கள். எதுகை மோனைக்காக ‘கலைஞர்’ஆட்சியை ‘களப்பிரர்’ ஆட்சியோடு ஒப்பிட்டிருக்கிறார்கள் என்றே நிணைக்கிறேன். கண்ணுக்கு முன்னே நடக்கும் கலைஞர் ஆட்சியின் நல திட்டங்களை ’நம்பாத’ கண்மூடி பூனைகளான இவர்களா - ஆதாரம் தேடி அலைந்து களப்பிரர் ஆட்சியைப்பற்றி அறிந்துக்கொள்ளப் போகிறர்கள்.

Robin சொன்னது…

திமுக ஆட்சி இருண்ட காலமே: தமிழத்துக்கு அல்ல பார்பனர்களுக்கு. அவர்கள் அரசியலுக்கு பயன்படுத்தும் ராமனை கருணாநிதி அடிக்கடி விமர்சிப்பதால் ஏற்பட்ட கோபம் தான் காரணம் என்று நினைக்கிறேன். ஆனால் மின்பற்றாகுரையை பொறுத்தவரை இந்த ஆட்சி திறம்பட செயல்படவில்லை. மற்றபடி பார்ப்பனர்கள் அதிகம் வாழும் மாநிலங்களைவிட தமிழகம் முன்னேற்றப் பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறது.

Robin சொன்னது…

தினமலம் பத்திரிக்கை திமுக-வுக்கோ அல்லது மைனாரிட்டி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ எதிரான விமர்சனங்கள் என்றால் சந்தோஷமாக வெளியிடும். உதாரணத்திற்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கோட்டா மாணவர்கள் என்று நக்கலடிப்பது தினமலத்தின் வழக்கம். தினமலத்தில் வாசகர் கடிதங்கள் எழுதுபவர்கள் பெரும்பாலும் வேணுகோபாலன்களாகவோ ராஜகோபாலன்களாகவோ தான் இருப்பார்கள். தினமலத்தின் 'கொள்கைகளுக்கு' மாறான கருத்துக்கள் பெரும்பாலும் அமுக்கப்பட்டுவிடும்.

Rajaraman சொன்னது…

\\1996 ன் முந்தைய ஆட்சியின் முடிவில் கலைஞர் அரசின் மீது ஊழல் புகாரே இல்லை என்று அறிந்தவர்கள்//... உங்கள் நகை சுவை உணர்ச்சியை பாராட்டுகிறேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

// Rajaraman said...
\\1996 ன் முந்தைய ஆட்சியின் முடிவில் கலைஞர் அரசின் மீது ஊழல் புகாரே இல்லை என்று அறிந்தவர்கள்//... உங்கள் நகை சுவை உணர்ச்சியை பாராட்டுகிறேன்..
//

Rajaraman,
எந்த புகார் இருந்தது ? ஜெ கலைஞரை கைது செய்தது பழிவாங்கவும், பரபரப்புக்காகவும், ஆனால் ஜெ கலைஞரை சட்டப்படி சந்திக்க முடியவில்லையே.

Robin சொன்னது…

தினமலர் வாரமலரில் அந்துமணிக்கு ஒருவர் கேட்ட கேள்வி: மன்மோகன் மீண்டும் பிரதமரானால்? அதற்கு அந்துமணியின் பதில்: பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும், குண்டு வெடிப்பு தொடரும், போலி மதசார்பின்மை உரம் போட்டு வளர்க்கப்படும். பெட்ரோல் டீசல் விலை உயர்வு பாஜக ஆட்சி வந்தால் குறைந்து விடுமா? உண்மையான மதசார்பின்மை என்றால் என்ன? குஜராத்,ஒரிசா, கர்நாடக போன்ற மாநிலங்களில் நடப்பதுபோல அரசாங்கமே காவிகளுடன் சேர்ந்து இந்து மதத்தினர் அல்லாதவரை உயிரோடு கொளுத்துவதா?

வால்பையன் சொன்னது…

என்னமோ போங்க, பெரியவங்க சொல்றிங்க கேட்டுக்கிறோம்

Rajaraman சொன்னது…

எந்த புகரும் இல்லையென்றால் மக்கள் ஏன் தி.மு.க. ஆட்சியை தோற்கடித்தார்கள்..

கோவி.கண்ணன் சொன்னது…

//Rajaraman said...
எந்த புகரும் இல்லையென்றால் மக்கள் ஏன் தி.மு.க. ஆட்சியை தோற்கடித்தார்கள்..
//

மேலேயே சொல்லி இருக்கிறேன் 'பணப்புழக்கம் குறைவு' என்ற திட்டமிட்ட அவதூறு பரப்பிவிடப் பட்டது, பிஜேபியுடன் திடீர் கூட்டணி வைத்ததும் தான் காரணம்.

Rajaraman சொன்னது…

அவதூறுகளை நம்பி மக்கள் ஒட்டு போட்டார்கள் என்பது மக்கள் சிந்திக்க தெரியாதவர்கள் என்று இழிவு படுத்தாதீர்கள்..

நந்தா சொன்னது…

ஜோசப் பால்ராஜின் கருத்துக்களோடு அப்படியே ஒத்துப் போகிறேன்.....

மணிகண்டன் சொன்னது…

//////////// 'பணப்புழக்கம் குறைவு' //////////////////////

அமாங்க கோவி சார். அப்ப எல்லாரும் சொல்லி கிட்டு அலைஞ்சது இத தான். என்னவோ ஜெயலலிதா வந்தா இவங்க கையில பணம் கொட்டறா மாதிரி.
ஆனா இது நாள தான் கலைஞர் தோத்தாரா ? என்னால நம்ப முடியல. மக்களுக்கு எந்த கழகம் ஆட்சில இருந்தாலும் அத தோக்க வைக்கணும்ன்னு தான் ஆசை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Rajaraman said...
அவதூறுகளை நம்பி மக்கள் ஒட்டு போட்டார்கள் என்பது மக்கள் சிந்திக்க தெரியாதவர்கள் என்று இழிவு படுத்தாதீர்கள்..
//

மேற்கண்ட ஸ்டேட்மெண்ட்...
ஹிஹி அவதூறு பரப்பும் 'சோ' கால்டு பத்திரிகைகளெல்லாம் அது புரியாமல் தான் முட்டாள் தனமாக செயல்படுகிறார்கள் என்று ஒப்புதல் கொடுப்பது போல் இருக்கிறது.

அடுத்து சுவையான பின்னூட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

Rajaraman சொன்னது…

சோ போன்ற மிகச்சில பத்திரிக்கையாளர்கள் எழுதி தி.மு.க.வை காலி பண்ணி விட முடியும் என்று நீங்கள் நம்புவது வேடிக்கையாய் உள்ளது..

Darren சொன்னது…

//Rajaraman said...
அவதூறுகளை நம்பி மக்கள் ஒட்டு போட்டார்கள் என்பது மக்கள் சிந்திக்க தெரியாதவர்கள் என்று இழிவு படுத்தாதீர்கள்..//

கருணாநிதியின் சதியால்தான் தேர்தலில் நிற்க முடியவில்லை என்று செயலலிதா சொன்னதை எத்தனையோ கிராமத்து மக்கள் நம்பினார்கள்.

அவதூறுகளை உண்மை என்று முழங்கி நம்ப வைக்க இங்கே ஒரு கூட்டமே உள்ளது

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

தி.மு,க,வின் தோல்விக்கு காரணம்...கூட்டணி விஷயத்தில் பல சமயங்களில் தவறு செய்வது.
1996ல்..தி.மு.க.தான் அதன் முந்தைய திறம்பட நடத்திய ஆட்சியில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.,
அந்த செயல்பாட்டின் நம்பிக்கையில்..சில கூட்டணி கட்சிகளை கலைஞர் விலக்கினார்.அதன் பயனே அவர் தோல்வி.
மற்றபடி..கலைஞர் ஆட்சி மீது ..சில தவறுகள்..ஊழல்கள் இருந்தாலும்...'குணம் நாடி குற்றமும் நாடி..'குறள் படி பார்த்தால்..
கலைஞரே வெல்கிறார்.

Naresh Kumar சொன்னது…

கோவி கண்ணன்,

ஜோசப் பால்ராஜ் சொன்ன கருத்துக்களோடு முழுதும் ஒத்துப் போகிறேன்.

மின் தடையின் காரணமாக மக்கள் மத்தியில் திமுக மீது ஏற்பட்ட வெறுப்பின் மு தாக்கத்தையும் நீங்கள் அறிய வில்லை என்றே நினைக்கிறேன். ஒருவேளை சென்னையில் இதன் தாக்கம் குறைவாக இருக்கலாம். ஆனால் கிராமங்களில் மற்றும் மின்சாரத்தை நம்பி தொழில் நடத்துபவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் சாதாராணமானதன்று. யார் காரணம் என்பதில் இரு கட்சிகளுக்குமே பங்கு இருக்கலாம். ஆனால் தொலைநோக்குப் பார்வை இல்லாதது ஆளுங்கட்சியையே சாரும்.

மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் போது ஆற்காடு வீராமியின் நடவடிக்கைகள் என்னை மிகவும் கோபம் கொள்ளச் செய்தன. பல நாட்கள் கழித்து அவர் கலைஞரின் வார்த்தையை ஏற்று மத்திய மின்சாரத் துறை அமைச்சரை சந்தித்தாராம், அவர் உடனே தமிழகத்திற்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்தாராம். அதற்கும் அவருக்கு கலைஞரின் வார்த்தை தேவைப்படுகிறது. கஷ்டப்படுபவர்கள் பற்றி இவருக்காக ஒன்றும் தோன்றாது!!

சேலத்தில் அந்த சமயத்தில் நடந்த விழாவுக்காக எவ்வளவு விளக்குகள் பகலில் வெட்டியாக எரிந்தன தெரியுமா? எங்கள் ஊரில் குறைந்த பட்சம் 4 மணி நேரம் மின் தடை காலை 9 மணி முதல் மாலை 6 மணிக்குள் இருக்கும். 6 மணிக்கு மேல் மின்சாரத்தை தொழில் காரணங்களுக்காக உபயோகப் படுத்தக் கூடாது. இதையெல்லாம் தாண்டி நாங்கள் ஒரு குறிப்பிட்ட அளவுக்கான மின்சாரத்தை மின்சாரத்தை உபயோகித்திருக்க வேண்டும், இல்லையென்றால் அதற்கு நாங்கள் அபராதம் கட்ட வேண்டும், என்ன கொடுமை சார் இது?

அவரின் ஆட்சியில் நல்ல திட்டங்கள் இருக்கலாம். ஆனால் மின் தட்டுப்பாடு என்பது ஒரு பெரிய கரும்புள்ளிதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//புருனோ Bruno said...
//வரலாறுகள் தோறும், வரலாறுகளை இரட்டடிப்பு செய்பவர்களும் எப்போதும் இருப்பதும் கூட வரலாறுகள் தான்.//

http://www.payanangal.in/2008/09/6850.html படித்தீர்களா
//

புருனோ சார்,

இன்னும் அதைப் படிக்கலை, படிக்கிறேன். இணைப்புக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
பல முறை தானாகவே வாசகர் கடிதங்கள் எழுதி அகப்பட்டுக் கொண்டுள்ள "தினமலம்"எவ்வள்வு நேர்மையானது என்பது அனைவரும் அறிந்ததே.
மின்சாரத்தை வீணடிப்பதில் அனைவருக்கும் பங்குண்டு.24 மணி நேர அநாவசியமாக அமர்த்தப் படாத பயன்
........//

Thamizhan,

உங்கள் கோபத்திலும் ஞாயம் இருக்கிறது, இவர்கள் நேர்மையானவர்கள் அல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோசப் பால்ராஜ் said...
அரசியலில் நல்லவற்றையும் புறந்தள்ளிவிட்டு எல்லாவற்றையும் எதிர்பதென்பது இன்று நேற்றாக நடப்பதல்ல.

இதுவும் அசிங்கமாக்கப்பட்டுவிட்ட அரசியலின் ஒரு அங்கமே.

மிந்தடைக்கு முழு காரணமும் தற்போதைய ஆட்சியில்லை என்பது
..../

ஜோசப் பால்ராஜ்,

மென்பொருள் துறையால் பிற துறையினருக்கும் கனிசமான சம்பள உயர்வு கிடைத்திருக்கிறது, அதன் காரணமாக எல்லோருமே வீட்டிலும் ஏசியுடன் ஜெகஜோதியாக இருக்கிறாங்க, பயன்படுத்தும் மின்சார அளவு மிகுந்துவிட்டது. பற்றாக்குறைக்கு அளவுக்கு மிக்க பயன்பாடும் காரணம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோதிபாரதி said...
கோவியாரே!
உங்களுக்கு ஒரு விடயம் சொல்லுறேன்.
மின்வெட்டுளையும் கலைஞர் தான் ஜெயிச்சிருக்கார்.....
//

ஜோதிபாரதி,

உங்கள் பின்னூட்டம் முழுவதையும் வழிமொழிகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//நந்தா said...
ஜோசப் பால்ராஜின் கருத்துக்களோடு அப்படியே ஒத்துப் போகிறேன்.....
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Rajaraman said...
சோ போன்ற மிகச்சில பத்திரிக்கையாளர்கள் எழுதி தி.மு.க.வை காலி பண்ணி விட முடியும் என்று நீங்கள் நம்புவது வேடிக்கையாய் உள்ளது..

6:31 PM, September 30, 2008
//

மிகச் சில பத்திரிக்கை இல்லை, மிகப் பல பத்திரிகைகளும் தி(மு)க எதிர்பாளர்களின் கையில் தான் இருக்கிறது. இந்த முறை வென்றதற்கு முக்கிய காரணம் தினகரன் தமிழ்முரசும் ஒரு காரணம், பின்னால் அவர்கள் பிரிந்தது வேறு காரணம்.

சாணக்கியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை மீண்டும் குறைத்தே மதிப்பிடுகீற்கள். :)

குடுகுடுப்பை சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
அமர பாரதி சொன்னது…

ஆஹா, எப்பிடி இழுத்துட்டு போறாரு பாருங்க.

அவார் சொன்னது.

//\\1996 ன் முந்தைய ஆட்சியின் முடிவில் கலைஞர் அரசின் மீது ஊழல் புகாரே இல்லை என்று அறிந்தவர்கள்//... உங்கள் நகை சுவை உணர்ச்சியை பாராட்டுகிறேன்..//

நீங்கள் சொன்னது.

//றஜரமன்,
எந்த புகார் இருந்தது ? ஜெ கலைஞரை கைது செய்தது பழிவாங்கவும், பரபரப்புக்காகவும், ஆனால் ஜெ கலைஞரை சட்டப்படி சந்திக்க முடியவில்லையே//

இதற்கு அவார் பதில்.

//எந்த புகரும் இல்லையென்றால் மக்கள் ஏன் தி.மு.க. ஆட்சியை தோற்கடித்தார்கள்..//

இங்கள் பதில்.

//மேலேயே சொல்லி இருக்கிறேன் 'பணப்புழக்கம் குறைவு' என்ற திட்டமிட்ட அவதூறு பரப்பிவிடப் பட்டது, பிஜேபியுடன் திடீர் கூட்டணி வைத்ததும் தான் காரணம்//

அவார் பதில்.

//அவதூறுகளை நம்பி மக்கள் ஒட்டு போட்டார்கள் என்பது மக்கள் சிந்திக்க தெரியாதவர்கள் என்று இழிவு படுத்தாதீர்கள்..//

இங்கள் பதில்.

//ஹிஹி அவதூறு பரப்பும் 'சோ' கால்டு பத்திரிகைகளெல்லாம் அது புரியாமல் தான் முட்டாள் தனமாக செயல்படுகிறார்கள் என்று ஒப்புதல் கொடுப்பது போல் இருக்கிறது.
//

அவார் பதில்

//சோ போன்ற மிகச்சில பத்திரிக்கையாளர்கள் எழுதி தி.மு.க.வை காலி பண்ணி விட முடியும் என்று நீங்கள் நம்புவது வேடிக்கையாய் உள்ளது..//

கோவி.கண்ணன் சொன்னது…

//அமர பாரதி said...
ஆஹா, எப்பிடி இழுத்துட்டு போறாரு பாருங்க.

//

அமர பாரதி ,
அவர் விக்ரமாதித்தன் கதை படிபவராக இருக்கும்.

suvanappiriyan சொன்னது…

//கருணாநிதியின் சதியால்தான் தேர்தலில் நிற்க முடியவில்லை என்று செயலலிதா சொன்னதை எத்தனையோ கிராமத்து மக்கள் நம்பினார்கள்.//

;-((

Kadaaram சொன்னது…

களப்பிரர் காலத்தைப் பற்றியும் அந்தக் கால இருண்டகாலமா
என்பது பற்றியும் அகத்தியர் மடலாடற் குழுவில் ஆழமாக
விவாதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த விவாதங்களையெல்லாம் தொகுத்து அகத்திய ஆவணத்தின்
கீழ்க்கண்ட மடல் எண். 42979-இல் இட்டிருக்கிறேன்.
பார்த்துக்கொள்ளுங்கள்.

http://www.treasurehouseofagathiyar.net/42900/42979.htm

அது சரி சொன்னது…

இதுக்கு ஒரு பதில் பதிவு போடணும்னு நெஞ்சு துடிக்கிது... ஆனா, காலக்கொடுமையினாலவும் (உங்கள சொல்லல தல, டைம் பிரச்சினை), உங்க பேர அப்யூஸ் பண்ணி நம்ம கடைக்கு வெளம்பரம் தேடுன மாதிரி ஆகிடும்கிறதுனாலயும் போட முடியலை!

நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க..அப்பிடியே மொரசொலி பட்ச்ச மாதிரி இருக்குன்னா பாத்துக்குங்களேன் :0)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்