பின்பற்றுபவர்கள்

21 செப்டம்பர், 2008

தாழ்த்தப்பட்டவர்கள் இந்துக்களா ?

'இந்து' என்ற ஒற்றைச் சொல்லும் அதன் மீதான கட்டமைக்கப்பட்ட பொருளும் போலியான ஒன்று, பெரும்பாண்மை என்ற சொல்லில் மதவெறியைத் தூண்டுவதைத் தவிர்த்து அதில் இணைய வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கான சமத்துவம் எப்போதும் மறுக்கப்பட்டு வருகிறது. வெள்ளைக்காரர்களால் யார் யாரெல்லாம் முஸ்லிமாகவும், கிறித்துவர்களாகவும் இல்லையே அவர்கெளுக்கெல்லாம் இந்துக்கள் என்று அடையாளம் அவர்கள் விருப்பமில்லாமலே கொடுக்கப்பட்டது.

தலித்துகள் இந்துக்கள் இல்லையா ?

களப்பிரர் ஆட்சிக்குப் பிறகு இம்மண்ணில் வேறூன்றி இருந்த பெளத்தமும் சமணமும் முற்றிலும் ஒழிக்கப்பட்டது, ஒழிக்கப்பட்டது என்றால் அதைப் பின்பற்றியவர்களை கொலை செய்துவிட்டார்காளா ?
பிக்குகளை மட்டும் தான் கழுவில் ஏற்றினார்கள், அதில் பெரும்பங்காற்றியது சைவம், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் போன்ற பக்திமான்கள். பெளத்தர்கள், சமணர்கள் தமிழுக்கு எதிரி என்பதாக பரப்பிவிடப்பட்டு அவர்களின் மதத்தை முற்றிலும் அழித்தார்கள். அதனுடன் அவர்களின் கோபம் தீரவில்லை, அதைப் பின்பற்றியவர்களை யெல்லாம் அடிமைகளாக்கினார்கள், அவர்களை ஊருக்கு வெளியே தங்கும்படி துறத்தினார்கள். அவ்வாறு துறத்தப்பட்டவர்கள் தான் பறையர்கள். தாங்கள் துறத்தப்பட்ட வெறுப்பில் அந்த காலத்தில் ஒரு பார்பனர் சேரிக்குள் நுழைந்தால் பறையடித்து எச்சரிக்கை செய்வது வழக்கமாம், கூட்டமாக சேர்ந்து பார்பனரை துறத்துவார்களாம். சைவர்களால் பவுத்தர், சமணர் என்ற சொற்களே தடை செய்யப்பட்டதால், பறையடித்து எச்சரிக்கை செய்பவன், பறைபவன், பறையன் என்று ஊருக்குள் / நாட்டுக்குள் குடியிருக்கும் பார்பனர்கள் அவர்களைப் பற்றி குறிப்பிடுவார்களாம். அப்படி கிடைத்த பெயர் தான் அடிமையாக்கப்பட்ட முன்னாள் பவுத்தர்களுக்கான காரண பெயர் 'பறையன்' - நூல் ஆதாரம் 'நான் பூர்வ பவுத்தன்' அயோத்திதாச பண்டிதர். ஆதாரம் தேவைபடுபவர் பின்னூட்டத்தில் மின் அஞ்சலை தெரியப்படுத்துங்கள் அனுப்பி வைக்கிறேன்.

இவ்வாறாக பற்பல சேரிகளுக்கு துறத்தப்பட்டவர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பே அவர்களுக்கு கிடைக்காதாதால் திரண்டு போராடும் அளவுக்கு அவர்களால் ஒன்று சேர இயலவில்லை, ஆதிக்க சக்திகளான சைவ சமய அரசர்களுக்கு எதிராக போராடும் ஆற்றலுமே அவர்களிடம் இல்லை. அதுவரை தொழில் அடிப்படையிலான சாதிகள், மனு அடிப்படை சாதிகளாக மாறிய காலம் அது, எனவே முன்னால் பவுத்தர்களெல்லாம் சூத்திர பிரிவுக்குள்ளும், 5 ஆம் பிரிவான சண்டாள பிரிவுக்குள்ளும் அவர்களை வைத்துவிட்டனர். இதுவே வரலாற்று உண்மை.

வெள்ளைக்கார ஆட்சிக்கு பிறகு இவர்களை 'இந்து பறையர்கள், இந்து பள்ளர்கள் (பல்லாக்கு தூக்கும் அடிமையாக இருந்தால் இந்த பெயர் வந்திருக்க வேண்டும்) என்று அழைக்கப்பட்டனர். இவர்களாக விரும்பி இந்து மதத்தை ஏற்கவில்லை. இவர்களின் ஒப்புதல் இல்லாமல் சேர்க்கப்பட்டனர். நான்காம் சாதியாக தாழ்தப்பட்டவராக இருப்பது அவர்களின் தலையெழுத்து அல்ல, அவர்களின் தலையில் ஆதிக்க சக்திகள் போட்ட சூடு. தாழ்தப்பட்டவர்கள் முன்னேற வேண்டும் என்ற நல்லெண்னம் அடிப்படையில் அவர்களுக்கு சிறப்பு சலுகைகளைக் கொடுத்தாலும், அதுவும் ஒப்பந்த (கண்டிசன்) அடிப்படையில் தான் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதாவது நீ நாலாம் சதிக்காரணாவே இந்து பறையனாக, பள்ளனாக இருந்தால் மட்டுமே இவற்றை நீ பெற முடியும் என்பதே அந்த ஒப்பந்தம்.

இப்படியெல்லாம் 'இந்து மதத்தின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டி என்ன சாதனையைச் செய்யப் போகிறோம் ?' இந்து மதம் என்பதைப் பிரித்தால் கிடைக்கும் பல்வேறு சமயங்கள், சைவம், சமணம், பவுத்தம், சனாதனம் (பார்பன மதம்), ஆதி சங்கரரின் 6 மதங்கள், வடகலை வைணவம், தென்கலை வைணவம் , பார்பன சைவம், வெள்ளாளர் சைவம், நாட்டார் சமயம் (மதுரைவீரன், முனியை தெய்வமாக கொண்டவர்கள்) இப்படி சென்று கொண்டே இருக்கும், இன்னும் இந்த பிரிவுக்குள் இருப்பவர்கள் தங்கள் தெய்வமே உயர்ந்தது என்று நினைக்கிறார்கள், ஒரு வைணவர் சைவ திருநீறை அணியமாட்டார், சைவர் நாமம் போட்டுக் கொள்ளமாட்டார். ஆனால் பொதுப்பெயராக 'இந்து' என்பதில் அடங்கி இருக்கிறார்கள் அவ்வளவே, பிரித்துப் பார்த்தால் இந்திய சமயங்கள் ஒவ்வொன்றும் சிறுபான்மை தொகையைக் கொண்டதே, ஆதிக்க சக்திகள் தங்களின் சாதகத்துக்காக 'இந்து' வாக்கிக் கொண்டனர் . அனைத்தும் ஒன்றா ? இன்றைய சூழலில் கூட அவை ஒன்று இல்லை, ஆகம கோவில்களில் பார்பனர்தான் பூசை செய்ய முடியும், ஆடுவெட்டும் கோவிலில் காலைக் கூட வைக்க மாட்டார்கள்

இப்படி இதில் இணைத்திருப்பதால் தானே அவன் தாழ்த்தப்பட்டவன் என்ற நிலையிலேயே தொடர்கிறான், இந்த அவலம் தேவையா ? இதற்கு கிடிக்கு பிடியாக சலுகையில் மறைமுக ஒப்பந்தம் வைத்திருக்கிறார்கள். இந்து மதம் என்ற பெயரில் ஒருங்கிணைக்க பட்டிருக்காவிட்டால் அவன் தாழ்தப்பட்ட பவுத்தனாகவே தொடர்ந்திருப்பான், மதம் மாறும் தேவையே அவனுக்கு வந்திருக்காது, சலுகைகளும் அவன் முன்னேறும் வரை கிடைத்துக் கொண்டிருந்திருக்கும்.

தலித்துகள் இந்துக்கள் கிடையாது, எண்ணிக்கை பெரும்பாண்மைக்காக இந்துக்கள் ஆக்கப்பட்டவர்கள். ஆனது ஆயிற்று, இனி மாற்றுவது கடினம் தான், இந்து மதத்தின் மக்கள் தொகையைக் கட்டிக் காக்க 'காலில் இருந்து பிறந்தவன்' என்று இவர்களால் தூற்றப்படும் தலித்துகள் காலில் மதாச்சாரியர்கள் விழலாம். அதன் மூலம் நூற்றாண்டு காலமாக தலித்துகளுக்கு செய்த பாவங்களை, அநீதிகளைப் போக்கிக் கொள்ளலாம், அப்படி விழுந்தால், செய்தால் மதம் மாறிய தலித்துகள் கூட 'தாய்' மதம் திரும்புவார்கள், பிறகு ஏன் ஒரு தலித் மதம் மாறப் போகிறான் ? அதைச் செய்யாமல், இட ஒதுக்கீட்டை கேடயமாகப் பயன்படுத்துவதும், இந்து மதத்தில் இருந்து பிற மதத்திற்கு அவர்களுக்கு சலுக்கை பறிப்பு என, இட ஒதுக்கீட்டு சலுகையை துருப்புச் சீட்டாக பயன்படுத்துவதும் அரசாங்கத்தின் கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.

சுட்டிகள் :
வருண பேதத்தைக் கட்டிக்காக்க பயன்படும் இட ஒதுக்கீடு... !
இடஒதுக்கீடும், தேசிய'வாத' ஜல்லிகளும் !
தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லிக் கொள்வதில் தான் பெருமையாம்...!
மதமாற்றமா ? மனமற்றமா ?

தலித் கிறித்துவர்களுக்கான சிறப்பு சலுகைகள் மறுப்பும் அதன் மீட்பும் பற்றி,

பொது நலவழக்குத் தொடுக்க யாராவது முன் வரவேண்டும் !

தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு – சில எண்ணப் பகிர்தல்கள் (கோவி.கண்ணனுடன்) - பதிவர் ரத்னேஷ்

மதம் மாறுதலும், தீராத பழைய கணக்கும்.... - டிபிசிடி

தலித் கிறித்துவர்களுக்கு சலுகை கொடுத்தால் இந்து மதம் அழிந்துவிடுமா ? ரத்னேஷ் அண்ணாவிற்கு பதில்.

13 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//தலித்துகள் இந்துக்கள் கிடையாது, இந்துக்களாக்கிக் கொள்ளப்பட்டவர்களே. ஆனது ஆயிற்று, மாற்றுவது கடினம் தான், இந்து மதத்தின் மக்கள் தொகையைக் காக்க காலில் இருந்து பிறந்தவன் என்று இவர்களால் தூற்றப்படும் தலித்துகள் காலில் மதாச்சாரியர்கள் விழலாம். அப்படி விழுந்தால் மதம் மாறியவர்கள் கூட 'தாய்' மதம் திரும்புவார்கள், பிறகு அவன் ஏன் மதம் மாறப் போகிறான் ? அதைச் செய்யாமல், இட ஒதுக்கீட்டை கேடயமாகப் பயன்படுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.//

Excellent

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

எருமைமாடு வெட்டி பொங்கல் வைத்து சாமி குப்புடுபவர்களும்,

பன்னி(பன்றிதான்) வெட்டி பொங்கல் வைத்து சாமிக்குப் படைப்பவர்களும் எந்த மதம் சாமியோவ்?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியானந்தாவின் இன்றைய பொன்மொழி:

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

அண்ணாவின் பொன்மொழிகள் போல் கோவியானந்தாவின் பொன்மொழிகள் என்று ஒரு நூலே போடலாம் போலிருக்கே!

முகவை மைந்தன் சொன்னது…

//அதுவரை தொழில் அடிப்படையிலான சாதிகள், மனு அடிப்படை சாதிகளாக மாறிய காலம் அது//

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். சாதிகளாக இல்லாமல் தொழில் குடிகளாக வாழ்ந்திருந்தோம் என்றே நினைக்கிறேன். ஆனால் கல்வி எல்லோருக்கும் பொதுவாக இருந்திருக்கிறது. குடியால் உயர்வு தாழ்வு இல்லை.

//இந்திய சமயங்கள் ஒவ்வொன்றும் சிறுபான்மை தொகையைக் கொண்டதே//

உயர் தனி நீதிமன்றம் (Supreme Court)ஒப்புக் கொள்ள மறுத்து விட்டது.

//இந்து மதம் என்ற பெயரில் ஒருங்கிணைக்க பட்டிருக்காவிட்டால் அவன் தாழ்தப்பட்ட பவுத்தனாகவே தொடர்ந்திருப்பான், மதம் மாறும் தேவையே அவனுக்கு வந்திருக்காது, சலுகைகளும் அவன் முன்னேறும் வரை கிடைத்துக் கொண்டிருந்திருக்கும்.//

சலுகைக்கான தேவையே ஏற்பட்டிருக்காது.

//இட ஒதுக்கீட்டு சலுகையை துருப்புச் சீட்டாக பயன்படுத்துவதும் அரசாங்கத்தின் கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.//

:-((


சிறப்பான இடுகை!

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...


Excellent

2:53 AM, September 21, 2008
//

Radhakrishnan ஐயா,

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
எருமைமாடு வெட்டி பொங்கல் வைத்து சாமி குப்புடுபவர்களும்,

பன்னி(பன்றிதான்) வெட்டி பொங்கல் வைத்து சாமிக்குப் படைப்பவர்களும் எந்த மதம் சாமியோவ்?

10:56 AM, September 21, 2008
//

ஜோதிபாரதி, அதான் 'சாமியோவ்' னு சொல்லிட்டிங்களே, நம்ம பாசி மணி மக்கள். அவிங்களும் (எண்ணிக்கைக்காக) இந்துக்கள் தான்.

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கோவியானந்தாவின் இன்றைய பொன்மொழி:

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

அண்ணாவின் பொன்மொழிகள் போல் கோவியானந்தாவின் பொன்மொழிகள் என்று ஒரு நூலே போடலாம் போலிருக்கே!

11:03 AM, September 21, 2008
//

ஜோதிபாரதி,
அடுத்துக் கூட ஒண்ணு போட்டு இருக்கேன், முதலில் போட்டதற்கு காண்ட்ராஸ்ட் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said... சலுகைக்கான தேவையே ஏற்பட்டிருக்காது.//

அப்படியெல்லாம் இல்லை, அவர்களுக்கு சிறப்பு சலுகையே, அவர்களைத் தாழ்த்தி சிந்திக்கும் வலிமையை முடமாக்கியதால் கொடுக்கப்படுகிறது. அதனால் தான் சுட்டிக் காட்டுக்கிறேன், அவர்கள் இந்துக்களாக இருந்தால் என்ன கிறித்துவர்களாக இருந்தால் என்ன ? பவுத்தர்களாகவே இருந்தால் என்ன ? அவர்களின் நிலைக்கு கொடுக்கப்படவேண்டுயது சலுகைகள், எந்த மதத்தில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அல்ல.


//
சிறப்பான இடுகை!//

பாராட்டுக்கு நன்றி !

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவு, நண்பரே
அயோத்திதாச பண்டிதரின் மொழிகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
gangaikondaan@gmail.com

கோவி.கண்ணன் சொன்னது…

//கங்கை கொண்டான் said...
நல்ல பதிவு, நண்பரே
அயோத்திதாச பண்டிதரின் மொழிகளை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
gangaikondaan@gmail.com
//
கங்கை கொண்டான்,
பாராட்டுக்கு நன்றி !

இந்த கட்டுரையில் ஒரு சில தகவல்கள் இருக்கிறது.

Robin சொன்னது…

//இந்து மதத்தில் இருந்து பிற மதத்திற்கு அவர்களுக்கு சலுக்கை பறிப்பு என, இட ஒதுக்கீட்டு சலுகையை துருப்புச் சீட்டாக பயன்படுத்துவதும் அரசாங்கத்தின் கடைந்தெடுத்த அயோக்கியத் தனம்.//

100% உண்மை.

கையேடு சொன்னது…

சிறப்பான/அவசியமான இடுகை திரு. கோவி.கண்ணன்.

//இந்து பள்ளர்கள் (பல்லாக்கு தூக்கும் அடிமையாக இருந்தால் இந்த பெயர் வந்திருக்க வேண்டும்) என்று அழைக்கப்பட்டனர்.//


இப்பள்ளருக்கும் "பள்ளு" எனும் இலக்கியப்பாடல் வகைக்கும் தொடர்புண்டா??

ஊருக்கு வெளியே நிலப்பரப்பில் நீர்நிலைகள் தேங்கும் தாழ்வான/பள்ளமான இடங்களில் வசிப்பவர்கள்/வசிக்கவைக்கப்பட்டவர்கள் என்றொரு செய்தி உண்டு.

ஆனால், அதுதான் உண்மையா என்றெனக்குத் தெரியாது.

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said...
சிறப்பான/அவசியமான இடுகை திரு. கோவி.கண்ணன்.//

கையேடு, பாராட்டுக்கு நன்றி.

//இப்பள்ளருக்கும் "பள்ளு" எனும் இலக்கியப்பாடல் வகைக்கும் தொடர்புண்டா??

ஊருக்கு வெளியே நிலப்பரப்பில் நீர்நிலைகள் தேங்கும் தாழ்வான/பள்ளமான இடங்களில் வசிப்பவர்கள்/வசிக்கவைக்கப்பட்டவர்கள் என்றொரு செய்தி உண்டு.

ஆனால், அதுதான் உண்மையா என்றெனக்குத் தெரியாது.
//

எனக்கும் தரவுகள் காட்டும் அளவுக்கு விபரங்கள் தெரியவில்லை, ஒரு காலத்தில் பாணர்கள் இசை விற்பனராகவே இருந்தனர், திருவிளையாடல் படத்தில் கூட பாணபத்திரர் என்ற பாத்திரம் வரும், பள்ளர் / பறையர்கள் இசைக்கருவிகளை இயக்குவதில் வல்லவர்கள், அவர்களைத் தாழ்த்தியதால் அவர்களது இசையையும் இழவு வீட்டுக்கு பயன்படுத்துவதாக தாழ்த்திவிட்டனர்.
அவர்கள் அந்த கலையெல்லாம் எந்த குருவையும் வைத்துக் கற்றுக் கொள்வதை இல்லை, பார்த்து, பழகிக் கொள்ளுதலால் வழிவழியாக வாசித்துவருகிறார்கள். அவர்களது இசைக் கச்சேரியைக் கேட்கும் போதே எழுந்தாடச் சொல்லும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்