பின்பற்றுபவர்கள்

4 ஆகஸ்ட், 2009

பாலியல், ஆபாச கதை மற்றும் கூகுள்

இப்போதெல்லாம் பதிவு எழுதாத நாட்களில் கூட என வலைப்பதிவுக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு 400 வரை இருக்கிறது. அந்த எண்ணிக்கை 'ஆகா....நாம பிரபலப் பதிவரோ...அடுத்த தேர்தலில் பெரிய கட்சிகளிடம் சீட்டு கேட்கலாம்னு' ன்னு நினைக்க வைத்தது.

கொஞ்சம் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால், இலங்கை கூகுள் வழியாக 'பாலியல்', இந்திய கூகுள் வழியாக 'ஆபாசக் கதைகள்' என தோடுவோருக்கு எனது இடுகைகளை கூகுள் முதலில் காட்டுவதுதான் வருகை எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்குக் காரணம் என்று தெரிந்தது. :)

ஒரு இரண்டு மாதமாக எனது Live Traffic Feed கண்காணித்து வந்ததில் பாலியல் தொடர்பில் நான் எழுதிய பக்கங்கள், நான் பதிவுகள் எழுதாத நாட்களில் தொடர்ந்து திறக்கப்படுவதைக் கண்டேன். வாசித்தார்களா என்பது தெரியாது ஆனால் அப்படி தேடிவருபவர்களுக்கு எனது பதிவுகளில் எதுவும் கிடைத்திருக்காது வெறும் கண்ணோடு அனுப்புகிறோம் என்று நினைத்தால் கொஞ்சம் வருத்தம் :)

Live Traffic Feed வழியாக அவர்கள் எப்படி வந்தார்கள் என்ற இணைப்பை சொடுக்கினால், அவர்கள் தேடிய குறிசொற்களுடன் கூகுள் தேடுபொறியில் எனது பக்கங்களைக் காட்டுகிறது.

இதை ஒரு பதிவர் நண்பரிடம் சொன்னேன். என் பக்கத்துக்கு ஹிட் கூட்ட நானும் கூகுளில் அடிக்கடி தேடும் சொற்கள் வருவது போல் இடுகைகளை எழுதுகிறேன் என்றார் :)

என்ன கொடுமை பதிவர் நண்பர்களே !
பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன்.

46 கருத்துகள்:

Radhakrishnan சொன்னது…

ஹா ஹா கோவியாரே. இப்படியெல்லாம் கூட நடக்குமா?

நல்ல வழிமுறையைத்தான் கண்டுபிடித்திருக்கிறார் தங்கள் நண்பர். வருபவர்களின் எண்ணிக்கையை விட வாசிப்பவர்களின் எண்ணிக்கை முக்கியம் என்பதை அறிவுறுத்தும் நல்லதொரு இடுகை.

ஈரோடு கதிர் சொன்னது…

தலைவா... ஒன்னு செய்யலாமா...

பாலியல்னு போட்டு, தேடி இங்க வர்றவங்களுக்கு "அனானி"ட்ட சொல்லி பில்லி சூனியம் வெச்சு ஒரு பதிவு போட்ருவமா...

அப்புறமேட்டுக்கு அவுனுக நம்மூட்டு பக்கம் வரமாட்டானுங்கள்ள

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

அதிகமாக ஹிட் கிடைக்க நீங்கள் செய்த நுண்ணரசியலை ரசித்தேன் :)

எல்லாம் காலத்தின் கோலம் :)

குசும்பன் சொன்னது…

நான் முன்பே சொன்னேன் சரோஜாதேவியை தேடி என் பக்கத்துக்கு அதிகம் பேர் வருகிறார்கள் என்று, அப்ப நீங்க நம்பவில்லை:)

சென்ஷி சொன்னது…

:-)

சந்தோசம் மகிழ்ச்சி..

பி.ப. அப்பவே இதைப்பத்தி சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இருந்தாலும் உங்க‌ள் ப‌திவை ப‌டிக்க‌வென்று நிறைய‌ பேர் வ‌ந்து கொண்டுதான் இருக்கிறார்க‌ள். உங்க‌ளை பிர‌ப‌ல‌ ப‌திவ‌ர் என்று சொல்வ‌தைவிட‌ ந‌ல்ல‌ ப‌திவ‌ர் என்று சொல்வ‌து சரி.

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

நீங்கள் பிரபல பதிவரா இல்லையா என்பதை "காலம்" காட்டிடும்

பிரபல பதிவர் கோவி வாழ்க

புருனோ Bruno சொன்னது…

இனி இந்த பக்கம் தான் முதலில் வரும்

புருனோ Bruno சொன்னது…

//அதிகமாக ஹிட் கிடைக்க நீங்கள் செய்த நுண்ணரசியலை ரசித்தேன் :)

எல்லாம் காலத்தின் கோலம் :)//

வழி மொழிகிறேன்

சி தயாளன் சொன்னது…

:-)) All the best

ஜ்யோவ்ராம் சுந்தர் சொன்னது…

:)

ஒஹோ, அதான் மேட்டரா :)

Suresh Kumar சொன்னது…

எப்படியோ நல்ல டிராபிக் கிடைக்குதே என்று சந்தோஷ படுங்க

துபாய் ராஜா சொன்னது…

ஓஓஓஓ!!.நீங்கதானா எல்லோரும் தேடும் அந்த 'பிரா'பல பதிவர்!!

:))

அப்பாவி முரு சொன்னது…

காலம் கெட்டுப் போச்சுங்க

:(((

(காலம் என்ற வார்த்தையில் எவ்வித நுண்ணரசியலும் இல்லை எனபதை இங்கே தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்)

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//இதை ஒரு பதிவர் நண்பரிடம் சொன்னேன். என் பக்கத்துக்கு ஹிட் கூட்ட நானும் கூகுளில் அடிக்கடி தேடும் சொற்கள் வருவது போல் இடுகைகளை எழுதுகிறேன் என்றார் :)//

யாருப்பா அந்த பதிவர்

காலப் பறவை சொன்னது…

Ha HA HA

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

இப்படிப்பட்ட பதிவிற்கு...இப்படி ஒரு தலைப்பை போட்டது..

ம்..ஆசை யாரை விட்டது?

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கிரி சொன்னது…

என்ன கொடுமை!

ஹே! உடனே கோவி கண்ணன் ஹிட் ல ஒரு ஐம்பதாயிரத்தை குறைங்கப்பா ;-)

மறுபடியும் இதே தலைப்பை வைத்து ....அவ்வ்வ்வ்வ்

பதி சொன்னது…

என்ன கொடுமை சார் இது?

Blogger சொன்னது…

இந்த பதிவு அந்த எண்ணிக்கையினை இன்னும் கூட்டும்.

:-)

நான் சொன்னது…

ஸ்வாமி ஓம்கார்


அதிகமாக ஹிட் கிடைக்க நீங்கள் செய்த நுண்ணரசியலை ரசித்தேன் :)

எல்லாம் காலத்தின் கோலம் :)

s(h)ame to u

ஜெகதீசன் சொன்னது…

:)

உடன்பிறப்பு சொன்னது…

இதோ இப்போதே உங்கள் பலான இடுகைகளுக்கு என் தளத்தில் லிங்க் போட போகிறேன்

Unknown சொன்னது…

ha ha haha...


soooooooo funny... :)

Unknown சொன்னது…

I'll follow the same things :)

அது சரி(18185106603874041862) சொன்னது…

//
பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன்.
//

பாலியல், காமம், ஆபாசம்....இதெல்லாம் தமிழ் வார்த்தை தானே...அப்புறம் என்ன உகாண்டாகாரங்களா இந்த வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணி தேடுவாங்க?

:0)))

கிடுகுவேலி சொன்னது…

//
பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன்.
//

பாலியல், காமம், ஆபாசம்....இதெல்லாம் தமிழ் வார்த்தை தானே...அப்புறம் என்ன உகாண்டாகாரங்களா இந்த வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணி தேடுவாங்க?

:0)))

///

வழிமொழிகிறேனுங்க....!

விஜய் ஆனந்த் சொன்னது…

200-க்கு வாழ்த்துக்கள்!!!

இன்னும் ஒரு 50 எழுதினா 1000 வேற ஆயிடும்...

Dr.Sintok சொன்னது…

//பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன்.//

கேனத்தனமாக எதையாவதை வாந்திஎடுப்பதில் உலகத்தில் நீங்க தான் முன்னனி......

//அதிகமாக ஹிட் கிடைக்க நீங்கள் செய்த நுண்ணரசியலை ரசித்தேன் :)//

ஹிட்டுக்காக் அண்ணன் காம கதைகள் போட்டாலும் போடுவார்....அண்ணனும் தமிழன் தானே...தமிழனுக்கு காம கதைகள் படிக்கவும் நம்ப அண்ணனைபோல் காமகதைகள் எழுதவும் தான் இனையம் இருக்கு....

*&%#$()*(%#@$&*))

கோவி.கண்ணன் சொன்னது…

//Dr.Sintok said...

கேனத்தனமாக எதையாவதை வாந்திஎடுப்பதில் உலகத்தில் நீங்க தான் முன்னனி......//

உலக அளவு புள்ளி வெவரம் தெரிஞ்சி இருக்கும் டாக்டருக்கு இதுவரை எதுவும் கின்னஸ் பரிசு கிடைக்கலையா ? முயற்சிக்கலாம்.

//ஹிட்டுக்காக் அண்ணன் காம கதைகள் போட்டாலும் போடுவார்....அண்ணனும் தமிழன் தானே...தமிழனுக்கு காம கதைகள் படிக்கவும் நம்ப அண்ணனைபோல் காமகதைகள் எழுதவும் தான் இனையம் இருக்கு....//

ஆகா...! என் மனசாட்சியின் குரல் மாதிரியேஎ இருக்கு, மன ஊடுறுவலும் தெரியுமா ? நல்ல பைத்தியக்கார டாக்டர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கதியால்


//
பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன்.
//

பாலியல், காமம், ஆபாசம்....இதெல்லாம் தமிழ் வார்த்தை தானே...அப்புறம் என்ன உகாண்டாகாரங்களா இந்த வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணி தேடுவாங்க?

:0)))

///

வழிமொழிகிறேனுங்க....!
//

எப்படி இப்படியெலலம் ?

பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன் என்றது மொழிக் குறித்தது அல்ல, அதன் பொருள் குறித்தது.

தமிழர்கள் பாலியல் இணையப் பக்கங்களை தேடுவதில் உலக அளவில் முன்னோடியாக இருக்கிறார்கள் என்று சொல்வதாகப் பொருள். கலாச்சார காவலர் வேடதாரிகள் இதை மறுப்பார்கள்.

Dr.Sintok சொன்னது…

//பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி என்று நினைக்கிறேன் என்றது மொழிக் குறித்தது அல்ல, அதன் பொருள் குறித்தது.

தமிழர்கள் பாலியல் இணையப் பக்கங்களை தேடுவதில் உலக அளவில் முன்னோடியாக இருக்கிறார்கள் என்று சொல்வதாகப் பொருள்.//

உங்களுக்கு இந்த புள்ளி விவரம் எல்லாம் எங்க கிடைகுதோ..அங்கேதான் எனக்கும் புள்ளி விவரம் கிடைக்குது நீங்கதான் கேனத்தனமாக எதையாவதை வாந்திஎடுப்பதில் உலகத்தில் முன்னனி என்று....

அண்ணனுக்கு உலக மொழிகள் அனைத்தும் தெரியுமோ...??மத்த மொழிகாரன் இதை தேடுவது இல்லை யா....??


//மன ஊடுறுவலும் தெரியுமா ? //
மன ஊடுறுவல் மட்டுமா... வாயில் இருந்து லிங்கம்கூட எடுக்க தெரியும்..
ஒரு நல்ல பதிவா போடுங்க ஒரு platinum லிங்கமா எடுத்து கொடுக்கிறேன்.:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//Dr.Sintok said...
உங்களுக்கு இந்த புள்ளி விவரம் எல்லாம் எங்க கிடைகுதோ..அங்கேதான் எனக்கும் புள்ளி விவரம் கிடைக்குது நீங்கதான் கேனத்தனமாக எதையாவதை வாந்திஎடுப்பதில் உலகத்தில் முன்னனி என்று....

அண்ணனுக்கு உலக மொழிகள் அனைத்தும் தெரியுமோ...??மத்த மொழிகாரன் இதை தேடுவது இல்லை யா....??

//

வாந்தி, பித்தம் மயக்கம் இன்னும் என்ன என்ன கன்றாவி வியாதிகள் கூட உங்களுக்கு இருக்கட்டும், அதையெல்லாம் இங்க வந்து கொட்டாதிங்க.

மருத்துவம் படித்திருந்தால் பிறர் வாந்தியை குணப்படுத்தலாம் தானே வாந்தி எடுப்பதை உடனடியாக தடுக்க முடியாது. 'கேனைத் தனமான' சொற்களை நான் பயன்படுத்துவதில்லை அதனால் எளிமையாகச் சொல்லிவிடுகிறேன்.

நான் ஏற்கனவே இந்திய அளவில் கூகுளில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடுவதில் ஒவ்வொரு மொழி சார்ந்து எந்தச் சொற்கள் தேடப் படுகிறது என்று பட்டியல் இட்டு ஒரு பதிவை இட்டு இருக்கிறேன்.

மரியாதைத் தேவை இல்லை, ஆனால் அவமாரியாதை தரும் சொற்களைப் பயன்படுத்தினால் பொறுத்துக் கொள்வது உங்கள் வீட்டு நாய்களுக்கு பிடித்தமானதாக இருக்கலாம். மற்றவர்களிடம் காட்டினால் திருப்பி பேசுவார்கள்.

கருத்துக்கு எதிர்கருத்தாக / எதிர்வினையாக பொருளை ஒட்டிய சரியான சொற்களைப் பயன்படுத்தவதற்கு பொறுமையற்றவர்களின் கருத்துகளைப் பெற நான் எழுதுவதில்லை.

நீங்களெல்லாம் கருத்து சொல்லவேண்டும் என்று நான் நினைக்கவில்லை, விரும்பவில்லை என்று சொல்ல விருப்பம் இல்லை என்றாலும், என் பக்கத்தில் நான் எதை எழுதலாம் என்பது என்னுடைய உரிமை அதை நீங்கள் தீர்மாணிக்க முடியாது

முதலில் தன்மையாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் அதன் பிறகு நீங்கள் கருத்து வாந்தி எடுக்கலாம், அல்லது எடுப்பவர்களை குணப்படுத்த முயற்சிக்கலாம்.

வால்பையன் சொன்னது…

/தேடிவருபவர்களுக்கு எனது பதிவுகளில் எதுவும் கிடைத்திருக்காது வெறும் கண்ணோடு அனுப்புகிறோம் என்று நினைத்தால் கொஞ்சம் வருத்தம் :)//


ஆமா வருத்தமா தான் இருக்கு!
அதனால ரெண்டு கிளுகிளுப்பு கதை எழுதுங்க!

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

எஸ்கியூஸ் மீ... சிங்கபூருக்கு எந்த பக்கம் போகனும்....

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...
/தேடிவருபவர்களுக்கு எனது பதிவுகளில் எதுவும் கிடைத்திருக்காது வெறும் கண்ணோடு அனுப்புகிறோம் என்று நினைத்தால் கொஞ்சம் வருத்தம் :)//


ஆமா வருத்தமா தான் இருக்கு!
அதனால ரெண்டு கிளுகிளுப்பு கதை எழுதுங்க!

5:13 PM, August 05, 2009
//

அவ்வளவெல்லாம் கடினப்படவேண்டாம், சுந்தர் எழுதும் அதீதன் கதைகளை பரிந்துரை செய்வோம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
எஸ்கியூஸ் மீ... சிங்கபூருக்கு எந்த பக்கம் போகனும்....

5:16 PM, August 05, 2009
//

நீ எப்ப டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளப் போகிறாய்.

:)

kumar சொன்னது…

கோவி கண்னன் அவ்ர்களுக்கு உங்களுடைய பதிவில் நியாயமான‌ பதிலைவிட அடுத்தவங்களை வெறுப்பேத்துகிற மாதிரிதான் தெரியுது, கொஞ்ஜம் நாகரீகமா பதில் சொல்ல கத்துக்கோங்க...

kumar சொன்னது…

?

கோவி.கண்ணன் சொன்னது…

//kumar said...
கோவி கண்னன் அவ்ர்களுக்கு உங்களுடைய பதிவில் நியாயமான‌ பதிலைவிட அடுத்தவங்களை வெறுப்பேத்துகிற மாதிரிதான் தெரியுது, கொஞ்ஜம் நாகரீகமா பதில் சொல்ல கத்துக்கோங்க...
//

நாம எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தானே எதிர்வினை கிடைக்கும், இப்ப நீங்கள் என்னை சீண்டனும் என்று வருகிறீர்கள், நான் அதைப் புரிந்து கொள்ளமல் ரொம்ப சாதாரணமாக எடுத்துக் கொண்டு இருந்தால் உங்களுக்கு மேலும் எரிச்சல் வருமா வராதா ?

நம் உடலில் கூட அரிக்கிற இடத்தில் உதாசீனப்படுத்தாமல் கொஞ்சமாவது சொறிகிறோமா இல்லையா :)

Dr.Sintok சொன்னது…

அண்ணன் ரொம்ப டென்சன்னோ?
கேனத்தனம் என்பது பரவலாக பயனீட்டில் உள்ள வார்த்தைதான்..
அது அவமரியாதை சொல் என்று சொல்லி என் அறிவு கண்னை திரந்ததுக்கு நன்றி...அந்த சொல்லுக்காக வருந்துகிறேன்.

கேனையன் = மடையன்
கேனத்தனம் = மடத்தனம்
இது அவமரியாதை என்றால் நீங்கள் சொன்ன ”பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி” என்பது கூட என்னை போன்ற தமிழனுக்கு அவமரியாதைதான்.

உங்கள் கூற்றுக்கு சப்பைகட்டு கட்ட உங்கள் பழைய பதிவை(வாந்தையை) காட்ட வேண்டாம்....
உங்கள் கூற்று உண்மை என்று நிருபிக்க முறை படி ஆய்வு செய்து இனையத்தில் எத்தனை உலக மொழிகள் உள்ளன, அவைகளை பயன்படுத்தும் மக்கள் தொகை என்ன, அவர்கள் தேடுபொறிகளில் தேடும் வார்த்தைகள் என்ன என்று முறைபடி ஆய்வு மூலம் நிருபிக்க முடியாம....?


உங்கள் விருப்பத்துக்கு தமிழனை அவமதிப்பு செய்து பதிவு போடுவிங்க,
அதை கேனத்தனமான வாந்திஎடுப்பு என்று சொன்னா மற்றும் லொபொ லொபொன்னு குதிப்பிங்கெ...

//முதலில் தன்மையாகப் பேசக் கற்றுக் கொள்ளுங்கள் அதன் பிறகு நீங்கள் கருத்து வாந்தி எடுக்கலாம், அல்லது எடுப்பவர்களை குணப்படுத்த முயற்சிக்கலாம்.//

தன்மை பதிவை பொருத்து மாறுபட்டே இருக்கும்..............

இதுங்கும் லொபொ லொபொனு குதிக்காம மறுமொழி பிடிக்காட்டி delete செய்யவும்... அதை விட்டு விட்டு என்னை பற்றி gtalk-கில் அலச வேண்டாம் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//கேனையன் = மடையன்
கேனத்தனம் = மடத்தனம்
இது அவமரியாதை என்றால் நீங்கள் சொன்ன ”பாலியல், காமம், ஆபாசம் போன்றவற்றை இணையத்தில் தேடுவதில் தமிழன் தான் முன்னனி” என்பது கூட என்னை போன்ற தமிழனுக்கு அவமரியாதைதான்.//

சென்னையில் ங்கோத்தா என்பது பலருக்கு இயல்பான சொல், அதையே பிற மாவட்டங்களில் பயன்படுத்தினால் கொடுப்பதை வாங்கி வரனும்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஏற்பு இல்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள், என்னை கேனையன் என்று சொல்வதற்கு உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள் ?

மலேசியாவில் இந்தியர்கள் போராடுகிறார்கள் என்று சொன்னால் அங்கு புரோட்டா வாங்கித் தின்றுவிட்டு தூங்கிக் கொண்டு இருப்பவரையும் குறிப்பது அல்ல. உண்மையில் போராடுபவர்கள் குறித்த சொல் தான் அது. பொதுப்படையாக குறிக்கும் பொழுது எக்சப்சன்களை யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதற்கான தேவை இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியர்கள் பாலியலில் கில்லாடிகள் என்று பொதுக்கருத்து இருந்தால், 'நான் பிரம்மச்சாரின்னு' ஒரு சாமியார் சொன்னால் அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.

பாலியல் பற்றி தெரிந்து கொள்ளத் தேடுகிறார்கள் என்று சொல்வதில் என்ன தவறைக் கண்டீர்கள் ? நான் அதைக் குற்றச் சாட்டாக இங்கு சொல்லவில்லையே, பிறகு ஏன் கலாச்சார காவலர் போல் பாய்கிறீர்கள் ?

உங்களுக்கு புள்ளி விவரங்கள் வேண்டுமென்றால் கூகுளிடம் கேளுங்கள் தருவார்கள். கூகுளில் அப்படி ஒரு தகவல் இருப்பதாக நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில் தான் நான் அதைக்குறிப்பிட்டேன்.

//தன்மை பதிவை பொருத்து மாறுபட்டே இருக்கும்..............

இதுங்கும் லொபொ லொபொனு குதிக்காம மறுமொழி பிடிக்காட்டி delete செய்யவும்... அதை விட்டு விட்டு என்னை பற்றி gtalk-கில் அலச வேண்டாம் :)//

உங்களிடம் குதிப்பதற்கு எனக்கு உங்களிடம் எந்த விதத்திலும் தொடர்புகிடையாது. அதில் விருப்பமும் இல்லை.

புரொபைலில் மலேசியா என்று போட்டு இருந்ததால்
விக்னேஷ்வரனிடமும், அவர் சொன்னதன் பேரில் ஜோசப் பால்ராஜிடம் தான் கேட்டேன்.

அதை ஒரு குற்றம் போல் எனது முகமூடியைக் கழட்டப் போவது போல் அதை இங்கு பொதுத்தளத்தில் குறிப்பிடும் உங்களைப் பற்றி எனக்கு இதற்கு மேல் பேச விருப்பம் கிடையாது.

உங்களுக்கு பிடிக்காத செயல்களை செய்யச் சொல்லி நான் வற்புறுத்தவில்லை.

kumar சொன்னது…

நாம எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தானே எதிர்வினை கிடைக்கும், இப்ப நீங்கள் என்னை சீண்டனும் என்று வருகிறீர்கள், நான் அதைப் புரிந்து கொள்ளமல் ரொம்ப சாதாரணமாக எடுத்துக் கொண்டு இருந்தால் உங்களுக்கு மேலும் எரிச்சல் வருமா வராதா ?

நம் உடலில் கூட அரிக்கிற இடத்தில் உதாசீனப்படுத்தாமல் கொஞ்சமாவது சொறிகிறோமா இல்லையா :)

உங்களோட பதில் முறையா தெரியல,

பின்னூட்டம் இடுகிறவர்களை பார்த்தால் அரிக்கிற மாதிரி தெரிகிறதா?

புரியல!!!

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

வாந்தி எடுத்தா உடம்பில் இருக்கும் பைசன் தன்மை எல்லாம் வெளியாகி உற்சாகம் ஆவாங்கனு சொல்றாங்களே உண்மையா டாக்டர்?

கோவி.கண்ணன் சொன்னது…

//kumar said...
நாம எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித்தானே எதிர்வினை கிடைக்கும், இப்ப நீங்கள் என்னை சீண்டனும் என்று வருகிறீர்கள், நான் அதைப் புரிந்து கொள்ளமல் ரொம்ப சாதாரணமாக எடுத்துக் கொண்டு இருந்தால் உங்களுக்கு மேலும் எரிச்சல் வருமா வராதா ?

நம் உடலில் கூட அரிக்கிற இடத்தில் உதாசீனப்படுத்தாமல் கொஞ்சமாவது சொறிகிறோமா இல்லையா :)

உங்களோட பதில் முறையா தெரியல,

பின்னூட்டம் இடுகிறவர்களை பார்த்தால் அரிக்கிற மாதிரி தெரிகிறதா?

புரியல!!!

12:25 AM, August 06, 2009
//

எல்லோரையும் சொல்வது இல்லிங்க. நம் எழுத்துக்களைப் பிடிக்கிறதோ இல்லையோ....படித்துவிட்டுதான் திட்டுகிறார்கள், அதற்கு நேரம் ஒதுக்கிறார்கள் என்று எதிர்ம்றைக் கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்புக் கொடுப்பவன் நான். வசையாடலாக பின்னூட்டம் வந்தால் அனானிகளாக இருந்தா நீக்கிவிடுவது உண்டு. மற்ற அறிவு சீவிகளுக்கு மட்டும்தான் பதில் சொல்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்