பின்பற்றுபவர்கள்

1 செப்டம்பர், 2008

எதாவது செய்யனும் பாஸ்...

பிறக்கும் அந்த நொடிவரை இரத்தமும் சதையுமாக இருந்த ஒரு குழந்தை தன் பெற்றோர்களாலேயே புறக்கணிக்கப்படும் கொடுமையே வெறெந்த கொடுமையிலும் முதன்மையாகத் தெரிகிறது. எந்த ஒரு உயிரினமும் தம் குழந்தைக்கு பாதுகாப்பான இடம் தேடிவிட்டு, பெற்றுக் கொண்டு அதன் பிறகு அவற்றை வளர்த்து எடுத்து பருவம் அடைந்தவுடன் பிரித்து அனுப்புகிறது. அடைகாக்கும் கோழியும் அதன் சொல்லிக் கொடுக்கும், கிடைத்த உணவை பகிரும் பொறுப்பும், பின்பு வளர்ந்த குஞ்சுகளை கொத்தி விரட்டிவிட்டு அது தன் வழியாக செல்லக் கூடிய உறுதியைக் கொடுக்கும்.

வேண்டாத கர்பம் என்று வெறுக்கப்பட்டு அது குழந்தை ஆவது மனித இனத்தின் சாபக் கேடுகள், இதற்குக் காரணம் பொறுப்பற்ற ஆண் / பெண் இருவருமே தான். எதோ இரு குப்பைகள் சேர்ந்து குப்பைத் தொட்டிக்காக குழந்தை பெற்று வீசி எரியும் போது அந்த குழந்தை என்ன பாவம் செய்தது என்றே என்னத் தோன்றுகிறது.

"அனாதைகளாக யாரும் பிறப்பது இல்லை, பிறந்த பின்னரே அனாதையாக்கப்படுகின்றனர்" என்று யாரோ சொன்னது மிகச் சரிதான். இந்த உலகில் பிறந்தவர்களுக்கு உடனடியாக கிடைக்க வேண்டியது பெற்றோர்களின் அன்புதான். பெற்றோர் யார் என்பதே தெரியாமல் ஒரு குழந்தை வளர்ந்து அதுபற்றிய ஏக்கமே இல்லாதிருக்க வேண்டுமென்றால் அவை மனிதர்களுக்கு இடையே வளராது இருந்தால் தான் முடியும். ஆனால் இங்கே பெற்றோர் புறக்கணிப்பால் வளரும் குழந்தைகள், சமுகத்தில் பிற குழந்தைகள் தம் பெற்றொர்களுடன் செல்வதைப் பார்க்கும் போது, ஏற்படும் அவர்களின் பெற்றோர் குறித்த ஏக்கத்தை கடவுளாலும் புரிந்து கொள்ள முடியாது. அப்படி கடவுளால் புரிந்து கொள்ளப்படுமெனில் அப்படிப்பட்ட குழந்தைகள் பிறந்திருக்கவே பிறந்திருக்காது.

வெறெந்த தானங்களைக் காட்டிலும், இழப்புகளைக் காட்டிலும் பெற்றோர்களை இழந்து 'அனாதை' என்ற பெயரில் வாடும் குழந்தைகளின் துயரே மிகப் பெரியது. இதுபோன்ற குழந்தைகள் இருக்கும் இடத்திற்குச் மாதம் ஒருமுறை சென்று நமது அன்பை அவர்களுக்குத் தெரிவித்தால், உலகத்தில் பெற்றோர்கள் மட்டுமே அன்பைத் தருபவர்கள் அல்ல என்பதை அந்த குழந்தைகள் விளங்கிக் கொள்ளும். பெற்றோர்களுடன் இருப்பதுதான் குடும்பம் / வாழ்க்கை என்ற எண்ணமெல்லாம் கொஞ்சம் குறைந்து தங்களை அறிந்தவர் அனைவருமே நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நம்மீது அன்பு செலுத்துபவர்கள் தான் என்ற எண்ணம் ஏற்படும், தாழ்வுணர்ச்சி நீங்கி, நம்மில் ஒருவராகவே அவர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்கையை அமைத்துக் கொள்ள வழிவகுக்கும்.

பசி / பட்டினி / பஞ்சம் இவையெல்லாம் இயற்கையினால் ஏற்படும் இடர்கள். ஆதரவற்றோராக பிறப்பது இயற்கையின் செயலா ? வெறெந்த கொடுமையைவிட ஆதரவற்ற சிறுவர் / சிறுமிகளுக்கு பொருளுதவி செய்ய நமக்கு வசதி இல்லாவிட்டாலும், அவர்களுடன் பழகி, அவர்களுள் ஒருவராக நம்மை இணைத்துக் கொண்டு வாழ்வதில் கிடைக்கும் மன நிம்மதியையும், மகிழ்வையும், கருணை உணர்வையும் எந்த ஒரு இறைவழிபாடும் நமக்கு தந்துவிடாது.

பிறக்கும் முன்பும், இறந்த பிறகும் நாம் கூட ஆதரவற்றோர்களே !

*************

செயல் வடிவம் பெரும் முன், எண்ணங்களை எழுதத் தூண்டிய பதிவர் narsim அவர்களுக்கு நன்றி !

15 கருத்துகள்:

அபி அப்பா சொன்னது…

1

அபி அப்பா சொன்னது…

நம்பர் ஒன் பதிவுன்னு சொல்ல வந்தேங்க:-))

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...
1
//

அபி அப்பா,
1 ம் செய்யனுமா ? 1ம் செய்ய வேணாமா ? புதசெவி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...
நம்பர் ஒன் பதிவுன்னு சொல்ல வந்தேங்க:-))

5:54 PM, September 01, 2008
//
அபி அப்பா,
நன்றி, காமடி கீமடி பண்றிங்களோன்னு நினச்சேன் !

அபி அப்பா சொன்னது…

ஒன்னியும் ஓணாம்ன்னு செந்தழல் சொல்றார். நான் செஞ்சா நல்லா இருக்குமேன்னு தான் சொல்றேன் கோவியாரே!

விஜய் ஆனந்த் சொன்னது…

// பிறக்கும் முன்பும், இறந்த பிறகும் நாம் கூட ஆதரவற்றோர்களே ! //

சிந்திக்க வேண்டிய வரிகள்...


கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டிய கருத்து...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

மிக நல்லப்பதிவு அண்ணே.

எங்கள் வீட்டு பெரியவர்களது நினைவுதினங்களுக்கு நாங்கள் எல்லோரும் தஞ்சையில் உள்ள சேவா சமாஜம் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவளித்து, அவர்களோடு உணவருந்துவது வழக்கம். கல்லூரி காலங்களில் என் பிறந்த நாளும் அப்படித்தான் நான் கொண்டாடுவேன்.
சென்னையில் இருந்த போதும் சென்னையில் உள்ள ஒரு இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்தால் செல்வது வழக்கம். பெங்களூரில் இருந்த போதும் பாதிரியாராக உள்ள எனது உறவினரின் கண்காணிப்பில் இருக்கும் இல்லத்திற்கு சென்று அந்த குழந்தைகளோடு விளையாடிவிட்டு வருவேன்.

உண்மையிலேயே அந்த குழந்தைகளுக்கு பணம், பொருள் ஆகியவற்றை மட்டும் உதவினால் போதாது. அவர்களோடு சிறிது நேரத்தை செலவிட வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்கள் எனது வருகைக்காக காத்திருப்பார்களே என்பதால் பல வாரங்கள் நான் ஊருக்கு செல்வதைக்கூட தவிர்த்தது உண்டு. அங்குள்ள பலருக்கு தங்களது பிறந்த நாளே தெரியாது. ஆனால் என் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தது என்னால் மறக்க முடியாத ஒன்று.
இப்போதும் இந்தியா சென்று திரும்பும் போது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாலமன் சொசைட்டி என்ற இல்லத்திற்கு சென்று கொண்டுதான் உள்ளேன்.

narsim சொன்னது…

அருமையான பார்வை & கருத்து..

நன்றி கோவியாரே..

நர்சிம்

Kanchana Radhakrishnan சொன்னது…

அருமையான பதிவு...என் திருமண நாளன்று..ஒவ்வொரு வருஷமும் நானும்,என் மனைவியும் அனாதை விடுதிகளுக்குச் சென்று இயன்ற பொருளுதவி..பல ஆன்டுகளாகச் செய்து வருகிறோம்.இப்போதெல்லாம்..இது போன்ற இடங்களில்..எதேனும் ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுத்து அதன் படிப்பிற்கு உதவி செய்யும் முறையும் உள்ளது.முடிந்தவர்கள் அதையும் செய்யலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//kanchana Radhakrishnan ..."எதாவது செய்யனும் பாஸ்...":

அருமையான பதிவு...என் திருமண நாளன்று..ஒவ்வொரு வருஷமும் நானும்,என் மனைவியும் அனாதை விடுதிகளுக்குச் சென்று இயன்ற பொருளுதவி..பல ஆன்டுகளாகச் செய்து வருகிறோம்.இப்போதெல்லாம்..இது போன்ற இடங்களில்..எதேனும் ஒரு குழந்தையைத் தேர்ந்தெடுத்து அதன் படிப்பிற்கு உதவி செய்யும் முறையும் உள்ளது.முடிந்தவர்கள் அதையும் செய்யலாம். //

இராதகிருஷ்ணன் ஐயா,

உங்கள் இருவரின் சேவை போற்று தலுக்குறியது. பாராட்டுக்கள்

இங்கு சிங்கையில் 'அனாதை' என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை, 'ஆதரவற்றோர்' என்ற பொருளில் சொல்கிறார்கள், தாங்களும் இந்த சொல்லையே பயன்படுத்துங்கள். அனாதைவிடுதி என்பதற்குப் பதிலாக 'ஆதரவற்றோர் நல இல்லம்' என்று சொல்லுவதே நலம். நமக்குத்தான் தெரியுமே 'அனாதை' என்ற சொல்லே பழிப்பதற்காகத்தான் பலர் பயன்படுத்துகிறார்கள், நாமும் அவ்வாறு சொல்லவேண்டாம். இந்த பதிவில் அநத சொல்லை ஒரு இடத்தில் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதற்காக ஒரு வரியில் பயன்படுத்தி இருக்கிறேன்.

அன்புடன்,

கோவியார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//narsim said...
அருமையான பார்வை & கருத்து..

நன்றி கோவியாரே..

நர்சிம்
//

narsim பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜோசப் பால்ராஜ் said...
மிக நல்லப்பதிவு அண்ணே.

எங்கள் வீட்டு பெரியவர்களது நினைவுதினங்களுக்கு நாங்கள் எல்லோரும் தஞ்சையில் உள்ள சேவா சமாஜம் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவளித்து, அவர்களோடு உணவருந்துவது வழக்கம். கல்லூரி காலங்களில் என் பிறந்த நாளும் அப்படித்தான் நான் கொண்டாடுவேன்.
சென்னையில் இருந்த போதும் சென்னையில் உள்ள ஒரு இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் இருந்தால் செல்வது வழக்கம். பெங்களூரில் இருந்த போதும் பாதிரியாராக உள்ள எனது உறவினரின் கண்காணிப்பில் இருக்கும் இல்லத்திற்கு சென்று அந்த குழந்தைகளோடு விளையாடிவிட்டு வருவேன்.

உண்மையிலேயே அந்த குழந்தைகளுக்கு பணம், பொருள் ஆகியவற்றை மட்டும் உதவினால் போதாது. அவர்களோடு சிறிது நேரத்தை செலவிட வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்கள் எனது வருகைக்காக காத்திருப்பார்களே என்பதால் பல வாரங்கள் நான் ஊருக்கு செல்வதைக்கூட தவிர்த்தது உண்டு. அங்குள்ள பலருக்கு தங்களது பிறந்த நாளே தெரியாது. ஆனால் என் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தது என்னால் மறக்க முடியாத ஒன்று.
இப்போதும் இந்தியா சென்று திரும்பும் போது சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சாலமன் சொசைட்டி என்ற இல்லத்திற்கு சென்று கொண்டுதான் உள்ளேன்.

6:15 PM, September 01, 2008
//

ஜோசப் பால்ராஜ்,

கிறித்து வழியில் செல்பவராக நீங்கள் இருப்பதால், அதன் இயல்பாக சேவை மனப்பாண்மையுடன் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள். உங்கள் சேவையும், செயலும் போற்றத்தக்கது, பாராட்டத்தக்கது.

கோவி.கண்ணன் சொன்னது…

//விஜய் ஆனந்த் said...
// பிறக்கும் முன்பும், இறந்த பிறகும் நாம் கூட ஆதரவற்றோர்களே ! //

சிந்திக்க வேண்டிய வரிகள்...


கண்டிப்பாக செயல்படுத்தப்பட வேண்டிய கருத்து...

6:13 PM, September 01, 2008
//

விஜய் ஆனந்த்,
எல்லோரும் சேர்ந்து செயல்படுவோம்

மங்களூர் சிவா சொன்னது…

அருமையான பதிவு
சிந்திக்க வேண்டிய விசயம்.

பரிசல்காரன் சொன்னது…

சபாஷ் பதிவு!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்