பின்பற்றுபவர்கள்

5 நவம்பர், 2007

கைப்புள்ள VS கட்டதுரை ( தீபாவளி சிறப்பு நகைச்சுவை)

ஊருக்குள் கலவரம் பண்ணும் திட்டத்துடன் கைப்புவும் அல்லக்கைகள் மற்றும் அல்வா வாசு திட்டத்துடன் பேசிக் கொண்டு வருகிறார்கள்

கைப்புள்ள : "டேய். இன்னிக்கு ஊருக்குள்ள பெருசா ஒரு கலவரம் நடக்கனும்..."

அல்வா வாசு : "என்னண்ணே... என்ன ஆச்சு ?"

கைப்புள்ள : "நா ஒரு ரவுடி... ஒரு பயலுக்கும் என்னிய பாத்தா பயமில்லாம போச்சு ..."

அல்வா வாசு : "ஏன்ணே..... "

கைப்புள்ள : மூஞ்சிகூட கழுவாம டீ போடுவானே அவனுக்கு கூட என்னிய பாத்தவுடனே நக்கலு... கடையை அடச்சிட்டு ...."

அல்வா வாசு : "என்னாண்ணே என்னா செஞ்சான் ? "

கைப்புள்ள : "அவன் போடுற கழனி தண்ணிமாதிரி டீயை கூட இல்லே ஊத்தி மூடியாச்சுங் கிறான்டா ... "

அல்வா வாசு : "அட விடுங்கண்ணே ... அங்கன கட்டதுரை தீபாவளி பட்டாசு கடை போட்டு இருக்கான் பாருங்க"

கைப்புள்ள : "கலவரம் பண்ணலாம்னு நினைச்சேன்... அனுகுண்டே போடலாம்ங்கிறே....இன்னிக்கு முதல்ல சரவெடி வெடிச்சி ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது...
தான்"

அல்லக்கைகள் : "ஊருக்குள்ள தீபாவளிய நீங்க தான் மொதல்ல ஆரம்பிச்சு வக்கப்போறிங்க..."

கைப்புள்ள : "டேய் தீபாவளி என்னடா தீபாவளி ... அண்ணன் எரிமலையாய் மாறி பாத்ததில்லையே நீய்யீ... "

அல்லக்கைகள் : "இல்லண்ணே.... "

கைப்புள்ள : "அடேய் நாங்கெல்லாம் பீடிக்கு நெருப்பு கேட்கமாட்டோம்......"

அல்வா வாசு : "பத்தவைக்காமலேயே கடிச்சு திண்ணுடுவிங்களா ? "

கைப்புள்ள : "லொள்ளு... ? ....லட்சுமி வெடியையே பத்தவச்சு பீடியாக குடிப்போம்...பாக்கத்தானே போறே... "

அலட்சியமாக நடந்து சென்று கட்டத்துரையின் வெடிக்கடைக்கு முன்பு சென்று ... தலையில் சுற்றிக் கொண்டு... வேட்டியை மேலே தூக்கி அண்டர்வேர் தெரிய கட்டிக் கொண்டு சவுண்ட் விட ஆரம்பிக்கிறார்

கைப்புள்ள : டேய் கட்டதுரை.... நீ சரியான ஆம்பளையாக இருந்தா வெளிய வாடா

கட்டதுரை வெளியே வந்து முறைக்கிறார்

கைப்புள்ள : என்னாடா வெடி வச்சிருக்கே....

கட்டதுரை 'இன்னிக்கு இவனை ... முடிச்சுட வேண்டியதுதான் ' என்று முறைத்துக் கொண்டே

கட்டதுரை : "யானை வெடி....லட்சுமி வெடி ... உனக்குன்னே பெரிய சாட்டையே இருக்கு"

கைப்புள்ள : "என்னது சின்னப் பசங்க வெடிக்கிற வெடியா ? டைம் பாம்...கன்னி வெடி, நாட்டு வெடிகுண்டெல்லாம் இல்லையா .... அதெல்லாம் இல்லாம என்னடா வெடிக்ககடை ? ஏ வென்று ..."

கட்டதுரை மனதுக்குள்

'மகனே வெடிகுண்டா வேணும் வெடுகுண்டு... இருடி...உன்னை புஸ்வானம் ஆக்குறேன்....'

கைப்புள்ள : "டேய் ... கட்டதுரை ஒரு பீடி கொடு......"

கட்டதுரை கடுகடுவென முகத்தை...'விட்டுப் பிடிப்போம் ' என நினைத்து ஒரு பீடியை எடுத்துக் கொடுக்கிறார்....

கைப்புள்ள : "டேய்... நான் ஆனை வெடி கேட்டா காஜா பீடியை தர்ரே.....ஆமா... உனக்கு ரவுடிங்க பாசை எல்லாம் பிரியாதா ? "

கட்டைத் துரை : "டேய் நானே ஒரு ரவுடி...தென்னந் தோப்புக்குள்ள குமுறுனதை மறந்திட்டியா ? வழக்கமாக உதை வாங்குபவன் தானே நீ " என்று அலட்சியமாக பார்க்கிறார் மீண்டும்...

கைப்புள்ள : "அன்னிக்கு பேச்சு அன்னிக்கு...இன்னிக்கு என் ரேஞ்சே வேற மேல கை வச்சுதான் பாறேன்..."

கட்டதுரை : "ஒனக்கு அப்ப வாங்கினது பத்தலையா ...? பாவம்ன்னு நெனச்சேன்...ம்ஹூம் இது சரிப்பட்டு வராது ...

என்று கோவமாக நெருங்க ... பம்ம ஆரம்பிக்கிறார் கைப்புள்ள

கூட்டமாக சேர்ந்து கும்முகிறார்கள், கைப்புள்ளைக்கு சட்டை துணியெல்லாம் கிழிந்து...இரத்தம் சொட்ட சொட்ட... உதடு கிழிந்து தொங்குகிறது..

கைப்புள்ள அப்போதும் அசராமல் ...

கைப்புள்ள :" டேய் நீ ரவுடியாடா ? நீ ரவுடியா ? ரவுடியாடா நீய்யீ......மயக்கம் வர்ர மாதிரி அடிக்கத் தெரியல.... நீ யெல்லாம் ஒரு ரவுடியா ? "

மேலும்.....

கைப்புள்ள : "ரவுடின்னா...என்னை மாதிரி எவ்வளவு வாங்கினாலும் அசராம, மயக்கம் போடாம நிக்கனும் ? அடச்சீ....... நீ யெல்லாம் ஒரு ரவுடியாடா ? ஒன் கையில அடிவாங்கிறதையே கேவலமாக நினைக்கிறேன, எனக்கு கோவம் வர்றத்துக்குள் ... "

கட்டதுரை : "கோவம் வர்றத்துக்குள்ள ? "

கைப்புள்ள : "போய்டுறேன்னு சொல்ல வந்தேன்ப்பா "

கட்டதுரையும் அவருடைய கோஷ்டிகள் எல்லோரும் கைகொட்டி சிரிக்க......

கைப்புள்ள : "ரவுடியாம் ரவுடி.....இவனெல்லாம்...." என்று கட்டத்துரையை முறைத்துவிட்டு அங்கிருந்து அல்லக்கைகளுடன் நடைய கட்டுகிறார்

அல்வா வாசு : "எப்டி அண்ணே அவ்வளவு வாங்கியும் ? ... என்று சொல்லிக்
கொண்டே கைப்புள்ளையின் கைகளை முறுக்கிப் பார்க்கிறார் ..."

கைப்புள்ள : "டேய்.....டேய்....டேய் விடுறா விடுறா...எரியுதுடா எரியுதடா...."


அல்வா வாசு : "எங்கண்ணே ? எங்கண்ணே.... ? எரிமலை சுடதான்னு தொட்டு பார்க்கிறேன்"

கைப்புள்ள : சோகமாக "என்னிய பாத்தா உனக்கு நக்கலு ? "

அல்வா வாசு : "இல்லண்ணே ... கட்டதுரைக்கு சுட்டுச்சா இல்லையாண்ணு தெரிஞ்சிக்கிற வேணாமா ?"


கைப்புள்ள : "என்ன நொல்லண்ணே...பேச்சுக்கு சொன்னா பெரச்சனை ஆக்கிபுடுவியே ...போடா... போடா... கட்ட துரையாம் ... கட்ட துரையா அவென் ? கெட்ட தொர.... கட்டயில போற தொர... இழுத்துட்டு போய் குமுரவச்சிட்டு.... போடா போடா ... இவனுங்களையெல்லாம் கூட வச்சிக்கிட்டு... நான் என்னிக்கு ரவுடியாவரது ......... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"




அன்புடன்,

கோவி.கண்ணன்

10 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

:))))

ஜெகதீசன் சொன்னது…

//கைப்புவும் அல்லக்கைகள் மற்றும் அல்வா வாசு//
"அல்லக்கை"ன்னா என்ன? நீங்களாவது சொல்லுங்களேன்.... உங்க நண்பர் இலைக்காரன்கிட்ட கேட்டா சொல்லமாட்டேன்னுறார்...

கோவி.கண்ணன் சொன்னது…

//"அல்லக்கை"ன்னா என்ன? நீங்களாவது சொல்லுங்களேன்.... உங்க நண்பர் இலைக்காரன்கிட்ட கேட்டா சொல்லமாட்டேன்னுறார்...//

அல்லக்கையா ? இதெல்லாம் நன்கு தெரிந்த நண்பர்கள் இருக்க்கிறார்கள் கேட்டுச் சொல்றேன்.

எடுபிடி என்ற சொல்லின் பின்னவினத்துவ சொல்லாக இருக்கலாம்.
:)

ஜெகதீசன் சொன்னது…

//
அல்லக்கையா ? இதெல்லாம் நன்கு தெரிந்த நண்பர்கள் இருக்க்கிறார்கள் கேட்டுச் சொல்றேன்.

எடுபிடி என்ற சொல்லின் பின்னவினத்துவ சொல்லாக இருக்கலாம்.
:)
//
கேட்டுச் சொல்லுங்க... சும்மா தெரிஞ்சுக்கலாமின்னு தான்... டிபிசிடி, எனக்கு "அல்லக்கை" பட்டம் தந்துருக்கார். பட்டத்தக் கையில வச்சுக்கிட்டு அர்த்தம் தெரியாம இருக்கக் கூடாதுல்ல...
:)

TBCD சொன்னது…

யோவ்...பொழுது போகலையின்னா என் தலைய ஏன் உருட்டுறீங்க..சமூகப்பணிகளுக்கிடையே இதுக்கு வேற நான் பதில் சொல்லிக்கிட்டே இருக்கனும்மா...

சரி..இது தான் கடைசி...

அல்லக்கை = ஜெகதீசன்
ஜெகதீசன் = அல்லக்கை

போதுமா...!!!

Unknown சொன்னது…

Allakai' (அல்லக்கை) Similar To "Dhanda Soru" (தெண்ட சோறு)

----------

இப்போ பிரியிதா ??

- சென்னைக் குரங்கு..

Subbiah Veerappan சொன்னது…

அடடே! நீங்க கட்டதுரை ஆளா!
இருங்க சரக்கடிச்சுட்டு கைப்புள்ள திரும்பவும் வருவாரூ - அப்ப பார்க்கலாம் உங்க தெனாவெட்டை!

செல்லி சொன்னது…

//கைப்புள்ள : "கலவரம் பண்ணலாம்னு நினைச்சேன்... அனுகுண்டே போடலாம்ங்கிறே....இன்னிக்கு முதல்ல சரவெடி வெடிச்சி ஸ்டார்ட் பண்ணிட வேண்டியது...தான்"//

ஆமாண்ணே! கைப்புள்ள இன்னும் இங்கைதான் இருக்காரா?:-))

நம்பவே முடியல.:-0
இல்ல ஆளைக் கண்டு கன நாளாயிடுச்சில்ல அதாங் கேட்டேன்!:-)))

நாகை சிவா சொன்னது…

:))

M.Rishan Shareef சொன்னது…

ஹா ஹா ஹா.மிக அருமை.தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்