பின்பற்றுபவர்கள்

6 நவம்பர், 2007

தேசதுரோக பல்லவி - ஜெவின் செலக்டீவ் அம்னீசியா !

மறைந்த தமிழ்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இரங்கல் பாட்டு பாடியதால் கருணாநிதி தேச துரோகம் செய்துவிட்டார் எனவே ஆட்சியை கலைக்கனும் என்று ஜெயலலிதா அம்மையார் கூப்பாடு போடுகிறார். அவருடைய அரசியல் நிலைப்பாடும், அவ்வப்போது அபாய சங்கு ஊதுவதும் அம்மையாருக்கு வழக்கமான ஒன்று தான், சென்ற முறை (1996) கலைஞர் ஆட்சியில் போடப்பட்ட ஜெயலலிதா மீதான ஊழல் வழக்கிற்கு நீதிமன்றம், ஜெயலலிதாவை நேரடியாக ஆஜர்படுத்த சொல்லும் போதெல்லாம் மருத்துவ மனையில் திடீர் நெஞ்சுவலியால் சிகிச்சைப் பெற்று கொள்வதற்கே நேரம் சரியாக இருந்ததால் இது போன்ற திடீர் அறிக்கைகளை ஜெயலலிதாவால் கொடுக்க முடியவில்லை.

இந்த முறை கலைஞர் போன தடவை செய்த அதே தவற்றை செய்து அம்மையாருக்கு அனுதாபம் தேடிக் கொடுத்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையுடன் அத்தகைய நடவடிக்கையை எடுக்காமல் இருக்கிறாரா ? தெரியாது. ஆனால் எப்படியாவது கலைஞருக்கு நெருக்கடி கொடுத்து தம்மை கைது செய்ய தூண்ட வேண்டும், பழைய படி 'பெண் என்றும் பாராமல் என்னை சிறையில் அடைத்துவிட்டார்கள்' என்று முகாரி பாடி அதன் மூலம் அனுதாபம் தேடமுடியும் என்று அம்மையார் நினைக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்படி இல்லை என்றால் புலிஆதரவாளர் என்பதால் 1 1/2 ஆண்டுகாலமாக இவரே சிறையில் அடைத்து வைத்திருந்த வைகோவை அருகில் வைத்துக் கொண்டு ஜெயலலிதா ஒரு இரங்கல் கவிதைக்கு எதிர்வசனம் எழுதி இருப்பாரா ? காங்கிரசால் பொடா சட்டம் ரத்து செய்யப்படாவிட்டால் வைகோ இன்னமும் சிறையில் தான் இருந்திருப்பாரோ என்னவோ, வைகோ எங்காவது தனது புலி ஆதரவு நிலைப்பாட்டை விட்டுவிட்டேன் என்று அறிக்கை கொடுத்திருக்கிறாரா ? பின்பு ஏன் ஜெயலலிதா புலி ஆதரவு வைகோவுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும். ? வைகோ புலி ஆதரவாளர் இல்லை, எலி ஆதரவாளர் என்று இந்த அம்மா வெளிப்படையாக சொல்லி தனது தேச அபிமானத்தை காக்கலாமே ? கலைஞர் - ஈழத்தமிழருக்காக கண்ணீர் வடித்தது தேசதுரோகம் என்றால் வைக்கோவுடன் கூட்டணி தொடர்பு வைத்திருக்கும் ஜெயலலிதாவும் தேச துரோகிதானே ?

இராஜிவ் காந்தி படுகொலை நடக்காவிட்டால் இந்த அம்மா முதல்வர் பதவி வகிப்பதற்கான வாய்ப்பே கிடைத்திருக்காது. இராஜிவ் காந்தி மரணத்தை தொடர்ந்து பதவி ஏற்பு கொண்டாடியது ஜெயலலிதா தான், தமிழர் மண்ணில் நடந்த படுகொலைக்கு தமிழர்கள் பொறுப்பேற்று கொண்டு கலைஞரை புறக்கணித்து இராஜிவ் காந்தி படுகொலைக்கு வலுவான எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிற்கு வாய்பை கொடுத்தனர்.
அந்த குறிப்பிட்ட தேர்தல் 2 கட்டமாக நடந்தது, முதல் கட்டத்தில் காங்கிரஸ் படுதோல்வியில் இருந்ததையும் இரண்டாம் கட்ட தேர்த்தலில் பெருவாரியாகவும் வெற்றி பெற்று இருந்ததையும் அந்த நிகழ்வுக்கு பின்பு வாக்கு எண்ணப்பட்ட போது தெரிந்தது. அந்த அனுதாபத்திற்கு பிறகு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் இராஜிவின் பெயரைச் சொல்லி ஜெ - வெற்றி தேடிக் கொண்டார்.

ஜெயலலிதா தன்னை பரப்பரப்பான அரசியல் வாதி என்று காட்டிக் கொள்ள அவ்வப்போது போடும் இரட்டை நிலைப்பாடு போன்றது தான் தற்போது கலைஞர் மீதான விமர்சனம்.

ஜெயலலிதா பார்வையில் புலி ஆதரவாளர்களும், இறப்பிற்கு இரங்கல் தெரிவிப்பவரும் தேச துரோகி என்றால், தன் பக்கத்தில் வைக்கோவை வைத்துக் கொண்டு சொல்ல ஜெயலலிதாவிற்கு என்ன அருகதை இருக்கிறது ?

17 கருத்துகள்:

ஜமாலன் சொன்னது…

//ஜெயலலிதா தன்னை பரப்பரப்பான அரசியல் வாதி என்று காட்டிக் கொள்ள அவ்வப்போது போடும் இரட்டை நிலைப்பாடு போன்றது தான் தற்போது கலைஞர் மீதான விமர்சனம்.//

இரட்டை நிலைப்பாடு இல்லை இரட்டை இலைப்பாடு அது.

//தேர்தல் 2 கட்டமாக நடந்தது, முதல் கட்டத்தில் திமுக நின்ற தொகுதிகளில் பெருவாரியாக வெற்றி பெற்று இருந்தது, படுகொலைக்கு பிறகு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் ஏற்பட்ட அனுதாபம் காரணமாகவே ஜெயலலிதாவின் கட்சி வெற்றிபெற்றது//

இந்த கணக்கெல்லாம் அந்த அம்மாவிற்கு தெரியாது. காலையில் எழுந்தவுடன் கருணாநிதி இருமினார் இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதாக ஒரு அறிக்கை விடும் அறிக்கை அரசி (நன்றி கலைஞர்).. வேறு என்ன செய்வார்? தான் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா என்கிற அடிப்படை ஆய்வோ திட்டமோ இல்லாமல் புலம்புவதே அவருக்கு வேலை.

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா?

TBCD சொன்னது…

அதை விடுங்க...அந்த அம்மாவைப் பற்றி பேசித்தான் என்ன ஆகப் போகுது.....

கலைஞர் கவுத்திட்டாரே..தமிழன் என்றதனாலே தான்..இரங்கல் கவிதை என்று...

தெரியாமத் தான் கேட்கிறேன்..தினம் தினம் உயிர் இழந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா...

என்ன கொடுமை சாமி இது...தினம் ஏன் இரங்கற்பா பாடவில்லை...

ஏதோ அரசியல் நிர்பந்தம் போலிருக்கிறது...

ராமர் பாலம் பற்றி கலைஞர் பேசினார்...மத்தியில் அவருக்கு தெரியும் கண்டிக்க முடியாதுன்னு சொன்னாங்க...அப்படியே...மண்ணு மோகியும், மொய்னோவோம்..ராமருக்கு இனிப்பு ஊட்டுறாங்க...

இப்ப தலைவர் அப்படியே ஈழத்தை தொட்டுப் பாக்கிறார்..

இது எல்லாம்..ஒரு பெரிய அரசியல் நாடகத்தின் ஒரு பகுதியோ என்று நான் ஐயப்பாடுக் கொள்கிறேன்...

அருண்மொழி சொன்னது…

கோவியாரே,

1991ல் நடந்த தேர்தலில் DMK படுதோல்வி அடைந்தது. வென்றது கலைஞர் மட்டுமே (in harbour). பிறகு egmoreரில் பரிதி வென்று சட்டமன்றம் சென்றார்.

I think you were referring to the Parliament elections. Congress won lot of seats in the phases after rajiv's death.

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்மொழி said...
கோவியாரே,

1991ல் நடந்த தேர்தலில் DMK படுதோல்வி அடைந்தது. வென்றது கலைஞர் மட்டுமே (in harbour). பிறகு egmoreரில் பரிதி வென்று சட்டமன்றம் சென்றார்.

I think you were referring to the Parliament elections. Congress won lot of seats in the phases after rajiv's death.
//

நீங்கள் சொல்வது சரிதான். பாராளுமன்ற தேர்த்தலுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்ட தேர்தலில் காங்கிரஸ் அள்ளியது.

தவறாக குறிப்பிட்டு இருக்கிறேன், நினைவு படுத்தியதற்கு நன்றி !மாற்றிக் கொள்கிறேன்.

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

எனது அண்ணன் திரு. கோவி.கண்ணன் அவர்களுக்கு.......
எனது அழைப்பை ஏற்று,

வான் நோக்கி காத்திருந்த கொடியாக நான் இருந்த போது,
என் நோக்கி வந்து உயிராக என்னை ஆதரவுடன்
விண் நோக்கி வளர கயிராக ஊக்கம் கொடுத்து

மேலும் பல பதிவுகள் நான் தர உற்சாகம் கொடுததமைக்கு நன்றி, நன்றி, நன்றி.

( எப்பா.... நம்ம கழக வழக்கப்படி அண்ணனுக்கு, அண்ணன் திரு. கோவி.கண்ணன் அவர்களுக்கு ஒரு சால்வை போட்டு ஒரு சோடா கொடு...)

pulliraja சொன்னது…

மொதல்ல கோவியாருக்கு ஒரு சபாஸ்!. துணிச்சலான தெளிவான பதிவு.

ஏதாவது தினமும் புலம்பி பத்திரிகையில் தனது பெயர் வரவேண்டும் என்பதில் ஜெ மிக கவனமாக இருக்கின்றார்.


புள்ளிராஜா

மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை. சொன்னது…

"இது எல்லாம்..ஒரு பெரிய அரசியல் நாடகத்தின் ஒரு பகுதியோ என்று நான் ஐயப்பாடுக் கொள்கிறேன்..."

யெய்யா டிபிசிடி,
கலைஞர் மணல்திட்ட பத்தி கருத்து சொன்னாலும் அரசியல் நாடகம்னு சொல்றீங்க,

துக்கசெய்தி வெளியிட்டாலும் நாடகம்னு சொல்றீங்க.

எல்லாத்தையும் சந்தேகப்படும் உங்களுக்கு கார்ல்மார்க்ஸின் கண்கள் தான் போங்கள்.

பாத்துய்யா,வீட்லயும் இதேமாதிரி இருந்துராதீங்க.சிக்கலாயிரும்.

கலைஞர்னு ஒருத்தர் இருக்காருங்கிறத
அரசியல் நாடகத்தின் ஒருபகுதின்னு சொல்லாம விட்டீங்களே அந்த வகையில் மகிழ்ச்சி.

RATHNESH சொன்னது…

ஜெ பற்றிய அப்பட்டமான படப்பிடிப்பு. சரியாக எழுதி இருக்கிறீர்கள்; ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை.

'வைகோவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஜெ இப்படி . . . ' என்கிறீர்களே; ஜெ என்கிற யானையின் வாலில் உட்கார்ந்திருக்கும் ஈ தான் வைகோ. யானைக்கு அதன் இருப்பும் தெரியாது; அதன் ரீங்காரமும் காதில் விழாது. ஈ வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம் பெரிய சவாரி என்று; நாம் ஏன் நினைக்க வேண்டும்?

pulliraja சொன்னது…

Rathnesh!! எது எப்படியோ! நீங்க அம்மாவை யானைக்கு ஒப்பாக கூறியதை இளைத்த யானைகள் சார்பாக கண்டிக்கின்றேன்.

thiru சொன்னது…

//அந்த அனுதாபத்திற்கு பிறகு நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் இராஜிவின் பெயரைச் சொல்லி ஜெ - வெற்றி தேடிக் கொண்டார்.//

அதன் பின்னர் சட்டசபையில் ராஜீவ்காந்தியைப் பற்றியும், காங்கிரஸ்காரர்களைப் பற்றியும் பேசிய வார்த்தைகள் சுயமரியாதையுள்ள எவரும் ஏற்கமுடியாதவை.

ஜெயலலிதாவிற்கு அதிகாரப்பசி ஏற்பட்டிருக்கிறது. ஜெயலலிதாவின் புலிவால் அரசியல் ஆட்டம் வைகோவிற்கு நல்ல நடனமாக தெரிகிறது. வைகோ மீதான வழக்கு இன்னும் நீதிமன்றத்திலிருக்கிறது.

நாளையே கூட்டணி முறிந்தால் வைகோவின் மீது புலிவால் அறிக்கை வெடிகளை வெடிப்பார் ஜெயலலிதா.

இன்று ஜெயலலிதாவின் அறிக்கை அவதாரம் வீரமறத்தி தமிழச்சியாக வந்திருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said.. இந்த கணக்கெல்லாம் அந்த அம்மாவிற்கு தெரியாது. காலையில் எழுந்தவுடன் கருணாநிதி இருமினார் இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்பதாக ஒரு அறிக்கை விடும் அறிக்கை அரசி (நன்றி கலைஞர்).. வேறு என்ன செய்வார்? தான் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா என்கிற அடிப்படை ஆய்வோ திட்டமோ இல்லாமல் புலம்புவதே அவருக்கு வேலை.

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா?//

ஜமா சார்,

அந்த அம்மா எப்படியும் கூட்டனியை கலைத்துவிடலாம் என்று நம்பிக் கொண்டு இருந்தது. எல்லோரும் வைகோ போல இருப்பார்களா ? அது இப்ப நடக்கவில்லை என்பதால் ஆத்திரத்தில் கண்டபடி பேசுகிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
அதை விடுங்க...அந்த அம்மாவைப் பற்றி பேசித்தான் என்ன ஆகப் போகுது.....

கலைஞர் கவுத்திட்டாரே..தமிழன் என்றதனாலே தான்..இரங்கல் கவிதை என்று...

தெரியாமத் தான் கேட்கிறேன்..தினம் தினம் உயிர் இழந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா...
//

அரவிந்த,

என்னங்க இது, தமிழ்நாட்டில் தினம் தினம் 100 கணக்கானோர் இயற்கையாகவே மரணம் அடையுறாங்கா அவர்களுக்கெல்லாம் இவர் முதல்வர் என்ற முறையில் அஞ்செலி செலுத்த முடியுமா ?

ஒரு இயக்கத்தினாரால் முன்னிறுத்தப்ப்பட்டு அறிமுகமானவர் என்பதால் தமிழ்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்தார்.

இதுக்கெல்லாம் ஜெ மாதிரியே கண்ணு காது மூக்கெல்லாம் வக்கிறிங்களே. நல்லா இல்லே சொல்லிபுட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Goli Soda Goyindan said...
எனது அண்ணன் திரு. கோவி.கண்ணன் அவர்களுக்கு.......
எனது அழைப்பை ஏற்று,

வான் நோக்கி காத்திருந்த கொடியாக நான் இருந்த போது,
என் நோக்கி வந்து உயிராக என்னை ஆதரவுடன்
விண் நோக்கி வளர கயிராக ஊக்கம் கொடுத்து

மேலும் பல பதிவுகள் நான் தர உற்சாகம் கொடுததமைக்கு நன்றி, நன்றி, நன்றி.

( எப்பா.... நம்ம கழக வழக்கப்படி அண்ணனுக்கு, அண்ணன் திரு. கோவி.கண்ணன் அவர்களுக்கு ஒரு சால்வை போட்டு ஒரு சோடா கொடு...)
//

கோவிந்தா.........கோவிந்தா,

ஐயையோ குளிரெட்டுக்குதே,

கோலி சோட வேண்டாம், ஜிஞ்சர் பியர் போதும் வெறும் பியராக இருந்தாலும் பரவாயில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//pulliraja said...
மொதல்ல கோவியாருக்கு ஒரு சபாஸ்!. துணிச்சலான தெளிவான பதிவு.

ஏதாவது தினமும் புலம்பி பத்திரிகையில் தனது பெயர் வரவேண்டும் என்பதில் ஜெ மிக கவனமாக இருக்கின்றார்.


புள்ளிராஜா
//

புரா சார்,

பத்திரிகையில் தனது பெயர் வரவேண்டும் என்பதில் ஜெ மிக கவனமாக இருக்கின்றார். - அதுக்குத்தான் நமது எம்ஜி ஆர் இருக்கிறதே, ஜெய டிவி இருக்கிறதே, அம்மாவுக்கு பத்தலையோ.

கோவி.கண்ணன் சொன்னது…

//பூச்சாண்டி said...


யெய்யா டிபிசிடி,
கலைஞர் மணல்திட்ட பத்தி கருத்து சொன்னாலும் அரசியல் நாடகம்னு சொல்றீங்க,

துக்கசெய்தி வெளியிட்டாலும் நாடகம்னு சொல்றீங்க.

எல்லாத்தையும் சந்தேகப்படும் உங்களுக்கு கார்ல்மார்க்ஸின் கண்கள் தான் போங்கள்.

பாத்துய்யா,வீட்லயும் இதேமாதிரி இருந்துராதீங்க.சிக்கலாயிரும்.

கலைஞர்னு ஒருத்தர் இருக்காருங்கிறத
அரசியல் நாடகத்தின் ஒருபகுதின்னு சொல்லாம விட்டீங்களே அந்த வகையில் மகிழ்ச்சி.
//

பாத்துய்யா,வீட்லயும் இதேமாதிரி இருந்துராதீங்க.சிக்கலாயிரும் -

விசமத்தனாமான கருத்து, ஓரு கருத்து ஏற்ப்புடையது இல்லை என்பதற்காக அவர் தம் வீட்டில் எப்படி இருக்கக் கூடாது என்பது போன்ற கருத்துக்கள் அறுவருப்பானவை, பார்க்கமால் வெளி இட்டுவிட்டேன். அதற்காக நண்பர் டிபிசிடி என்கிற அரவிந்த் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
ஜெ பற்றிய அப்பட்டமான படப்பிடிப்பு. சரியாக எழுதி இருக்கிறீர்கள்; ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை.

'வைகோவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஜெ இப்படி . . . ' என்கிறீர்களே; ஜெ என்கிற யானையின் வாலில் உட்கார்ந்திருக்கும் ஈ தான் வைகோ. யானைக்கு அதன் இருப்பும் தெரியாது; அதன் ரீங்காரமும் காதில் விழாது. ஈ வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம் பெரிய சவாரி என்று; நாம் ஏன் நினைக்க வேண்டும்?

9:50 PM, November 06, 2007
//

ரத்னேஷ், என்ன இப்ப்படி சொல்லிவிட்டீர்கள் ?

ஈயை எப்படி வீழ்த்திக்காட்டினேன் என்று தேர்தல் நேரத்தில் ஈ க்கு பொக்கே கொடுத்து யானை காட்சி அள்ளித்தை மறந்துவிட்டீர்களா ?
ஈயும் பலம் பொருந்தியது என்றதால் தானே யானை ஈயை வளைத்துக் கொண்டது.
:)

TBCD சொன்னது…

அய்யா பூச்சான்டி...பூச்சான்டி வேலை இங்க வேனாம்..
அவரின் நிலைப்பாடு குறித்து எனக்கு சந்தேகம் வரும்..என்னா..பகுத்தறிவு இருக்கு...
உங்களை மாதிரி கண் மூடித்தனமா..அவர் சொல்லூறதையெல்லாம்..நம்ப முடியாது..(உங்க பதிவு பார்த்தேன்..யார் அந்த அஞ்சா நெஞ்சன்...? அங்க என்னமோ பின்னுட்ட கயமை நடந்த மாதிரி தெரியுதே,.....)

சிந்திப்பது என்பது ஒவ்வொருவர் பழகும் கலை..எனக்கு சிந்திக்க வருகிறது..சிந்திக்கிறேன்...உங்களுக்கு மூக்கு சீந்தத் தான் வருமின்னா அதை நீங்க செய்யலாம்...

உங்க அக்கறையயை நீங்க மூட்டைக் கட்டுங்கள்...நான் பார்த்துக்கிறேன்..என் வீடு எப்படி இருக்க வேண்டும் என்று...

அனானி , மற்றும் அதர் ஆப்ஷனை எடுத்து விட்டால், பிரச்சனை தீர்ந்துவிடுமா..இது போல புதுசு புதுசா புல்லுருவிகள் வந்துக் கொண்டே தான் இருக்கும்....

எனக்கு இன்னொரு சந்தேகம்...இது பாலாவின் மறு அவதாரமாகயிருக்குமோ....(பின்னுட்டப்புகழ் பாலா). :)))))


//*அதற்காக நண்பர் டிபிசிடி என்கிற அரவிந்த் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.*//

சரி இதை நான் ஏற்றுக் கொள்கிறேன்...போங்க ஐயா நீங்க வேற....

//*அரவிந்த,

என்னங்க இது, தமிழ்நாட்டில் தினம் தினம் 100 கணக்கானோர் இயற்கையாகவே மரணம் அடையுறாங்கா அவர்களுக்கெல்லாம் இவர் முதல்வர் என்ற முறையில் அஞ்செலி செலுத்த முடியுமா ?*//

அதை தானே நானும் கேக்கிறேன்...தனியொரு முதல்வர் இந்தத்துவவியாதிகளுக்காக என்ன என்னமோ செய்யும் போது..முதல்வர் அதிகாரத்தில் இருப்பவர்..தமிழ் நாட்டின் சகோதரர்கள் இவ்வளவு நாள் கண்ணீர் வடித்தப் போது அமைதி காத்தாரே...தமிழ் செல்வனை அவர் தனிப்பட்ட முறையில் இழந்ததற்கா கவிதைப் படித்தார்..


//*ஒரு இயக்கத்தினாரால் முன்னிறுத்தப்ப்பட்டு அறிமுகமானவர் என்பதால் தமிழ்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்தார்.*//

அதைத் தானே நானும் சொல்லுறேன்...

//*இதுக்கெல்லாம் ஜெ மாதிரியே கண்ணு காது மூக்கெல்லாம் வக்கிறிங்களே. நல்லா இல்லே சொல்லிபுட்டேன்.*//

ஜெ கண்ணு காது மூக்கு எல்லாம் வைக்கவில்லை அவங்களுக்கு தெரிஞ்ச பாட்டைத் தான் பாடுறாங்க..அதை விட்டா வேற பாட்டு தெரியாது...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்