பின்பற்றுபவர்கள்

8 நவம்பர், 2007

அழகிய தமிழ்மகன் விமர்சனம் !

வழக்கமான ரீமேக் கதைகளில் வருவது போல் ஒரு துடிப்பான இளைஞன் நான்கு வில்லன்கள் என்ற கதைகளில் இருந்து விஜய் வெளியே வரமுயன்றிருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகளில் நான்காக, பத்தாக வருவது பத்தாது என்று இரட்டை வேடத்தில் படத்தை ஆக்கிரமித்திருக்கிறார். படத்தில் அவர் தவிர்த்து மற்றவர்களுக்கு திரையில் தோன்றும் வாய்பு குறைவு. கதைக்கு கரு, உரு கொடுப்பதற்காக விஜய்க்கு ESP சக்தி இருப்பதாகவும், நெருங்கிய உறவினர்களுக்கு நடக்கும் ஆபத்துக்களை முன் கூட்டியே அறிந்து கொள்வதாக காட்டுகிறார்கள்.

ஓட்டப்பந்தைய வீரராக இருக்கும் விஜய், ஷகிலா வீட்டில் வாடகைக்கு சந்தானம், சத்தியன் ஆகியோர்களுடன் குரு என்ற பெயருடன் இருக்கிறார். அறிமுகக் காட்சியே சண்டை காட்சியாக தொடங்குகிறது. சிரேயாவின் தோழியின் அண்ணன் கலந்து கொள்ளும் ஓட்டப்பந்தயத்தில் அவரின் இறுதி முயற்சி என்று அறிந்து விஜய் அவருக்காக விட்டுக் கொடுத்துவிடுகிறார். இதை தெரிந்த பணக்காரரான ஆசிஸ் வித்தியார்த்தி மகளான சிரேயா அவரை காதலிக்க தொடங்குகிறார். தனது காதலை அழகாக கடிதத்தில், குரு என்ற பெயரில் உள்ளவை எல்லாம் எனக்கு பிடிக்கும் என்று ஒரு பட்டியலில் பிடித்த ரஜினி படம் குரு சிஷ்யன், பிடித்த பறவை 'குரு'வி இது போல் பலவற்றை எழுதி கொடுக்க அதைப் படித்து பார்த்து விஜய் சிரேயா மேல் காதல் கொள்கிறார். இதை இரு பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்க செய்த உத்திகள் கலகலப்பானவை.

ESP சக்தியின் மூலம் சிரேயாவிற்கு உயிருக்கு இவரால் ஆபத்து என்று தெரிய வந்த போது, அதைத் தவிர்பதற்காக சிரேயாவிடம் சொல்லிக் கொள்ளாமல் மும்பைக்குச் செல்கிறார். அங்கு தான் மற்றொரு விஜயை (பிரகாஷ்) பார்க்கிறார். அவர் சென்டரல் பேங்கில் மேனஜராக இருந்து கொண்டே என்ஆர்ஐ பணத்தை வெளியில் விட்டு சம்பாதிக்கும் பணத்தாசை பிடித்தவராக காட்டுகிறார்கள். அவர் நகைக் கடை அதிபர் சாயாஜி சின்டேவிடம் முன்பு கொடுத்த பணத்தை திரும்ப வாங்க ரயிலில் சென்னை வருகிறார். சென்னை செல்லும் இரயில் பயணத்தில் சந்திக்கும் நமீதாவிடம் கசமுசா நடந்துவிடுகிறது. எல்லாம் முடிந்ததும் எஸ்கேப் ஆகிறார். ஒரிஜினல் விஜய்க்கு விபத்து ஏற்படவே அவர் மும்பையில் இருக்க, சென்னை வந்த மற்றொரு விஜயை ஒரிஜினல் என்று நினைத்து சிரேயா தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். பணத்தாசை பிடித்தவரான இந்த விஜய் சாதமாக பயன்படுத்திக் கொண்டு சிரேயாவை திருமணம் செய்யும் அளவுக்கு செல்கிறார். இதை அறிந்து ஒரிஜினல் விஜய் சென்னை திரும்புகிறார்.

தன் சத்தியின் மூலம் அறிந்தது போல் சிரேயாவுக்கு அவராலேயே ஆபத்து ஏற்படுகிறதா ? மற்றொரு விஜயை எப்படி வெல்கிறார். ஒரிஜினல் விஜயும் சிரேயாவும் சேர்ந்தார்களா ? வெள்ளித்திரையில் காண்க. பிரகாஷ் என்ற பெயரில் வரும் விஜய் ஒவ்வொரு முறையும் குருவாக நடிக்கும் போது வரும் சோதனைகளை சமாளித்து 'எவ்வளவோ செய்துட்டோம், இதையும் செய்துட மாட்டோமா ?' என்று வசனம் பேசுகிறார்.

இந்த படத்தில் குருவாக வரும் விஜய் தான் தான் குரு என்பதை நம்ப வைக்க செய்யும் முயற்சிகள் லாஜிக் எதுவுமில்லாமல் இருக்கிறது. குரு அறிந்திருப்பதையெல்லாம் பிரகாஷ் அறிந்திருந்து அவரைப் போல் நடித்து சமாளிக்க அவர் குருவின் டைரியை படித்து தெரிந்து கொள்வதாக காட்டுகிறார்கள். கூட இருக்கும் குருவின் நண்பர்களும் ஒரிஜினல் குருவை நம்ப மறுக்கிறார்கள். காதலிக்கும் சிரேயாவுக்கும் யார் ஒரிஜினல் என்ற குழப்பம் இருக்கிறதாம். இரட்டை பிறவிகளாகவே இருந்தாலும் ஒருவருக்கு தெரிந்த எல்லாமும் மற்றவருக்கு தெரியாது. கதைப்படி அப்படியும் இல்லை. இடைவேளைக்கு முன்பு வரை விறுவிறுப்பாக இருந்தது, சண்டை காட்சிகள் வழக்கமான ஆக்ரோசமான விஜய் ஸ்டையில். சண்டை பயிற்சி பெப்சி விஜயன். பெரிய பட்ஜெட் படம் என்பதால், கையை கடித்து நமிதா நடிக்கும் பாடல் காட்சிகளில் துண்டு விழுந்திருக்கிறது. சிவாஜியை விட இதில் சிரேயா பாடல் காட்சிகளில் ரொம்பவே இறங்கி அசத்தி இருக்கிறார்.

இயக்குனர் பரதன் என்று டைட்டிலில் இருந்தது இவர் சூரியன் படம் எடுத்த பழைய பரதானா என்று தெரியவில்லை. நகைச்சுவை காட்சியில் கோவில் குருக்களை (ஐயரை) பார்த்து, சாமி..... நாத்திகம் பேசுகிறவர்களை நாத்திகவாதி என்கிறேம். அரசியல் பேசுகிறவர்களை அரசியல்வாதி என்கிறோம், கோவிலில் மந்திரம் சொல்கிறவர்களை ஏன் மந்திரவாதி என்று சொல்வதில்லை ?' என்று நக்கல் வசனம் வருகிறது, அதைக் கேட்ட ஐயர் அடிக்க வருகிறார். அனேகமாக பரதன் சேது இயக்குனர் பாலாவின் சிஷ்யராக இருப்பார் போல. படத்தில் எனக்கு பிடிக்காத காட்சி, விஜய் முன்கூட்டியே அறிந்து கொண்டபடி 'ஒரு 10 வயது பெண் குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைவதும், அதை படுக்கையில் கிடத்தி பிண அலங்காரம் செய்து வைத்திருப்பதையும் தவிர்த்திருக்கலாம். குழந்தைகளின் மரணத்தை திரையில் பார்பது கூட சோகம் தான். அந்த குழந்தையின் அம்மா இந்த காட்சிக்கு எடுப்பதற்கு எப்படி சம்மதம் தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை.

ஏஆர்ரகுமான் முதன் முறையாக விஜய் படத்துக்கு இசை. சூப்பர் என்று சொல்லும் அளவுக்கு இல்லை, மோசம் என்றும் சொல்ல முடியாது. குத்துப்பாட்டு வகையில் 3 பாடல்கள், ஒரு ரீமிக்ஸ் பாடல் பின்னனி இசை நன்றாக இருக்கிறது.

மன்மத ராசாவாக தனுசும், மன்மதனாக சிம்புவும் பெயர் பெற்றுவிட்டார்கள் என்ற ஆசை அடிப்படையில் 'மன்மதன்' என்பதை தமிழ் படுத்தி படத்திற்கான தலைப்பாக 'அழகிய தமிழ்மகன்' என்று வைத்துவிட்டார்கள் போல் தெரிகிறது.

இந்த படத்தை உலகெங்கும் வெளி இட்டு இருக்கும் பிரமிட் சாய்மிரா நிறுவனத்தினருக்கு நன்கு தெரிந்தே வாங்கி இருக்கிறார்கள் அதாவது ' விஜயடோ குப்பை படங்கள் எவ்வளவோ ஓடி இருக்கிறது, இது ஓடாதா ?'
விஜய் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் இருப்பதால் நிச்சயம் ஓடும்.

36 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

நான் தான் firstடா?

//
விஜயடோ குப்பை படங்கள் எவ்வளவோ ஓடி இருக்கிறது, இது ஓடாதா ?
//
:)))))))

theevu சொன்னது…

உலகத் தமிழ் வலைப்பதிவுகளில் முதன் முதலாக .. :)

தருமி சொன்னது…

விமர்சனம் எழுதியிருப்பீர்கள்; வாசிக்கலாம் என்றல்லவா நினைத்து வந்தேன்!

:(

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
விமர்சனம் எழுதியிருப்பீர்கள்; வாசிக்கலாம் என்றல்லவா நினைத்து வந்தேன்!

:(
//
தருமி ஐயா,

இயக்குனர் பரதன் என்று டைட்டிலில் இருந்தது இவர் சூரியன் படம் எடுத்த பழைய பரதானா என்று ... இதற்கும் கீழ் விமர்சனம் தான் இருக்கிறது. சிறப்பாக எழுதுவதற்கு 'தேவ்' போன்ற பதிவுலக ஜாம்பவான்கள் இருப்பதால் நான் அடக்கியே வாசிக்கிறேன்.
:)

வினையூக்கி சொன்னது…

//
இயக்குனர் பரதன் என்று டைட்டிலில் இருந்தது இவர் சூரியன் படம் எடுத்த பழைய பரதானா என்று தெரியவில்லை. //

அது பவித்ரன்.

//விஜயடோ குப்பை படங்கள் எவ்வளவோ ஓடி இருக்கிறது, இது ஓடாதா ?//

:):)

முத்துகுமரன் சொன்னது…

இயக்குனர் தரணியிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பரதன்.

சூரியன் படத்தின் இயக்குநர் பவித்ரன்.

விஜய் பேசுவது போலவே இருக்கு விமர்சனம் :-)

ILA (a) இளா சொன்னது…

//ESP சக்தி இருப்பதாகவும், நெருங்கிய உறவினர்களுக்கு நடக்கும் ஆபத்துக்களை முன் கூட்டியே அறிந்து கொள்வதாக காட்டுகிறார்கள்.//

இது ஏற்கனவே மம்முட்டி நடிச்ச Iyer the Great கதை மாதிரி இருக்கே

ஆதிபகவன் சொன்னது…

தேவர்மகன் படத்தை இயக்கியவர் பரதன்.

நல்ல படங்கள் தந்திருக்கிறார்.ஆனால் அவர் காலமாகிவிட்டார். இவர் வேறு பரதன்.

இராம்/Raam சொன்னது…

//
விஜயடோ குப்பை படங்கள் எவ்வளவோ ஓடி இருக்கிறது, இது ஓடாதா ?
//

:)

அழகா கடைசியிலே படம் செம கொத்து'ன்னு சொல்லிருக்கலாம்.....

காலை ஷோ'க்கு பசங்க போயிட்டு வந்து தலையிலே அடிச்சிக்கிட்டு இருக்கானுக.... ஹி ஹி நான் போகலை... :)

வெட்டிப்பயல் சொன்னது…

AR Rahman விஜய் நடிச்ச உதயாக்கு மியூசிக் போட்டிருக்கார்

Raveendran Chinnasamy சொன்னது…

//சாமி..... நாத்திகம் பேசுகிறவர்களை நாத்திகவாதி என்கிறேம். அரசியல் பேசுகிறவர்களை அரசியல்வாதி என்கிறோம், கோவிலில் மந்திரம் சொல்கிறவர்களை ஏன் மந்திரவாதி என்று சொல்வதில்லை ?' //
ஏன்????????

துளசி கோபால் சொன்னது…

எந்தப் படத்தின் ரீ மேக் ன்னு சொல்லுங்களேன்......

இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டிப்பயல் said...
AR Rahman விஜய் நடிச்ச உதயாக்கு மியூசிக் போட்டிருக்கார்
//

அல்லுடு பாலாஜி,

சன் டிவியில் AR Rahman - விஜய் இருவரின் தீபாவளி பேட்டியில்.. அந்த படம் டிராப்பாகி நீண்ட நாள் சென்று ரிலிஸ் ஆனதால் இந்தப்படத்தைத்தான் முதல் படமாக நினைத்துக் கொண்டார்களாம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//
ஜெகதீசன் said...

:)))))))//

நீங்க தல அஜித் ரசிகரா ? அது என்ன அப்படி ஒரு அசுர சிரிப்பு ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//theevu said...
உலகத் தமிழ் வலைப்பதிவுகளில் முதன் முதலாக .. :)
//

ஹிஹி...வெளி நாட்டில் இருப்பதால் டிக்கெட் கிடைக்குது, சென்னை என்றால் யார் முதல் நாள் show க்கு போக முடியும் ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

வினையூக்கி said...

அது பவித்ரன்.

:):)
//

வினையூக்கி சார்,

நீங்கள் சொல்வது சரிதான். பவித்திரன் 'ப' வில் சற்று குழம்பிவிட்டேன். நினைவு படுத்தியதற்க்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//முத்துகுமரன் said...
இயக்குனர் தரணியிடம் உதவி இயக்குநராக இருந்தவர் பரதன்.

சூரியன் படத்தின் இயக்குநர் பவித்ரன்.

>>>விஜய் பேசுவது போலவே இருக்கு விமர்சனம் :-)<<<
//

முத்துகுமரன்,

பரதன் தரணியிடம் இயக்குனராக இருந்தவாரா ? தகவலுக்கு நன்றி !
புகழ்ச்சியாக எழுதி இருக்கிறேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...

இது ஏற்கனவே மம்முட்டி நடிச்ச Iyer the Great கதை மாதிரி இருக்கே//

இளா,

இசைகள் ஏழுஸ்வரங்களுக்குள் என்பது போல் எல்லாக் கதையும் ஒரு 70 படத்துக்குள் அடக்கிடலாம் போல இருக்கு.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆதிபகவன் said...
தேவர்மகன் படத்தை இயக்கியவர் பரதன்.

நல்ல படங்கள் தந்திருக்கிறார்.ஆனால் அவர் காலமாகிவிட்டார். இவர் வேறு பரதன்.
//

ஆதி சார்,

தகவலுக்கு நன்றி, பரதன் என்ற பெயர் நீண்ட நாட்களாக திரையுலகில் இருப்பதால் எந்த பரதன் என்பது குழப்பமாகிவிட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இராம்/Raam said...

அழகா கடைசியிலே படம் செம கொத்து'ன்னு சொல்லிருக்கலாம்.....

காலை ஷோ'க்கு பசங்க போயிட்டு வந்து தலையிலே அடிச்சிக்கிட்டு இருக்கானுக.... ஹி ஹி நான் போகலை... :)

12:28 AM, November 09, 2007
//

இராம்,

இருங்க இருங்க, நம்ம சென்னைப் பட்டினம் தேவ் என்ன விமர்சனம் எழுதுறார் என்று பார்த்துவிட்டு முடிவுக்கு வாருங்கள்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

Raveendran Chinnasamy said...
//சாமி..... நாத்திகம் பேசுகிறவர்களை நாத்திகவாதி என்கிறேம். அரசியல் பேசுகிறவர்களை அரசியல்வாதி என்கிறோம், கோவிலில் மந்திரம் சொல்கிறவர்களை ஏன் மந்திரவாதி என்று சொல்வதில்லை ?' //

ஏன்????????


>>>>>>>>>>>
அதானே.... நல்ல கேள்வி!
:))

குருக்கள் வருகிறார் வழியவிடுங்கோ என்று ஒருவர் சொல்லிக் கொண்டு வர ஒரே ஒரு குருக்கள் வருவார்.
ஒரே ஒரு குருக்களுக்கு ஏன் குருக்கள் வருகிறார் என்கிறீர்கள் ? குருவருகிறார் என்று சொல்வது தானே என்றும் டயலாக் இருக்கு அந்த படத்தில்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
எந்தப் படத்தின் ரீ மேக் ன்னு சொல்லுங்களேன்......

இனிய தீபாவளி வாழ்த்து(க்)கள்
//

துளசியம்மா,

உங்க ஊரில் படம் ரிலிஸ் ஆச்சா ?

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அம்மா

மாயா சொன்னது…

பிரகாஷ் இல்ல பிரசாத் என நினைக்கிறன் :(

விஜயடோ குப்பை படங்கள் எவ்வளவோ ஓடி இருக்கிறது, இது ஓடாதா ?'
விஜய் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் இருப்பதால் நிச்சயம் ஓடும்.
உண்மை தான் :(

கோபிநாத் சொன்னது…

தமிழ் நாட்டில் நல்ல படம் யடுத்த பார்க்க ஆள் கிடையாது. Then y acting like you guys are very intelligent.

NOTE: I am not good in tanglish, I know only English & Tamil so, I go with English as I cant type Tamil through a English keyboard

I don’t agree that u r a person who don’t like masala film. U too have enjoyed looking in to shreya, so don’t act like you guys are intelligent.


I have seen many people (Educated) who enjoy a typical Tamil movie*. These educated guys will never agree that they liked it; I found various reasons for that
• Jealous of the actor
• Thinking that their friend will look @ them differently. (Because they are educated)

But these are guys who see that movie first day first show. Dear Blogger, I have a question for you?

Even if you are not in INDIA what is the Necessity to see that movie @ FDFS, when u dont like masala movies or when u need logic? Any way you know vijay movies are குப்பை, It will be great If you can answer. Please dont blame that u r friends or relative for watching this movies.

///' விஜயடோ குப்பை படங்கள் எவ்வளவோ ஓடி இருக்கிறது, இது ஓடாதா?'////

i have seen guys asking for logic only in Tamil films. If it’s a hollywood flick, they don’t have any problem. Bruce Wills can do any thing @ the age of 54, it’s not a problem for our guys, if the same thing is done by kamal or rajini it’s a Great problem they can digest , will take a pen or login in to the blog and start SCREAMING that there is NO LOGIC in this Movies, that LOGIC is not there , this LOGIC is not there.
* Means movies which are classified as Masala Flick or only for B & C Centre.

கோபிநாத் சொன்னது…

//விஜய் ரசிகர்களுக்கு தேவையான அம்சங்கள் இருப்பதால் நிச்சயம் ஓடும்.//

Its not Just Vijay fans who see the movie, Y other people are not able reject it if you dont like it

i guess you should be vijay fan that y FDFS :)

koothanalluran சொன்னது…

தினத்தந்தியில் கார்ட்டூன் வெளியிட்டு இதற்கு வசனம் தேவையில்லை என போடுவார்கள் அதேபோல்தான் விஜய்யின் அழகிய தமிழ்மகன் படத்திற்கு விமர்சன்ம் தேவையில்லை.
சன் தொலைகாட்சியில் கோட்டும் சூட்டும் அணிந்துக் கொண்டு வந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு வரியில் விமர்சன்ம் செய்து விட்டுப்போவார். அதே மாதிரி சொல்வதென்றால் 'அழுகிய தமிழ்மகன்'

வழக்கமான விஜய்யின் கிண்டல் கேலி நடிப்பில்லை. பாட்டும் சுமார்தான் ஒருவேளை போகப் போக 'பிக் அப் ' ஆகுமா தெரியவில்லை. படத் தயாரிப்பார்களுக்கே இப்படம் ஓடுமா ஓடாத என சந்தேகம் வந்து விட்டது போல தெரிகிறது அதனால்தான் வலுக்கட்டாயமாக 'நமீதா' வை காட்டியிருக்கிறார்கள். 'சும்மா அதிருதுல்ல' மாதிரி காட்டியிருக்கிறார்கள். நமீதா வரும் காட்சியில் விஜய் நமீதாவிற்கு 'கடிஜோக்' சொல்கிறார். அதில் நீச்சல் தெரியாத பெண் ஒருத்தி நீச்சல் குளத்தில் குதிக்கிறாள் இருந்தாலும் அவள் சாகவில்லை மிதந்து மேலே வருகிறாள் எப்படி எனக் கேட்கிறார் நமீதாவிடம். தெரியவில்லை எனும் நமீதாவிடம் அவள்தான் செமகட்டை யாச்சே அதான் மிதக்கிறாள் எனும் வசனம். இது ஒரு 'நற நற'

மற்றொரு 'நற நற' டைட்டிலில் விஜய்க்கு 'டாக்டர்' போடுவது.
"அழகிய தமிழ்மகன்" படத்தை விட 'அபிராமி மாலில்' சாப்பிட்ட பிட்ஸா நன்றாக இருந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//Gobinath said...
தமிழ் நாட்டில் நல்ல படம் யடுத்த பார்க்க ஆள் கிடையாது. Then y acting like you guys are very intelligent. //

திரைப்படம் என்பது பொழுது போக்கு, வியாபார ரீதியானது, நல்ல படம் எடுக்கிறேன் பேர்வழி என்று வண்டி வண்டியாக வசனம் பேசினால் எவருக்கும் பிடிக்காது, சேது, காதல் போன்ற நல்ல படங்கள் நன்றாகவே ஓடி இருக்கிறது, யதார்த்தங்கள் போரடிக்காமல் பேசப்படவேண்டும்.
யாரும் அறிவுரை கேட்பதற்காக சினிமே தியேட்டருக்கு செல்வதில்லை.
//
NOTE: I am not good in tanglish, I know only English & Tamil so, I go with English as I cant type Tamil through a English keyboard//

பரவாயில்லை, நான் தமிழிலேயே சொல்கிறேன்.

//I don’t agree that u r a person who don’t like masala film. U too have enjoyed looking in to shreya, so don’t act like you guys are intelligent.//

மசாலா படம் என்றாலும் ஒரு லாஜிக் வேண்டாமா ? ஸ்டீரியோ டைப் படங்கள் படமுழுவதும் சண்டை குத்துப்பாட்டு, தியேட்டரை விட்டு துரத்தப்படும். இந்த படத்தை நான் மோசமாக விமர்சிக்கவில்லை

//I have seen many people (Educated) who enjoy a typical Tamil movie*. These educated guys will never agree that they liked it; I found various reasons for that
• Jealous of the actor
• Thinking that their friend will look @ them differently. (Because they are educated)//

படித்தவர்கள் மாதிரி குப்பை சிந்தனை பாமரர்களுக்கும் இல்லை. இனிமேல் படித்தவர்கள் என்ற சொல் பதத்தை அளவுகோளாக வைப்பதற்கு முன் சற்று சிந்தித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். படித்தவன் தான் குப்பை படங்களை எடுத்து பாமரனை ஏமாற்றுகிறான். அதனால் படித்தவன் நல்லா இருக்கு என்றால் அது சூப்பர் படம் இல்லை, மட்டமாக இருக்கு என்றால் ஓடாமல் இருப்பதும் இல்லை. எஜுகேட்டட் புண்ணாக்கு எல்லாம் அறிவாளி கிடையாது.

//But these are guys who see that movie first day first show. Dear Blogger, I have a question for you?
Even if you are not in INDIA what is the Necessity to see that movie @ FDFS, //

ஐயா சாமி, தமிழ்நாட்டில் தான் முக்கினாலும் முதல்நாள் டிக்கெட் கிடைக்காது, இங்கு முதல் நாளே போகாவிட்டால் படத்தை தூக்கிவிட்டால் அப்பறம் பார்க்க முடியாது ஐயா. ஒருவேளை ஆற அமர பார்கனும் என்றால் நேரமும் கிடைக்கனும் //

//
when u dont like masala movies or when u need logic? Any way you know vijay movies are குப்பை, It will be great If you can answer. Please dont blame that u r friends or relative for watching this movies.//

மசாலா படம் என்றாலும் லாஜிக் இருக்கனும், விஜய்காக படம் ஓடுது என்றால் சச்சின் தியேட்டரை விட்டு ஓடியது ஏன் ? ஒட்காருவதையும், உச்சா போவதையெல்லாம் ரசிகன் கூட விரும்பி பார்க்க மாட்டான். அ.த.ம அவ்வளவு மோசமில்லை. இடைவேளை வரை கலகலப்பாகவே இருக்கு. விஜய் ரசிகர்கள் தான் படம் பார்கனும் என்று சொல்ல வருகிறீர்களா ? தெளிவா சொல்லுங்க சாமி.


///' விஜயடோ குப்பை படங்கள் எவ்வளவோ ஓடி இருக்கிறது, இது ஓடாதா?'////

//i have seen guys asking for logic only in Tamil films. If it’s a hollywood flick, they don’t have any problem. Bruce Wills can do any thing @ the age of 54, it’s not a problem for our guys, if the same thing is done by kamal or rajini it’s a Great problem they can digest , will take a pen or login in to the blog and start SCREAMING that there is NO LOGIC in this Movies, that LOGIC is not there , this LOGIC is not there.
//

அடேங்கப்பா சூப்பர் கண்டுபிடிப்பு, நாங்க என்றால், நீங்க ஆகயத்தில் இருந்து வந்தவரா ? எந்த படமும் நடிகனுக்காக ஓடுவதில்லை என்பதை 'பாபா' பஞ்சராகி நிறுபித்தது, திரைகதை தொய்வில்லாமல் போகனும்.

//
* Means movies which are classified as Masala Flick or only for B & C Centre.
//

திரும்பவும் படித்தவன் படிக்காதவன் ஒப்பீடா, A செண்டருக்காக எவரும் படமெடுக்கவில்லை. மாசாலாப்படம் எப்படி இருந்தாலும் போரடிக்காமல் இருந்தால் எல்லா செண்டரிலும் பார்ப்பார்கள். உதாரணம் ரஜினி படங்கள்.

கோபிநாத் சொன்னது…

///திரைப்படம் என்பது பொழுது போக்கு, வியாபார ரீதியானது, நல்ல படம் எடுக்கிறேன் பேர்வழி என்று வண்டி வண்டியாக வசனம் பேசினால் எவருக்கும் பிடிக்காது, சேது, காதல் போன்ற நல்ல படங்கள் நன்றாகவே ஓடி இருக்கிறது, யதார்த்தங்கள் போரடிக்காமல் பேசப்படவேண்டும்.
யாரும் அறிவுரை கேட்பதற்காக சினிமே தியேட்டருக்கு செல்வதில்லை.
//

I never told that people go to cinema just for listening advice. Can any one tell me what is that meaning full cinema...


///மசாலா படம் என்றாலும் ஒரு லாஜிக் வேண்டாமா ? ஸ்டீரியோ டைப் படங்கள் படமுழுவதும் சண்டை குத்துப்பாட்டு, தியேட்டரை விட்டு துரத்தப்படும். இந்த படத்தை நான் மோசமாக விமர்சிக்கவில்லை///

as per the post all vijay films are waste then what is the need to see that movie on the first day.

//எஜுகேட்டட் புண்ணாக்கு எல்லாம் அறிவாளி கிடையாது.//
But her most of the people think that they are Brainy as they are educated

//ஐயா சாமி, தமிழ்நாட்டில் தான் முக்கினாலும் முதல்நாள் டிக்கெட் கிடைக்காது, இங்கு முதல் நாளே போகாவிட்டால் படத்தை தூக்கிவிட்டால் அப்பறம் பார்க்க முடியாது ஐயா. ஒருவேளை ஆற அமர பார்கனும் என்றால் நேரமும் கிடைக்கனும் //

Sir ticket matter is ok, So i guess you have seen all the tamil movies releasing in you are... correct. Any thing and everything.

//
when u dont like masala movies or when u need logic? Any way you know vijay movies are குப்பை, It will be great If you can answer. Please dont blame that u r friends or relative for watching this movies.//

I never told that only vijay films should see the film... I got this question just because u said that this film will be liked by vijay fans

கோவி.கண்ணன் சொன்னது…

//I never told that people go to cinema just for listening advice. Can any one tell me what is that meaning full cinema...//

அதெல்லாம் படம் எடுக்கிறவங்களுக்கே தெரியாது.
:)

//as per the post all vijay films are waste then what is the need to see that movie on the first day.//

நான் விஜய் படங்கள் எல்லாம் குப்பை என்று சொல்லவில்லை. கவனிக்க அங்கே மேலே எழுதியதில் 'எல்லாம்' இல்லை.
:)

//I never told that only vijay films should see the film... I got this question just because u said that this film will be liked by vijay fans//

பின்னே ரசிக மணிகளுக்கு பைட்டும், குத்துப்பாட்டும் போதாதா ? அது படத்தில் இருக்கு சார்.

//Sir ticket matter is ok, So i guess you have seen all the tamil movies releasing in you are... correct. Any thing and everything.
//
எனக்கு வேற பொழப்பே இல்லையா ?

கோபிநாத் சொன்னது…

//எனக்கு வேற பொழப்பே இல்லையா ? //

தலிவ உங்களுக்கு வேற பொழப்பு இருக்கு.

Thats y i am asking y you have wasted your time 3 Hrs yesterday. :)

மங்களூர் சிவா சொன்னது…

//
சிவாஜியை விட இதில் சிரேயா பாடல் காட்சிகளில் ரொம்பவே இறங்கி அசத்தி இருக்கிறார்.
//
இது ஒண்ணே போதுமே 100 நாள் ஓட
:-))))))))))))

பாரதிய நவீன இளவரசன் சொன்னது…

Whether this film deserve this much extensive research I couldnt say. But anyhow, I find it has not only triggered you to write a review but also inspired many to comment on your review...

//விஜயடோ குப்பை படங்கள் எவ்வளவோ ஓடி இருக்கிறது, இது ஓடாதா?//

That one line speaks for all!

cheena (சீனா) சொன்னது…

இப்ப்போது தான் மோகந்தாசின் செப்புப் பட்டயத்தில், அழகிய தமிழ் மண விமர்சனத்திற்கு மறு மொழி இட்டு வந்தேன். இன்னும் ஒரு விமர்சனம் இங்கே.

//விஜயடோ குப்பை படங்கள் எவ்வளவோ ஓடி இருக்கிறது, இது ஓடாதா ?
//

குப்பை படம் என்று சொல்லி விட்டார்கள். பொதுவாக விமர்சனம் என்பது அவரவர்களின் மனதை, விருப்பு வெறுப்புகளை, சூழ்நிலைகளை, பொறுத்தது. ஒருவர் கூறும் விமர்சனம் இறுதியானது அல்ல. மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள வேண்டியதும் அல்ல.

இத்தனை மறுமொழிகளில் படத்தைப் பாராட்டி ஒருவர் கூட எழுத வில்லையா ?? பதிவு எவ்வழி -- மறுமொழிகள் அவ்வழி

கோவி.கண்ணன் சொன்னது…

//குப்பை படம் என்று சொல்லி விட்டார்கள். பொதுவாக விமர்சனம் என்பது அவரவர்களின் மனதை, விருப்பு வெறுப்புகளை, சூழ்நிலைகளை, பொறுத்தது. ஒருவர் கூறும் விமர்சனம் இறுதியானது அல்ல. மற்றவர்களால் ஏற்றுக் கொள்ள வேண்டியதும் அல்ல.

இத்தனை மறுமொழிகளில் படத்தைப் பாராட்டி ஒருவர் கூட எழுத வில்லையா ?? பதிவு எவ்வழி -- மறுமொழிகள் அவ்வழி//

சீனா ஐயா,

சூப்பர் படம் என்று சொன்னால் அவரவர் மனம் போல்தான் விமர்சனம் இருக்கும், நான் என் விமர்சனத்தில் படத்தைப் பார்பதற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்லவில்லை. :)

அதுசரி விஜய்படம் தோல்வி என்றால் பங்கு சந்தை வீழ்ந்துடுமா ? தமிழ்நாட்டுக்கு பஞ்சம் வந்திடுமா ?நீங்க கவலைப்படுவதைப் பார்த்தால் எனக்கு கவலையாக இருக்கு. நீங்க மதுரை ஏரியாவில் அந்த படத்தை வாங்கி ரிலிஸ் செய்திருக்கிறீர்களா ?

:))

RATHNESH சொன்னது…

படத்தையும் விமர்சனத்தையும் விடுங்கள்; படம் வந்த வேகத்தில் வந்திருக்கும் விமர்சனமும் அதற்கான இத்தனை பின்னூட்டங்களும் அந்தப் பின்னூட்டங்கள் தாங்கி வந்துள்ள திரைத்துறைச் செய்திகளும் பிரம்ம்ம்ம்ம்ம்ம்மிக்க வைக்கின்றன.

தமிழகத்திற்கு இதுவரை ஐந்து முதல்வர்களைத் திரையுலகம் தந்திருப்பதாகச் சொல்வார்கள். இனி தமிழகத்தில் திரைத் தொடர்பு இல்லாதவர்கள் அரசியல் கூடப் பண்ண முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்று பயமாக இருக்கிறது.

ஜமாலன் சொன்னது…

ரத்ணேஷ் சொன்னதை வழி மொழிகிறேன்.

அது என்னங்கய்யா மற்றவை வெள்ளித் திரையில் காண்க என்று ராணி குமுதம் மாதிரி விமர்சனம். எதாவது கமிஷன் ஒப்பந்தமா?

நான் அதை எல்லாம் LCD திரையில்தான் பர்க்க முடியும்.. இன்னும் பார்க்கவில்லை.

டிடவில்டாட் காம் போட்டாச்சான்ன தெரியல.. ஒரே பிஸி...

3 மணி நேரம் பார்த்து 1 மணி நேரம் பதிவு எழுதி.. அதற்கு பின்னோட்டம் பதில் என 2 அல்லது 3 மணி நேரம். விஜயைவிட அதிகமாக உழைத்து விடடீர்கள் அதற்கு ஒரு பாராட்டு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்