பின்பற்றுபவர்கள்

29 நவம்பர், 2007

ஆண்களின் சபலம் ஒரு அவலம் !

சேரன்மகாதேவி: நண்பருடன் ஓடிய மனைவியை ஏற்க கணவர் மறுத்ததாலும், அவரை அழைத்து சென்ற கள்ளக் காதலனும் தலைமறைவாகி விட்டதாலும் அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

---

இந்த செய்தியில் தொடர்புள்ளவர்கள் நட்பை கேவலப்படுத்துகிறார்களா ? அல்லது நம்பிக்கையை கேவலப்படுத்துகிறார்களா ? அல்லது உறவுகளின் புனித தன்மையை கேவலப்படுத்துகிறார்களா ? எல்லாவற்றையுமே என்று கசப்பாகவே நினைத்துக் கொள்ளத்தான் முடிகிறது.

திருமணம் ஆன பெண்களுக்கு ஏன் ஆண் நண்பர்கள் இருக்க முடிவதில்லை என்று பல நேரம் நினைத்துப் பார்ப்பேன். கட்டுப்பாடு அற்றவர்கள், வயதில் உள்ள ஆணும் பெண்ணும் நெருக்க மாக பழகினால் அது பாலியில் உறவில் முடிந்துவிடும் என்று இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. எத்தனையோ சினிமாக்கள் நட்புக்கும் பாலினத்திற்கும் தொடர்பில்லை என்று காட்டிவிட்டார்கள். நட்பு என்பது அன்பின் வெளிப்பாடு என்று நினைக்கிறோம், நெருங்க நெருங்க ஒத்த பாலினம் என்றால் இருவருக்கும் ஒரின ஈர்ப்பு மாதிரி ஈர்ப்பு இல்லை என்றால் ஒண்ணும் ஆகாது. ஆனால் எதிர்பாலினம் நட்பு கொள்ளும் போது ஈர்ப்பு இயற்கையிலேயே அமைந்துவிடுவதால் அன்பின் வெளிப்பாட்டில் தன்னையே கொடுக்கலாம், அல்லது உரிமை எடுத்துக் கொண்டு அடையலாம் என்றெல்லாம் சபலமாக ஆகிவிடும் என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

என் நண்பர் ஒருவர் முன்பு ஒருமுறை அழகாக சொன்னார், 'ஒருவன் பாலியல் விசயத்தை தவறான வழியின் மூலம் ஈடுபடாமல் இருக்கிறான், குறிப்பாக அவன் திருமணம் ஆகாதவன் என்றால் அவனுக்கு இன்னும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை' என்றுதான் பொருள் என்று, அதாவது சூழ்நிலை அது போல் அமையாமல் போனால் அவன் யோக்கியனாகவே இருப்பான்' என்ற பொருளில் சொன்னான். திகைத்தேன். நினைத்துப் பார்க்கையில் சரிதான் என்று தோன்றுகிறது. வலிய வாய்ப்பு கிடைத்தால் எத்தனை பேர், சினிமா கதா நாயகர்கள், விரக பார்வையுடன் நெருங்கும் பெண்களுக்கு அட்வைஸ் மழை பொழிவது போல் செய்வார்கள் என்று தெரியவில்லை. நடப்பில் விழுக்காட்டு அளவில் ஆண்கள் தான் பெண்களை அதிகம் தூண்டுகிறார்கள்.

பெண்களை குறை சொல்ல முடிந்தால் எதோ ஒரு சபலம் என்ற அளவில் மட்டுமே சொல்ல முடியும். அதற்கு முழுப் பொறுப்பையும் ஆண் வர்க்கம் தான் ஏற்கவேண்டும். ஆண்களில் கேடுகெட்ட குணத்தை வைத்துதான் 'அண்ணன் மனைவியை அம்மா' என்ற பொருள்படவே நினைக்கும் அளவுக்கு நம் சமூகத்தில் சொல்லிக் கொடுக்கிறார்கள், நண்பர் மனைவியை ஏன் தன் சகோதரி என்று கருதமுடியவில்லை ? கட்டுப்பாடு அற்றவர்களுக்கு எந்த உறவும் தடையில்லை போலும்.

உறவுகளை நன்கு புரிந்து கொண்டுள்ளவர்களுக்கு எந்த சபலமும் ஏற்படாது. பழக்கத்தை வைத்து தவறாக நடந்தால் நிச்சயம் செருப்பால் அடிப்பார்கள். அடிக்க வேண்டும்.

ஒரு சிலரின் ஈன செயலை வைத்து எல்லோரையும் எடை போட முடியாது. ஆனாலும் அந்த ஒரு சிலரில் ஒரு சிலருக்கு தவறுகள் நடப்பதற்கு சூழலே முக்கிய காரணமாக அமைந்துவிடும். மெக சீரியல்களும், சினிமாக்களும் சமூக சீரழிவுகள் பெருகுவதற்கு சொல்லிக் கொடுக்கின்றன. சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் ஒரு தவறுதான்.

திருமணம் ஆன ஆண்கள் கூட வேறொரு பெண் தன்னை நேசித்தால் தன் ஆண்மையின் பெருமையாகத்தான் நினைக்கிறான். உறவுகள் புரிந்து கொள்ளப்படாதவரை இத்தகைய சமூக அவலங்கள் தொடர்கதைதான்.

19 கருத்துகள்:

Unknown சொன்னது…

எந்தவொரு நிலையிலும் ஆண் ஆணாகத்தான் இருப்பான். அதற்கு வசதி இருக்கும் பட்சத்தில் பெண்ணை அடையவே அவன் மனம் விரும்பும். உலகில் ஒரு ஆணும் இராமனில்லை என்று வைரமுத்துவின் வரிகளில் எங்கோ பார்த்த நினைவு.(ராமனே ஒருத்தியோடு மட்டும் வாழ்ந்தவனில்லை என்பது வேறு கதை)

தவறு யார் செய்திருந்தாலும், தண்டணையின் பெரும்பகுதியை பெண்ணே அனுபவிக்கிறாள். எனவே தவறுகள் நடைபெறாமலிருக்க அதற்கான வாய்ப்புக்களை முழுதும் அடைத்து விடுவதே (அல்லது அத்திசையில் முயற்சிப்பதே) சரியானது என்பது என் கருத்து. அதாவது பெண்கள் அல்லது பொறுப்பிலுள்ளவர்கள், ஒரு அன்னிய ஆணுடன் பெண் தனித்திருக்கும் வாய்ப்புகளை முழுவதும் தவிர்க்க முயற்சிப்பதே சிறந்தது.

//உறவுகள் புரிந்து கொள்ளப்படாதவரை இத்தகைய சமூக அவலங்கள் தொடர்கதைதான்.//

உறவுகள் மட்டுமில்லை.
ஆண் என்பவன் யார்? அவன் தன்மைகள் என்ன?
பெண்மகள் என்பவள் யார்? அவள் தன்மைகள் என்ன? என்பதையும் புரிந்து கொள்ளப்படாதவரை இத்தகைய சமூக அவலங்கள் தொடர்கதைதான்.

Randar Kai சொன்னது…

Virginity is lack of opportunity
என்று கேள்விப்பட்டதில்லையா நீங்கள் ? இது மிக நல்ல பதிவு திரு கோவி கண்ணன் அவர்களே !

On another note : இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்ற ஒரு சங்கதி : தெரிந்த ஒருவர் தன் மாமியாரை உரசி உரசி பேசுவார், தவறான இடங்களில் தொடுவார், வேண்டுமென்றே மேலே படுவார். அப்படி ஒரு வக்கிர நினைப்பு, பெண்டாட்டி நன்றாக இருக்கும்போதே !! மாமியார் அவரை ஒரு முறை நன்றாக திட்டிய பிறகே அவருக்கு புத்தி வந்தது.

வடுவூர் குமார் சொன்னது…

பல மெகா சீரியல்களின் பேச்சுகள் மட்டும் காதில் விழும்... அதிலேயே இப்படிப்பட்ட நிகழ்வுகள் தான் அதிகம் எடுத்தாளப்படுகிறது.
உங்கள் நண்பர் சொன்னதில் 90 விழுக்காடு உண்மை இருப்பது போல் தெரிகிறது.சிலர் சூழ்நிலை அமைந்தும் சுயக்கட்டுப்பாடு தடுத்துவிட கூடியதும் உண்டு.
ஆண்களின் சபலம் ஒரு அவலம்- அது ஜீனின் குறைபாடாக கூட இருக்கலாம்,ஒரு வேளை இயற்கையின் குறைபாடு??
அடுத்தவன் மேல் பழி போடுவதே, நமக்கு ஈசியாக வரக்கூடியது தானே?. :-)

Raveendran Chinnasamy சொன்னது…

//'ஒருவன் பாலியல் விசயத்தை தவறான வழியின் மூலம் ஈடுபடாமல் இருக்கிறான், குறிப்பாக அவன் திருமணம் ஆகாதவன் என்றால் அவனுக்கு இன்னும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை' //

100 % true .

Just a word for Sultan :

//.(ராமனே ஒருத்தியோடு மட்டும் வாழ்ந்தவனில்லை என்பது வேறு கதை)
//

There is no need to mention Raman here . Please restrint from these and provide comments to the subject .

Nakkiran சொன்னது…

//.(ராமனே ஒருத்தியோடு மட்டும் வாழ்ந்தவனில்லை என்பது வேறு கதை)//


சுல்தான்,

பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை தேவையில்லாமல் இங்கு சொல்ல வேண்டியதில்லை..இதுதான்ய பிரச்சனையே..

அரை பிளேடு சொன்னது…

//நண்பருடன் ஓடிய மனைவியை ஏற்க கணவர் மறுத்ததாலும், அவரை அழைத்து சென்ற கள்ளக் காதலனும் தலைமறைவாகி விட்டதாலும் அந்த பெண் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
//


அந்த கணவன் தன் மனைவியை மன்னித்து நடந்ததை மறந்து ஏற்றுக் கொள்ளக் கூடாதா ?

RATHNESH சொன்னது…

மன்னிக்கவும் கோவி.கண்ணன்,

// உறவுகளை நன்கு புரிந்து கொண்டுள்ளவர்களுக்கு எந்த சபலமும் ஏற்படாது. பழக்கத்தை வைத்து தவறாக நடந்தால் நிச்சயம் செருப்பால் அடிப்பார்கள். அடிக்க வேண்டும்.

ஒரு சிலரின் ஈன செயலை வைத்து எல்லோரையும் எடை போட முடியாது. ஆனாலும் அந்த ஒரு சிலரில் ஒரு சிலருக்கு தவறுகள் நடப்பதற்கு சூழலே முக்கிய காரணமாக அமைந்துவிடும்.

வலிய வாய்ப்பு கிடைத்தால் எத்தனை பேர், சினிமா கதா நாயகர்கள், விரக பார்வையுடன் நெருங்கும் பெண்களுக்கு அட்வைஸ் மழை பொழிவது போல் செய்வார்கள் என்று தெரியவில்லை.//

உங்கள் பதிவில் இவ்வளவு முரணான வாக்கியங்களை முதன்முறையாகக் காண்கிறேன்.

// என் நண்பர் ஒருவர் முன்பு ஒருமுறை அழகாக சொன்னார், 'ஒருவன் பாலியல் விசயத்தை தவறான வழியின் மூலம் ஈடுபடாமல் இருக்கிறான், குறிப்பாக அவன் திருமணம் ஆகாதவன் என்றால் அவனுக்கு இன்னும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை' என்றுதான் பொருள் //

என்று சொன்னவரும் சரி, இன்னும் கிட்டத்தட்ட இதே பொருளில் கருத்துக்கள் சொல்லி இருக்கும் சில அறிஞர்களும் சரி, எப்படி தங்களை ஒட்டு மொத்த ஆண்குலத்துக்கும் REPRESENTATIVE ஆக நியமித்துக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை.

ஆண் பெண் இயல்புகள் குறித்த அறிவியல் பூர்வமான உளவியல் ஆராய்ச்சிகள் ஒரு முடிவாக ஏதாவது சொன்னால் அது சிந்திக்க வேண்டிய விஷயமாகலாம். அதை விடுத்து ஓரிருவர் சொல்கின்ற கருத்துக்கள், சில செய்தித்தாள் செய்திகளை வைத்து அதனை ஒட்டு மொத்த இனத்துக்குமான பொதுப்படையாக்குவது நல்ல சிந்தனை ஆகாது என்பது என் கருத்து.

தனி மனித OPINION களில் பெரும்பாலும் தன்னை மையமாக வைத்தே கருத்துச் சொல்வது தவிர்க்க இயலாததாக இருக்கும். துரியோதனனும் தர்மனும் ஒரே ஊரினைச் சுற்றி வந்து ஊரைப் பற்றிச் சொல்லும் போது, "ஊர் முழுக்க அயோக்கியர்களும் திருடர்களும அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படுபவர்களும் தான் குவிந்திருக்கிறார்கள்" என்பது துரியோதனன் கருத்தாகவும், "எல்லோரும் நல்லவர்களாக, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்களாக ஒற்றுமையாக இருக்கிறார்கள்" என்பது தர்மனின் கருத்தாகவும் வெளிப்பட்டதாக நாம் படித்திருக்கிறோமே.

குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை தாயன்பும் சகோதர அன்பும் சரிவரக் கிடைக்கப் பெற்ற எந்த ஆண்மகனும் சபலிஸ்ட் ஆக முடியாது என்பது உளவியல் கருத்து. சமூக ஒப்புதல் இல்லாத எந்தக் கெட்ட பழக்கத்துக்கும் பின்னணியில் நிறைவடையாத ஓர் ஏக்கம் கொண்ட மனதின் ஓலம் இருக்கும். தாங்கள் எழுதியுள்ள // உறவுகளை நன்கு புரிந்து கொண்டுள்ளவர்களுக்கு எந்த சபலமும் ஏற்படாது.// என்ற வாக்கியத்தின் ஆழ்ந்த அர்த்தம் இது தான். அதனையும் எழுதி விட்டு அதற்கு மேலும் எப்படி // திருமணம் ஆன ஆண்கள் கூட வேறொரு பெண் தன்னை நேசித்தால் தன் ஆண்மையின் பெருமையாகத்தான் நினைக்கிறான். // இப்படிப் பொதுப்படுத்தி உங்களால் எழுத முடிந்தது என்று புரியவில்லை.


முடிவாக,

// குறிப்பாக அவன் திருமணம் ஆகாதவன் என்றால் அவனுக்கு இன்னும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை // என்று சொல்வதெல்லாம் வக்கிர சிந்தனை. நல்லவர்களைப் புண்படுத்தும் வகையில் சேறு இறைக்கும் செயல்.
தனிமனித ஒழுக்கம் குறித்து இதற்கு மேல் சிந்திக்க முடியாதவர்களின் சிந்தனை வளர்ச்சிக் குறைவுக்காக இரக்கப்படலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

RATHNESH said...

//மன்னிக்கவும் கோவி.கண்ணன்,

உங்கள் பதிவில் இவ்வளவு முரணான வாக்கியங்களை முதன்முறையாகக் காண்கிறேன்.//உங்கள் பின்னூட்டம் இப்படி வரும் என்று தெரியும். :) இன்னும் சிலவற்றை எழுதினேன். அதன் பிறகு சர்ச்சை ஆகும் என்று எடுத்துவிட்டேன். ஆண்களில் சபலத்துக்கு ஆளாகாத உதாரண புருசர்கள் மிக மிக குறைவு. அப்படிப்பட்டவர்களை நீங்கள் அதை குறித்து சொல்கிறீர்கள். விழுக்காட்டு அளவில் அதிகம் இருப்பதை நான் காட்டினேன். திருமணத்திற்கு முன்பு ஆண்களில் 90 விழுக்காட்டினர் பாலியல் உறவு கொள்பவர்கள் என்று கருத்து கணிப்பு இருக்கிறது. அதை ஒப்புக் கொள்வீர்கள் என நினைகிறேன். எனது கருத்து 90 விழுக்காட்டைப் பற்றியது, அதிலும் சபல கேஸ்கள் பற்றியது. மீதம் உள்ள 10 விழுக்காட்டைப் பற்றி தான் நீங்கள் சொல்கிறீர்கள். அதை ஏற்கிறேன். நான் ஒட்டுமொத்த ஆண்களை சொல்லவில்லை. விழுக்காட்டு அளவில் பார்த்தால் பொதுப்படையாகத்தான் சொல்லவேண்டி இருக்கிறது.

// என் நண்பர் ஒருவர் முன்பு ஒருமுறை அழகாக சொன்னார், 'ஒருவன் பாலியல் விசயத்தை தவறான வழியின் மூலம் ஈடுபடாமல் இருக்கிறான், குறிப்பாக அவன் திருமணம் ஆகாதவன் என்றால் அவனுக்கு இன்னும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை' என்றுதான் பொருள் //

//என்று சொன்னவரும் சரி, இன்னும் கிட்டத்தட்ட இதே பொருளில் கருத்துக்கள் சொல்லி இருக்கும் சில அறிஞர்களும் சரி, எப்படி தங்களை ஒட்டு மொத்த ஆண்குலத்துக்கும் REPRESENTATIVE ஆக நியமித்துக் கொள்கிறார்கள் என்று புரியவில்லை.//எல்லோருக்கும் தன் மேல் நம்பிக்கை இருக்கும், ஆனால் வாய்பு கிடைத்தால் தவிர்த்தவர்கள் என்று எத்தனை பேர் இருக்கிறார்கள் ? வாய்ப்பு கிடைத்து விலகிச் சென்றவர்கள் தான் சொல்ல முடியும். அல்லது வாய்ப்பே கிடைக்காமல் இருப்பதால் அப்படியே இருக்கிறார்களா ? அவரவர்தான் முடிவு செய்து கொள்ளவேண்டும்.

கீழே கிடக்கும் விலை உயர்ந்த பொருள்களை திருடுவதற்கு (எடுப்பதற்கு என்று சொல்லமாட்டேன்) கூட

ஒன்று அந்த பொருள் தனக்கு தேவையற்றதாக நினைத்து திருடாமல் இருக்கலாம், அல்லது மாட்டிக் கொண்டால் அவமானமாகிவிடும் என்று நினனத்து திருடாமல் இருக்கலாம், தனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்ற மனநிலையில் இருப்பவர்கள் மிக குறைவாம்


//
ஆண் பெண் இயல்புகள் குறித்த அறிவியல் பூர்வமான உளவியல் ஆராய்ச்சிகள் ஒரு முடிவாக ஏதாவது சொன்னால் அது சிந்திக்க வேண்டிய விஷயமாகலாம். அதை விடுத்து ஓரிருவர் சொல்கின்ற கருத்துக்கள், சில செய்தித்தாள் செய்திகளை வைத்து அதனை ஒட்டு மொத்த இனத்துக்குமான பொதுப்படையாக்குவது நல்ல சிந்தனை ஆகாது என்பது என் கருத்து.//ஒட்டுமொத்தமாக சொல்லவில்லை. அந்த நிகழ்வு ஒரு உதாரணத்துக் எடுத்துக் கொண்டேன்.

//தனி மனித OPINION களில் பெரும்பாலும் தன்னை மையமாக வைத்தே கருத்துச் சொல்வது தவிர்க்க இயலாததாக இருக்கும். துரியோதனனும் தர்மனும் ஒரே ஊரினைச் சுற்றி வந்து ஊரைப் பற்றிச் சொல்லும் போது, "ஊர் முழுக்க அயோக்கியர்களும் திருடர்களும அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படுபவர்களும் தான் குவிந்திருக்கிறார்கள்" என்பது துரியோதனன் கருத்தாகவும், "எல்லோரும் நல்லவர்களாக, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை உள்ளவர்களாக ஒற்றுமையாக இருக்கிறார்கள்" என்பது தர்மனின் கருத்தாகவும் வெளிப்பட்டதாக நாம் படித்திருக்கிறோமே. //பயிர்கள் அதிகம் இருந்தாலும் களையெடுப்பவர்களுக்கு களைதான் தெரியும். அதனால் அவர்கள் பார்வை தவறு என்று சொல்ல முடியாது. பொதுப்படையான உதாரணங்கள் கூட சறுக்கிவிடும் :)//

குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை தாயன்பும் சகோதர அன்பும் சரிவரக் கிடைக்கப் பெற்ற எந்த ஆண்மகனும் சபலிஸ்ட் ஆக முடியாது என்பது உளவியல் கருத்து. சமூக ஒப்புதல் இல்லாத எந்தக் கெட்ட பழக்கத்துக்கும் பின்னணியில் நிறைவடையாத ஓர் ஏக்கம் கொண்ட மனதின் ஓலம் இருக்கும். தாங்கள் எழுதியுள்ள //
இதை ஏற்றுக் கொள்ள முடியாது, எனது நண்பர்களின் இல்லங்களில் பலரை பார்த்திருக்கிறேன். மூன்று மகன்களை ஒன்று போல் தான் வளர்த்தெடுத்தார்கள். ஒருவன் மட்டும் ரவுடி, பெண் விவகாரம் என்றெல்லாம் சென்று குடும்பத்தையே தலைகுணிய வைத்தான். எனவே வளர்ப்பு என்பது வேறு தனிமனித வக்கிரம் வேறு. தாய் தந்தையரை குறை சொல்லவோ, வளர்பை தவறென்றோ சொல்ல முடியாது.

//// உறவுகளை நன்கு புரிந்து கொண்டுள்ளவர்களுக்கு எந்த சபலமும் ஏற்படாது.// என்ற வாக்கியத்தின் ஆழ்ந்த அர்த்தம் இது தான். அதனையும் எழுதி விட்டு அதற்கு மேலும் எப்படி

// திருமணம் ஆன ஆண்கள் கூட வேறொரு பெண் தன்னை நேசித்தால் தன் ஆண்மையின் பெருமையாகத்தான் நினைக்கிறான். // இப்படிப் பொதுப்படுத்தி உங்களால் எழுத முடிந்தது என்று புரியவில்லை.////

உறவுகளை நன்கு புரிந்து கொண்டுள்ளவர்களுக்கு என்று சொன்னது ஆண் பெண் இருவருக்கும் பொதுப்படையாக சொன்னேன். :)

கீழே குறிப்பிட்டது ஆண் சமுகத்திற்கு மட்டும். :) ஏதோ ஒரு சிறிய அளவில் வக்கரம் இருப்பதால் தான், கடைசியாக சில்க் நடித்தப்படம் பொங்கலுக்கு வரும் என்று என்னால் நினைக்க முடிகிறது. இதே போன்று மனைவி ஆண் அழகன்களை பற்றி சொன்னால் அதை ஏற்கும் ஆண்கள் இருக்கீறார்களா ? என்று தெரியவில்லை.


////முடிவாக,

// குறிப்பாக அவன் திருமணம் ஆகாதவன் என்றால் அவனுக்கு இன்னும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை // என்று சொல்வதெல்லாம் வக்கிர சிந்தனை. நல்லவர்களைப் புண்படுத்தும் வகையில் சேறு இறைக்கும் செயல்.
தனிமனித ஒழுக்கம் குறித்து இதற்கு மேல் சிந்திக்க முடியாதவர்களின் சிந்தனை வளர்ச்சிக் குறைவுக்காக இரக்கப்படலாம்.////

சூழ்நிலை அல்லது வாய்ப்புக் அமைந்துவிட்டிருந்தால் பலரும் (எல்லோரும் அல்ல) தவறு செய்பவர்கள் என்ற பொருளில் தான் கொள்ள வேண்டும். அப்படி செய்திருந்தாலும் திருமணத்திற்கு பின்பு 100% குடும்பஸ்தனாக மாறிய நல்லவர்களையும் பார்த்திருக்கிறேன். இங்கு முறையற்ற உறவுகள் பற்றி சொல்லவில்லை என்பதை புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். இங்கு சொன்னது எல்லாம் சூழலில் நடப்பவைதான், தப்பு செய்யவேண்டும் என்ற உள்நோக்கத்தில் இல்லாது செய்பவர்கள் குறித்துதான் குறிப்பிட்டு இருக்கிறேன். எனவே அதை ஒட்டுமொத்தாமாக 'சேறு' இறைப்பதாக என்னால் கொள்ள முடியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
எந்தவொரு நிலையிலும் ஆண் ஆணாகத்தான் இருப்பான். அதற்கு வசதி இருக்கும் பட்சத்தில் பெண்ணை அடையவே அவன் மனம் விரும்பும். உலகில் ஒரு ஆணும் இராமனில்லை என்று வைரமுத்துவின் வரிகளில் எங்கோ பார்த்த நினைவு.(ராமனே ஒருத்தியோடு மட்டும் வாழ்ந்தவனில்லை என்பது வேறு கதை)
//

சுல்தான் ஐயா, கருத்து ஓரளவுக்கு சரிதான். இருந்தாலும் ஆண்களிலும் உறவுமுறை குறித்த தெளிவும், அன்பும் உள்ளவர்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள்.

இரத்த உறவு அற்றவர்களின் எதிர்பாலின நெருக்கம், சூழல், ஆகியவை சிலருக்கு சபலமானதுதான், அபாயகரமானவைதான்.

ஆனால் இராமன் உதாரணம் தேவையற்றதுதான். இராமனை நினைப்பவர்கள் தான் இராமனை உதாரணம் காட்ட முடியும். நமக்கு வேண்டாமே :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Randar Kai said...
Virginity is lack of opportunity என்று கேள்விப்பட்டதில்லையா நீங்கள் ? //

கேள்விப்பட்டதில்லை. ஆனால் ஆண்களை முழுதாக நம்பும் பெண்கள் தவிர்த்து மற்றவர்களை அவ்வாறு சொல்ல முடியாது. ஆண்களுக்கு பொருந்தும்.

//இது மிக நல்ல பதிவு திரு கோவி கண்ணன் அவர்களே !

On another note : இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்துவிட்டால் என்ற ஒரு சங்கதி : தெரிந்த ஒருவர் தன் மாமியாரை உரசி உரசி பேசுவார், தவறான இடங்களில் தொடுவார், வேண்டுமென்றே மேலே படுவார். அப்படி ஒரு வக்கிர நினைப்பு, பெண்டாட்டி நன்றாக இருக்கும்போதே !! மாமியார் அவரை ஒரு முறை நன்றாக திட்டிய பிறகே அவருக்கு புத்தி வந்தது.
//

கொடுமை, மகளின் வாழ்வுக்காக அந்த கேடுகெட்ட ஜென்மத்தை கண்டித்த மாமியார் போற்றத்தக்கவர்தான். திருந்தி இருந்தால் மன்னிக்கலாம். காலத்துக்காமான சூடு இருக்கத்தான் செய்யும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
பல மெகா சீரியல்களின் பேச்சுகள் மட்டும் காதில் விழும்... அதிலேயே இப்படிப்பட்ட நிகழ்வுகள் தான் அதிகம் எடுத்தாளப்படுகிறது.
உங்கள் நண்பர் சொன்னதில் 90 விழுக்காடு உண்மை இருப்பது போல் தெரிகிறது.சிலர் சூழ்நிலை அமைந்தும் சுயக்கட்டுப்பாடு தடுத்துவிட கூடியதும் உண்டு.
ஆண்களின் சபலம் ஒரு அவலம்- அது ஜீனின் குறைபாடாக கூட இருக்கலாம்,ஒரு வேளை இயற்கையின் குறைபாடு??
அடுத்தவன் மேல் பழி போடுவதே, நமக்கு ஈசியாக வரக்கூடியது தானே?. :-)
//

குமார்,
அடுத்தவன் மேல் பழி போடுவதே, நமக்கு ஈசியாக வரக்கூடியது தானே?. :-)

இது சூப்பர். நானா போனேன் ? அவள் கூப்பிட்டாள் என்று தன்னை தற்காத்துக் கொள்வார்கள்.

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

தொடர்ந்து மிரட்டுகிறீர்கள்.

// திருமணத்திற்கு முன்பு ஆண்களில் 90 விழுக்காட்டினர் பாலியல் உறவு கொள்பவர்கள் என்று கருத்து கணிப்பு இருக்கிறது. அதை ஒப்புக் கொள்வீர்கள் என நினைகிறேன்.//

90% என்றால் என்ன தெரியுமா? நாம் பழகி இருக்கும் பத்து ஆண்களில் ஒன்பது பேர்; நம் உறவில் பத்து ஆண்களில் ஒன்பது பேர்; நாம் கேள்விப்பட்டவர்களில் பத்துப் பேரில் ஒன்பது பேர்; நம் அலுவலக வட்டாரத்தில் பத்து ஆண்களில் ஒன்பது பேர்; நம் குடியிருப்பில் பத்து ஆண்களில் ஒன்பது பேர்; இந்தப் பதிவுலகில் பத்து ஆண்களில் ஒன்பது பேர். சாத்தியமே இல்லாத புள்ளி விவரம் இது.

அரை பிளேடு சார்,

// அந்த கணவன் தன் மனைவியை மன்னித்து நடந்ததை மறந்து ஏற்றுக் கொள்ளக் கூடாதா ?//

"ஓடிப் போனவள்" என்கிற தலைப்பில் பாக்யா தீபாவளி சிறப்பு மலரில் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு சிறுகதை தங்கள் கருத்துக்குப் பொருத்தமானது என்று எண்ணுகிறேன். தனிப்பதிவாகத் தந்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அரை பிளேடு said...
அந்த கணவன் தன் மனைவியை மன்னித்து நடந்ததை மறந்து ஏற்றுக் கொள்ளக் கூடாதா ?
//

அரை பிளேடு ஐயா,

திருந்துவதற்கு கால அவகாசம் கொடுத்து வாய்ப்பு கொடுங்கப்பா.
:)

செய்தது மாபெறும் தவறு என்று அவளும் உணரவேண்டும், அவன் மனதும் ஆறவேண்டுமே. கால அவகாசம் வேண்டாமா ? மனைவியை நன்கு நேசித்தவர் என்றால் எப்படியும் ஏற்றுக் கொள்வார். இது போல் கேஸ்களை பார்த்திருக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Nakkiran said...

சுல்தான்,

பதிவுக்கு சம்பந்தமில்லாத விஷயத்தை தேவையில்லாமல் இங்கு சொல்ல வேண்டியதில்லை..இதுதான்ய பிரச்சனையே..
//

நக்கீரன் ஐயா,

நீங்களும் பதிவுக்கு தொடர்பு உள்ளது எதையும் சொல்லவில்லையே,

ஊஉ தானா ? நல்லா இருங்க சாமி !

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

தொடர்ந்து மிரட்டுகிறீர்கள்.

90% என்றால் என்ன தெரியுமா? நாம் பழகி இருக்கும் பத்து ஆண்களில் ஒன்பது பேர்; நம் உறவில் பத்து ஆண்களில் ஒன்பது பேர்; நாம் கேள்விப்பட்டவர்களில் பத்துப் பேரில் ஒன்பது பேர்; நம் அலுவலக வட்டாரத்தில் பத்து ஆண்களில் ஒன்பது பேர்; நம் குடியிருப்பில் பத்து ஆண்களில் ஒன்பது பேர்; இந்தப் பதிவுலகில் பத்து ஆண்களில் ஒன்பது பேர். சாத்தியமே இல்லாத புள்ளி விவரம் இது.//

ரத்னேஷ்,
எத்தனை பேர் தாம் வெளியில் சென்று வந்தோம் என்பதை வெளிப்படையாக சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள் ? நெருக்கமானவர்கள் தவிர்த்து மற்றவர்களிடம் எவரும் எதையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். எந்த புற்றில் எந்த பாம்பு என்று பாம்பு வெளியில் வந்தால் தான் தெரியும்.
சமுகத்தில் அவலம் இருப்பது உண்மைதான் ஆனால் அதை வெளிப்படையாக பேச கூச்சப்படுகிறோம் என்பதும் உண்மைதான். தவறு செய்யாதிருப்பவர்களுக்கு தங்கள் செயல் பெருமையாக தெரிவதால்( ஆனால் அது ஒரு இயல்பு தான் பெருமை குறியவை அல்ல) நெஞ்சை நிமிர்த்தி தாம் உத்தமன் என்று சொல்ல முடியும். வெளியே செல்லாமல் (இயல்பாக) இருப்பதே பெருமை குறிய விசயமாக கட்டமைப்பட்டுவிட்டதால் சென்றவர்கள் பம்மத்தானே செய்வார்கள். :). அவர்கள் சொல்லாமல் இருப்பதற்கு காரணம் நம் மீது வைத்திருக்கும் மரியாதையும், அதை நாம் தவறாக நினைத்து தண்டோரா அடித்துவிடுவோம் என்பதும் தான் காரணம்.

//அரை பிளேடு சார்,
"ஓடிப் போனவள்" என்கிற தலைப்பில் பாக்யா தீபாவளி சிறப்பு மலரில் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு சிறுகதை தங்கள் கருத்துக்குப் பொருத்தமானது என்று எண்ணுகிறேன். தனிப்பதிவாகத் தந்திருக்கிறேன்.
//

உங்க பின்னூட்டத்தை பார்க்கும் முன்பே அவருக்கு பதில் சொல்லிவிட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

இளவஞ்சியின் இந்த பதிவு பல படிப்பினைகளைச் சொல்லுது. அவசியம் படித்துப் பாருங்கள் !

Unknown சொன்னது…

நான் சொல்ல வந்த கருத்துக்கு பலம் சேர்க்க -
வசதி வாய்ப்புக்கள் இருந்ததால் இராமனுக்கும் அதுதான் நிலை. அதற்கு வழியில்லாத நிலையில் அல்லது சமூகத்துக்கு பயந்துதான் ஆண் நேர்மையாளனாகிறான். ராமன் போன்ற காப்பியத் தலைவனே கூட ஒருத்தியோடு வாழ்ந்ததாக அக்காவியத்தில் படைக்கப்படவில்லை. மனத்தளவில் யாரும் அப்படியில்லை. சில விதி விலக்குகள் இருக்கலாம் எனச் சொல்ல வந்தேன்.

இதில் எங்கே நான் பதிவுக்கு சம்பந்தமில்லாதததைப் பேசினேன்.

Mr. Raveendran Chinnasamy - Above details are showing how the comment is connected to the subject. if you stll want more I can eloborate further.

Mr. Nakkiran
நெற்றிக் கண்ணைத் திறந்தால்தான் புரியுமென்றால் சொல்லுங்கள்.

//இரத்த உறவு அற்றவர்களின் எதிர்பாலின நெருக்கம், சூழல், ஆகியவை சிலருக்கு சபலமானதுதான், அபாயகரமானவைதான்.//

சிலருக்கல்ல நண்பரே - பலருக்கு. அதனால்தான் 'அதிக அபாயகரமானது' எனச் சொல்கிறேன்.

//இராமன் உதாரணம் தேவையற்றதுதான். இராமனை நினைப்பவர்கள் தான் இராமனை உதாரணம் காட்ட முடியும். நமக்கு வேண்டாமே//
ஒருவனுக்கு ஒருத்தி என்பதற்கு நம் நாட்டில் உதாரணமாகக் காட்டப்படுபவரே அப்படித்தான் எனச் சொல்வது என் கருத்துக்கு வலுச் சேர்க்கும் என்பதால் சொன்னேன். சொன்னது குற்றமில்லை. 'சுல்தான்' சொன்னதுதான் குற்றம். (இதிலே பெயர்தான் பிரச்னை)

புரட்சி தமிழன் சொன்னது…

மனைவி என்பவல் என்ன சொத்தா இல்லை ஜடப்பொருளா தனக்கு மட்டுமே சொந்தம் என்று சொல்லிக்கொள்ள அவளுக்கும் உணர்வு ஆசை அனைத்தும் இருக்கத்தானே செய்யும் ஒரு கனவனால் திருப்த்தி அடையாத போது தானே அடுத்தவனுடன் ஓடிப்போகிறாள் பெண்கள் மந்திலும் காமஎழுச்சிகள் அதிகம் இருக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது கற்ப்பு என்பதே பென்னை அடிமைபடுத்த ஆன் ஏற்ப்படுத்திய ஒரு கொடிய சட்டம் ஒரு ஆண் வேசியை கூடினால் பெரிதாக பேசப்படுவதில்லை ராமன் சீதை என்பதே பென்களை அடிமை படுத்த ஏற்ப்பட்ட ஒரு கற்ப்பனை உருவம் கண்ணன் என்பதோ ஆன்களை அய்யோக்கியர் ஆக்கும் ஒரு கற்ப்பனை உருவம்

கோவி.கண்ணன் சொன்னது…

//புரட்ச்சி தமிழன் said...
மனைவி என்பவல் என்ன சொத்தா //

ஐயா புரட்ச்சீ பெரியவரே,

திருமணம் ஆன பெண்கள் அனைவருமே குடும்பத்தை விட செக்ஸ் வேட்கை முக்கியம் என்று அலைவதில்லை. உங்கள் கருத்து 'பெண்கள் தங்கள் ஆசையை அடக்கிக் கொள்ளக் கூடாது, பாதுகாப்ப்புடன் பிடித்தவர்களுடன் உடலுறவு கொள்ளலாம்' என்று கருத்தின் மறுகுரலாக ஒலிக்கிறது.

சில அரிப்பெடுத்த ஆண்களின் கவர்ச்சி பேச்சில் சில பெண்கள் மோசம் போவது உண்மைதான் அதைக் குறித்த எச்சரிக்கை பதிவுதான் இது. கணவனால் சரிவர உறவில் இயங்க முடியாவிட்டால் காரணங்களைக் கூறி விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று சொல்லி இருந்தால் சரியான கருத்து. கணவரின் உறவில் திருப்தி அடையாத பெண்களில் சிலர் அதைத்தான் செய்து வருகிறார்கள். அதை விடுத்து 'உண்பது ஒருவனிடமும் படுப்பது விரும்பியவர்களுடனும் என்று இருப்பதில் தவறில்லை' என்று நீங்கள் சொல்வது, உள் மனவக்கிரம் மற்றும் பெண்களை காமவெறியர்கள் போல் சித்தரிப்பதும் ஆகும். இந்த கருத்தையெல்லாம் நெருங்கியவர்களிடம் சொன்னால் கூட செருப்பால் அடிப்பார்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்