பின்பற்றுபவர்கள்

30 நவம்பர், 2007

மலேசிய விவகாரமும், தமிழர்களின் பலவீனமும் !

பக்கத்து நாட்டில் தமிழர்கள் பிரச்சனைகள் பற்றிக் கொண்டு எரிகிறது. ஆள் ஆளுக்கு ஆதரவு என்ற பெயரில் ஊதி பெரிதாக்கவே முயலும் அரசியல் வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. 'மலேசியா இன்னொரு இலங்கையாக ஆகும் அபாயம் இருக்கிறது' என்று விஜயகாந்த் ஆருடம் சொல்கிறார். 'தமிழனுக்கு உரிமை குரல்' என்ற துருப்புச் சீட்டு இல்லாமல் தமிழகத்தில் அரசியல் நடத்த முடியாது என்று அனைத்து கட்சிகளும் உணர்ந்திருகின்றன. ஈழத்தமிழர்கள் பற்றி கருத்து தெரிவிக்கும் போது கூட ஈழத்தமிழர்கள் நலன் காக்கப்படவேண்டும் அதே சமயத்தில் விடுதலை புலிகளை எதிர்க்கிறோம் என்பார்கள். எல்லாம் பேச்சளவில் தான். ஈழத்தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு எந்த வகையில் உதவினார்கள் ? என்று பார்த்தால் வெறும் அரசியல் ஸ்டெண்ட் என்று மட்டுமே தான் நினைக்க முடிகிறது.

மலேசியாவில் தமிழர்களும், சீனர்களும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்பதை மலேசிய வாழ் சீனர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். சீனர்களுக்கு இருக்கும் ஒற்றுமை தமிழர்களுக்கு கிடையாது. மலேசிய சீனர்களுக்கு பிரச்சனை என்றால் சீனா முதல் சிங்கப்பூர் வரையுள்ள அனைத்து சீனர்களுக்கு கொதித்து எழுகிறார்கள். அவர்களால் முடிகிறது. அவர்களுக்கு முடிகிறது, தமிழர்களுக்கு ஏன் முடிவதில்லை ? என்று ஆழ்ந்து பார்த்தால் தமிழன் பிரிந்து கிடக்கிறான் என்ற அதிர்ச்சி உண்மைதான் தெரிகிறது.

தமிழன் மத அடிப்படையில் பிரிந்து கிடக்கிறான். தமிழர்களுக்குள் மத அரசியலால் அடையவேண்டிய வெற்றி, இலக்குகளின் தொலைவுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. மலேசியாவில் இருப்பது இன பிரச்சனை, மலாய்காரார்கள் (மண்ணின் மைந்தர்கள்), இந்தியர், சீனர், மற்றும் பிறவெளிநாட்டினர். ஆனால் இதை இஸ்லாம் - இந்து விரோத பிரச்சனை ஆக்குவதில் மலேசிய இந்து அமைப்புகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்கு தமிழகத்தில் இருந்து தூபம் போடப்படுகிறது. தற்பொழுது நடக்கும் போராட்டத்தில் தமிழர் அல்லது இந்தியன் என்ற அடையாளத்தில் போராடாமல் 'இந்து' என்ற பெயரில் போராடாடுகிறார்கள். பெரிய அளவில் இருப்பது இனப்பிரச்சனையே அன்றி மதப்பிரச்சனை அல்ல. இந்து கோவில்களை இடிக்கிறார்கள் என்ற செய்தி உண்மைதான். ஆனால் அதே போன்ற நிகழ்வுகள் சிங்கப்பூரிலும் நடப்பது உண்டு. பழைய கோவில்களை இடித்துவிட்டு, புதிய இடம் கொடுத்து கட்டிக் கொள்ள அனுமதிப்பார்கள். இவையெல்லாம் எத்தனை பேருக்கு தெரியும் ?. ஆனால் மலேசியாவில் கோவில் இடிக்கப்பட்டால் மதுராவில் இருப்பவர்களுக்கு கூட எட்டிவிடும். காரணம் இந்து அரசியல். நாம் கோவில் பழசாக பழசாக புராதான சின்னம், புனிதம் பெற்றது என்கிறோம். அந்த நாட்டினர் 'பழைய கோவில்களில் பாதுகாப்பின்மை' என்றே பார்கிறார்கள். நகரங்கள் விரிவடையும் போது கோவில்களை அகற்றுவதென்பது இந்தியாவிலும் நடப்பதுதான். மலேசியாவில் இடித்த கோவில்களுக்கு மாற்று இடம் கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச் சாட்டும் இருக்கிறது. அது உண்மைதான் என்கிறார்கள் அங்குள்ள தமிழர்கள்.

தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு உரிமை கேட்பது என்ற போராட்டம் சரிதான். ஆனால் அதை 'இந்து' என்ற பெயரில் செய்வதால் இந்து - இஸ்லாம் பிரச்சனை ஆகி பெரிதாகுமேயன்றி சுமூக தீர்வு எட்டுவதற்கான வழி அடைபட்டு போகும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் இந்து என்ற பெயரில் போராடுவதால் மலேசியா வாழ் தமிழ் முஸ்லிம், தமிழ் கிறித்துவர்கள் கூட தமக்கு இது தொடர்பில்லாதா போராட்டமாக பார்க்கிறார்கள். டத்தோ சாமுவேல் அதுபோல் தான் கருத்து தெரிவித்து இருக்கிறார். தமிழர்கள் தங்கள் வழிபாட்டு தலங்களை இடிப்பதற்கு எதிராக போராடலாம், அதை தமிழன், இந்தியன் என்ற பெயரிலேயே போராடலாம், 'இந்து' என்ற பெயரில் போராடினால் அது வெறும் உணர்ச்சி போராட்டமாக அமையுமே அன்றி வெற்றிக்கான வழி பலவீனமற்றதாக மாறிவிடும். மலேசிய தமிழர்களுக்கு சாதி நோய் முற்றி இருக்கிறது என்பது அதிர்ச்சிகரமான தகவல், சாதி சங்க விழாக்களுக்கு அமைச்சர்களை அழைத்து வந்து கொண்டாடும் அளவுக்கு தமிழர்கள் மதிகெட்டுவிட்டார்கள். ஒற்றுமையில் சீனர்களை பார்த்தாவது திருந்தவேண்டாமா ?

எந்த வெளிநாடுவாழ் தமிழர்களின், எத்தகைய போராட்டமாக இருந்தாலும், அதில் மதமாக, சாதிகளாக தமிழர்கள் பிரிந்து போராடினால் பலவீனமே. போராடுபவர்கள் 'இந்து' என்று போராடினால் அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் 'இந்து'க்கள் மட்டுமே அதாரவு அளிப்பவர், மற்றோர் எல்லாம் தமக்கு தொடர்பில்லாது என்றே விலகிச் செல்வர் அல்லது புறக்கணிப்பர். இப்போது நடக்கும் வாழ் உரிமை போராட்டம் கூட 'இந்து' அரசியலாக மாறிச் செல்கிறதே யன்றி தமிழன், இந்தியன் அவனுக்கான வாழ்வுரிமை போராட்டமாக செல்லவில்லை என்பது கவலைக்குறியாதாக உள்ளது.

23 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

ம்ம்ம்....
:((((...
அவர்கள் இணைந்துள்ள விதம் வேண்டுமானால் தவறாக இருக்கலாம். ஆனால் போராட்டம் நியாயமானது தானே?

sukan சொன்னது…

நல்லா சொல்லியிருக்கிறீங்க. இந்து என்ற கருத்தை பிரதானமாக முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த பிரச்சனை மலேசிய தமிழர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணள்ளி போடுகின்றார்கள் என்றே எண்ணத்தோன்றுகின்றது. ஈழத்தமிழர்களின் வாழ்வு சாவின் விழிம்பில் நிற்ப்பதும் மத்திய அரசு தொடர்ந்து சிங்களவர்களுக்கு ஆயுத உதவிசெய்து தமிழர் கொலைகளை ஊக்குவிப்பதும் தெரிந்த ஒன்று. இதை தடுக்க முடியாத நிலையில் உள்ளது தான் தமிழக அரசியல் கட்சிகள். மேலும் தமிழக கட்சிகள் எக்காலத்திலும் கைகொடுக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. தமிழ்நாட்டில் சிங்களப்படைகளால் 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டதையே கண்டுகொள்ளாத மாநில அரசும் நடுவண் அரசும் மலேசிய தமிழர்களின் உரிமைப்போராட்டத்திற்கு துணை நிற்கும் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? உலகின் எந்த இனத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தாலும் தமிழர்களை கொண்டுவர முடியாது என்பது வெளிப்படையானது. மலேசியத்தமிழர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு சாதி மத வர்க்க சாயம் பூசாமல் தமிழர்களாக முன்னெடுப்பதே அவர்களுக்கு நன்மை பயக்கும். இல்லாவிடில் ஒரு நாள் மிக மிக வருந்த நேரிடலாம்.

TBCD சொன்னது…

சரியாச் சொல்லியிருக்கீங்க..அவங்க பிரச்சனைகளை வெளியுலகிற்கு தெரிவிக்கத் தான் அவர்கள் இது மாதிரி செய்திருக்கிறார்கள். நம்மவர்கள் குரல் கொடுப்பதை விட்டு, நமது வெளியுறவு தொடர்பினால், அமெரிக்க போன்ற ரவுடிகளை சில கருத்துக்களைச் சொல்ல வைத்தால், ஏதோ தீர்ப்பு பெயர வாய்ப்பிருக்கு..

பிரச்சனை இருப்பது உன்மை..
அதுக்கு மத ரீதியான சாயம் பூச பாக்ககூடாது..நம்மவர்கள் அதற்குள்ளாகவே அதை ஆரம்பித்து வைத்துவிட்டார்கள்..

RSS சங்கு அதற்குள் ஒரு பத்தி எழுதி, அவுட்லுக் அதை வெளியிட்டும் விட்டது.

சிவபாலன் சொன்னது…

Very Well Written!

Good Work GK!

Me சொன்னது…

பிரச்சினையை சரியான கோணத்தில் அலசியிருக்கிறீர்கள். மலேசிய தமிழர்களின் உரிமைகள் விரைவில் நிலைநாட்டப்படும் என்று நம்புவோம்!

ஜோ/Joe சொன்னது…

very well said!
Exactly reflects my thoughts.
(sorry for typing in english)

கோவை சிபி சொன்னது…

well said. if people take religion in hand the real cause willnot be survive.also malaysian govt willnot take seriously if religion come into the picture.finally sufferwillbe on lowerclass(economically) tamils.

-/பெயரிலி. சொன்னது…

மலேசியத்தமிழர்களின் பிரச்சனையை அவர்கள்தான் அதிகம் உணர்ந்திருப்பார்கள் என்றபோதுங்கூட, நீங்கள் சொல்லும்,
"/தமிழர்களுக்கு, இந்தியர்களுக்கு உரிமை கேட்பது என்ற போராட்டம் சரிதான். ஆனால் அதை 'இந்து' என்ற பெயரில் செய்வதால் இந்து - இஸ்லாம் பிரச்சனை ஆகி பெரிதாகுமேயன்றி சுமூக தீர்வு எட்டுவதற்கான வழி அடைபட்டு போகும் வாய்ப்பு உள்ளது. இவர்கள் இந்து என்ற பெயரில் போராடுவதால் மலேசியா வாழ் தமிழ் முஸ்லிம், தமிழ் கிறித்துவர்கள் கூட தமக்கு இது தொடர்பில்லாதா போராட்டமாக பார்க்கிறார்கள்./" வரிகளுடன் ஒத்து உணர்கிறேன். இது தமிழர்கள் - இந்தியர்கள் என்ற அளவிலே அழுத்தப்படுவதேயொழிய, இந்துக்கள் என்று அழுத்தப்படுவதாக, வாசிக்கும் செய்திகளை வைத்துக்கொண்டு எண்ணத்தோன்றவில்லை. இந்து அமைப்பாகச் செயற்படுவது, இந்தியாவிலே அரசியல் அளவிலே நாடு தழுவி ஒரு பார்வையை -இந்து அமைப்புகளூடாக-த் தரக்கூடும்; ஆனால், மலேசியாவிலேயிருக்கும் இந்துக்கள் அல்லாத தமிழர்களை - குறிப்பாக, கிறிஸ்தவத்தமிழர்களை - அந்நியப்படுத்தவே உதவும்.

Boston Bala சொன்னது…

பதிவுக்கு நன்றி

RATHNESH சொன்னது…

தமிழகத்தில் 'தமிழ் உணர்வு அரசியல்' நடத்த ஈழம் என்கிற வார்த்தை இப்போது உபயோகப்படுவதில்லை. மலேஷியா ஒரு மாற்றாகக் கிடைக்கும் வண்ணம் ஆகி விட வேண்டாம்.

தாய்த்தமிழக ஆதரவு என்கிற போலி நம்பிக்கை கொள்ள வேண்டாம்.

எண்பதுகளில் இருந்த உணர்வு இப்போதைய இளைஞர்களிடம் கிடையாது. காசு பார்ப்பது படிப்பின் மூலமா, சினிமாவின் மூலமா, அரசியலின் மூலமா அடிதடியின் மூலமா என்கிற நான்கு பிரிவுகளில் மொத்த தமிழகமும் பிரிந்து விட்டது. சாதி மதம் என்பதெல்லாம் அதற்கான பயன்பாடு கருவிகளே.

வெளிநாடுவாழ் தமிழர் என்றாலே காசுக்காரன் என்கிற காழ்ப்புணர்ச்சியும் மித மிஞ்சி இருப்பது எனக்குத் தெரியும். (இலங்கை மட்டும் விதிவிலக்கு).

நம்மவர்களுக்கு இரக்கம் வர வேண்டுமானால் சில உயிர்கள் சாக வேண்டும்; பல பெண்கள் மானமிழக்க வேண்டும். இது இரண்டும் இல்லைன்னா என்ன உரிமைப் போராட்டம் வேண்டியிருக்கு என்பது தான் இது குறித்த அளவுகோல் என்பது கசப்பாயினும் உண்மை.

பத்திரிக்கைகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தீனி என்பதைத் தவிர தமிழகத்தால் ஒருபயனும் விளையப் போவதில்லை.

நீங்கள் சொல்லி இருப்பது போல் இங்கே தம்முடைய செல்லுபடியாகாத மத வெறி அரிப்புகளைச் சொறிந்து கொள்ள அங்குள்ளோரைப் பலியாக்க மதவாத சக்திகள் துணியலாம். அவ்வளவு தான்.

இக்பால் சொன்னது…

சரியாக சொன்னீர்கள். இந்த மாதிரி விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது தினமலர் பத்திரிகைதான். இன்றைய பிரதியில் "மலேசியாவில் இந்துக்கள் தாக்கியதை கண்டித்து பாராளுமன்றத்தில் ஆவேசம்". அதை இந்தியர்கள் என்று அழகாக எழுதியிருக்கலாம்.

தமிழ் சசி | Tamil SASI சொன்னது…

மலேசியாவைச் சார்ந்த சரண்யா தன்னுடைய வலைப்பதிவில் இந்தியாவில் உள்ள சங்பரிவார் அமைப்புகள் இந்தப் பிரச்சனையை கையில் எடுத்துக்கொள்ளும் அபாயம் குறித்து குறிப்பிடுகிறார்.

http://sharanyamanivannan.blogspot.com/2007/11/temple-demolitions-bajrang-dal-protests.html

கோயில்களை இடிப்பது தமிழர்/இந்தியர்களின் வழிபாட்டு தளம் என்ற பிரச்சனையால் தானே தவிர, "இந்து" என்பதால் அல்ல. இந்தப் பிரச்சனையை சங்பரிவார் அமைப்புகள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டால் பிரச்சனை சிக்கலாகி விடும். அதுவும் தவிர ஹிந்த்ரப் என்ற அமைப்பு இந்த போராட்டத்தை முன்நின்று நடத்தினாலும் அவர்களின் கோரிக்கை "சிறுபிள்ளைதனமாக" உள்ளது.

உரிமைகளை "விளம்பரபடுத்த" பிரிட்டன் மீது வழக்கு தொடுக்கிறார்களா ? அல்லது கோரிக்கையே அது தானா என்ற கேள்வி எனக்கு உள்ளது

****

மலேசியாவில் மிக மோசமான இனரீதியிலான ஒடுக்குமுறை உள்ளதாக தான் இந்தப் பிரச்சனை குறித்து வாசிக்கும் பொழுது தெரிகிறது.

http://www.dnaindia.com/report.asp?newsid=1135947

****

அதே சமயத்தில் நீங்கள் குறிப்பிடுவது போல இந்திய/தமிழக அரசியல்வாதிகளை மலேசிய தமிழர்கள் நம்ப கூடாது. ஓட்டு பொறுக்கும் வேலையை செய்யும் அரசியல்வாதிகளை நம்பாமல் தங்கள் உரிமைகளை "சரியான" போராட்டம் மூலம் பெற்றெடுக்க வேண்டும்.

இந்தியா அதற்குள்ளாகவே மலேசியா தனது நேச நாடு என கூற தொடங்குகிறது.

Meanwhile, Karuna's daughter Kanimozhi went all out to defend the stand taken by her father and expressed concern for the Tamilians in Malaysia. She said: "The people of Tamil Nadu are very concerned and the CM has also written to the central government. It is very unfair and unfortunate that these people have contributed so much to the nation but their welfare has not been taken into account. We will protest and are sure that the Central government will do something about it."

But her words fell on to a deaf shoulder as Lok Sabha Speaker Somnath Chatterjee was quick to brush aside the allegations by calling Malaysia a 'friendly nation' saying that they can't do anything about it.

****

மலேசியா இலங்கை போல மாறும் என்ற பேச்சல்லாம் அர்த்தமற்றது/பொறுப்பின்மையையே வெளிப்படுத்துகிறது. ஈழத்தில் தமிழன் படும் அவதியும் இன்னலும் மலேசியாவிலும் நேர வேண்டாம். அமைதியாக மலேசிய தமிழர்கள் தங்கள் உரிமைகளை பெற வேண்டும்.

இளங்கோ-டிசே சொன்னது…

/மலேசியா இலங்கை போல மாறும் என்ற பேச்சல்லாம் அர்த்தமற்றது/பொறுப்பின்மையையே வெளிப்படுத்துகிறது. ஈழத்தில் தமிழன் படும் அவதியும் இன்னலும் மலேசியாவிலும் நேர வேண்டாம். அமைதியாக மலேசிய தமிழர்கள் தங்கள் உரிமைகளை பெற வேண்டும்./
சசி சொல்வதையே நானும் சொல்ல விரும்புவது. அரசியல்வாதிகளுக்கு த்மது அந்தக்கண உற்சாகத்திற்கு/ஆதரவிற்கு இப்படிச் சொல்லிவிடமுடியும். ஆனால் அனுபவிப்பவர்களுக்குத்தான் அதன் இழப்பும்/வலியும் தெரியும். நன்றி.

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

// http://webeelam.blogspot.com/2007/11/blog-post_30.html//

இந்த சுட்டியில் உள்ள தகவல்கள் குறித்து ஏதாவது சொல்ல முடியுமா? தமிழர்கள் மலேசியாவில் இஸ்லாமியராக இருந்தால் பாதிப்பு இல்லாமல் இருக்கிறதா? இஸ்லாமியத் தமிழர்களால் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடிகிறதா?

ஜமாலன் சொன்னது…

தற்காலப் பிரச்சனையை சமூக உணர்வுடன் சொல்லும் பதிவும் அதன் பின்னோட்டங்களும். 8 சதவீதம் உள்ள மலேயத் தமிழர்களை ஈழத் தமிழர்களோடு ஒப்பிடுவது சரியல்ல. தமிழர்கள் கோரிக்கையில் உள்ள நியாயம் இந்த இந்துத்துவ சாயத்தால் நிறைவேறுவதற்கு வழியற்றதாகப் போகப் போகிறது. பொதுவான ஜனநாயக சக்திகள் இதனை தீர்ப்பதற்கோ முயற்சி எடுக்க யொசிக்கும் நிலைக்கு கொண்டு சென்று போராட்டததை முட்டுச்சநதில் கொண்டுவிடும் நிலை இது. காந்தியின் போட்டோவை வைத்திருந்தனர் என்கிற செய்திக்கு ஒட்டு மொத்த பத்திரிக்கை உலகமும் தரும் முக்கியத்துவத்தைப் பார்த்தால் போராட்டததை அமைதியாக நடத்துகிறோம் என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது பொலிருக்கிறது. இதற்குள் பல அரசியல் பிரச்சனைகள் உள்ளன. போராட்டம் என்பது திட்டமிட்டதாக நடத்தப்பட்டிருப்பதும், போராட்டமே ஒரு பிரச்சாரத்தன்மை கொண்டதாக உள்ளது. அவ்வகையில் இப்போராட்டம் உலக அளவில் அவர்களது பிரச்சனையை முன்னெடுத்துள்ளது. ஈழப் பிரச்சனை இந்து பெளத்த பிரச்சனையாக மதரீதியாக மாற்ற முயற்சித்த பால்தாக்கரே. அதற்கு பலியாகாத ஈழப்போராட்டம் இன்றவரை தமிழ் உணர்வில் நிற்கிறது. இப்பிரச்சனையிலல் இந்திய இந்துத்துவ சக்திகள் முனைப்புடன் செயல்படுவதை பாருங்கள். இவர்கள் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகைகு முகம்கொடுத்த பேசுவார்களா?

தொடர்ந்து இந்து - இந்தி - இந்தியா என்கிற அச்சு தமிழர் இனப்பிரச்னைகளை அல்லது தமிழர்நலன்களை மதரீதியானதாக மாற்றிக் கொண்டிருப்பதும் ஒரு கட்டத்தில் தமிழர்களை மதரீதியாக பிரிப்பதுமான ஒரு தந்திரம் தொடர்ந்த நடைபெறுகிறது. திணமனி கூட தனது நடுநிலை முகத்தை கிழித்தக் கொண்டுவிட்டது. முதல்நாள் இந்தியவம்சாவளி என எழுதியது. மறுநாள் இந்துக்கள் தாக்கப்பட்டார்கள் என்று எழுதியது. மறுநாள் இந்திய வமசாவளி என எழுதுகிறது. ஆக, இந்திய மதவாத சகதிகளின் உள்நோக்கம் தமிழர் நலன் அல்ல அவர்களது நியாமான கோரிக்கைகளை முட்டுசந்தில் கொண்டுவிடும் நிலைதான் இது. மலேசியாவில் உள்ள ஜனநாயக சக்திகளையும் சீனர்களையும் இந்த மதவாதப்போர்வை விலக்கித்தள்ளி தமிழர்களை தனிமைப்படுத்தும் போக்கு இது. மலையக தமிழர்கள் மலேசியத் தமிழர்கள் அவர்களது பிரட்சனைகள் எல்லாம் அதன் ஜனநாயகக் கோரிக்கைகளுடன் வெளிப்படுவதும் அதற்கான சக்திகளின் தலைமைக்குள் நிற்பதும் அவசியம். பிரச்சனை அத்தகைய தலைமையை வளரவிடாமல் மதமும் சாதியும் தமிழனை பிரிப்பதும் அந்த பிரிவனைகளை தூண்டுவது மதம் சாதியத்தின் பணியாக இருக்கிறது.

//கோயில்களை இடிப்பது தமிழர்/இந்தியர்களின் வழிபாட்டு தளம் என்ற பிரச்சனையால் தானே தவிர, "இந்து" என்பதால் அல்ல. இந்தப் பிரச்சனையை சங்பரிவார் அமைப்புகள் தங்கள் கையில் எடுத்துக் கொண்டால் பிரச்சனை சிக்கலாகி விடும். அதுவும் தவிர ஹிந்த்ரப் என்ற அமைப்பு இந்த போராட்டத்தை முன்நின்று நடத்தினாலும் அவர்களின் கோரிக்கை "சிறுபிள்ளைதனமாக" உள்ளது. //

தமிழ் சசியின் மேற்கண்ட கருத்து ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.
//மலேசியத்தமிழர்கள் தங்கள் பிரச்சனைகளுக்கு சாதி மத வர்க்க சாயம் பூசாமல் தமிழர்களாக முன்னெடுப்பதே அவர்களுக்கு நன்மை பயக்கும். //
நர்மதாவின் கருத்தும் பின்னொட்டமும் அருமை. ஒரு சின்ன பிரச்சனை வர்க்கசாயம் என்பது பூசப்படுவது அல்ல. இதுவும் ஒரு பொருளியல் நலன்அடிப்படையில் நிகழ்வதுதான். பெரும்பர்ண்மையாக இருப்பவாகள் ஒடுக்கப்பட்ட தமிழர்கள். இதில் வர்க்ககுணாம்சமும் உள்ளது. தலைமை தாங்குவது தேசியத்தன்மை கொண்ட சக்திகளாக இருக்கலாம்.
கடைசியில் கலைஞருக்கு ஆதரவாக பிஜேபி பாராளுமன்றத்தி்ல் குரல் எழுப்புவதைக் கவனித்தீர்களா? எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம்.

இன்னும் நிறைய எழுததான் எண்ணம். திரும்பவும் அடுத்த சுற்றில் வருகிறேன். நண்பர் ரத்ணேஷி்ன் 4 வகைகள் அருமை.

அன்புடன்
ஜமாலன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

// http://webeelam.blogspot.com/2007/11/blog-post_30.html//

இந்த சுட்டியில் உள்ள தகவல்கள் குறித்து ஏதாவது சொல்ல முடியுமா? தமிழர்கள் மலேசியாவில் இஸ்லாமியராக இருந்தால் பாதிப்பு இல்லாமல் இருக்கிறதா? இஸ்லாமியத் தமிழர்களால் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடிகிறதா?
//

ரத்னேஷ் அந்த சுட்டி வேலை செய்யவில்லை.

இருந்தாலும் நீங்கள் கேட்டதற்கான விளக்கம் தருகிறேன்.

வெளிநாடுகளின் அரசாங்க கொள்கைகளை பார்த்தால் எந்த நாடும் இவர் இந்த மதத்தை சேர்ந்தவர் என்பதற்காக எந்த சலுகை / கட்டுப்பாடு விதிகளை மாற்றுவதில்லை.

மலேசியா மற்றும் அரபு நாடுகளைப் பொறுத்து இந்திய இஸ்லாமியரும், இந்துவும் ஒன்றே. வேண்டுமானால் அவர்களுடைய மசூதியில் தொழுவதற்கு இந்திய இஸ்லாமியர்களுக்கு அனுமதி கொடுப்பார்கள், கிறித்துவர்களுக்கு அங்குள்ள சர்சுகளில் அப்பம் கிடைக்கும்.
:) இதைத்தவிர்த்து இந்தியனின் மத அடையாளம் வெளிநாட்டில் அவனுக்கு துரும்பையும் அசைத்து தராது.

அதனால் தான் மலேசியவாழ் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் உரிமைக்காக போராட வேண்டுமானல் கேவலமான இந்து அரசியலை விட்டு தமிழன் / இந்தியன் என்று எடுத்துச் என்றால் பலன் கிடைக்கும், தமிழகள் இதை மதப் பிரச்சினையாக பார்க்காமல் இந்தியர்களுக்கான இன உரிமை பிரச்சனை என்று கருதினால் ஒற்றுமையாக ஒத்துழைக்க முடியும்.

ஆனால் போராட்டம் 'இந்துராப்' என்னும் அமைப்பால் இந்து போராட்டம் போல் நடத்துவதால், தமக்கு தொடர்பு அற்றது போல் தமிழ் கிறித்தவர்களும், இஸ்லாமியர்களும் இதில் விலகியே இருக்கிறார்கள். தற்போது இருக்கும் பிரச்சனைகள் இந்திய வம்சாவளியை சார்ந்த அனைத்து மதத்தினருக்கும் ஒன்றே தான்.

ஜமாலன் சொன்னது…

//மலேசியா மற்றும் அரபு நாடுகளைப் பொறுத்து இந்திய இஸ்லாமியரும், இந்துவும் ஒன்றே. வேண்டுமானால் அவர்களுடைய மசூதியில் தொழுவதற்கு இந்திய இஸ்லாமியர்களுக்கு அனுமதி கொடுப்பார்கள், கிறித்துவர்களுக்கு அங்குள்ள சர்சுகளில் அப்பம் கிடைக்கும்.
:) இதைத்தவிர்த்து இந்தியனின் மத அடையாளம் வெளிநாட்டில் அவனுக்கு துரும்பையும் அசைத்து தராது.//

உண்மைதான். அரேபியாவில் இஸ்லாமியனாக இருந்தால் வேறுசில தொல்லைகளும் உள்ளது. மதத்திற்காக எந்த நாடும் சலுகைகள் தருவதில்லை. இதெல்லாம் திட்டமிட்டு செய்யப்படம் பொய்ப்பிரச்சாரங்கள்.

ILA (a) இளா சொன்னது…

//தமிழன் மத அடிப்படையில் பிரிந்து கிடக்கிறான். //
"இவன்" எந்த ஜாதின்னு பார்க்கிற மக்கள் இருக்கிற வரைக்கும் இது இருந்துகிட்டேதான் இருக்கும். அதே மாதிரி ஜாதி மட்டும்தான் தமிழனை பிரிக்குது அப்படிங்கிறது சப்பைக்கட்டு.. எனக்கு என் கூட நண்பர்கள் எந்த ஜாதின்னு தெரியாது,. தேவையுமில்லை. ஒரு வட்டத்துக்குள்ள இருக்கிற மக்கள்தான் ஜாதி தெரிஞ்சுகிட்டு பழகுவாங்களாம்..:)

ILA (a) இளா சொன்னது…

போராட்டம் என்பது சரியாத்தானே செஞ்சாங்க, அதுவும் அஹிம்சை முறையில,,அப்புறம் ஏன் வன்முறை நடந்துச்சு? அது அரசியல் இல்லையா? அரசியல் இல்லைன்னா இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடையாது என்பதுதான் உண்மை.

ILA (a) இளா சொன்னது…

//பிரச்சனை இருப்பது உன்மை..
அதுக்கு மத ரீதியான சாயம் பூச பாக்ககூடாது..நம்மவர்கள் அதற்குள்ளாகவே அதை ஆரம்பித்து வைத்துவிட்டார்கள்..//
சரியாச் சொன்னீங்க TBCD.

TBCD சொன்னது…

பின்னுட்டம் எழுதப் போயி, பெரிசா , ரொம்ப பெரிசா வந்திடுச்சு..சிரமம் பாக்காமா, இங்க போய் படிங்க.

TBCD பார்வை : "மலேசிய விவகாரமும், தமிழர்களின் பலவீனமும் !"- உன்மை என்ன...?

விசயம் வேற கோணத்திலே விளங்கும்...

குசும்பன் சொன்னது…

"தமிழன் மத அடிப்படையில் பிரிந்து கிடக்கிறான். "

முக்கியமாக ஜாதி அடிப்படையில் பிரிந்து கிடக்கிறான்.

படித்த நாமே இன்னும் வலையுலகில் ஜாதி அடிப்படையில் பிரிந்துதானே கிடக்கிறோம், மறுக்க முடியுமா?

koothanalluran சொன்னது…

திரு.கண்ணன்,
நல்ல பதிவு. இப்பிரச்சினை தமிழர்கள் என்பதால் பெரிதாக்கப்படவில்லை, இந்துக்கள் என்பதாலேயே பெரிதாக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சென்ற மாதம் அமீரக வரலாற்றிலேயே இல்லாத விதமாக தொழிலாளர்கள் போராட்டம் நடந்தது இந்திய,பாகிஸ்தான்,பங்களாதேஷ் தொழிலாளர்கள் சேர்ந்து நடத்தியது. முன்னிலை வகித்தது இந்திய தொழிலாளிகள். அமைதியாக நடந்த போராட்டம் கலகத்தில் முடிந்தது. தொழிலாளிகள் காவல் துறையினர்
மீது கல்லெறிய தடியடி அடக்கு முறை இத்யாதி இத்யாதி கடைசியில் 1000க்கு அதிகமான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைகப்பட்டனர். நிறைய இந்தியர்கள் சிறை பிடிக்கப் பட்டாலும், 95 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர், இதில் 5 தமிழர்கள் அடக்கம். அமீரக சட்டப்படி கலகம் விளைவித்த எவருக்கும் சல்லி பைசா தேறாது. கட்டிய துணியோடு சென்னை வந்து சேர்ந்தார்கள். இன்னும் சிறையில் வாடும் தமிழன் அதிகம். இப்போது மலேசியத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் (இந்துக்கள்) அரசியல் வாதிகள் அப்போது எங்கு சென்றனர்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்