பின்பற்றுபவர்கள்

20 நவம்பர், 2007

செய்வினை செயப்பாட்டு வினை ! இடையூறப்பாவின் கண்ணீர் காவியம் ஆரம்பம் !

கர்நாடக அரசியலில் உச்ச கட்ட காமடி நடந்து கொண்டு இருக்கிறது. காவேரி அரசியலையெல்லாம் தோற்கடித்துவிடும் கல்குவாரி அரசியல் நடக்கிறது. கல்குவாரியின் பிசினஸ் குறித்து அச்சப்பட்டே 21 அம்ச கோரிக்கையை தேவ கவுடா கவுன்டவுன் வைத்து கால்வாரி அரசியல் நடத்துவதாக அரசியல் புழுதி கிளம்புகிறது.

எப்படியாவது முதல்வராகவேண்டும் என்று திருவண்ணாமலையைக் கூட சுற்றிவந்தார் இடையூறப்பா, 'பெரும்'பாண்மையை டெல்லியில் அணிவகுப்பு நடத்தி வரலாறு படைத்தது கர்நாடக பிஜேபி. எல்லாம் முடிந்து இடையூறப்பா அரியணையும் ஏறிவிட்டார். பாஜக தொண்டர்களில், அபிமானிகளில் சிலர் 'கர்நாடகாவில் மலர்ந்த கமலம்' என்று அகமும் முகமும் மலர்ந்தார்கள். கடைசியில் ஆ...'காய' தாமரையாகி ஆகி (கோட்டை) விட்டது தான் மீதம். நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்கள் மேல் கூட்டணி கட்சிகளுக்கும், மக்களுக்கும் உள்ள நம்பிக்கையையும் சேர்த்தே அடமானம் வைத்து முடிவுவிட்டனர் கவுடா அண்ட சன்ஸ்.

இதைவிட பெரும் கூத்து இடையூறப்பா கவுடாவின் மேல் சொல்லும் புகார் தான். சூனியம் வைத்துவிட்டாராம். அழுகாச்சிகளும், கண்ணீர் காவியங்களும் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து இனி ஒவ்வொன்றாக அரங்கேறும்.

மிச்சத்தை இங்கே படிங்க : தட்ஸ்தமிழில் இருந்து சுட்டவை தான்.

கெளடா செய்வினை செய்துவிட்டதாக எதியூரப்பா புகார்

பெங்களூர்: தேவெ கெளடா தனக்கு செய்வினை செய்து விட்டதாகவும், தனக்கு ஏதாவது நேர்ந்தாலோ அல்லது தான் திடீரென இறந்தாலே அதற்கு கெளடாவின் குடும்பம் தான் பொறுப்பு என 7 நாள் முதல்வர் பொறுப்பை வகித்த பாஜக தலைவர் எதியூரப்பா பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் மூலம் கர்நாடக அரசியல் மேலும் கீழ்த்தரமான நிலையை எட்டியுள்ளது.

எதியூரப்பா முதல்வராக தொடர கெளடா 12 நிபந்தனைகளை விதித்து அதை ஒரு பாண்ட் பேப்பரில் எழுதி எதியூரப்பாவை அதில் கையெழுத்திட உத்தரவிட்டார். அதில் கையெழுத்து போட எதியூரப்பா தயார் தான் என்றாலும் பாஜக தலைமை அதை ஏற்கவில்லை.

இந் நிலையில் குமாரசாமி முதல்வராக இருந்தபோது அவர் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டியவரான பாஜக எம்எல்ஏ ஸ்ரீ ராமுலுவை அமைச்சரவையில் சேர்க்க பாஜக முடிவு செய்தது. இதில் தான் பிரச்சனை வெடித்தது.

பெல்லாரி பகுதியில் ஏராளமான குவாரிகளை வைத்து நடத்தி வரும் ஸ்ரீராமுவுவுக்கும் அங்கு புதிதாக குவாரிகள் தொடங்கிய குமாரசாமி குடும்பத்தினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து குமாரசாமி மீது அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார் ஸ்ரீராமுலு.

தன்னை ஆள் வைத்து கொலை செய்ய காண்ட்ராக்ட் கொலையாளிகளை....

மேலும் இந்த அசிங்கத்தை படிக்க
இங்கே செல்லவும்

தட்ஸ்தமிழுக்கு நன்றி !

10 கருத்துகள்:

Unknown சொன்னது…

வைக்கோல் போரில் தூங்கும் நாய் தானும் திங்காது, தங்காது... அடுத்த நாயையும்..வாழ விடாது...

நம்பிக்கை துரோகம் என்பது இது தானோ ?

பி ஜெ பி ஆதரவில் இரண்டு ஆண்டு ++ ஆட்சியை அனுபவித்து தேவைக்கு மேல் சுருட்டி விட்டு.. கமலத்தின் மேல் மலம் வீசி இருக்கிறார்கள் மேன்மை தாங்கிய தேவ கவுடா கட்சியினர்... முக்கியமாக தேவ கவுடா, அவர் மகன்கள்... மகா கேவலம் இது...

கோவி.கண்ணன் சொன்னது…

//நம்பிக்கை துரோகம் என்பது இது தானோ ?

பி ஜெ பி ஆதரவில் இரண்டு ஆண்டு ++ ஆட்சியை அனுபவித்து தேவைக்கு மேல் சுருட்டி விட்டு.. கமலத்தின் மேல் மலம் வீசி இருக்கிறார்கள் மேன்மை தாங்கிய தேவ கவுடா கட்சியினர்... முக்கியமாக தேவ கவுடா, அவர் மகன்கள்... மகா கேவலம் இது...//

பிஜேபியை விட காங்கிரசுக்கு அதிக இடங்கள் இருந்தும் கூட்டணி வைத்தால் தான் முதல்வர் பதவி அமைக்க முடியும் என்ற நிலமை இருந்தது. நீங்கள் சொல்லும் அதே நிலைதான் கொஞ்சம் மாற்றி தான் அனுபவிக்காவிட்டால் அடுத்தவனும் அனுபவிக்கக் கூடாது என்று நிலையில் தான் கவுடா அண்ட் சன்சுக்கு அதிர்ஷ்டம் அடித்தது.
:)

பிறைநதிபுரத்தான் சொன்னது…

தேவகவுடா மிகவும் சாதூர்யமாக செயல்பட்டு - கர்நாடகவை (க)மலத்திடமிருந்து காப்பாற்றியிருக்கிறார்.

கவுடா செய்ததை - நம்பிக்ககை துரோகம் என்று இகழ்கிறவர்கள் - இதையே பா.ஜ.க செய்திருந்தால் 'சாணக்யத்ணம்' என்று புகழ்ந்திருப்பார்கள்.

கர்நாடக பா.ஜ.க.வினர் ஏன் எத்ற்கெடுத்தலும் - ஏவல் -பில்லி சூனியம் - செய்வினை என்று பித்ற்றிக்கொண்டு இருக்கிறார்கள்?

இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்துதானோ முரளி மனோகர் ஜோஷி - பல்கலை கழகங்களில் ஜோசியத்திற்கு தனித்துறை ஆரம்பிக்க எண்ணினாரோ?

அருண்மொழி சொன்னது…

//பி ஜெ பி ஆதரவில் இரண்டு ஆண்டு ++ ஆட்சியை அனுபவித்து தேவைக்கு மேல் சுருட்டி விட்டு.. //

BJPயும் ஆட்சியில் இருந்தது. அவர்கள் சுருட்டியது எவ்வளவோ??

ஆக மொத்தம் BJPக்கு செம ஆப்பு. மலர்ந்தது (க)மலம் என்று எழுதிய பதிவர்கள் அய்யோ பாவம். கவுடா கவுடாதான்.

இதுக்கு சோ(மாறி) இன்னா cartoon போடுவார்??

RATHNESH சொன்னது…

ராஜீவ் காந்திக்கும், ஜெயில் சிங்குக்கும் பிரச்னை முற்றிக் கொண்டே போய் ஒரு கட்டத்தில், இருவரையும் மூத்த தலைவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்த பழைய நாளில், ஆனந்த விகடனில் மதன் ஒரு கார்ட்டூன் வெளியிட்டிருந்தார்.

அதில் ராஜீவும் ஜெயில் சிங்கும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு சொல்லுவார்கள்: "எங்கள் ஒற்றுமையை நிரூபிக்க இன்று முதல் ஜெயில் காந்தி, ராஜீவ் சிங் என்று பெயரை மாற்றிக் கொள்ள உத்தேசித்திருக்கிறோம்".

அதுபோல் தேவெ கௌடா தன் கட்சியைக் கலைத்து விட்டு அப்படியே பாஜக-வில் ஐக்கியமாகி இருக்கலாம்; கட்சியின் பெயரை மத சார்பற்ற பாரதீய ஜனதா என்று மாற்றிக் கொண்டிருந்திருக்கலாம்; மகனை மட்டுமாவது கட்சி மாற வைத்திருக்கலாம். இப்படி இன்னொரு பத்தொன்பது மாத வாய்ப்பினை விட்டு விட்டாரே!

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said... அதுபோல் தேவெ கௌடா தன் கட்சியைக் கலைத்து விட்டு அப்படியே பாஜக-வில் ஐக்கியமாகி இருக்கலாம்; கட்சியின் பெயரை மத சார்பற்ற பாரதீய ஜனதா என்று மாற்றிக் கொண்டிருந்திருக்கலாம்; மகனை மட்டுமாவது கட்சி மாற வைத்திருக்கலாம். இப்படி இன்னொரு பத்தொன்பது மாத வாய்ப்பினை விட்டு விட்டாரே!//

உங்க பதிவில் இதே பதிலை சொல்லிவிட்டு வந்தேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பிறைநதிபுரத்தான் said...
தேவகவுடா மிகவும் சாதூர்யமாக செயல்பட்டு - கர்நாடகவை (க)மலத்திடமிருந்து காப்பாற்றியிருக்கிறார்.

கவுடா செய்ததை - நம்பிக்ககை துரோகம் என்று இகழ்கிறவர்கள் - இதையே பா.ஜ.க செய்திருந்தால் 'சாணக்யத்ணம்' என்று புகழ்ந்திருப்பார்கள்.
//

ம் சாணக்கியத்தனம் தான், அறிவு இரத்தத்திலும், வித்திலும் இருக்கனும் என்று அவர்கள் தான் பெருமையாக சொல்லுவார்கள்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்மொழி said...
BJPயும் ஆட்சியில் இருந்தது. அவர்கள் சுருட்டியது எவ்வளவோ??

ஆக மொத்தம் BJPக்கு செம ஆப்பு. மலர்ந்தது (க)மலம் என்று எழுதிய பதிவர்கள் அய்யோ பாவம். கவுடா கவுடாதான்.

இதுக்கு சோ(மாறி) இன்னா cartoon போடுவார்??//

மலர்ந்தும் மலராதுன்னு சோகப்பாட்டுதான் பாடனும் போல
:)

ஜமாலன் சொன்னது…

7 நாள் முதல்வர், 11 நாள் பிரதமர் இனிமேல் 22 நாள் ஜனாதிபதி இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.

இங்கன கொஞ்சம் பாத்துட்டு எதாவது போட்டுட்டு போங்க..

http://jamalantamil.blogspot.com/2007/11/blog-post_4108.html

Naina சொன்னது…

//ஒருவிதத்தில் இது ஜனநாயகத்தின் வெற்றி என்றும், சாதுர்ய (pragmatic) அரசியல் மற்றும் அரசாட்சி தரும் (governing) அரசியல், போலித்தனமான, துவேஷம் வளர்க்கும் கொள்கை அரசியலைப் பின்னுக்குத் தள்ளி வருவதை நிரூபித்து வரும் இன்னொரு இந்திய நிகழ்வு என்றும் தான் மதிப்பிட வேண்டும்//
இது ஜடாயு என்னும் காவி ஆசாமி இடையூரப்பா ஆட்சி கவு(ரு)டா ஆதரவில் அமைந்ததும் எழுதிய பொ(பு)ன் மொழிகள். இதை சரியாக புரிந்ததாக எவராவது கூறினால் அவருக்கு இது வரை எவருக்கும் யாரலும் வழங்கபடாத வெகுமதி காத்திருக்கிறது. எங்கே கூறுங்கள் பார்க்கலாம்?
பின் குறிப்பு: காவி கோஷ்டியினர் இதில் கலந்து கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்