பின்பற்றுபவர்கள்

22 நவம்பர், 2007

சாம்பார் வடை கேட்ட - பிடித்த திரைப்படங்கள் !

சாம்பார் வடை பிடித்த படங்களை பற்றி எழுதச்சொன்னார், வாழ்நாளில் இதுவரை ஆயிரம் படங்களாவது பார்த்திருப்பேன். ஆனால் மனதில் நிற்பவை மிகச்சில தான். சேமித்து வருங்கால இளையர்களுக்கு காண்பிக்க சிறந்த படமாக நான் கருதுவதில் சிலவற்றை இங்கு தருகிறேன். இந்த படங்கள் என் வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது.

தில்லானா மோகனாம்பாள் : நடிகர் திலகமும், நாட்டிய பேரொளியும் போட்டி போட்டுக் கொண்டு வாழ்ந்திருப்பார்கள். கதைக்கு பொருந்தமான பாடல்கள், வசனங்கள், பாலைய்யா, நாகேஷ், மனோரமாவின் நடிப்பு அப்பப்பா எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாது. 'மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன ?'பாடல் ஆல் டைம் பேவரிட். சிறந்த திரை காவியம்

திருவிளையாடல் : ஏபிநாகராஜனின் நல்ல தமிழ், அதில் அவர் நக்கீரராகவும் நடித்திருப்பார், கவியரசு கண்ணதாசனின் காலத்தை வென்ற பாடல்கள், சிவாஜியின் சூப்பர் நடிப்பு, இன்றும் யாராவது எதாவது நாடகம் எழுதினால் திருவிளையாடலின் பாதிப்பின்றி எழுத முடியாது என்றே நினைக்கிறேன். சிறந்த பக்தி படம்

ஒளவை சண்முகி : ஜொள்ளு, லொள்ளு ஜெமினியும் கமலும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அதிலும் 'ருக்கு ருக்கு' பாட்டுக்கு கமலஹாசன் காலைமடக்கிப் போட்டு உட்கார்ந்திருக்கும் அழகுக்கு சுத்திப் போடலாம், 100 % ஐயர் மாமியாகவே கலக்கி இருப்பார். தரமான நகைச்சுவை படம்

முதல்மரியாதை : நடிகர் திலகத்தின் நடிப்பும் இளையராஜாவின் இசையும் பாரதி ராஜாவின் இயக்கமும் ஒன்றை ஒன்று போட்டி போடும். பூங்காற்று திரும்புமா ? என்று கேட்டாலும் தெவிட்டாது. உணர்ச்சி காவியம்

கர்ணன் : புராணக் கதையில் அதிகம் புகழப்படும் கர்ணன் பாத்திரத்தை படைப்பும், படைக்கும் நடிகர் திலகத்தின் நடிப்பும், படத்தில் உள்ள பாடல்களும் ஆயிரம் முறை பார்த்தாலும் அலுக்காது. அதுவும் ஆயிரம் கரங்கள் நீட்டி அனைக்கின்ற தாயே போற்றி' - கண்ணுக்கு தெரியும் கடவுள் சூரியனை போற்றும் பாடல் கேட்கும் போது எனக்கு சிலிர்க்கும். சிறந்த இதிகாச படம்

அஞ்சலி : இந்தப்படம் குழந்தைகளுக்கு மிகவும் தேவையான படம், மூளை வளர்ச்சி குறைவுற்றோர்களை அரவணைத்துச் செல்ல குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க இந்த படம் மிகச் சிறப்பான படம், மணி ரத்தினம் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படமென்றால் அஞ்சலிதான். பெரியவர்கள், குழந்தைகளுக்கான சிறந்த படம்

இன்னும் பத்து படங்களுக்கு மேல் இருக்கிறது, இதுக்குமேலே எழுதினால் பட்டியல் நீளும் !

நன்றி சாம்பார் வடை அவர்களே.

ஆட்டத்துக்கு அழைக்கனுமா ? என் பேச்சை தட்டாதவர்களைத் தானே அழைக்க முடியும் ?
:)

இவர்கள் தான்
ஆத்திகம் (விஎஸ்கே ஐயா)
சுப்பையா வாத்தியார் ஐயா

கூடல் குமரன்
டிபிசிடி ( அரவிந்த்)
பாரி.அரசு
ஜெகதீசன்
வல்லி அம்மா
சுல்தான் ஐயா

8 கருத்துகள்:

நாகை சிவா சொன்னது…

எல்லாமே சூப்பர் படங்கள் :)

சிக்கலாரை முதலில் கூறியதில் மிக்க மகிழ்ச்சி :)

நலம் தானா.. பாடல் நம்ம ஆல் டைம் பேவரிட் ல ஒன்னு ;)

ஜோ/Joe சொன்னது…

அருமையான தேர்வுகள்!

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe said...
அருமையான தேர்வுகள்!
//

ஜோ,

இதை எழுதிவிட்டு உங்களைத்தான் நினைத்தேன். நான்கு படம் நடிகர் திலகம் படம் வந்துவிட்டதே, நிச்சயம் வந்து பாராட்ட்டுவீர்கள் என்று நினைத்தேன். நம்புங்க !

சினிமாவை சுறுக்கினால் சிவாஜியும் கமலும் தான் இருக்காங்க.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
எல்லாமே சூப்பர் படங்கள் :)

சிக்கலாரை முதலில் கூறியதில் மிக்க மகிழ்ச்சி :)

நலம் தானா.. பாடல் நம்ம ஆல் டைம் பேவரிட் ல ஒன்னு ;)
//

சிவா,

நம்ம ஊர் படத்தில் வருமே. :)

Veera சொன்னது…

//சினிமாவை சுறுக்கினால் சிவாஜியும் கமலும் தான் இருக்காங்க.\


ha..ha.ha.. Good one!

Sambar Vadai சொன்னது…

நன்றி கோவி.கண்ணன்

உங்கள் பட லிஸ்டில் உள்ள் அனைத்தும் (அஞ்சலி தவிர) எனது லிஸ்டிலும் உள்ளது. தில்லானா மோகனாம்பாளும், திருவிளையாடலும் தான் நான் முதலில் சேகரித்த டிவிடி/சிடிக்கள்.

லக்கிலுக் குறிப்பிட்டது போல சினிமா என்பது பொழுதுபோக்கு என வைத்துக் கொண்டாலும் ரசிப்பதிலும் நல்லவையை (பலரும் நல்லது என ரசிக்கும் படங்கள்/காட்சிகள்) ரசிக்கக் கற்றுக் கொடுத்தால் வாரிசுகளும், சந்ததியினருக்கும் நாம் விட்டுச் செல்வது பின்னாளில் பயன் தரலாம்.

முதல் மரியாதை பாடல்களில் வைரமுத்துவின் வரிகளும், பின்னணி இசையும், சிவாஜியின் நடிப்பும் பாரதிராஜாவின் இயக்கமும்.. அடடா.!

>> இன்னும் பத்து படங்களுக்கு மேல் இருக்கிறது

மேலும் படங்கள் நினைவுக்கு வரும்போது, சேமித்துவைத்து பதியவும். இவ்வாறு பதியப்படும் பதிவுகளில் சுட்டியை தொகுத்து எனது பதிவில் வழங்க உள்ளேன்.

கலந்துகொண்டதற்கு மிக்க நன்றி.

TBCD சொன்னது…

சத்தியமாக நிச்சயமாக என்னுடைய 101வது பதிவு இது தான்.

Unknown சொன்னது…

நான் பதிவிட்டிருக்கிறேன் ஜிகே

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்