பின்பற்றுபவர்கள்

18 நவம்பர், 2007

சாலைக்கும் ஒரு வாசமுண்டு கண்டதுண்டா ? நிழற்பட போட்டிக்காக !

நிழல்பட போட்டிக்கு இதுவரை எனது கைவண்ணங்கள் (?) எதுவும் அனுப்பியதில்லை. இந்த நிழல் படங்கள் செல்பேசியின் வண்ணத்தில் எடுக்கப்பட்டவைகள். நிழற்படக் கலைகள் எதுவும் தெரியாது, நுணுக்கம் தெரியாது. என்னால் ஆனவை கீழே:
மலேசியா ஜோகூரில் எடுக்கப்பட்டது, படத்தில் சாலையின் முடிவில் தெரியும் படி ஒன்றாக இருக்கும் மூன்று உயர் கட்டிடங்கள் அவை சிங்கையைச் சேர்ந்த குடியிருப்பு கட்டிடங்கள். இந்த சாலையில் இருந்து பார்த்தால் இருநாடுகள் ஒரே நேரத்தில் தெரிகிறது.சாலைக்கு வாசமா ? வெறென்ன புகை கக்கும் ஊர்திகளால் (வாகனங்களால்) இலவசமாக கிடைக்கும் பெட்ரோல் வாசனைதான்.மழை பெய்து கொண்டிருக்கும் போது, மழையில் ஆட்டம் போடுவது பலருக்கும் பிடிக்கும், செல்பேசிக்கும் பிடித்துவிட்டது. மழையில் நனைந்தால் செல்லுக்கு சளிபிடித்துவிடும், அதற்குள் சுடுவேண்டும் என்று சுட்டது இது. சிங்கையில் குடியிருப்புபகுதியில் இருக்கும் நிழற்சாலைகள் (அவன்யூ) இதுபோன்ற சாலைகள்தான். மழைவாசத்துடன் !

இதுவும் மழை பெய்து கொண்டிருக்கும் போது செல்பேசி நனையாமல் பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டு எடுத்தது.


பின்குறிப்பு : புகைப்படம் என்பது தற்காலத்தில் பொருள் பிழை. புகைப்படச் சுருள் தற்காலத்தில் மிக்கவையாக புழக்கத்தில் இல்லை. நிழற்படம் என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

6 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

படம் எல்லாம் நல்லா இருக்கு...
அதுவும் மழைப் படங்கள் ரெம்ப நல்லா இருக்கு...
:)

நாகை சிவா சொன்னது…

3 படம் அருமையா இருக்கு. கொஞ்சம் முன்னாடி போட்டு இருந்து இருக்கலாம். :)

ராஜ நடராஜன் சொன்னது…

என்னங்க!கொஞ்சம் சீக்கிரமா வந்திருக்க கூடாதா?இனி அடுத்த வண்டி டிசம்பரில் தானுங்க வரும்.உங்களுக்கென்ன காமிராவும்,போனும் கைவசம் இருக்கவே இருக்கு.தூள் கிளப்புங்க டிசம்பரில்.

குசும்பன் சொன்னது…

அருமையா இருக்கு?

நட்டு என்னா சொல்றார்? போட்டி முடிஞ்சு போச்சா?

cheena (சீனா) சொன்னது…

நட்டு சொல்றது சரி - கோவி - நிழற்படங்கள் அருமை - தொடருங்கள் - வழக்கம் போல் கேள்விகள் - புகைப்படமா - நிழற்படமா - தொடருங்கள்
வாழ்த்துகள்

கோவி.கண்ணன் சொன்னது…

பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி !

முடிவு தேதி முடிந்தது தெரியாது.
:(

முதல் பரிசை விட்டுக் கொடுத்த திருப்தியில் இருக்கிறேன்.
:)))

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்