பின்பற்றுபவர்கள்

28 நவம்பர், 2007

அடுத்த முதல்வர்கள் யார் ?

2011 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்த்தல் குறித்து காமடிகள் அரங்கேறி வருகிறது. ஒரு பக்கம் மருத்துவர் ஐயா 2011ல் பா.ம.க தலைமையில் ஆட்சியென்றும், மறுபக்கம் கேப்டன் விஜயகாந்தும் அடுத்த முதல்வர் தாம் தான் என்றும் அறிக்கை விடுகிறார்கள்.

ஸ்டேட்மெண்ட் விடுக்கும் பாமக இதே போன்று கடந்த முறை பாண்டிச்சேரியில் தாம் ஆட்சியை பிடிக்கப் போவதாக அறிவித்து ஜெவுடன் கூட்டணி சேர்ந்தபோது ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. இத்தனைக்கும் சாதி ஓட்டுகள் கனிசமான அளவுக்கு இருக்கும் பாண்டிச்சேரியிலேயே மண்ணைக் கவ்வியது. 234 தொகுதியிலும் நாங்க தான் வெற்றிபெறுவோம் என்று மார்தட்டிய தேமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி அதுவும் ஸ்டார் வேல்வ்யூ மற்றும் பண பலத்துக்கு கிடைத்தது.

மருத்துவர் ஐயா எப்போதும் ஜெயிக்கிற குதிரை எது என்று பார்த்து பணம் கட்டுவார். அந்த வகையில் திமுக அதிமுக என்ற இரு குதிரைகளிலும் நன்றாக ஜெயித்து இருக்கிறார். 5 சீட்டில் ஆரம்பித்த பாமக வளர்ந்து 25 - 30 சீட்டு வரை வந்து நிற்கிறது, மொத்த தொகுதியில் 10 விழுக்காட்டிற்கும் குறைவே. எந்த நம்பிக்கையில் அடுத்த ஆட்சி பாமக தலைமையில் என்று சொல்கிறார் என்று தெரியவில்லை. ஒரே ஒரு பாஸிபிலிட்டி தான் இருக்கிறது, கர்நாடகாவில் மூன்றாம் இடத்தில் இருந்த கவுடா அண்ட் சன்ஸ் சின் மதச்சார்பற்ற ஜனதாளம் 20 மாதம் தந்திரமாக ஆட்சியை கைப்பற்றியதை நினைத்து தமிழகத்தில் இவ்வாறு ஏன் நடத்தக் கூடாது என்று முடிவு செய்துவிட்டார் என்றே நினைக்கிறேன். இருந்தாலும் அதிமுக, திமுக இளிச்ச வாய் கட்சிகளாக இருக்கும் என்று ஐயா நினைப்பது ஓவர் தான்.

மருத்தவர் ஐயா பரவாயில்லை, அதிமுக, திமுக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக சொல்லும் விஜயகாந்த் எந்த குதிரை மீது பயணம் செய்யப் போகிறார் என்று தெரியலை. அவருக்கு மட்டும் எதாவது மண் குதிரை கண்ணுக்கு தெரிந்தாலும் தெரியும். பாமக துணைத்தலைவர் சிஆர்பாஸ்கரன் தேமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து அவர் பங்குக்கு 'பாமகவின் பலர் தேமுதிகவில் இணைந்த நிலையில், நான் சிறிது தாமதமாக வந்துள்ளேன் (இரயில்வே அமைச்சராக இருந்தாரா ?) . தொலைநோக்கு பார்வையுடன் 2011ம் ஆண்டில் ஆட்சி அமைப்பேன் என்று ராமதாஸ் கூறி வருவது சாத்தியமல்ல. 2011ல் ஆட்சி அமைக்கப் போவது விஜயகாந்த்தான். அவரால் மட்டுமே அது முடியும் என்றார் பாஸ்கரன்.'

தொலைநோக்கு பார்வை என்றால் என்ன தொலைநோக்கியால் பார்பதா ? அதில் பார்த்தால் 2011 எல்லாம் தெரியுமா ? காமடி பண்ணாதிங்கப்பா :)

பேசுவதற்கு மைக்கும், செய்தி போடுவதற்கு செய்தி தாள்களும் இருப்பதால், அடுத்த அமெரிக்க ஜனாதிபதி நான் தான் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

விஜயகாந்த் ஏற்கனவே ஆண்டாள் - அழகர் கல்லூரிக்கு முதல்வர்தான் :)

பாமக சார்பில் ஒரு கல்லூரி அமைத்தால் மருத்துவர் ஐயா மற்றும் சின்னைய்யா ஆகிய இருமுதல்வர்கள் தமிழகத்துக்கு கூடுதலாக கிடைப்பார்கள்.

31 கருத்துகள்:

அரை பிளேடு சொன்னது…

2011 இல் முதல்வராக இருக்கும் அருமை அண்ணன் சரத்குமாரை பற்றி தாங்கள் குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்.

:)))

ஜெகதீசன் சொன்னது…

2011ல் தமிழகத்தில் எங்கள் ஆட்சிதான்..அடுத்த முதல்வர் எங்கள் எ.ஏ.தி.க தலைவர் TBCD தான்!!!!!
வாழ்க தலைவர்!!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

//அரை பிளேடு said...
2011 இல் முதல்வராக இருக்கும் அருமை அண்ணன் சரத்குமாரை பற்றி தாங்கள் குறிப்பிடாததை வன்மையாக கண்டிக்கிறேன்.

:)))
//

அரை பிளேடு சார்,

அப்படி ஒருவர் இருப்பதே சத்தியமாக நீங்க சொல்லி தான் ஞாபகம் வருது.

சரத்குமார் பரபரப்பு அறிக்கை விட்டு இருப்பை காட்டிக் கொள்ள வேண்டாமா ? சுப்ரீம் ஸ்டார் ஆமை வேகத்தில் இருக்கிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
2011ல் தமிழகத்தில் எங்கள் ஆட்சிதான்..அடுத்த முதல்வர் எங்கள் எ.ஏ.தி.க தலைவர் TBCD தான்!!!!!
வாழ்க தலைவர்!!!!!!
//

ஜெகாதீசன்,

அவர் தேர்தலில் நிற்பாரா ? உட்காருவாரா ?

புரியல்ல, தயவுசெய்து விளக்கம் !
:)

Me சொன்னது…

டி. ராஜேந்தர் இப்ப நெனச்சாலும் ஆட்சிய பிடிப்பாரு. அவரை குறிப்பிடாததை எதிர்த்து நான் நாளை காலை 7 மணியளவில் டீக்குடிக்க போகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//உறையூர்காரன் said...
டி. ராஜேந்தர் இப்ப நெனச்சாலும் ஆட்சிய பிடிப்பாரு. அவரை குறிப்பிடாததை எதிர்த்து நான் நாளை காலை 7 மணியளவில் டீக்குடிக்க போகிறேன்.
//

நீங்க சொல்லாமல் டீக்கடைக்கு போங்க, கடைக்காரருக்கு நீங்க டி ஆர் ரசிகர் என்று தெரிந்தால் டீ யில் விசம் வச்சிடுவார்.
:)

RATHNESH சொன்னது…

சரத் குமாரா? அவர் தன் வீட்டுக்கே முதல்வர் கிடையாதே! காமெடி பண்ணுவதற்கு ஓர் அளவில்லையா?

அடுத்த முதல்வர் ஒரு பெண்தான். அது ஜெயலைதாவா; கனிமொழியா; நமீதாவா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.

TBCD சொன்னது…

என் உடன் பிறப்பே..நீ இருக்கும் அணியின் தலைவியுடன் கூட்டு வைத்தால் தான்..ஆட்சிப் பொறுப்பு என்றால், அதற்கும் நான் தயாராகவே உள்ளேன்..பா.ஜா.கவுடன் கூட்டு வைக்க காரணம் கிடைத்த போது, அ.எ.ஏ.தி.மு.கவுட கூட்டு வைக்க காரணம் கிடைக்காதா என்ன..

//*ஜெகதீசன் said...
2011ல் தமிழகத்தில் எங்கள் ஆட்சிதான்..அடுத்த முதல்வர் எங்கள் எ.ஏ.தி.க தலைவர் TBCD தான்!!!!!
வாழ்க தலைவர்!!!!!!*//

TBCD சொன்னது…

இது அறிவுத் திருட்டு...இதனை நான் கண்டிக்கிறேன்...

//*கோவி.கண்ணன் said...

ஜெகாதீசன்,

அவர் தேர்தலில் நிற்பாரா ? உட்காருவாரா ?

புரியல்ல, தயவுசெய்து விளக்கம் !
:)*//

நாகை சிவா சொன்னது…

அடுத்த சட்டமன்ற தேர்தலில் பலமான முதல்வர் வேட்பாளர்கள் ஆன சரத்குமார், கார்த்திக், விஜய. டி.ஆர். போன்றவர்களை இருட்டடிப்பு செய்த கண்ணனை கண்டப்படி கண்டிக்கிறேன்

வடுவூர் குமார் சொன்னது…

2011 வரை காத்திருக்கமுடியாதா?
ஏன் இந்த அவசரம்?? :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
2011 வரை காத்திருக்கமுடியாதா?
ஏன் இந்த அவசரம்?? :-)
//

குமார்,

அவுங்களே தொலைநோக்கி(யி)ல் சிந்திக்கும் போது... !
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
சரத் குமாரா? அவர் தன் வீட்டுக்கே முதல்வர் கிடையாதே! காமெடி பண்ணுவதற்கு ஓர் அளவில்லையா?

அடுத்த முதல்வர் ஒரு பெண்தான். அது ஜெயலைதாவா; கனிமொழியா; நமீதாவா என்பதைக் காலம் தீர்மானிக்கும்.
//

ரத்னேஷ்,

உங்க மனசில 'நமீதா' வா ?

தெரிஞ்சு போச்சு !
:)

jollupandi சொன்னது…

சாத்தை பாக்கியராஜ் ணு ஒருத்தர் அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் ஒருவர் தான் தான் அடுத்த முதல்வரா வர வாய்ப்பு இருக்குனு போன மாசம் ஜுனியர் விகடனுக்கு பேட்டி கொடுத்தார் பார்த்தீங்களா??

ஆக மொத்தம்,

2011 ல மருத்துவம் சுகாதாரத்துறை முதல்வர் ராமதாஸ்
சட்டம் ஒழுங்கு முதல்வர் விசயகாந்த்
திரைப்படம் மற்றும் செய்திப்பிரிவு முதலமைச்சர் சரத்
சமூக நீதித்துறை முதலமைச்சர் கார்த்திக்
சட்டத்துறை முதலமைச்சர் கார்த்தி சிதம்பரம்
பொதுப்பனி டுறை முதல்வர் ஜி கெ வாசன்
போட்டி பொதுபனி துறை முதல்வர் இ வி கே ஸ் இளங்கோவன்
அழகு கலைத்துறை முதல்வர் நமிதா

மொத்தம் தமிழ்நாட்டுக்கு 66 முதலமைசர்கள் இருப்பாங்க..
இது இல்லாம, த்னை முதல்வர்.. துனைக்கு துனை முதல்வர்.. போட்டி முதல்வர் (காங்கிரஸ் மற்றும் மதிமுக மட்டும்) அப்படினு ஒரு 120 பேரு..

ஜுச்ட் 4 வருஷம் காத்திருங்க மக்களே...

Hariharan # 03985177737685368452 சொன்னது…

கோவி.கண்ணன்,

2011ல் நீறு பூசிய (நீருபூத்த) நெருப்பு ரஜினிகாந்த் வாய்ஸ் யாருக்கு கிடைக்குமோ?

விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக யாருடன் கூட்டு வைக்குமோ?

கவுண்டமணியின் டயலாக் நினைவுக்கு வருகிறது "வர வர புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் அவனை தொழிலதிபர்-ன்றானுங்க"

2011 தேர்தல் பட்டாசா இருக்கும்!
திமுகவில் கருணாநிதி -ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி
அதிமுகவில் -ஜெயலலிதா
பாமக - பெரிய/சின்ன ராமதாஸ்
தேமுதிக - விஜய்காந்த்
சமத்துவ கட்சி- சரத்குமார்
லட்சிய திமுக- டி.ராஜேந்தர்
பார்வர்டு பிளாக்- கார்த்திக்
காங்கிரஸ் - சிதம்பரம்-இளங்கோவன் கார்த்திக்சிதம்பரம்

ஒரே பெரிய ஆறுதல் நல்லகண்ணு, சங்கரய்யா, வரதராஜன் தமிழக முதல்வராக 2011ல் வருவேன்னு பூச்சாண்டி காட்டாததை எண்ணி மக்கள் மகிழ வேண்டியது தான்!

ஜமாலன் சொன்னது…

சீ.ஆர். பாஸ்கரன் யார்? மக்கள் டீவியல் யாரையும் பேசவிடாமல் தான் மட்டுமே பேசிக்கொண்டு நீதியின் குரல் பரபரப்பாக முழங்கும் என்பாரே அவரா?

அண்ணன் ரத்ணேஷ் நடாத்தி வந்த அஸ்ஸாம் அல்வாக் கடையை மூடிவிட்டு நமீதாவின் கொ.ப.செ. வாக செயல்படுவதால் நானும் அரேபிய அல்வாக்கடையை மூடிவிட்டு மாணாட மயிலாட நிகழ்ச்சியில் அரேபியக் குதிரை என்று ஆச்சி மணோரமாவால் பாராட்டப்பட்ட நமீதாவின் ந.ம.க.வில் (நமீதா மக்கள் கட்சியில்) சேர்ந்த காலியாக இருக்கும் எதாவது ஒரு பதவியை எனக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.

முதல்வராக பல வழிகள் உள்ளது. சும்மா ஒரு டியூஷன் சென்டர் வைத்து ஆகலாம். விசயகாந்த் மட்டும் காலால் உதைப்பது பற்றி சிறப்பு பாடம் நடத்த ஒன்று ஆரம்பிக்கலாம். சரத்குமார் ஆலமரத்தில் அமர்ந்து தீர்ப்பு வழங்குவது பற்றி.. டீஆர் டண்டணக்கா ஆட்டத்திற்கு.. கார்த்திக் குளறி குளறி புரியாமல் பேசுவது எப்படி.. என அவரவருக்கு ஒரு துறை இருக்கு முதல்வராக.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாகை சிவா said...
அடுத்த சட்டமன்ற தேர்தலில் பலமான முதல்வர் வேட்பாளர்கள் ஆன சரத்குமார், கார்த்திக், விஜய. டி.ஆர். போன்றவர்களை இருட்டடிப்பு செய்த கண்ணனை கண்டப்படி கண்டிக்கிறேன்
//

சிவா,

விஜய், அஜித், சிம்பு பெயரையும் முதல்வருக்கு முன்மொழியாமல் விட்டதற்கு உங்களை நானும் காணாதபடி கண்டிகிறேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
என் உடன் பிறப்பே..நீ இருக்கும் அணியின் தலைவியுடன் கூட்டு வைத்தால் தான்..ஆட்சிப் பொறுப்பு என்றால், அதற்கும் நான் தயாராகவே உள்ளேன்..பா.ஜா.கவுடன் கூட்டு வைக்க காரணம் கிடைத்த போது, அ.எ.ஏ.தி.மு.கவுட கூட்டு வைக்க காரணம் கிடைக்காதா என்ன..
//

டிபிசிடி,
கூட்டு வைத்தால் மட்டும் போதாது, குழம்பும் வைக்கச் சொல்லுங்க.

அ.எ.ஏ.தி.மு.க கவுட கட்சிமாதிரி செல்(லா)வாக்கு உள்ள கட்சியா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Hariharan # 03985177737685368452 said...
கோவி.கண்ணன்,

2011ல் நீறு பூசிய (நீருபூத்த) நெருப்பு ரஜினிகாந்த் வாய்ஸ் யாருக்கு கிடைக்குமோ?

விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக யாருடன் கூட்டு வைக்குமோ?

கவுண்டமணியின் டயலாக் நினைவுக்கு வருகிறது "வர வர புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் அவனை தொழிலதிபர்-ன்றானுங்க"

2011 தேர்தல் பட்டாசா இருக்கும்!
திமுகவில் கருணாநிதி -ஸ்டாலின் - அழகிரி - கனிமொழி
அதிமுகவில் -ஜெயலலிதா
பாமக - பெரிய/சின்ன ராமதாஸ்
தேமுதிக - விஜய்காந்த்
சமத்துவ கட்சி- சரத்குமார்
லட்சிய திமுக- டி.ராஜேந்தர்
பார்வர்டு பிளாக்- கார்த்திக்
காங்கிரஸ் - சிதம்பரம்-இளங்கோவன் கார்த்திக்சிதம்பரம்

ஒரே பெரிய ஆறுதல் நல்லகண்ணு, சங்கரய்யா, வரதராஜன் தமிழக முதல்வராக 2011ல் வருவேன்னு பூச்சாண்டி காட்டாததை எண்ணி மக்கள் மகிழ வேண்டியது தான்!
//

வாங்க ஹரிசார்,
எல்லாம் எழுதினிங்க சரி. ரசித்தேன். ஆனால் இல.கனேசன் ஐயாவைப் பற்றி எதுவுமே எழுதாமல் போனதற்கு நான் வருத்தப்படுகிறேன். பக்கத்து மாநில அரசியில் இல.கனேசன் ஐயாவை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டதா ?
:)
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//rina said...
சாத்தை பாக்கியராஜ் ணு ஒருத்தர் அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் ஒருவர் தான் தான் அடுத்த முதல்வரா வர வாய்ப்பு இருக்குனு போன மாசம் ஜுனியர் விகடனுக்கு பேட்டி கொடுத்தார் பார்த்தீங்களா??

ஆக மொத்தம்,

2011 ல மருத்துவம் சுகாதாரத்துறை முதல்வர் ராமதாஸ்
சட்டம் ஒழுங்கு முதல்வர் விசயகாந்த்
திரைப்படம் மற்றும் செய்திப்பிரிவு முதலமைச்சர் சரத்
சமூக நீதித்துறை முதலமைச்சர் கார்த்திக்
சட்டத்துறை முதலமைச்சர் கார்த்தி சிதம்பரம்
பொதுப்பனி டுறை முதல்வர் ஜி கெ வாசன்
போட்டி பொதுபனி துறை முதல்வர் இ வி கே ஸ் இளங்கோவன்
அழகு கலைத்துறை முதல்வர் நமிதா

மொத்தம் தமிழ்நாட்டுக்கு 66 முதலமைசர்கள் இருப்பாங்க..
இது இல்லாம, த்னை முதல்வர்.. துனைக்கு துனை முதல்வர்.. போட்டி முதல்வர் (காங்கிரஸ் மற்றும் மதிமுக மட்டும்) அப்படினு ஒரு 120 பேரு..

ஜுச்ட் 4 வருஷம் காத்திருங்க மக்களே...
//

ரினா, நீங்கள் குறிப்பிட்ட அம்பேத்காராஜனின் பேட்டி படித்தேன்.

நீங்க துறைக்கு ஒரு முதல்வர் சொல்வது கூட கடினம் தான். பேசாமல் தொகுதிக்கு ஒன்றாக நியமித்துவிடுவோம்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
சீ.ஆர். பாஸ்கரன் யார்? மக்கள் டீவியல் யாரையும் பேசவிடாமல் தான் மட்டுமே பேசிக்கொண்டு நீதியின் குரல் பரபரப்பாக முழங்கும் என்பாரே அவரா?

அண்ணன் ரத்ணேஷ் நடாத்தி வந்த அஸ்ஸாம் அல்வாக் கடையை மூடிவிட்டு நமீதாவின் கொ.ப.செ. வாக செயல்படுவதால் நானும் அரேபிய அல்வாக்கடையை மூடிவிட்டு மாணாட மயிலாட நிகழ்ச்சியில் அரேபியக் குதிரை என்று ஆச்சி மணோரமாவால் பாராட்டப்பட்ட நமீதாவின் ந.ம.க.வில் (நமீதா மக்கள் கட்சியில்) சேர்ந்த காலியாக இருக்கும் எதாவது ஒரு பதவியை எனக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.

முதல்வராக பல வழிகள் உள்ளது. சும்மா ஒரு டியூஷன் சென்டர் வைத்து ஆகலாம். விசயகாந்த் மட்டும் காலால் உதைப்பது பற்றி சிறப்பு பாடம் நடத்த ஒன்று ஆரம்பிக்கலாம். சரத்குமார் ஆலமரத்தில் அமர்ந்து தீர்ப்பு வழங்குவது பற்றி.. டீஆர் டண்டணக்கா ஆட்டத்திற்கு.. கார்த்திக் குளறி குளறி புரியாமல் பேசுவது எப்படி.. என அவரவருக்கு ஒரு துறை இருக்கு முதல்வராக.
//

ஜாமா,

உங்களுக்கு நகைச்சுவையும் நன்றாக வருகிறது. நீங்கள் ந.ம.க வா ? கட்சி வளர்ந்தால் எனக்கும் ஒரு போஸ்டு போட்டு கொடுங்க !
:)

Hariharan # 03985177737685368452 சொன்னது…

//இல.கனேசன் ஐயாவைப் பற்றி எதுவுமே எழுதாமல் போனதற்கு நான் வருத்தப்படுகிறேன்.//

கோவி. கண்ணன்,

எனது முந்தைய பின்னூட்டத்தை ரசித்ததற்கு நன்றிகள்.

தமிழக பாஜக வின்
இல. கணேசனையும்,
"புரட்சி தளபதி" திருநாவுக்கரசரையும்,

விடுதலை சிறுத்தைகள் தொல்.திருமா,

புதியதமிழகம் கிருஷ்ணசாமியையும்

காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கோஷ்டி விஷ்ணுபிரசாத்தையும்...

2011-ல் தமிழகத்தின் வருங்கால முதல்வர்களாக அடையாளம் காணாதது/சுட்டாதது என் தவறுதான்... :-))

ஜெகதீசன் சொன்னது…

//
நமீதாவின் ந.ம.க.வில் (நமீதா மக்கள் கட்சியில்) சேர்ந்த காலியாக இருக்கும் எதாவது ஒரு பதவியை எனக்கு பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்.
//

ந.ம.க விற்கு எங்கள் கூட்டணிக் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்பதை எ.ஏ.தி.க சார்பில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்!!!!!

கோவி.கண்ணன் சொன்னது…

ஹரிகரன் சார்,

மீண்டும் பின்னூட்டியதற்கு நன்றி. உங்கள் பதிவுகளை அடிக்கடி எட்டிப்பார்ப்பது உண்டு. இப்போதெல்லாம் நீங்கள் அதிகமாக எழுதுவதில்லையே. :(

உங்கள் கருத்துக்களில் விச(ய)ம் இருந்தாலும் எழுத்தை ரசிக்கிறேன் என்பதை சொல்லிக் கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை.
:)

மீண்டும் நன்றி !

ஜெகதீசன் சொன்னது…

//
இது அறிவுத் திருட்டு...இதனை நான் கண்டிக்கிறேன்...

//
எங்கள் தலைவரின் அறிவைத் திருடும் உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்!!
20011 இல் எங்கள் தலைவர் டிபிசிடி முதல்வராகும் போது உங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும்!!!

RATHNESH சொன்னது…

நீங்கள் ந.ம.க வா ? கட்சி வளர்ந்தால் எனக்கும் ஒரு போஸ்டு போட்டு கொடுங்க !

கட்சி வளர்ந்தால்?

கட்சியின் வளர்ச்சியா முக்கியம்? ஆட்சிக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? குதிரை பேரம்னு கேள்விப்பட்டதில்லையா? எங்க விஷயத்தில் குதிரையே பேரம் பேசும்! எவன் கவுற மாட்டான் சொல்லுங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
நீங்கள் ந.ம.க வா ? கட்சி வளர்ந்தால் எனக்கும் ஒரு போஸ்டு போட்டு கொடுங்க !

கட்சி வளர்ந்தால்?

கட்சியின் வளர்ச்சியா முக்கியம்? ஆட்சிக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? குதிரை பேரம்னு கேள்விப்பட்டதில்லையா? எங்க விஷயத்தில் குதிரையே பேரம் பேசும்! எவன் கவுற மாட்டான் சொல்லுங்க?
//

நீங்கெளெல்லாம் ரொம்ப மாறிட்டிங்க, பழசையெல்லாம் மறந்துட்டிங்க, தங்க தலைவி சில்க் நடித்த கடைசி படம் பொங்கலுக்கு ரிலிஸ் ஆகுதாம் இப்போ என்னமெல்லாம் அதில் தான்.
நமீதா என்ன நமீதா ? சில்க் முன்னே எந்த அரபு குதிரையின் ஆட்டமும் காலி
:)

ஜமாலன் சொன்னது…

//நமீதா என்ன நமீதா ? சில்க் முன்னே எந்த அரபு குதிரையின் ஆட்டமும் காலி
:)//

கோவியண்ணா.. நமக்கு ஒரு சீட்ட போடுங்க பொங்கலுக்கு. கடைசியா கண்ணதாசன் கவிதைவரிகளுடன் சி்ல்க் தந்த அந்த பழரச விளம்பரத்தை மறக்கமுடியுமா?

குதிரையே குதிரை பேசும் கட்சி நம்ம ந.ம.க. தான்.. மலேசிய அண்ணன் !TBCD முதல்வர்னா? அக்கா நமிதாவை என்ன செய்வது?????????

து.மு. அல்லது உ.மு. எதற்காவது முயற்சி செய்யுங்கள் அல்லது வாரம் ஒரு கட்சி மாற்றி மாற்றி...

Pulliraja சொன்னது…

எங்கள் இலட்சிய திலகம் நமீதா ஆட்சி அமைப்பது உறுதி.

உயிர் தமிழுக்கு
உடல் நமீதாவுக்கு

புள்ளிராஜா

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவியண்ணா.. நமக்கு ஒரு சீட்ட போடுங்க பொங்கலுக்கு. கடைசியா கண்ணதாசன் கவிதைவரிகளுடன் சி்ல்க் தந்த அந்த பழரச விளம்பரத்தை மறக்கமுடியுமா?
//

ஜமாலன்,

அது என்ன விளம்பரம் ? கண்ணதாசன் காலம் சென்று 25 ஆண்டுகள் (1983) ஆகிறது, சில்க் மறைந்து 15 ஆண்டுகள் ஆகிறது (1992), நீங்கள் சொல்லும் கண்ணதாசன் வரிகள் நினைவு இல்லை. 'பொன்மேனி உருகுதே என் ஆசை பெருகுதே' கண்ணதாசன் பாடல் தானே ?

TBCD சொன்னது…

கொள்கை தேடி செயலாளராக முதலில் களம் இறக்குவோம்..அப்பறம்.கொள்கை கண்டுப் பிடித்தப் பிறகு கொள்கைப் பரப்பு செயலாளராக ஆக்குவோம்...

//*ஜமாலன் சைட்...
மலேசிய அண்ணன் !TBCD முதல்வர்னா? அக்கா நமிதாவை என்ன செய்வது?????????

து.மு. அல்லது உ.மு. எதற்காவது முயற்சி செய்யுங்கள் அல்லது வாரம் ஒரு கட்சி மாற்றி மாற்றி...*//

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்