பின்பற்றுபவர்கள்

7 நவம்பர், 2007

ஜெ-வின் இரட்டை நிலைபாடு : தமிழ்செல்வன் - கலைஞருக்கு விடுதலைபுலி, வைகோவுக்கு இலங்கை தமிழர்

ஜெவுக்கு கருணாநிதி ஆட்சியின் கண் உறுத்தல் தெரிந்ததே. 'மைனாரிடி கவர்மெண்ட்' என்று மூச்சுக்கு 300 தடவை சொல்லிப் பார்த்தார், காங்கிரசுடன் கைகோர்க முடியுமா ? பாமகவை இழுக்க முடியுமா ? என்று பார்த்தார் ஒன்றும் நடக்கவில்லை. விரக்தியின் உச்சத்திற்கே சென்று கலைஞர் கருணாநிதியின் இரங்கல் பாட்டை ஏளனம் செய்து தேச தூரோக முத்திரை குத்தினார், இதே ஜெ.வின் அதிமுக கூட்டணியில் அ(ப)ங்கம் வகிக்கும் திருவாளர் வைக்கோ நேரடியாகவே ஸ்டேர்மெண்ட் விடுத்திருக்கிறார்

***************

'லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள்'-வைகோ"


சென்னை: ஒரு தமிழ்ச்செல்வன் இறந்தால் என்ன, லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வைகோ பேசியதாவது,

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசும்போது நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகளை எறிந்துள்ளனர்.

ஆனால் நாஞ்சில் சம்பத் கலவரத்தை தூண்டினார் என்று கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். அதே இடத்தில் நான் பேசப் போகிறேன். என்னை என்ன செய்வார்கள் என்று பார்க்கிறேன். மின்சாரம், மைக் இல்லாவிட்டாலும் நான் கட்டாயம் பேசுவேன்.

இந்த அராஜகங்களை ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தவணை முறையில் மிரட்டும் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் ஏன் சுட்டிக் காட்டவில்லை. பக்கத்து வீடு தானே எரிகிறது என நினைக்காதீர்கள். உங்களுக்கும் இந்த நிலை ஏற்படும்.

அதிமுக கூட்டணியை விட்டு விடுதலை புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் மதிமுக விலகத் தயாரா என திமுகவினர் கேட்கின்றனர்.
அங்குள்ள தமிழர்களைக் கொல்ல மத்திய அரசு ரகசிய ஆயுத சப்ளை செய்கிறது. இவர்களுடன் கூட்டணி வைத்துள்ள திமுக அரசை விலகச் சொல்வார்களா. விடுதலைக்குப் போராடிய தமிழ்ச்செல்வனை பரிதாபமாக சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஒரு தமிழ்ச்செல்வன் இறந்தால் என்ன. லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள் என்றார் வைகோ.

செய்தி :
தட்ஸ்தமிழ்
*****************

- மறைந்த தமிழ்செல்வன் குறித்து புகழ்ந்து பேசும் தேச துரோக வைகோவை அதிமுக கூட்டணியில் இருந்து நீக்குவதற்கு மத்திய அரசிடமோ, நீதிமன்றத்திற்கோ செல்ல வேண்டியதில்லை. இதனை தற்போது தேசதுரோகி வைகோவின் கூட்டாளியாக இருக்கும் ஜெ-வெ முடிவெடுக்க முடியும். செய்வாரா ?

ஜெவின் திமுகவின் மீதான ஆட்சிகலைப்பு கோரிக்கை தமிழ்செல்வன் தொடர்புடையதா ? கருணாநிதி அரசின் மீதுள்ள காழ்புணர்வில் தொடர்புடையதா ?

இதில் வைகோ பாடும் சந்தில் சிந்து பாருங்கள், அண்ணன் வைகோ கலைஞரை இலங்கை அரசுடன் தொடர்புபடுத்துகிறார். ஜெ கலைஞரை விடுதலை புலிகளுடன் தொடர்பு படுத்த்துகிறார்.

8 கருத்துகள்:

Unknown சொன்னது…

//இதில் வைகோ பாடும் சந்தில் சிந்து பாருங்கள், அண்ணன் வைகோ கலைஞரை இலங்கை அரசுடன் தொடர்புபடுத்துகிறார். ஜெ கலைஞரை விடுதலை புலிகளுடன் தொடர்பு படுத்த்துகிறார். //

பாவம் கலைஞர் :)

Bharath சொன்னது…

//இதில் வைகோ பாடும் சந்தில் சிந்து பாருங்கள், அண்ணன் வைகோ கலைஞரை இலங்கை அரசுடன் தொடர்புபடுத்துகிறார். ஜெ கலைஞரை விடுதலை புலிகளுடன் தொடர்பு படுத்த்துகிறார். //

கலைஞர் எங்கள் நிலைப்பாடு இதுதான் என்று சொல்ல மாட்டேன் என்கிறாரே.. ஈழ தமிழர்களின்பால் உள்ள அக்கறையை food and medicines விஷயத்தில் காட்டியிருக்க வேண்டாமோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Analyzt said...
கலைஞர் எங்கள் நிலைப்பாடு இதுதான் என்று சொல்ல மாட்டேன் என்கிறாரே.. ஈழ தமிழர்களின்பால் உள்ள அக்கறையை food and medicines விஷயத்தில் காட்டியிருக்க வேண்டாமோ?//

ஜெ தமிழக முதலமைச்சரானதூம், அதனால் தமிழ்மக்கள் பட்ட துன்பமும் இராஜிவ் காந்தி கொலையால் நடந்த மறைமுக விபத்துக்கள். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசை சேர்ந்த வாசன் போன்றோர்கள் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என்று போர்கொடி தூக்கியே வைத்திருக்கிறார்கள். இந்த சூழலில் கலைஞர் வெளிப்படையான ஆதரவு தெரிவிக்க முடியுமா ? அப்படி செய்தால் ஜெ மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி காங்கிரசிடம் நெருங்கி திமுக ஆட்சியை கலைக்க முயல்வார்.

தஞ்சமென்று வருபவர்களுக்கு இந்திய அரசும்,தமிழக அரசும் உதவிகளை செய்துவருகிறது.

கலைஞரின் ஆழ்ந்த அமைதியை பட்ட காயத்தின் வலி என்று ஏன் கொள்ள முடியவில்லை

Great சொன்னது…

சரியான வாதம் தான். ஆனால் வைகோ கேட்கும் எதிர் கேள்வி கூட சரியான கேள்வி தானே. தமிழீழ பிரச்சினையைப் பொறுத்தவரை கலைஞரை விட வைகோ அதிகம் அக்கறை உள்ளவர் என்பதே உண்மை. ஆனால் மிக முக்கியமான வேளைகளில் மிக மிக தவறான முடிவுகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். இவரைவிட அனுபவத்தில் சிறியவரான திருமாவளவனிடம் அரசியல் கொள்கை கூட்டணி விஷயத்தில் உள்ள மெச்சூரிட்டி கூட இவரிடம் இல்லாதது தான் வேதனை. சிங்கள வெறியர்களை எவ்வளவு ஆத்திரத்தோடு திட்டுகிறாரோ அதே அளவு ஆத்திரத்தை கலைஞர் மீதும் காட்டுகிறார். இது போன்ற நேரங்களில் யாருடன் சேர்ந்து செயல்பட வேண்டும் அல்லது யார் இதற்கு எதிரி என்று கூடவா யோசிக்க மாட்டார்? எதற்கோ வைத்த கூட்டணியை இன்னும் தூக்கிக்கொண்டு அலைவது கொடுமையாக உள்ளது.

M Poovannan சொன்னது…

சரியான் தருணத்தில் சரியான இடுகை

நாகை சிவா சொன்னது…

கண்ணன்,

ஜெ அறிக்கை எல்லாம் 10 தோட 11 னு அதை விட்டு தள்ளுங்க. இதுக்கு இந்த அளவுக்கு மதிப்பு கொடுத்து பேசுவதே தப்பு. வைகோ பத்தி என்னத்த சொல்ல... சிரிப்பு தான் வரும் அதுனால் அதுவும் வேணாம்.

இப்ப என் கேள்வி என்னான முதல் அமைச்சராக இருக்கும் ஒருவர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த ஒருவர் இறந்ததுக்கு இரங்கல் செய்தி சொல்லாமா கூடாது. மனிதாபிமான அடிப்படையில் சொல்லாம் என்றால் அதை ஏன் தேசிய கட்சிகள் எதிர்கின்றன.

அப்படியே கலைஞர் கூறியது போல் நான் எதிர்கட்சிய சேர்ந்தவர்கள் இறந்த போது நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளேன் என்கிறார். அதுக்கு அவர்கள் முக்கியமாக பா.ஜ.க சேர்ந்த ராஜா கேட்பதை போல அவர் கட்சியை சேர்ந்த தா. கி ஏன் அப்படி செய்யலை என்ற கேள்விய கேட்கும் போது அதில் நியாயம் இருக்கிற மாதிரி தான் எனக்கு தோணுது. நீங்க என்ன சொல்லுறீங்க...

நாகை சிவா சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

Pulliraja சொன்னது…

கலைஞர் ஆட்சியில்தான் ஈழத்தமிழன் நம்பிக்கை வைத்திருக்கின்றான். அவருடைய எழுத்துக்கள் சிந்திக்க வைத்தது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்