பின்பற்றுபவர்கள்

11 நவம்பர், 2007

'இதற்காவது' இராம சேது காப்பாற்றப்பட வேண்டும் !

இலங்கை அரசன் இராவணன், ஒரு சிறந்த சிவபக்தன் என்றும் வீணை மீட்டுவதில் வல்லவன் என்பது எல்லோருக்கும் தெரியும். அவனுடய சிவபக்தியின் பயனாக சிவபெருமான் அவனுக்கு ஆத்மலிங்கத்தை அளித்து, இதனை இடையில் எங்கு வைத்தாலும் அதன் பிறகு அதை அசைக்க முடியாது நிலைபெற்றுவிடும் என்று கூறினாராம். அதனை இலங்கைக்கு கொண்டு சென்று நிறுவ நினைத்தான் இராவணன். அந்த சிவலிங்கம் இலங்கையில் நிறுவப்பட்டால் அதன் பிறகு எவரும் அவனை எளிதில் வெல்ல முடியாதாம். இதனை கேள்வியுற்ற தேவர்களுக்கு கிலி பிடித்ததாம். உடனே ரகசிய சதித்திட்டம் தீட்டி, அதன் படி இந்திரனின் மறு உருவான வருணனிடம் முறையிட்டனர். வருணனும் 'இதுதான பிரச்சனையா? ப்பூ ஊதிவிடலாம்... ஆத்ம லிங்கம் இலங்கைக்கு செல்லவிடாமல் தடுப்பது என் பொறுப்பு' என்றான்.

அதன்படி (எப்படி என்று கேட்காதீர்கள், அதற்கு ஒரே சொல்லில் சொல்ல வேண்டுமென்றால்) தந்திரமாக எப்படியோ இராவணனின் வயிற்றில் ஏழுகடல் நீரை புகத்திவிட்டான். கடல் இருந்த இடம் பெரும் தூர்வாராத பெரிய குளமாக நீரின்றி ஆகி இருக்கும் ? சாதாரணமாகவே இரண்டு தம்ளர் தண்ணீர் குடித்தாலே நமக்கு இயற்கை உபாதை இருக்கையில் அமரமுடியாது இருகைகளும் இருக மூடிக் கொள்ளும், ஏழு கடல் நீர் இராவணின் வயிற்றுக்குள் புகுந்ததும், சிறுநீரை அடக்க முடியாமல் விழிக்க ஆரம்பித்தான். தலையில் ஆத்மலிங்கம் வேறு இருக்கிறது, இறக்கி வைத்தால் அங்கேயே தங்கிவிடும் என்பதால் கையை பிசைந்து கொண்டிருந்த நேரத்தில் அந்த வழியாக ஒரு சிறுவன் வந்தான்.

இராவணன் அந்த சிறுவனை அனுகி, சிறுநீர் கழிக்க சென்று வருவதாகவும், ஆத்ம லிங்கத்தை சிறிது நேரம் தலையில் வைத்திருக்கச் சொல்லி வேண்டினான். சிறுவனும் சரியென்று சொல்லி ஒரு நிபந்தனை விதித்தான், தான் மூன்று முறை அழைக்கும் முன்பு வராவிட்டால் ஆத்ம லிங்கத்தை இறக்கி வைத்துவிட்டு சென்றுவிடுவதாக சொன்னான். அடிவயிற்றில் அவஸ்தை அதிகமாக அதிகமாக இராவணனும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டு சிறுவனின் தலையில் லிங்கத்தை வைத்துவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றுவிட்டான்.

சிறுவன் முதல் முறை அழைத்தான், ஏழுகடல் நீராயிற்றே இறங்க வேண்டாமா ? இரண்டாவது முறை அழைத்தும் இராவணனின் வயிற்றில் இருந்த கடல் நீர் தீர்ந்தபாடில்லை. சிறுநீர் தாரையாக கடல் மெல்ல உருப்பெற்றுக் கொண்டு மீண்டுக் கொண்டிருந்தது. சொன்னபடி சிறுவன் மூன்றாவது முறை அழைத்துப் பார்த்துவிட்டு அந்த லிங்கத்தை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டான். சிறுநீர் எல்லாம் இறங்கி, கடல்கள் பழையபடி ஆர்பரிக்க ஆரம்பித்ததும் 'உஸ்ஸ்...அப்பாடா' என்று பெருமூச்சி விட்டுவிட்டு இராவணன் திரும்பி வந்து பார்த்த போது சிறுவனை அங்கு காணவில்லை. பெரும் அதிர்ச்சி அடைந்தான். சிவலிங்கம் அங்கேயே பதிந்துவிட்டது (ப்ரதிஷ்டம்) தெரிந்தது, இருபுறமும் கைகளால் பிடித்து தூக்கிப் பார்த்தான் அசைக்க முடியவில்லை. சிவபெருமான் 'வழியில் எங்கும் வைத்தால் அங்கேயே பதிந்துவிடும்' என்று சொன்னது பலித்துவிட்டது என்று முயற்சியை கைவிட்டு விட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.

சிறுவனாக வந்தது வேறு யாரும் அல்ல, சிறுவயதிலேயே அதாவது பிஞ்சிலேயே 'பழுத்த மாம்பழத்தை' தந்திரமாக பெற்றுக் கொண்ட விநாயக பெருமானே சிறுவனாக வந்து சிவலிங்கம் இலங்கை செல்லாமல் தடுத்து தேவர்களுக்கு உதவி இருக்கிறார். இராவணன் அந்த லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயன்றதன் அடையாளமாக பசுவின் காது போன்ற அமைப்பு சிவலிங்கத்தின் இருபுறமும் அடையாளமாக இருக்கிறது. 'கோ' என்றால் பசு, 'கர்ணம்' என்றால் காது, சிவலிங்கம் பசுவின் காதுடன் காட்சியளிக்கும் சிவ திருத்தலமே திருக்கோகர்ணம் என்று பெயர் பெற்றது. ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஒரே துளுவ நாட்டு திருத்தலம் கோகர்ணமாகும், இங்கு சிவன் மகாபலேசுவரர் என்ற பெயரிலும் பார்வதி கோகர்ண நாயகியாகவும் அழைக்கப் படுகின்றனர். ஹூப்ளியில் இருந்து நூறு கல் தொலைவில் இருக்கிறது கோகர்ணம் என்ற புராண புகழ்பெற்ற இந்த தலம்.

தலைப்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு ?
இராமன் பாலம் அமைக்கும் முன்பே, கடல் நீர் இராவணனின் சிறுநீர் என்று அறிந்தே நிரந்தர பாலமாக அமைக்காமல் மிதக்கும் தற்காலிக பாலம் அமைத்தான். போர் முடிந்து இராவணனை அழித்ததும், பாலம் இனி தேவை இல்லை என்று மூழ்க செய்துவிட்டான். அப்படியும் அழிந்துவிடாமல் இராமன் கைப்பட்டதால் என்னவோ, இன்னும் அழியாமல் இருக்கும் அந்த புனித பாலத்தை நாச உதவியுடன் நாம் அறிந்து கொண்டுள்ளோம். (ச)மூத்திரத்தில் மூழ்கி இருக்கும் ராம சேதுவை மீட்டு, பாம்பன் பாலம் போல் தூக்கி நிறுத்திவிட்டால், டி ஆர் பாலு இடையூறு செய்யாமல் இராம சேதுவுக்கு அடியில் கப்பல்களை விட்டுக் கொள்வார். இராம பக்தர்கள், கரசேவர்கள் அனைவருக்கும் சமுத்திரத்தின் தூய்மை இன்மையை, அதாவது அது இராவணனின் பெருக்கடுத்த சிறுநீர் என்று தெரிந்து கொள்ள திருகோகர்ணம் கோவிலின் புனித கதையை கூறி புரியவைத்து, அவர்களின் தெய்விக தொண்டுள்ளத்தை பயன்படுத்திக் கொண்டு இராம சேதுவை மீட்க வேண்டும்.
இன்றைய இலங்கை பரப்பளவு என்பது ஏழுகடல் நீரை வயிற்றில் வைத்திருந்த இராவணனில் கால் சிறுவிரல் அளவுக்கு சுறுங்கிப் போய் இருக்கிறது, அதனால் மீட்டு எடுக்க வேண்டிய இராமர் சேதுவின் அளவும் சிறியதே.

மேலும் திருகோகர்ணம் தலபுராணத்தை படித்தவுடன் தான், 'கடல் நீர் எப்படி உப்பானது?' என்ற உவர்பான உண்மை தெரியவந்ததும், அது ஆன்மிக உண்மையாக இருப்பதால், பொய்சொல்லவில்லை அதைப்படித்தவுடன் மொய் சிலிர்த்தேன், இராவணன் சிவபக்தன் என்றாலும், கெட்டவன் தான் இருந்தாலும் உணவுக்கு உப்பிட்ட இராவணனை நிந்திப்பதை உடனடியாக நிறுத்து அவனை போற்ற வேண்டும் பக்தர்கள் இராவணனுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து சிறபிக்க வேண்டும்.

கோகர்ணம் கதை உண்மையா ? இராமாயண கதைபோல், கோகர்ணம் பற்றிய கதை இருப்பதும் உண்மை.

26 கருத்துகள்:

G.Ragavan சொன்னது…

எனக்கு ஒரு டவுட்டு. இந்தக் கோகர்ணம் கருநாடகாவுல இருக்கு. அப்ப அரபிக் கடல். ஆனா இலங்கை வங்காள விரிகுடால இருக்கே!!!!! அப்ப இந்த இலங்கை வேற...அந்த இலங்கை வேறயா? அப்ப ராமர் பாலத்த அரபிக்கடலுக்கடீல தேடனுமா! ஆகா....

கோவி.கண்ணன் சொன்னது…

//G.Ragavan said...
எனக்கு ஒரு டவுட்டு. இந்தக் கோகர்ணம் கருநாடகாவுல இருக்கு. அப்ப அரபிக் கடல். ஆனா இலங்கை வங்காள விரிகுடால இருக்கே!!!!! அப்ப இந்த இலங்கை வேற...அந்த இலங்கை வேறயா? அப்ப ராமர் பாலத்த அரபிக்கடலுக்கடீல தேடனுமா! ஆகா....
//

ஜிரா,
இராவணன் அந்த வழியாக சென்ற தான் இலங்கையை அடைந்திருக்கிறான். அங்கே ஒரு இலங்கை இருந்ததா ? எனக்கும் டவுட்டு வந்துவிட்டது. :) கடல்களுக்கு வேறு பெயர் இருந்தாலும் எல்லாம் ஒரே உப்பு நீரால் சூழப்பட்டதுதானே தானே.

குமரன் (Kumaran) சொன்னது…

கோவி.கண்ணன். நான் படித்த திருக்கோகர்ண தலபுராணம் இராவணன் பிராமணன் என்பதால் சந்தியாவந்தனம் செய்யும் நேரம் வந்ததற்காக சந்தியாவந்தனம் செய்ய விரும்பி அங்கு வந்த விநாயகச் சிறுவனிடம் ஆத்ம லிங்கத்தைக் கொடுத்து சந்தியாவந்தனம் செய்து கொண்டிருந்தான் என்றும் விநாயகச் சிறுவன் ஆத்ம லிங்கத்தைக் கோகர்ணத்தில் வைத்துவிட்டான் என்றும் படித்திருக்கிறேன். இன்று உங்கள் இடுகையைப் படித்த பின் இணையத்தில் தேடிய போது விக்கிபீடியாவில் கோகர்ணக் கதையைச் சொல்லும் போது இராவணன் குளிப்பதற்காகச் சென்ற போது இது நடந்ததாகச் சொல்கிறது. ஏழுகடல்கள் வயிற்றில் இருந்து அது சிறுநீராக வெளிவர நேரம் ஆகியது என்ற கதையின் பாடபேதத்தை இன்று தான் அறிந்தேன். நீங்கள் இந்த பாடவேறுபாடு உள்ள தலபுராணத்தை எங்கு படித்தீர்கள்?

http://en.wikipedia.org/wiki/Gokarna

இந்த விக்கிபீடியா கட்டுரையிலேயே மருதேஸ்வரரைப் பற்றிய விக்கிபீடியா கட்டுரைக்குச் சுட்டியும் இருக்கிறது. அங்கு இந்த தல புராணம் விரித்து உரைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. அங்கு சென்று படித்த போது இராவணன் தன்னுடைய சடங்குகளைச் செய்யும் போது தான் கால தாமதம் ஆனதாகச் சொல்லியிருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் இந்த பாடவேறுபாடு உள்ள தலபுராணத்தை எங்கு படித்தீர்கள்?
//

குமரன் தகவலுக்கு நன்றி,

நான் படித்த நூலின் பெயர்:

அடுத்த தலைமுறை அறிந்துகொள்ள நால்வர் வரிசையில் ஞான சம்பந்தர்.

ஆசிரியர் : பருத்தியூர் கே சந்தானராமன்.

தகவல் பக்கம் 101 - 102.

நூலுக்கு காப்புரிமை இருக்கிறது. அந்த பக்கத்தை உங்களுக்கு ஸ்கேன் செய்து அனுப்புகிறேன்.

கோகர்ணம் பற்றிய செய்திகள் அதில் இருந்தவைதான். அதில் இராம சேதுவை இலவசமாக இணைத்தது அடியேன் தான். :)

கோவி.கண்ணன் சொன்னது…

குமரன்,

மேலும்

"அடுத்த தலைமுறை அறிந்துகொள்ள நால்வர் வரிசையில் ஞான சம்பந்தர்."

நூலைப்பற்றிய தகவல்கள்:

பதிப்பகம் : வரம் வெளியிடு

என்ற நூல் கிடைக்கமிடம், New Horizon Media Pte Ltd, #33/15 Eldams Road, Chennai - 18

பதிப்பாளர் : Badri Seshadri ( நம் பதிவர் நண்பர் தான் என நினைக்கிறேன்.)

நூலின் விலை ரூ 50 / -

ENNAR சொன்னது…

திருகோகர்ணம் தமிழ் நாட்டில் தஞ்சையை அடுத்து அல்லவா இருக்கிறது என நினைக்கிறேன்

குமரன் (Kumaran) சொன்னது…

நூலைப் பற்றிய தகவல்களுக்கு நன்றி கோவி.கண்ணன். பக்கங்களை பிரதியெடுத்து அனுப்பும் சிரமம் வேண்டாம்.

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

நானும் இந்தக் கதையைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன், சிறுநீர் அத்தியாயத்துடன். ஓரிரு தமிழ்ப்படங்களில் சந்தியா வந்தனமாகப் புனிதப்படுத்திக் காட்டியதும் உண்டு.

சிவன் தந்த லிங்கம் என்பதற்காக அதனை ஒரு கையில் வைத்துக் கொண்டு மறுகையின் உதவியுடன் சிறுநீர் கழிக்க மனம் இடம் தராத அளவுக்கு மரியாதை கொடுத்ததற்கான தண்டனை தானே அது?

இப்போதைய கோயில்களில், மூக்கினைத் துடைத்த மேல் துண்டுடன் நம் 'சாமிகள்' கை கழுவாமல் கடவுளுக்கு அர்ச்சனைகள் செய்வதையும் அவர் கையால் தரப்படும் அழுக்கு நீரினைத் தீர்த்தம் என்று பக்தர்கள் கைகூப்பி வாங்கிக் குடிப்பதையும் காணும் வாய்ப்பு அந்தக் கால ராவணனுக்குக் கிடைக்கவில்லை அல்லவா? கண்டிருந்தால் அப்படி ஒரு முட்டாள்தனம் செய்திருக்க மாட்டானோ என்னவோ.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

நானும் இந்தக் கதையைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன், சிறுநீர் அத்தியாயத்துடன். ஓரிரு தமிழ்ப்படங்களில் சந்தியா வந்தனமாகப் புனிதப்படுத்திக் காட்டியதும் உண்டு.

சிவன் தந்த லிங்கம் என்பதற்காக அதனை ஒரு கையில் வைத்துக் கொண்டு மறுகையின் உதவியுடன் சிறுநீர் கழிக்க மனம் இடம் தராத அளவுக்கு மரியாதை கொடுத்ததற்கான தண்டனை தானே அது?

இப்போதைய கோயில்களில், மூக்கினைத் துடைத்த மேல் துண்டுடன் நம் 'சாமிகள்' கை கழுவாமல் கடவுளுக்கு அர்ச்சனைகள் செய்வதையும் அவர் கையால் தரப்படும் அழுக்கு நீரினைத் தீர்த்தம் என்று பக்தர்கள் கைகூப்பி வாங்கிக் குடிப்பதையும் காணும் வாய்ப்பு அந்தக் கால ராவணனுக்குக் கிடைக்கவில்லை அல்லவா? கண்டிருந்தால் அப்படி ஒரு முட்டாள்தனம் செய்திருக்க மாட்டானோ என்னவோ.
//

ரத்னேஷ்,

நீங்கள் சொல்வது சரிதான், ஓட்டையுடன் ஒரு 'க்' வைத்து வரம் கொடுக்க வேண்டியது, அதன் பின்பு முட்டாள் தனமாக கொடுத்த வரத்தை அழிப்பது இவைகள் தான் புராணம் தோறும் காணப்படும் கதைகளின் லட்சணம். புராணக்கதைகளின் நம்பகத் தன்மை, புனித தன்மை எவ்வளவு என்பதை பொருத்திக் காட்ட இந்த கதையும், இராவணன் தொடர்புடைய இராம சேதுவையும் இதில் இணைத்தேன்.

எல்லாம் சரி, கடல் நீர் உப்பானது எப்படி என்று அறிந்து கொண்டீர்கள் தானே ?

உயிருடன் இருக்கும் இராவணன் பற்றிய கதை இடம்பெற்ற கோகர்ணம் கோவில். 1500 ஆண்டுகள் பழமையானதாம். அப்படிப்பார்த்தால் இராமயணம் அதற்கு பின்பு வந்ததாக தெரிகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

ரத்னேஷ்,

சொல்ல மறந்தது இந்த இடுகையின் தலைப்பு உங்கள் தொடர் பதிவுகளைப் படிப்பதால் வந்த (நல்)வினை !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ENNAR said...
திருகோகர்ணம் தமிழ் நாட்டில் தஞ்சையை அடுத்து அல்லவா இருக்கிறது என நினைக்கிறேன்
//

என்னார் ஐயா,

காசி, தென்காசி போல் தஞ்சாவூருக்கு அருகில் ஒரு திருகோகர்ணம் இருந்தாலும் இருக்கும்.

ஜெகதீசன் சொன்னது…

ஓஹோ.... இதனாலதான் கடல்நீர் உப்பாச்சா?

கடல் நீரை உப்பாக்கிய ராவணருக்கு என் கண்டனங்கள்... அவரால தான இப்ப சென்னைல தண்ணிப் பஞ்சம்....

ஜெகதீசன் சொன்னது…

//"'இதற்காவது' இராம சேது காப்பாற்றப்பட வேண்டும் !"//
அதுக்குத்தான் நானும், இலைக்காரனும் 80கோடி இந்துக்களுடன் சேர்ந்து ஸ்ரீராம சேதுவைக் காக்கப் போராடுகிறோம்..

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
ஓஹோ.... இதனாலதான் கடல்நீர் உப்பாச்சா?

கடல் நீரை உப்பாக்கிய ராவணருக்கு என் கண்டனங்கள்... அவரால தான இப்ப சென்னைல தண்ணிப் பஞ்சம்....
//

ஜெகதீசன்,

என்னது கண்டனமா ? எதிர் கண்டனம் உங்களுக்கு ! சோற்றில் 'உப்பு' போட்டு தானே சாப்பிடுகிறீர்கள் ? யார் கொடுத்தது ? - இராவணன் கொடுத்தது நினைவிருக்கட்டும் !
:))

அருண்மொழி சொன்னது…

கோவியாரே,

ஒரு சந்தேகம். சிங்கைக்கும் johorக்கும் இடையில் இருக்கும் கடல் உப்பாக இருப்பதற்கு கூட ராவணன்தான் காரணமா?

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

// எல்லாம் சரி, கடல் நீர் உப்பானது எப்படி என்று அறிந்து கொண்டீர்கள் தானே ?//

இதை ஏன் திரும்பத் திரும்பச் சொல்றீங்க, மனுஷன் கவனத்தைத் திருப்ப முயற்சித்தால் கூட விடாமல்.


இப்போ இரண்டு சந்தேகங்கள் முட்டுகின்றன:

1. ராவணனின் சிறுநீராகப் பெருகியதால் தான் கடல்நீர் உப்பாகி இருக்கிறதா அல்லது, உப்புத் தண்ணீரை ராவணன் சிறு நீராய்ப் பெருக்கியதால் தான் அன்றிலிருந்து யார் சிறுநீர் கழித்தாலும் அது உப்பாக இருக்கும் என்று வரம்(?) வந்ததா? அணில்களின் முதுகுக் கோடு போல்.

2. கோகர்ணம் கோவில் பிள்ளையாருடன் சம்பந்தப்பட்டது என்றால் வாதாபி காலம் வரை தமிழகத்தில் பிள்ளையாரின் இருப்பே கிடையாது என்று சொல்லப்படுகிறதே, அந்தக் கோவில் இருப்பது தமிழகத்திலா கர்நாடகாவிலா? கர்நாடகாவிலேயே இருந்தாலும் அங்கிருந்து பிள்ளையார் இங்கே வர ஏன் இவ்வளவு கால தாமதம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

இதை ஏன் திரும்பத் திரும்பச் சொல்றீங்க, மனுஷன் கவனத்தைத் திருப்ப முயற்சித்தால் கூட விடாமல்.//

கங்கைக்கு அருகில் இருக்கிறீர்கள், அதில் மிதக்கும் அழுகிய பிணங்களை விடவா இங்கே சொல்லப்பட்டுள்ளது அருவெறுப்பாக இருக்கிறது ?
:)


//இப்போ இரண்டு சந்தேகங்கள் முட்டுகின்றன:

1. ராவணனின் சிறுநீராகப் பெருகியதால் தான் கடல்நீர் உப்பாகி இருக்கிறதா அல்லது, உப்புத் தண்ணீரை ராவணன் சிறு நீராய்ப் பெருக்கியதால் தான் அன்றிலிருந்து யார் சிறுநீர் கழித்தாலும் அது உப்பாக இருக்கும் என்று வரம்(?) வந்ததா? அணில்களின் முதுகுக் கோடு போல்.//

ஹலோ, அறிவியல் படி யோசிங்க, :)
உப்பு தண்ணீர் வயிற்றுக்குள் இருந்திருந்தால் இராவணன் வாந்தி எடுத்திருப்பான், இங்கு சிறுநீர் என்று தெளிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. கடல் நீர் உப்பானது இராவணன் அளித்த கொடை.
:))


//2. கோகர்ணம் கோவில் பிள்ளையாருடன் சம்பந்தப்பட்டது என்றால் வாதாபி காலம் வரை தமிழகத்தில் பிள்ளையாரின் இருப்பே கிடையாது என்று சொல்லப்படுகிறதே, அந்தக் கோவில் இருப்பது தமிழகத்திலா கர்நாடகாவிலா? கர்நாடகாவிலேயே இருந்தாலும் அங்கிருந்து பிள்ளையார் இங்கே வர ஏன் இவ்வளவு கால தாமதம்?

5:14 PM, November 12, 2007
//

திருக்கோகர்ணம் கர்நாடகாவில் இருப்பதாகத் தான் நண்பர் குமரன் கொடுத்த சுட்டியிலும் உள்ளது, அக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானதாம். ஞானசம்பந்தர் காலமும் 7 ஆம் நூற்றாண்டுக்கு பிற்பகுதியில் என்கிறார்கள். ஞான சம்பந்தரின் பாடல்கள் சிலவற்றில் விநாயகர் குறிப்பு இருக்கிறது

திருவலிவல பதிகம் என்னும் பாட்டில்

பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடி'கண பதி'வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.

என்று விநாயகர் பற்றிய வரிகள் இடம்பெற்றிருக்கின்றன, 1300 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது தமிழக சமணமதம் அழிவில் சென்று கொண்டிருந்த போது விநாயகர் வந்துட்டார்.

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

1.நான் இருப்ப்து பிரம்மபுத்ராவுக்கு அருகில்.

2.வாந்தியை விட சிறுநீர் பரவாயில்லை. (நம் முந்தைய பிரதமர் மருந்தாகக் குடித்தது தானே).

3.விநாயகர் தகவலுக்கு நன்றி.(இதற்கு குமரனின் ENDORSEMENT உண்டா?). பதிவுலகக் குமரனைச் சொல்லவில்லை ஐயா, தமிழ்க் கடவுளைச் சொன்னேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

1.நான் இருப்ப்து பிரம்மபுத்ராவுக்கு அருகில்.

2.வாந்தியை விட சிறுநீர் பரவாயில்லை. (நம் முந்தைய பிரதமர் மருந்தாகக் குடித்தது தானே).

3.விநாயகர் தகவலுக்கு நன்றி.(இதற்கு குமரனின் ENDORSEMENT உண்டா?). பதிவுலகக் குமரனைச் சொல்லவில்லை ஐயா, தமிழ்க் கடவுளைச் சொன்னேன்.
//

ரத்னேஷ்,

உப்பு நீர் வயிறு முட்ட இருந்திருந்தால் கலக்குற கலக்கில், கடல் 'சேறாக' ஆகி இருக்கும் என்று ரொம்ப டீசண்டாக சொல்லலாம் என்று நினைத்தேன். ஏற்கனவே மறக்க நினைக்கிறேன் என்று சொல்லிவிட்டீர்கள், அதனால் வாந்தி என்றும் இன்னும் கொஞ்சம் டீசன்டாக சொன்னேன்.

திருக்கோகர்ணம் இருப்பது கர்நாடகாவில், அந்த கதை காலத்தில் முருகன் அங்கெல்லாம் பேமஸ் ஆகவில்லை போல் தெரிகிறது. இல்லை பிறந்திருக்கவில்லையோ தெரியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

'ஆன்மிகம் / இலக்கியம்' வகையில் வந்த இந்த கட்டுரையை சூப்பர் ஹிட்டாக்கி படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி !

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

நீங்கள் குறிப்பிட்டுள்ள கர்நாடகா கோகர்ணம் கோவிலில் மூலவர் ஆத்மலிங்கத்திற்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தான் அபிஷேக ஆராதனை நடக்கிறது என்கிற தகவல் சரியா?

(ஆதாரம்: தினத்தந்தி குடும்பமலர் ஆன்மீக பக்கம் 04.11.07)

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

நீங்கள் குறிப்பிட்டுள்ள கர்நாடகா கோகர்ணம் கோவிலில் மூலவர் ஆத்மலிங்கத்திற்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தான் அபிஷேக ஆராதனை நடக்கிறது என்கிற தகவல் சரியா?

(ஆதாரம்: தினத்தந்தி குடும்பமலர் ஆன்மீக பக்கம் 04.11.07)
//

ரத்னேஷ்,

அதெல்லாம் எனக்கு தெரியாது, நான் படித்த கதையில் சுவைக்காக இங்கு 'உப்பு' சேர்த்தேன். நீங்கள் சொல்லும் தகவல் சரியாகத்தான் இருக்கும்.

✪சிந்தாநதி சொன்னது…

திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இருக்குது. கோகர்ணேசுவரர் -பிரகதாம்பாள் கோவில்...அங்கேயும் இது போல ஒரு தலபுராணம் சொல்லக் கேட்டிருக்கிறேன். இராவணன் - சிவலிங்கம்...

http://www.pudukkottai.tn.nic.in/tst/tp-thirukokarnam.htm

ஜமாலன் சொன்னது…

கடல் நீர் உப்பானது இப்படித்தானா?

அப்ப அரபிக்கடல் கருங்கடல் பசீபிக் இப்படி பல பெயரில் உள்ள கடல்கள் எல்லாம் எப்படி? ஒருவேளை உலகெங்கிலும் ஒரே கடல் என்பதாலா?

புதிய தகவல்கள் கதையும் கூட எனக்க புதிதுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//✪சிந்தாநதி said...
திருக்கோகர்ணம் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இருக்குது. கோகர்ணேசுவரர் -பிரகதாம்பாள் கோவில்...அங்கேயும் இது போல ஒரு தலபுராணம் சொல்லக் கேட்டிருக்கிறேன். இராவணன் - சிவலிங்கம்...

http://www.pudukkottai.tn.nic.in/tst/tp-thirukokarnam.htm
//

சிந்தாநதி அவர்களே,

தகவலுக்கு நன்றி, என்னார் ஐயா கூட இதைத்தான் குறித்து கேட்டு இருக்கிறார் போல இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
கடல் நீர் உப்பானது இப்படித்தானா?

அப்ப அரபிக்கடல் கருங்கடல் பசீபிக் இப்படி பல பெயரில் உள்ள கடல்கள் எல்லாம் எப்படி? ஒருவேளை உலகெங்கிலும் ஒரே கடல் என்பதாலா?

புதிய தகவல்கள் கதையும் கூட எனக்க புதிதுதான்.
//

ஜமாலன் சார்,

எல்லாம் ஒரே நீரால் சூழப்பட்ட பரப்புதானே. இங்கே ஒரு கடல் தான் நமக்கு தெரிகிறது, இராவணன் வயிற்றிற்குள் சென்ற மற்ற 6 கடலும் ( பாற்கடல் மற்றம் 5 ) என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. பால்கடலும் உப்பாக ஆகி இருக்குமா என்பது அதில் பள்ளி கொண்டுள்ள கிருஷ்ணபகவானுக்குத்தான் தெரியும்.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்