பின்பற்றுபவர்கள்

6 நவம்பர், 2007

பாகிஸ்தான் நிலைமையும் அலறும் புஷ்சும்

தனது பொம்மை அரசாங்கத்தை அங்காங்கே நிறுவும் பெரியண்ணன் ஜார்ஜ் புஷ்சுக்கு தற்போதைய பாகிஸ்தான் நிலைமை கவலை அளித்துள்ளதாக தெரிகிறது. இல்லை என்றால் அவர் ஏன் முஷ்ராப்க்கு (மிரட்டல் விடும் தொனியில் ?) கோரிக்கை வைக்க வேண்டும் ? பாகிஸ்தான் பிரிந்ததில் இருந்தே தீவிரவாதிகளின் சிம்ம சொப்பனமாகவே இருந்துவருகிறது. பல்வேறு நாட்டில் இருந்து தீவிரவாதிகள் பயிற்ச்சி எடுக்கும் பல்கலைகழகமாகவே பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது. அதன் வரலாற்றில் இராணுவ ஆட்சியும், அடக்கு முறையும் எழுத்தப்படாத அரசியல் சாசனமாகவே இருந்துவருகிறது. பின்லேடன் முதல் மும்பையில் குண்டு வைத்த தாவூத் இப்ராகிம் வரை அங்கு கோலோச்சாத தீவிரவாதிகளே இருக்க முடியாது.

இந்திய காஷ்மிர் பகுதியில் உள்ள இஸ்லாமியர்களுக்கு கண்ணீர் விட்டுக் கொண்டே, ஆக்கிரமிப்பு காஷ்மிரில் முகாம் அமைத்து பயிற்சி கொடுத்து தீவிரவாதிகளை அனுப்பி அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு மறைமுக ஆதரவு கொடுத்து வந்திருக்கிறது. உச்சகட்டமாக ஆப்கான் போருக்கு முன்பு ஆப்கான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் முகாம் இட்டுக் கொண்டு போரின் போது தொலைக்காட்சி பேட்டியெல்லாம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

வழக்கமான தடாலடி ஆட்சிகவிழ்பு, சிறைபிடிப்பு போன்ற நடவடிக்கைகளின் மூலம் பிரதமர் நவாஸை தூக்கிவிட்டு தன்னை இராணுவ அதிபராக அறிவித்து கொண்டு இராணுவ ஆட்சி நடத்தி வந்தார் ஜனரல் முஸ்சாரப். தீவிரவாதிகளை ஆதரித்தால் அமெரிக்கா ஆப்கானில் தலிபான்களை கவனித்தது போல் தன்னையும் கவனித்துவிடுமோ என்று அமெரிக்காவிற்கு அடிபணிந்தார். அதன் மூலம் பாகிஸ்தானுக்கு நிதி உதவிகளையும் பெற்று வந்தார். பின்லேடனை தேடும் அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் ஒரு முக்கிய இடமாக இருந்ததால் அமெரிக்க நடமாட்டம் அங்கு அதிகரித்துவிட்டது. ஈராக் அதிபர் சதாம் உசேனின் மரண தண்டனைக்கு பின்பு அமெரிக்காவின் பாகிஸ்தான் தலையீடுகளை பாகிஸ்தான் பொதுமக்கள் ரசிக்கவில்லை. மேலும் புஷ் ஆதரவு நிலை எடுத்த முஸ்ராப்பை தீவிரவாதிகள் குறிவைக்க ஆரம்பித்துவிட்டனர். மசூதிகளில் தற்கொலை தாக்குதல், பொதுமக்கள் கூடும் இடங்களில் குண்டுவெடிப்புகள் பல நிகழ்ந்துவிட்டது. இதையெல்லாம் இந்திய சதி என்று வழக்கமாக் பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் சொல்வதை பாகிஸ்தான் பொதுமக்கள் நம்புவதற்கு தயயராக இல்லை.

மேலும் 8 வருடத்துக்கும் மேல் இராணுவ அதிகாரத்தில் பல்வேறு உரிமைகளை இழந்ததுவும், அடிக்கடி முஸ்ராப் அரசுக்கு எதிரான தீவிரவாதிகளின் வன்செயல் தற்கொலை தாக்குதல் ஆகியவை அரசு அலுவலர்களையும், பொதுமக்களையும் அச்சத்துக்கு ஆட்படுத்தி, முஸ்ரப்புக்கு எதிரான மனநிலைக்கு சென்று நீதிமன்றம் மூலம் ஜனநாயக ஆட்சிக்கு செல்ல முடியுமா ? என்று நினைத்து செயல்பட்டனர். இதனால் சற்று மனம் மாறிய முஸ்ரப் பொதுத்தேர்தலை நடத்தி முற்றுபுள்ளி வைக்க முயன்று ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு பொதுமன்னிப்பு எதிர்நோக்கும் முன்னால் பிரதமர் பெனாசீர் பாகிஸ்தானுக்குள் நுழைந்தும் நடவடிக்கை எதுவுமின்றி பார்த்துக் கொண்டார். இதன் மூலம் பெனாசீர் பிரதமரானாலும் அதிபராக தொடர்வது என்ற மூடில் இருந்தார். ஆனால் நிலைமை மோசமாகி தற்கொலை தாக்குதலில் பலர் உயிரிழந்தனர்.

முஸ்ரப் பதவி விலகுவதற்கான வாய்ப்பே இல்லை என்பதால் தற்போது வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்களின் வலுவான உள்நாட்டு கிளர்ச்சி நடை பெறுகிறது. முஸ்ரப் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் தகவல்கள் வந்தன. பாகிஸ்தானில் வன்செயல் மிகுந்து நிலைமை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்று விட்டது. இது நீடித்தால் பாகிஸ்தானில் உள்ள அனுகுண்டை தீவிரவாதிகள் கைப்பற்றி அமெரிக்காவை தாக்ககுவார்கள் என்று அதிபர் புஷ் எச்சரிக்கை அடைந்துவிட்டார், முஸ்ரப் பதவி விலகினால் தான் பொதுமக்கள் சமாதானம் அடைவார்கள். இல்லை என்றால் கலவரமும், குழப்பமும் நீடித்து அமெரிக்காவிற்கு பாதகமான நிலைமை ஏற்படும். இதனால் அதிபர் புஷ் தற்போது முஸ்ரப்பை உடனடியாக பதவிவிலகும் படி வழக்கமான் 'அன்போடு' கேட்டுக் கொண்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து அதிபர் முஸ்'ரப்' பதவி விலகப் போவதாக அறிவித்து இருக்கிறார். பாகிஸ்தானில் மக்கள் ஆட்சி அமையுமா ? அல்லது மறுபடியும் ஒரு பொம்மை அரசாங்கமாக அமையப் போகிறாதா ? தெரியவில்லை.

வரும் 2008 ஆம் ஆண்டிலாது பாகிஸ்தான் பொதுமக்களுக்கு விடிவுகாலம் பிறந்தால் நல்லது.

15 கருத்துகள்:

பனிமலர் சொன்னது…

பாக்கிட்த்தானில் அரசியல் குழப்பம் நிகழுவதனால் இந்தியாக்கு தான் அதிகம் பாதிப்புகள். தவிற இந்தியாவின் பெயரை சொல்லியே இத்தனை ஆண்டு காலம் பொழுதை போக்கியவர்கள் அமெரிக்காவும் எதிராக தாக்குதல் தொடுப்பதைவிட இந்தியாவை தாக்குவது தான் அவர்களுக்கு எளிதும் அதக பயண்னும் அளிப்பதாக இருக்கும். உண்மையில் அலர வேண்டியவர்கள் நாம், அமெரிக்கா அல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//பனிமலர் said...
பாக்கிட்த்தானில் அரசியல் குழப்பம் நிகழுவதனால் இந்தியாக்கு தான் அதிகம் பாதிப்புகள். தவிற இந்தியாவின் பெயரை சொல்லியே இத்தனை ஆண்டு காலம் பொழுதை போக்கியவர்கள் அமெரிக்காவும் எதிராக தாக்குதல் தொடுப்பதைவிட இந்தியாவை தாக்குவது தான் அவர்களுக்கு எளிதும் அதக பயண்னும் அளிப்பதாக இருக்கும். உண்மையில் அலர வேண்டியவர்கள் நாம், அமெரிக்கா அல்ல.
//

பனிமலர் அவர்களே,

அமெரிக்காவின் இரட்டை விரல்களை சிதைத்த அல்கொய்தாவிற்கு இந்தியா ஒரு பெரும் இலக்கே அல்ல. நம் நாட்டின் பாதுகாப்பு குளறுபடிகளுக்கும், கைக்கூலிகளுக்கும் பஞ்சமே இல்லை. கைகூலிகள் சிக்கினாலும் அவர்களை ஜாமின் எடுக்கவும், உத்தமர் என்ற பெயருடன் வெளியே கொண்டுவர வக்கில்கள் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் இந்தியாவில் தினந்தோறும் வெடிகுண்டு திருவிழாவே நடத்திவிடுவார்கள். எனவே அனுகுண்டு அல்கொய்தாவிடம் சென்றால் அச்சுறுத்தல் தனக்கே என்று தான் அமெரிக்க பயப்படுகிறது.

இந்தியாவை நான் குறைத்து மதிப்பீடவில்லை. எதையும் செய்யத்துணியும் பாதகர்கள் உள்ளேயும் இருக்கிறார்கள்.

பனிமலர் சொன்னது…

உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை, ஆப்கானித்தானில் 3 மாவட்டங்களை தாலிபான் சுற்றி வளைத்து முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டுகுள் கொண்டுவந்துவிட்டது. இது பாக்கிட்த்தானிலும் பரவ வெகு நாட்க்கள் பிடிக்கது. அப்படி பிடிக்கும் கால் பாக்கிட்த்தானிடம் உள்ள அணு ஆயுதம் என்னவாகும் என்ற கவலையில் அமெரிக்க அதிபர் கவலை தெரிவித்துள்ளார். முன்னர் ஆப்கானித்தானில் இராணுவ நடவடிக்கைகளை தொடுக்கும் முன் இசுரேலுடன் சேர்ந்து பாக்கிட்த்தானில் ஒரு போர் ஒத்திகை மேற்கொண்டது. அந்த ஒத்திகையில் ஒரு கால் நாடு தீவிரவாதிகளின் கையில் அகப்படுமானால் அணு ஆயுதங்களை எப்படி கைப்பற்றுவது என்ற ஒத்திகை.

இந்தியாவின் தரப்பில் எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அரசாங்கமே கூடு ஒரு குண்டை தொடுத்துவிட்டு தீவிரவாதிகளின் பெயரை பயண்ப்டுத்தினாலும் ஆச் சரியபடுவத்ற்கு இல்லை. அதை தான் குறிபிட்டேன்.

bala சொன்னது…

ஜிகே அய்யா,

எனக்கென்னவோ தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கோயமுத்தூர்காரர்கள் தான் இன்னும் கவலையோட, உஷாரா இருக்கணும்னு தோணுது.மதானி/பாஷா கும்பல் இங்க தான் மும்முரமா இருக்காங்க.புதுவை சுகுமாரன் அய்யாக்கு கூட கோயமுத்தூர் மக்கள் மீது என்னத்துக்கு கோபம் என்று தெரியவில்லை.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
ஜிகே அய்யா,

எனக்கென்னவோ தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கோயமுத்தூர்காரர்கள் தான் இன்னும் கவலையோட, உஷாரா இருக்கணும்னு தோணுது.மதானி/பாஷா கும்பல் இங்க தான் மும்முரமா இருக்காங்க.புதுவை சுகுமாரன் அய்யாக்கு கூட கோயமுத்தூர் மக்கள் மீது என்னத்துக்கு கோபம் என்று தெரியவில்லை.

பாலா
//

பாலா ஐயா,

எனக்கென்னமோ மோடி கும்பலுக்குத்தான் இந்தியாவில் வயித்தை கலக்கும் னு தோணுது, காண்டெக்ட் இருந்த பதுங்கி இருக்கச் சொல்லுங்க. படுபாவிங்க கோர்டு வளாகத்தில் சொன்னார்களாம் 'ஸ்ரீமான் மோடி ஐயாவை போட்டுத்தள்ளிட்டு வர்ர்ரோம் ஒரே ஒரு நாள் டைம் கொடுங்க என்று கேட்டார்களாம்

bala சொன்னது…

//அரசாங்கமே கூடு ஒரு குண்டை தொடுத்துவிட்டு தீவிரவாதிகளின் பெயரை பயண்ப்டுத்தினாலும் ஆச் சரியபடுவத்ற்கு இல்லை. அதை தான் குறிபிட்டேன்.//

பனிமலர் அம்மா,
காங்கிரஸ்/மஞ்ச துண்டு/மரம்வெட்டி கூட்டணி ஒரு கேவலமான கும்பல் தான்.ஆனா அதுக்காக இந்த அளவுக்கு போவாங்கன்னு நீங்க சொல்றது ஓவர்.ஏற்க முடியாது.

பாலா

PS
ஜிகே அய்யா,
என்ன ரேஷன்/கோடாவை மீறி ரெண்டு வந்துருக்குன்னு பாக்கறீங்களா?

கோவி.கண்ணன் சொன்னது…

bala said...

பனிமலர் அம்மா,
காங்கிரஸ்/மஞ்ச துண்டு/மரம்வெட்டி கூட்டணி ஒரு கேவலமான கும்பல் தான்.ஆனா அதுக்காக இந்த அளவுக்கு போவாங்கன்னு நீங்க சொல்றது ஓவர்.ஏற்க முடியாது.

பாலா
//

அவசர குடுக்கை பாலா ஐயா,

பனிமலர் சொல்லி இருப்பது பாகிஸ்தான் அரசாங்காத்தை, வயசாயிடுச்சா கண்ணாடி போட்டுக் கொள்ளுங்க, அப்பறம் நீங்க அக்மார்க் இந்து என்பது பலருக்கும் தெரியும். 'பாலா' என்பது இந்து பெயரில் எடுத்த அவதாரமா ? இதுவும் பெண்பெயர் தானா ? இல்லை ஆண் பெயரா ?

bala சொன்னது…

///பனிமலர் சொல்லி இருப்பது பாகிஸ்தான் அரசாங்காத்தை//

ஜிகே அய்யா,
சரியான உளறல்.பாகிஸ்தானில் அரசாங்கம்னு ஒண்ணு என்னிக்கும் இருந்தது கிடையாது.இருப்பது/இருந்தது எல்லாம் ஆர்மி தான்.ஆர்மி கூட தீவிரவாத தாடிக்கார கும்பலை(நம்ம ஊர் கருப்பு சட்டை கும்பல சொல்லவில்லை) சேர்ந்தவங்க தான்.இப்பகூட தீவிரவாதகும்பல் கிட்ட தான் குண்டு இருக்கு,சிவிலியன் ஆளுங்க கிட்ட கிடையாது.

பாலா

அதுசரி, நான் அக்மார்க் இந்து.நீங்க ஏன் உங்களை லோ கிரேட் ஆசாமி என்று நொந்து கொள்றீங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...

அதுசரி, நான் அக்மார்க் இந்து.நீங்க ஏன் உங்களை லோ கிரேட் ஆசாமி என்று நொந்து கொள்றீங்க?
//

அது இல்லிங்க பாலா ஐயா,
நீங்க தானே அக்மார்க் (8 ஆம் நம்பர் ) முத்திரை மாட்டி வச்சிருக்கிற ஒரிஜினல் இந்து. 8 ஆம் நம்பர் நல்ல கிரேட் இல்லையா ?

பனிமலர் சொன்னது…

எனது சார்பாக பாலாவிற்கு பதிலுரைத்தமைக்கு நன்றி கோவி.கண்ணன். மேலும் இந்தியா பாதித்தால் அமெரிக்காவின் முன்னனி வியாபாரங்கள் 60% சதவிகிதம் பாதிகக்கூடும். இப்போதைக்கு இந்தியா அமைதியாக இருக்க வேண்டியது அமெரிக்க முதலாளிகளின் அத்தியா அவசிய தேவை. அதனால் கார்கில் போது அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்ததை போல் இப்போதும் அவர்களால் இருக்கமுடியாது என்றாலும், நாம் பதட்ட படாமல் இருப்பதற்கு இல்லை. ஐரோப்பிய ஒன்றியமும், இன்ன பிற நாடுகளும் அழுத்தங்களை தொடுத்துள்ளது. அமைதி திரும்பும் என்று நம்புவோமாக.

bala சொன்னது…

//எனக்கென்னமோ மோடி கும்பலுக்குத்தான் இந்தியாவில் வயித்தை கலக்கும் னு தோணுது//

ஜிகே அய்யா,

தப்பா சொல்லியிருக்கீங்க.தமிழ் நாட்டு அளவுல கோயமுத்துர் என்று சொன்னேனே தவிர இந்திய அளவுல அல்ல.மேலும்,இந்திய அளவுல மும்பை காரங்க தான் ஜாக்கிரதையா இருக்கணும்.குஜராத் அல்ல.எதுக்குன்னா,அயோத்யாவில அயோக்யத்தனம் நடந்தாலோ,குஜராத்ல நடந்தாலோ மும்பைல தான் கை வைப்பாங்க நம்ம தாடிக்கார தீவிரவாதிகள்;அதுபோல் தமிழ்நாட்ல கோயமுத்தூர்.நீங்க சொல்ற கருத்தை ஏற்க்க முடியாது.

பாலா

bala சொன்னது…

//நல்ல கிரேட் இல்லையா//

ஜிகே அய்யா,

நீங்க ஏன் லோ கிரேட் ஆசாமியா இருக்கீங்க என்ற கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே.முயற்சி செய்ங்க.நல்ல கிரேட் மனுஷனா உங்களால வரமுடியும்.நம்பிக்கையோட செயல் படுங்க.நல்லவனா மாறுங்க.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...

ஜிகே அய்யா,

நீங்க ஏன் லோ கிரேட் ஆசாமியா இருக்கீங்க என்ற கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே.முயற்சி செய்ங்க.நல்ல கிரேட் மனுஷனா உங்களால வரமுடியும்.நம்பிக்கையோட செயல் படுங்க.நல்லவனா மாறுங்க.

பாலா
//

பாலா ஐயா,

நான் லோக்கல் கிரேடு ஆசாமி. அது போதும். நீங்க தான் 8 ஆம் நம்பர் கிரேடு. நான் கேட்டதுக்கு பதில் வரலையே 8 ஆம் நம்பர் தரமான கிரேடு இல்லையா ?. காதி கிராப்டுக்கு முன்னால் போராட்டம் நடத்திடுவோம். உங்களுக்காக எறங்குகிறேன் களத்தில்.

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
ஜிகே அய்யா,

தப்பா சொல்லியிருக்கீங்க.தமிழ் நாட்டு அளவுல கோயமுத்துர் என்று சொன்னேனே தவிர இந்திய அளவுல அல்ல.மேலும்,இந்திய அளவுல மும்பை காரங்க தான் ஜாக்கிரதையா இருக்கணும்.குஜராத் அல்ல.எதுக்குன்னா,அயோத்யாவில அயோக்யத்தனம் நடந்தாலோ,குஜராத்ல நடந்தாலோ மும்பைல தான் கை வைப்பாங்க நம்ம தாடிக்கார தீவிரவாதிகள்;அதுபோல் தமிழ்நாட்ல கோயமுத்தூர்.நீங்க சொல்ற கருத்தை ஏற்க்க முடியாது.

பாலா
//

பாலா ஐயா,

ரொம்பவே பயந்து போனமாதிரி தெரியுது. குல்லா போட்டுக்கொண்டு சின்னப் பையனைப் பார்த்தாலும் வயுத்துப் போக்கு வந்திடப் போவுது ஐயா. மாத்திரை வாங்கி வச்சிகோங்க

சீனு சொன்னது…

//பாக்கிட்த்தானில் அரசியல் குழப்பம் நிகழுவதனால் இந்தியாக்கு தான் அதிகம் பாதிப்புகள்.//

அட! இதை பற்றின என் பதிவு.

http://jeeno.blogspot.com/2007/10/vs-6060.html

//எனக்கென்னவோ தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் கோயமுத்தூர்காரர்கள் தான் இன்னும் கவலையோட, உஷாரா இருக்கணும்னு தோணுது.மதானி/பாஷா கும்பல் இங்க தான் மும்முரமா இருக்காங்க.//

அதான் மதானியை கோர்ட்டே விடுதலை பன்னிடுச்சே. மேலும் அவர் அரசியல்வாதியாத்தான் போவார் என்றும் சொல்லியிருக்கார். அதனால அவர ஆட்டைக்கு இழுக்காதீங்க பாபா...:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்