பின்பற்றுபவர்கள்

1 நவம்பர், 2007

தேவநேயப் பாவாணருக்கு மதுரையில் மணி மண்டபம் !

சிலருக்கு சிலர் பெயரை கேட்டால் சிலிர்க்கும், அது கடவுள், தனிமனித பெயர், தலைவர், நடிகர் பெயராகக் கூட இருக்கும், சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள பெரிய நூலகத்தின் பெயர் என்று மட்டுமே தேவநேய பாவாணர் குறித்து அறிந்த நான் ஒரு மூன்று ஆண்டுகளாக ஓரளவுக்கு தேவநேய பாவாணர் எழுதிய தமிழார்ந்த ஆராய்ச்சிக் நூல்களையும், அவரைப்பற்றியும் படித்திருக்கிறேன். அதன் பிறகு எங்காவது பாவாணர் குறித்த செய்தியை படித்தாலே சிலிர்க்கிறது.

**********
தேவநேயப் பாவாணர் மணி மண்டபம்-கருணாநிதி திறந்து வைத்தார்
மதுரை: மதுரையில், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் மணி மண்டபத்தை முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

தமிழுக்காகவே வாழ்ந்தவர் தேவநேய பாவாணர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற கொள்கையில் பிடிப்புடன் விளங்கியவர்.

அவருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் நெடு நாள் கோரிக்கை. அதை ஏற்ற முதல்வர் கருணாநிதி, மதுரை அண்ணா நகர் சாத்தமங்கலத்தில், 80 சென்ட் பரப்பளவில், ரூ. 40 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டார்.

அதன்படி சாத்தமங்கலத்தில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் மணிமண்டபம் எழிலுடன் கட்டப்பட்டுள்ளது. மணிமண்டப வளாகத்திற்குள் தேவநேயப் பாவாணரின் 8 அடி உயர வெண்கல சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

மணிமண்டபத்தில் பாவாணரின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்கள், புகைப்படங்கள், நூல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இந்த மணிமண்டபத்தை முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார். பின்னர் பாவாணர் சிலைக்கு மாலையும் அணிவித்தார்.

பின்னர் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வருகைப் பதிவேட்டில், தமிழாக இனிக்குது இந்த மணி மண்டபம் என்று எழுதி கையெழுத்திட்டார்.

மணிமண்டபத்தை பராமரிக்கும் பொறுப்பை பாவாணரின் பேத்தி பரிபூரணத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பரிபூரணத்திடம் கருணாநிதி வழங்கினார். மேலும் பரிபூரனத்திற்கு அரசு உதவியாளர் பணிக்கான நியமன உத்தரவையும் முதல்வர் வழங்கினார்.


படமும் செய்தியும் : தட்ஸ் தமிழ் - நன்றி

மணிமண்டபம் அமைத்து பாவாணர் பெருமை போற்றும் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டுக்கள் !

8 கருத்துகள்:

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

இந்தச் செய்தியை நேற்று பார்த்த போது உங்க ஞாபகம் தான் வந்தது. எங்க ஊர்ப்பக்கத்துல தான். அடுத்த மாதம் மதுரை செல்கிறேன். கட்டாயம் போய்ப் பார்ப்பேன். (லைலாவைப் பார்க்கும் போது மஜ்னுவின் கண் கொண்டு பார்க்க வேண்டும் என்பார்கள்). அந்த மணி மண்டபத்தை உங்கள் கண் கொண்டு பார்க்க முயன்று புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//லைலாவைப் பார்க்கும் போது மஜ்னுவின் கண் கொண்டு பார்க்க வேண்டும் என்பார்கள்//

ரத்னேஷ்,

லைலாவை அப்படி பார்க்க மஜ்னுவுக்குத்தான் உரிமை உண்டு.
அடுத்தவர் மனைவியை / காதலியை சைட் அடிப்பவர்கள் அடுத்த பிறவியில் காக்காவாக பிறப்பார்களாம்.
:)

//அந்த மணி மண்டபத்தை உங்கள் கண் கொண்டு பார்க்க முயன்று புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வைக்கிறேன்.
//

மிக்க நன்றி ! புகைப்படங்கள் வரும் பொழுது அதை வைத்து தனி பதிவு போட்டுவிட்டு உங்களுக்கு நன்றி சொல்லிவிடுகிறேன். மிக்க மகிழ்ச்சி !

RATHNESH சொன்னது…

// லைலாவை அப்படி பார்க்க மஜ்னுவுக்குத்தான் உரிமை உண்டு.
அடுத்தவர் மனைவியை / காதலியை சைட் அடிப்பவர்கள் அடுத்த பிறவியில் காக்காவாக பிறப்பார்களாம்.//

அப்படி என்றால் மனித இனமே அழிந்து காக்கைக்கூட்டம் தான் மிஞ்சி இருக்கும். (காக்கை இனத்தில் என்ன சாபம் இருக்கிறதோ தெரியவில்லை மனித இனத்தில் பிறந்து எண்ணிக்கையை BALANCE செய்ய).

அந்த சாபத்துக்கு என்ன பின்னணிக் கதை இருக்கிறது என்று தெரியாது; ஆனால் காக்கைக்கு இரண்டு கண் ஒரு விழி; அது ஏன் என்று தெரியுமல்லவா?

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...

அப்படி என்றால் மனித இனமே அழிந்து காக்கைக்கூட்டம் தான் மிஞ்சி இருக்கும். (காக்கை இனத்தில் என்ன சாபம் இருக்கிறதோ தெரியவில்லை மனித இனத்தில் பிறந்து எண்ணிக்கையை BALANCE செய்ய).//

ரத்னேஷ்,

உங்களை கலாய்பதற்காக சொன்னேன். :)


//அந்த சாபத்துக்கு என்ன பின்னணிக் கதை இருக்கிறது என்று தெரியாது; ஆனால் காக்கைக்கு இரண்டு கண் ஒரு விழி; அது ஏன் என்று தெரியுமல்லவா?
//

பின்னனி கதை தெரியாது, ஒரு விழியா ? காக்கை தலையை திருப்பி திருப்பி பார்பதற்கு இதுதான் காரணமா ? ஏன் என்று தெரியாது. சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

குமரன் (Kumaran) சொன்னது…

ஹையா. தேவநேயப் பாவாணருக்கு எங்க ஊருல மணிமண்டபமா? அடுத்த முறை போகும் போது சென்று பார்த்துவிட வேண்டியது தான். தகவலுக்கு நன்றி கோவி.கண்ணன்.

எனக்கு தேவநேயப் பாவாணரின் பெயர் பல காலமாகத் தெரிந்திருந்தாலும் அவருடைய் நூற்களை அண்மைக் காலம் வரை படித்ததில்லை. தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் இருக்கும் நூலகத்தில் பாவாணரின் திருக்குறள் உரையைக் கண்டேன். அது தான் நான் படிக்கும் பாவாணரின் முதல் நூல். 'இன்பத்துப்பால்' பதிவிற்கு அவருடைய உரையையும் உசாவிக் கொள்கிறேன்.

இரத்னேஷ். உங்கள் ஊர் எது? மதுரையா? மதுரைப்பக்கமா?

இப்போது நீங்கள் அஸ்ஸாமில் இருப்பதாக அறிகிறேன். தீபாவளிக்காக ஊருக்குச் செல்கிறீர்களா? பயணம் எத்தனை நாள்/எத்தனை மணி நேரம்?

ஜெகதீசன் சொன்னது…

கலைஞருக்கு நன்றி!!!


//
பின்னனி கதை தெரியாது, ஒரு விழியா ? காக்கை தலையை திருப்பி திருப்பி பார்பதற்கு இதுதான் காரணமா ? ஏன் என்று தெரியாது. சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.
//
இதுக்குக் காரணம் ஸ்ரீராமர் தானாம்..
லக்கி பதிவுல அனானி ஒருத்தர் சொல்லிருக்கார்.. :)
Crow lost 1 eye because in Ramayana, a asuran in form of crow attacks Sita and pecks her.

On seeing seetha's distress, rama pulls a darbai grass and empowering it with mantras like a brahma asthram,unleashes it on the crow. the crow flies all over the world but the arrow of rama keeps chasing it.Finally, the crow surrenders to Lord Rama and asks him to protect it!!!
Since,the LORD protects everyone who does saranagathi(complete surrender without a trace of ego) to him, rama assured the corw of protection but told it that brahma's astram and Rama's arrow cannot go waste.So, the crow asked for one eye to be destroyed and hence lost the eye.
this was recounted by Sitha to Hanuman as a token of remembrance when he met her in ashoka vanam

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

தங்களுக்கான விளக்கத்தை ஜெகதீசன் தந்து விட்டார்.

ஜெகதீசன், உங்கள் கதையில் இரண்டு திருத்தம்:
அந்தப் பார்ட்டி அசுரன் அல்ல, இந்திரனின் மகன் ஜெயந்தன். அவன் செய்த காரியம், காக்கை வடிவெடுத்து சீதையின் மார்பினைத் தன் விரல்களால் நிமிண்டியது. (அப்பன் புத்தி மாறாமல் பிறந்திருக்கிறான் பாருங்கள்). அதன்பின் நடந்தவைகளைத் தாங்களே எழுதி விட்டீர்கள்.

குமரன், மதுரை மேலமாசிவீதியில் சுவீட்லாண்ட் என்றொரு ஓட்டல் இருந்தது. அதன் எதிரே உள்ள தெருவில் இருந்து வீதிக்கு ஓடி வந்து குச்சி ஐஸ் வாங்கிச் சூப்பியபடி ஊர்வலமாக வரும் யானைகள், ஒட்டகங்கள், (வேறு ஊர் திருவிழாக்களில் ஒட்டகங்கள் வருகின்றனவா?) தொடர்ந்து வரும் பிரம்மாண்டத் தேர்கள் என்று சித்திரைத் திருவிழாவின் ஒவ்வொரு கட்டத்தையும் அனுபவித்து ரசித்து வளர்ந்த ஆரம்பப் பள்ளிப் பருவத்திற்குச் சொந்தக்காரன் நான். இன்றும் தொடர்பு தொடர்வதால் தான், தாங்கள் சம்பந்தப்பட்ட பதிவு ஒன்றின் பின்னூட்டத்தில் 'விபச்சர வழக்கில் கள்ளழகரைக் கைது செய்' என்று இன்னும் போஸ்டர் ஒட்டும் மதுரையின் நாயகர், துலுக்க நாச்சியார் பற்றித் தெரியாமலிருப்பது சாத்தியமில்லையே என்கிற பொருள்பட எழுதியிருந்தேன்.

ஜெகதீசன் சொன்னது…

ரத்னேஷ் அவர்களே,
விளக்கத்திற்கு நன்றி..
எனக்கு அந்தக் கதை பற்றி எதுவும் தெரியாது.. லக்கிலுக்கின் பதிவில் அனானி ஒருவர் சொல்லியிருந்ததை அப்படியே copy+past செய்தேன்...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்