பின்பற்றுபவர்கள்

31 அக்டோபர், 2007

தேவர் ஜெயந்தி ! - தமிழக அரசின் அரசு விழாவா ?

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போல மதுரைக்கு தெற்கே ஆண்டுதோறும் தேவர் ஜெயந்தி என்ற பெயரில் முத்துராமலிங்க தேவருக்கு விழா எடுக்கிறார்கள். அதற்கு ஆயிரக்கனக்கான போலிஸ் பாதுகாப்பு, இது கடந்த 15 - 20 ஆண்டுகளாக புதிதாக புகுத்தப்பட்டு நடைபெறும் ஒரு சாதி சார்ந்த விழா. முத்துராமலிங்க தேவர் ஒரு சாதி சார்ந்த சமூகத்தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டவர். அவருடைய சமூகம் அவருக்கு விழா எடுக்கிறது, அதைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஆனால் அந்த கூ(ட்ட)த்தின் கைவரிசையில் மதுரையில் இருந்த அம்பேத்கார் சிலை உடைபெற்றிருக்கிறது. தேவர் ஒரு மாநிலத்திற்குள், ஒரு சாதிக்குள் தன்னை குறுக்கிக் கொண்டவர். தேவரை எந்த வகையிலும் ஒப்பிட முடியாத அளவுக்கு உயர்வு பெற்றவர் அம்பேத்கார், மேலும் அவர் ஒரு தேசிய தலைவர். தேவரை போற்றுபவர் தேவரை மட்டும் போற்ற வேண்டியதுதானே. எதற்கு அம்பேத்கார் சிலைமீது கை வைத்து ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் ?

அங்கு நடைபெறும் தேவர் விழா என்பது வெள்ளிடை மலையாக ஒரு குறிப்பிட்ட சாதி விழா என்றே தெரிகிறது, ஓட்டு வங்கி குத்தகையை தக்கவைத்துக் கொள்ள ஆண்டுக்கு ஒருமுறை கையெழுத்துப் போட்டு செல்ல அரசியல் வாதிகள் குறிப்பாக ஜெ, கருணாநிதி போன்றோர் படையெடுத்துச் செல்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு இந்த விழா விளம்பரப்படுத்தப்படுவதையும், அதற்கு முதன்மைத்துவம் கொடுத்து செய்திதுறைகள் கூட படங்களை வெளி இடுவதைப் பார்க்கும் போது தென் மாநில, தமிழக சாதி அரசியலும், சாதி வெறிகளும் ஒழிப்பதற்கு இந்த நூற்றாண்டிற்கு வாய்ப்பு கிடைப்பது போல் தெரியவில்லை.

பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலங்கள் அவலங்களுக்கு காரணமே உயர்சாதி நினைப்பில் முத்துராமலிங்க தேவரின் சமூகம் தலித்துகளுக்கு எதிராக செய்யும் அடக்குமுறைதான். அந்த ஊரில் குறிப்பிட்ட அந்த சமூகத்திடம் பேசி தேர்தலை நடத்த துப்பு இல்லாத அரசியல்வாதிகள் தேவர் ஜெயந்திக்கு சென்று மாலை அணிவித்து வருவதைப் பார்க்கும் தலித் பெருமக்களை அரசியல்வாதிகளும் ஒதுக்கித் தள்ளுவதாகத்தான் நினைக்க முடிகிறது. சாதியால் அடையாளப்படுத்தப்பட்டு முழுக்க முழுக்க சாதி விழாவாகவே நடைபெறும் விழாக்களுக்கு முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் சென்று வருவதைப் பார்க்கும் தமிழகத்தின் ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைக்காதா ? என்று நினைக்கத்தான் செய்யும். தங்கள் சாதியையும் முன்னிலை படுத்தவேண்டும் என்று அனைத்து தமிழர்களும் நினைக்க ஆரம்பித்துவிடுவர். தீண்டாமை ஓரளவு குறைந்திருக்கிறது, ஆனாலும் சாதி வெறி வளர்ந்தால் மக்கள் தீவு கூட்டங்களாக மாறிப் போய்விடுவர்.

இஸ்லாமியர் கடைகளில் பொருட்களை வாங்காதே என்று இந்துத்துவ வாதிகள் நல்வழி(?) காட்டுவதைப் போலவே அடுத்த சாதிகாரர்களிடம் வியாபாரம் செய்யவோ, வாங்கவோ கூடாது என்ற மனநிலைக்கு சாதி வெறி இட்டுச் செல்லும். இன்றைய தேதியில் சாதியை வளர்க்க மறைமுகமாக பாடுபடுவது அரசியல்வாதிகள் தான். முதல்வர் பதவிக்கு அனைத்து சாதி/மத பெருமக்களும் தான் வாக்கு அளித்து இருக்கின்றனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதியை சேர்ந்தவராக இருக்கின்றனர், வாஉசி...திருப்பூர் குமரன்.. போன்று பட்டியல் எழுதி மாளாது.... இவர்கள் இன்னின்ன சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டு நாள்தோறும் ஒரு சாதி தம் தலைவருக்கு ஜெயந்தி விழா எடுத்தால் ஜெ, மற்றும் கருணாநிதி சென்று வருவார்களா ? நிச்சயம் முடியாது. தேவர் ஜெயந்தி விழாவுக்கு இவர்கள் சென்று வருவதன் மூலம் குறிப்பிட்ட சாதி(வெறி)யை வளர்க்க இவர்களும் சேர்ந்தே பாடுபடுகிறார்கள் என்று தான் நினைக்க முடிகிறது. எந்த கட்சித்தலைவர் அந்த சாதிக்கு நெருக்கமானவர் என்று காட்டிக் கொள்ள நடக்கும் 'போட்டோ' போட்டி போலவும் தெரிகிறது.

அனைத்து சாதிப்பிரிவினருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புள்ள முதல்வர் பதவி வகித்தவர்கள், வகிப்பவர்கள் சாதி விழாக்களுக்கு சென்று வருவது முதல்வர் பதவிக்கே இழுக்கானது.

சாதிவிழாக்கள் நடத்துபவர்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. அது அந்தந்த சாதியினர் விருப்பம். பொறுப்புள்ள முதல்வர்கள் இதெற்கெல்லாம் சென்று வரலாமா ?

52 கருத்துகள்:

ஜோ/Joe சொன்னது…

வழிமொழிகிறேன்

TBCD சொன்னது…

athaavuthungka..poRuppuLLa muthalvaree innum varavillaingkoo....avar mothalla varaddum appaRamaa inththa keeLviyak keedkalaam...kaamaraasarukku pin, saathiya arasiyalai manathil koLLaamal, aadsi seyya innum oruththar varavillai enpathu en karuththu...thaa.kiruddinanin kolaiyaal, pazuthuppadda akamudaiyaar ooddu vangkiyayai kuRi vaiththu thaan muu.ka pookiRaar. ivar periyaarin paLLiyilee paadam kaRRaaraam...sariyaaka sollith tharavillai enRu periyaarai solvathaa...illai...sariyaana vaaththiyaar kidaiththum theervil veRRi peRaatha makku piLLai enRu mu.kavais solluvathaa...ammaiyaarum ithil vithi vilakku illai...avar aadsikku varum mun senRaar...pin aadsikku vanththathum sellavillai..ippozuthu thooRRathin kaaraNam ithuvum irukkum enRu eNNi..ippoothu selkiRaar. kodumaiyin ussam thirumaavaLavan poonRaar ithukku selvathu thaan....arasiyal saakkadai saathi viththiyaasaththai thuuNdavum seyyum maRakkavum seyyum poolum...

sasi சொன்னது…

நல்ல பதிவு,இவர்கள் திருந்தபோவதில்லை சாதி அரசியல் தான் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்

ஜெகதீசன் சொன்னது…

கோவி.கண்ணன் அவர்களே,
நல்ல, தேவையான பதிவு...
எல்லாம் ஓட்டு வங்கி அரசியல்....
:(

Darren சொன்னது…

//அனைத்து சாதிப்பிரிவினருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய பொறுப்புள்ள முதல்வர் பதவி வகித்தவர்கள், வகிப்பவர்கள் சாதி விழாக்களுக்கு சென்று வருவது முதல்வர் பதவிக்கே இழுக்கானது//

YES

ஜெகதீசன் சொன்னது…

யப்பா ராசா டிபிசிடி..... எ-கலப்பை என்ன ஆச்சு?
தலை வலிக்கிறது கமெண்ட்டைப் படிச்சு முடிக்க முன்னாடி...
:)

TBCD சொன்னது…

சிரமத்திற்கு மன்னிக்கவும்.... :))))

அதாவுதுங்க..பொறுப்புள்ள முதல்வரே இன்னும் வரவில்லைங்கோ....அவர் மொதல்ல வரட்டும் அப்பறமா இந்த கேள்வியக் கேட்கலாம்...காமராசருக்கு பின், சாதிய அரசியலை மனதில் கொள்ளாமல், ஆட்சி செய்ய இன்னும் ஒருத்தர் வரவில்லை என்பது என் கருத்து...தா.கிருட்டினனின் கொலையால், பழுதுப்பட்ட அகமுடையார் ஓட்டு வங்கியயை குறி வைத்து தான் மூ.க போகிறார். இவர் பெரியாரின் பள்ளியிலே பாடம் கற்றாராம்...சரியாக சொல்லித் தரவில்லை என்று பெரியாரை சொல்வதா...இல்லை...சரியான வாத்தியார் கிடைத்தும் தேர்வில் வெற்றி பெறாத மக்கு பிள்ளை என்று மு.கவைச் சொல்லுவதா...அம்மையாரும் இதில் விதி விலக்கு இல்லை...அவர் ஆட்சிக்கு வரும் முன் சென்றார்...பின் ஆட்சிக்கு வந்ததும் செல்லவில்லை..இப்பொழுது தோற்றதின் காரணம் இதுவும் இருக்கும் என்று எண்ணி..இப்போது செல்கிறார். கொடுமையின் உச்சம் திருமாவளவன் போன்றார் இதுக்கு செல்வது தான்....அரசியல் சாக்கடை சாதி வித்தியாசத்தை தூண்டவும் செய்யும் மறக்கவும் செய்யும் போலும்...

உதயதேவன் சொன்னது…

அன்பு நண்பனுக்கு,
ஏன் இந்த ஜாதி வெறி உனக்கு...
நீயும் இனவெறி உள்ளவன் என்பதை மட்டுமல்ல...
இந்திய விடுதலையின் வேர்களை அல்ல அதன் இலைகளைக்கூட அறியாத சிறுவன் நீ என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்..
முடிந்தால் சிங்கபூரில் சிறப்பான நூலகங்களில் இந்தியவிடுதலை குறிப்புகள் இருந்தால் தேடி படி.. அல்லது சென்னை வந்து கன்னிமாரா நூலகம் சென்று -- THE HISTORY OF THIRUNELVLY DIST மற்றும் பல சரித்திர சான்றுகளை படி.. வெள்ளையனுக்கு எதிரான முதல் புரட்சி முதல் கடைசி வரை பெரும் பங்களிப்பு செய்த ஒரு மாபெரும் இன மக்களையும் அதன் வழித் தோன்றல்களையும்.. இரண்டாம் உலகப்போரில் --- முதல் சுதந்திர இந்தியாவாக பிரகடனம் செய்தது.. நீ இப்போது இருக்கும் சிஙப்பூரில் தான் என்பதாவது உனக்கு தெரியுமா.. கேட்டுப்பெருவதல்ல போராடிப்பெருவது தான் என்ற வீர முழக்கம் யார் செய்தார் தெரியுமா..காமராஜர் என்ற ஒரு எளிமையான அரசியல் வாதிக்கு ஒட்டுரிமை பெற்றுத்தந்து.. தேர்தலின் போது ..அவரை வெற்றி பெறசெய்து..உயிருக்கு வந்த அச்சுருத்தலில் இருந்து பதுகாத்து,காமரசு மீது துரும்பு பட்டடாலும் அதற்க்கு காரணமானவர்கள் இரும்பு கசமற்று வெளியே வர முடியாது என்றவர், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தாழ்தப்பட்டவர்களாக கருதப்பட்டவர்களை பிரவேசிக்க வைத்து.. தன் சொத்துக்கள் அனைத்தையும் தாழ்தப்பட்டவர்களுகே பிரித்துக் கொடுத்து..தன் வாழ் நாளெல்லாம் எளிமையும்,துனிவும், நாட்டுப்பற்றும், பிரிட்டிஷ்சாரல் வாய்பூட்டுச்சட்டம் கொண்டுவரும் அள்ள்விற்கு விடுதலை வேழ்வித்தீமூட்டியவர்.. தென்னகத்தின் நேதாஜி... இன்னும் எவ்வளவோ சொல்ல இருக்கு.. பாவம்.. நேதஜியையும்... தேவரையும் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் மறைக்க முயன்று முடியாமல் ஒத்துக்கொண்டவர்கள் தானே.. உங்களுக்கு எவ்வளுவு சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதி சங்கு தானே... ஆகவே தமிழர்களை நினைத்து வேதனைப் படுகிறேன்,...தழிழுக்காக தமிழர்களுக்காக வாழ்ந்த... வாழும்.. ஒரு தமிழனாய்.. பாரதி நீ மீண்டு வா மறவர் பாட்டுப்பாட.... மட மானிடர் ஜாதி வெறியை போக்க... ஜெய் கிந்த்...

கோவி.கண்ணன் சொன்னது…

//உதயதேவன் said...
அன்பு நண்பனுக்கு,
ஏன் இந்த ஜாதி வெறி உனக்கு...
//

உதய'தேவரே...பெயரில் சாதியை வைத்துக் கொண்டு சாதிவெறி பற்றி சொல்கிறீர்கள். நல்லது !

தேவருக்கு விழா எடுப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை ஐயா...ஓட்டுப் பொறுக்கி அரசியலைப்பற்றியும் அந்த விழாவை மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றுதான் எழுதி இருக்கிறேன்.

தேவரை வேறுகோணத்திலும் சொல்கிறார்கள் படிக்க பொறுமை இருந்தால் பார்க்கவும் ... பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ...

நந்தா சொன்னது…

இன்னிக்குக் காலையில வீட்ல இருந்து கிளம்பி ஆஃபிஸ் வர்றதுக்குள்ள ஒட்டி இருக்கிற போஸ்டர்ஸ்,தேவர் கம்யூனிட்டின்னு ஒரு வெப்சைட்டைப் போட்டு, தேவர்களே ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடும் கட் அவுட்கள், அப்புறம் எல்லா செய்திப் பிரிவுகளிலும், முதல்வரும், அம்மாவும், இன்ன பிற கட்சிக் காரங்களும் அந்த விழாவைப் பத்தி சொல்றது, நிகழ்ச்சி நிரலைப் பார்க்க பார்க்க காறித் துப்பணும்னு தோணுது.

முதுகுளத்தூர் கலவரத்தை இந்தப் பத்திரிக்கைகளும், ஓட்டுப் பொறுக்கிகளும் வசதியாக மறந்து விட்டார்கள்.

இந்த விழாவின் ஒவ்வொரு அசைவும் பார்ப்பனீயம் இன்னும் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை எனக்கு நினைவூட்டுகிறது.

இது போன்ற சாதிப் பிரதினிதித்துவ விழாக்களில் நான் கலந்துக்க மாட்டேன் என்று தைரியமாய்ச் சொல்லும் முதல்வரும் அடுத்த நூற்றாண்டுகளிலவது நமக்கு கிடைப்பாரா?????

http://blog.nandhaonline.com

சாலிசம்பர் சொன்னது…

கோவியாரே,
கடந்த 30 ஆண்டுகளாக கலைஞர் அங்கே செல்லவில்லை என்று ஜெயலலிதாவே சொல்லியுள்ளார்.அதனால் அவர் இன்று இங்கு வருவதற்கு எந்தத்தகுதியும் இல்லை என்று வேறு கோபப்பட்டிருக்கிறார்.

இதிலிருந்தே கலைஞர் ஓட்டு அரசியலுக்காக அங்கு செல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.தேவர் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுவதால் கலைஞர் நேரடியாக சென்றிருக்கிறார்.

அப்பட்டமான சாதிவெறியும்,மதவெறியும் பிடித்த அரசியல்வாதிகளுடன் கலைஞரை ஒப்பிடுவது நெருடலாக உள்ளது.

அருண்மொழி சொன்னது…

//இது போன்ற சாதிப் பிரதினிதித்துவ விழாக்களில் நான் கலந்துக்க மாட்டேன் என்று தைரியமாய்ச் சொல்லும் முதல்வரும் அடுத்த நூற்றாண்டுகளிலவது நமக்கு கிடைப்பாரா?????//

No chance. Present, Past, Future என்று எல்லா முதல்வர்களும், முதல்வராக போவதாக கனவு காண்பவர்களும் படை பரிவாரங்களோடு அங்கே சென்று உள்ளதை கவனியுங்கள். "இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா" என்று கண்டு கொள்ளாமல் போக வேண்டியதுதான்.

கார்த்திக் தேவரின் தலைமையில் இருக்கும் Forward Blocகிற்கு கிடைத்த ஓட்டுகளை கண்டும் திருந்தாத ஜென்மங்கள் :-)

அருண்மொழி சொன்னது…

ஜாலிஜம்பரே,

//அப்பட்டமான சாதிவெறியும்,மதவெறியும் பிடித்த அரசியல்வாதிகளுடன் கலைஞரை ஒப்பிடுவது நெருடலாக உள்ளது.//

30 ஆண்டு காலம் போகாத கலைஞர் இப்போது சென்றது பெரும் தவறு. அரசு சார்பில் விழா எடுப்பது வேறு அங்கே செல்வது வேறு.

சாலிசம்பர் சொன்னது…

//"இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா" என்று கண்டு கொள்ளாமல் போக வேண்டியதுதான்.//

அருண்மொழி,இப்படிச்சொல்லி ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தான்.

பதிவின் மையக்கருத்துடன் ஒத்துப்போகிறேன்.

சாலிசம்பர் சொன்னது…

//பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலங்கள் அவலங்களுக்கு காரணமே உயர்சாதி நினைப்பில் முத்துராமலிங்க தேவரின் சமூகம் தலித்துகளுக்கு எதிராக செய்யும் அடக்குமுறைதான். அந்த ஊரில் குறிப்பிட்ட அந்த சமூகத்திடம் பேசி தேர்தலை நடத்த துப்பு இல்லாத அரசியல்வாதிகள் தேவர் ஜெயந்திக்கு சென்று மாலை அணிவித்து வருவதைப் பார்க்கும் தலித் பெருமக்களை அரசியல்வாதிகளும் ஒதுக்கித் தள்ளுவதாகத்தான் நினைக்க முடிகிறது.//

கோவியாரே,
தனித்தொகுதிகளாக இருந்த போது அதில் ஒருமுறை கூட உருப்படியாக தேர்தல் நடக்காத காரணத்தால் ,இப்போது கலைஞர் முதல்வர் ஆன பிறகு இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு அவை தனித்தொகுதிகளாக நீடிக்கும் என்று உத்தரவிட்டு அதை சுமுகமாக பேசி நிறைவேற்றியும் இருக்கிறார்.அதற்காக திருமா , கலைஞருக்கு சமத்துவப்பெரியார் பட்டமும் வழங்கினார்.

TBCD சொன்னது…

மு.க தவறுகளே செய்யாதவர் என்று யாரும் கச்சை கட்ட முடியாது...!

சுட்டுவதற்கும் , குட்டுவதற்கும் அவ்வப்போது இடம் கொடுத்துக் கொண்டே செல்பவர் அவர்...

ஆனா..பெரிய கருப்புச்சட்டைக்காரன், நான் என்றும் சிவப்பு என்று சொல்லி விட்டு இப்படி அவரின் முகமூடியயை இப்படி கிழித்தால்..இப்படி தான்...அவர் கேள்வி கேட்கப்படுவார்...

இதை நீங்கள் வெகுஜன ஊடகத்திலே பார்க்க முடியாது...பதிவுலகிலே கேட்கிறோம்...

அது அவர் காதிலே விழுந்தால்..வட்டமோ, வாரியமோ, சூமோவோ, குவாலிஸிலோ வந்து பதில் சொல்லும்....

ஜமாலன் சொன்னது…

நல்ல பதிவு.

அவ்வப்போது இதுபோன்று எதிர்ப்புகள் பதிவிலாவது பதியாவிட்டால் நாளைய தலைமுறை நம்மைப் பார்த்து காறித்துப்பும். 10-வருடங்கள் கழித்து ஒரு ஆய்வாளன் பத்திரிக்கைககளைப் பார்த்தால் இந்த கூத்தை எப்படி வரலாறாக உணர்வான், பதிவான். பதிவுலகம்தான எதிர்கால சந்ததி கடந்தகால வரலாற்றைப் படிப்பதற்கான ஒரே ஊடகமாகப் போகிறது. இதுபோன்ற பதிவுகள் வரவேற்கப்பட வேண்டும். பாராட்டுக்கள்.

//தலித் பெருமக்களை அரசியல்வாதிகளும் ஒதுக்கித் தள்ளுவதாகத்தான் நினைக்க முடிகிறது. சாதியால் அடையாளப்படுத்தப்பட்டு முழுக்க முழுக்க சாதி விழாவாகவே நடைபெறும் விழாக்களுக்கு முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் சென்று வருவதைப் பார்க்கும் தமிழகத்தின் ஒவ்வொரு சாதியும் தங்கள் சாதிக்கு அத்தகைய அங்கீகாரம் கிடைக்காதா ? என்று நினைக்கத்தான் செய்யும்.//

தலித்தகள் மட்டுமல்ல எல்லா சாதிகளும் ஓட்டு வங்கியாகத்தான் செயல்படுகிறது. எல்லா சாதிகளும் இப்படி அங்கீகாரம் கேட்க முடியாது காரணம் எல்லாம் எண்ணிக்கைப் பொருத்த விஷயம். இந்த எண்ணிக்கையும் அரசின் கணக்கெடுப்பு சார்ந்த விஷயம். இது அரசு விழாவைப் போன்றுதான் நடத்தப்படுகிறது. அரசு ஊழியர்கள் அது முதல்வராக இருந்தாலும் மத, சாதிய அடையாளம் தரும் கூட்டங்களில் அரசு சார்பாக பங்கெடுப்பதற்கு தடை செய்தால் ஒழிய இது தற்காலிகமாக தீராது. சாதி என்பது ஒரு வாழ்தலாக மாறிவிட்டது. அதனை ஊட்டி வளர்பதுதான் அரசியலாகவும் ஆகிவிட்டது.

லக்ஷ்மி சொன்னது…

நல்ல பதிவு கோவி.

//சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சாதியை சேர்ந்தவராக இருக்கின்றனர், வாஉசி...திருப்பூர் குமரன்.. // இந்தத் தலைவர்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் அந்தத் தலைவர்கள் யாரும் தங்களை இன்ன சாதிக்காரன் என்று அடையாளப் படுத்திக்கொண்டவர்கள் இல்லை. ஆனால் முத்துராமலிங்கரோ (ஆம் , நாமாவது ஜாதிப் பெயரின்றி அவரை அழைப்போமே) தன்னை குறிப்பிட்ட ஜாதிக்காரராகவே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வந்துள்ளார். அதுதான் பிரச்சனையே. மற்ற சாதிக்காரர்கள் ஒரு தலைவரை தம் சமுதாயத்திற்குள் மட்டும் குறுக்கினால் அந்த மக்களின் அறியாமை/ஜாதிப் பற்றென்று அவர்களைக் குறை கூறலாமேயொழிய அந்தத் தலைவர்களின் மீது எந்தத் தவறுமில்லையென்று சொல்லலாம். ஆனால் முத்துராமலிங்கரின் விஷயத்தில் அப்படியில்லையே.

சீனு சொன்னது…

//இதிலிருந்தே கலைஞர் ஓட்டு அரசியலுக்காக அங்கு செல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.தேவர் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுவதால் கலைஞர் நேரடியாக சென்றிருக்கிறார்.//

யப்பா...

தருமி சொன்னது…

//கொடுமையின் உச்சம் திருமாவளவன் போன்றார்(கிருஷ்ணசாமியும்) இதுக்கு செல்வது தான்....//

வழிமொழிகிறேன்.

30-ம் தேதி இந்தத் "திருவிழா"!31-ம் தேதி மருது சிலைதிறப்பு விழாவின் அரசு விளம்பரத்தில் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் பங்கேற்பதாக செய்திதாள்களில் விளம்பரம். நேற்றைய, இன்றைய, நாளைய (?) முதல்வர்கள் இந்தத் "திருவிழா"வுக்குப் போவது புரிகிறது. ஆனால் இந்த இரு மனுஷங்களும் போவதற்கு எதற்கு? நம்மை ஏமாற்றுகிறார்களா; இல்லை அவர்கள் ஏமாந்து போகிறார்களா?

We The People சொன்னது…

இதையே ஞானி எழுதியிருந்தால்??!!

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

சாதி அரசியல் விளையாட்டால் தமிழகம் சாதிகளால் பிளவுபட்டு விடுமோ என்கிற தங்கள் கவலையின் ஆழம் அக்கறை புரிகிறது. ஆனால் தங்களுக்கு ஆறுதலாக சிலவற்றைச் சொல்ல விரும்புகிறேன்:

பழைய தலைவர்களில், அம்பேத்கர், தேவர் இருவரையும் தவிர வேறு யாரும் தங்களை சாதியுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். அவர்கள் இருவரும் தன்னலமற்ற தலைவர்களாக நிஜ தியாகிகளாக இருந்தனர். அதனாலேயே அந்த சாதி மக்களால் இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகும் கடவுளுக்கு நிகராகப் போற்றப்படுகின்றனர். அவர்கள் பெயரால் அந்த சாதிமக்கள் ஒன்றிணைவதும் இன்றுவரை சாத்தியமாகி வருகிறது.

அவர்களுக்குப் பிறகு சாதிப் பெயரால் தலைவராக முயன்றவர்களில் ராமதாஸ் முதலில் தன்னலமற்றவராகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றதில் ஆரம்ப வெற்றி பெற்றவர். பிறகு நிறைய சமரசங்கள் செய்து கொண்டு, இப்போது வன்னியர் என்கிற வார்த்தையையே உச்சரிப்பதில்லை என்கிற நிலைக்கு வந்து விட்டார். அவர் சொன்னாலும் அவருடைய ஜாதியினரே நம்புவதில்லை என்கிற அளவுக்கு சாயம் வெளுத்து விட்டதால் தான் திருமாவளவனுடன் இழைய வேண்டிய் கட்டாயத்துக்கு ஆளாகி இருக்கிறார். சண்முகம், கன்ணப்பன் போன்றோர் ஆரம்பத்தில் பலலட்சம் பேரைக் கூட்டி சென்னையைக் கலக்கி சாதி மாநாடு போட்டு பிலிம் காட்டியவர்கள் தான். இப்போது இருக்குமிடம் தெரியவில்லை. நாடார்களின் தலைவனாகத் தன்னைக் காட்டிக் கொள்ள முயன்ற நடிகர் என்ன ஆகிக் கொண்டிருக்கிறார் என்பது சமீபத்தைய செய்தி. இவ்வளவு ஏன், தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராகத் தன்னை முன்னிறுத்த முயலும் தலைவர்களாலேயே அந்த சாதியினரின் முழு நம்பிக்கையைப் பெற முடியவில்லை என்பது தான் இன்றைய தேதிக்கு உண்மை. அவ்வப்போதான இருத்தல் பிரச்னைக்கு தற்காலிகமாக தஞ்சம் அடைவதற்கு ஒரு தலைவன் வேண்டுமே என்பதற்காக மட்டுமே இன்றைய தலைவர்கள் உபயோகப்படுகிறார்கள் மக்களுக்கு. மற்றபடி மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.

இப்போதைய தலைவர்களில் எவரும் சாதி அடையாளத்தைக் காட்ட முயன்றாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. காமராஜர் பெயரைச் சொல்லி விருதுநகரில் ஓட்டு வாங்க முடியவில்லை; சைவப்பிள்ளைமார் அடையாளத்தை வைத்துக் கொண்டு திருநெல்வேலியில் ஜெயிக்க முடியவில்லை. வேறென்ன சான்றுகள் வேண்டும்?

In a lighter sense:

காஞ்சி சங்கரமடத்திற்கு ஜெயாவுடன் சசி வந்ததற்காக இப்போது சசிக்கு பசும்பொன் கிராமம் போக ஜெயா கம்பெனி கொடுத்ததை இப்படி தவறாகப் பேசலாமா? தேவர், முருகனின் அவதாரம் என்று நம்பப்படுகிறவர். (பல ஊர்களில் அவருடைய சிலைக்கு முன் மயில் சேவல் கொடி போன்ற முருகக் கடவுளின் அவதாரங்களைக் காணலாம்). அவருடைய குருபூஜைக்கு நாத்திகர் கருணாநிதி செல்வது தான் விசித்திரம்.

We The People சொன்னது…

கோவி.கண்ணன்,

ஓட்டு அரசியல் எல்லா அரசியல்வாதிக்கு தேவைப்படுது!

இதில் வேறு ஒரு விசயம் இருக்கு! தமிழத்தில் மக்கள் தொகை கணக்குகள் படி வன்னியர்கள் முதலிடம், தேவர் சமூகம் இரண்டாவது இடம், முதல் சாதி ஓட்டுக்கள் ஒரு வழியா டாக்டர் ஐயாவிடம் போய்விட்டது! அட்லீஸ்ட் இரண்டாவது இடத்தில் உள்ளவர்களையாவது பெரிய கட்சிகளான தி.மு.கவும், அ.தி.மு.கவும் பங்கு போட போட்டி போடறாங்க...

:))))

30 வருடமாக போகாதரும் கூட போகறார்ன்ன நிலவரம் என்ன என்று பிரியுதா??!!!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) சொன்னது…

<===
நந்தா said...
இந்த விழாவின் ஒவ்வொரு அசைவும் பார்ப்பனீயம் இன்னும் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை எனக்கு நினைவூட்டுகிறது
====>
இங்கு பார்பனீயம் எங்கு வந்துள்ளது என்று சொல்ல முடியுமா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Siva said...
<===
====>
இங்கு பார்பனீயம் எங்கு வந்துள்ளது என்று சொல்ல முடியுமா?
//

சிவா, வலைப்பூவுக்கு புதிதா ?
மூடநம்பிக்கை குறித்து எவர் பேசினாலும் அவர்களை பெரியாரிஸ்டுகள் என்று சொல்வதைப் போலவே... அதற்கு யாரும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள்
:)

உயர்சாதி மனப்பான்மையை தனித்தனியாக தேவரியம், வன்னியம், காரீயம் என்று சொல்வதற்கு பதில் 'உயர்' என்று அடையாளப்படுத்தப்பட்ட 'பார்ப'னீயம்என்கிறார்கள். 'உயர்வு' அடிப்படையில் தான் 'பார்பனீயம்' என்று சொல்கிறார்கள். பார்பனீயம் என்று ஒன்று இல்லவே இல்லை என்பவர்கள் இதற்கெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை.

கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்
:))

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோ / Joe said...
வழிமொழிகிறேன்

10:43 AM, October 31, 2007
//

ஜோ / Joe ஒத்த கருத்துக்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//sasi said...
நல்ல பதிவு,இவர்கள் திருந்தபோவதில்லை சாதி அரசியல் தான் வளர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்
//

சசி,

சோகம் தான் !
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
கோவி.கண்ணன் அவர்களே,
நல்ல, தேவையான பதிவு...
எல்லாம் ஓட்டு வங்கி அரசியல்....
:(
//

ஜெகதீசன்.
இலைக்காரரிடம் கேளுங்க தங்கத்தாரகை பற்றியும் எழுதி இருக்கேன் கருத்தெல்லாம் ஒன்னும் கானுமே. முடிஞ்சா தனிப்பதிவாக போடச் சொல்லுங்க
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Dharan said...
YES
//

தரன் யெஸ்..
:(( என்னச் செய்றது. பின்னோக்கி பயணிப்பேன் என்று நிற்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
யப்பா ராசா டிபிசிடி..... எ-கலப்பை என்ன ஆச்சு?
தலை வலிக்கிறது கமெண்ட்டைப் படிச்சு முடிக்க முன்னாடி...
:)
//

ஜெ-கதீசன்,
திரும்பவும் போட்டுவிட்டார். நீங்க அடிச்ச ஆனி நல்லா இறங்கி இருக்கு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
சிரமத்திற்கு மன்னிக்கவும்.... :))))

அதாவுதுங்க..பொறுப்புள்ள முதல்வரே இன்னும் வரவில்லைங்கோ....அவர் மொதல்ல வரட்டும் அப்பறமா இந்த கேள்வியக் கேட்கலாம்...காமராசருக்கு பின், சாதிய அரசியலை மனதில் கொள்ளாமல், ஆட்சி செய்ய இன்னும் ஒருத்தர் வரவில்லை என்பது என் கருத்து...தா.கிருட்டினனின் கொலையால், பழுதுப்பட்ட அகமுடையார் ஓட்டு வங்கியயை குறி வைத்து தான் மூ.க போகிறார். இவர் பெரியாரின் பள்ளியிலே பாடம் கற்றாராம்...சரியாக சொல்லித் தரவில்லை என்று பெரியாரை சொல்வதா...இல்லை...சரியான வாத்தியார் கிடைத்தும் தேர்வில் வெற்றி பெறாத மக்கு பிள்ளை என்று மு.கவைச் சொல்லுவதா...
//

அரவிந்த்...,

பெரியார் ? படம் எடுக்க 1 கோடி அரசு பணம் கொடுத்தாரே..இன்னுமா அவர் பெரியாரின் மாணவர் இல்லை என்று நம்புறிங்க ? சமீபத்தில் இராமன் பற்றி கூட சொல்லி இருக்காரே.

பொருத்தருள்க !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நந்தா said...
இன்னிக்குக் காலையில வீட்ல இருந்து கிளம்பி ஆஃபிஸ் வர்றதுக்குள்ள ஒட்டி இருக்கிற போஸ்டர்ஸ்,தேவர் கம்யூனிட்டின்னு ஒரு வெப்சைட்டைப் போட்டு, தேவர்களே ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடும் கட் அவுட்கள், அப்புறம் எல்லா செய்திப் பிரிவுகளிலும், முதல்வரும், அம்மாவும், இன்ன பிற கட்சிக் காரங்களும் அந்த விழாவைப் பத்தி சொல்றது, நிகழ்ச்சி நிரலைப் பார்க்க பார்க்க காறித் துப்பணும்னு தோணுது.
//

நந்தா பார்த்ததை பகிர்ந்ததற்கு நன்றி.
இன்னிக்கு கூட அவர்களுக்கும் எதிர்தரப்பினருக்கும் தகராறாம். எங்க போய் முடியுமோ...
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்மொழி said...
No chance. Present, Past, Future என்று எல்லா முதல்வர்களும், முதல்வராக போவதாக கனவு காண்பவர்களும் படை பரிவாரங்களோடு அங்கே சென்று உள்ளதை கவனியுங்கள். "இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா" என்று கண்டு கொள்ளாமல் போக வேண்டியதுதான்.

கார்த்திக் தேவரின் தலைமையில் இருக்கும் Forward Blocகிற்கு கிடைத்த ஓட்டுகளை கண்டும் திருந்தாத ஜென்மங்கள் :-)
//

அருண்மொழி,
அப்படீங்கிறீங்க......?
:):)

கோவி.கண்ணன் சொன்னது…

ஜாலிஜம்பர் said...
கோவியாரே,
கடந்த 30 ஆண்டுகளாக கலைஞர் அங்கே செல்லவில்லை என்று ஜெயலலிதாவே சொல்லியுள்ளார்.அதனால் அவர் இன்று இங்கு வருவதற்கு எந்தத்தகுதியும் இல்லை என்று வேறு கோபப்பட்டிருக்கிறார்.

இதிலிருந்தே கலைஞர் ஓட்டு அரசியலுக்காக அங்கு செல்லவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.தேவர் நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுவதால் கலைஞர் நேரடியாக சென்றிருக்கிறார்.

அப்பட்டமான சாதிவெறியும்,மதவெறியும் பிடித்த அரசியல்வாதிகளுடன் கலைஞரை ஒப்பிடுவது நெருடலாக உள்ளது.
//

ஜாலிஜம்பர்,

சாதி / மதவெறி பிடித்த - இதில்
பிடித்த (தொற்றிக் கொண்ட), பிடித்த (விரும்பியே) - என இரண்டு பொருள்தான் இருக்கிறது, அதாவது சாதி / மத தொடர்புடையவற்றிற்கு ஆதரவளிக்கும் போது எதோ ஒரு 'பிடித்த' கண்டிப்பாக உண்டு. கலைஞருக்கு முதலில் சொன்ன 'பிடித்த'
பொருந்தாது

ஓட்டு அரசியலுக்கு இல்லை என்றால் ஒட்டு அரசியலுக்காக சென்றாரா ? மீன்ஸ் சேதுராம தேவருடன் கூட்டணி ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்மொழி said...
ஜாலிஜம்பரே,

30 ஆண்டு காலம் போகாத கலைஞர் இப்போது சென்றது பெரும் தவறு. அரசு சார்பில் விழா எடுப்பது வேறு அங்கே செல்வது வேறு.
//

அருண்மொழி,

ஆட்சியை பிடிக்க கூட்டணி அரசு அமைத்தார்...வரும்காலத்தில் தக்கவைத்துக் கொள்ள சாதிக்கட்சிகள் கூட்டனியும் தேவைப்படும் என்று கணக்கு போட்டிருக்கலாம். நண்பர் லக்கி லுக்கும் மற்றும் உடன்பிறப்புகள் தான் விளக்க முடியும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜாலிஜம்பர் said...
கோவியாரே,
தனித்தொகுதிகளாக இருந்த போது அதில் ஒருமுறை கூட உருப்படியாக தேர்தல் நடக்காத காரணத்தால் ,இப்போது கலைஞர் முதல்வர் ஆன பிறகு இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு அவை தனித்தொகுதிகளாக நீடிக்கும் என்று உத்தரவிட்டு அதை சுமுகமாக பேசி நிறைவேற்றியும் இருக்கிறார்.அதற்காக திருமா , கலைஞருக்கு சமத்துவப்பெரியார் பட்டமும் வழங்கினார்.
//

ஜாலிஜம்பர்,

பயன்படுத்தமுடியாத தரிசு நிலத்தை, அல்லது பிரச்சனை உள்ள இடத்தை இன்னும் 10 ஆண்டுக்கு குத்தகைக்கு வைத்துக் கொள்ளும் தாராள மனசு போல் தான் தெரிகிறது. 'நீட்டிப்பு' என்பதால் எதாவது நடந்துவிட்டதா ?

:)

கோவிச்சிக்காதிங்க.....:))

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
மு.க தவறுகளே செய்யாதவர் என்று யாரும் கச்சை கட்ட முடியாது...!

சுட்டுவதற்கும் , குட்டுவதற்கும் அவ்வப்போது இடம் கொடுத்துக் கொண்டே செல்பவர் அவர்...

ஆனா..பெரிய கருப்புச்சட்டைக்காரன், நான் என்றும் சிவப்பு என்று சொல்லி விட்டு இப்படி அவரின் முகமூடியயை இப்படி கிழித்தால்..இப்படி தான்...அவர் கேள்வி கேட்கப்படுவார்...

இதை நீங்கள் வெகுஜன ஊடகத்திலே பார்க்க முடியாது...பதிவுலகிலே கேட்கிறோம்...

அது அவர் காதிலே விழுந்தால்..வட்டமோ, வாரியமோ, சூமோவோ, குவாலிஸிலோ வந்து பதில் சொல்லும்....
//

அரவிந்த்,

உங்களை நண்பர் லக்கி லுக்கிடம் இருந்து உங்களை இனி ஆண்டவன் (ஆண்டுகொண்டிருக்கும் கலைஞர்) கூட காப்பாற்ற முடியாது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
நல்ல பதிவு.

அவ்வப்போது இதுபோன்று எதிர்ப்புகள் பதிவிலாவது பதியாவிட்டால் நாளைய தலைமுறை நம்மைப் பார்த்து காறித்துப்பும். 10-வருடங்கள் கழித்து ஒரு ஆய்வாளன் பத்திரிக்கைககளைப் பார்த்தால் இந்த கூத்தை எப்படி வரலாறாக உணர்வான், பதிவான். பதிவுலகம்தான எதிர்கால சந்ததி கடந்தகால வரலாற்றைப் படிப்பதற்கான ஒரே ஊடகமாகப் போகிறது. இதுபோன்ற பதிவுகள் வரவேற்கப்பட வேண்டும். பாராட்டுக்கள்.
//

ஜமாலன் பாராட்டுக்கு நன்றி !

வியபாக இருக்கிறது, 10 ஆண்டுக்கு பின் நிகழ்வுகளை தற்போதே நினைத்துப் பார்கிறீர்கள். பாராட்டுக்கள் !

//அரசு ஊழியர்கள் அது முதல்வராக இருந்தாலும் மத, சாதிய அடையாளம் தரும் கூட்டங்களில் அரசு சார்பாக பங்கெடுப்பதற்கு தடை செய்தால் ஒழிய இது தற்காலிகமாக தீராது. சாதி என்பது ஒரு வாழ்தலாக மாறிவிட்டது. அதனை ஊட்டி வளர்பதுதான் அரசியலாகவும் ஆகிவிட்டது.//

கசப்பான உண்மை. இளைஞர்கள் திரு(ந்)த்தினால் உண்டு !

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்ஷ்மி said...
நல்ல பதிவு கோவி.
இந்தத் தலைவர்களுக்கும் முத்துராமலிங்கத் தேவருக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால் அந்தத் தலைவர்கள் யாரும் தங்களை இன்ன சாதிக்காரன் என்று அடையாளப் படுத்திக்கொண்டவர்கள் இல்லை. ஆனால் முத்துராமலிங்கரோ (ஆம் , நாமாவது ஜாதிப் பெயரின்றி அவரை அழைப்போமே) தன்னை குறிப்பிட்ட ஜாதிக்காரராகவே பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தி வந்துள்ளார். அதுதான் பிரச்சனையே. மற்ற சாதிக்காரர்கள் ஒரு தலைவரை தம் சமுதாயத்திற்குள் மட்டும் குறுக்கினால் அந்த மக்களின் அறியாமை/ஜாதிப் பற்றென்று அவர்களைக் குறை கூறலாமேயொழிய அந்தத் தலைவர்களின் மீது எந்தத் தவறுமில்லையென்று சொல்லலாம். ஆனால் முத்துராமலிங்கரின் விஷயத்தில் அப்படியில்லையே.//

லக்ஷமி,

அம்மா நீங்கள் சொல்வது சரிதான். அவருடைய அடுத்தப்பக்கத்தை நண்பர் அசுரனின் பதிவில் படித்து அதிர்ந்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//
We The People said...
இதையே ஞானி எழுதியிருந்தால்??!!

//

ஜெய்சங்கர் ஐயா,

ஞானி கொஞ்ச நாள் நிம்மதியாக இருக்கட்டுமே, இல்லாத பூணூலைப் அவரது கழுத்தில் போட்டு முறுக்கிய மூச்சுதிணறலில் இருந்த 'காயம்' ஆறட்டும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

சீனு said...
யப்பா...
//
சீனு...
கண்ணைக்கட்டுதா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

தருமி said...

வழிமொழிகிறேன்.

30-ம் தேதி இந்தத் "திருவிழா"!31-ம் தேதி மருது சிலைதிறப்பு விழாவின் அரசு விளம்பரத்தில் திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் பங்கேற்பதாக செய்திதாள்களில் விளம்பரம். நேற்றைய, இன்றைய, நாளைய (?) முதல்வர்கள் இந்தத் "திருவிழா"வுக்குப் போவது புரிகிறது. ஆனால் இந்த இரு மனுஷங்களும் போவதற்கு எதற்கு? நம்மை ஏமாற்றுகிறார்களா; இல்லை அவர்கள் ஏமாந்து போகிறார்களா?
//

தருமி ஐயா,

பாராட்டுக்கு நன்றி.

அவர்கள் ஏமாந்து போகமாட்டார்கள், அவர்களுக்கு ஏமாற எதுவும் இல்லை. பொதுவானவர்கள் என்று நினைத்து ஓட்டுப்போடும் நாம்தான் ஏமாற்றப்படுகிறோம்.
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

சாதி அரசியல் விளையாட்டால் தமிழகம் சாதிகளால் பிளவுபட்டு விடுமோ என்கிற ...
//

ரத்னேஷ்,

படிப்பதற்கே மூச்சு வாங்குது !
:)

ஓவ்வொரு சாதிசங்கத்துக்கும் முன்னால் அரசியல் தலைவர்கள் தான் படங்களாக அலங்கறிக்கிறார்கள். ம் வருங்காலத்தில் பாரதி பார்பனராகவும், வ உ சி பிள்ளைமாராகவும், அண்ணாதுறை முதலியாராகவும், காமராஜர் நாடாராகவும், விட்டால் பெரியார் நாயக்கராகவும் வரலாற்றில் இடம்பிடித்துவிடுவார்களோ என்ற கவலைதான் இருக்கிறது. இராமதாஸ் மற்றும் முத்துராமலிங்க தேவர் தங்களை சாதித் தலைவர்களாவே அடையாளப் படுத்திக்கொண்டனர் அது அவர்களே விரும்பி செய்தது.

//மற்றபடி மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றே தெரிகிறது.
//

சொல்றிங்க...ஆனால் பாம்பு புற்றைப் போல வளரும் சாதிசங்கள் மக்கள் ஆதரவு இல்லாமலா வளர்கின்றன ?

கோவி.கண்ணன் சொன்னது…

//We The People said...
கோவி.கண்ணன்,

ஓட்டு அரசியல் எல்லா அரசியல்வாதிக்கு தேவைப்படுது!

இதில் வேறு ஒரு விசயம் இருக்கு! தமிழத்தில் மக்கள் தொகை கணக்குகள் படி வன்னியர்கள் முதலிடம், தேவர் சமூகம் இரண்டாவது இடம், முதல் சாதி ஓட்டுக்கள் ஒரு வழியா டாக்டர் ஐயாவிடம் போய்விட்டது! அட்லீஸ்ட் இரண்டாவது இடத்தில் உள்ளவர்களையாவது பெரிய கட்சிகளான தி.மு.கவும், அ.தி.மு.கவும் பங்கு போட போட்டி போடறாங்க...

:))))

30 வருடமாக போகாதரும் கூட போகறார்ன்ன நிலவரம் என்ன என்று பிரியுதா??!!!
//

ஜெய்சங்கர் ஐயா,

இப்ப நீங்க தான் 'ஞாநி'
:))

TBCD சொன்னது…

லக்கி என்ன வட்டமா ..? வாரியமா..? சுமோ ஓட்டுனரா...? கலைஞராலும் அடக்க முடியாதுன்னா அவரு என்ன அழகிரியா..?

போட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் பெரியவங்க இருக்கிறாங்கப்பா....

//*கோவி.கண்ணன் said...

அரவிந்த்,

உங்களை நண்பர் லக்கி லுக்கிடம் இருந்து உங்களை இனி ஆண்டவன் (ஆண்டுகொண்டிருக்கும் கலைஞர்) கூட காப்பாற்ற முடியாது.
:)*//

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
லக்கி என்ன வட்டமா ..? வாரியமா..? சுமோ ஓட்டுனரா...? கலைஞராலும் அடக்க முடியாதுன்னா அவரு என்ன அழகிரியா..?

போட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் பெரியவங்க இருக்கிறாங்கப்பா....

//

கவலைப்படாதீர், நம்ம லக்கிதான் பேசி தீர்த்துக் கொள்ளலாம்.
:)

TBCD சொன்னது…

லக்கி என்ன கொக்கி குமாரா...அவர பாத்து நான் பயப்பட...

லக்கி இலைக்காரன் கடவுச்சொல் தராததால், நீங்கள் திட்டமிட்டு கேரக்டர் அசாசினேசன் பன்னுகிறீர்கள்...

லக்கி உஷரய்யா உஷாரு..ஒரஞ்சாரம் உஷாரு...

கட்டைப் பஞ்சாயத்து தலைவர் மாதிரியே பேசுறீங்களே...

பஞ்சாயத்துன்னு சொன்ன பிறகும் ஜெகதீசன் வரவில்லையென்றால் எப்படி...யப்பா வாப்பா..எங்கேயிருந்தாலும் உடனடியாக வரவும்...

Unknown சொன்னது…

கோவி.கண்ணன்,

ஜாதீய அரசியல் தலைவிரித்தாடும் இந்நிலையில், நல்ல பதிவு. அதே சமயம், பசும்பொன் முத்துராமலிங்கமோ, காமராசரோ, வ.உ.சி யோ, பாரதியோ யாரும் ஒரு ஜாதிக்குச் சொந்தம் அல்லர். அவர்கள் நம் நாட்டுக்குச் சொந்தமானவர்கள்.

தயவு செய்து யாரையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவர்கள்.

முக்குலத்தோரில் ஒரு மிகச் சிறுபான்மையோர் செய்யும் சில கேவல செயல்களுக்க்காக ஒட்டு மொத்த முக்குலத்தோரையும் கலவரம் செய்யும் கூட்டம் என்பது ஏற்கத் தகுந்ததாய் இல்லை. எல்லா சாதிகளிலும், மதங்களிலும் கெட்டவர்கள் உள்ளனர்.

நடக்கும் செயல்கள் எல்லாம், சாதியை மையப்படுத்தி ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் செய்யும் ஈனச்செயல்கள்.

நாகை சிவா சொன்னது…

:(

Me சொன்னது…

அய்யா,

தமிழக அரசியலில் சாதியைத் தொடாமல் சாதித்த தலைவர்கள் குறைவு.

இந்த அவலநிலை மாறவேண்டும் மக்களின் மனோபாவம் மாறவேண்டும். மேலும் முற்போக்கு சிந்தனையுடையவர்கள் தங்கள் ஜனநாயக(வாக்களிக்கும்)கடமையை ஆற்றுவதில்லை.

-/சுடலை மாடன்/- சொன்னது…

சாதி வெறிபிடித்த கூட்டத்தை இப்படி ஊக்குவித்து கலைஞர் பெரியாரின் கொள்கையில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறார். இதில் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் என்ன ஒப்பிட வேண்டியிருக்கிறது. பெரியாரின் வாரிசு என்று அவர் என்றுமே தன்னைப் பறைசாற்றிக் கொண்டதே இல்லையே.

தூ! கலைஞர் இப்படியெல்லாம் ஓட்டுப் பொறுக்க வேண்டியதில்லை.

கோவிக்கண்ணன், இந்தச் செய்தியை விமர்சித்துப் பதிவிட்டமைக்கு நன்றி

நன்றி - சொ. சங்கரபாண்டி

கோவி.கண்ணன் சொன்னது…

//தஞ்சாவூரான் said...
கோவி.கண்ணன்,

ஜாதீய அரசியல் தலைவிரித்தாடும் இந்நிலையில், நல்ல பதிவு. அதே சமயம், பசும்பொன் முத்துராமலிங்கமோ, காமராசரோ, வ.உ.சி யோ, பாரதியோ யாரும் ஒரு ஜாதிக்குச் சொந்தம் அல்லர். அவர்கள் நம் நாட்டுக்குச் சொந்தமானவர்கள்.

தயவு செய்து யாரையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவர்கள்//

தஞ்சாவூரான் நீங்கள் குறிப்பிட்டுள்ளவர்களை சாதி சங்கங்கள் தலைவனாக கருதுகின்றன. தேவர் விசயத்தில் 100 சதவிகித மோதல்கள் தேவர் - தலித் பிரச்சனைகள் எழுவதற்கு விழாக்களே காரணம். அவரவர் விழாவை அவரவர் கொண்டாடினால் ஒன்றும் இல்லை. தேவர் விழாவுக்கு அம்பேத்காரை உடைக்கனுமா ? இதெல்லாம் சாதிவெறி. இது போன்று தலைவர்களை பிரித்து நடக்கும் விழாக்களுக்கு அரசாங்கம் ஆதரவு அளிக்கக் கூடாது.

//முக்குலத்தோரில் ஒரு மிகச் சிறுபான்மையோர் செய்யும் சில கேவல செயல்களுக்க்காக ஒட்டு மொத்த முக்குலத்தோரையும் கலவரம் செய்யும் கூட்டம் என்பது ஏற்கத் தகுந்ததாய் இல்லை. எல்லா சாதிகளிலும், மதங்களிலும் கெட்டவர்கள் உள்ளனர்.

நடக்கும் செயல்கள் எல்லாம், சாதியை மையப்படுத்தி ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் செய்யும் ஈனச்செயல்கள்.
//

முக்குலத்தோராக பிறந்தை உயர்வு என்றும் பெருமை படுகிறேன் என்று கூறிக்கொள்ளும் அபிமானிகள் அந்த சாதிகளால் வரும் கேவலங்களுக்கும் தலைகுனிய வேண்டும் என்பது என்கருத்து. ஒருவன் செய்த செயலுக்கு ஒட்டு மொத்த சாதிகளை குறை சொல்லாமா ? தாராளமாகவே சொல்லலாம். சாதியால் பெருமை படுகிறவர்களை நோக்கி உன் சாதி காரணின் யோக்கிதையை பார் என்று சொல்லலாம். இழுக்குகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும் இல்லை என்றால் சாதி பெருமை பேசக்கூடாது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்