பின்பற்றுபவர்கள்

10 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 5

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4
உடல்கூறுகளின் வளர்ச்சியினால் பருவம் அடைதல் என்று சொல்வது ஆண்/பெண் இருவரும் ' இனப்பெருக்கத்துக்கு ஆயத்தம் ஆகிவிட்டார்கள் என்பாதாக பொருள். உடலியல் மாற்றங்களில் சுரப்பிகள் வளர்ந்து பணியைத் தொடங்க அதன் ரசாயன மாற்றங்கள் மனதில் தூண்டுதல் ஏற்படும் பாலியல் உணர்வு என்பது உடல்சார்ந்த இச்சை என்றாலும் மனதின் செயல்பாடுகளே அதன் தீர்வுகளை முடிவு செய்கிறது. பாலியல் வேட்கையும் தணிப்பும் உடல் இன்பம் என்றே சொல்லுவார்கள்,
வேறெந்த உயிரினங்களும் வெறும் இச்சைக்காக கூடுவதே இல்லை, பெண் உயிரினங்கள் இனப்பெருக்கத்துக்கு ஆயத்தமாகும் போது அதனை அறிந்து கொண்ட ஆண் உயிரினம் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது. மனித இனத்தில் மட்டும் தான் உடல் இன்பம் ஆண்/பெண் இருவருக்கும், குறிப்பாக ஆணுக்கு அன்றாட தேவை என்கிற அளவில் உடல்கூறுகள் அமைந்துவிட்டது. ஒருவனுக்கு ஒருத்தி அல்லது எப்படி வாழ்ந்தாலும் மனிதனின் அன்றாட உடல் இன்பத் தேவை என்பது குழந்தைப் பெருவதற்காக அல்ல என்ற நிலையில், உடல் இன்பம் என்பது ஒப்புதலுடன் கூடிய இரு உடல்களின் தற்காலிக சேர்க்கை என்பதாகத் தான் பொருள்படும்.

மனித இச்சைகள் உடல் சார்ந்த ஈர்ப்புக் கொண்டிருக்கத் தான் வேண்டும், மனம் இயற்கை அமைப்புபடி மாற்றுப் பாலினரைத்தான் நாடமுடியும் என்பது சரியான கூற்றா ? தனிப்பட்ட மனித மனத்தின் விருப்பு வெறுப்பு என்பது இயற்கைச் சார்ந்தது அல்ல. சூழல் சார்ந்ததே. பிறவிக் கலைஞர்கள் ஒருசிலர் நல்ல பாடும் திறன், ஓவியத் திறன், கலைத் திறன் பெற்று இருப்பார்கள், இவர்கள் பரம்பரையில் முன்பு அப்படி ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். அந்த சிலரின் செயல்பாடுகள் மற்றவர்களை விட மாறுபட்டு இருப்பதை யாரும் இயற்க்கைக்கு மீறிய ஒன்றாக நினைப்பது இல்லை, மாறாக வியக்கிறார்கள். ஒரு தனிமனிதனின் பிறவியிலேயே கிடைத்திருக்கும் கலைத்திறன் வரங்கள் இயற்கைக்கு மீறிய ஒன்றுதானே. அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் சமூகம் தனிப்பட்ட ஒரு ஆண் அல்லது பெண் ஒத்தப் பாலினரிடம் ஈர்ப்பு கொண்டிருப்பதை இயற்கைக்கு மாறானது என்று எப்படிச் சொல்ல முடியும். வேண்டுமென்றால் குடும்ப அமைப்புக்கு எனும் சமூக அமைக்கு எதிரானது என்று சொல்லமுடியும், இயற்க்கைக்கு எதிரானது என்று சொல்ல முடியாது.

ஆண் / பெண் சேர்க்கையின் நோக்கம் இனப்பெருக்கம் மட்டுமல்ல, அது ஒரு அன்றாடத் தேவையாகிப் போனதை இயற்கை என்று சொல்ல முடியுமா ? இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எத்தனை முறைகளை பயன்படுத்தினாலும் அவை அனைத்துமே இயற்கைக்கு மாறுபட்ட ஒன்று தானே. இன்றைய இனப்பெருக்கத் தேவையை தனிமனிதனின் வருமானமும், மனைவி/கணவன் ஆகியோரின் உடல் நிலையும், அதை ஏற்றுக் கொள்ளும் இருவரின் மன நிலையும் தான் முடிவு செய்கிறது. இனப்பெருக்கம் தான் நோக்கம் அதனால் ஈர்ப்பு இருப்பது இயற்கையாகவே இருக்கும் என்றால் உடலியல் குறைபாடுகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாத தம்பதியினர் கூடிக் களிப்பதை இயற்கைக்கு எதிரானது, தேவையற்றது என்று எவரும் சொன்னால் அது அறிவீனம். மனித உடல் அமைப்புகளையும், மனம், பொருளாதாரச் சூழல் சமூகம் இவற்றைப் பார்த்தால் இச்சைகளின் நீண்டகாலத் தேவை உடல் இன்பம் மட்டும் தான். மாற்றுபாலின சேர்க்கையாளர்கள் (Normal Sex Orentation) நாடும் உடல் இன்பம் உறுப்பு சங்கமங்களினால் மட்டும் தான் தனித்துக் கொள்வதில்லை, பல்வேறு 'வழிகளிலும்' அடைகிறார்கள், இவையெல்லாம் மற்றும் சுய இன்பம் காண்பது இயற்கையா ? உடல் இன்பம் பெறும் முறைகளை இயற்கை செயற்கை என்று வகைப்படுத்த முடியாமல் போவதற்கு அதன் நோக்கம் இனப்பெருக்கம் மட்டுமல்ல என்பதே உண்மை. அப்படி இருக்கும் போது கூட விரும்பும் உடல்களுக்கு சட்ட சிக்கல் எதுவும் இல்லை என்றால் அது தற்பாலினமாகவோ இருந்தால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை

குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாமல் வெறும் Live together ஆக குடும்பம் நடுத்துபவர்களின் நோக்கம் கூட உடல் இன்பம் மட்டுமே, சிலர் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை வெறும் உடல் இன்பம் தேவை மட்டும் தான் என்பதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் சமூகம்,
ஓர் பால் சேர்க்கையினரை இயற்கைக்கு எதிரானவர்கள் என்று சொல்வதுவதன் காரணம் சமூகக் கட்டமைப்பு மற்றும் மதக் கொள்கை மட்டுமே.

ஆண் / பெண் இருவரது மனங்களும் மாற்றுப் பாலினரை (Opposite Sex) மட்டும் தான் நாடும் என்பது அவரவரின் சொந்த கற்பனை. பிறவிக் கலைஞர்களைப் போல் பிறவியிலேயே ஒத்த பாலினர் சேர்க்கை விருப்பர்கள் உண்டு. மேற்கத்திய நாடுகளில் இடது கையால் எழுதுவோரை சாத்தான்கள் என்று விளித்து பின்னார் மாற்றிக் கொண்டு அவர்களும் சக மனிதர்கள் என்றே ஏற்றுக் கொண்டார்கள். இடது கையால் எழுதுவோர்களை பிறவிக் குறைபாடு உடையவர்கள் என்று சொன்னால் அது அறிவீனம் தான். தற்பால் சேர்க்கை விருப்பர்களின் பலரின் இயற்கை மன அமைப்பு அவ்விருப்பத் அத்தன்மை கொண்டது என்றே சொல்லலாம்,

எங்களது அலுவலகத்திற்கு விற்பனைத் தொடர்பில் வரும் அமெரிக்கர் ஒருவரை, 'திருமணம் ஆகிவிட்டதா ? ' என்று கேட்டேன். அதில் தனக்கு நம்பிக்கைக் கிடையாது, தான் ஒரு ஓரின சேர்க்கை விருப்பர் என்று சொன்னார். 'உங்களுக்கெல்லாம் பெண்கள் மீது ஆர்வம் ஏற்படாதா ? என்று கேட்டேன், பெண்களை வெறுப்பது கிடையாது, மிகவும் மதிக்கிறேன். தனக்கு நெருங்கிய பெண் நண்பர்கள் உண்டு, ஆனால் பெண்ணுடன் சேருவது தன்னால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, தனது விருப்பம் ஆண் சேர்க்கைதான் என்றார். உயர்நிலை பள்ளிப் படிப்பின் போது சக மாணவனுடன் ஏற்பட்ட பழக்கம், அதன் பிறகு தானும் மாற்றிக் கொள்ள நினைக்கவில்லை, தான் விருப்பத்துடன் அப்படியே ஓரின சேர்க்கையாளராக தொடர்வதாக குறிப்பிட்டார்.

திருநங்கையர் போல் தற்பால் சேர்கையினர் அனைவருமே பிறவியிலேயே அதில் நாட்டம் கொண்டவர்கள் கிடையாது, பலர் மற்றவர்களின் தூண்டுதலால் அந்த பழக்கத்தை தொடர்ந்து, பின் அதுவே அவர்களது விருப்பம் என்பதற்கு அழுத்தமான காரணமாக அவர்களின் சேர்க்கையாளர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உணர்வு அடிப்படையிலான நெருக்குதல்களால், பிணைப்புகள், அதில் இருந்து மீள விருப்பம் ஏற்படும் சூழல் இல்லாது, அவர்கள் அப்படியே தொடர்கிறார்கள். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் திருமணம் செய்து கொண்டவர்களிடையேயும் குடும்பம் என்பதில் நம்பிக்கை குறைந்துவதால் அதிலிருந்து மீள வேண்டும் என்கிற சமூகக் பொறுப்பிற்கான சூழல் சார்ந்த தேவையும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு இல்லாமல் இருக்கிறது.

ஆண்/பெண் திருமணம் செய்து கொண்டவர்களிடமும் ஓர்பால் சேர்க்கை விருப்பம் மற்றும் செயல்பாடுகள் சிலரிடையே உண்டு (Bi-Sexual Activities) . தற்பால் விருப்பர்களின் பொறுப்பின்மையால் ஏற்படும் சமூகத் தொல்லைகள் எவை ? பிறகுபேசுவோம்.

9 கருத்துகள்:

பீர் | Peer சொன்னது…

//மேற்கத்திய நாடுகளில் இடது கையால் எழுதுவோரை சாத்தான்கள் என்று விளித்து பின்னார் மாற்றிக் கொண்டு அவர்களும் சக மனிதர்கள் என்றே ஏற்றுக் கொண்டார்கள்.//

தற்பால் சேர்க்கைக்கு நீதிமன்றத்தை அடுத்து சமூக அங்கீகாரமும் கிடைத்துவிட்டால், பெணகள் இனப்பெருக்க இயந்திரமாக்கப்படுதல் வெகு தொலைவில் இல்லை.

பிற்பாடு,

//உடலியல் குறைபாடுகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாத தம்பதியினர் கூடிக் களிப்பதை இயற்கைக்கு எதிரானது, தேவையற்றது என்று எவரும் சொன்னால் அது அறிவீனம்.//

என்பதும் அறிவீனம் ஆகிப்போகும்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

குடும்பம் என்ற அமைப்பு பின்பு என்ன ஆகும்.


( நிகழ்காலத்தில் என்பவர் அக்குள் சேவ் பற்றி எழுதிய பதிவை படித்து. உடல் தூய்மை பற்றி சொன்னதை பாராட்டி பின்னூட்டமிட்டேன். ஆனால் அதில் உங்களுடைய பின்னூட்டத்தை படித்து விட்டு அத‌ற்கு கீழ் என்னுடையதை பார்க்கும் போது ஏதோ உங்கள் கருத்துக்கு எதிராகவும் அவருக்கு ஆதரவாகவும் பின்னூட்டம் இட்டது போல் தோன்றுகிறது. பின்பு அவருக்கு மறுப்பு பின்னூட்டமும் போட்டுவிட்டேன். அதில் உங்களுடைய கருத்துக்கு 100% எனக்கு உடன்பாடு உண்டு. தவறாக எண்ண வேண்டாம்.)

கோவி.கண்ணன் சொன்னது…

//அதில் உங்களுடைய கருத்துக்கு 100% எனக்கு உடன்பாடு உண்டு. தவறாக எண்ண வேண்டாம்//

அக்பர் உங்கள் மின் அஞ்சல் தெரியாது, எனக்கு govikannan at gmaildot com க்கு ஒரு மின் அஞ்சல் அனுப்புங்க

Nathanjagk சொன்னது…

//வேறெந்த உயிரினங்களும் வெறும் இச்சைக்காக கூடுவதே இல்லை// அப்படியா..? என்னால் உறுதியாக​சொல்ல முடியவில்லை. மானுட கலவியில் ​வேறேந்த பொறுப்புணர்ச்சி-யோடு யாரும் புணர்ச்சி​கொள்ள முடியாது.
முக்கியமாக பாலியலில் இயற்கை, விதிகள், மரபு​போன்ற எந்த வரையறுக்க படாத கூறுகளை முன்னிறுத்தி வாதத்தை ​தொடர முடியுமா?
//திருநங்கையர்// எப்படி சடாரென்று மொத்த தமிழ் உலகமே இந்த ​​​சொற்பிரயோகத்தை ஏற்றுக்​கொண்டது என்று​தெரியவில்லை. ஒம்போது என்ற​சொல்லில் உள்ள அதே இழுக்கு, அவமானம், கேலி, காழ்ப்பு.. இன்னும் பிற எல்லாம் அலி, நபும்சகர், அரவாணி என்ற ​சொற்களில் இல்லையா..? திருநங்கை என்ற சொல் வாயுரைத்தால் எண்ணத்தில் ஒம்போதும் அலியும் தானே இருக்கின்றன? திருநங்கையும் ஒம்போதின் தலித்-தன்மை அடையத்தானே செய்யும் - ஒருநாள்? மீண்டும் ஒருமுறை ​மொழியிடம் மண்டியிட ​வேண்டும் - ​துவேசத்தை கழுவிய புது ​சொல்லுக்காக! இன்னும் எத்தனை முறை?
//தற்பால் விருப்பர்களின் பொறுப்பின்மையால் ஏற்படும் சமூகத் தொல்லைகள் எவை//
நல்ல முயற்சி. அதற்கு முன் நாம் சார்ந்துள்ள சமூகம் அதை எப்படி எதிர் கொள்கிறது, நம் நிலை என்ன என்பதை​தெளிவுபடுத்திக் ​கொள்ள வேண்டியது அவசியம் என்பது என் கருத்து.​வெறும் 377 விதி நீக்கம் மட்டும் ஒட்டு மொத்த சமுதாயத்தின் வெளிப்பாடு என கருதலாகாது. விதியினை ஏற்கும் மதியே, அதையும் மாற்றும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//11:47 PM, July 10, 2009

ஜெகநாதன் said...
//வேறெந்த உயிரினங்களும் வெறும் இச்சைக்காக கூடுவதே இல்லை// அப்படியா..? என்னால் உறுதியாக​சொல்ல முடியவில்லை. மானுட கலவியில் ​வேறேந்த பொறுப்புணர்ச்சி-யோடு யாரும் புணர்ச்சி​கொள்ள முடியாது.
முக்கியமாக பாலியலில் இயற்கை, விதிகள், மரபு​போன்ற எந்த வரையறுக்க படாத கூறுகளை முன்னிறுத்தி வாதத்தை ​தொடர முடியுமா?

//

முக்கியமான பொறுப்புணர்வு அரசு அனுமதிக்கும் வயது, மன ஒப்புதல், நம்பிக்கை துரோகம் செய்யாதது இவைதான் முதன்மையானது.

சமூகம் /மதம் சார்ந்த பொறுப்புணர்வுகளை யாரும் மதிப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. மதங்கள் வாய்வழி புணர்ச்சியை அந்தந்த மததினரிடம் அனுமதிக்கிறதா, மதத்தின் விருப்பத்திற்கு எதிராக தம்பதிகளிடையே எதுவும் நடைபெறுவதில்லையா ? என்று கேட்டால் மதவாதிகள் ஓடிவிடுவார்கள், :)

////திருநங்கையர்// எப்படி சடாரென்று மொத்த தமிழ் உலகமே இந்த ​​​சொற்பிரயோகத்தை ஏற்றுக்​கொண்டது என்று​தெரியவில்லை. ஒம்போது என்ற​சொல்லில் உள்ள அதே இழுக்கு, அவமானம், கேலி, காழ்ப்பு.. இன்னும் பிற எல்லாம் அலி, நபும்சகர், அரவாணி என்ற ​சொற்களில் இல்லையா..? திருநங்கை என்ற சொல் வாயுரைத்தால் எண்ணத்தில் ஒம்போதும் அலியும் தானே இருக்கின்றன? திருநங்கையும் ஒம்போதின் தலித்-தன்மை அடையத்தானே செய்யும் - ஒருநாள்? மீண்டும் ஒருமுறை ​மொழியிடம் மண்டியிட ​வேண்டும் - ​துவேசத்தை கழுவிய புது ​சொல்லுக்காக! இன்னும் எத்தனை முறை? //

இது ஒரு தவறான புரிதல், கழிவறை என்று சொல்வது அருவெறுப்பாக இருக்கிறது என்பதற்காக ஓய்வறை ஒப்பனை அறை என்று மாற்றி எழுதுகிறோம், நீங்கள் குறிப்பிடும் அலி, நபும்சகர், ஒம்போது என்பதெல்லாம் திருநங்கைகளை பழிப்பதற்காக அவர்கள் மீது வீசப்பட்ட சொற்கள், அரவாணி என்பது ஒரு 'இந்து'மத பெயர், இஸ்லாமிய திருநங்கள் 'அரவாணிகள்' அதாவது அரவாணின் மனைவி என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் (இவங்களிடமும் மதமா ? அவர்களை ஏன் சாதாரணாமாக தாழ்வாக நினைக்க வேண்டும், அவர்களுக்கும் மத/வழிபாட்டு உரிமை உண்டு) திருநங்கை என்பது பக்தி இலக்கியத்தில் ஏற்கனவே கையாளப்பட்ட சொல், திருவாக இருந்து நங்கை (பெண்)யானவள் என்பதை உணர்த்துவதால் அவர்களின் பருவத்தின் போது நடந்த பால் மாற்றத்தை குறிப்பிட்டு பிறருக்கு புரியவைக்கும் சொல். அவர்களுக்கு தனி அடையாளம் தரும் சொல், இழிவுச் சொல் அல்ல. இதை எல்லோரும் ஏற்றுக் கொண்டதால் பயன்படுத்துகிறோம், இதில் தவறு என்ன ?

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//உயர்நிலை பள்ளிப் படிப்பின் போது சக மாணவனுடன் ஏற்பட்ட பழக்கம், அதன் பிறகு தானும் மாற்றிக் கொள்ள நினைக்கவில்லை, தான் விருப்பத்துடன் அப்படியே ஓரின சேர்க்கையாளராக தொடர்வதாக குறிப்பிட்டார்.//

மேலே கூறும் உண்மை யாதேனில் இது கண்டிப்பான இயற்கை இல்லை.. பழக்கங்களாலும், மனரீதியான குழப்பத்தினால் ஏற்படும் பழக்கத்தினாலும் ஏற்படும் ஒன்று. இதை சமுக அந்தஸ்து கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? இதை ஆலோசனை மற்றும் பயிற்சினால் போக்க கூடியதே. எனவே இதை சட்டப்படி நாடுவது வேடிக்கை. இதன் சமுகம் ஏற்றுகொண்டு இதற்காண சலுகை கொடுக்க வேண்டும் என்றால் இதன் வழி வருபவர்கள் அதிகமாகும். மனநிலை குற்றிய குழந்தைகளுக்கு அதற்காண அலோசனைகள் வழங்கப்படவேண்டுமே ஒழிய இதுவும் ஒரு இயற்கை என விட்டுவிடுவது ஏற்றுகொள்ளமுடியவில்லை......

Nathanjagk சொன்னது…

விளக்கத்திற்கும் அன்பிற்கும் நன்றி கண்ணன்!
1. //முக்கியமான பொறுப்புணர்வு அரசு அனுமதிக்கும் வயது, மன ஒப்புதல், நம்பிக்கை துரோகம் செய்யாதது இவைதான் முதன்மையானது//
நான் ​சொல்ல நினைத்தது, ஆண்-​பெண் சேர்க்கை இன்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் கலவியின்பமே முதன்மையானது. வம்சவிருத்தி, இனப்பெருக்கம் ​போன்ற எண்ணங்கள் அப்போது வராது. வரவும் தேவையில்லை. அப்படி​கொள்ளும் கலவிக்கும் விந்து வங்கிகளுக்கும் வித்யாசமில்லை.
நீங்கள் சொல்வது (வயது, வன்கலவி, துரோகம்) சமூகத்தில் சட்ட பின்புலத்தில் நிலவுகிற கட்டுப்பாட்டுகளை. இது சரியே. ஆனால் நம்பிக்கை துரோகம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டும் ​போலிருக்கிறது. இப்போதல்ல, இன்னொரு சமயம் :-)
(லியோ டால்ஸ்டாயின் காதலின் இசை - Kreutzer Sonata படித்திருக்கிறீர்களா?)
2. திருநங்கைகள் என்ற வழக்கு இன்னும் எனக்குள் ஏனோ பிசிறு தட்டுகிறது! உங்கள் விளக்கத்தில்
//இஸ்லாமிய திருநங்கள் 'அரவாணிகள்' அதாவது அரவாணின் மனைவி என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் // என்கிறீர்கள்.. ​சரியே. ஆனால் // திருநங்கை என்பது பக்தி இலக்கியத்தில் ஏற்கனவே கையாளப்பட்ட சொல்// என்றும் சொல்கிறீர்கள். இதை ஒரு typo-வாக எடுத்துக் கொள்ளலாமா?

வலசு - வேலணை சொன்னது…

ஆரோக்கியமான விவாதங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒரு தொடர்பதிவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் ​சொல்ல நினைத்தது, ஆண்-​பெண் சேர்க்கை இன்பத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் கலவியின்பமே முதன்மையானது. //

இந்த பகுதியை எழுதும் போது உடலின்பம் என்றே எழுதினேன். அதை கலவி, உடல் உறவு என்று எந்த சொல்லில் வேண்டுமானாலும் அடக்கலாம். :)

//ஆனால் நம்பிக்கை துரோகம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டும் ​போலிருக்கிறது. இப்போதல்ல, இன்னொரு சமயம் :-)
//

நம்பிக்கை துரோகம் என்பது கள்ளக் காதல், திருமண ஒப்பந்ததை மீறிய செயல், அதைக் குறிப்பிட்டேன்.

//வரவும் தேவையில்லை. அப்படி​கொள்ளும் கலவிக்கும் விந்து வங்கிகளுக்கும் வித்யாசமில்லை.//

விந்து வங்கி பற்றி தற்போதைய சூழலில் சொல்கிறீர்கள், ஆனால் நாம் எடுத்துக் கொள்வது அறிவியல் முன்னேறாத காலத்தில் இருந்து இன்றுவரை இருக்கும் நடைமுறை குறித்தது. உடலின்பம் தடையில்லாமல் பெருவது நோக்கம் என்றாலும், குழந்தை - குட்டிகளுடன் சமூகமாக மாற விரும்பும் தனிமனிதனுக்கு திருமணம் என்கிற அமைப்பும் தேவைப்படுகிறது. இத்தகைய சமூக அமைப்பில் இருந்து பார்த்தால் உடலின்பத்தினால் பெறப் போகும் கூறுகளையும் சேர்த்தே பார்த்து உடலின்பம் என்பது சமூகம் தொடர்புடையது என்கிறார்கள். திருமணம் ஆனவர்கள் துணைக்குத் தெரியாமல் செல்வதையெல்லாம் சபலம் என மன்னித்து விடுகிறார்கள்.

//என்றும் சொல்கிறீர்கள். இதை ஒரு typo-வாக எடுத்துக் கொள்ளலாமா?//

படித்த முற்போக்கு சிந்தனையாளர்களாகவும், திருநங்கைகள் தூற்றப்படுவதன் சமூக நோக்குகளை நன்கு அறிந்த திருநங்கைகள் திருநங்கை என்று அழைக்கப்படுவதை வரவேற்கிறார்கள். இன்னும் சிலர் மூன்றாம் பாலினம் என்றும் குறிப்பிடுவார்கள். நல்ல சொற்களைப் புழக்கத்தில் கொண்டுவந்தால் அது குறித்த காலம் காலமாக இருந்த கருத்துகள் மாறும். முன்பெல்லாம் ஊனமுற்றோர்கள் என்று சொல்லப்படுவது தற்போது உடல்குறையுற்றோர், மாற்றுத்திறனுடையோர் என்று சொல்லப்பட்டு வரவேற்ப்பு பெற்றுள்ளது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்