பின்பற்றுபவர்கள்

14 ஜூலை, 2009

மதம் மற்றும் அறிவியல் !

அறிவியல் ஆன்மீகம் என்று தலைப்பிட நினைத்தேன். இன்றைய ஆன்மிகம் என்பது மதவாதிகளின் பிடியில் திணறிக் கொண்டு இருப்பதால் ஆன்மிகம் என்று சொல்லப்படுபதில் மேலோங்கி இருப்பது மதவாதமே, மதப் பற்றுக்கும், மதவெறிக்கும் நூல் இழைவேறுபாடுதான், கையில் தீவட்டி வைத்துக் கொண்டு தன்னை அடையாளம் காட்டுவது மதப் பற்று, அதே தீவட்டி மூலம் மாற்று மதத்தினரின் வீட்டைக் கொளுத்துவது மதவெறி, கொளுத்துவதற்கும், கையில் வைத்திருப்பதற்கும் அசம்பாவிதம் என்ற ஒரு நிகழ்வு இடையில் இல்லாதது மட்டும் தான் வேறுபாடு. அசம்பாவிதம் நடந்தால் கையில் இருப்பது எதிரியின் மீது வீசப்பட்டுவிடும். 'எனக்கு மதப்பற்று இருக்கிறது மதவெறி இல்லை' என்போர்கள் அசம்பாவித சூழலில் இல்லாதவர்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.

***

மனித வாழ்க்கை, மரணம், இயற்கை இது பற்றிய கேள்வியில் மனித உள்ளங்களின் இருவகை சிந்தனைகளின் செயலாக்கம் தான் மதம் மற்றும் அறிவியல். இயற்கை மீது இருந்த வியப்புக்கும், பயத்துக்கும் காரணமாக 'இறைவனை' முன்னிறுத்தி தீர்வு சொல்வதாக எழுதப்பட்டதே மதநூல்கள், இயற்கையின் செயல்பாடுகளை ஆய்ந்து பார்முலாக்களில் அடக்கி, தனது புலனில் நீட்சி செய்து கொண்டவை அறிவியல். புலன் நீட்சி என்றால் நம்மால் பறக்க முடியாது, விமானங்கள் மூலம் அதைச் செய்கிறோம், தொலைவில் உள்ள காட்சிகளை காண்கிறோம், தொலைவில் உள்ளோரிடம் பேசுகிறோம், (தொலைவின் வாசனையை நுகரவும், தொட்டு உணரவும் தான் இன்னும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை, அது சாத்தியப் படவும் படாதது, ஏனெனில் கண் பார்ப்பதற்கும், காது கேட்பதற்கும் காட்சிக்கு மிக அருகில் இருக்க வேண்டிய இயற்பியல் நிலை தேவை இல்லை என்பதால் தொலைவில் இருப்பதைப் பார்பதும் கேட்பது அறிவியலால் சாத்தியம் ஆகிற்று). இயற்கையை ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் அதன் தன்மையைப் புரிந்து கொண்டால் அது அனுமதிக்கும் வழியில் செயல்பட்டு தனக்கு தேவையானவற்றை செய்து கொள்ள முடியும் என்கிற சிந்தனைகளின் தொகுப்பு தான் இன்றைய அறிவியல். மதங்கள் மனித சிந்தனைகளை, கேள்வி கேட்பதை விரும்புவதில்லை, அப்படியே செய்தாலும் அதற்குள் தான் சிந்திக்கவேண்டும், சொல்லப்படும் பதிலைத் தான் ஏற்கமுடியும் என்பதாகவே மதவாதிகள் சிந்தனைத் தடைகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இறைவனே எல்லாமாக செயல்படுவதும், எல்லாவற்றையும் செய்வதாக மத நம்பிக்கை. இதை இப்படியே நம்பி இருந்தால் இன்றைக்கு மனித அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கவே முடியாது, அறிவியல் கூறுகளை மதங்கள் வரலாறு தொட்டே எதிர்த்து வந்திருக்கின்றனர். உலகம் உருண்டை என்றோரை கல்லால் அடித்து துறத்தியும், அறிவியல் கோட்பாடுகள், சிந்தனைகள் இறை நம்பிக்கைக்கு எதிரானவை என்றே தத்துவமேதைகள் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு மதங்கள் சொல்லும் கதைகளை யாரும் நம்புவதில்லை என்கிற காரணத்தினால் மதக் கொள்கைகள் அறிவியல் சட்டை அணிந்து வந்து பல் இளிக்கின்றன. எனக்குத் தெரிந்து எந்த ஒரு மதங்களிலும் நேரடியாக இன்றைய தேதியின் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவே இல்லை, அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் மதவாதிகளின் திரித்தலே ஆகும். அது உண்மையெனில் ஒவ்வொரு அறிவியல் அறிஞனும் நாள் கணக்கில் ஆராய்ச்சிக் கூடத்தில் செலவிட்டு ஒவ்வொன்றையும் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டிய நிலை இருக்காது. இன்னும் சிலர் மதக் கருத்துக்களை ஆழமாக நம்பிக்கொண்டு, 'இறைவன் அனைத்தையும் மறைத்து வைத்திருப்பது நம் அறிவு திறனைத் தூண்டி நாமாக கண்டிபிடிக்கத்தான்' என்றும் சொல்கிறார்கள், இதுவும் வெறும் ஊகம் மற்றும் தன் நம்பிக்கை மீது வீசப்படும் கேள்விக்கு எதிராக தனக்குத் தானே ஏற்படும் தன்னாறுதல் மட்டுமே. மனிதன் சிந்திக்காது மதவாதிகளின் சொல்படி கேட்டு இருந்தால் இந்த உலகம் இன்னும் பழமையான உலகமாகத்தான் இருந்திருக்கும்.

இயற்கையையை யார் யாரோ செயல்படுத்துவதாகவும், அதில் நல்லது நடந்தால் இறைச் செயலாகவும், கெட்டது நடந்தால் சாத்தானின் வேலையாகவும் சொல்லப்படுகிறது. ஏனெனில் இறைவன் மிகவும் நல்லவர், இயற்கையை அவரே செயல்படுத்துகிறார் என்ற இறை நம்பிக்கை / மத நம்பிக்கைகளை தகர்க்கும் வண்னம் இயற்கைப் பேரிடர் ஏற்படும் போதெல்லாம் அந்த நினைப்பில் பாதிப்பு ஏற்படுத்துவிடக் கூடாது என்பதற்காக 'சாத்தான்' என்கிற ஒன்றை புகுத்தி வைத்திருக்கிறார்கள். மனிதன் மனச் செயல்பாடுகளில் செயல்படுகிறான். இயற்கை ? அது முழுவதும் சூழலால் பின்னப்பட்டது. சுற்றுச் சூழலால் என்றோ ஒரு நாள் அழிந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளரும், மறுமைக்கு முன்பு அழிந்துவிடும் என மதக் கொள்கையாளர்களும் அறிவுறுத்துகிறார்கள். பூமியும் உயிரனத் தோற்றதிற்கும் இவர்களது பங்கு எதுவுமே இருந்ததில்லை என்று பார்க்கையில் உலகம் அழிந்தால் முன்பு போல் ஏற்படாமல் இருக்க ஏதாவது வெளிப்படையான தடைகள் அல்லது மீண்டும் உலகம் உருவாகவே ஆகாது என்று சொல்லவும் முடியுமா ? இயற்கையின் மாறுதல்கள் அதாவது கால சுழற்சியில், இயற்கையின் சூழலில் எதுவுமே நடக்கும், மாறும். இயற்கையின் செயல்பாடுகளின் வியப்புகளைப் பற்றிய சிந்தனைகளின் இரு கூறுகளே மதம் மற்றும் அறிவியல்.

இயற்கை / இயக்கம் என்பவை காலத்தில் (Domain of Time) நிலைத் தன்மை, நிலையாத் தன்மை என இருவகைத் தன்மையில் செயல்படுகிறது. இதில் நிலைத்த தன்மை பற்றி பேசுவது மதம், நிலையாத் தன்மையை ஆய்ந்து எழுந்தது அறிவியல்.

எந்த விதியும் காலத்தில் அடக்கம் (எல்லாம் இறைவனுக்கு கட்டுப்பட்டது என்பதாக) - Static Nature of 'Nature' - மதம் !

விதிகள் காலத்தால் மாறும் (எல்லாம் இயற்கை மாற்றத்துக்கு உட்பட்டது, நாம் அதன் மீது அமர்ந்து செல்ல முடியும்) - Dynamic Nature of 'Nature' - அறிவியல் !


(படத்தை பெரிதாகப் பார்க்க மேலே அமுக்கவும்)

17 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

வலையுலக மாத்ருபூதம் ...!
back to the form ?

:)


//கையில் தீவட்டி வைத்துக் கொண்டு தன்னை அடையாளம் காட்டுவது மதப் பற்று, அதே தீவட்டி மூலம் மாற்று மதத்தினரின் வீட்டைக் கொளுத்துவது மதவெறி, கொளுத்துவதற்கும், கையில் வைத்திருப்பதற்கும் அசம்பாவிதம் என்ற ஒரு நிகழ்வு இடையில் இல்லாதது மட்டும் தான் வேறுபாடு.//

எப்படிண்ணா இப்படியெல்லாம். சூப்பர்.. :)

RATHNESH சொன்னது…

//எந்த விதியும் காலத்தில் அடக்கம் (எல்லாம் இறைவனுக்கு கட்டுப்பட்டது என்பதாக) - Static Nature of 'Nature' - மதம் !

விதிகள் காலத்தால் மாறும் (எல்லாம் இயற்கை மாற்றத்துக்கு உட்பட்டது, நாம் அதன் மீது அமர்ந்து செல்ல முடியும்) - Dynamic Nature of 'Nature' - அறிவியல் !//

STATICஆகவும், DYNAMIC ஆகவும் இருப்பதாகச் சொல்லப்படும் NATURE-க்குத் தான் கடவுள் என்று பெயர் வைத்து நம்புகிறார்கள்.

//எனக்குத் தெரிந்து எந்த ஒரு மதங்களிலும் நேரடியாக இன்றைய தேதியின் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவே இல்லை, அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் மதவாதிகளின் திரித்தலே ஆகும்.//

முதல் இரண்டு வார்த்தைகள் உங்களை இந்த விஷயத்தில் முற்சார்பு எண்ணத்துடன் STATIC ஆக வைத்து விடாமல், DYNAMIC ஆக ஆக்கும் என்ற்று நம்புகிறேன்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

//எனக்குத் தெரிந்து எந்த ஒரு மதங்களிலும் நேரடியாக இன்றைய தேதியின் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவே இல்லை, அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் மதவாதிகளின் திரித்தலே ஆகும்.//

இதில் மட்டும் முரண்படுகிறேன். அதற்காக எதிர்பதிவு போட்டு டெலிட் செய்யும் நோக்கம் இல்லை :)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...

இதில் மட்டும் முரண்படுகிறேன். அதற்காக எதிர்பதிவு போட்டு டெலிட் செய்யும் நோக்கம் இல்லை :)
//

சொல்லுங்க ஸ்வாமி, அண்டம் பிண்டம் தண்டம் இல்லாது சொல்லுங்கள். அதனால் மக்கள் பெற்றிருந்த பயன் என்ன என்றும் சொல்லுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//STATICஆகவும், DYNAMIC ஆகவும் இருப்பதாகச் சொல்லப்படும் NATURE-க்குத் தான் கடவுள் என்று பெயர் வைத்து நம்புகிறார்கள். //

ரத்னேஷ்,

நான் இதில் கடவுள் மறுப்பு / ஏற்பு பற்றி எதுவும் எழுதவில்லை. அப்படி எதும் சொற்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். 'கடவுள்' தன்மை பற்றி நன்கு அறிந்தவன் என்பதால் அது போன்ற முடிவுகளை நான் முன்வைப்பது இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//முதல் இரண்டு வார்த்தைகள் உங்களை இந்த விஷயத்தில் முற்சார்பு எண்ணத்துடன் STATIC ஆக வைத்து விடாமல், DYNAMIC ஆக ஆக்கும் என்ற்று நம்புகிறேன்.//

அறிவியல் மதம் இதில் இரண்டிலும் எனக்கு எந்த சார்ப்பு நிலையும் இல்லை,
http://govikannan.blogspot.com/2008/11/blog-post_12.html
இதில் அறிவியல் பற்று கொண்டோரைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

தருமி சொன்னது…

//...'சாத்தான்' என்கிற ஒன்றை புகுத்தி வைத்திருக்கிறார்கள்//

கதாநாயகன் இருக்கும்போது வில்லன் இல்லாமலா ...?

சங்கணேசன் சொன்னது…

//ரத்னேஷ்.....
STATICஆகவும், DYNAMIC ஆகவும் இருப்பதாகச் சொல்லப்படும் NATURE-க்குத் தான் கடவுள் என்று பெயர் வைத்து நம்புகிறார்கள். //

// கோவியார்....

நான் இதில் கடவுள் மறுப்பு / ஏற்பு பற்றி எதுவும் எழுதவில்லை. அப்படி எதும் சொற்கள் இருந்தால் குறிப்பிடுங்கள். 'கடவுள்' தன்மை பற்றி நன்கு அறிந்தவன் என்பதால் அது போன்ற முடிவுகளை நான் முன்வைப்பது இல்லை.//


‘கடவுள்' தன்மை = கடவுள் ‘தன்மை'

great thought...

சரவணகுமரன் சொன்னது…

சூப்பர்

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
//...'சாத்தான்' என்கிற ஒன்றை புகுத்தி வைத்திருக்கிறார்கள்//

கதாநாயகன் இருக்கும்போது வில்லன் இல்லாமலா ...?
//

சாத்தான் எழுதிய மத நூல் எதுன்னு தான் தெரியல.

கோவி.கண்ணன் சொன்னது…

சங்ககணேசன்,

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

சரவணக்குமரன்,

நன்றி !

NO சொன்னது…

தயவு கூர்ந்து யாராவது நண்பர் திரு கோவி அண்ணனின் வாயை மூடினால் (அல்லது கையயை கட்டிப்போட்டால்) நாட்டுக்கு நன்மை பயக்கும்!!!!

ஒரே ஒரு ஆறுதல், இந்த கொடுமையை படிப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே என்பதுதான். An epidemic cannot be created with only a miniscule population.

இது கொடுமை என்றால், Homosexuality பற்றி அண்ணன் அவர்கள் பக்கம் பக்கமாக அடித்து விட்டது உளறல்களின் உச்சக்கட்டம்!!! அன்பான அண்ணனின் total Ignorance on subject matters that he wants to write about and his overal intelectual capacity to coherently compose meaningfull pieces பற்றி நான் சில மாதங்களுக்கு முன்னமே பக்கம் பக்கமாக எழுதிவிட்டேன். இன்றைக்குதான் நீங்கள் உங்கள் reel விடும் பழக்கத்த்தை இன்னுமும் விடவில்லை என்று புரிந்தது (ரொம்ப நாட்களுக்கு பிறகு அவரின் தளத்திற்கு வர நேரம் கிடைத்தது).

ப்லோக் எழுதும் வியாதி உங்களுக்கு மிக தீவிரமாக பற்றிக்கொண்டதால், உங்களை உங்களாலேயே திரித்திக்கொள்ளும் கட்டத்தை தாண்டிவிட்டீர்கள் என்பது தெளிவாக புரிகிறது!

சகிக்கவில்லை ஐயா...............

தயவு கூர்ந்து முதலில் நன்றாக படியுங்கள்...... குப்பைகளை அல்ல....Peer reviewed articles on general science, history, biology, evolution and sociology and then......நீங்கள் எழுதுங்கள்......!

அப்படி நீங்கள் படிப்பீர்களானால் கண்டிப்பாக எழுதமாட்டீர்கள் இந்த மடத்தனத்தை எல்லாம்.....ஏனென்றால் ....Once you read properly the things writen by qualified people then you will know that your knowledge levels are totaly unfit to create your own fancifull, unsubstanstiated, ignorant, foolish and downright false theories!!!!!

எழுதவேண்டும் என்ற அரிப்பு என்ன ஆனாலும் போக மறுக்கிறதா.....இருக்கவே இருக்கிறது, சிறு கதைகள். எந்த மடத்தனத்தை வேண்டுமானாலும் கக்குங்கள் கதை என்ற பேரில். யார் உங்களை கேட்கப்போகிறார்கள்........ஏன் திரு லக்கி லுக் என்ற ஒருவர் இல்லையா......கதை என்ற போர்வயில் கண்ட குப்பைகளை அவர் கிறுக்கி தள்ளவில்லையா???? அவருக்குதான் ஜால்ரா அடிக்க ஒரு கூட்டமே இல்லையா?? உங்களுக்கு மட்டும் அது ஏன் இருக்கக்கூடாது!!! நீங்களும் அதை செய்தால் நான் ஏன் இப்படி வந்து திட்டப்போகிறேன்???? கதை..அதுவும் அசட்டுத்தனமான கதைகள் என்றாலும் திரு லக்கி லுக் பக்கமே நான் தலை வைத்துப்ப்படிப்பதில்லை தெரியுமா!!!! ஏனென்றால் அவை அப்பட்டமான அசட்டுத்தனமான, அவிந்துப்போன அரைபக்க அளப்புகள் மட்டுமே! There aro no facts in those and hence plain fictional idiocy that doesnt warrant anybody's attention at all!!!

நீங்களும் திரு லக்கி லுக் அக முயற்சி செய்யுங்கள் திரு கோவி அவர்களே...அதுதான் எல்லோருக்கும் நல்லது.....முக்கியமாக உங்களுக்கு...உங்கள் உடல் நலத்திற்கு....உங்கள் egoவிற்கு....உங்கள் எழுத்து அரிப்பிற்கு.................

உங்கள் ஸ்டைலில் ஒரு பஞ்ச் (நீங்கள் கோவி பன்ச் என்ற போட்டுக்கொண்டு உளறுவது போல்) : ".........................................................."

என்ன இது ஒன்றும் இல்லை, வெற்று இடமாக இருக்குதே என்று பார்க்குறீர்களா? வேறு ஒன்றும் இல்ல, உங்கள் பன்ச் is as good as empty space ......both signifies nothing!!!!

நிறுத்துங்கள் ஐயா....நிறுத்துங்க.........இல்ல கதை எழுதுங்க..............உலகம் ரெண்டு லக்கியை கண்டிப்பாக தாங்கும்.............

நன்றி (மீண்டும் சத்தியமாக வரவே மாட்டேன்)

கோவி.கண்ணன் சொன்னது…

திருவாளர் No,

எப்போதும் ஆங்கில வா(ந்)தி எடுக்கும் நீங்கள், என் பதிவுக்கு தமிழில் பின்னூட்டம் இட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டிங்க...!

அவ்வ்வ்வ்வ் ஹவ்வ்வ்வ்வ்வ்வ் ?

//நன்றி (மீண்டும் சத்தியமாக வரவே மாட்டேன்)//

இப்படியெல்லாம் சொல்லப்படாது, மிஸ்டர் நோ குணமாகிட்டாரா ? ஏன் இப்போதெல்லாம் அவரு பின்னூட்டுவதில்லைன்னு பலர் என்னை பிராண்டி எடுக்கிறார்கள். அவர்களுக்காக தயவு பண்ணி மீண்டும் மீண்டும் வாங்கோ......!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

welcome back Mr.NO

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

நோ போகாதிங்க....

உங்களுக்காக பல நாட்களாக நாங்கள் தவமிருக்கிக்கிறோம்

Unknown சொன்னது…

>>>>>இன்றைய ஆன்மிகம் என்பது மதவாதிகளின் பிடியில் திணறிக் கொண்டு இருப்பதால் ஆன்மிகம் என்று சொல்லப்படுபதில் மேலோங்கி இருப்பது மதவாதமே, <<<<


ஆமாம். அபத்தம். நான் ஆன்மீகம் என்று மனிதத்தையும் மனித நலனை உயர்த்தும் உணர்வுகளைப் பற்றியும் பேசிக்கொடிருக்கும்போது மதத்தைக் கொண்டுவந்து திணிப்பார்கள். பலரின் பார்வையில் மதம்தான் ஆன்மிகம்.


>>>>>மதப் பற்றுக்கும், மதவெறிக்கும் நூல் இழைவேறுபாடுதான், கையில் தீவட்டி வைத்துக் கொண்டு தன்னை அடையாளம் காட்டுவது மதப் பற்று, அதே தீவட்டி மூலம் மாற்று மதத்தினரின் வீட்டைக் கொளுத்துவது மதவெறி, கொளுத்துவதற்கும், கையில் வைத்திருப்பதற்கும் அசம்பாவிதம் என்ற ஒரு நிகழ்வு இடையில் இல்லாதது மட்டும் தான் வேறுபாடு. அசம்பாவிதம் நடந்தால் கையில் இருப்பது எதிரியின் மீது வீசப்பட்டுவிடும். 'எனக்கு மதப்பற்று இருக்கிறது மதவெறி இல்லை' என்போர்கள் அசம்பாவித சூழலில் இல்லாதவர்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.<<<<

பொன்னெழுத்துக்கள். மிக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்


>>>மதங்கள் மனித சிந்தனைகளை, கேள்வி கேட்பதை விரும்புவதில்லை, அப்படியே செய்தாலும் அதற்குள் தான் சிந்திக்கவேண்டும், சொல்லப்படும் பதிலைத் தான் ஏற்கமுடியும் என்பதாகவே மதவாதிகள் சிந்தனைத் தடைகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.<<<<<


மிகவும் சரி


>>>எனக்குத் தெரிந்து எந்த ஒரு மதங்களிலும் நேரடியாக இன்றைய தேதியின் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவே இல்லை, அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் மதவாதிகளின் திரித்தலே ஆகும். <<<<<


சூப்பர்இயற்கை / இயக்கம் என்பவை காலத்தில் (Domain of Time) நிலைத் தன்மை, நிலையாத் தன்மை என இருவகைத் தன்மையில் செயல்படுகிறது. இதில் நிலைத்த தன்மை பற்றி பேசுவது மதம், நிலையாத் தன்மையை ஆய்ந்து எழுந்தது அறிவியல்.

அருமையான முத்தாய்ப்பு

அன்புடன் புகாரி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்