பின்பற்றுபவர்கள்

7 ஜூலை, 2009

ஊரார் கண்ணில் வெண்ணை !

இந்தியாவில் அகதிகளாக குடியேறி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை, ஊட்டியில் உள்ள திபெத்தியர்கள் கோலாகலமாகக் கொண்டாடினர். - என்கிற செய்தியை தினமலரில் படித்தேன்.

இந்தியாவுக்குத்தான் எவ்வளவு பெருந்தன்மையான மனது !!! என்று எண்ணும் முன் தமிழ்நாட்டின் வங்கக் கடலோரம் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களை நினைத்துப் பார்த்ததும் இந்தியாவின் கரிசனம் பல் இளிக்கிறது. வேறொரு நாட்டில் இந்திய வம்சாவளியோ, இந்திய இனத்தைச் சேராதவர்களுக்கு இரக்கப்பட்டு பல்வேறு வசதிகளையும், படம் நன்றி : தினமலர்அவர்களின் நாடுகடந்த அரசியலுக்கு ஆதரவு கொடுத்து கொண்டாடும் நிலைக்கு வைத்திருக்கும் அரசு, இந்திய இனத்தைச் சேர்ந்த தமிழர்களை முகாம்கள் என கண்கானிப்புடன் கூடிய திறந்த வெளிச் சிறைச் சாலையைப் போல் வைத்திருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் 'இந்தியாவின்' நிலைப்பாடுகள் என்பதைத் தாண்டி இந்திய ஆட்சியாளர்களின் நிலைப்பாடுகள் ஒருதலையாக இருப்பதை ஆதாரத்துடன் காட்டுவதாகவே விளங்கிக் கொள்ள முடிகிறது.

திபெத்தியர்களுக்கு தஞ்சம் அளிப்பதால் இந்தியா மனித நேயம் போற்றும் நாடு என்கிற உலகப் பார்வை கிடைக்க ஆடும் நாடகமா ? உண்மையிலே மனித நேயம் தான் காக்கப்பட்டுகிறதா ? அப்படி என்றால் ஈழத்தமிழர்களின் கண்களில் சுண்ணாம்பு வைப்பதற்கு இராசீவ் படுகொலையின் காரணமாக பிராபகரன் மீது இருக்கும் தனிமனித வெறுப்பும் தான் காரணமா ? உலக தமிழர்களில் ஒரு பகுதியினர் தங்களை தனிநாட்டுடன் அடையாளப்படுத்திக் கொள்வதை இந்தியா விரும்பவில்லையா ?

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் இந்தியாவிற்கு வந்தவர்கள் மட்டும் தான் ஈழம் திரும்பிச்
மண்டபம் முகாம்செல்லும் நாளை எதிர்பார்க்கின்றனர், ஏனெனில் இந்தியாவில் தான் அவர்களது வாழ்வியல் நிலையில் உயிர்பாதுகாப்பு தவிர்த்து எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. இது இந்தியாவுக்கு பெருமையா ? இதைத் தெரிந்து ஈழ எதிர்பாளர்கள் புலம் பெயர்ந்து பிற நாடுகளுக்குச் சென்ற ஈழத்தமிழர்கள் ஈழச் செய்திகள் அறிந்து கொள்வதைத் தவிர்த்து, ஈழம் திரும்பிச் செல்வது பற்றி பேசுவதில்லை என்றெல்லாம் 'தேசபக்தி இல்லை' என்பதாகப் பேசி பினாத்துகிறார்கள். மற்ற நாடுகளும் ஈழத்தமிழர்களை அகதிகளாகத் தான் நடத்தி இருக்க வேண்டும் என்று ஈழ எதிர்பாளர்கள் எதிர்பார்த்து ஏமாந்ததினால் ஏற்பட்ட வெறுப்புதான் இந்த உளரலுக்குக் காரணாம்.

இந்தியா போடும் பல்வேறு வேடங்கள் இந்திய அரசியல் கட்சிகளின் ஒப்பணையால் ஒளிர்ந்து கொண்டே தொடர்கிறது ஈழ எதிர்பாளர்களின் ஜெய்ஹோ................. இரைச்சல்.

9 கருத்துகள்:

ஷாகுல் சொன்னது…

தீபெத்தியரின் முகாம்களில் சர்வதேச பள்ளிகள் முதல் அனைத்து வசதிகளும் இருக்கும் போது தமிழர்களின் முகாம்களில் அவர்கள் அடிமையை போலத்தான் நடத்தப்படுகிறார்கள்.

இது மட்டுமல்ல வங்காளபிரிவினையின் போது அதாவது இந்தியாவிலிருந்து கிழக்கு பாக்கிஸ்தானாக பிரிந்த போது அங்கிருந்து இந்தியாவிற்க்கு வந்தவர்கள் கூட இன்றளவும் அகதியாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.
//இந்தியா போடும் பல்வேறு வேடங்கள் இந்திய அரசியல் கட்சிகளின் ஒப்பணையால் ஒளிர்ந்து கொண்டே தொடர்கிறது ஈழ எதிர்பாளர்களின் ஜெய்ஹோ................. இரைச்சல்.//

செய்யுங்கோ ஏதாவது செய்யுங்கோ என அரசைதான் கேட்க வேண்டும்

அப்பாவி முரு சொன்னது…

வெக்கப்பட வேண்டிய விசயம்,

காலையில் தினமலரில் படித்ததும் எனக்கு இதே எண்ணம்தான்.

ஜெகதீசன் சொன்னது…

ஆம்!
இப்படிப் பட்ட இந்தியாவிற்குத் தான் சாபம் எதும் தரக்கூடாது...
பல்லாண்டு வாழ்க என வாழ்த்தனும்...

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அரசியல்ல இதெல்லாம் சக‌ஜமுங்க

ராஜ தந்திரம்

Suresh Kumar சொன்னது…

கையாலாகாத தமிழர்களாக மாறி போனோமே என தான் நினைக்க தோன்றுகிறது

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ஞாயமான கேள்விகள்தான்... பதில் சொல்லதான் முடியவில்லை

மணிகண்டன் சொன்னது…

ஈழத் தமிழருக்கான போராட்டங்கள் நம்மால் செய்யமுடிந்ததை வலியுறுத்தி இருக்கவேண்டும். இல்லையேல் இரு வேறு போராட்டங்களாக political, apolitical வகையை சார்ந்ததாக இருக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் நடக்கும் போராட்டங்கள் உணர்வுரீதியான வீராவேசம் அல்லது அரசியல் சார்ந்தவையாக திரிக்கப்படும் போராட்டங்கள்.

அகதி முகாமில் இருப்பவருக்கு வசதி செய்வது மூலம் லாபம் இல்லையென்றால் செய்யப்படாது. இவர்களின் நிலையை மற்றவர்க்கு எடுத்து செல்லாமல் தடுப்பதும் தமிழ் பேசும் நன்மக்கள் தான்.

ஈழ போராட்டத்தை தமிழ்நாட்டில் முன்னிறுத்தி செயல்படும் இயக்கங்கள் முயன்றால் அகதி முகாம்களின் நிலையில் நிச்சயம் மாற்றம் கொண்டுவர முடியும். முதலில் தமிழ்நாட்டில் இருந்து முகாம்களை வேறு மாநிலத்திற்கு மாற்றினால் தானாகவே முகாம்கள் வசதி பெறுமோ என்று சந்தேகமாக இருக்கிறது. நிற்க.

இன்றைய நிலையில் ஈழத்தில் உள்ள அகதி முகாம்களில் இருக்கும் மக்களுக்கு உதவி செல்லும் நிலையில் இருக்கும் ஒரே இலங்கை அரசு சாரா அமைப்பு sans medicins Frontiers. இவர்கள் 1986 ம் ஆண்டிலிருந்து வன்னியிலும், கிளிநொச்சியிலும் செயல்பட்டு வருகின்றனர். சென்ற ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் திருப்பி அனுப்பபட்டனர். இப்பொழுது மறுபடியும் IDP (internally displaced people) கேம்பிற்கு வெகு அருகில் மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு உலகெங்கிலும் செயல்பட்டு வருகிறது. இலங்கைக்கு பிரான்ஸ், நேதேர்லண்ட்ஸ், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த branches இல் வேலை செய்யும் மருத்துவர்கள் மற்றும் நர்ஸ் இலங்கைக்கு சென்றுள்ளனர். (35 பேர்). அதைத்தவிர இலங்கையை சேர்ந்த தமிழர் மற்றும் சில சிங்களவர்களையும் சேர்த்து 350 பேர் பணிபுரிகின்றனர். இன்றைய நிலையில் இவர்களுக்கு காம்பில் இருக்கும் தமிழர்களிடம் செல்வதற்கு direct access கிடையாது. இருந்தபோதிலும் உடல்நலம் மிக மோசமாக இருப்பவர்களை அரசாங்கம் இவர்களிடம் அனுப்பி வைக்கின்றனர். அப்படி வருபவர்க்கு உதவி செய்யவே இவர்களிடம் போதிய வசதிகள் இல்லை. நாங்கள் இரு வாரம் முன்பு அங்கு வேலை செய்து வந்த ஒரு paedetrician nurse சந்தித்தோம். அவரிடம் தேவைகளை அறிந்து செய்யமுடிந்த பொருளுதவி செய்யப்பட்டது.(மறுபடியும் செய்யமுடியும் ) மனநல மருத்துவருக்கான தேவையை அவர் வலியுறுத்தினார். நிச்சயமாக மனநல மருத்துவம் தமிழ் தெரிந்த ஒருவரால் தான் செய்யமுடியும். இதற்கான முயற்சிகளின் தமிழ்நாட்டில் இருந்து வரவேண்டும். அதே போன்று இந்த தகவல்கள் யாவும் தமிழ்நாட்டில் உள்ள அமைப்புகளுக்கு தெரியும். ஆனால் apolotical செயல்பாட்டுக்கு யாரும் ரெடியாக இல்லை.

திபெத்தில் இருந்து வந்த அகதிகளுக்கு இந்தியா செய்து வரும் உதவிகளுக்கு பெருமைபட்டுக்கொண்டு அதேபோன்று முயற்சிகளின் இலங்கை அகதிகளுக்கும் செய்யப்படவேண்டும்.

அதற்கு முதல்படியாக பிரிவினை, இனம், மொழி என்று வலியுறுத்தாமல் ஒரு மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக மட்டுமே கையாளப்படவேண்டும்.

ரவியின் முயற்சி தமிழ் ப்ளாக் எழுதுபவர்களிடம் இருந்து வந்த நல்ல முயற்சி.

கிடுகுவேலி சொன்னது…

இது ஒன்றும் புதிதல்ல..! காலம் காலமாக நடக்கிற ஒன்று. பாரத தேசத்தின் கொள்கை வகுப்பாளர்கள் ஏனோ இவ்வாறு நடக்கிறார்கள். அவர்கள் ஈழத்தமிழர்களை பார்க்கும் அந்த விஷப் பார்வையை தமிழக அரசியல் தலைவர்களும் அங்கீகரிப்பது கவலையை அதிகரிக்கிறது. இந்தியா ஒற்றைக்கண் மூடி ஒற்றைக்கண் திறந்து நியாயமற்ற அரசியல் நடத்துகிறது. (அரசியல் என்றால் நியாயம் இருக்காதுதானே)

மணிப்பக்கம் சொன்னது…

இந்தியாவை எந்த நாடும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! பாகிஸ்தான் இன்னும் எத்தனை குண்டுகள் வேண்டுமானாலும் இங்கு வந்து வெடிக்கலாம், இலங்கை சர்வதேச அரங்கில் என்ன வேண்டுமானாலும் நம்மை செய்யலாம்! பத்தாதிற்கு சீனா வேறு! இந்தியாவிற்கு மிகப்பெரிய அழிவு காத்திருக்கிறது. அவ்வளவு அலட்சியம் நம் மக்களுக்கு! இலங்கை அகதி என்றில்லை, தமிழனில் பாதிக்கும் மேற்ப்பட்டோர் அந்த நிலையில்தான் இருக்கின்றனர்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்