பின்பற்றுபவர்கள்

9 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 4

பகுதி 1பகுதி 2பகுதி 3
மனித உணர்வுகளில் வழி செயல்பாட்டிலும், பழக்க வழக்கங்களிலும் எது இயற்கை என்பது பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கிறது. எவையெல்லாம் இயற்கை எவையெல்லாம் இயற்கைக்கு எதிரானது என்பதை முடிவு செய்யும் போக்கு சமூகம் சார்ந்தது என்பதைவிட மதம் சார்ந்ததாகவே இருக்கிறது. சமூகம் சார்ந்த இயற்கை அந்த சமூகத்துக்கு பழக்க வழக்கங்கள், பழக்க வழக்கங்கள் என்பதால் அது ஏற்படுத்திக் கொண்ட ஒன்றுதான். உதாரணத்துக்கு வெளிநாட்டில் அறிமுகம் இல்லாதவன் ஒரு தமிழன் என்று அறிந்தால் இன்னொரு தமிழன் கண்டு கொள்ளாமல் போவான். அதுவே இரு மலையாளிகள் அறிமுகமாகதவர்கள் என்றாலும் மலையாளி என்று அறிந்தால்....'நிங்கள்கு பாலகாடோ' என்று பேசத் தொடங்குவார்கள் ஆற்றாமையால் குறிப்பிட்டேன், சொல்லவந்தது அதுவல்ல. தான் சார்ந்துள்ள சமூகத்திற்காக தனிமனிதன் தனது செயலில் நடவடிக்கைகளில் மாற்றம் அமைத்துக் கொள்வது சமூகத்தினால் ஏற்பட்ட, ஏற்படுத்திக் கொண்ட இயற்கை செயல்பபடுகள் என்றாலும், பிற இனமக்களை ஒப்பிடும் போது செயற்கைத் தனமானது.

உடல்சார்ந்த செயற்கைத் தனம், இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. உடலில் பல்வேறு அழகு சிகிச்சைகள் செய்து கொள்வது, தலைமுடியின் நிறத்தை மாற்றிக் கொள்வது, பச்சை குத்திக் கொள்வது, பிறரின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பதற்கு உடலில் மாற்றத்தையும், உடனடியாக கவனம் ஈர்க்கும் ஆடைகளை அணிந்து கொள்வது இன்னும் பல செயற்கைத் தனங்கள், இவற்றை பலரும் விரும்பியே செய்கிறார்கள், அது சரி தவறு என்று சொல்லவரவில்லை, செயற்கை இயற்கைக்கு வைக்கப்படும் அளவுகோளில் தற்பால் புணர்ச்சி விருப்பை கொண்டு வரும் முன் மனித இனத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் உணர்வு / செயல்பாடு குறித்த அனைத்துமே இயற்கையான செயல்கள்தானா என்று சர்சை எழுப்புபவர்கள் சிந்தனை செய்து பார்க்கவேண்டும்.

உடல்சார்ந்த செயற்கை மா(ற்)றுதல் களில் இந்துக்கள் காதில் சிறு துளையிட்டு காதணிகள் அணிந்து கொள்ளப்படுகிறது. காதில் துளையிடும் பழக்கம் ஆதிவாசிகளாக (நாகரீக வளர்ச்சி இல்லாத காலகட்டங்களில் இருந்து - என்று எழுதத் தயங்குகிறேன், நாகரீகம் என்பது தம்மை உயர்த்திச் சொல்ல தற்கால சமூகம் அமைத்துக் கொண்ட சொல், எனக்கு உடன்பாடு இல்லை, இன்றைய நவநாகரீகம் என்று சொல்லப்படுபவை பல, பிற்காலத்தில் பிற்போக்குத் தனமாகக் கூட நினைக்கப்படலாம்) வாழ்ந்த போது ஏற்பட்டு தொடர்ந்து வரும் ஒரு பழக்கமாக இருக்கும், முகங்களை அழகாகக் காட்ட காதணி அணிவது நன்றாக இருக்கிறது என்பதால் பல்வேறு பிற இன சமூகங்களிலும் விருப்பமுடையவர்கள் காதில் துளையிட்டுக் கொள்கிறார்கள். ஆனால் இந்திய சமூகத்தில் இதற்குச் சொல்லப்படும் மறைமுகக் காரணம் 'காதில் துளையிடுவதன்' மூலம் அக்குபஞ்சர் போல் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்களை குறைக்க பயன்படுகிறது, அதற்காகத் தான் நம் முன்னோர்கள் செய்து கொண்டார்கள் என்று கதை விடப்படுக்கிறது. மற்றொன்று விருத்த சேதனம் (சுன்னத்) என்று சொல்லப்படுகின்ற ஆண்குறியின் மொட்டு (Glans) பகுதியின் மென்மையைப் காக்கும் முன்தோலை (Foreskin) அகற்றிக் கொள்ளும் யூதச் சடங்கு, விருத்தசேதனம் யுதப்பழக்கமாக இருந்தது பின்னார் இஸ்லாம் சமயத்தினராலும் பின்பற்றப்படுகிறது.

முன்தோலை அகற்றிக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்று சொல்லப்படும் காரணங்கள்.

1. உடல் தூய்மை பேணுகிறது, 2. நோய் தொற்றுவதை (ஓரளவுக்கு) குறைக்கிறது, இதில் தவறு ஒன்றுமே இல்லை. சொல்வதும் உண்மைதான். முன் தோலில் தங்கும் கழிவுப் படலம் (கலோக்கியல் ஆங்கிலத்தில் Cock Cheese என்று சொல்லப்படும், smegma - sebaceous paste collects under the foreskin near the base of the head) முன் தோலை அகற்றிக் தடுக்கப்படுகிறது அதன் மூலம் பால்வினை நோய்கள் தொற்றும் வாய்ப்புகளை 50 விழுக்காடு குறைக்கிறது ( முற்றிலும் தடுக்கிறது என்று சொல்லவதற்கு இல்லை) ஆனால் ஆண்குறி முனையின் (Glans) மென்மைகள் போய்விடும் என்பதால், நீண்ட நேரம் உறவு கொள்ள விரும்புவர்களுக்கு பயனாக இருக்கும். அல்லது உடல் ரீதியான குறையால் மனம் செயல்பாடுகளின் வழி உணர்வுகளை கட்டுப்படுத்தி தேவையான நேரம் உறவு கொள்ள இயலாதாவர்களுக்கு மென்மையற்றதன்மை பயனளிக்கும். சிலருக்கு பிறவியினாலும் ஒரு சில திடீர் உடல் நோய்களால் முன் தோல் இழுவை (Flexiblity) தன்மை இல்லாமல் மிகவும் குறுகியதாக விட்டமாக இருக்கும், அவர்கள் அகற்றிக் கொள்வதால் பயன் உண்டு. மற்றபடி இது மனித குலத்துக்கே பயனானது அனைவரும் செய்து கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டுதால், அறிவுறுத்தல் தவறான ஒன்று.

உடலில் இருக்கும் அனைத்து வகையான அமைப்புகளிலும் நகமும், மயிரும் தான் வெட்டினாலும் வளரும் தன்மை உடையது, வெட்டுவேண்டும் என்பதாலாயே எப்போது வளரும் தன்மையும் உடையது. முடி உடல் வெப்ப நிலையை சீர்படுத்தவும், நகம் விரல் செயல்பாட்டில் அழுத்தம் கொடுக்கும் போது விரல் முனையை பாதுகாக்கவும் இருக்கிறது, மற்ற உடல்பாகங்கள் எவையும் வெட்டினால், வெட்டுபட்டால் வளருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் அதன் தேவைகள் இன்றியமையாத ஒன்றாகவே இயற்கை அமைப்பின் கூறுகளாகவே உள்ளன. ஆண்குறி மொட்டின் மென்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதால் முன் தோலும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. வெறும் உடல் தூய்மைக் கெடலாம் அதானால் அகற்றிக் கொள்வது நல்லது என்றால், ஒரு நாள் பல் துலக்காவிடினும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதையும், பற்சிதைவு ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும். காய்சலைவிட பல்வலி கொடுமையானது, நீங்கள் தண்ணீர் இல்லாத ஊருக்குச் சென்றால் உங்களால் பல்விளக்க முடியாமல் போகலாம், வாயில் துர்நாற்றம் ஏற்படும், பல்வலி ஏற்படும், அதனால் முன்யோசனையாக பற்கள் அனைத்தையும் அகற்றிவிடுங்கள், உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என்ற அறிவுறுத்தல் எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தனம் விருத்த சேதனம் அனைவரும் செய்து கொள்வதே நலம் என்கிற அறிவுறுத்தல்.

நாள்தோறும் குளிக்கிறோம், ஆண்குறி முனையை மூடி இருக்கும் தோல் பகுதியை பின்னால் தள்ளிவிட்டு கழுவ எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் ? அதுமிகவும் கடினமான செயலா ? பால்வினை நோய் தொற்றுவதைத் தடுக்க அகற்றிக் கொள்ளலாம் என்றால் அப்படி விலைமகளிரிடம் செல்பவர் மட்டும் தானே அதையெல்லாம் செய்து கொள்ளவது நல்லது. நல்ல ஒழுக்கத்துடன், தூய்மையுடன் உடல் நலம் பேணும் ஆண்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக விருத்தசேதனம் செய்வதே சரி என்பது தவறான கூற்றாக கருதுகிறேன். விருத்தசேதனம் செய்து கொள்ள வழியுறுத்த்துவது மதம் சார்ந்த வழியுறுத்தல் தவிர அதை மறைத்துச் சொல்லப்படும் தூய்மைக் காரணங்கள் சொற்பமே, உடல் தூய்மை அன்றாடம் பேணுவோருக்கு தேவையற்றதும் ஆகும். யூதர்களிடமோ, அவர்களுக்கு முன் காட்டுவாசிகளிடமோ உடல் தூய்மை பேனாத காரணத்தினால் இந்தப் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது இனப்பழக்கமாகி, பின்னர் அந்தப் பகுதியில் தோன்றிய மதம் என்பதால் இஸ்லாமிய பழக்கமாக இவை ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது என்பதைத் தவிர்த்து இந்த வழக்கத்தின் தோற்றம் குறித்து மிகச் சரியான காரணங்கள் தெரியவில்லை. முன்தோல் (Foreskin) அகற்றிக் கொள்வது காது குத்திக் கொள்வது போல் மதவழிச் சடங்கு தான். யூத இனத்தில் தற்பொழுது விருத்தசேதனம் செய்து கொள்வது தவர்க்கப்படுகிறது.

எது இயற்கை, எது செயற்கை என்பதை மதம் தான் முடிவு செய்கிறது, இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கு அல்ல.

Ref: http://www.cirp.org/ ; http://www.historyofcircumcision.net/

தொடரும்...

9 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

தோடு டிசைன் அருமை ...

நட்புடன் ஜமால் சொன்னது…

மென்மையைப் காக்கும் முன்தோலை (Foreskin) அகற்றிக் கொள்ளும் யூதச் சடங்கு, விருத்தசேதனம் யுதப்பழக்கமாக இருந்தது பின்னார் இஸ்லாம் சமயத்தினராலும் பின்பற்றப்படுகிறது.\\

இது சரிதானா ?

Prasad Raj சொன்னது…

சிந்திக்க வைக்கும் பதிவு. மிக அழகு.

கோவி அவர்களே, நீங்கள் சிந்தித்த விதம் அழகு.

இப்படி உடல் பாகங்களை அறுத்து அகற்றிக்கொண்டே போனால், உடம்பில் விட்டு வைப்பதற்க்கு ஒன்றும் இருக்காது என்று தோன்றுகிறது.

அருமையான பதிவு.

உங்க‌ள் இந்த‌ க‌ருத்தை ப‌ல‌ த‌டவை...இதற்க்கு முன்னால் சிந்தித்த‌வ‌ன் என்ப‌தால்...மிக‌வும் ர‌சித்தேன்.

ப‌திவுக்கு ந‌ன்றி.


உங்கள் பதிவில் பிடித்தது:::



"நாள்தோறும் குளிக்கிறோம், ஆண்குறி முனையை மூடி இருக்கும் தோல் பகுதியை பின்னால் தள்ளிவிட்டு கழுவ எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் ? அதுமிகவும் கடினமான செயலா ? பால்வினை நோய் தொற்றுவதைத் தடுக்க அகற்றிக் கொள்ளலாம் என்றால் அப்படி விலைமகளிரிடம் செல்பவர் மட்டும் தானே அதையெல்லாம் செய்து கொள்ளவது நல்லது"

கிறுக்குப்பையன் சொன்னது…

தங்களின் பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது...தாங்களின் கட்டுரை நீளமாக இருந்தாலும் சுவராசியமாக இருந்தது...வாழ்த்துக்கள்

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

நயந்தாரா கையில பச்சை குத்தின படத்தை போடாததற்கு கடும் கண்டனங்கள்.

முகவை மைந்தன் சொன்னது…

ஆற அமர பேச வேண்டிதை (விசயத்தை தூக்கியாச்சு) இவ்வளவு விரைவா எழுதித் தள்ளுனா என்ன பண்றது? எனக்குக் கட்டுப்படி ஆகலை. ஓரமா கீறேன்.

தீப்பெட்டி சொன்னது…

அதான நானும் யோசிக்கிறேன்...

Unknown சொன்னது…

மூத்திரம் பேய்ந்து விட்டு கூட கழுவவேண்டும் என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம் .உலகத்தில் எந்த மதமும்
சுத்தத்தை இந்த அளவுக்கு போதிக்கவில்லை .அந்த இஸ்லாம் தான் இந்த தூய்மையையும் போதிக்கிறது .
மூத்திரம் பேய்ந்து விட்டு கூட கழுவாத ஜென்மங்கள் ,நீங்க எங்கடா அதை கழுக போகிறீர்கள் ?

கோவி.கண்ணன் சொன்னது…

பாலைவனத்தில் தண்ணீற்ற நாட்டில் 1400 ஆண்டுக்கு முன்பு குளிப்பது அறிது, குறைந்த பட்ச தூய்மை அறிவுறுத்தலுக்காக சிறுநீர் கழித்தபிறகு குஞ்சை கழுவ சொன்னது ஒரு அறிவுறுத்தல், அதுக்குமேல் அதில் ஆராய ஒண்ணுமில்லை, சுன்னத் செய்யாதவர்களுக்கு சிறுநீர் கழித்த பின் ஜட்டி அந்த அளவுக்கு ஈரமாவதில்லை, தவிர அன்றாடம் முன் தோலை பிதுக்கி கழுவி குளிப்பவர்களுக்கு சுன்னத் தேவையற்றதும் கூட

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்