பின்பற்றுபவர்கள்

1 ஜூலை, 2009

கலவை !

இந்த முறை சென்னை சென்று திரும்பும் போது இந்திய விமான சேவையின் இன்ப அதிர்ச்சி, விமானம் கிளம்பிய 29 ஆவது நிமிடம். விமானி அறையில் இருந்து அறிவிப்பு முதலில் ஆங்கிலத்தில் பிறகு தமிழில், கேப்டன் பெயர் சொன்னார்

'........பேசுகிறேன்...நாம் இப்போது 29 ஆயிரம் அடிக்கு மேலே பறந்து கொண்டிருக்கிறோம். வழக்கமாக 39 ஆயிரம் பறப்போம், குறும்தொலைவு விமானங்களுக்கு உயரக்கட்டுபாடு வைத்திருக்கிறார்கள், வழக்கமாக உயரமாக பறப்போம் நெடுந்தொலைவு விமானங்களுக்கு மட்டும் 39 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் , விமானத்துக்கு வெளியே -15 டிகிரி தட்ப வெப்பம் நிலவுகிறது, உள்ளே உங்கள் வசதிக்காக 25 டிகிரி வைத்திருக்கிறோம். நாம் சென்னை ஓடு தளத்தில் சுமார் நான்கு நிமிடம் பயணப்பட்டு, பிறகு சென்னையை கடக்கும் வரை புறப்பட்டதில் இருந்து 8 நிமிடங்கள் ஆகியது, இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்தமான் அழகிய தீவுகளைக் கடப்போம், இரவு நேரமாக இருப்பதால் உங்களால் அந்த காட்சியைக் காண முடியாது, பிறகு 2 மணி நேரத்தில் மலேசியா கோலாலம்பூர் மேலே பறப்போம், பிறகு அங்கிருந்து நேராக சிங்கப்பூரை சிங்கப்பூர் நேரப்படி காலை 7 1/2 மணிக்கு அடைவோம். சிங்கையின் தற்போதைய தட்பவெப்பம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அங்கு சுமாராக 25 டிகிரி இரவு நேர வெப்பம் நிலவுகிறது. எங்களது விமானப் பணிப்பெண் குமாரி ...... மிகவும் திறமையானவர், அவரது தலைமையில் செயல்படும் பணியாளர்கள் உங்களையெல்லாம் அன்பாக கவனித்துக் கொள்ள உங்கள் பயணம் மகிழ்ச்சியாக அமையும். எங்களது விமான சேவையை தேர்ந்தெடுத்தத உங்களுக்கு எங்களது நன்றி. ஜெய் ஹிந்த்"

வழக்கமாக இந்தியில் / ஆங்கிலத்தில் கேட்கும் விமான குரல்கள் இந்த முறை தமிழிலும் கேட்ட போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த விமானிக்கு பாராட்டுகள்.

அது மட்டுமல்ல உற்சாக பானம் சாப்பிடுபவர்கள் 'பியர்' கேட்கும் போது திறந்து தான் தருவார்கள், திறக்க வேண்டாம் கொடுங்கள் என்றால் தரமாட்டார்கள், சிலர் பயணம் முடிந்து பிறகு தனக்கு பிடிக்காவிட்டாலும் நண்பர்களுக்கு கொடுக்கலாம் என்று 'பியர்' டின் திறக்காமல் கேட்டு வாங்கி வைத்துக் கொள்வார்கள். இந்த முறை பயணத்தின் போது திறக்காமல் கேட்டவர்களுக்கு அப்படியே தந்தார்கள். இந்தியன் வான்வழி விமான சேவை தரம் மேம்பட்டு இருக்கிறது என்றும் சொல்ல முடியவில்லை. முன்பெல்லாம் அதிகாலை தரை இறங்கினால் வாழை இலையில் சுற்றிக் கட்டிய மல்லிகைப் பூவை விருப்பப்படும் பெண்களுக்கு கொடுப்பார்கள், தற்போது இல்லை. மேலும் மிதமான சூடுநீரில் நனைத்து பிழியப்பட்ட துண்டு துணியை முகம் துடைத்துக் கொள்ளக் கொடுப்பார்கள் அதுவும் நடப்பில் இல்லை. பயன்படுத்திய போர்வைகளைக் கொடுக்கிறார்கள் என்றும் சிலர் சொல்லுகிறார்கள். விமான ஊழியர்களுக்கு காலம் தாழ்த்தி ஊதியம் கொடுக்கிறார்களாம், பயணிகளுக்கான சிறப்பு சேவை குறைந்து போனதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சிங்கைக்கு வரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் உள்நாட்டு விமானம் தான், வரிசைக்கு ஆறு என 3 - 3 இருக்கைகள் நெருக்கமாகவும் நடுவில் சென்று வரும் வழியும் இருக்கும். படக்காட்சிகள் காட்டும் வசதி இந்த விமானங்களில் இல்லை. நேரத்திற்கு கிளப்பிவிடுகிறார்கள் அதுவே பெரும் சாதனைதான்.

***

சென்னையில் ஊர்திகள் மிகுந்துவிட்டதால் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கம் ஏற்படுகிறது. நானோ (nano) சிற்றுந்துகள் வந்துவிட்டால் போக்குவரத்து நெருக்கம் இன்னும் மிகுதி ஆகும். சிற்றுந்து வைத்திருக்கும் நடுத்தர வாழ்வாளர்கள் எண்ணிக்கை மிகுந்திருக்கிறது. பெருநகரத்திற்கு வெளியே கூடுவாஞ்சேரி, மறைமலை நகரில் பணி செய்பவர்கள் கூட சென்னைக்குள் குடி இருப்பதே காரணம், அதைத் தவிர்க்கவும் முடியாது, சென்னை புறநகரில் நல்ல வேலை, ஊதியம் கிடைக்கும், குழந்தைகளுக்கான படிப்பு ? அதற்காகத்தான் புறநகர் சென்றுவரும் தொல்லைகளை பொருத்துக் கொண்டு இருக்க வேண்டி இருப்பதாக சில நண்பர்கள் சொன்னார்கள். ஒரு நாளைக்கு 4 மணி நேரம் புறநகருக்கு வேலைக்கு சென்று வரக் கழிக்கிறார்கள், காலை 7 மணிக்கு சென்றால் திரும்பி வர மாலை 9 மணி ஆகிறதாம். கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை ஆனால் ஞாயமான ஆசை. பெரும் நிறுவனங்கள் குளிரூட்டிய பேருந்தில் அழைத்துச் செல்வதால் சுற்றுச் சூழல், புகை இவற்றில் உடல் நிலை தாக்கம் ஏற்படுவது குறைந்திருக்கிறது. இல்லை என்றால் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரப்பயணம் வாழ்நாட்களை அரை(குறை)த்து விடும்.

***

ஏதும் நோய்வந்ததும், மருத்துவர் பரிந்துரையினால் உடற்பயிற்சி நடைபெயற்சி செய்யும் வழக்கம் மிகுந்திருக்கிறது, வரும் முன் உடற்பயிற்சி செய்தால் என்ன ? சென்னை ஜீவா பூங்காவில் நடுவயதைக் கடந்த ஆண்களும் பெண்களும் நடைபயிற்சி செய்கிறார்கள். கூட்டம் மிகுதியால் அனைவரும் எதோ ஊர்வலம் செல்வது போன்று இருந்தது. இந்த இடத்தில ஒரு ஆன்மிகச் செய்தியைச் சொல்லிவிடுகிறேன். குறிப்பாக தமிழ்நாட்டில் ஒவ்வோர் ஊரிலும் குறைந்த அளவாக ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பெரிய கோவில்களும், பெரிய மதில்களுடன் நீளமான சுற்றுகள் (பிரகாரம்) வைத்திருந்தது, நம்ம ஆட்களுக்கு நடைபயிற்சி செய்யத் தான். குறைந்தது மூன்று முறை வலம் வரும் போது உடல் நிலை சீர்படுவதற்கு உதவுகிறது. நீங்கள் நாத்திகன் ஆனாலும், பெரிய பெரிய கோவிலுக்கு போங்க, வலமாக சுற்ற விருப்பம் இல்லை என்றால் இடமாக சுற்றுங்கள், உடல் நலத்துக்கு நல்லது தான். அதுக்காக கிரிவலம் சென்று 'திருடர்களிம்' சிக்கிக் கொள்ளாதீர்கள்

40 கருத்துகள்:

நிகழ்காலத்தில்... சொன்னது…

\\நீங்கள் நாத்திகன் ஆனாலும், பெரிய பெரிய கோவிலுக்கு போங்க, வலமாக சுற்ற விருப்பம் இல்லை என்றால் இடமாக சுற்றுங்கள், உடல் நலத்துக்கு நல்லது\\

இடப்புறமாக சுற்றுவதால் உடலில் உள்ள ஆற்றல்களம் குறைவு படும்.

வலப்புறமாக சுற்றுவதால் ஆற்றல்களம் வளம் பெறும்.

ஆகவே வலச்சுழலாகவே சுற்றி வாருங்கள்.

இது அறிவியல்தானுங்க, மூடநம்பிக்கையா நினைக்காதீங்க.,

கோவி.கண்ணன் சொன்னது…

//நிகழ்காலத்தில்... said...
\\நீங்கள் நாத்திகன் ஆனாலும், பெரிய பெரிய கோவிலுக்கு போங்க, வலமாக சுற்ற விருப்பம் இல்லை என்றால் இடமாக சுற்றுங்கள், உடல் நலத்துக்கு நல்லது\\

இடப்புறமாக சுற்றுவதால் உடலில் உள்ள ஆற்றல்களம் குறைவு படும்.

வலப்புறமாக சுற்றுவதால் ஆற்றல்களம் வளம் பெறும்.

ஆகவே வலச்சுழலாகவே சுற்றி வாருங்கள்.

இது அறிவியல்தானுங்க, மூடநம்பிக்கையா நினைக்காதீங்க.,
//

நீங்கள் குறிப்பிடுவதற்கு அறிவியல் காட்டுகள் இருக்கிறதா என்று தெரியவில்லை. பூமி இடப்புறம் தானே சுற்றுகிறது.

வலக்கையை மிகுதியாகப் பயன்படுத்துவதால் வலப்பக்கம் சுற்றுவது இயல்பானதாகக் கொள்ளப்படுகிறது என்பதைத் தவிர்த்து வேறு காரணங்கள் தெரியவில்லை.

அப்பாவி முரு சொன்னது…

அண்ணே மூன்று விசயமும் டாப்பு...

பயணக்கட்டுரை இதுதானா? இல்லை இனிமேல் வருமா?

முகவை மைந்தன் சொன்னது…

இந்திய வானூர்திகளில் தமிழா!!!! வரவேற்கிறேன்.

தமிழ் சொன்னது…

கலவை
கலக்கல்

இடுகையில்
இன்ப அதிர்ச்சி
அன்னைத்தமிழில்
அளித்த
அறிவிப்பை
அடி பிறழாமல் தந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
அண்ணே மூன்று விசயமும் டாப்பு...

பயணக்கட்டுரை இதுதானா? இல்லை இனிமேல் வருமா?
//

முரு,
ஏற்கனவே சீசன் டிக்கெட் எடுத்தாச்சான்னு பலரும் கேட்கிறார்கள், அப்பறம் பயணக் கட்டுரை எழுதினால் ஆண்டுமுழுவதும் எழுத வேண்டி இருக்கும்.

Unknown சொன்னது…

//வரும் முன் உடற்பயிற்சி செய்தால் என்ன?//
நானும் ஒரு நான்கு வருடமாக தொடங்கி, பின் விட்டு விடுகிறேன். இந்த முறை சிறிது கூடுதல் ஆர்வத்துடன் தொடங்க(?) இருக்கிறேன்.

என்ன ஜிகே. நிறைய சுற்றிச்சுற்றி வருகிறீர்களே!.

இந்த முறை யோசித்தது போல அங்கே முடியவில்லை. அடுத்த ஆண்டில் இறைவன் நாடினால்....

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவை மைந்தன் said...
இந்திய வானூர்திகளில் தமிழா!!!! வரவேற்கிறேன்.

10:38 AM, July 01, 2009
//

வானுந்து என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்

துளசி கோபால் சொன்னது…

நல்ல சேதிகளுக்கு நன்றி.

நடந்துருவோம் கோவில்கோவிலாய்:-)

புண்ணியமும் சேர்த்தமாதிரி ஆச்சு!!

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
//வரும் முன் உடற்பயிற்சி செய்தால் என்ன?//
நானும் ஒரு நான்கு வருடமாக தொடங்கி, பின் விட்டு விடுகிறேன். இந்த முறை சிறிது கூடுதல் ஆர்வத்துடன் தொடங்க(?) இருக்கிறேன்.இந்த முறை யோசித்தது போல அங்கே முடியவில்லை. அடுத்த ஆண்டில் இறைவன் நாடினால்....

10:50 AM, July 01, 2009
//

சுல்தான் ஐயா,

மே மாதம் முடிவதற்குள் உங்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரும், நண்பர்களிடம் அளவளாவிட்டு ஒரு பதிவர் சந்திப்பை உங்கள் பொருட்டு ஏற்பாடு செய்யலாம் என்றிருந்தேன். விரைவில் சந்திப்போம்.

//என்ன ஜிகே. நிறைய சுற்றிச்சுற்றி வருகிறீர்களே!. //

சுற்றிவருவதா ? சூழல் அமைந்துவிட்டது ! செலவு தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ்மிளிர் said...
கலவை
கலக்கல்

இடுகையில்
இன்ப அதிர்ச்சி
அன்னைத்தமிழில்
அளித்த
அறிவிப்பை
அடி பிறழாமல் தந்தது.
//

மிக்க நன்றி திகழ்மிளிர்

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
நல்ல சேதிகளுக்கு நன்றி.

நடந்துருவோம் கோவில்கோவிலாய்:-)

புண்ணியமும் சேர்த்தமாதிரி ஆச்சு!!

10:51 AM, July 01, 2009
//
கண்டிப்பாக பாராட்டுவீர்கள் என்று தெரியும். அதனால்
இந்தப் பதிவு உங்கள் கண்களில் பட வேண்டும் என்று நினைத்தேன்.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

///கேப்டன் பெயர் சொன்னார்

'........பேசுகிறேன்.///

கேப்டன் பெயர் தமிழ் நாட்டில் இருக்கும் குழந்தைக்கு கூட தெரியும். அதை மறைக்க முயற்சிக்கும் கோவி.கண்ணன் போன்ற எதிர்கட்சிக்காரர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.


ஏன் வலம் சுற்ற வேண்டும் ?
--------------------------

ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மண்ணை கொஞ்சம் போடுங்கள். ஒரு குச்சியை நீரில் அதில் வலமாக கலக்கினால் மண் துகள் கீழே படியும். இடமாக கலக்கினால் படிய அதிக நேரம் எடுக்கும்.

நம் மனக்கசடுகளை எளிதில் படிய செய்ய.. வலஞ்சுற்றுங்கள் (ப்ரதிக்‌ஷிணா)

இடது கை பழக்கம் இருப்பவர்களுக்கும் மனம் என்பது ஒன்றே தான். ( இடது கை பழக்கம் இருப்பவர்களும் வாய் மூலம் தான் உணவு அருந்துவார்கள்)
அதனால் அவர்களும் வலசுற்றுங்கள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

அந்த விமானிக்கு பாராட்டுகள்.\\


சந்தோஷத்துடன் ...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் 11:05 AM, July 01,
ஏன் வலம் சுற்ற வேண்டும் ?
--------------------------

ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் மண்ணை கொஞ்சம் போடுங்கள். ஒரு குச்சியை நீரில் அதில் வலமாக கலக்கினால் மண் துகள் கீழே படியும். இடமாக கலக்கினால் படிய அதிக நேரம் எடுக்கும்.

நம் மனக்கசடுகளை எளிதில் படிய செய்ய.. வலஞ்சுற்றுங்கள் (ப்ரதிக்‌ஷிணா)

இடது கை பழக்கம் இருப்பவர்களுக்கும் மனம் என்பது ஒன்றே தான். ( இடது கை பழக்கம் இருப்பவர்களும் வாய் மூலம் தான் உணவு அருந்துவார்கள்)
அதனால் அவர்களும் வலசுற்றுங்கள்.//

திருப்பூர்காரருடன் நிகழ்காலக் கூட்டா ? :) நல்லா இருங்க !

இதுவரைச் சுற்றாதவர்கள் எப்படிச் சுற்றினால் என்ன ?

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
அந்த விமானிக்கு பாராட்டுகள்.\\


சந்தோஷத்துடன் ...
//

நன்றி !

cheena (சீனா) சொன்னது…

அருமை அருமை - நாத்திகத்தின் அடிப்படையில் கோவிலுக்குச் செல்லும் நல்ல உள்ளம் வாழ்க

நான் பெரிய கோவிலில் சுற்றி இருக்கிறேன். ஒரு இடுகையும் போட்டதாக நினைவு. தேடிப்பார்த்து சுட்டி தருகிறேன்.

நல்லாவே கலக்கி இருக்கிங்க கோவி

ஜோ/Joe சொன்னது…

தமிழில் அறிவிப்பு - மகிழ்ச்சியான செய்தி.

கோவி.கண்ணன் சொன்னது…

//cheena (சீனா) said...
அருமை அருமை - நாத்திகத்தின் அடிப்படையில் கோவிலுக்குச் செல்லும் நல்ல உள்ளம் வாழ்க //

:)

கோவிலுக்குச் செல்ல நல்ல உள்ளம் / கெட்ட உள்ளம் வரையரை சரியா ? எதாவது வேண்டுதலுடன் / எதிர்பார்ப்புடன் செல்பவர்களே மிகுதி.
அந்த காலத்தில் மன்னர்களிடம் முறையிட்டார்கள்.

//நான் பெரிய கோவிலில் சுற்றி இருக்கிறேன். ஒரு இடுகையும் போட்டதாக நினைவு. தேடிப்பார்த்து சுட்டி தருகிறேன்.//

கொடுங்க கொடுங்க !

//நல்லாவே கலக்கி இருக்கிங்க கோவி

11:22 AM, July 01, 2009
//
:) நன்றி ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ/Joe said...
தமிழில் அறிவிப்பு - மகிழ்ச்சியான செய்தி.

11:22 AM, July 01, 2009
//

நன்றி ஜோ,

'உயர்' அதிகாரிகள் அந்த விமானியின் வேலைக்கு வேட்டு வைக்காமல் இருக்க வேண்டும்
:)

மாதேவி சொன்னது…

" தமிழிலும் கேட்ட போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது"

கற்கண்டு செய்தி.

"தமிழ்நாட்டில்...நடைபயிற்சி செய்யத் தான்"

உடல் நலத்தில் அக்கறையுடையோர்க்கு பயனுள்ள தகவல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மாதேவி said...
" தமிழிலும் கேட்ட போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது"

கற்கண்டு செய்தி.

"தமிழ்நாட்டில்...நடைபயிற்சி செய்யத் தான்"

உடல் நலத்தில் அக்கறையுடையோர்க்கு பயனுள்ள தகவல்.
//

பாராட்டும் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி மாதவி.

ச.பிரேம்குமார் சொன்னது…

விமான ஓட்டுனரும் நம்மள மாதிரி வலைப்பூவாளரா இருப்பாரோ?? ;)

சி தயாளன் சொன்னது…

விமானத்தில் தமிழ் ஆச்சரியமாக இருக்கு.
//விமான ஓட்டுனரும் நம்மள மாதிரி வலைப்பூவாளரா //

:-)))

//எங்களது விமானப் பணிப்பெண் குமாரி

//

வேணாம்...அழுதுடுவன்....:-))

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//வழக்கமாக இந்தியில் / ஆங்கிலத்தில் கேட்கும் விமான குரல்கள் இந்த முறை தமிழிலும் கேட்ட போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அந்த விமானிக்கு பாராட்டுகள்.//

மகிழ்ச்சியும் பாராட்டுகளும்

நையாண்டி நைனா சொன்னது…

கலவை மிக அருமை...

விமானத்தில் தமிழ் ஒலிபரப்பா... மிக நல்ல சேதி.
அப்புறம் இந்த பாதுகாப்பு செய்முறை விளக்கங்களையும் தமிழில் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே...(இருந்ததா அந்த விமானத்தில்?)

Radhakrishnan சொன்னது…

போக்குவரத்து இடைஞ்சல்களையும், விமானத்தில் ஏற்பட்ட தமிழ் அனுபவத்தையும், கோவில் பற்றிய விபரமும், உடல்நலத்தைப் பேணுவது குறித்தும் எழுதப்பட்ட அருமையான கட்டுரைக்கு நன்றி.

நாடோடி இலக்கியன் சொன்னது…

கலக்கல் கலவை,
அருமை..!

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

இந்தியா எவ்வளோ முன்னேற்றம் ஆகியிருக்கு என்பதை உங்க‌ள் பதிவு காட்டுகிறது . நல்ல பதிவு

அருமையாக உள்ளது .

என் பக்கத்துக்கு வாங்க‌

கோவி.கண்ணன் சொன்னது…

//ச.பிரேம்குமார் said...
விமான ஓட்டுனரும் நம்மள மாதிரி வலைப்பூவாளரா இருப்பாரோ?? ;)
//
பிரேம்குமார் ,
தெரியலையே. இருந்தால் மகிழ்ச்சி !

கோவி.கண்ணன் சொன்னது…

//’டொன்’ லீ said...


வேணாம்...அழுதுடுவன்....:-))
///

தம்பி சிங்கையில் வந்து அழுதாலும் நாங்களெல்லாம் கண்ணு தொடச்சி விடுவோம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
கலவை மிக அருமை...

விமானத்தில் தமிழ் ஒலிபரப்பா... மிக நல்ல சேதி.
அப்புறம் இந்த பாதுகாப்பு செய்முறை விளக்கங்களையும் தமிழில் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே...(இருந்ததா அந்த விமானத்தில்?)
//

கிட்டதட்ட காது கேளாதவர்களுக்கு காட்டும் செயல் விளக்கம் போல் தான் சொல்லுவார்கள். தமிழில் செய்தால் நல்லாதான் இருக்கும், சிங்கை, மலேசியா, இலங்கை விமானங்களில் நீங்கள் சொல்வது போல் சென்னை செல்லும் விமானங்களில் தமிழில் விளக்கம் சொல்லுவார்கள். மறைமுகமாக நம்ம நாடுதான் இந்தியை தேசிய மொழி என்கிறதே, பிறகு எப்படி ?

கோவி.கண்ணன் சொன்னது…

//.இராதாகிருஷ்ணன் said...
போக்குவரத்து இடைஞ்சல்களையும், விமானத்தில் ஏற்பட்ட தமிழ் அனுபவத்தையும், கோவில் பற்றிய விபரமும், உடல்நலத்தைப் பேணுவது குறித்தும் எழுதப்பட்ட அருமையான கட்டுரைக்கு நன்றி.
//

பாராட்டுதலுக்கு மிக்க நன்றி ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இந்தியா எவ்வளோ முன்னேற்றம் ஆகியிருக்கு என்பதை உங்க‌ள் பதிவு காட்டுகிறது . நல்ல பதிவு
அருமையாக உள்ளது .
//

நன்றி நண்பரே !//என் பக்கத்துக்கு வாங்க‌

3:31 PM, July 01, 2009
//

அங்கே வருகை பதிந்துவிட்டேன் ! அழைப்புக்கு நன்றி !

பீர் | Peer சொன்னது…

இந்திய விமானத்தில் தமிழ்! நற்செய்தி.
கூடுதல் தகவல்; ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு வந்துசெல்லும் அனைத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிலும் தமிழிலிலும் அறிவிப்புச்செய்கிறார்கள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan சொன்னது…

நல்ல முன்னேற்றம் இந்தியன் ஏர்லைன்ஸின் சேவையில்.. இல்லை என்றால் சில்க் ஏர் கூடவே போட்டி போட முடியாமல் போய் விடும்.

RRSLM சொன்னது…

ஆச்சரியமாக இருக்கிறது! அப்போ இதற்க்கு முன்னால் தமிழில் அறிவிப்பு இருக்காதா?.......லண்டன் - சென்னை பிரிட்டிஷ் ஏர்வேசில் வெகு நாட்களாக தமிழில் அறிவிப்பு உண்டு. என்ன பைலட் அறிவிக்க மாட்டார், பணிப்பெண் அறிவிப்பார்.

நாடோடி இலக்கியன் சொன்னது…

எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு எனக்கு சொல்லாமல் இருக்கும் கோவியாரை வன்மையாக ........
:))

கோவி.கண்ணன் சொன்னது…

// நாடோடி இலக்கியன் said...
எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு எனக்கு சொல்லாமல் இருக்கும் கோவியாரை வன்மையாக ........
:))
//

எப்படி கண்ணில் படாமல் போனது என்று தெரியவில்லை. கவனக்குறைவு. மன்னிக்கவும்.

நன்றி நன்றி நன்றி !

மூன்று முறைச் சொல்லிட்டேன் !

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நான் முதலில் சௌதி செல்லும் போது ஏர் இந்தியாவில் தான் சென்றேன். விமானம் குறித்து எனது மனதில் இருந்த பிம்பத்தை அது மாற்றியது. நம்ம ஊர் கே.பி.என். அதற்கு பரவாயில்லை.

அதன் பிறகு ஏர் லங்கா, இந்த முறை கத்தார் ஏர்வேஸ் இவைகளில் நல்ல வசதி.

இப்போது தரம் உயர்ந்திருக்கலாம்.

நல்ல அனுபவப்பதிவு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்