பின்பற்றுபவர்கள்

7 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 2

பகுதி 1
ஆசிய கலாச்சாரம் இவை தான் என்று சீனக்கலாச்சாரம் மட்டும் பார்க்கப்படுவது, காட்டப்படுவது போலவே, ஐரோப்பிய கலாச்சாரக் கூறுகளின் மாற்றங்களைத் தான் உலக வாரலாறுகளில் மிகுதியாக பதிய வைக்கப்பட்டு இருக்கின்றன. உலகம் நாகரீகம் என்பது ஐரோப்பிய நாகரீகமாக பார்பதும், வலியுறுத்துவதும் ஐரோப்பிய வெள்ளையின அரசியல். ஓரினபுணர்ச்சி பற்றி வரலாறுகளில் என்ன கூறப்பட்டு இருக்கிறது என்பதற்கு வெள்ளை இன வரலாறுகளைப் பார்த்து அதற்கான எடுத்துக்காட்டுகள் காட்டப்படுகிறது. குறிப்பாக அலக்சாண்டர் போன்ற மாவீரர்களும் அவனது வழிகாட்டி அரிஸ்டாட்டில் போன்ற தத்துவமேதைகளும் தற்பால் புணர்ச்சியில் நாட்டம் கொண்டவர்கள் என்று வரலாற்றில் பதியப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு சில உண்மைகளில் அவர்கள் காலத்தில் பெண்ணை இனப்பெருக்க பாலினமாகமட்டுமே பார்த்திருக்கிறார்கள். பெண்ணிடம் கூடுவது தனக்கான வாரிசுகளை உருவாக்கி கொள்வதற்காகத் தான் அதாவது வாடகைத் தாய் என்கிற நிலையில் தான் பெண்களின் நிலை இருந்திருக்கிறது என்பதாகச் சொல்லுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பேரரசுகளை அமைப்பது ஆணின் பலத்தினாலும் அறிவினாலும் மட்டும் நடக்கிறது என்பதால் 'ஆண்' என்பவன் மனித இனத்தின் உயரிய படைப்பு என்கிற எண்ணம் ஒவ்வொரு ஆண்மகனின் எண்ணங்களிலும் இருந்திருக்கக் கூடும்.

உடல் பலம் ரீதியாகவும், குழந்தை பெற்றுக் கொண்டு பேணி வளர்க்கும் பொறுப்புகள் என்றும் இருப்பதால் சமூகம் மற்றும் பேரரசு, அரசு அமைப்பில் பெண்களின் பங்கு என்பதே இல்லை. அடிமையாகவும், குழந்தை பெரும் பாலினமாகத்தான் பெண்கள் நிலை இருந்திருக்கிறது. பெண்நிலை கீழாக இருந்ததால் உடலுறவு 'இன்பம்' தரக்கூடியவள் என்கிற தகுதியைக் கூட அவளுக்கு இருப்பதாகவோ, அப்படி ஒரு தகுதியைக் கொடுக்கவோ ஆண் சமூகம் தயாராக இருந்ததில்லை. கிளர்ந்தெழும் பால் உணர்வுகளை தனித்துக் கொள்ள ஆண்கள் ஆண்களையே நாடும் அவல நிலையைஅவர்களே விரும்பியும், வழியின்றியும் ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

நாட்டை வளப்படுத்தவும், வீரத்தை உலகரிய செய்யவேண்டும், தன்னைச் சார்ந்தவர்களின் ஆளுமையைப் பரப்ப வேண்டும் என்பதற்கு எளிய வழிகளாக பேரரசுகளும், மன்னர்களும் நினைப்பது பிறநாட்டினரிடம் போரிட்டு அவற்றைக் கைப்பெற்றி தனது ஆளுமைக்குக் கொண்டுவருவதைத் தான். அப்படிச் செய்வதன் மூலம் வீழ்ந்த நாட்டின் உலோக செல்வங்களும், அடிமைப்பட்ட மன்னன் செலுத்தும் வரியும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும், இதனால் பண்டையகாலத்தில் உலகங்களிலும் இருந்த மன்னர் ஆட்சிகள் எப்போதும் போருக்கான ஒத்திகையும், போரையும் தொடர்ந்து செய்துவந்திருக்கின்றன. வடக்கு ஆசியாவில் சீன மன்னர்கள் ஆட்சியைப் பார்த்தால் பெரும்பாலான மன்னர்கள் இயற்கை எய்தியதே இல்லை, போரில் சண்டையிட்டே இறந்திருக்கிறார்கள். சீனாவின் பண்டைய வரலாறுகள் சண்டைகளும் அரசு எழுச்சி வீழ்ச்சி என மாறி மாறி நிகழ்ந்ததை அறிய முடிகிறது. (From the Qin dynasty to the Qing dynasty, there have been nearly 400 Emperors - சீனாவின் மெகாசீரியல்களுக்கு இவைதான் கதைக் களம்) இவை ஆசிய அளவில் சீனப் பேரரசுகள் கம்போடியா, தாய்லாந்தைக் கூட ஆளுமைகளுக்கு கீழ் கொண்டு வந்திருக்கிறது.

ஐரோப்பிய அலக்சாண்டரின் பேரரசு இந்தியாவின் வடமேற்குவரை வெற்றிக் கொள்ள படையெடுக்கப்பட்டு இருக்கிறது. பண்டைய பேரரசுகளில் ஆண்களின் முதன்மைத் தொழிலே போர்வீரராக அரசனின் படையில் இருப்பது தான். எந்தகாலமும் போரும் ஒத்திகையாக இருக்கும் போது ஆண்கள் பால் உணர்வுகளின் தீர்வுகளாக இன்னொரு ஆணையே நாடவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டதற்கு ஏதுவாக அமைந்திருந்தது ஏற்கனவே அவர்கள் பெண்களை போகப் பொருளாகவோ, பொருட்டாகவோ நினைத்திருக்கவில்லை என்கிற உளவியல் காரணிகள். எனவே பண்டைய ஐரோப்பிய சமூகத்தில் ஓர்பால் ஈர்ப்பு என்பது இயல்பாக இருந்ததற்கு பெண்ணடிமைச் சமூக சூழலும், ஆண்கள் எப்போதும் போர்களத்திலும், போர் ஒத்திகையிலும் இருந்ததது ஆகும். மும்முறை பெண்களை திருமணம் செய்து கொண்ட அலெக்சாண்டருக்கு ஆண்களின் மீதான நாட்டம் இருந்ததாக வரலாறு எழுதியவர்கள் சொல்கிறார்கள்

பண்டைய ரோமாபுரியில் குடும்ப அமைப்பு இல்லை, அனைவரும் அப்படித்தான் என்று ஒட்டுமொத்தமாக, தவறாக குறிப்பிட வில்லை. தற்பால் புணர்ச்சி ஐரோப்பிய கலாச்சாரத்தில் அனுமதிக்கப்பட்ட, விரும்பபட்ட ஒன்றாக இருந்திருக்கிறது. அதை வைத்து பிற இனங்களில் இருக்கும் தற்பால் புணர்ச்சியினர் விருப்பர்கள், ஆதரவாளர்கள் தங்களுக்கு ஆதரவாக பண்டைய ஐரோப்பியக் கலாச்சாரத்தில் ஏற்கனவே இருந்த ஒன்று தான் சுட்டிக்காட்டி பேசுவது சரியான வாதமா ? அதற்கு முன்பு ஆசிய, அரபு நாடுகளின் பண்டைய அரசியலைப் பார்க்க வேண்டும். பிறகு தனிமனிதனின் பால் வேட்கைத் தனிப்பு உறுப்புகளின் புணர்சியுடன் மட்டும் தொடர்புடையதா ? புணர்ச்சியின் நோக்கம் இனப்பெருக்கம் மட்டும் தானா ? என்பதையும் பற்றிப் பேசுவோம்.

ஐரோப்பிய பேரரசுகள் பற்றிய ஆங்கில பரிந்துரை பதிவு இங்கே

தொடரும் ...

6 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//தனிமனிதனின் பால் வேட்கைத் தனிப்பு உறுப்புகளின் புணர்சியுடன் மட்டும் தொடர்புடையதா ? புணர்ச்சியின் நோக்கம் இனப்பெருக்கம் மட்டும் தானா ? என்பதையும் பற்றிப் பேசுவோம்.//

கண்டிப்பாக பேசலாம்..

இந்த இடுக்கை புரிந்தும் புரியாதுபோல இருக்குங்க கண்ணன்..

பெயரில்லா சொன்னது…

சிங்கப்பூர் மன்னா.,
இன்றைய இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் யாருமே செக்ஸ் குறித்து பேசவோ அல்லது எழுதவோ தயங்கும் பொது நீங்கள் எழுதியது உங்களின் முற்போக்கு சிந்தனையை வெளிபடுத்திகிறது.மேலும் உங்களின் பதிவு நன்றாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

enna solla vareenga? As of today, in India, everyone has right(?!) to speak, see to girls. Even in that case, there are atleast 8-10% of gays (also lesbians). So, this has nothing to do with "Ulaviyal Karangal". Something more than that. I think who ever thinks about a guy more than sex is Gay. (sameway like a relationship with a husband-wife). Not just sexual desire attributs to this.

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்டிப்பாக பேசலாம்..

இந்த இடுக்கை புரிந்தும் புரியாதுபோல இருக்குங்க கண்ணன்..//

தொடர்ந்து படித்து எதும் புரிகிறதா என்று மீண்டும் சொல்லுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

/சன்யாசி said...
சிங்கப்பூர் மன்னா.,
இன்றைய இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் யாருமே செக்ஸ் குறித்து பேசவோ அல்லது எழுதவோ தயங்கும் பொது நீங்கள் எழுதியது உங்களின் முற்போக்கு சிந்தனையை வெளிபடுத்திகிறது.மேலும் உங்களின் பதிவு நன்றாக உள்ளது.
//

சன்யாசி,

பாலியல் பற்றி பதிவர்கள் அவ்வப்போது எழுதிவருகிறார்கள். நான் புதிதாக எழுதவில்லை. பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//lenin said...
enna solla vareenga? As of today, in India, everyone has right(?!) to speak, see to girls. Even in that case, there are atleast 8-10% of gays (also lesbians). So, this has nothing to do with "Ulaviyal Karangal". Something more than that. I think who ever thinks about a guy more than sex is Gay. (sameway like a relationship with a husband-wife). Not just sexual desire attributs to this.
//

ஓரின சேர்க்கை தம்பதிகள் ஆத்மார்த்த தம்பதிகளாக இருக்கிறார்களா நடிக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். தனது செயலில் ஞாயம் உண்டு என்கிற மன அழுத்ததின் கூறு என்றே நினைக்கிறேன். குடும்பம் என்கிற அமைப்பு அடுத்த தலைமுறைக்கான மரம். அதன் தொடர்ச்சி இருக்கும். அதே போன்றுதான் நாங்களும் தம்பதிகளாக இருக்கிறோம் என்று ஓரினவாதிகள் சொல்வது செயலுக்கான ஞாயம் என்பதைத் தவிர பொருளற்றதாகவே படுகிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்