பின்பற்றுபவர்கள்

24 ஜூலை, 2009

டோண்டு சாருக்காக...! இங்கே பார்பனன்...எங்கே பிராமணன் ?

டோண்டு சாரின் இந்தப் பதிவில் சோ இராமசாமியின் எங்கே பிராமணன் என்கிற ஜெ டிவி தொடர் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இவாறு கூறுகிறா

"சோவின் நண்பர் அசோக் யாருமே பிராமணன் இல்லைன்னு சம்பந்தப்பட்டவாளையே சொல்ல வைத்தது பற்றி அங்கலாய்க்கிறார். சோவோ கண்களை உருட்டியபடி அதுதானே உண்மை என்பதுதான் இந்த சீரியலின் முக்கிய விஷயம்னு சொல்கிறார். அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் அவர். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.

சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்."


- என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பார்பனர்கள், பிராமணன் எங்கே இருக்கிறான் ? என்று தேடிக் கொண்டு இருப்பதாகவும், பிராமணன் இவன் தான் என்று காட்டும் படி தற்போது(ம்) எவருமே இல்லை என்பதாக அங்காலாய்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். பிராமணன் பிச்சை எடுத்து உண்பது என்கிற ஒரு விதி இருக்கிற படியால் இன்றைய தேதியில் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பது இயலாத ஒன்று என்பதற்காக பார்பனர்கள் அக்மார்க் 'பிராமணிய' வழியில் செல்வதை விட்டுவிட்டார்களா தெரியவில்லை. காஞ்சி சங்கர மடத்தின் தலைமை பார்பனர் 'சங்கராச்சாரியார்' கூட பிச்சை எடுத்து உண்ணுவது கிடையாது. பிறகு எங்கே பிராமணர்களைத் தேடுவது.

வருண பிராமணனோ, வர்க்கப் பார்பனரோ தீவிரமாக பிராமணியத்தில் இருந்த போது தீண்டாமை ஆலமரமாக வளர்ந்து இருந்தது

பிராமணன் இருக்கிறானா இல்லையா என்பதை விட, இன்னொன்று தான் உறுத்தலாகவும் ஏமாற்று வேலையாகவும் தெரிகிறது, பார்பனர்களே பிராமணர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்கிற உண்மை ஒப்புக் கொண்டு வேளையில், பார்பனர்கள் கோவில்களில் அமர்ந்து கொண்டு கடவுளுக்கு நாங்கள் முகவர்கள் என்று கூறுவதில் எதுவும் பொருள் இருக்கிறதா என்றே தெரியவில்லை. பிராமணர்கள் கடவுளைக் காட்டினார்கள் முகவர்களாக செயல்பட்டார்கள் என்பதை ஒப்புக் கொண்டாலும், பிராமணர்கள் யார் என்றே அறிந்திடாத, பூணூல் தவிர்த்து எந்த ஒரு மனத் தூய்மை, செயல் தகுதி எனக்காட்டப்படும் அந்த தன்மையில் எதுவும் இல்லாதவர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வதுடன் நிற்காமல் கடவுளை நாங்கள் தற்போதும் காட்டுகிறோம் என்பதில் ஏதேனும் உண்மை உண்டா ? உண்மையிலேயே கடவுளைக் காட்ட, முகவராக செயல்பட வர்கவழி பார்பனர்களுக்கு புரோகிதம் பரம்பரைத் தொழில் என்பதைத் தவிர்த்து பூசை செய்யும் உரிமைக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது ?

பொதுமக்கள் 'பார்பனர்களை சக மனிதனுக்கு மேலாக மதிக்கப் படவேண்டும்' என்பதற்கு வேறு எதாவது ஒரே ஒரு காரணம் உண்டா ?

பிராமணனையே பார்க்காத, காட்டமுடியாத பார்பனர்கள் கடவுளைக் காட்டுவேன் / காட்டுவார்கள் என்று சொல்வது கலியுகப் பித்தலாட்டமா ? கலி முற்றியதன் வெளிப்பாடா ?

37 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

டோண்டு சாரைப் பற்றிய பதிவா?

அவர் மொழியியல் வல்லுனர் மட்டுமல்ல...

வால்பையன் சொன்னது…

கடவுளை காட்டுறேன்னு சொல்லும் போது ஒரு காமெடி ஞாபகம் வருது!

ஒருபடத்துல வடிவேலு வாங்க எல்லோருக்கும் கடவுளை காட்டுறேன்னு நூறு ருபா வசூல் பண்ணுவான், அப்படி காட்டாட்டி டபுள் ரிட்டர்ன்ன்னு பேச்சு!

ஒரு வெட்ட வெளிக்கு போய் கொஞ்ச நேரம் நின்னுட்டு! தீடிருன்னு அந்த வந்துட்டார் கடவுள்ன்னு கத்துவான்!
யாருமே தெரியுதுன்னு சொல்லமாட்டாங்க( இருந்தா தானே வர்றதுக்கு)

உடனே வடிவேலு யார் பொண்டாட்டி பத்தினியோ அவுங்க கண்ணுக்கு தான் கடவுள் தெரிவார்னு சொல்லிருவான்!
அப்புறம் சொல்லவா வேணும்!

அது மாதிரி தான் இங்கேயும்!

கடவுளை காட்டுறேன்னு சொல்றவன் கடைசி வரைக்கும் காட்டமாட்டான்!

கடவுளை பார்த்தேன்னு சொன்னவன் கடைசி வரைக்கும் தான் ஒரு மனநோயாளிங்கிறத ஒத்துக்கமாட்டான்!

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

//கடவுளை காட்டுறேன்னு சொல்றவன் கடைசி வரைக்கும் காட்டமாட்டான்!

கடவுளை பார்த்தேன்னு சொன்னவன் கடைசி வரைக்கும் தான் ஒரு மனநோயாளிங்கிறத ஒத்துக்கமாட்டான்!//

-:)))))

Radhakrishnan சொன்னது…

நம்பிக்கையாளர்கள் இருக்கும்வரை எந்த நம்பிக்கையும் அத்தனை எளிதாக அழிந்துவிடுவதில்லை!

கடவுளைக் காட்டினாப் பார்த்துர வேண்டியதுதான். காணக்கிடைக்காட்டி அடுத்தவாட்டிப் பார்த்துக்கிர வேண்டியதுதான். செலவு செய்ய காசு இருந்தா இதுக்காப் பஞ்சம்?!

கடவுளைப் பார்க்கனும்னு யாருக்கும் ஆசையில்லை, கஷ்டப்படாம வாழனும்னு தான் எல்லா வழியையும் தட்டிப்பார்க்குறாங்க, வழி இருப்பதாக பலரும் காட்டிக்கிறாங்க.

மிக்க நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெ.இராதாகிருஷ்ணன் said...

நம்பிக்கையாளர்கள் இருக்கும்வரை எந்த நம்பிக்கையும் அத்தனை எளிதாக அழிந்துவிடுவதில்லை!//

ஐயா,

அந்த நம்பிக்கையை வைத்து பிறர் பிழைப்பதற்கு அதுவே மூலதனம்.

// கடவுளைக் காட்டினாப் பார்த்துர வேண்டியதுதான். காணக்கிடைக்காட்டி அடுத்தவாட்டிப் பார்த்துக்கிர வேண்டியதுதான். செலவு செய்ய காசு இருந்தா இதுக்காப் பஞ்சம்?!//

யாராவது ஒருவர்....அவங்க காட்டினாங்க நான் பார்த்தேன் என்று இதுவரை சொல்லவில்லையே :)

// கடவுளைப் பார்க்கனும்னு யாருக்கும் ஆசையில்லை, கஷ்டப்படாம வாழனும்னு தான் எல்லா வழியையும் தட்டிப்பார்க்குறாங்க, வழி இருப்பதாக பலரும் காட்டிக்கிறாங்க.

மிக்க நன்றி.//

அதனால் தான் கரடியாக கத்தினாலும் வேண்டுதலை நிறைவேற்றுவதோடு நிறுத்திக் கொள்வோம் என்று கடவுள் இருக்கிறாரா ?
:)

வால்பையன் சொன்னது…

ஒருவருடய நம்பிக்கை யாருக்கும் பிரச்சனையில்லை! ஆனால் அந்த நம்பிக்கையுள்ளவர்கள் தான் பெரியவர்கள் மற்றவர்களெல்லாம் மனிதர்களே அல்ல என்பது போல் சலரது வாதம் இருக்கிறது!

சந்தோசமாக வாழ கடவுள் ஒன்றும் செய்வதில்லை செய்யபோவதுமில்லை!
ஆனாலும் பெரும்பான்மையினரின் பார்வையை பெற பெரும்பான்யினரின் பின்னாலேயே நிற்பது தான் கேலிகூத்து!

ஒரு சில நிமிடங்கள் யோசித்து பார்த்தாலே தெரிந்துவிடும்! கடவுள் என்பது ஒரு கற்பனை பாத்திரம், சொம்பு இன்னபிற என்று!

மணிகண்டன் சொன்னது…

வாலு, நான் தான் பரமாத்மா !

நாளைக்கு என்னோட போட்டோ போடறேன்.

இன்னிக்கு என்னோட சிஷ்யர்கள் போட்டோ இருக்கு. அத பாருங்க. பாத்துட்டும் கடவுள் பார்க்கலை பார்க்கலைன்னு கதை விட கூடாது !

வால்பையன் சொன்னது…

நாலு கை,
பத்து தலையோட உங்க போட்டோ இருக்குமா!?

என்னா அப்ப தான் நம்ம பக்த கேடிகள் ஸாரி கோடிகள் நம்புவாங்க!

மணிகண்டன் சொன்னது…

****
பிராமணன் இருக்கிறானா இல்லையா என்பதை விட, இன்னொன்று தான் உறுத்தலாகவும் ஏமாற்று வேலையாகவும் தெரிகிறது, பார்பனர்களே பிராமணர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்கிற உண்மை ஒப்புக் கொண்டு வேளையில், பார்பனர்கள் கோவில்களில் அமர்ந்து கொண்டு கடவுளுக்கு நாங்கள் முகவர்கள் என்று கூறுவதில் எதுவும் பொருள் இருக்கிறதா என்றே தெரியவில்லை.
****

உண்மை கோவி. ஆகம விதி, இந்த விதி அந்த விதின்னு சொல்லுவது எல்லாம் சாக்குபோக்கு.

யாரும் கிடைச்ச சலுகையை விட்டுக்கொடுக்கவோ, மற்றவர்க்கு பகிர்ந்துகொள்ளவோ ரெடியா இல்லை. ஏதாவது ஒரு கதை சொல்லி status quo maintain பண்ண தான் முயற்சி பண்றாங்க.

மணிகண்டன் சொன்னது…

***
என்னா அப்ப தான் நம்ம பக்த கேடிகள் ஸாரி கோடிகள் நம்புவாங்க
****

அவங்களை பத்தி உங்களுக்கு என்ன பிரச்சனை. நீங்க கடவுளை காட்டுன்னு சொன்னீங்க. காட்டினேன். இன்னமும் ஏதாவது விதண்டாவாதம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

மணி, வால்பையன்

உங்களுக்குள் அடிச்சு ஆடுங்க அப்பறம் வருகிறேன்

வால்பையன் சொன்னது…

//அவங்களை பத்தி உங்களுக்கு என்ன பிரச்சனை. நீங்க கடவுளை காட்டுன்னு சொன்னீங்க. காட்டினேன். இன்னமும் ஏதாவது விதண்டாவாதம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. //

அப்ப சரி!
நல்ல டாக்ட்ரா ருத்ரன் சார் கிட்ட கேளுங்க சொல்லுவாரு!
நான் கேக்க சொன்னேன்னு மட்டும் சொல்லாதிங்க!

பெயரில்லா சொன்னது…

கொட்டாவியா வருது.

மணிகண்டன் சொன்னது…

***
மணி, வால்பையன்

உங்களுக்குள் அடிச்சு ஆடுங்க அப்பறம் வருகிறேன்

***

எனக்கு ஆறு மணி ஆச்சு. நான் தூங்கவேண்டாமா ? உங்களுக்கென்ன ?

மணிகண்டன் சொன்னது…

***
அப்ப சரி!
நல்ல டாக்ட்ரா ருத்ரன் சார் கிட்ட கேளுங்க சொல்லுவாரு!
நான் கேக்க சொன்னேன்னு மட்டும் சொல்லாதிங்க!
***

அவரை விட்டுடுங்க. ப்ளாக் எழுத வந்தார்ங்கற ஒரே காரணத்துக்குகாக அவரை எல்லாத்துக்கும் கூப்பிட இஷ்டம் இல்ல.

பாருங்க இஷ்டம்ன்னு வடமொழி சொல் வேற பேசிட்டேன். இன்னமும் நான் தான் கடவுள்ன்னு புரியாமையா இருக்கும் ?

வால்பையன் சொன்னது…

மணி, வால்பையன்

உங்களுக்குள் அடிச்சு ஆடுங்க அப்பறம் வருகிறேன்//

நாங்க அடிச்சிகிட்டு ஜெயிலுக்கு போணும்!
நீங்க சிரிச்சிகிட்டு பார்ப்பிங்க அப்படிதானே!

வால்பையன் சொன்னது…

/பாருங்க இஷ்டம்ன்னு வடமொழி சொல் வேற பேசிட்டேன். இன்னமும் நான் தான் கடவுள்ன்னு புரியாமையா இருக்கும் ? //

அப்ப நீங்க வடகத்தி சாமியாரு!
அது ஏங்க நாட்டுக்கு ஒரு சாமி இருக்கு!
ஆனா பாருங்க எல்லா சாமியும் தான் தான் உலகத்தை படைச்சதா சொல்லுது!

நீங்க சொல்லுங்க எப்படி உலகத்தை உடச்சிங்க சீ படச்சிங்க!

மணிகண்டன் சொன்னது…

***
அது ஏங்க நாட்டுக்கு ஒரு சாமி இருக்கு!
****

வீட்டுக்கு ஒரு காஸ் சிலிண்டர் இருக்கு இல்ல. அதுனால தான்.

வால்பையன் சொன்னது…

//***
அது ஏங்க நாட்டுக்கு ஒரு சாமி இருக்கு!
****

வீட்டுக்கு ஒரு காஸ் சிலிண்டர் இருக்கு இல்ல. அதுனால தான். //

நல்ல உதாரணம் அப்போ இனிமே வீட்டுக்கு ஒரு கடவுளா?

மணிகண்டன் சொன்னது…

***
நாங்க அடிச்சிகிட்டு ஜெயிலுக்கு போணும்!
நீங்க சிரிச்சிகிட்டு பார்ப்பிங்க அப்படிதானே!
***

நான் கூட இருக்கும்போது உங்களுக்கு பயமேன் !

மணிகண்டன் சொன்னது…

***
நல்ல உதாரணம்
***
மிக்க நன்றி.

வால்பையன் சொன்னது…

//நான் கூட இருக்கும்போது உங்களுக்கு பயமேன் ! //

பயமே அதான!

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...

மணி, வால்பையன்

உங்களுக்குள் அடிச்சு ஆடுங்க அப்பறம் வருகிறேன்//

நாங்க அடிச்சிகிட்டு ஜெயிலுக்கு போணும்!
நீங்க சிரிச்சிகிட்டு பார்ப்பிங்க அப்படிதானே!//

அடப்பாவமே,

இப்படிப் பட்ட அடித்துக் கொள்ளுதலுக்கெல்லாம் ஜெயிலில் இடம் இருக்கா ?

அவ்வ்வ்வ்வ்வ்

மணிகண்டன் சொன்னது…

இதுக்கு மேல நம்ப ரெண்டுபேரும் மட்டும் கமெண்ட் போட்டா நல்லா இருக்காது. கோவி பதிவு எழுதினதை நக்கல் பண்றா மாதிரி ஆயிடும். அதுனால மீ த ஜூட்.

Sanjai Gandhi சொன்னது…

எச்சுசுமி ஐயாம் தி ஒன்லி கடவுள்.. மே ஐ கமின்?

பீர் | Peer சொன்னது…

//வால்பையன் said...
...கடவுளை காட்டுறேன்னு சொல்றவன் கடைசி வரைக்கும் காட்டமாட்டான்!

கடவுளை பார்த்தேன்னு சொன்னவன் கடைசி வரைக்கும் தான் ஒரு மனநோயாளிங்கிறத ஒத்துக்கமாட்டான்!//

:)

evilatheist சொன்னது…

Putthagam irukkirathu,padikka arivu irkkirathu etharkku aasiriyargal...?

Iya pusari/gurukkal hindu mathathirkku mattum uriyathaa?
Periyar karuthugalai naatudamai aakka thiru Veeramani enn thadukka vendum..

Kadavul Parri theriyaadhavargal Kaduvalai mithu nambikkai illathavargal,Mathathai parriyo,jaathiyai parriyo pesuvathu eppadi endraal 3 pondatti veithu kondu Sri Raman Kudigaran,koothadi endru solvathu pol aagum...

Unknown சொன்னது…

ஐயா Dondu

//சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன்.//

அப்படினா சூத்திரனை தேடாமல் ஏங்க பிராமணனை தேடுறீங்க?

புரட்சிகர தமிழ்தேசியன் சொன்னது…

மீனவர்களை எடுத்து கொள்ளுங்கள்.இதுவரை சற்றொப்ப 410 தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் இந்தியப் பெருங்கடலில் சுட்டுக் கொன்று விட்டனர். இந்தத் தமிழ் இனப்படுகொலை தொடர்கிறது. இந்தியக் கப்பற்படையோ இந்திய அரசோ சிங்களக் கப்பற்படைக்கு எதிராக மறுநடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே ஏன்
பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் இந்தி யத் தோட்டாக்கள், தமிழகத் தமிழனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான்இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்இந்த பாகுபாட்டைத் தான் இந்தி ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது. காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.அதாவது ஏனைய பொருளாதார வளங்களுக்கே தமிழரும் தமிழ்நாடும் தேவை படுகிறாரகள்.ஆக இங்கு தமிழ்நாட்டில கட்சி நடத்தும் அனைவருக்கும் தெரியும் நாங்கள் எச்சில் இலைதான் என.
தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்து தேர்தல் அரசியல் கட்சிகளும் தில்லி ஏகாதிபத்தியத்தின் கைகூலிகள்தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
இந்த இந்தி யத் தேசியத்தில் இருந்து கொண்டு, தமிழருக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை தேர்தல் அரசியல் கட்சிகளை தமிழ் மக்கள் இனங்காண வேண்டும். மாற்றத்திற்கு வழி தமிழ்த் தேசியமே என்பதை உணர வேண்டும். இந்தி யத் தேசியம் பேசி இனியும் ஏமாந்து விடக் கூடாது. தமிழர்களே நன்றாக யோசித்து பாருங்கள். எங்கோ வடநாட்டில் இருக்கும் பனியாவின் மகன் மகளுக்கெல்லாம் முடி சூட்டு விழா நடத்தும் கங்காணிக் கட்சியில் இருந்து கொண்டு எம் தமிழினத்திற்கு துரோகம் இழைக்காதீர். என்னை கேட்டால் இந்த இழவு பிடித்த இந்தி தேசியமே தேவை இல்லை ..தமிழன் சூடு சொரணையோடு வாழ தனிதமிழ்நாடே தீர்வு நானும் என்னால் முடிந்த அளவு பிரச்சாரத்தினை ஆரம்பித்துவிட்டேன்..வீர தமிழினத்திற்கு தலாய்லாமா போன்று இன்னும் 50,60 வருடங்கள் போராடவேண்டிய அவசியம் இல்லை என்பதே எனது கருத்தாகும் ..நமக்கு அறிவியல் ,ரசாயன.அணுகுண்டு போன்ற அறிவு தேவை ஏற்படுகிறது. எவனும் இங்கு இப்போது ஏசு போன்று ஒரு கன்னத்தில் அறைந்தால். என்று திரிவதில்லை வலிந்தவன் வாழ்வான் இதுவே உலக கோட்பாடு எனவே நாமும் நமது பிள்ளைகளுக்கு அணு ஆயுத வல்லமையை ஊட்டுவோம்.. எதிர்ப்பவன் எவனாக இருந்தாலும் அவன் தலையில் அது கட்டாயம் வெடிக்கட்டும்

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//கடவுளை பார்த்தேன்னு சொன்னவன் கடைசி வரைக்கும் தான் ஒரு மனநோயாளிங்கிறத ஒத்துக்கமாட்டான்!//

சூப்பரு....

Unknown சொன்னது…

உங்க பதிவு சம்பந்தமா நான் ஒரு பதிவிட்டிருக்கேன் முடிந்தால் படிக்கவும்

http://oviya-thamarai.blogspot.com/2009/07/blog-post.html

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் சொன்னது…

இல்லாத ஒன்ன எங்கிருந்து காட்டுறது../

ராஜரத்தினம் சொன்னது…

நீங்கள் நா(ய்)த்திகரா இருந்து நாசமாக போவீஙகளோ அது உங்க இஷ்டம். கடவுளை பார்ப்பதற்கு நீங்க ஏன் பார்ப்பனர்களை போய் பார்க்க வேண்டும். ஆயர்குல கண்ணனோ, இல்லை சீதையின் மணாளன் ராமனோ யாரும் பார்ப்பனர் இல்லையே? கடவுளை யாருடைய உதவி இல்லாமலே நீங்கள் நேராகவே பார்க்கலாம். உங்களுக்குள் அவர் இருந்தால்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Raja said...

நீங்கள் நா(ய்)த்திகரா இருந்து நாசமாக போவீஙகளோ அது உங்க இஷ்டம். கடவுளை பார்ப்பதற்கு நீங்க ஏன் பார்ப்பனர்களை போய் பார்க்க வேண்டும். ஆயர்குல கண்ணனோ, இல்லை சீதையின் மணாளன் ராமனோ யாரும் பார்ப்பனர் இல்லையே? கடவுளை யாருடைய உதவி இல்லாமலே நீங்கள் நேராகவே பார்க்கலாம். உங்களுக்குள் அவர் இருந்தால்.//

உணர்ச்சி வசப்பாடாதிங்க சார், இது ஆத்திகமா நாத்திகாமாங்கிற பதிவு இல்லை. பார்பனர் கடவுளுக்கு முகவரா இல்லையா என்பது தான், அது பற்றி எதும் தெரிஞ்சா சொல்லுங்க.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால்....உங்களுக்கு வேண்டுமானால் கடவுளை நான் காட்டுகிறேன். :) சத்தியமான உண்மை சார். நம்புங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் வெங்கட் said...

இல்லாத ஒன்ன எங்கிருந்து காட்டுறது../

7:19 PM, July 25, 2009//

கடல், கால்படி இரண்டுமே *இருக்கிறது* என்பதற்காக கடலை கால்படியால் அளக்கமுடியும்னு யாரும் சொன்னால் நீங்க நம்புவிங்களா ? அல்லது முடியுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// siruthaai said...

ஈழ தமிழர்கள் 50,000 பேர் டாங்கி ஏற்றி படுகொலை செய்யபட்டதை யூதர்கள்ளோடு ஒப்பிட கூடாதாம்..இலங்கை உள்நாட்டு பிரச்சனையாம்..20 நாடுகள் சேர்ந்து ஒரு இனத்தை அழித்தது உள்நாட்டு போரா?பார்பான *** டோண்டுவை மனிதனாக மதித்து பதிவு போடும் உம்மை கண்டிக்கிறேன்!!1//

உங்கள் கோபம் ஞாயமானதாக இருந்தாலும் தனிமனித தாக்குதலாக ஒருவரை இழிவாகப் பேசுவதை என் பதிவில் நான் அனுமதிப்பதில்லை. உங்கள் கருத்துகளை உங்கள் பதிவில் எழுதிக் கொள்ள எனது அனுமதி எதுவும் தேவை இல்லை என்று கூறிக் கொள்கிறேன்.

புரட்சிகர தமிழ்தேசியன் சொன்னது…

அய்யா! தவறுக்கு மன்னிக்கவும் தாங்கள் பிரபல பதிவராக இருப்பதால்தான் என்னுடைய கருத்தினை பதிந்தேன்..நாலு பேருக்கு சொரணை வரவேண்டும் என்பதற்காக.. நான் அத்தனை பிரபல பதிவர் இல்லை.. இதை ஒப்புகொள்ள எனக்கு தயக்கமில்லை.. நான் இணைத்தால் தமிழ் மணத்தில் வருவதில்லை.. என்னுடைய தளம்

http://siruthai.wordpress.com

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்